Wednesday, 26 February 2014

நம்பிக்கையாளர் அசீமானந்தா ஆர்.எஸ்.எஸ். மதவெறி அடியாள் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்


ஆர்.எஸ்.எஸ். மதவெறி அடியாள் அசீமானந்தாவின்
ஒப்புதல் வாக்குமூலம்                     
 நம்பிக்கையாளர் அசீமானந்தா                               --------------------------------------------------------     லீனாகீதாரெகுநாத்
தி கேரவன் ஆங்கில இதழ் ஆசிரியர்குழு மேலாளர்
  தமிழில்: செ.நடேசன்
 ‘சுவாமிஜியை அழைத்துவாருங்கள்-ஜெயிலர் உத்தரவிட்டார். இரண்டு காவலர்கள் ஜெயலரின் அலுவலகத்தை விட்டுவிரைந்து, சிறையின் தரைத்தளத்திற்குச் சென்றனர் சுவர்களுக்கு வெளியே நூற்றுக்கணக்கான மனிதர்கள் ஒரேநேரத்தில் அலறுவது போன்ற, காதுகளைச் செவிடாக்கும் சத்தம் அறைகளினூடே எதிரொலித்த்து.
  அடுத்த சில நிமிடங்களில் இந்து கலவரவாதியும், 2006 முதல் 2008க்கு இடையே நாடுமுழுவதும் பொதுமக்களைக் குறிவைத்துப் பல்வேறு வன்முறைத் தாக்குதல்களுக்குச் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருமான சுவாமி அசீமானந்தா ஜெயிலரின் அறைக்குள் காலடி எடுத்துவைத்தார்.


   அவர் ஒருகாவி வேட்டியையும்,காவிகுர்தாவையும் முழங்கால்வரை தொங்குமாறு அணிந்திருந்தார். அவரது துணிகள் புத்தம்புதியதாகச் சலவைத் தேய்ப்பு செய்யப்பட்டிருந்தன. உல்லன் மங்கி கேப் அவரது நெற்றிக்குக்கீழ் இழுக்கப்பட்டிருக்க, அவரது கழுத்தைச்சுற்றி ஒரு சால்வை போர்த்தப்பட்டிருந்தது. அவர் என்னைப்பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தவராகக் காணப்பட்டார். நாங்கள் இருவரும் ‘நமஸ்தேபரிமாறிக் கொண்டோம். பின்னர் அவர் என்னை அடுத்திருந்த ஓர் அறைக்கு இட்டுச்சென்றார். அங்கே வெள்ளை வேட்டி, குர்தா அணிந்திருந்த எழுத்தர்கள் தடிமனான பதிவேடுகளில் மூழ்கியிருந்தனர். அவர் கதவுக்குப்பின் இருந்த ஒருபெரிய மரப்பெட்டியின்மீது அமர்ந்து, அருகில் இருந்த டெஸ்க்கிலிருந்து ஒரு நாற்காலியை இழுத்துக்கொள்ளுமாறு கூறினார். ஒரு நல்ல உபசரிப்பாளராக விளங்கிய அவர், எனது வருகையைப்பற்றி விசாரித்தார். உங்கள் கதையை யாராவது ஒருவர் சொல்லவேண்டுமே என்றேன் நான்.
  இரண்டு ஆண்டுகளுக்குமேல் அசீமானந்தாவிடம் நான் நடத்திய நான்கு நேர்காணல்களில் முதலாவதின் தொடக்கம் இவ்வாறு இருந்தது. தற்போது அவர் குறைந்தபட்சம் 82பேர்களைக் கொன்ற 3 குண்டுவெடிப்புக்கள் தொடர்பான கொலை, கொலைமுயற்சி, சதித்திட்டம் தீட்டியது, கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களின் கீழ் விசாரணையில் இருந்துவருகிறார். அவர் மேலும் இரண்டு குண்டு வெடிப்புவழக்குகளில் விசாரிக்கப்படஉள்ளார்: ஆனால், அவற்றின்மீது முறையான குற்றச்சாட்டுக்கள் இன்னும் சாட்டப்படவில்லை. ஒட்டுமொத்தமாக 5 தாக்குதல் கள், 119 பேரைக் கொன்றது மற்றும் இந்தியசமுதாயத்தை அரிப்பவராக வேலைசெய்தது ஆகியவற்றுக்காகத் தண்டனை அளிக்கப்பட்டால் அவர் மரணதண்டனையை எதிர்கொள்ள வேண்டும்.
  எங்களது உரையாடல்கள் நடைபெற்றபோது அசீமானந்தா மெல்லமெல்ல உற்சாகம் அடைந்து மனம்திறந்து பேசினார். அவரது வாழ்க்கையைப்பற்றி அவர்கூறிய கதை குறிப்பிடத்தக்கது. இந்தக்காலகட்டங்களில் பெரும்பாலானநேரம் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கின் ஆதிவாசிகள் பிரிவான ‘வன்வாசி கல்யாண் ஆஷ்ரம்(வி.கே.ஏ) என்ற அமைப்பின்கீழ் சங்பரிவாரத்தின் ‘ஹிந்துத்வாவையும் அதன்நோக்கமான   ‘ஹிந்துராஷ்ட்ரத் தையும் அவர் பிரச்சாரம் செய்துகொண்டே இருந்தார். இப்போது வயது 60களின் துவக்கத்தில் உள்ள அசீமானந்தா ஒருபோதும் தனது ஆழ்ந்த நம்பிக்கைகளிலிருந்து தளர்வோ, நெகிழ்வோ அடைந்ததில்லை.
  மோகன்தாஸ் காந்தியின் கொலைக்குப்பிறகு நாதுராம்கோட்சேவும்,அவர் கூட்டாளி நாராயண் ஆப்தே-வும் 1949ல் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டு, எரியூட்டப்பட்டார்கள்.அவர்களது கூட்டுச்சதிகாரரான கோட்சேயின் சகோதரர் கோபால்கோட்சே 18ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். “கோபால்கோட்சே இருந்த அதே செல் (அறை) லில் நான் வைக்கப் பட்டுள்ளேன் என்று அசீமானந்தா பெருமைபொங்க என்னிடம் கூறினார். இன்று ‘இந்துதீவிரவாத வன்முறையின் மிகமுக்கியமான (முகம்) அடையாளமாக அசீமானந்தா விளங்குகிறார். குண்டுவெடிப்புக்களின்முன் அவரைச் சந்தித்த பத்திரிக்கையாளர்கள், அசீமானந்தாவை அசாதாரணமான கொடூரனாக, பொறுத்துக்கொள்ளவே முடியாத மனிதனாக என்னிடம் விவரித்தார்கள். அந்தச்சிறையின் இருளடைந்த ஆவணக்காப்பறையில் நான் கண்ட மனிதன் சிறைவாசத்தால் தளர்ந்துபோனவராக, ஆனால் செய்த தவறுகளுக்காக வருத்தப் படாதவராகவும் இருந்தார். “எனக்கு எது நேர்ந்தாலும் அது இந்துக்களுக்கு நல்லது. அது மக்களிடையே ஹிந்துத்வா உணர்வைக் கிளறிவிடும் என்று அவர் என்னிடம் கூறினார். (லோகோன் மே ஹிந்துத்வா கோ பாவ் ஆவே கா)
                                                                 
   2007 பிப்ரவரி 18 இரவில் சம்ஜுதா எக்ஸ்பிரஸ் டெல்லி ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில் அதன் வழக்கமான பிளாட்பாரம் 18ல் இருந்து புறப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே உள்ள இரண்டு ரயில்வண்டித் தடங்களில் ஓடும் ஒரேஒரு எக்ஸ்பிரஸ் ‘ஃப்ரண்ட்ஷிப்எக்ஸ்பிரஸ்என்று அழைக்கப்படும் ‘சம்ஜுதா எக்ஸ்பிரஸ்’. அந்த இரவில் 750 பயணிகளில் ஏறத்தாழ முக்கால்பகுதியினர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லும் பாகிஸ்தானியர்கள். அந்த எக்ஸ்பிரஸ் தனது பயணத்தைத் தொடங்கிய ஒருமணி நேரத்திற்குப்பின்-நல்லிரவுக்குச் சில நிமிடங்கள்முன்-முன்பதிவு இல்லாத 16ஆவது பெட்டியின் இரண்டு கம்பார்ட்மெண்ட்களில் தீவிர வெடிப்புத் திறன்கொண்ட குண்டுகள்(ஐ.ஈ.டி) வெடித்தன. அந்த இரவில் சீறிவெடித்த குண்டுகளால் ரயிலில் தீப்பிடித்தது. பயணிகள் உள்ளே இருந்து வெளியே செல்லவிடாமல் தடுக்கும்வகையில் குண்டுவெடிப்பால் வெளியேறும் வாயில்கள் அடைக்கப்பட்டன.





