தமிழ்மொழிவழிக்கல்வியையும்,
அரசுப்பள்ளிகளையும் பாதுகாப்பதில்
இயக்கங்களின் பங்கு
செ. நடேசன் முன்னாள் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
தமிழகத்தில் இந்திமொழித் திணிப்பை எதிர்த்து எழுந்த ஆவேசம் 1965ல் அதன் உச்சமட்டத்தை எட்டியது. ’எப்பக்கம் புகுந்துவிடும் இந்தி? அதுஎத்தனை பட்டாளம் கூட்டிவரும்?’ எனத் தமிழகம் உணர்ச்சிப் பிழம்பானது. அதன் எதிரொலியாக 1967ல் தமிழகம் ஓர் ஆட்சிமாற்றத்தையே நிகழ்த்திக்காட்டியது. ‘எங்கும் தமிழ்: எதிலும் தமிழ்’ என்ற எதிர்பார்ப்புக்களோடு பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க.வை ஆட்சிபீடம் ஏற்றியது.
காங்கிரசு கட்சி ஆட்சிக்காலத்திலும் 1967 முதல் 2016 வரையான 49 ஆண்டுகாலதிராவிட இயக்கக்கட்சிகளின் ஆட்சிக்காலத்திலும் தமிழ்மொழிக் கொள்கை. தமிழ்வழிக்கல்வி ஆகியவை பற்றிய வரலாற்றை இன்று மீள்பார்வை கொள்வது இன்றியமையாதது.
தமிழ் நாட்டில் தமிழ்மொழியை ஆட்சிபீடமேற்றும் ஒரு மசோதா 1956 டிசம்பர் 27ல் சட்ட மன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆம். மும்மொழிக்கொள்கையை ஆதரித்த காங்கிரசு ஆட்சிக்காலத்தில்தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. அன்று சட்டமன்றத்தில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பி.இராமமூர்த்தி ‘இந்த நாள், தமிழ்நாட்டின் திருநாள்: நமது தாய்மொழி ஆட்சிபீடம் ஏறவேண்டும் என்ற தமிழ்மக்களின் நீண்டகாலஆசை இன்று நிறைவேறுகிறது. திருச்சி ஜில்லாவில் செயல்பட்டுவரும் பரீட்சார்த்த திட்டத்தை விரிவுபடுத்தித் தொடர்வதை முதலில் தாலூகா அளவில் அதைக் கொண்டுவந்து பிறகு ஜில்லா அளவில் அது கொண்டுவரப்படும் என்று மசோதாவில் கண்டுள்ளது. அவ்வாறில்லா மல், சகல இடங்களிலும் உடனடியாக தமிழ் பயன்படுத்தப்படும் என்று பிரகடனப்படுத்தவேண்டும்’, என வலியுறுத்தினார்.
காங்கிரசு ஆட்சிக்காலத்தில்தான் தாய்மொழிக்கல்வியை வலியுறுத்தி அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் ‘தமிழால் முடியும்’ என்ற ஒரு நூலையே எழுதினார். பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோதுதான் தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தில் பலதுறை நூல்கள் தமிழில் வெளியிடப்பட்டன. கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி துவங்கியது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து ஆட்சிக்குவந்த தி.மு.க. ’மும்மொழித்திட்டம்’ என்பதை ’இருமொழித்திட்ட’மாக ஆக்க ஆட்சிமொழி சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. 1968 ஜனவரி 23 அன்று நடைபெற்ற விவாதத்தில் மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர்கள் ஏ.பால சுப்பிரமணியம், என்.சங்கரய்யா, தமிழரசுக்கழகத்தலைவர் ம.பொ.சிவஞானம் ஆகியோர் ‘நிதி, நிர்வாகம், கல்வி ஆகிய மூன்றுநிலைகளிலும் தமிழைத்தவிர வேறு எந்தமொழிக்கும் இடமில்லை என்ற நிலையை ஏற்படுத்திவிட்டால், தமிழ்மக்களுக்கு பீதி இருக்காது: பயம் இருக்காது’ என மிகத்தெளிவாக தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
அதற்கு பதிலளித்த முதல்வர் பேரறிஞர் அண்ணா,’ மழைபெய்கிறபோது குடை கிடைக்கா விட்டால் மேல்துணியைத் தலையில் வைத்துக்கொள்வதுபோல் உடனடியாக இந்தி வந்துவிடாமல் தடுக்க ஆங்கிலத்தை வைத்து தடுக்கிறோம்’ என்று சாதுரியமாக கூறினார். அந்த குடை தமிழ்க்குடையாக இல்லாமல் போனது ஏன்? ’உலகத்தொடர்புக்கும், விஞ்ஞான அறிவு பெறவும் ஆங்கிலம் இன்றியமையாதது’, என்று திராவிட இயக்கத்தினர் மனங்களில் ஊறிக்கிடந்த கொள்கைதான் காரணம். இந்த ஆங்கில மனோபாவம்தான், “தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!!” என்று முழக்கமிட்டாலும், இந்தியின் இடத்தில் தமிழை வைக்காமல் ஆங்கிலத்தை உயர்த்திப்பிடித்தது. ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்’ என்பதற்குப் பதிலாக தமிழ்மக்களின் மனங்களை ஆங்கிலத்துக்கேற்ப தகவமைக்கும் பணிக்கே திராவிடக்கட்சி களின் 49 ஆண்டுகால ஆட்சியில் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்விளைவாகத்தான் சென்னைப்பல்கலைக்கழகத்தின்கீழ் இருந்த ஆங்கிலோ இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட 30 ‘மெட்ரிகுலேசன் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் கொண்டுவரப்பட்டு இன்று 4,000க்கும் மேற்பட்ட கல்விக்கடைகளாக அவை உருவாயின. கழக அரசுகள் இதற்கு சேவகம் செய்தன. 1952ல் ஏ.இலட்சுமணசாமி முதலியார் ஆணையமும், 1964ல் கோத்தாரி ஆணையமும் வலியுறுத்திய தாய்மொழிவழைக்கல்வியை கழகஅரசுகள் நீர்த்துப்போகச்செய்தன. அதுமட்டுமா? அரசுப்பள்ளிகளின் தரத்தைக் குறைத்தால்தான் ஆங்கிலவழிக் கல்விக்கடைகளுக்கு மாணவர்கள் சேர்வார்கள் என்ற கோரிக்கையை ஏற்று அரசுப்பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என 1964ல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட ஆசிரியர் மாணவர் விகிதத்தை ஜெயலலிதா அரசு 1:50 என உயர்த்தியதும், பின்னர் அது கடும் எதிர்ப்பைச் சந்தித்ததால் கலைஞர் ஆட்சியில் 1:40 என மாற்றப்பட்டதும். அரசுப்பள்ளிகளை இயற்கைமரணம் அடையச் செய்யும்பணி இதன்மூலம் அரங்கேறியது. இதன்மூலம் தமிழகப்பள்ளிகளில்க 96 மாணவர் வருகைக்கு 5 ஆசிரியர்கள் பணியாற்றிய நிலைமாறி 1:40 விகிதத்தின் அடிபடையில் அவை 2 ஆசிரியர்பள்ளிகளாகத் தரம் குறைக்கப்பட்டன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே ஏழைஎளியமக்களுக்கான அரசுப்பள்ளிகளின் கல்வியைச் சீர்குலைக்கும் விந்தையும், தமிழ்வழிகல்வியை வேரறுக்கும் விந்தையும் தமிழ்நாட்டில் கழக அரசுகளால் நடைமுறையாகியது. இதை எதிர்த்து கல்வியாளர்களும், ஆசிரியர்-மாணவர் இயக்கங்களும், தமிழ் நாட்டுக்கல்விப்பாதுகாப்பு இயக்கங்களும் நடத்திவரும் போராட்டங்கள் தொடர்கின்றன.
