காணாமல் போன
இந்தியப்பழமைவாத அறிவுஜீவிகள் எங்கே?
இந்தியப்பழமைவாத அறிவுஜீவிகள் எங்கே?
டாக்டர்.ராமச்சந்திர
குஹா
தமிழில்: செ.நடேசன்
முன்னாள்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நான்கு
இப்போது கேட்கலாம்: இந்தியாவில்எங்காவது
செல்வாக்குமிக்கபழமைவாத அறிவுஜீவிகள் இருந்திருக்கிறார்களா? இதற்குத் தகுதியான
பதில் ‘ஆம்’
என்பதே.
மூன்று பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.
வரலாற்றாளர்கள் ரமேஷ் சந்திர மஜும்தார், ராதா குமுத் முகர்ஜி, மற்றும்
சமூகவியலாளர் ஜி.எஸ்.குர்யே. இருபதாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் இருந்த இந்த
அறிஞர்கள் தங்கள் சொல்வன்மையால் தெளிவாக ‘இந்திய தேசியத் தன்மை இந்து கலாச்சாரத்திலும், அதன் உணர்விலும்
வேரூன்றி இருக்கிறது’ என்ற
பார்வையை முன்வைத்தார்கள். இப்போது அவர்கள் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்ட
போதிலும் அவர்கள் தங்கள் காலத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள்.
அவர்களது தங்கள் செயல்களால் இந்தியாவின் கடந்த, இன்றைய, எதிர்காலங்களில்
தாக்கங்களை ஏற்படுத்தினார்கள்.
1888-ல் பிறந்த ஆர்.சி.மஜும்தார் நீண்டகாலம்
துடிப்பாகச் செயலாற்றிய அனுபவம் உள்ளவர். ‘ஒருதேசத்தின் வாழ்வில் கூட்டுறவு உணர்வு
மிகவும் முக்கியமானது’ என்ற
தலைப்பில் டாக்டர் பட்டத்துக்கான அவரது ஆய்வுக் கட்டுரை 1918-ல் வெளியிடப்பட்டது.
இதில், ’இன்றைய இந்தியாவில் கலாச்சாரம் என்று குறிப்பிடப்படும் பிரிவு
மிகவும் பின்னடைவுக்குள்ளாகியிருக்கிறது. ஆனால் கடந்த காலங்களில் இது முற்றிலும்
மாறுபட்டிருந்தது’
என வாதிட்டார். ‘பண்டைய இந்தியாவில் ஏறத்தாழ
எல்லாத்தளங்களின் செயல்பாடுகளிலும் கூட்டுறவு உணர்வு என்பது குறிப்பிட்த்தக்க
அம்சமாக விளங்கியது.சமூகம் சார்ந்த, மதம்சார்ந்த, அதேபோல் அரசியல் மற்றும்
பொருளாதார வாழ்விலும் அது வெளிப்படையாகத் தெரிந்தது.’ என நிறுவ விரும்பினார். இந்தப்புத்தகம் 1.பண்டைய இந்தியாவின்
அரசியல் வாழ்வில் ஒருங்கிணைந்த செயல்பாடுகள். 2.அரசியல், சமுதாய மதம் சார்ந்த
வாழ்க்கைகளில் ஒருங்கிணைந்த அம்சங்களின் கூறுகள் என்ற இரண்டு அத்தியாயங்களைக்
கொண்ட்து.
மஜும்தார் பண்டைக்கால இந்தியாவின்
வரலாற்றுஆசிரியராகப் பயிற்றுவிக்கப்பட்டவர். ‘வேதகாலம், பண்டைக்கால வங்காளத்தின்
வரலாறு என்ற நூல்களை எழுதியவர். அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட காலகட்டத்தின்மீதன
அவரது சொந்த மதிப்பீடுகள் அவர் எழுதிய இரண்டு நூல்களின் தலைப்புக்களிலேயே
பிரதிபலிக்கின்றன. அவை: ‘தூரக்கிழக்கில் இந்து காலனிகள்’, ‘தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் சமஸ்கிருதம்- ஓர் ஆய்வு‘.
கடல்தாண்டிப்பரவிய இந்துக்கொள்கைகளும், நிறுவனங்களும் அவற்றின் முக்கியத்து
வத்துக்கும், செல்வக்குக்குமான சான்றுகள் என அவர் வாதிட்டார்.
1950-களில் அவர் தனது 70-ஆவது வயதை நெருங்கிய
நிலையில் தனது கவனத்தை நவீனகாலத்தின்மீது செலுத்தினார். அதன்பலனாக ‘History of The Freedom Movement
in India’ என்றநூல்
1962-ல் வெளிவந்தது. அதன் முன்னுரையில் பண்டைக்கால இந்தியா பற்றிய ஆய்வுகளில் 40
ஆண்டுகளுக்கும்மேலாக ஈடுபட்ட அவர் தனது அந்திமக்காலத்தில் இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றை ஏன்
எடுத்துக்கொண்டார் என்பதை விளக்கினார்.
அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“இந்தியா தனது சுதந்திரத்தைப் பதினெட்டாம்
நூற்றாண்டில்தான் இழந்தது என்ற முன்னுரையுடன் அதிகாரபூர்வ சுதந்திரப்போராட்ட
வரலாறு துவங்குகிறது. இதன்படி அன்னிய சக்திகளின்கீழ் அடிமைகளாக இருந்த அனுபவம்
இரண்டு நூற்றாண்டுகள் மட்டுமே என்றாகிறது. ஆனால் மறுபக்கத்தில் உண்மைவரலாறு
இந்தியாவின் மிகப்பெரும்பகுதி சுதந்திரத்தை இழந்தது ஐந்து நூற்றாண்டுகளுக்குமுன்
என்று அறிவிக்கிறது. 18-ஆம் நூற்றாண்டில் ஆளுவோர்தான் மாறினார்கள்.’ இதிலிருந்து, ’1947-ல்
இந்தியா பிரிவினைக்குள்ளாகப்பட்டதற்கு முக்கியக்காரணம் தேசிய உணர்வைவிட மத உணர்வை
முஸ்லீம்கள் எத்தகைய சமாதானத்துக்கும் உட்படாமல் சுதந்திரப் போராட்ட்த்தின்போது
முன்வைத்ததுதான்’
என்று மஜும்தார் குற்றம் சாட்டுகிறார்.