    ‘அது மிகவும் பயங்கரமாக இருந்தது என ரயில்பாதை ஆய்வாளர் ஒருவர் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழிடம் தெரிவித்தார். அந்தப்பெட்டி எங்கிலும் முழுவதும் எரிந்த, பாதி எரிந்த பயணிகளின் உடல்கள் சிதறிக்கிடந்தன. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சூட்கேஸில் வெடிக்காத குண்டுகள் (ஐ.இ.டி) பிஇடிஎன், டிஎன்டி, ஆர்டிஎக்ஸ், பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணை ஆகிய இரசாயனங்களின் கலவைகளாக இருந்தன. இந்தத் தாக்குதலில் 68 பேர் இறந்தனர்.
  அசீமானந்தா சம்பந்தப்பட்ட ஐந்து தாக்குதல்களில் இதுதான் இரண்டாவதும், மிகப்பயங்கரமானதும் ஆகும். இப்போது அவர் சம்ஜுதா ரயில்குண்டு வெடிப்பில் முதல் குற்றவாளியாகவும், மே 2007ல் 11பேரைக் கொன்ற ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் மூன்றாவது குற்றவாளியாகவும், அக்டோபர் 2007ல் 3பேரைக் கொன்ற ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர்தர்கா குண்டுவெடிப்பில் ஆறாவது குற்றவாளியாகவும் உள்ளார். மேலும், செப்டம்பர் 2006ல் மற்றும் செப்டம்பர் 2008ல் 37 உயிர்களைப் பறித்த மஹாராஷ்ட்ரா மாலேகான் தாக்குதலில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. இன்னும் குற்றச்சாட்டு அளிக்கப்படவில்லை.
  இந்த வழக்குகளில் பெரும்பாலானவை பல்வேறு காலகட்டங்களில், மும்பை தீவிரவாதிகள் எதிர்ப்புக்குழு (ஏ.டி.எஸ்), ராஜஸ்தான் தீவிரவாதிகள் எதிர்ப்புக்குழு, மத்தியப் புலனாய்வுக்குழு (சி.பி.ஐ) மற்றும் தேசியப் புலனாய்வுக்குழு (என்.ஐ.ஏ) உள்ளிட்ட பல்வேறு குழுக்களால் புலனாய்வு செய்யப்பட்டன. இந்த ஐந்து வழக்குகளிலும் குறைந்தபட்சம் அரை டஜன் குற்றக்குறிப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முறையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 31பேர்களில் அசீமானந்தாவுடன் இணைந்து செயல்பட்டவர்களில் பா.ஜ.க.வின் மாணவர் அணியான ஏ.பி.வி.பி யின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரயக்சிங் தாகுர் மற்றும் இந்தூர் மாவட்ட முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவரான சுனில்ஜோஷி ஆகியோர் அடங்குவர். எல்லாப் புலனாய்வுக்குழுக்களும் இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டதில் அசீமானந்தா மையப் பாத்திரத்தை வகித்தவர் என உறுதிப்படுத்தியுள்ளன. அசீமானந்தா தனது சொந்தக் கணக்கில் சதித்திட்டக்கூட்டங்கள் நடத்தினார். தாக்கப்பட வேண்டிய இலக்குகளைத் தேர்ந்தெடுத்தார். வெடிகுண்டுகள் தயாரிப்புக்கு நிதி ஒதுக்கினார். குண்டுகளை வைத்தவர்களுக்குப் பாதுகாப்பு அளித்ததோடு உதவிகளும் செய்தார்.
  2010 டிசம்பர் மற்றும் 2011 ஜனவரியில் டெல்லி மற்றும் ஹரியானாவில் உள்ள நீதிமன்றங்களில் அசீமானந்தா இரண்டு ஒப்புதல் வாக்குமூலங்களை அளித்தார். அவற்றில் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார். அவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்போது தமக்குச் ‘சட்டபூர்வ உதவிகள் தேவை இல்லை என அவற்றை மறுத்தார். அவர் நீதிமன்றக்காவலில் 48மணிநேரம் இருந்தார். புலனாய்வுக்குழுக்கள் மூலம் பெறப்பட்ட தகவல்கள்மீது ஒவ்வொரு வாக்குமூலத்தையும் பதிவுசெய்வதற்குமுன் அவர் தனதுமனதை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் தரப்பட்டன. அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதில் உறுதியாக இருந்தார். அவரது வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப் பட்டன. அவரது ஒப்புதல் வாக்குமூலமும், அவரது கூட்டுச்சதிகாரர்களான இரண்டுபேரின் வாக்குமூலங்களும் அந்தத் தாக்குதல்களுக்கான திட்டங்கள் ஆர்.எஸ்.எஸ்.-ன் மூத்த தலைவர்களில் குறைந்தபட்சம் ஒருவருக்காவது தெரிந்தே வகுக்கப்பட்டன என்றன.
  2011 மார்ச் 28அன்று அசீமானந்தா சட்ட உதவியை ஏற்றுக்கொண்டார்.ஆனால், மறுநாளே முன்னர் அவர் ஒப்புக்கொண்ட அனைத்தையும் ‘சித்ரவதை செய்து பலவந்தமாக வாங்கப் பட்டவை எனப் பின்வாங்கினார். விசாரணை நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட ஒரு விண்ணப்பத்தில் ‘அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலங்கள் ஊடகங்களுக்குக் கசிய விடப்பட்டுள்ளன. இது அதிர்ச்சி அளிப்பதாகவும், ஆழ்ந்த கவனத்துடன் செய்யப்பட்டதாகவும் உள்ளது. இது அரசியலாக்குவதாகவும், வழக்கு நடத்துவதாகப் பாசாங்கு செய்வதாகவும், ஊடகங்கள்மூலம் ஒருமுடிவை உருவாக்குவதாகவும், அதன்மூலம் உலக அளவில் இந்து தீவிரவாதம்பற்றி ஒரு முன்னோட்டத்தை உருவாக்குவதாகவும் ஆளும்கட்சியின் நோக்கங் களுக்காகத் திட்டமிட்டதன் ஒருபகுதியாகவும் உள்ளது எனக்குறிப்பிடப்பட்டது. அசீமானந்தாவுக்காக  சம்ஜுதா வழக்கில் ஆஜராகி வாதாடும் பலவழக்கறிஞர்களும்,எல்லா வழக்கறிஞர்களும் சங் அமைப்பின் உறுப்பினர்கள்தான் என்றும்,ஆர்.எஸ்.எஸ்.-ன் சட்டப் பிரிவான ‘அகில பாரதிய அதிவக்தா பரிஷத்ன் கூட்டங்களில் முடிவெடுத்து இந்த வழக்குகளை நட்த்துகிறோம் என்றும் என்னிடம்  தெரிவித்தார்கள்.
  நான் அசீமானந்தாவைப் பேட்டிகண்டபோது அவர் சித்ரவதை செய்யப்பட்டதை மறுத்தார். அத்துடன் அவரது வாக்குமூலங்கள் வற்புறுத்திப் பலவந்தமாகப் பெறப்பட்டவை என்பதையும் மறுத்தார். குண்டுவெடிப்புக்களுக்காக அவர் சி.பி.ஐ.ஆல் கைதுசெய்யப்பட்டபோது ‘அதுதான் எல்லாவற்றையும் சொல்வதற்கேற்ற நல்லநேரம்என்று முடிவெடுத்ததாகவும் அவர் கூறினார். எனக்குத் தெரியும், நான் தூக்கிலிடப்படுவேன் என்று. ஆனால் நான் ஏற்கனவே கிழவனாகி விட்டேன்
  எங்களது தொடர் உரையாடல்களின்போது, அவர் சம்பந்தப்பட்ட சதித்திட்டத்தின் விவரங்கள் முழுமையாக வெளிவந்தன. மூன்றாம் மற்றும் நான்காம் நேர்காணல்களில் அவரது தீவிரவாதச் செயல்பாடுகள் அனைத்தும் இப்போது ஆர்.எஸ்.எஸ்.-ன் தலைவராக, அப்போது பொதுச்செயலாளராக இருந்த மோகன்பகவத்வரை ஒப்புதல் அளிக்கப்பட்டவையே என்று தெரிவித்தார். வன்முறைத் தாக்குதல்கள்பற்றி பகவத் என்னிடம் சொன்னார்:. நீங்கள் இதில் வேலை செய்யலாம். இந்திரேஷ்குமார் தொடர்ந்தார்: நீங்கள் இதில் சுனில்ஜோஷியடன் இணைந்து வேலை செய்யுங்கள். ஆனால் இதில் நாங்கள் தொடர்பு படுத்தப்படக்கூடாது. நீங்கள் இதைச்செய்தால் நாங்களும் உங்களுடன் இருப்பதாக்க் கருதலாம்,  
  ஜூலை2005ல் நடைபெற்றதாகக் கூறப்பட்டஒருகூட்டத்தைப்பற்றி என்னிடம் கூறினார். சூரத் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டத்தின்பின் மூத்த சங் தலைவர்களான பகவத், அந்த அமைப்பில் அதிகாரம் படைத்த தேசிய செயற்குழு உறுப்பினர்கள் ஏழுபேரில் ஒருவரான இந்திரேஷ்குமார் உள்ளிட்டோர் குஜராத்-ல்,டேங்க்ஸ்ல் உள்ள ஒருகோவிலுக்குப் புறப்பட்டார்கள். அந்தக் கோவிலிலிருந்து இரண்டுமணி நேரக் கார் பயணத்தில் அடையக்கூடிய ஆற்றங்கரையில் உள்ள ஒரு கூடாரத்தில் அசீமானந்தா வசித்து வந்தார். மோகன்பகவத், இந்திரேஷ்குமார் இருவரும் அசீமானந்தாவையும் அவரது கூட்டாளி யான சுனில்ஜோஷியையும் சந்தித்தனர். ஜோஷி, பகவத்திடம் ‘இந்தியாவில் உள்ள பல முஸ்லீம் இலக்குகளைத் தாக்குவதற்கான திட்டங்களை விவரித்தார். அசீமானந்தாவின் கூற்றுப்படி அந்த இருதலைவர்களும் அந்தத் திட்டங்களை ஏற்று அங்கீகரித்தார்கள். இந்திரேஷ் அசீமானந்தாவிடம் ‘நீங்கள் இந்தத் திட்டத்தில் சுனிலுடன் இணைந்து செயல்படுங்கள். நாங்கள் இதில் சம்பந்தப்படமாட்டோம். ஆனால், நீங்கள் செய்தால் நாங்கள் உங்களுடனேயே இருப்பதாகக் கருதலாம் என்றுகூறினார்.
  அசீமானந்தா தொடர்ந்து கூறினார்: சுவாமிஜீ! நீங்கள் இதைச் செய்தால் நாங்கள் சற்று இளைப்பாறுவோம்.எந்தத் தவறும் அதன்பின் நடக்காது. அது கிரிமினல் வழக்காக மாறாது. இதை நீங்கள் செய்தால் அதன்பின் ‘ஒரு குற்றத்திற்காகவே நாம் இந்தக் குற்றத்தைச் செய்தோம் என்று மக்கள் கூறமாட்டார்கள். இது நமது தத்துவத்தோடு இணைக்கப்பட்டது. இது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. தயவு செய்து இதைச் செய்யுங்கள். உங்களுக்கு எங்கள் ஆசீர்வாதங்கள் உண்டு என்றார் மோகன்பகவத்