இந்தநேரத்தில்தான் மத்திய அரசின் ’தேசியக்கல்விக்கொள்கை2016’ உருவாக்கம் என்ற பெயரில் நரேந்திரமோடியின் பா.ஜ.க. அரசு மிகமோசமான உள்ளீடுகளைப் புதிய கல்விக்கொள்கையில் புகுத்தியுள்ளது., மாநிலமொழிகளை, கலாச்சாரங்களை, பண்பாட்டைச் சீர்குலைத்து நாடுமுழுவதும் ஒரேமொழி, ஒரேகலாச்சாரம் என முழக்கி வருகிறது. வழக்கொழிந்துபோன சமசுக்கிருதமொழிக்கு உயிரூட்டவும், இந்தியைத் திணிக்கவும், மாநிலமொழிகளை அழிக்கவும் முயன்றுவருகிறது.
தாய்மொழிக்கல்வியையும், அரசுப்பள்ளிகளையும் பாதுகாக்கும் மாபெரும் பொறுப்பு மக்களிடம்தான் உள்ளது. மொழியைப் படைத்த மக்கள்தான் தமதுமொழியைக் காக்கும் மகத்தான போரை நடத்தியாகவேண்டும். அந்த திசைவழியில் மக்களை ஆயத்தப்படுத்தும் பணி இன்று தாய்மொழி வழிக்கல்விப் பாதுகாப்பு மற்றும் அரசுப்பள்ளிகள் பாதுகாப்பு இயக்கங்கள் முன் உள்ளது.
கடந்த 49 ஆண்டுகளாக ஆங்கிலமோகத்தில் மக்களிடம் தவறான சிந்தனைகளைப் பதிய வைத்து ஆங்கிலமொழிக்கு ஆதரவாக தகவமைக்கப்பட்ட தமிழ்மக்களின் மனங்களை வெல்லாமல் அது சாத்தியமல்ல. நமது தமிழ்மக்களின் மனங்களைவெல்ல சில அடைப்படையான அறிவியல் உண்மைகளை அவர்களிடம் நாம் கொண்டுசெல்ல வேண்டும்.
· * உலகத்தில் அதிகமான மக்கள் பேசும் மொழி ஆங்கிலம் அல்ல. அது
வெறும் 8% பேரால் மட்டுமே, இங்கிலாந்து, அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே பேசப்படும் மொழிதான். உலகில் இந்த நாடுகளில் தவிர வேறு எந்த நாட்டிலும் ஆங்கிலத்துக்கு மரியாதை இல்லை.
·* ஆங்கிலத்தில் படித்தால் உலகமெங்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது உண்மை அல்ல. அதுஒரு மயக்கமே! நமது மெட்ரிகுலேசன் பள்ளிகளில் கற்றுத்தரப்படும் ஆங்கிலத்தை இந்த நாடுகள் அங்கீகரிப்பதில்லை.
* தாய்மொழிவழிக்கல்வியில்தான் குழந்தைகள் மிகவிரைவாக கற்கிறார்கள்.
·* தாய்மொழிவழிக்கல்வியின்மூலம் பெறும் சொந்தப் பண்பாட்டு அறிவு, பாரம்பரிய அறிவு, சொந்த அடையாளம் பற்றிய வலுவான புரிதல் பள்ளியில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதனைபடைபவர்களாக மாணவர்களை ஆக்குகிறது.
· * உலகத்தொடர்புக்கும், அறிவியல் அறிவுக்கும் ஆங்கிலம் அவசியம் என்று பலர் கருதுகிறார்கள். தாய்மொழிவழி கற்பவர்களே ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் பெறுகிறார்கள்.
* தாய்மொழிவழிக்கல்வி மாணவர்களின் திறன்களை வளர்த்தெடுக்கும் ஆற்ற்ல் கொண்டது.
·* தாய்மொழி அல்லாத பிறமொழொயில் கற்கும்போது மாணவனின் மூளை எப்போதும் மொழிபெயர்த்துக்கொண்டே இருக்கிறது. மூளையின் இந்த இரட்டை வேலையால் புதியன கண்டுபிடிக்கும் ஆற்றலோ, படைப்பாக்கத்திறனோ அடிபட்டுப்போகிறது. மாணவன் வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரமாகிப் போகிறான்.
* உலக அறிவுபெற ஆங்கிலத்தை ஒருமொழியாகக் கற்பதே போதுமானது. அனைத்துப்பாடங்களையும் ஆங்கிலமொழிவழியில் படிக்கவேண்டும் என்பது தேவை இல்லை.
- அறிவியல்பூர்வமான இந்த உண்மைகளை மக்களின் மனங்களில் பதியவைக்கவேண்டும். இதற்காக கலை, இலக்கியங்கள் வடிவில் இந்தக் கருத்துக்கள் மக்களிடம் செல்லவேண்டும். தாய்மொழிவழிக்கல்விக்கான போராட்டங்களில் கலையும், இலக்கியமும் நமது ஆயுதங்களாக்கப் படவேண்டும்.
மக்களின் சிந்தனைகளை தாய்மொழிவழிக்கல்விப் பாதுகாப்புக்கும், அரசுப்பள்ளிகள் பாதுக்காப்புக்கும் ஆதரவாகத் திரட்டும்பணி தமிழ் நாட்டுக்கல்வி இயக்கங்களின் தலையாய பணியாகும். மக்களின் மனங்களை வென்றெடுப்போம்! தமிழ்வழிக்கல்விக்குத் தகவமைப்போம்! இந்த மகத்தான பணியில்
அனைத்து இயக்கங்களும்
ஒன்றுபடுவோம்!
தமிழ்மக்களை அணிதிரட்டுவோம்!!
போராடுவோம்!!
இறுதி வெற்றி நமதே!!!!
Saturday, 20 August 2016
Thursday, 18 August 2016
விமர்சனக்காற்று வீசட்டும்! வெளிச்சத்தில் உண்மைகள் மிளிரட்டும்!!

"ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்" ப.கு ராஜனின் அரை விமர்சனத்திற்கு ஒரு மறுப்பு.
தோழர் ப.கு.ராஜன்! "ஸ்டாலின் குறித்த குருச்சேவின் பொய்கள்" என்ற ஆய்வு நூலுக்கு நீங்கள் "புதிய புத்தகம் பேசுது" ஆகஸ்ட் 2016 இதழில் எழுதியுள்ள விமர்சனத்தைப் படித்த நாங்கள் ஏமாந்து போனோம். அதைப் படித்த பெரும்பாலானவர்களும் கூட. ஒரு ஆய்வு நூலை விமர்சிக்கும் முறை ஒன்று உண்டல்லவா? அதாவது, அந்த நூலாசிரியர் எடுத்துக்கொண்ட தரவுகளையும், ஆதாரங்களையும் பரிசீலித்து; அதில் சரி, தவறுகளை சுட்டிக்காட்டும் முறை ஒன்று உண்டல்லவா? அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
ஆனால், உங்களது விமர்சனத்தில் உங்களுக்கு இருக்கிற வேறொரு கவலையும், பதட்டமும் அப்பட்டமாக தெரிந்துவிட்டது. ஸ்டாலினைப் பார்த்து கம்யூனிச விரோதிகள் கவலைப்படுவதில் நியாயமிருக்கிறது. அதே கவலையும், பதட்டமும் உங்களுக்கு வந்ததற்கான காரணம் என்ன தோழர்?