மஜும்தார் தனது காலத்தில் மிகுந்த செல்வாக்குப்
பெற்றிருந்தவர். அவரது எழுத்துக்கள் கல்வியாளர்களுக்கும் அப்பால் நன்கு
படிக்கப்பட்டது. 1950-களில் ‘The History and Culture of The
Indian People’- என்ற புத்தகவரிசை வெளிவர உதவிசெய்து
அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். ’பண்டைக்காலத்திலேயே
இந்தியக்கலாச்சரம் தனது உச்சகட்ட வளர்ச்சியை அடைந்துவிட்டது. அதன்
பெருந்தனமையின்மீதும், உயிர்நிலையின்மீதும் முதல் தாக்குதல் முஸ்லீம்
படையெடுப்பாளர்களாலும், பின்னர் பிரிட்டிஷாராலும் தொடுக்கப்பட்டது. மீண்டும்
சுதந்திரம் பெற்றுள்ள இன்று இந்துக்களின் பண்டைக்கால உயர்ந்த மரபையும், நிறுவனங்க
ளையும் மீட்டெடுப்பதுதான் தேசத்தைக் கட்டமைக்கும் பணியில் மிகமுக்கியமானது.’
-இவ்வாறு எழுதும்போது அவரே குறிப்பிட்டுள்ளதைப்போல
சுதந்திரப்போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்கிற பெருத்த நெருக்கடிகளுக்கு எதிராக
மஜும்தார் செல்கிறார்.
காந்தி.
நேரு, தாகூர் போன்ற மற்றவர்களுக்கு இந்திய வரலாற்றின் முக்கிய முறிவு
பிரிட்டிஷாரின் வருகையோடு நிகழ்ந்த்து. ஐரோப்பியர்கள் உண்மையிலேயே அன்னியர்கள்.
ஆனால் முஸ்லீம்கள் இந்தத்துணைக்கண்ட்த்தில் நீண்ட நெடுங்காலமாக
வாழ்ந்துவருபவர்கள். அவர்கள் உள்ளூர்மக்களோடு தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டவர்கள்.
இஸ்லாம் முதன்முதலில் இந்தியாவுக்கு அரபுவணிகர்கள்மூலம் வந்தது. இவ்வாறு கேரளாவின்
‘மாப்பிளா முஸ்லீம்கள்’ சமுதாயம் குறைந்தபட்சம் எட்டு நூற்றாண்டுகளாக வாழ்ந்து
வருகிறது. துருக்கிய மற்றும் மத்திய ஆசியப் படையெடுப்பாளர்கள் பின்னர் வட இந்தியாவுக்கு
வந்ததுதான் கொடுமையானது. மத்தியகாலப்பகுதியில் இஸ்லாத்துக்கு மதம் மாறிய
இந்துக்கள் மரணத்திற்குப்பயந்தோ அல்லது துன்புறுத்தலிலிருந்து தப்பிக்கவோ மதம்
மாறியவர்கள் அல்ல. மதம் மாறுதல்கள் என்பது கீழ்நிலைச் சாதியினரிடமே அடிக்கடி
நிகழ்ந்தன. இந்துயிஸத்தின் கெட்டிதட்டிப்போன மதகுருமார்களின் கொடுமைகளை
ஒப்பிடும்போது இஸ்லாத்தின் தோழமைஉணர்வு கவர்ச்சிமிக்கதாக இருந்தது. வங்காளம்,
காஷ்மீர் போன்ற பல இடங்களில் மதமாற்றங்கள்- கொள்ளையிட்ட போர்வீரர்களால் அல்ல- சுபி
மதகுருமார்கள் தலைமையிலேயே நடைபெற்றன.
இந்திய தேசிய உணர்வை வளர்த்தெடுக்க- குறிப்பாக
காந்திக்கு – இந்து-முஸ்லீம் ஒற்றுமைதான் அடிப்படையாக இருந்தது. முஸ்லீம்
ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கைகள் அவரது கருத்தைச் செல்லாததாக ஆக்கவில்லை.
1910-ல் ‘Hind Swaraj’
என்ற நூலில் :
“ இந்தியா ஒற்றைக்கலாச்சார நாடாக மிளிர
முடியாது. ஏனெனில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் இங்கு வாழ்கிறார்கள். வெளிநாட்டினர்
இங்கு வந்ததால் இந்த தேசம் அழிந்துவிடவில்லை .மாறாக அவர்கள் இதில்
கலந்துவிட்டார்கள். அத்தகைய நிலை உருவாகும்போது ஒருநாடு முழுவதும்தான் ஒரு தேசமாக
இருக்கும். இந்தியா எப்போதும் அத்தகைய நாடாகவே இருந்து வருகிறது.”
காந்தி இந்து-முஸ்லீம் முரண்பாட்டை செயற்கையானதாக,
பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக உருவாகி
ஆழப்படுத்தப்பட்டதாகப் பார்த்தார். படையெடுப்பின் முதல் அதிர்ச்சி ஏற்பட்டவுடன்
பிறதேசியவாதிகள் ‘கலாச்சாரக் கலப்பு’ பற்றிப்பேசும்
அளவுக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால், இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றுசேர்ந்து
நாட்டை ஆண்டார்கள். மகத்தான கலைப்படைப்புக்கள், கட்டடக்கலை என எல்லாவற்றிலும்-
இந்திய சாஸ்திரிய சங்கீதம் உட்பட- எல்லாவற்றையும் படைத்தார்கள். இந்தப்பண்பாட்டு
இணைப்பு வடஇந்தியா முழுவதும் பரவியது. ’Ganga –Jamni
tehzeeb’
என கங்கை-யமுனை ஆற்றுநீர் பாயும் பூமியெங்கும் பல்வேறு
சிந்தனைகளை ஒருங்கிணைத்த கலாச்சாரம் மலர்ந்தது.