     புலனாய்வுக்குழுக்களின் குற்றக்குறிப்புக்கள் இந்திரேஷ்குமார் சதிகாரர்களுக்குத் தார்மீகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் ஆதரவு தெரிவித்தார் எனக்குறிப்பிட்டுள்ளன. ஆனால், மோகன்பகவத் போன்ற மூத்த தலைவர்கள் ஒருவரையும் தொடர்புபடுத்தவில்லை. சிபிஐயால் இந்திரேஷ்குமார் ஒருமுறை குறுக்கு விசாரணை செய்யப்பட்டபின் இந்தவழக்கு தேசியப்புலனாய்வுக்குழுவால் எடுத்துக்கொள்ளப்பட்டது. அது அசீமானநதா மற்றும் பிரக்யாசிங் ஆகியோரைத்தாண்டி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பரிசீலிக்கவில்லை. (இந்தச் சதித்திட்டத்தின் பல்வேறு பகுதிகளை, யார்யாரெல்லாம் குண்டுகளை வைத்தார்களோ அவர்களை எல்லாம் இணைக்கும் சரடாக இருந்த சுனில்ஜோஷி 2007 டிசம்பரில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.)
  இந்தத்தாக்குதல்களில் இந்திரேஷ்குமாருக்குப் பங்கு உண்டு என்று 2010ன் பிற்பகுதியில் குற்றச்சாட்டு எழுந்ததுமுதல் ஆர்.எஸ்.எஸ். அவரைச் சுற்றியிருந்த தொடர்புகளை மூடி மறைத்தது. மோகன்பகவத் -ஒரு சர்சங் சாலக் முன்எப்போதும் மேற்கொள்ளாத நடவடிக்கையாக- குமார்மீதான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கும் தர்ணாவில் பங்கேற்றார். பி.ஜே.பி.யின் ஆதரவும் அவருக்கு இருந்தது. பி.ஜே.பி.யின் தேசிய செய்தித் தொடர்பாளரான மீனாட்சி லேகி குற்றச்சாட்டில் இந்திரேஷ்குமார் பெயர் இடம்பெற்றிருந்தது முதலே அவரது வழக்கறிஞராக இருந்தார். குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் ஒருவரின் வழக்கறிஞர், ‘இந்திரேஷ்குமார் மிகவும் பதவி ஆசை கொண்டவர் என்றும், ‘அவர் சர்சங் சாலக் ஆவதற்காகக் காத்திருப்பவர் என்றும் என்னிடம் கூறினார்.
  உள்துறை அமைச்சகத்துக்குச் (MHA) சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய அறிக்கையை ஆய்வுசெய்ய புலனாய்வுக்குழுக்களின் அதிகாரி ஒருவர் (தனது பெயர் தெரியக்கூடாது என்ற நிபந்தனை யின்பேரில்) எனக்கு அனுமதி தந்தார். அந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்தை ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளதால் அந்த அமைப்பை ஏன் தடைசெய்யக்கூடாது? என விளக்கம் கேட்குமாறு கேட்டுக்கொண்டது. ஆனால், உள்துறை அமைச்சகம் அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  1948ல் காந்தியின் படுகொலைக்குப் பின்னும், 1975ல் அவசரநிலைக் காலத்திலும், 1992ல் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னும் தடைசெய்யப்பட்டதுபோல் மீண்டும் தடை வந்துவிடுமோ என்ற அச்சம் ஆர்.எஸ்.எஸ்.தலைமைக்கு ஏற்பட்டது. எப்பொழுதெல்லாம் தீவிரவாத வன்முறைக் குற்றச்சாட்டுக்கள் தனதுஉறுப்பினர்கள்மீது சுமத்தப்படுகிறதோ, அப்பொழுதெல் லாம் – நாதுராம் கோட்சே விஷயத்தில் மேற்கொண்ட தந்திரத்தைப்போல் – ‘அவர்கள் எல்லாம் சங் அமைப்பிலிருந்து முன்பே விலகிவிட்டார்கள் அல்லது தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள் அல்லது வன்முறையைத் தழுவியதால் தனிமைப்பட்டு விட்டார்கள் .என்வே, அவர்கள் அமைப்பின் உறுப்பினர்களா? இல்லையா? என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறும் தந்திரத்தைக் கையாண்டு வந்த்து.
  அசீமானந்தா இந்தவிஷயத்தில் ஆர்.எஸ்.எஸ் க்கு ஒருதீவிரப் பிரச்சனை ஆனார். 1952ல் வன்வாசி கல்யாண் ஆசிரமம் துவங்கியதிலிருந்து அது சங் குடும்பத்தின் உட்கருவாக விளங்கி வந்துள்ளது. அசீமானந்தா தனது இளமைக்காலம் முழுவதையும் இந்த அமைப்புக்கு அர்ப்பணித் திருந்தார். அவர் தாக்குதல்களைத் திட்டமிட்ட நேரத்தில் அவருக்காகவே உருவாக்கப்பட்ட மதச்செயல்பாடுகளுக்கான இன்னொரு பிரிவான ‘வன்வாசி கல்யாண் ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பில் பத்தாண்டுகளாக இருந்து வந்தார். தீவிரவாதத் தாக்குதல் திட்டங்கள் துவங்குவதற்கு முன்பேகூட வன்முறைக்கலவரங்கள்,-ஒருங்கிணைந்த மதக்கலவரங்கள் ஆகிய அனைத்தும் அவரது நன்கறியப்பட்ட வழிமுறையின் பகுதிகளாக இருந்தன.
  2005ன் மத்தியில் நிகழ்ந்த சதித்திட்டங்களில் அசீமானந்தாவின் ஈடுபாட்டை மோகன்பகவத் மற்றும் இந்திரேஷ்குமார் மிகவும் நன்றாக அறிந்திருந்தனர். அசீமானந்தா அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட வில்லை. அந்த ஆண்டு டிசம்பரில் ஆர்.எஸ்.எஸ். வாரஇதழான ‘ஆர்கனைசர்ல் வெளிவந்த ஒரு அறிக்கையின்படி அசீமான்ந்தா ஆர்.எஸ்.எஸ்.-ன் மரியாதைக்குரிய தலைவரான எம்.எஸ்.கோல்வாக்கரின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும்வகையில் ரூ.1,00,00 நிதி அளித்துக் கௌரவிக்கப்பட்டார். பி.ஜே.பி.யின் முக்கிய முன்னாள் தலைவரான முரளிமனோகர் ஜோஷி அந்த விழாவில் சிறப்புரை நிகழ்த்தினார். இந்திரேஷ்குமார் தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களின்மீது முழுவிசாரணைக்கு உட்பட்டி ருந்தபோதும், அசீமானந்தாவுடன் இந்திரேஷ்குமாருக்கு இருந்த உறவை ஆர்.எஸ்.எஸ். மிகசௌகரியமாகக் கேள்விக்கிடமின்றி மறுத்தது.
  புகழ்பெற்ற இந்துசீர்திருத்தவாதியான சுவாமி அக்னிவேஷ், கடந்த பத்தாண்டுகளாக சங் அமைப்பின் உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டனம் செய்ததோடு  என்னிடம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், இந்து சமூகத்திலுள்ள மற்றவர் களையும், தங்களையும் தீவிர இந்துத்வா மூலம் துன்புறுத்துகிறார்கள்.இது கண்டனத் திற்குரியது என்று கூறினார். இந்துத்வா பற்றி மூன்று புத்தகங்களை எழுதிய அரசியல் அறிவியலாளர் ஜோதிர்மயா சர்மா ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மறைமுகமான மற்றும், வெளிப்படையான செயல்பாடுகளில் தன்னை  முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்கிறது. சிவாஜியின் குருவான ராம்தாஸ் முன்வைத்த ‘தாக்கிவிட்டு ஓடிவிடும் கொரில்லா போர்முறை ஆர்.எஸ்.எஸ்.-ன் மையப்புள்ளியாக இருக்கிறது. ஆனால் இங்கு உள்ள பிரச்சனை என்னவென்றால் இந்துமதத்தின் பெயரில் மிகவும் தைரியமாக மேற்கொள்ளப்படும் பயங்கரவாதச் செயல்களை எதிர்க்கக்கூடிய வலுவான அரசியல் கட்சிகளோ, பலம்வாய்ந்த பத்திரிக்கைகளோ நம்நாட்டில் போதுமான அளவு இல்லை என்பதே என்கிறார்.
  1948ல் நிகழ்ந்த வெட்கக்கேடான சம்பவம் முதல் இத்தகைய கண்டனங்களுக் கிடையேயும் சங் அமைப்பு நீண்டதூரம் வந்துவிட்டது. ஆட்களைத் தயார்செய்வதும், இந்துராஷ்ட்ரத்தை உருவாக்குவதுமான தங்கள் முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ்.-ம் அதன் இணைப்பு அமைப்புக்களும் – குறிப்பாக பா.ஜ.க.வும் இப்போது இந்திய சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் ஒரு பெரியசக்தியாகத்தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அசீமானந்தாவும்கூடப் பல்வேறுவகை களில் இந்தமுயற்சியின் தயாரிப்பாக ஆர்.எஸ்.எஸ்.-ன் நோக்கங்களைப் பூதாகரமான அளவில் பகிர்ந்துகொள்கிறார். ‘உலகளாவிய இந்துராஷ்ட்ராதான் தனது நோக்கம் என்று அவர் என்னிடம் கூறினார்.                                        (தொடர்கிறது-பகுதி இரண்டு)