விடாது கருப்பு
சர்வதேச பொதுவுடமை இயக்கத்தின்மீது எளிதில் நீங்காத நிழலாய் படிந்திருக்கும் பெயர்
உலகின் பெரும்பகுதி இடதுசாரிகளால் ஸ்டாலினியம் மறுதலிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு விட்டது
மார்க்சியத்தை ஸ்டாலினியத்தோடு அடையாளப்படுத்தி அவதூறுசெய்வது தொடர்கிறது.
ஸ்டாலினியம் சாதியம் போன்றது.
சோவியத் சாதனைகள் அனைத்தையும் ஸ்டாலின் பூதத்தால் மறைக்கும் முயற்சி
ஸ்டாலின் காலத்திய வரலாற்றை ஒரு சர்வாதிகாரியின் காலத்திய வரலாறு என்று பார்க்கும் நிலைமாறி….
தன்னத்தானே புகழ்ந்து ஸ்டாலினது தலைமையில் அவரது துதிபாடிகள் எழுதிக்கொண்ட ‘கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு’
சோவியத் நாட்டின் உன்னதமான புதல்வர்கள், புரட்சியை நடத்திய வீரர்கள் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, போலிவழக்குகள் நடத்தப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டு, பின்மண்டையில் சுடப்பட்டு மூளையின் வெண்சாந்து சிதறி ஈரம் கசியும் கரும்பச்சைச் சுவர்களில் அப்பி வழிய படுகொலை செய்யப்பட்டனர்.
அவர் (குருச்சேவ்)மீது ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் கூறலாம். ஆனால் ‘ஒடுக்குமுறையாளர்’’, ‘அடக்குமுறையாளர்’ என்ற குற்றச்சாட்டுக்கள் அவர்மீது ஒட்டாது. அவரது காலமே ‘சகிப்புத்தன்மைக் காலம்’ என்றுதான் அறியப்படுகிறது.
’யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்’ யார் கூறுவதை நம்புவது? யார் கூறுவதை நம்பாமல் இருப்பது?
இன்னும்…இன்னும்…
இவை எல்லாம் நூல் விமர்சனம் என்றபேரில் நீங்கள் எழுதிதள்ளிய அபத்தங்கள்.
இவ்வாறான அவதூறுகளைத்தான் நூல் ஆதாரபூர்வமாக மறுக்கிறது. ஆனாலும் ஏற்கனவே ஸ்டாலின் பற்றிய கம்யூனிச விரோத கருத்துக்களால் பீடிக்கப்பட்டிருக்கிற உங்களைப் போன்றவர்களை கருத்தில் கொண்டே நூலாசிரியர் குரோவர்ஃபர் தனது முன்னுரையில், ‘இதை நீங்கள் ’நம்ப வேண்டாம்’ என்று வலியுறுத்துகிறேன். கம்யூனிஸ்டுகள் மார்க்சீயர்கள். மார்க்சீயர்கள் பொருள்முதல்வாதிகள். நாம் உண்மை அல்லது பொய் என்பதை ஆதாரங்களின் அடிப்படையிலேயே முடிவு செய்கிறோம். எல்லா ஆதாரங்களையும் அதற்கேற்ற எந்தவிதமான நம்பிக்கைகளும் இல்லாமல் ஆய்வு செய்யுங்கள்.’ என்கிறார்.
அரை உண்மை என்பது முழுப்பொய்யைவிட ஆபத்தானது. அதைப்போன்றதே அரை விமர்சனமும். ஒரு படைப்பை, ஓர் ஆய்வை, ஒரு நூலை எந்தவித ஆழ்ந்த பரிசீலனையுமின்றி, ஏற்கனவே தான் வகுத்துக்கொண்ட தனது முன்கூட்டிய அனுமானங்களின் அடிப்படையில் விமர்சனம் செய்வது அரைவிமர்சனமே.
மனிதகுல வரலாற்றில் வாழும் காலத்தில் தெய்வமாகப் போற்றப்பட்டு, மரணத்துக்குப்பின் சீடர்களாலும், எதிரிகளாலும் கேவலமாக தூற்றப்பட்டவர்கள் வெகுசிலரே. ஒருவர் கௌதமபுத்தர். இதுபோன்ற மற்றொரு மாமனிதர் ஸ்டாலின். அவர் வாழ்ந்து பணியாற்றியபோது வானளாவப் புகழப்பட்டார். ஆனால், அவர் மறைந்த உடனேயே அவர் ஒரு வில்லனாகவும், போக்கிரியாகவும் தூற்றப்பட்டார். இதற்கு குருச்சேவ் தலைமை தாங்கினார். ஸ்டாலின் வாழ்ந்தபோது குருச்சேவ் அவரின் வளர்ப்பு நாய்போல் குழைந்து, அவரை வானளாவப் புகழ்ந்தார்.
தெலுங்கான ஆயுதப்போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் முன்னாள் மத்தியக்குழு உறுப்பினருமான நந்தூரி பிரசாதராவ் கூறுகிறா:’ ஸ்டாலினை குருச்சேவ் ஏன் பழி கூறினார் என்பதைப் புரிந்துகொள்வது இப்போது எளிது. வரலாற்றுச்சக்கரங்களைப் பின்னுக்கு இழுத்து முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டுவருவதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். குருச்சேவின் பாழாய்ப்போன சீர்திருத்த முயற்சிகள் ரஷ்யாவில் 70 ஆண்டுகாலம் கட்டிக்காக்கப்பட்ட சோசலிசத்தைக் கைவிட்டு, முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டுவரவும், சோவியத் யூனியன் சிதறுண்டு போகவும் வழிவகுத்தன. குருச்சேவ் ஒரு திருத்தல்வாதி. அவர் ஒருபோதும் மார்க்சீயவாதியாக இருந்ததில்லை. மார்க்சியத்தின் அடிப்படைகளைச் சீர்குலைக்கும் கொள்கையற்ற அரசியல்வாதியாகவே அவர் இருந்தார்.’
இத்தகைய குருச்சேவைப்பற்றி உங்களின் விமர்சனம் என்ன கூறுகிறது? ‘அவர்மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள் கூறலாம். ஆனால், ஒடுக்குமுறையாளர்’, ‘அடக்குமுறையாளர்’ என்ற குற்றச்சாட்டு அவர்மீது ஒட்டாது. அவரது காலமே ‘சகிப்புத்தன்மைக்காலம்’ என்றுதான் அறியப்படுகிறது.’