இந்தக்கொள்கையின்மீதான மிகவிரிவான அறிக்கை
1940-ல் ராம்கரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டுஅமர்வில் மௌலானா
அபுல்கலாம் ஆசாத் தலைமை உரையில் இடம்பெற்றது.
”பல்வேறு
மனித இன்ங்கள், கலாச்சாரங்கள், மதங்கள் இந்தியத்தாய்க்குள் பாய்ந்து அவளது ஆதரவளித்து
வரவேற்கும் பூமியில் தங்களுக்கு ஒரு வீட்டைக்கண்டன. பல்வேறு வணிகர்களின்
கூட்டங்கள் இங்கே இளைப்பாறின. இதுதான் இந்தியாவின் வரலாற்றின் நிகழ்வு. வரலாறு
துவங்குவதற்கு முன்பேகூட இத்தகைய வண்கர்குழாம்கள் இந்தியா வழியாக வந்துசென்றன.
அலைஅலையாகப் புதிய மனிதர்கள் வந்தார்கள். இந்தப் பரந்துவிரிந்த செழிப்பானபூமி
எல்லாரையும் வரவேற்றது. அவர்களைத் தனது மார்பில் அணைத்துக் கொண்டது.
இந்த்த்தடத்தின்வழியாகத் தங்கள் முன்னோரைப் பின்பற்றிக் கடைசியாக வந்த
வணிகர்குழுவினர் இஸ்லாத்தைப் பின்பற்றியவர்கள். இந்தக்குழு இங்கு வந்தது: இங்கேயே நிலைகொண்டுவிட்டது:
எல்லாம் நன்மைக்காக”.
”அதற்குப்பிறகு
பதினொரு நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. இந்துயிஸத்தைப்போலவே இந்த இந்தியமண்ணில்
இப்போது இஸ்லாத்துக்கும் உரிமை உண்டு. இங்குள்ள மக்களுக்கு பல ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாக இந்துயிஸம் ஒருமதமாக இருப்பதைப்போல இஸ்லாமும் ஆயிரம் ஆண்டுகளாக ஒருமதமாக
இருந்துவருகிறது. ஒரு இந்து பெருமையுடன் ‘ நான் ஒரு இந்தியன்’ என்றும் ’நான்
இந்துமதத்தைப் பின்பற்றுபவன்’ என்றும்
சொல்வதைப்போல நாங்களும்கூடப் பெருமையுடன் சொல்லிகொள்வோம்: “ நாங்கள் இந்தியர்கள்.
நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள்”. இந்த
வட்டத்தை நான் இன்னும் விரிவுபடுத்துகிறேன். இந்தியக்கிறிஸ்தவர்களும் நமக்குச்
சமமாக, “ நாங்கள் இந்தியர்கள்: நாங்கள் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்கள்”
என்று சொல்லிக்கொள்ள உரிமை படைத்தவர்கள்”.
“பதினொரு நூற்றாண்டுகள்கொண்ட பொதுவரலாறு நமது
பொதுச்சாதனைகள் மூலம் இந்தியாவை வளப்படுத்தியிருக்கிறது. நமது மொழிகள், நமது
கவிதைகள், நமது இலக்கி யங்கள், நமதுகலாச்சாரங்கள், நமது கலைகள், நமது ஆடைகள், நமது
பாங்குகள், பழக்க வழக்கங்கள், நமது அன்றாட வாழ்வில் இடம்பெறும் எண்ணற்ற நிகழ்வுகள்
– இவை ஒவ்வொன்றும் நமது ஒன்றுபட்ட முயற்சிகளின் முத்திரைகளைத் தாங்கி நிற்கின்றன.”
“இந்தக்கூட்டுச்சொத்து நமது
பொதுதேசியத்தன்மையின் மரபுரிமை. நாம் இதை விட்டுவிட்டுக் கூட்டுவாழ்க்கை
துவங்கப்படாத பழையகாலத்திற்குத் திரும்பிச்செல்ல விரும்ப வில்லை. இங்கே நம்மிடையே
உள்ள ஏதாவது ஒருஇந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் அதற்குமுன்பும் இருந்த இந்து
வாழ்க்கையைத் திரும்பக்கொண்டுவர விரும்பினால் அவர்கள் கனவு காண்கிறார்கள். அத்தகைய
கனவுகள் கேலிக்கிடமான வீண்கனவுகள். அதுபோலவே ஏதாவது ஒருமுஸ்லீம் ஆயிரம்
ஆண்டுகளுக்குமுன் ஈரான் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்த தங்களது கடந்தகால
நாகரிகத்தையும். கலாச்சாரத்தையும் மீட்டெடுக்கக்கனவு காண்பாரானால், அவர்களும்கூட
விரைவில் விழித்துக்கொள்வது நல்லது”
பி.சி.மஜும்தார் இந்தக்கலப்புக்
கலாச்சாரக்கொள்கைகுச் சவால் விடுவதற்கு முன்பே பண்டைய இந்தியாவின் இன்னொரு வங்காள
வரலாற்றாளரும் எதிர்பைத்தெரிவித்தார். அவர்தான் ராதா குமுத் முகர்ஜி. பேரரசர்கள்
அசோகர், சந்திரகுப்தர் ஆகியோரின் வாழ்க்கைவரலாறுகளையும், மௌரியப் பேரரசின்வரலாற்றையும்,
பண்டைக்கால இந்தியாவின் கப்பல்போக்குவரத்து, பண்டைக்கால இந்தியாவின் உள்ளூர்ஆட்சி
போன்ற நூல்களையும் இவர் எழுதியுள்ளார். ஆனால் இவரது ஆகச்சிறந்த வரலாற்றுஎழுத்துத்
தலையீடு என்பது ஒரு சிற்றிதழ் மற்றும் ஒருபுத்தகத்தை மட்டுமே கொண்டு நடத்திய சிறிய
ஆய்வு “ The Fundamental Unity of India” என்ற தலைப்பில் 1914-ல் லண்டனிலும்,
40-ஆண்டுகளுக்குப்பிறகு திருத்திய இரண்டாம்பதிப்பு பம்பாயிலும் வெளியிடப்பட்டது.