பகுதி இரண்டு ஆர்.எஸ்.எஸ். மதவெறி அடியாள் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்

 ஆர்.எஸ்.எஸ். மதவெறி அடியாள் அசீமானந்தாவின்
ஒப்புதல் வாக்குமூலம்
நம்பிக்கையாளர் அசீமானந்தா                               ------------------------------------------------------  லீனாகீதாரெகுநாத்
தி கேரவன் ஆங்கில இதழ் ஆசிரியர்குழு மேலாளர்
  தமிழில்: செ.நடேசன்


                                    பகுதி இரண்டு

இந்து ராஷ்ட்ரா மீதான அசீமானந்தாவின் உணர்ச்சிவசப்பட்ட நம்பிக்கையும், அதை அடைவதற்கான வழியாக அவர் ஏற்றுக்கொண்ட வன்முறைவெறியும் அடிப்படையிலேயே இரண்டு வேறுபட்ட சிந்தனைப் போக்குகளிலிருந்து – இராமகிருஷ்ணா மிஷன் உபதேசித்த ‘உலக கர்மா யோகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன்  இந்துத்வா ஆகியவற்றிலிருந்து தோன்றியதே ஆகும். இந்த இரண்டுபோக்குகளாலும் அசீமானந்தா உருவாக்கப் பட்டார். இராமகிருஷ்ணா மிஷனின் துறவு வாழ்வை ஆர்.எஸ்.எஸ்.-ன் தீவிர மதவாத அரசியலோடு இணைத்தார். இது அவரை உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். சாகாவில் பங்கேற்க -அதேநேரத்தில் தனது தந்தையின் மதிப்பீடுகளை மறுக்க-வைத்தது. இதுஅசீமானந்தாவின் கணக்குப்படி இந்துயிசத்தை ஒருஅரசியல்சக்தியாகத் தட்டியெழுப்பும் வழிமுறை ஆனது.
  அசீமானந்தா 1951ன் பிற்பகுதியில் மேற்குவங்கத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தில் ‘நாபாகுமார் சர்க்கார் ஆகப் பிறந்தார். சுதந்திரப்போராட்ட வீரரான பிபூதிபூஷன் சர்க்காரின் ஏழுமகன்களில் இரண்டாவதுமகன் இவர். ‘காந்திதான் எனது கடவுள்எனத் தனது குழந்தைகளிடம் கூறிய காந்தியவாதி இவர்களின் தந்தை. அவர்கள் வாழ்ந்த காமர்பூர் தான் 19ஆம்நூற்றாண்டின் ஞானியான இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் ஆகும். அவர் ‘கடவுளை அடைய பல நம்பிக்கைகள்: பல பாதைகள் என உபதேசித்தவர். இராமகிருஷ்ண பரமஹம்சரின் புகழ்பெற்ற சீடரான சுவாமி விவேகானந்தர் 1877ல் இராமகிருஷ்ணா மிஷனை ‘ சுயநலமற்ற தொண்டின்மூலம் கர்மயோகப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக ஸ்தாபித்தார். இராமகிருஷ்ணபக்தர்களின் புனிதத்தலமாக விளங்கிய அந்த மிஷனின் உள்ளூர்க்கிளை அருகில் மாலை நேரங்களில் சாமியார்களின் பக்திப்பாடல்களைக் கேட்டு அசீமானந்தா வளர்ந்தார்.