மாஸ்கோ மாவட்ட முதன்மைச்செயலாளராக இருந்த குருச்சேவ்தான் ’பிரிவு ஒன்று’ என உருவாக்கி அதில் 20,000 பேரைப் பெயர் குறிப்பிடாமல் அவர்களை மரணதண்டனைக்குள்ளாக்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். 41,000 பேர்களை ‘இரண்டாம் பிரிவில் கொண்டுவர குருச்சேவ் கேட்டுக்கொண்டார். ஆனால், ஸ்டாலினும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும் அதை கடுமையாகத் தடுக்க முயன்றனர். இதை ஜுகோவ் மற்றும் கெட்டி சுட்டிக்காட்டினர்.’ குருச்சேவ் உரையின் முக்கிய நோக்கமே தன்னைப்போலவே இரத்த தாகம் கொண்ட முதன்மைச்செயலாளர்களின் குற்றங்களை மூடிமறைத்துப் பாதுகாப்பதுதான். இவர்மீதுதான் ‘ஒடுக்குமுறையாளர்’, ‘அடக்குமுறையாளர்’ என்ற குற்றச்சாட்டு ஒட்டாதாம்.
குருச்சேவும், அவரது கூட்டாளிகளும் கொத்துக்கொத்தாக கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் கொல்வதற்கு முனைப்பு காட்டிய நேரத்தில் தோழர் ஸ்டாலின் கொல்வதால் பிரச்சினைகள் தீராது; கட்சி கல்வியும்; வேலைமுறைகளில் மாற்றமுமே தீர்வளிக்கும் என்று கூறி அதற்காகப் போராடினார். இது நூலில் ஆதாரத்தோடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அப்படியெல்லாம் கிடையாது, ஸ்டாலின் சர்வாதிகாரிதான் என நீங்கள் நிறுவ வேண்டுமானால், இனி இந்த நூலில் உள்ள ஆதாரங்களை மறுத்து, உங்களின் வாதங்களுக்கான ஆதாரங்களை முன்வைத்தேயாக வேண்டும். மனம்போன போக்கில் பேசிவிட முடியாது என்பதே இந்த நூல் அடைந்த முதல் வெற்றி. ஆனாலும் நீங்கள் ஆதாரங்களை யார் கேட்கப் போகிறார்கள் என அசட்டு துணிச்சலில் இறங்கியிருப்பதை என்ன சொல்ல?
உலகம் முழுவதிலும் ஏகாதிபத்திய, முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகள் ‘ஸ்டாலின் எதிர்ப்பை’ ஒரு வேலைத்திட்டமாக வரையறுத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றன... இது அவர்களது வர்க்க நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள இன்றியமையாதது என்று எண்ணுகிறார்கள். தமிழ்நாட்டிலும் பொதுவுடமையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர்கூட இதைத்தொடர்வது விநோதமாக உள்ளது. சுரண்டல்சக்திகளின் ‘முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஒழித்து, ‘எல்லார்க்கும் எல்லாமும்’ என்ற சோசலிச பூமியைக் கட்டமைக்க மார்க்சீய மூலவர்களால் கட்டமைக்கப்பட்டதுதான் ‘பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்’. இதை முதலாளித்துவ சர்வாதிகாரத்தோடு இணைத்து ‘இரண்டு சர்வாதிகாரங்களும் ஒழிக்கப்பட வேண்டும்’ என்பவர்கள் ‘டிராட்ஸ்கியர்கள்’. டிராட்ஸ்கியர்களின் ‘ஸ்டாலின் எதிர்ப்பு’ இங்கும் தொடர்கிறது என்பதன் வெளிப்பாடுதானா ‘ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்’ என்ற நூலுக்கான விமர்சனம்?
இந்தியாவின் தலைசிறந்த புரட்சியாளர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு ’ப்ரண்ட் லைன்’ 1995 ஜூன் 3 இதழில், ‘ஸ்டாலினின் ஆளுமையில் இருந்த நேர்மறை மற்றும் எதிர்மறை குணாம்சங்கள்’ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். அதில், 1979ல் ஸ்டாலின் பிறந்த நூற்றாண்டுவிழாவில் தொடங்கி தோழர் ஹிரேன்முகர்ஜி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘ஸ்டாலின் பாரம்பரியம்’ நூலைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக்கட்டுரையின் முதல்பத்தியிலேயே ஹிரேன்முகர்ஜி, ‘வரலாற்றில் மிக அதிகமாக எழுதப்பட்ட ஒருபுகழ்பெற்ற மனிதர் ஸ்டாலின்: உலகின் பெரும்பாலான பத்திரிக்கை வெளியீட்டாளர்களால் நிந்திக்கப்பட்ட, கேலிசெய்யப்பட்ட மற்றும் கண்டனம் செய்யப்பட்ட , அதேசமயம் அவரை வியந்து எண்ணிலடங்கா தவர்களால் வானளாவப் புகழப்பட்டவருமாவார். அத்துடன் தன்னுடைய வாழ்நாளிலேயே புதிய, கொந்தளிப்பான, கண்ணிவெடிகள் நிறைந்த சூழலில் மனித வரலாற்றுக் கூர்முனைப்போடும், அசைக்கமுடியாத மனத்தின்மையோடும் செலுத்திய ஒருவருமாவார்’ என எழுதியதை ஈ.எம்.எஸ். குறிப்பிடுகிறார்.
இதைத்தொடர்ந்து வந்த கட்டுரைகள் ஸ்டாலினின் முக்கியத்துவம் வாய்ந்த சித்திரத்தை, ஸ்டாலின் என்ற மனிதனையும், அவர் ஆற்றிய பணிகளையும் ஆய்வு செய்தன. அவைகளில் ஒரு அத்தியாயத்துக்கு ‘தந்தத்தில் ஒரு குறை இருந்தாலும்கூட அது தந்தமே’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அது அந்த முழுநூலுக்குமே துணைத்தலைப்பாக ஆக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த கருத்து என்னவென்றால் ‘ஸ்டாலின் சிலதவறுகளையும், ஏன் சிலகுற்றங்களையும் இழைத்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தன் வாழ்நாளின் துவக்கம் முதல் இறுதிவரையிலும் அவர் ஒருகம்யூனிஸ்டாகவே இருந்தார்’ என்று இ.எம்.எஸ். விவரிக்கிறார். அவர் மேலும் எழுதுகிறார்:
‘தனது கரங்களில் ஒப்படைக்கப்பட்ட லெனினின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல அவசியமானது என்னும் தவறான கருத்தில்தான் அந்தத்தவறுகள் நேர்ந்தன. அந்தப்பாரம்பரியத்தை அவர் முன்னெடுத்துச் சென்றார் இதுவரை பின்தங்கியிருந்த ஒரு ஜாரிஸ்ட் சாம்ராஜ்யத்தை ஒரு முன்னேறிய நவீன சோசலிச நாடாக மாற்றுவதை அது சாத்தியமாக்கியது. உலகிலேயே மிகவும் பணக்கார நாடான அமெரிக்காவுக்கு இணயான நாடாக அது மாறியது.’