“ The Fundamental Unity of India” தனது
முதல் இலக்காக ‘இந்தியாவில் அரசியல் ஒற்றுமை என்பது பெரும்பாலும் அல்லது
முழுக்கமுழுக்க பிரிட்டிஷ் ஆட்சியின் தயாரிப்பு” என்று தாக்குகிறது. அது தனது இரண்டாவது இலக்காக ”தேசியவாதிகளுக்கிடையே வளர்ந்துவரும் நம்பிக்கையான எதிர்கால
இந்திய தேசம் – அரசு – இங்கு அதிகஅளவில் வாழ்ந்துவரும் முஸ்லீம் மக்களை உள்ளடக்கிய
பார்வை, இந்துக்கொள்கைகளை மட்டும் எடுத்துக்கொண்டு கட்டமைக்கப்பட முடியாது”
என்பதையும் கொண்டுள்ளது.
முகர்ஜியைப்பொருத்தவரை ‘இந்தியாவின்
தேசியத்தன்மை’
என்ற உணர்வு பிரிட்டிஷார் மற்றும் முஸ்லீம்களின் வருகைக்கு
முன்பே உருவாகியிருந்தது. ‘பழங்கால ரிஷிகள்’ இந்தியா
முழுவதையும் குறிப்பதற்காக ’பாரதவர்ஷா’
என்ற பெயரை உருவாக்கினர். இந்தப்பெயர் வரலாற்று நாயகனான
பரதா என்பதிலிருந்து வந்தது. ரோம் நாட்டுக்கு ரோமுலஸ் எப்படியோ அப்படி
இந்தியாவுக்கு பரதன்” என்று
உரிமைகோருகிறார். பண்டைய இந்திய ஒற்றுமைக்கு கூடுதல் ஆதாரமாக ரிக்வேதத்தின் கீர்த்தனையைக்
காட்டுகிறார். அது, ”இந்தத்துணைக்
கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாய்ந்து ஓடும் நதிகளை வணங்குவதன்மூலம் இந்திய
நாட்டுமக்களுக்குத் தங்கள் நாட்டின் ஒற்றுமை உணர்வை உணர்த்தியது:
தட்டியெழுப்பியது.”
‘தந்தையர் பூமியின்மீதான இந்த ஆழமான பற்று
சமஸ்கிருத இலக்கியம் முழுவதிலும் பூரணமாக வியாபித்திருக்கிறது’
என்று முகர்ஜி வாதம்செய்கிறார். எனவே ’பாரதவர்ஷம் என்று அழைக்கப்படுகிற இந்த நாட்டின்
பூமிப்பரப்பெங்கும் ஆயிரக்கணக்கான பெயர்களில் அறியப்படுகிற ’கடவுள்விஷ்ணு’வை
‘விஷ்ணு சஹஸ்ரநாமம்’
வழிபடுகிறது. இந்தப் பழமையான தேசிய உணர்வு எட்டாம்
நூற்றாண்டில் சங்கரரால் வளர்த்தெடுக்கப்பட்டது. அவர் வடக்கில்
கேதார்நாத்-பத்ரிநாத், தெற்கில் ராமேஸ்வரம், மேற்கில் துவாரகா கிழக்கில் பூரி என
நான்கு புண்ணியத்தலங்களை ஏற்படுத்தினார். எனவே இந்தநாடு முழுமையும் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது:
புனிதபூமியாகக் கொண்டாடப்பட்டுவருகிறது’ . ‘இந்தப்புனிதத்தலங்களின்
வலைப்பின்னல் ‘இந்தியா ஒருங்கிணைக்கப்படாத வெறும் புவீயியல் சிதற்ல்கள் அல்ல:
ஒற்றையான – ஆனால் அளவிடமுடியாத உயிருள்ள தேசம்’ ’இது முடிவிலிருந்து முடிவுவரை ஒருமிக வலிமையான
உயிர்த்துடிப்புள்ள மிக்க வாழ்வு என்னும் அலையால் நிரப்ப்ப்பட்டது’
என்று எண்ணவும் உணரவும் வைக்கிறது’
புனிதப்பயணங்கள் பற்றி முகர்ஜி கூறுகிறார்:
‘மகத்தான தாய்நாட்டின் புவியியல் ஒற்றுமை என்ற கொள்கையில் தலையிட்டு மறிக்கும்
குறுகிய பிரதேச உணர்வுகள் வளர அனுமதிப்பதில்லை: ஒருவரின் தாய்நாட்டை உள்ளூர
அறிந்துகொள்ளும் புனிதக்கடமையின் வழியில் எதிர்ப்படுகின்ற உடல்ரீதியான வசதி-சுகம்
என்ற உணர்வை அனுமதிப்பதில்லை. பழைய உலகத்தில் புனிதப்பயணங்களின்போது ஏற்படும்
சிரமங்களைத் தணிக்க- பக்தர்களின் பயணவழித்தடங்களில் குறுகிய இடைவெளிகளில்
சிறிதுநேரம் இளைப்பாற- தங்கிச்செல்லும் புனித மடங்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன.’
முகர்ஜி மேலும் கூறுகிறார்: “பொதுமதத்துக்கு
அப்பால் ‘இந்தியனின் புவியியல் ஒற்றுமை’ என்ற
புகழ்மிக்க உணர்வை வளர்ப்பதில் அரசியலும் த்ன்பங்கைச் செலுத்தியிருக்கிறது.