   பிபூதிபூஷண் சர்க்காரும், அவரது மனைவி பிரமிளாவும் பல்வேறு வங்காள பக்திக் குடும்பங்களின் பெருமைக்குரியதாக விளங்கிய இராமகிருஷ்ணா மிஷனின் புனிதப் பணிகளில் தங்கள் மகன் சேரவேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், அசீமானந்தாவும், அவரது சகோதரர்களும் எம்.எஸ்.கோல்வாக்கரின் தலைமையில் வேகமாகப் பரவிவந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பால், சொந்தமாக உருவகப்பட்ட சமூக சேவைகளால் ஈர்க்கப்பட்டார்கள். ‘நான் எனது இளமையில் அவர்களது கொள்கைகளின்பின் சென்று  அவர்களோடு வாழ்ந்து வந்தேன் என்ற அசீமானந்தா, தனது தந்தை ‘நீங்கள் ஒருகொள்கையினால் ஈர்க்கப்பட்டு அதைப் பின்பற்ற வேண்டுமென்று விரும்புவதை நான் புரிந்துகொண்டேன். ஆனால், அந்த ஆர்.எஸ்.எஸ்.தான் காந்தியைக் கொலை செய்த அமைப்பு. எனவே, அதற்கு எதிராக உங்களை எச்சரிக்க வேண்டியது எனதுகடமை என்று கூறியதையும் நினைவு கூர்ந்தார். ஆனல் அந்தப் பையன்கள் அதற்கு மாறாக உள்ளூர் ஆர்.எஸ்.எஸ், ஊழியர்களோடு நெருங்கிப்பழகி வளர்ந்தார்கள். அவர்களோடு தங்கள் (சர்க்கார்) வீட்டில் உணவு அருந்தினார்கள். அசீமானந்தாவின் மூத்த சகோதரர் ஆர்.எஸ்.எஸ்.ல் முழுநேர ஊழியரானார். சமர்புகூரில் நான் அசீமானந்தாவையும், அவரது இளைய சகோதரர் சுசாந்த் சர்க்காரையும் சந்தித்தபோது, ‘எங்கள் தந்தை எங்களைத் தடுக்கவில்லை என்று கூறினார்கள். ஆனால், சங் அமைப்பின் உறுப்பினர்களைத் தனக்கு அறிமுகம் செய்யக்கூடாது எனக்கடுமையாக எச்சரிக்கை விடுத்தார் எனவும் கூறினார்கள்.
  அசீமானந்தாவின் 20ஆம் வயதுகளில் அவரது நம்பிக்கைக்குரிய சங்அமைப்பின் இரண்டு உறுப்பினர்களின் அறிவுரைகளால் அவரது எஞ்சிய நம்பிக்கைகளில் திடீரென ஒரு சாய்மானம் ஏற்பட்டது. இருவரில் முதலாமவர் ஆர்.எஸ்.எஸ் ஊழியரான பிஜோய்அடியா. இவர் அசீமானந்தாவின் தீவிர இந்துத்வா அடிப்படைவாத அரசியலுக்கு வழிகாட்டினார். தனது கல்கத்தா அலுவலகத்தில் இப்போது அவர் ஆர்.எஸ்.எஸ்-ன் வங்கமொழி வாரஇதழான ‘ஸ்வஸ்திகா வின் ஆசிரியராக உள்ளார். பிஜோய்அடியா அசீமானந்தாவை 1976ல் முதன்முதலாகச் சந்தித்ததாக என்னிடம் கூறினார். அசீமானந்தா உள்ளூர்ப் பல்கலைக் கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டப்படிப்புப் படித்துவந்தார். தொடர்ந்து முதுகலைப் பட்டமும் பெற்றார். அவரது பெற்றோர் அசீமானந்தாவைத் தங்களது மற்றபிள்ளைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் என்பதை உணர்ந்தே இருந்தார்கள். அடியா சொன்னார்,மற்ற சகோதரர்களைப்போல் சராசரி வாழ்வை அவர் மேற்கொள்ளமாட்டார் என அவர்கள் அறிந்தி ருந்தனர் அசீமானந்தா தொடர்ந்து வழக்கம்போல இன்னும் இராமகிருஷ்ணா மிஷனுக்குச் சென்றுவந்தார். ‘விவேகானந்தரின் பெரும்பாலான இலக்கியங்களை நான் அவர்கள் வீட்டிலிருந்துதான் படித்தேன்,என்றார் அடியா.
  சர்க்கார் வீட்டு நூலகத்திலிருந்த புத்தகங்களில் ஒன்று ‘இந்துதேசத்திற்காக ஒரு துயிலெழுப் பும்குரல் என்ற விவேகான்ந்தரின் எழுத்து மற்றும் உரைகளின் தொகுப்பு. இந்துத்வா இயக்கத்தின் மிகமுக்கியமானவரான ஏக்நாத் ரானடே  தொகுத்திருந்தார். இவர் காந்தியின் படுகொலைக்குப்பின் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவராகச் செயல்பட்டவர். அவருடன் இருந்தவர்களால் ‘தலைமறைவு சர்சங்சாலக் என்ற புனைபெயரில் அழைக்கப் பட்டவர். இந்துக்களுக்கு விவேகான்ந்தர் விடுத்த அழைப்பான “ எழுமின்! விழிமின்!! இலக்கை அடையும்வரை நிறுத்தன்மின்!! என்ற அழைப்புக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தது இந்தப் புத்தகம். ‘இராமகிருஷ்ணா மிஷன் அரசு நிதியைப்பெறுவதற்காக விவேகானந்தரை ‘மதசார்பற்றவர் எனத்தவறாக ஆக்கியது: ரானடேவின் மூலவாக்கியங்களை ஏற்று அதைத் திருத்திக் கொண்டது என அடியாகூறினார். (ஆர்.எஸ்.எஸ்.தலைவர் எம்.எஸ். கோல்வாக்கரின் கட்டளையை ஏற்று கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட விவேகானந்தா நினைவுப் பாறையின் கட்டுமானப் பணிகளை ரானடே மேற்பார்வையிட்டார். ரூ.1.35 கோடி செலவில் 1970ல் இப்பணி நிறைவு பெற்றது) அடியா இந்தப்புத்தகத்தைப் படிக்குமாறு அசீமானந்தாவை உற்சாகப்படுத்தினார்.
  ‘இராமகிருஷ்ணா மிஷன் கொள்கைப்படி எல்லா மதங்களும் சமமானவையே. அவர்கள் கிருஸ்துமஸ், ஈத் பண்டிகைகளையும் கொண்டாடினார்கள். நானும் அதையே பின்பற்றினேன். விவேகானந்தர் போதித்தது இதுவல்ல என்று அடியா கூறியபோது அதை நான் நம்பவில்லை, என்று அசீமானந்தா என்னிடம் கூறினார். பின் அவர் ரானடேயின் மூலவாக்கியத்தை எடுத்துப் படித்தார். அதிலிருந்த விவேகானந்தரின் ஒற்றைவரி அசீமானந்தாவை ஆட்டிப்படைத்தது. இந்து மதத்தைவிட்டு ஒவ்வொரு மனிதனும் விலகிச் செல்லும்போது, ஒருமனிதன் குறைகிறான் என்பதல்ல பொருள். ஒரு எதிரி அதிகமாகிறான் என்பதே
  ‘நான் இதைப்படித்தவுடன் பேரதிர்ச்சி அடைந்தேன்.தொடர்ந்து பல நாட்கள் நான் இதைப் பற்றியே சிந்தித்தேன். என்னிடம் உள்ள குறைந்த ஆற்றலைக்கொண்டு விவேகானந்தரின் போதனைகளை முழுவதும் உணரவோ, ஆராய்ச்சி செய்யவோ முடியாது என்பதை அறிந்தேன். ஆனால் அவர் அப்படிச்சொல்லியிருப்பதால் அதை என் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றார் அசீமானந்தா. அதற்குப்பின் அவர் இராமகிருஷ்ணா மிஷனுக்கு மீண்டும் செல்லவே இல்லை.