‘சோவியத் கம்யூனிஸ்ட்கட்சியின் 20ஆவது மாநாட்டில் ஸ்டாலின்மீது வைக்கப்பட்ட விமர்சனத்தின்மீது அன்று ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட்கட்சியாக இருந்தபோது அதன் மத்தியக்குழு நிறைவேற்றிய தீர்மானம் எனது நினைவுக்கு வருகிறது. அந்த விமர்சனத்தை மத்தியக்குழு ஏற்றுக்கொண்டாலும், அதில் இரண்டு முக்கியமான குறைகள் இருப்பதாகவும் கூறியது’
முதலாவது, ஸ்டாலினின் தவறுகளைப்பற்றிய ஒருதலைப்பட்சமான விமர்சனத்தில் தொழில்மயமாக்குதல், விவசாயத்தை நவீனப்படுத்துதல், கலாச்சாரத்தில் செய்தபுரட்சி ஆகியவற்றில் சோவியத்யூனியன் மற்றும் சோவியத் கம்யூனிஸ்ட்கட்சி ஆகியவை அளித்த வரலாற்றுச்சிறப்புமிக்க பங்களிப்பையும், அதனால், நாஜிப்படையெடுப்பாளர்களைப் படுதோல்வியடையச் செய்து, பாசிசத்திடம் அப்போது அடிமைப்பட்டுவிடக்கூடிய அச்சுறுத்தல்களிலிருந்து மனிதகுலத்தை விடுதலை செய்வதற்கு சோவியத் மக்களால் சாத்தியமாயிற்று என்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இரண்டாவதாக, அந்த விமர்சனம் நடந்த தவறுகளுக்கு (தனிப்பட்டமுறையில்) ஸ்டாலின் மட்டுமே பொறுப்பு என்பது போலவும், சோசலிச கட்டுமானத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளுக்கும், நாஜிப்படையெடுப்பாளர்களைத் தோற்கடித்ததற்கும் சோவியத் கூட்டுத்தலைமைதான் காரணம் என்பதுபோலவும் ஒருதோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், மறுபக்கம், சாதனைகள் தவறுகள் இரண்டுக்கும் கூட்டுத்தலைமைதான் என்பதும் அந்தக் கூட்டுத்தலைமைக்கு தலைவராக ஸ்டாலின் இருந்தார் என்பதும்தான் உண்மை. ஸ்டாலின் நூற்றாண்டு விழா கட்டுரையில் முகர்ஜி குறிப்பிட்டிருப்பதைபோல் ஸ்டாலின் வாழ்நாளில் அவரைக் கடவுளாகத் தூக்கிக்கொண்டாடிக் கொண்டிருந்த அதேநபர்கள்தான் அவரை ‘சாத்தானின் மொத்த உருவம்’ என்று இகழ்ந்தவர்களாவர். எனவேதான் ஸ்டாலினைப்பற்றிய நேர்மறை, எதிர்மறை அம்சங்களை மாத்திரம் மதிப்பீடு செய்யாமல், அவர் தலைவராக இருந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையைப்பற்றியும் முறையாக மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கோரியது’ என்றும் ஈ.எம்.எஸ். சுட்டிக்காட்டுகிறார்.
அவர் மேலும் எழுதுகிறார்: ’.சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்டாலினைப்பற்றிய விமர்சனம் மேலெழுந்தவாரியானது’ என்று இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பால்மைரோ டோக்கிலியாட்டி தெரிவித்த ஆழ்ந்தகருத்தும் என் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார்: ‘கேள்வி என்னவென்றால், ஸ்டாலின் செய்ததாகக் கூறப்படும் தவறுகள் நிகழ்ந்ததா? இல்லையா? என்பதல்ல. ஆனால், அவற்றின் தத்துவார்த்த அரசியல் ஸ்தாபன வேர்கள் எவை? எவை? என்பதுதான்.’
‘டோக்கிலியாட்டி மேலும் சொன்னார். ‘இதைத் தெரிந்துகொள்ளாமல் உலக கம்யூனிஸ்ட் இயக்கம் ஸ்டாலினின் தலைமையில் செய்யப்பட்ட சோசலிச கட்டுமானம் தரும் பாடங்கள் பற்றிய சரியான முடிவுகளுக்கு வரமுடியாது.
’சோவியத் நாட்டின் உன்னதமான புதல்வர்கள், புரட்சியை நடத்திய வீரர்கள் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு போலிவழக்குகள் நடத்தபட்டு …….. ’ என நெஞ்சை உருக்கும் வரிகளை இந்த விமர்சனம் கொண்டுள்ளது. இது உண்மையா?
டிராட்ஸ்கி தவிர சோவியத் யூனியனிலிருந்து நாடுகடத்தப்பட்ட மற்ற அனைவரும் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த விசாரணை வெளிப்படையாக நடந்தது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் தூதர்களும், அன்னாலூயி ஸ்ட்ராங், டி.என்.ப்ரீத் போன்ற மேற்கத்திய முன்னணி நாளேடுகள் மற்றும் இதழ்களின் பிரதிநிதிகளும் இந்த விசாரணையை கவனித்தனர். இந்த விசாரணைகளில் அமெரிக்க தூதர் டேவிஸ் உணர்வுபூர்வமாக மனதைப் பறிகொடுத்தார். அன்றாடம் விசாரணைக்குச் சென்ற இவர் உதவிக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொண்டு விசாரணையை உன்னிப்பாகக் கவனித்தார். அவர் ஒரு வழக்கறிஞரும்கூட. அவர் தனது நினைவுக்குறிப்புகளில் ‘அரசைக்கவிழ்க்க சதி நடந்தது இந் தவிசாரணையில் தெளிவாக நிறுவப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சந்தேகத்துக்கிடமின்றி குற்றவாளிகள்தான். விசாரணையைக் கவனித்த நாங்கள் எல்லாரும்கூட அதனை வெளிப்படையாக ஒப்புக்கொண்டோம். இருப்பினும் பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திகளைக்கொண்டு வெளியுலகினர், ‘இது திட்டமிடப்பட்ட நாடகம்’ என்று நினைக்கக்கூடும். என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல வழக்கறிஞருமான டி.என்.ப்ரீத் தனது சுயசரிதையில் எழுதினார்: ‘மற்ற நாடுகளின் விசாரணைமுறைகளைவிட சோவியத்முறைகளை நான் நன்றாக அறிவேன். இந்த விதிமுறைகள் மேற்குஐரோப்பிய நடுகளில் உள்ளதைப் போன்றவை என்றாலும், சில அம்சங்களில் ஆங்கிலேய விதிமுறைகளைவிட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் சாதகமானவை. இந்த விசாரணை பொதுவாக நேர்மையுடன் நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள்தான் என்பது நிரூபிக்கப்பட்டது.
உலகில் பிரபலமான செய்தி ஏடுகள் மற்றும் சஞ்சிகைகளின் நிருபர்கள் விசாரணை முழுவதும் கவனித்தபின் ‘இது நேர்மையாகவும், நியாயமாகவும், சட்டப்படியும் நடந்ததாக’ கூறினர். குருச்சேவும் மற்றவர்களும்தான் இந்த் விசாரனையை,’ஜன நாயகமற்றது: கொடுங்கோன்மையானது’ என்றனர். இந்த விசாரனையை முழுமையாகக் கவனித்த எந்த அயல்நாட்டினரோ, ராஜீயவாதிகளோ, பத்திரிக்கையாளர்களோ, வழக்கறிஞர்களோ இதனை நியாயமற்றது என்று ஒருபோதும் சொல்லவில்லை.