இந்தியா முழுவதும் தனது சர்வாதிகாரத்தின்கீழ் வரவேண்டும் என விரும்பி அதில் வெற்றி
கண்ட பல அரசர்களின் பெயர்களை வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஹர்ஷவர்த்தனர்,
சமுத்திர குப்தர், அசோகர் ஆகியோர் அத்தகைய ஆட்சியாளர்களுக்கு எடுத்துக்கட்டாக
உள்ளனர்’
என்று அறிவுக்குப் பொருத்தமற்ற வாதத்தை முகர்ஜி
முன்வைக்கிறார். அவர் இந்த எடுத்துக்காட்டுக்கள் மற்றும் அவற்றுக்கு அவர் தருகின்ற
அழுத்தங்கள் மூலம்,
‘ஆரம்பகால இந்தியவரலாறு மிகமிக முற்பட்ட காலத்திலிருந்து
மக்கள் பெற்றிருந்த அரசியல் விழிப்புணர்வு இந்தியா முழுமையையும் ஒன்றுபட்டதாக
ஏற்கவைத்திருந்தது என்பதைத் தவறில்லாமல் காட்டுகிறது’ என்று நிறுவ முற்படுகிறார். இதன்மூலம்,’ ஜாவா, சுமத்ரா, பாலி, சயாம், கம்போடியா போன்றவற்றைக் காலனி
நாடுகளாக்கி இந்தியமயப்படுத்தவேண்டும்’ என்ற
தனது ஆலோசனைகளை அழுத்தமாக முன்வைக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.
அவர் கூறுகிறார்: ‘இந்தியனின் சிந்தனைகள்
மற்றும் நிறுவனங்களுக்கெதிரான பிரச்சாரங்கள் சந்தேகத்துக்கிடமில்லாமல்
பலநூற்றாண்டுகளாக எண்ணற்ற காலனியவாதிகள்,மிஷனரிகளால் செய்யப்பட்டுவருகின்றன.
அவர்களது இந்தஆர்வங்களுக்குச் செல்வந்தர்களும், பணக்கார நாடுகளும் உரமூட்டினர்.’
மேலும்,”தனது
தனித்தன்மை, புனிதத்தன்மை எல்லாம் தன்னிடமே இருக்கிறது என்று
பாராட்டிக்கொள்ளும்தன்மை, அதன்கொள்கைகள், நிறுவனங்கள், ஆகியவற்றால் எழுந்த உற்சாக
அலையின் உச்சத்தில் காலனியாதிக்க இயக்கம் இருந்தது.(எபோதும் இருக்கின்றன)
என்கிறார் முகர்ஜி.
முகர்ஜி ஆழ்ந்த வரலாற்று ஆசிரியர். ஆனால் அவரது
“
The Fundamental Unity of India” என்ற ஆய்வு நூலில் அவர்
முன்வைக்கும் கருத்துக்கள் அறிவுக்குப் பொருத்தமற்றவை. 1914ல் அவர் எழுதிய
‘இந்தியா முழுமையும்’ என்பது
பிரிட்டிஷ் ஆட்சியின் நேரடி மற்றும் நேரடியாக இல்லாமல் ஆட்சி நடத்திய அனைத்துப்
பிரதேசங்களையும் குறிக்கிறது. இதன்மூலம் மன்னராட்சிப் பிரதேசங்களையும்
உள்ளடக்குகிறது. அவர் குறிப்பிடும் பேரரசர்கள் இந்தப்பிரதேசத்தின் தெற்கில்
ஆட்சியில் இருந்ததில்லை. அதேபோல மேற்கிலும் பெரும்பாலும் அவர்கள் ஆட்சி
இருந்ததில்லை. அவர்கள் அதிகப்பரப்பளவில் ஆண்டார்கள் என்பதை ஒப்புக்கொண்டாலும், அவை
பின்னர் பல்வேறு மன்னர்கள், குறுநிலமன்னர்கள்
பிடிக்குள் வந்துவிட்டன.’கி.மு.மூன்றாம்
நூற்றாண்டிலேயே அசோகரால் அரசியல் ஒற்றுமை உருவானது: அது பல நூற்றாண்டுகளாக
நீடித்தது’என்று முகர்ஜி சிந்திப்பது பிச்சைக்காரனின் நம்பிக்கையாக
உள்ளது.
முகர்ஜியின் மொழி கவனிக்கத்தக்கது. ‘இந்து’,
’இந்தியா’என்பதை
ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்துகிறார்.
அவரது கதையில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் காணப்படவில்லை. மேலும்
அதிர்ச்சிதரும்வகையில் குலங்கள், மொழிகள், இந்திய நிலப்பரப்பில் குறிப்பிடத்
தக்கவகையில் வரலாற்றுரீதியாக நிலவிவந்த மதங்களின்பிரிவுகள் ஆகியவை பற்றியும்
ஏதுமில்லை. சமஸ்கிருதம் ஒருசில தலைமைக் குருமார்கள் மட்டுமே தங்களுக்குள்
பேசிக்கொண்ட, புரிந்துகொண்ட மொழியாக இருந்தது. தேசிய ஒற்றுமையின் அடையாளமாக
முகர்ஜியால் பார்க்கப்பட்ட சமஸ்கிருத கீர்த்தனைகள் இந்தநாட்டின் பெரும்பான்மையான
மக்கள் அறியாதவை: பரவலாகத்தெரியாதவை.
இந்த எளிமைப்படுத்துதல்களும், மறைத்தல்களும்
பழமைவாத வரலாற்றாளர்களுக்கு அடிப்படைப்புள்ளியாக உள்ள ‘இந்தியன்தேசியம்’
என்பது சாராம்சத்தில்
எப்போதும்’இந்து’வாக
இருந்தது: அது கட்டாயம் தேவை’ என்று
நிரூபிப்பதற்கு அவசியமாகிறது. முகர்ஜியின் அரசியல் தத்துவார்த்த்த்தில்
‘தன்மைப்பன்மை’
(First Person-Plural)என்பது உறுதியாகவும் அதே நேரத்தில் தந்திரமாகவும்
மதத்தைக்கொண்டு தீர்மானிக்கப்படுகிறது!