  விவேகானந்தருடையது என ரானடே குறிப்பிட்ட வியாக்கியானம் அசீமானந்தாவின் உயிர் நாடியான அரசியல் சங்கல்பமாகியது. அதற்கான வடிவத்தை ஆர்.எஸ்.எஸ். ஊழியரும் துறவியுமான பசந்த்ராவ் பட் தந்தார். இவர் 1956ல் நாக்பூரில் இருந்து கல்கத்தா வந்து ரானடே வின்கீழ் பணியாற்றிவந்தார். பட் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளுக்கு மூர்க்கத்தனமாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். ஆனால், மென்மையானவர். வசீகரத்தன்மை கொண்டவர். பசந்த்ராவ் பட் போன்றவர்களெல்லாம் வேலை செய்கிற ஓர்அமைப்பு மோசமானதாக இருக்கும் என்று நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது என்று தனது தந்தைகூட ஒருமுறை கூறியதாக அசீமானந்தா என்னிடம் சொன்னார். படிப்படியாக மேற்குவங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் தலைவராக உயர்ந்தார் பசந்த்ராவ்பட். ஆர்.எஸ்.எஸ்.-ன் தத்துவங்களை இராமகிருஷ்ணா மிஷன் துறவிகள் மேற்கொண்டுவரும் மதச்சேவைகளோடு இணைப்பதில் பசந்த்ராவ் பட் ஒருமுன்மாதிரியாக இருப்பதை அசீமானந்தா கண்டார்.
  1975ல் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனம்செய்து ஆர்.எஸ்.எஸ் ஐத் தடை செய்தார். அதன் உறுப்பினர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்தார். அசீமானந்தா உட்பட ஆயிரக் கணக்கான சங் ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பட் தனது குருநாதரைப் பின்பற்றித் தலைமறைவாக இருந்து வேலைசெய்ததோடு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையானவற்றை அளித்து வந்தார். நெருக்கடிநிலையின்முடிவில் தடை நீக்கப்பட்டபோது வங்கத்திலும், வடகிழக்குப்பகுதிகளிலும் தங்கள் வேலைகளைச் செய்ய ‘வன்வாசி கல்யாண் அஷ்ரம் என்ற ஒருபுதிய பிரிவை பட் துவக்கினார். அசீமானந்தா அவரோடுசேர்ந்து அந்த அமைப்புக்குள் முழுநேர ஊழியராக வேலைசெய்யத் துவங்கினார், 1978ல் அவர்கள் நாட்டின் வடகிழக்குப் பிராந்தியத்தில் மேற்குவங்கத்தின் புரூலியா அருகில் உள்ள பாக்முந்தி காடுகளில் தங்களது முதல் வன்வாசி கல்யாண் ஆசிரமத்தைத் துவக்கினார்கள்.
  வடகிழக்குப்பகுதியை நோக்கிய அவர்களது நகர்வு பழங்குடியினரின் பகுதிகளுக்குள் தங்களது வன்வாசி கல்யாண் ஆசிரமத்தை நாடுதழுவிய அளவில் விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாகும். தற்போது சத்திஸ்கரில் உள்ள ஜாஷ்பூரில் அது துவக்கப்பட்டதுமுதல் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாலசாஹேப் தேஷ்பாண்டே 12 ஓரோன் பழங்குடிக் குழந்தைகளுடன் தனது வேலைகளை ஆரம்பித்தார். இந்த அமைப்பு கிறிஸ்தவ மெஷினரிகளின் செல்வாக்கை யும், பழங்குடியினரை மதமாற்றம் செய்வதையும் எதிர்த்துக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது..வடகிழக்குப்பகுதியில் செயல்பட்டுவரும் பிரிவினைவாத இயக்கங்களைப்போல் தேசத்தின் ஒருங்கிணைப்புக்கு கிறிஸ்தவம் ஆபத்தானது என சங் அமைப்பு நம்புகிறது. கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்ட்டுகளின் வெற்றிகரமான மாதிரிகளிலிருந்து வன்வாசி கல்யாண் ஆஷ்ரமின் வழிமுறைகள் உருவாக்கப்பட்டன. விளையாட்டுக்குழுக்கள், ஆரம்ப,நடுநிலைப் பள்ளிகள், விடுதிகள் மற்றும் மருத்துவசேவைகளை நடத்தினார்கள். இவை மதமாற்றத் திற்கான மையங்களாகவும் விளங்கின. இதன் நோக்கம் இந்துத்வா வை வளர்ச்சி பெறச்செய்து அதன்மூலம் ஆர்.எஸ்.எஸ்-ன் கலாச்சார அரசியல் தலைமையிடமாக அதை மாற்றுவதே.
  அசீமானந்தா அடுத்த 10ஆண்டுகள் புரூலியாவில் இந்த நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைகளைச் செய்தார். அத்துடன் அவரது பெற்றோர் விரும்பிய ஒருவகை யான சந்நியாசப்பாதையைப் பின்பற்றவும் முடிவு செய்தார். 31ஆவது வயதில் சந்நியாசத்தை ஏற்கவும் தீர்மானித்தார். பசந்த்ராவ் பட் அவரிடம் பழங்குடியினரோடு இணைந்து வேலைசெய் வதும், சங் அமைப்புக்காகப் பாடுபடுவதும்தான் அவருக்குத் தரப்பட்ட பணி என்பதால், அவர் புனிதப்பணியில் சேரவேண்டியதில்லை எனக்கூறினார்.ஆனால், அசீமானந்தா தனதுமனதிற்குள் ஒருமுடிவு எடுத்து புரூலியாவிலிருந்த வங்காளகுரு பரமானந்தாவின் ஆசிரமத்திற்குச் சென்றார். ‘அவர்தான் எனது குரு என்று முடிவுசெய்தேன். ஏனெனில் அவரும் இராமகிருஷ்ணர் போதனைகளைப் பின்பற்றியவர். அவர் முதன்மையாக தலித்துகளுடன் வேலைசெய்தார். ஆனால், இந்துயிசத்தைப் பிரச்சாரம் செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் என்றார் அசீமானந்தா. நாபாகுமார்சர்க்காருக்கு பரமானந்தா சந்நியாசப் பிரமாணம் செய்துவைத்தார் .எல்லையற்ற ஆனந்தம்என்ற பொருள் தரும் ‘அசீமானந்தா என்ற பெயரையும் சூட்டினார்.
  சந்நியாசத்தை ஏற்றுக்கொண்டபின் அசீமானந்தா பழங்குடியினரிடையே வேலை செய்வதற்காக புரூலியா திரும்பினார். அவரதுவாழ்க்கை வன்வாசி கல்யாண் ஆஷ்ரம் உயர்மட்டத் தலைவர்களுடன் -  தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கேரள ஆர்.எஸ்.எஸ். தலைவராகவும், வன்வாசி கல்யாண் ஆஷ்ரமின் அகில இந்திய அமைப்புச் செயலாளராகவும் இருந்த கே,எஸ்.பாஸ்கரராவ் உள்ளிட்டோருடன் – தொடர்ந்தது. கேரளாவில்இன்று எந்த ஒரு மாநிலத்தையும்விட அதிகமாக 4,000 சாகாக்கள் உள்ளன. அசீமானந்தாவின் செயல்பாடுகளை மனதில் பதித்துக்கொண்ட பாஸ்கரராவும், வ.க.ஆஷ்ரமின் தலைவர் ஜெகடேவ் ராம் ஓரோனும் வ.க.ஆஷ்ரமின் மதவிழிப்புணர்வு வேலைகளை விரிவுபடுத்த அவரை அந்தமானுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