இந்த விசாரணை ’திட்டமிட்ட நாடகம்’ எனப்படும் பொய்ப்பிரச்சாரத்தை மற்றவர்களும்கூட அம்பலப்படுத்தினர். ஆனால், சோவியத் யூனியனில் சோசலிசத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கத்துடனிருந்த முதலாளிகள் மட்டும் இந்தப் பிரச்சாரத்தை வேதவாக்குபோல நடத்தி வந்தனர். இந்த மறைமுக சதி நீடித்திருந்தால், ஹிட்லரின் படைகள் சோவொயத் யூனியனைத் தாக்கியிருந்தால் என்ன நேரிட்டிருக்கும் என்பதை இப்போது கொஞ்சம் நினைவுகூர்ந்து சிந்திக்கவேண்டும்.
தேசிய இனங்கள் மீதான தோழர் ஸ்டாலினின் மார்க்ஸிய அணுகுமுறையை நீங்கள் புரிந்துகொள்ளவே முடியாது ப.கு.ராஜன். முதலாளித்துவம் வாய்க்கிழிய தேசியம் பேசும். அது சந்தையை அடிப்படையாகக் கொண்டது. ஆதலால்தான் முதலாளித்துவம் தன் சொந்த சந்தையை உறுதிப்படுத்தியப்பின் அகண்ட சந்தைக்கான அகண்ட தேசம் பேசும். ஆனால் மார்க்ஸியம் மட்டுமே மக்கள் தேசியம் பேசும். தேசியம் பற்றிய அந்த மார்க்ஸிய வரையறையை நமக்கு தந்தவர் தோழர் ஸ்டாலின்.
அவர் எந்த தேசிய இனத்தையும் வலுக்கட்டாயமாக சோவியத் ஒன்றியத்தில் அடைத்துவைத்து நசுக்கியதில்லை. ஆனால் தோழர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் அணுகுமுறையால் எண்ணற்ற தேசிய இனங்கள் சோவியத் யூனியனோடு விரும்பி இணைந்தன.
பின்லாந்து, எஸ்டோனியா, லாட்வியா, வித்துவேனியா ஆகிய நாடுகள் புரட்சிக்குப் பின்பு தனியாக சென்றன. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்நாடுகளில் மக்கள் சோவியத் யூனியனோடு இணைய வேண்டுமே குரல்கொடுத்தனர். இந்நாடுகள் மக்கள் வேண்டுகோளுக்கு செவிமடுத்து பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் விருப்பத்தால் சோவியத் யூனியனில் இணைந்தன.
இரண்டாம் உலகப் போரில் தோழர் ஸ்டாலினின் தலைமையிலான செம்படை பல நாடுகளை அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுவித்தது. ஹங்கேரி, ஆஸ்திரியா, யுக்கோஸ்லோவ்கியா, ருமேனியா, செக்கோஸ்லோவியா என பல நாடுகள் செம்படையால் விடுதலை அடைந்தன. அவை ஒரு போதும் சோவியத் யூனியனில் இணைய வலியுறுத்தப்படவில்லை.
இவையெல்லாம் தெரியாமல் ஸ்டாலின் தேசிய இனங்களை நசுக்கினார், பிழிந்தார் என கதை விடக்கூடாது. தோழர் ஸ்டாலின் காலமானது உலகின் சமாதான காலமாக இருக்கவில்லை; கடும் நெருக்கடி காலமாகவே இருந்தது. முதலாம் உலகப் போர் எனும் பேரழிவில் இருந்துதான் இரசியா புரட்சியின் மூலம் எழுச்சி பெற்றது. அது தனது பழைய காயங்களை ஆற்றும் முன்னே இரண்டாம் உலகப் போர் மூண்டெழுந்தது. இரசியா இதில் எப்போதும் ஆபத்தான நிலையிலேயே இருந்தது. உலகு தழுவிய முதலாளித்துவப் பயங்கரவாதிகளை எதிர்கொண்டு சோவியத் இரசியாவையும், புரட்சியையும், பல பின்தங்கிய நாடுகளின் எதிர் காலத்தையும் காக்கிற கடமை தோழர் ஸ்டாலினின் அரசுக்கு இருந்தது. இந்த நிலையில் இருந்துதான் சோவியத் யூனியனுக்குள் அனைத்துச் சிக்கல்களும் எதிர் கொள்ளப்பட்டன. தேசிய சிக்கலும் அவ்வகையில்தான் எதிர் கொள்ளப்பட்டது. தோழர் ஸ்டாலினுக்கு மட்டுமல்ல கம்யூனிஸ்டுகள் அனைவருக்குமே உலக நலனுக்கு உட்படாத எந்த நலனும் இல்லை.
ஸ்டாலின்மீது கற்பிக்கப்பட்ட களங்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் துடைத்தெறியப்படுகிறதே என்ற ஆதங்கத்தில், டிராட்ஸ்கி மற்றும் குருச்சேவின் அபிமானியாக, ஸ்டாலின் மீதான வெறுப்புணர்வை அடிநாதமாகக்கொண்டு இங்கு குரோவர்ஃபர் நூலைப்பற்றியும், மொழிபெயர்ப்பாளரைப் பற்றியும் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் ப.கு.ராஜன் டி. (ராட்ஸ்கிய) கு. (ருச்சேவிய) ராஜனாக மாறிவிட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. இருந்தபோதிலும், இந்த விமர்சனம் சில உண்மைகளை வெளிக்கொண்டுவர உதவியுள்ளமைக்கு நன்றி கூறத்தான் வேண்டும்.
விமர்சனக்காற்று வீசட்டும்! வெளிச்சத்தில் உண்மைகள் மிளிரட்டும்!!.
தோழமையுடன்,
செ. நடேசன்
குரோவர்ஃபர் நூலின் மொழிபெயர்ப்பாளர்.

Friday, 8 April 2016
உண்மைகளின் வெளிச்சத்தில்.....
உண்மைகளின் வெளிச்சத்தில்.....
”இழப்பதற்கு
அடிமைச்சங்கிலிகளைத்தவிர வேறொன்றும் இல்லை.அடைவத்ற்கோ ஒரு பொன்னுலகம்
காத்திருக்கிறது” என்று பிரகடனம் செய்தார்கள் மார்க்சியமூலவர்கள்.
லெனினின் தலைமையில் அந்த பாட்டாளிவர்க்கப்புரட்சியை வெற்றிகரமாக சாதித்த சோவியத்
யூனியன், ‘உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என
அறைகூவல் விடுத்தது. “ஆகா என்றெழுந்த்து பார் யுகப்புரட்சி” என்று உலகத்தின் உழைக்கும்
மக்கள் சிலிர்த்தெழுந்தார்கள்.
’லெனினின் மாணவன்’ என தன்னைப் பெருமையுடன்
அழைத்துக்கொண்ட ஸ்டாலினின் தலைமையில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி (போ)
மூன்றாம் அகிலத்துக்குத் தலைமை தாங்கியபோது ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும்
அஞ்சிப் பின்வாங்கின. உலகெங்கும் உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் சோசலிச உலகத்தை
நிர்மாணிக்கும் என்ற மகத்தான நம்பிக்கை எழுந்தது. மிகவும் பின்தங்கிய நிலையில்
இருந்த சோவியத் யூனியன் மிகக்குறுகிய காலத்தில் ஸ்டாலின் தலைமையில் உலகின்
முன்னேறிய நாடுகளில் ஒன்றாக மலர்ந்து அந்த நம்பிக்கைக்கு வலுவூட்டியது.