ஓர் அறிஞரின் வெளியிடப்பட்ட புத்தகத்தை அவரது
சொந்தவாழ்வின் வெளிச்சத்தில் பார்ப்பது ஆபத்தானது. ஆனால் மஜும்தாரும், முகர்ஜியும்
வங்காளி இந்துக்கள் என்பதையும், அவர்கள் இருவரும் தங்கள் மாநிலத்தில்
மாபெரும்வலியை ஏற்படுத்திய மதச்சண்டை நடைபெற்ற காலகட்டத்தில் பருவ்வயதை
அடைந்தவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 1905-ல் வங்காளம் பிரிட்டிஷ்
ஆட்சியில் மதஅடிப்படையில் பிரிக்கப்பட்டது. அதன்பிறகு கல்கத்தாவில் உள்ள
நடுத்தரவர்க்க இந்துக்களின் பேரெழுச்சியால் ஆறு ஆண்டுகளுக்குப்பின் பிரிவினை
கைவிடப்பட்டது. “ The Fundamental Unity of India”வின் முதல்பதிப்பு பிரிவினை
நடைபெற்றபோது வெளியிடப்பட்டது. அதன் இரண்டாம்பதிப்பு வங்காளத்தின்
முஸ்லீம்பெரும்பானமை மாவட்டங்கள் கிழக்குபாகிஸ்தான் எனப்பிரிக்கப் பட்டபோது
வெளியிடப்பட்டது. இரண்டு பிரிவினைகளும் முஸ்லீம் அரசியல்வாதிகள்- கட்சிகளின்கட்டளைப்படியே
நடைபெற்றது, கிழக்குபாகிஸ்தானாக
இருந்த பகுதியில் பிறந்து சிலஆண்டுகள் டாக்கா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய
மஜும்தார்மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.1947-க்குப்பிறகு
பிரிவினைக்குப்பிந்தைய இந்தியாவில்வாழ்ந்தபோது, அவரை அறிஞராகவும், ஆசிரியராகவும்
முதலில் உருவாக்கிய, அவர் பிறந்த மூதாதையரின்
கிராமம் அல்லது நகரத்திற்கு அவரால்
பார்வையிடக்கூடச் செல்லமுடியவில்லை.
காலனியாதிக்கத்தின் கடைசிக்காலகட்ட்த்தில்
மூன்றாவது முக்கிய பழமைவாத அறிவுஜீவியாக விளங்கியவர் ஜி.எஸ்.குர்யே. இவர்
மஜும்தார் மற்றும் முகர்ஜியைப்போல இந்தியாவின் கிழக்குப்பகுதியில் அல்லாமல்
இந்தியாவின் மேற்குப்பகுதியில் இருந்தவர். அவர் தனது பயிற்சியின்மூலம் வரலாற்றாளராக
அல்ல- சமூகவியலாளரானவர். குர்யே பம்பாய் பல்கலைக்கழகத்தில் கற்பித்துவந்தார் அவர்
தனது நூல்களை எழுதியபோது பல ஆராய்ச்சி மாணவர்களின் பி.ஹெச்டி., ஆய்வுகளை
மேற்பார்வையிட்டுவந்தவர்.
பிற இந்தியசமூகவியலாளர்கள் நவீனமயமாக்குதலின்
விளைவுகளை ஆய்வு செய்துவந்த போது குர்யே அவர்களைப்போன்ற
அதேஈடுபாட்டோடு ‘மரபுகளின் விடாப்பிடித்தன்மைகள்’ பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். ‘Indian Sadhus’, ‘Costume and Classical Dance’,
‘Comparative Study of Family, Kinship in Indian and European Culture’ ஆகியவை அவரது சிலநூல்கள். இந்த
நூல்களை எழுதும்போது சமஸ்கிருதம் பற்றிய பயங்கரமான அறிவை அவர் பெற்றார்.
அகழ்வாய்வு, மொழியியல், மானுடவியல், கலைகளின் வரலாறு ஆகியவற்றை விரிவாகப்படித்தார்.
இந்தியர்கள் எவ்வாறு இயல்பாக வாழ்ந்தார்கள்? உணர்ந்தார்கள்? என்பவைபற்றிக்
களஆய்வுகளைச் செய்யாமல் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்த பொருட்களை
அடிப்படையாக்க்கொண்டு ‘புத்தகங்களின் பார்வை’யில் தனது ஆய்வுகளைச் செய்தார்.
முகர்ஜியைப்போலவேகுர்யேவும் இந்தியாவில்உள்ளஅனைவருக்கும்
ஒற்றைக்கலாச்சாரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார் சமூக மானுடவியலாளரான கரோல்உபாத்தியாயா
‘அவரது மையக்கருத்துக்களில் ஒன்றாக ‘இந்திய நாகரிகத்தின் பழமையையும்,
ஒற்றுமையையும்’
பற்றி எடுத்துக்காட்டுக்கள்மூலம் தெளிவுபடுத்துவதாக இருந்தது’
என்று எழுதினார். ‘இந்திய நாகரிகத்தின் ஒற்றுமையின் மையமாக
இந்துயிஸம் இருந்தது என்று அவர் நம்பினார். ’இந்துயிஸத்தின் மையமாக பிராமணீயக்கருத்துகளும்,
மதிப்பியல்களும் இருந்தன என்றும், அவைதான் சமுதாயத்தின் ஒருமைப்பாட்டுக்கு அவசியம்.’
என்றும் அவர் கருதினார்.
இது இங்கிலாந்தில்பிறந்த மானுடவியலாளரான
வெர்ரியர் எல்வினோடு, ‘இந்திய சமுதாயத்தில் ஆதிவாசிகளின் அந்தஸ்து’
பற்றிய தனது கருத்துக்களைக் குர்யே பரிமாறிக் கொண்டபோது எதிரொலித்தது.