  காலனிஆட்சிக் காலங்களிலிருந்து அந்தமான்-நிக்கோபாரில் இருந்த 500க்கும் மேற்பட்ட தீவுகளில் தாய்நாட்டிலிருந்த இந்தியர்கள்தான் குடியமர்ந்திருந்தார்கள். அவர்களுக்காக நகரியங்களைக் கட்ட சதிஸ்கரிலிருந்து பழங்குடியினர் கப்பல்களில் அனுப்ப்பட்டார்கள். ‘அந்தமானுக்கு இடம்பெயர்ந்த பழங்குடியினர் கிறிஸ்தவ மெஷினரிகளால் கவரப்பட்டு இந்துக்களுக்கும், இந்துத்வாவுக்கும் எதிரிகளாக வளர்ந்து விடுவார்கள் என 1970களில் சங்பரிவாரங்கள் அஞ்சின என அசீமானந்தா என்னிடம் கூறினார். பாராளுமன்றத்தில் இந்தத்தீவுகளின் பிரதிநிதியாக மனோரஞ்சன் பக்தா என்ற ஒரு காங்கிரஸ்காரர்தான் 10ஆண்டு களுக்கும் மேலாக இருந்துவந்தார். எனவே ஆர்.எஸ்.எஸ்.-ன் காலடியைப் பதிக்க அசீமானந்தா அங்கே செல்ல நேர்ந்த்து.
  ‘நான் முதன்முறையாக அந்தமானில் இறங்கியபோது அங்குவேலை செய்வதற்கு ஓர் இடமும் இல்லை. இணைந்துவேலை செய்வதற்கும் யாரும் இல்லை. எனச் சொன்னார் அசீமானந்தா. பழங்குடியினரின் தன்மையோடும், மதரீதியான ஆர்வத்தைப் பூசிமெழுகாமலும் பழங்குடியினரோடு ஒருதொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அவர் அந்தமானிலும் பழங்குடி யினரிடம் வன்முறை அச்சத்தை ஏற்படுத்திப் பலவந்தமாக அவர்களை இந்துயிசத்தைத் தழுவவைத்தார் என அதுபற்றிய விளக்கங்களுக்குச் செல்லாமல் என்னிடம் சொன்னார். இத்தகைய மாற்றங்களை அவர் ‘வீடு திரும்புதல் (கர் வாபஸி) என அழைத்தார். (பழங்குடியினர் எல்லாரும் அடிப்படையில் இந்துக்கள். அனிமிஸ்ட் அல்ல என்று சங் அமைப்பு எப்போதும் கருதுகிறது. எனவே ‘மீண்டும் மதமாற்றம் என்பதை வலியுறுத்துகிறார்கள்.)
  அசீமானந்தா மேலும் எளிமையான வழிகளைத் தனது பிரச்சாரத்திற்குப் பயன் படுத்தினார். அவர் பழங்குடிமக்களிடையிலேயே புதிய மதத்தோடு முற்றிலும் இணைந்துபோகாத அந்தச்சமுதாயத்தின் வயதுமுதிர்ந்த பெரியவர்களோடு வாழ்ந்தார். ‘அவர்கள் என்னிடம், ‘நாங்கள் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறினாலும், எங்கள் திருவிழாக்களையும், நடன்ங்களையும், பழக்கவழக்கங்களையும் தொடர்ந்து உயிருடன் பாதுகாக்கவே விரும்புகிறோம் என்றார்கள். ‘இவற்றை நிறைவேற்றுவதுதான் எனது வேலை என்று அவர்களிடம் நான் சொன்னேன் என்று அசீமானந்தா கூறினார்.
  இந்தச்சமுதாயத்தின் மூத்தவர்களின் நல்லெண்ணத்தைக் கவசமாகக்கொண்டு 6 இளம்பெண் களை வேலைக்கு அமர்த்தி, அவர்களை கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தா கேந்திரத் துக்குப் பஜனைகளைக் கற்றுக்கொள்ளவும், அனுமன்மீது நம்பிக்கைகொள்ள வைக்கவும் அனுப்பினார். பின்னர் அவர்களை ஜஸ்பூரில் உள்ள வ.க.ஆஷ்ரமத்தின் தலைமை இடத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கே அவர்கள் இந்துக்கலாச்சாரம் பற்றி மூன்றுமாதங்கள் படித்தார்கள். அதன்பின் அசீமானந்தாவும், அந்தப்பெண்களும் ஒருவகையான வீதி நிகழ்ச்சிகளை நடத்தி அந்தமானில் உள்ள எல்லாக்கிராமங்களிலும் பஜனைகளை நடத்தவும், அடுத்த ஒரு அணிக் காகக் குழந்தைகளைத் தேர்வுசெய்யவும் துவங்கினார்கள். தனியொரு இளம்பெண்கள் அணியுடன் மட்டும் தனது பிரச்சாரப்பயணம் நடைபெறுவது சரியல்ல என்று அசீமானந்தா கருதினார். ஏனெனில், இந்தபெண்களுக்குத் திருமணம் ஆகிவிட்டால் பிறகு அந்தப்பிரச்சாரம் தொடர குழந்தைகளுக்குப் பயிற்சி தரவேண்டும்: அவ்வாறு பயிற்சி பெறுபவர்கள் 8 வயதினராக இருக்கவேண்டும்.
  அதன்பின் அசீமானந்தா இந்துசமுதாயத்தை முறைப்படுத்த வழிபாட்டிற்கான நிரந்தர இடங்களைக்கட்டவும், அவற்றை நிர்வகிக்க அலுவலர் அமைப்புக்களை உருவாக்கவும் செய்தார். போர்ட்பிளேயரில் ஆர்.தாமோதரன் என்பவர் உள்ளூர் கோவில்குழுவின் தலைவராகவும், விஷ்ணுபாத ரே என்ற வங்காளி செயலாளராகவும் ஆனார்கள்.
  1990களின் துவக்கம்வரை அசீமானந்தா அந்தமானிலேயே முழுநேரமும் வாழ்ந்து வந்தார். அங்கே அவர்செய்த முயற்சிகள் 1999ல் அந்தப்பகுதியின் முதல்பி.ஜே.பி. பாராளுமன்ற உறுப்பினராக விஷ்ணுபாதரே வை ஆக்கும் களப்பணியாக அமைந்தன. ‘அரசியலுக்கு வருவது நல்லது என நான் அவரிடம் சொன்னேன். எனவே அவர் டெல்லிக்குச் சென்றார். வாஜ்பாயையும் சந்தித்தார். அரசியலும் நாங்கள்செய்யும் வேலைகளின் ஒருபகுதிதான். 2007ல் போர்ட்பிளேயரில் நகரசபையின் குழுத்தலைவராக தாமோதரன் போட்டியின்றித் தேர்ந்தெடுக் கப்பட்டார் என அசீமானந்தா கூறினார்.
  அந்தமானைவிட்டு வந்தபிறகும் அசீமானந்தா அடிக்கடி அங்கு வந்தார். இயற்கைச் சீற்றங்களைத் தொடர்ந்து  உணவு மற்றும் மருந்துப்பொருட்களை ஒப்படைக்கவும் வந்தார். ஆனால் அவரது நிவாரண உதவிகளை ‘யார் யாரெல்லாம் தங்களை இந்துக்கள் என்று அறிவித்துக் கொண்டார்களோ அவர்களுக்குமட்டுமே தரவேண்டும் என்று மிக்ககடுமையாக வரையறுத்தார். 2004ல் சுனாமி வந்தபிறகு நிகழ்ந்த ஒருகதையை என்னிடம் சொன்னார். “ஒரு கிறிஸ்தவப் பெண் தனது குழந்தைக்குப்பால் வேண்டும் என்று வந்தாள். எனது ஆட்கள் இல்லை என்று கூறிவிட்டார்கள். அந்தக் குழந்தைக்கு மூன்று நாட்களாக எந்த உணவும் கிடைக்கவில்லை கொஞ்சம் பாலாவது தராவிட்டால் அந்தக்குழந்தை இறந்துவிடும் என்று அந்தப்பெண் கெஞ்சினாள். அதன்பின் எங்கள் ஆட்கள் ‘சுவாமிஜியிடம் சென்று கேள் என்றனர். நான் அந்தப் பெண்ணீடம் ‘அவர்கள் என்ன செய்கிறார்களோ அதுதான் சரி. உனக்கு இங்கே பால் கிடைக்காது என்று கூறினேன்  இந்தக்கதையைத் திரும்பத் திரும்பக் கூறுவதை அசீமானந்தா பெரிதும் விரும்பினார்.