ஸ்டாலின் மறைவுக்குப்பின் 1956 பிப்ரவரி 25
ல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது கட்சிக்காங்கிரசில் குருச்சேவ் ஒரு’இரகசிய உரை’யை நிகழ்த்தினார். அதில் அவர் ‘வெளிப்படுத்திய’ விவரங்கள் ஏகாதிபத்திய, முதலாளித்துவ
உலகில் அமோக வரவேற்பையும், கம்யூனிச உணர்வுகொண்டோர் மத்தியில் அதிர்வுகளையும் ஏற்படுத்தியது.
அமெரிக்க அரசுத்துறை குருச்சேவ் நிகழ்த்திய
அந்தஉரையை உடனடியாக வெளியிட்டுப் புளகாங்கிதம் அடைந்தது. ‘ நியூயார்க டைம்ஸ்’ ஏடு அந்தஉரையை ‘மகத்தான சாதனை’, ‘கொண்டாடத்தக்கது’ என்று போற்றியது. இந்தக்கட்டுரையை எழுதிய முதலாளித்துவ
எழுத்தாளர் வில்லியம் டாவ்ப்மென் குருச்சேவின் வாழ்க்கை வரலாற்றை எழுதி ‘புக்கர்’ பரிசும் பெற்றார். இலண்டன் முதலாளித்துவ
ஏடான ‘டெலிகிராஃப்’ குருச்சேவின் உரையை ‘20ஆம் நூற்றாண்டின் மிகவும்
புகழ்பெற்ற உரை’
என புகழாரம்
சூட்டியது. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி, சீனக்கம்யூனிஸ்ட் கட்சி,
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட உலக கம்யூனிச இயக்கங்களும் அந்த உரையைப்
பரிசீலித்துத் தங்கள் கருத்துக்களை வெளியிட்டன.
அந்த ‘இரகசிய உரை’யில் குருச்சேவ் கூறியது என்ன? அது உண்மைதானா?
இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியனுக்குத்
தலைமைதாங்கி, ஹிட்லரையும், நாஜிப்படையையும் தோற்கடித்து, பாசிசத்தின்பிடியில்
விழஇருந்த இந்தஉலகைக் காப்பாற்றிய, மிகக்குறுகிய காலத்தில் லெனினின்
வழிகாட்டலின்படி சோவியத் யூனியனை ஆற்றல்மிக்க சக்தியாக, ஏகாதிபத்தியத்தியங்களுக்கு
சவால்விடக்கூடிய மாபெரும் பாட்டாளிவர்க்க பூமியாக மாற்றிய ஸ்டாலின்மீது குருச்சேவின்
‘இரகசிய உரை’ அவதூறுகளைப் பொழிந்தது.
குற்றச்சாட்டுக்களை சுமத்தியது. உலகமே திடுக்கிட்டது.
ஸ்டாலின் ‘சர்வாதிகாரியா?’ ‘கொடுங்கோலரா?’ பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்த ‘கொலைகாரரா? தன்னைச்சுற்றி
‘தனிநபர்வழிபாட்டுணர்வை’ உருவாக்கிக் கொண்டவரா? உலகத்தின்
அனைத்து நாடுகளிலுமுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் அன்றைய சூழலில் கிடைத்த
தகவல்களின் அடிப்படையில் சோவியத் யூனியன் வளர்ச்சியையும், ஸ்டாலினின்
பாத்திரத்தையும்பற்றித் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தன.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விரிவடைந்த
பிளீனத்தின் முடிவுகளின் அடிப்படையில், “பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின்
வரலாற்றுபூர்வமான அனுபவங்கள்” என ‘மக்கள் தினசரி’ (People’s Daily’ –‘ Rinmin Ribao’) 1956
ஏப்ரல் 5 மற்றும் 1956 டிசம்பர் 29 ல் இரண்டு கட்டுரைகளை வெளியிட்டது -அதன்
முக்கியமான அம்சங்கள்:
‘சுரண்டும் வர்க்கங்களுக்கு சேவைசெய்துவரும் எல்லா முதலாளித்துவ
நாடுகளிலும் ஆட்சி அதிகாரத்திலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது குழுவோ
அதனுடைய தீவிரமான தவறுகள்பற்றி. மக்கள் அல்லது தனது உறுப்பினர்கள் முன் வெளிப்படுத்த
வரலாற்றில் எப்போதும் துணிந்த்தில்லை. ஆனால் பாட்டாளிவர்க்க்க் கட்சிகளில் இது
முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்காக
சேவைசெய்துவரும் பாட்டாளி வர்க்கக்கட்சிகள் தங்களைசுயவிமர்சனம்
செய்துகொள்வதன்மூலம் தங்களது தவறுகளைத் தவிர வேறெதையும் இழப்பதில்லை. இதன்மூலம்
அவைகள் மக்களின் ஆதரவைப்பெற்று வருகின்றன.
சோவியத்யூனியன்கம்யூனிஸ்ட்கட்சி ‘தனிநபர்வழிபாடு பற்றி சுயவிமர்சனம் செய்துகொண்ட
தால் இப்போது ஒருமாதத்துக்கும் மேலாக உலகெங்கும் உள்ள பிற்போக்காளர்கள் மகிழ்ச்சியில்
கத்துகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்:
“ நன்று. முதன்முதலாக
சோவியத் அமைப்புமுறையை ஏற்படுத்திய சோவியத் யூனியன் அதிர்ச்சி தரக்கூடிய தவறுகளைச்
செய்துள்ளது. மேலும் என்ன? அந்த்த்தவறுகளை பரந்த அளவில் புகழ்பெற்றவரும்,
மதிக்கப்படுபவருமான ஸ்டாலின் தானே செய்துள்ளார்!”