1930-களிலும், 1940-களிலும் எல்வின் எழுதிய ஆய்வுகள் மற்றும் பிரசுரங்களில்
‘மத்திய இந்தியாவின் ஆதிவாசிகள் கலாச்சாரரீதியாக இந்துக்களி லிருந்து
வேறுபட்டிருந்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அவர்களது தெய்வங்களின் கூட்டத்தில்
அவ்வப்போது இந்துக்கடவுளைச்சேர்த்துக்கொண்டாலும்கூட, அவர்களது சமுதாயம் சாதிய அடுக்குகளைக்கொண்ட்தல்ல.
அங்கு பெண்களுக்கு அதிக சுதந்திரம் இருந்தது. அவர்கள் தங்களுக்குச் சொந்தமான மாறுபட்ட
மரபுகளை, கலைகளை, இசையை, நடனங்களைக் கொண்டிருந்தார்கள்.
பழையமாதிரி அறிஞராக குர்யே நூலகத்தில்
பணியாற்றிக்கொண்டிருந்தபோது, எல்வின் 20 ஆண்டுகள் ஆதிவாசிகளோடு வாழ்ந்து
அவர்களைப்பற்றி எழுதினார். அவருடைய ஆய்வு ஆதிவாசிகள் சமுதாயத்தைப்பற்றிய
களப்பார்வை கொண்டது. வெவ்வேறுவகைப்பட்ட ஆதிவாசிகளின் சமுதாயங்களில் நிலவிவந்த
விவசாயம், கைவினைகள், தொழில்நுட்பம், மத நிறுவனங்கள், குற்றங்கள்,
பாலுறவுப்பழக்கவழக்கங்கள் ஆகியவைபற்றிய முக்கியமான எழுத்துப்பதிவுகளை எல்வின் வெளியிட்டார்.
அவரது வளமான அனுபவ ஆய்வுக்கருத்துக்கள் விரிவான, கவர்ச்சிகரமான மொழிநடையில்
வெளிவந்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமானவர்களால் படிக்கப்பட்டன.
1943-ல்குர்யே எல்வின்மீது
தாக்குதல்களைத்தொடுத்து, ‘The Aborigines-So Called- and
their Future’என்ற நூலை வெளியிட்டார். இதில் ‘இந்துவைப்
பாதுகாக்கும் எல்லா அம்சங்களும் எல்வினைத் தலைகீழாகப் புரட்டிப்போடுகின்றன’
என்று குறிப்பிட்டார். ஆதிவாசிகளுக்கும், இந்துக்களுக்கும்
இடையே உள்ள ஒன்றுக்கொன்று சம்மான நம்பிக்கைகளைச் சான்றுகளாக முன்வைத்தார். ஆதிவாசிக்குழுக்களை
வேறுபட்ட தன்னாட்சிக்குழுக்களாகப் பார்ப்பதைவிட, அவர்கள்
முறையாகஒருங்கிணைக்கப்படாத இந்துசமூகத்தின்பிரிவுகள் என்று பார்க்கவேண்டும் என்று
வாதிட்டார். எல்வினோ,‘சுதந்திர இந்தியா ஆதிவாசிகளுக்கு அவர்களது கலாச்சாரம்,
நிலப்பரப்பு ஆகியவைகளைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்குத் தன்னாட்சிஉரிமை
வழங்கும் என்று நம்பினார். ஆனால் குர்யே, ‘தேசத்தைக்கட்டமைக்கும்
கடமையில் அவர்களை இந்து மைய நீரோட்ட்த்திற்கு நெருக்கமாகக் கொண்டுவரவேண்டும்’என்றார்.
இந்திய தீபகற்பத்தில்
20 ஆண்டுகள் ஆதிவாசிகளோடு வாழ்ந்துகொண்டும், அவர்களைப்பற்றி எழுதிக்கொண்ட்ம்
இஎஉந்த எல்வின் 1954-ல் இந்த நாட்டின் வடகிழக்குப்பகுதிக்கு நகர்ந்தார். இப்போது
அவர் இந்தியக்குடியுரிமைபெற்ற இந்தியனாக வடகிழக்கு எல்லைப்பகுதி
முகமையின்-இன்றையஅருணாச்சலப்பிரதேசம்-
நிர்வாகஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார்.
1957-ல் அவர் தனது புகழ்பெற்ற ‘A Philosophy
of NEFA’ என்ற நூலை வெளியிட்டார். இந்த நூல்,
இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு அப்போதைய பிரதமர் நேருவின் பாராட்டுக்களுடன் கூடிய முகவுரையோடு
விரிவாக்கப்பட்ட பதிப்பாக வெளிவந்தது. இதில்,’ஆதிவாசிகளின் நிலங்கள் மற்றும் வனங்களையும், ஆதிவாசிகளின் கலை
மற்றும் கலாச்சார மரபுகளையும் பாதுகாக்க ஆதிவாசிகளுக்குப் பாதுகாப்பு உரிமை
வழங்கப்படவேண்டும்’
என்று மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வாதிட்டார்.
எல்வின் 1964-ல் இறந்துவிட்டார். அப்போது
87-வயதான குர்யே வடகிழக்குப்பகுதியில் எல்வின் மேற்கொண்ட பணிகள்மீது
புதியதாக்குதல்களைத் தொடுத்து ஒருநூலை வெளியிட்டார். ‘அந்தமானுடவியலாளர் எல்வின்
வடகிழக்கு எல்லைப்புற மாநிலத்தின் பழக்க வழக்கங்கள், ஆடைஅணிமணிகள், மரபுகள்
ஆகியவற்றை மீட்டெடுக்கும் நோக்கங்களோடு பிரிவினை இயக்கங்களுக்கு மறைமுக
ஆதரவளித்துவந்தார்’, என இந்நூலில் எல்வினைக் குற்றப்படுத்தினார்குர்யே.
‘தாய்நாட்டைத் துண்டுதுண்டாகச் சிதறடிக்கும் உள்ளார்ந்த நோக்கத்தோடு ‘பாரதத்தைச்
சிறிய ஒன்றுக்கொன்று இணக்கமான பகுதியாக்கும்’ விருப்பத்தைக் கொண்டவர்களோடு விரும்பியோ, விரும்பாமலோ எல்வின்
இணைந்துவிட்டார்’
என்றார் குர்யே. ‘இந்த ஆதிவாசிகளின் எல்லாவிதமான
கலாச்சாரக்கூறுகளையும் மீட்டெடுத்துப் பாதுகாக்க விரும்புகிறார்.
இந்தக்கலாச்சாரக்கூறுகள் இந்தியாவின் (பாரத்) கலாச்சாரக் கூறுகளோடு மிகவும்
மாறுபட்டவை’
என்றார் குர்யே.
’மாறுபாடுகளைக்கொண்டிருப்பது
தேசத்தின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும்’
என்று அஞ்சி ’அவற்றைமூடிமறைக்கவேண்டும்’, என்றுகூப்பாடுபோடுவது பழமைவாதக்கும்பலின் உச்சகட்டக்
கோரிக்கையாக விளங்குகிறது. எடுத்துக்காட்டாக, ஸ்பானிஷ்மொழிபேசும்
புலம்பெயர்தவர்கள் மீது அமெரிக்கப்பழமைவாதிகளும், அரபுமொழிபேசும்
புலம்பெயர்ந்தவர்கள் மீது ஐரோப்பியப் பழமைவாதிகளும் கொண்டுள்ள சந்தேகங்கள் உள்ளன.
மஜும்தர், முகர்ஜி, குர்யே ஆகியோர் பயங்கரமான
அறிவாளிகள். ஒவ்வொருவரும் தங்கள் பெயரில் அழுத்தமான நூல்களை வெளியிட்டுள்ளவர்கள். அவர்கள் பல்கலைக்கழகங்களில்
பலபத்தாண்டுகளாகப் பாடம் நட்த்தித் தங்கள் அறிவாற்றலையும், கருத்துக்களையும்
தங்கள் மாணவர்களிடம் செலுத்தியவர்கள். வகுப்பறைகளுக்குவெளியே முனைவர்பட்ட ஆய்வுகளை
மேற்பார்வையிட்டுத் தங்கள் கருத்துக்கள்மூலம் செழுமைப்படுத்தியவர்கள். ஆனால்,
இன்றைய சமகாலத்தில் மஜும்தார், முகர்ஜி, குர்யே போன்றவர்களுக்குச் சம்மான செல்வாக்குமிக்க
சந்ததியினராக பழமைவாத வரலாற்றாளர்களோ, சமூகவியலாளர்களோ ஒருவருமில்லை.
.பலபத்தாண்டுகளாக எவருமில்லை. இது ஒருகேள்வியை எழுப்புகிறது: அன்னியராட்சியில்
பிரபலமான பழமைவாத அறிவுஜீவிகளை இந்தியா ஏன் பெற்றிருந்தது? இப்போது ஏன் ஒருசிலர்? (அப்படி
யாராவது இருந்தால்)
ஒருபதில்உண்டு. காலனியாதிக்கத்தின் பிற்பகுதியில்
தேசியஇயக்கங்கள் உருவானபோது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அரசியல்
கட்சிகளின், அறிஞர்பெருமக்களின் ஆழ்ந்த விவாதங்கள் நடைபெற்றன.சுதந்திர இந்தியாவில்
அரசு அமைப்புக்கள் ஒருமதத்தைச் சார்ந்த்தாக, அல்லது பலமதங்களைச் சார்ந்த்தாக
அல்லது எந்த மதத்தையும் சாராததாக இருக்க வேண்டுமா? மொழிப்பிரச்சனைகளும்,
இனப்பிரச்சனைகளும் எவ்வாறு கையாளப்பட வேண்டும்? சுதந்திரத்துக்குப்பிறகு
லிபரல்களும், சோசலிஸ்ட்களும் வெற்றிபெற்று இந்த விவாதங்களின் மிகவும்
போற்றுதலுக்கும், செல்வாக்குகும் உரிய வழக்கறிஞராக இந்தியாவின் முதல்பிரதமராக-
நீண்ட காலம் நீடித்தவராக ஜவஹர்லால் நேரு ஆனபோது முன்கூட்டியே இந்த விவாதங்கள்
முடித்து வைக்கப்பட்டுவிட்டன.
இது, நேருவின் கருத்துக்கள் மேலாதிக்கம்
செலுத்தின என்றோ, அவரது கருத்துக்கள் அறிவிஜீவிகளால் எத்தகைய விமர்சன்ங்களுமின்றி
ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றோ சொல்ல அல்ல. குறிப்பாக அவரை மிக்க்கடுமையாக விமர்சனம்
செய்பவர்கள் ஆளும் காங்கிரஸின் இட்துபக்கத்தில் இருந்தார்கள். இவர்களில்
சோசலிஸ்ட்கள் ராம்மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயண், கம்யூனிஸ்ட்
ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் ஆகியோர் இருந்தனர். இவர்கள் தங்கள் கட்சிகளால், சிறந்த
எழுத்தாளர்களால், அறிஞர்பெருமக்களால் ஈர்க்கப்பட்டி ருந்தார்கள். நாட்டின் பொதுஉணர்வுகளும், லிபரல்களுக்கும்,
சோசலிஸ்ட்களுக்கும் ஆதரவாக இருந்து நேர்மையும், நியாயமும் உள்ள ஒரு புதிய
சமுதயத்தைக்கொண்ட புதிய தேசத்தை உருவாக்குவதில் முன்னோக்குப் பார்வைகொண்டு,
ஆபத்தான பழமைவாத மரபுகளையும், காலனியச் சிந்தனைகளையும் பின்னுக்குத் தள்ளின.
---------------------------------------------------
பகுதி 5 தொடர்கிறது -----------------
No comments:
Post a Comment