இதன்மூலம் சோவியத் யூனியன் மற்றும்
பிறநாடுகளிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளை மதிப்பிழக்கச்செய்ய தங்களுக்கு ஒரு
பிடி கிடைத்துள்ளது என்று
பிற்போக்குசக்திகள் கருதுகின்றன. ‘ நாங்கள் எப்போதும் தவறுகளைச் செய்ய்மாட்டோம்’ என்றோ, ‘குறிப்பிட்ட ஒருகம்யூனிஸ்ட்
தவறுகளைச் செய்வது என்பது சாத்தியமே இல்லை’ என்றோ
தலைமையில் உள்ள எந்த மார்க்சிஸ்ட்டாவது எப்போதாவது எழுதியுள்ளாரா? அது, பெரிய
அல்லது சிறிய தவறுகளை எப்போதும் செய்யாத ஒருகடவுளின் பாதியாக இருப்பதை
கம்யூனிஸ்ட்களாகிய நாங்கள் துல்லியமாக மறுப்பதாலும், கம்யூனிஸ்ட்களாகிய நாங்கள்
எங்கள் உள்கட்சிவாழ்வில் விமர்சனம், சுயவிமர்சன்ங்களைப் பயன்படுத்துவதாலும்
அல்லவா? மேலும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை இந்த உலகில் முதன்முறையாக நிறுவிய,-
இதற்கான முன்னுதாரணங்களின் பயன்களைப் பெற்றிராத – ஒரு சோசலிசஅரசு தவறுகளையே
செய்யாது என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்? 1921 அக்டோபரில் லெனின் கூறினார்:
சோவியத்
அமைப்பைக் கட்டமைக்கும் நமது பணிகளில் ஏற்படும் பின்னடைவுகளும், தவறுகளும் நம்மீது,
சவக்குழிக்குச் செல்லும் முதலாளித்துவ, குட்டிகுதலாளித்துவ ஜன நாயகவாதிகளின்
அருவருப்பான வசைப்பேச்சுக்கள் குவிக்கப்படும். நாம் எண்ணற தவறுகளைச் செய்ததன்மூலம்
எண்ணற்ற பின்னடைவுகளைச் சந்தித்துவருகிறோம் என்பதை நாம் ஒருகணம்கூட
மறந்துவிடக்கூடாது. உலகவரலாற்றிலேயே முன்னுதார ணம் இல்லாத ஒருஅரசமைப்பை கட்டமைக்கும்போது
எவ்வாறு பின்னடைவுகளையும், தவறுகளையும் தவிர்க்கமுடியும்! நாம் பின்னடைவுகளையும்,
தவறுகளையும் சரிப்படுத் தவும், சோவியத் கொள்கைகளை – அவை இன்னும் முழுநிறைவு
பெறுவதில் மிகமிக தொலைவில் உள்ளது – நடைமுறைப்படுத்தவும், வளர்க்கவும் தளராத
உறுதியோடு போராடுவோம்’
இவ்வாறு குறிப்பிட்ட சீன கம்யூனிஸ்ட்கட்சி, ”லெனின் மறைவுக்குப்பிறகு கட்சி மற்றும் அரசின் தலைவர் என்றமுறையில்
ஸ்டாலின் படைப்பாற்றலோடு மார்க்சிய-லெனினிசத்தைப் பிரயோகம்செய்து அதை
வளர்த்தெடுத்தார். டிராட்ஸ்கியர்கள், ஜினோவீவியர்கள், முதலாளித்துவதரகர்கள் முதலானஎதிரிகளிடமிருந்து
லெனினிச கொள்கையைப் பாதுகாப்பதற் கான போராட்டங்களில் மக்கள் உறுதியையும், விருப்பங்களையும்
தெரிவித்து ஸ்டாலின் தன்னை மார்க்சிய-லெனினியத்தின் ஒருமிகச்சிறந்த போராளி என்பதை
நிரூபித்தார்’ என ஸ்டாலின் வகித்த பாத்திரத்தை
மதிப்பீடு செய்தது.
ஆனால், குருச்சேவின் ‘இரகசிய உரை’யின் தாக்கத்தால் தனது மதிப்பீட்டின்
இன்னொரு பகுதியாக, “ஸ்டாலின் தனிநபர் வழிபாட்டை ஏற்றார்: அதை வளர்த்தார்:
தன்னிச்சையான நடவடிக்கைகளில்ஈடுபட்டார். இவ்வாறுஸ்டாலின் தனதுபிந்தைய வாழ்நாளில்
தத்துவத்துக்கும் நடைமுறைக்குமிடையே தானே ஒருமுரண்பாடாகக் காணப்பட்டார்” என விமர்சித்தது.
1956 ஜூலை 12ல் புதுதில்லியில் கூடிய
ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மத்தியக்குழுவும் இதேபோன்ற
கருத்துக்களையும், விமர்சங்களையும் தீர்மானங்களாக வெளியிட்டது. உலகின் பல்வேறு
நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட்கட்சிகளும் இத்தகைய பரிசீலனைகளைச்செய்து தங்கள்
கருத்துக்களை வெளியிட்டன.
ஆனால் குருச்சேவின் ‘இரகசிய உரை’ நிகழ்த்தப்பட்ட 35 ஆண்டுகளுக்குப்பின்-
அதாவது சோவியத்யூனியன் வீழ்ச்சிக்குப்பின் – முதலாளித்துவம் மீண்டும்
அரங்கேறியபின், முன்னாள் சோவியத் ஆவணக்காப்பகங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற அனைத்து
ஆதாரங்களும் 1956 பிப்ரவரி 25ல் குருச்சேவ் தனது ‘இரகசிய உரை’யில் ஸ்டாலின்மீது சுமத்திய குற்றச்சாட்டுக் களும்,
தாக்குதல்களும் பொய்களால் வடிவமைக்கப்பட்டவையே என்பதை நிரூபித்துள்ளன.
அமெரிக்காவிலுள்ள மாண்ட்க்ளேர் பல்கலைக்கழக் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான
குரோவர் ஃபர் 10ஆண்டுகளுக்கும்மேலாக நட்த்திய தனது ஆழ்ந்த ஆய்வுகளின் அடிப்படையில் Khrushchev Lied நூலில் அம்பலப்படுத்தியுள்ளார்.
குருச்சேவின் பொய்களால் தவறாக எழுதப்பட்டுள்ள சோவியத் யூனியன் வரலாறு மட்டுமல்ல’ சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி
மற்றும் உலக வரலாறும் உண்மைகளின் வெளிச்சத்தில் திருத்தி எழுதப்பட்டே
ஆகவேண்டும் என பேரா.குரோவர் ஃபர் ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.
1904ல் ‘தி மெட்டல் ஒர்க்கர்’ இதழில் ஈகிள்ஸ் ஸ்டெப்ஸ் என்ற தொழிலாளி
எழுதினார்: “தொழிலாளர் இயக்கம் பத்தாயிரம்முறை விழும்! மறுபடியும் எழும்! அதன்
குரல்வளை நெறிக்கப்படும்: தொண்டை அடைக்கப்படும். நீதிமன்றம் கேள்விக்கணை
தொடுக்கும்: குண்டர் களால் வசைபாடப்படும். பொதுமக்களின் புருவ நெரிப்பும்கூட
போர்தொடுக்கும். அரசியல்வாதி களால் ஏய்க்கப்படும். ஓடுகாலிகளால் மறுப்புரை கூறப்படும்: சூதாடிகளால் பலிகொடுக்கப்படும்:
உளவாளிகளின் ஒற்றறியும் நோய்களால் பீடிக்கப்படும்: கோழைகளால் நடுவீதிகளில்
விடப்படும்: தலைவர்களால்கூட விற்றுவிடப்படும்.”
ஓ! இவ்வளவு சோதனைகள் இருந்தாலும், இந்த வையகம்
இதுவரை கண்டிராத உன்னதசக்தி வாய்ந்தது உழைக்கும் மக்களின் இயக்கம் ஒன்றுதான்!
ஆண்டாண்டுகளாக அடிமைப்பட்டிருக்கும் பாட்டாளிகளை விடுதலை செய்வதே இதன்
வரலாற்றுக்கடமையாகும். இதன் வெற்றி நிச்சயமே!
இதைமீண்டும் உறுதிப்படுத்தும் Khrushchev Lied என்ற இந்த அரியநூலை ‘ஸ்டாலின்பற்றிய
குருச்சேவின் பொய்கள்’ என இந்தியமொழிகளிலேயே
முதலாவதாக தமிழில் மொழிபெயர்க்க அனுமதித்துள்ள மாண்ட்க்ளேர் பல்கலைக்கழக்
பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான குரோவர் ஃபர் அவர்களுக்கும், அழகிய நூலாக
வெளியிடும் பொன்னுலகம் பதிப்பகம் தோழர் குணா அவர்களுக்கும் எனது நன்றி!
பாராட்டுக்கள்!!
ஊத்துக்குளி. ஆர்.எஸ் தோழமையுடன்,
9.4.2016 செ. நடேசன்
Subscribe to:
Posts (Atom)