                                                                (  தொடர்கிறது பகுதி மூன்று)    






பகுதி மூன்று ஆர்.எஸ்.எஸ். மதவெறி அடியாள் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்


 ஆர்.எஸ்.எஸ். மதவெறி அடியாள் அசீமானந்தாவின்
 ஒப்புதல் வாக்குமூலம
 நம்பிக்கையாளர் அசீமானந்தா                                -----------------------------------------------------------
லீனாகீதாரெகுநாத்
 தி கேரவன் ஆங்கில இதழ் ஆசிரியர்குழு மேலாளர்
  தமிழில்: செ.நடேசன்

                                                                 பகுதி மூன்று

  டேங்க்ஸ். மஹாராஷ்ட்ராவைக் கிழக்கிலும், மேற்கிலும் எல்லைகளாகக்கொண்ட குஜராத்தின் தெற்கு வால்பகுதியில் அமைந்துள்ள மிகவும் சிறிய, மிகவும் குறைந்த மக்கள் வசிக்கும் மாவட்டம். இதன் 75% மக்கள், தோராயமாக 2 இலட்சம்பேர் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்பவர்கள். இவர்களில் 93% பேர் ஆதிவாசிகள். பிற பழங்குடிஇனப் பகுதிகளைப்போலவே அதன் செல்வஆதாரங்களையும், விருப்பங்களையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளாததால் ஏற்பட்ட சச்சரவுகளை இங்கும் காணமுடிந்தது. பிரிட்டிஷார் 1830ல் வளமான தேக்குமரங்கள் நிறைந்த அந்த டேங்க்ஸ் வனப்பகுதியைச் சுரண்டுவதற்கான உரிமையை பழங்குடி இன அரசர் களைத் தங்கள் ஆட்சிக்கு உட்படுத்திப் பெற்றார்கள். 1842ல்அந்த வனப்பகுதி பாதிக்கும்மேற்பட்ட மாவட்டத்தைத் தன்னுள் கொண்டிருந்தது. ஆதிவாசிகளிடையே செல்வாக்குப்பெற்று, அந்த நிலங்கள் தங்களுக்குரியது என்ற உணர்வை ஆதிவாசிகளிடம் ஏற்படுத்திவிடுவார்கள் என்று அஞ்சிய பிரிட்டிஷ் அரசு, கிறிஸ்தவ மெஷினரிகளைத் தவிர மற்ற சமூகநலப் பணியாளர் களையும், அரசியல் செயல்பாட்டாளர்களையும் தடை செய்தது. 1905ல் முதல் மெஷினரிப் பள்ளி ஆவா வில் துவக்கப்பட்டது. அப்போதுமுதல் கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்டுகள் மிகுந்த எண்ணிக்கையில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார்கள். அசீமானந்தாவின் கூற்றுப்படி டேங்க்ஸ் ஐ அவர்கள் ‘மேற்கு நாகாலாந்து ( பச்சிம் கா நாகலாந்த்) என்று அழைத்தனர். ‘வடகிழக்கில் உள்ளதுபோலவே இந்த அச்சுறுத்தல் மிகவும் பெரியது என்றார் அசீமானந்தா.
  வன்வாசி கல்யாண் ஆஷ்ரம் சார்பில் நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது 1996ல் முதன்முதலாக அசீமானந்தா டேங்க்ஸ்க்கு வந்தார். அந்த அமைப்பின் தலைவர்கள் இந்தியாவிலுள்ள பழங்குடியினர் பகுதிகள் ஒவ்வொன்றிலும் அவரது மதமாற்றப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்காக அவர்கள் ‘நம்பிக்கையை மீட்டெடுக்கும் அமைப்பாக ‘ஸ்ரத்தா ஜாக்ரண் விபாக் ஐ நிறுவினர். அசீமானந்தாவை அதன் தலைவர் ஆக்கினர். ஆனால், அசீமானந்தாவோ தனிப்பட்ட ஒருபகுதியில் வேலை செய்வதன் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்று நினைத்தார். டேங்க்ஸ்ல் ஒருவலிமையான தூண்டுதலை உணர்ந்தார். ‘டேங்க்ஸ்ல் பழங்குடியினரோடு தங்கியிருப்பது, அவர்களோடு வேலைசெய்வது என்ற ஒருவிதமான பணியைச் சிறப்பாகச் செய்தேன் என்றார் அவர். ஒருவர் தான்எதில் திருப்தி அடைகிறாரோ அந்த வேலையையே எப்போதும் செய்துவர வேண்டும். வடகிழக்குப் பகுதிகளைப்போல அல்லாமல் டேங்க்ஸ்வாசிகளை கிறிஸ்த வத்திலிருந்து மீட்பதற்கான வாய்ப்புக்கள் இன்னும் உள்ளன, என்று அசீமானந்தா என்னிடம் கூறினார்.




   அசீமானந்தா சங்அமைப்புக்கு முதலாவதாகவும், முதன்மையாகவும் விசுவாசம் மிக்கவராக இருந்தபோதிலும், குஜராத்தின் வனப்பகுதியிலிருந்துகொண்டு அவருக்கான தேசியக் கட்டளை களை நிறைவேற்றமுடியாது என அவரது மேலதிகாரிகள் கவலைப்பட்டனர். 1998வரை டேங்க்ஸ் பகுதியில் தனது செயல்பாடுகளில் கவனம் செலுத்தத் தன்னை அனுமதிக்க வேண்டும்என அவர்களை ஒப்புக்கொள்ளவைக்கமுடியவில்லை. எவாஞ்சலிஸ்ட்டுகளைப் போன்ற அர்ப்பணிப்பு மற்றும் வன்முறையில் பலவந்தப்படுத்துதல் ஆகியவற்றின் இணைப்பாக சங் ஊழியர்களை மின்சாரம்போல ஊடுருவவைத்து, அசீமானந்தா தனது மேலதிகாரிகளின் பதற்றம் தேவையற்றது என நிரூபித்தார். வ.க.ஆஷ்ரமின் அமைப்புச்செயலாளரும், கேரள ஆர்.எஸ்.எஸ். தலைவருமான பாஸ்கரராவ் அசீமானந்தாவின் இந்தச்செயல் ‘தேசம் முழுமைக்குமான ஒரு முன்னுதாரணம் என வர்ணித்ததை அசீமானந்தா நினைவுகூர்ந்தார்.
  டேங்க்ஸ்ல் ஆதிவாசி சமூகத்தினரிடையே மதவேறுபாடுகள் ஏற்கனவே பரஸ்பர நம்பிக்கை யின்மையை ஏற்படுத்தியிருந்த 1998ல், அசீமான்ந்தா வ.க.ஆஷ்ரமத்தில் தங்கியிருந்தார். 1970களின்முன் அந்தப்பகுதியில் கிறிஸ்தவ மதமாற்றம் குறைவாகவே இருந்தது. ஆனால், 1991முதல் டேங்க்ஸ்ல் கிறிஸ்தவர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் மக்கள்தொகைக் கணக்கின்படி தோராயமாக 9% என்ற அளவில் வளர்ந்து கொண்டிருந்தது. பெற்றோர்கள் இறந்து விடும்போது எந்தவகையில் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வது என்பதுபற்றி ஒரு சகோதரர் இன்னொரு சகோதரரிடம் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். அசீமானந்தா அங்கு வருவதற்கு முந்தைய ஆண்டில் அந்த மாவட்ட்த்தில் கிறிஸ்தவர்கள்மீது 20 தாக்குதல்கள் நடைபெற்றன. 1998ல் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்தன.
  ஒவ்வொரு ஆண்டும் 24 பழங்குடியினச் சிறுவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் ஆகிய வற்றைத்தந்து வ.க.ஆஷ்ரமத்தில் தங்கவைத்தனர். அங்கிருந்து அவர்கள் உள்ளூர் அரசுப்பள்ளி களுக்குச் சென்றார்கள். ஒரு நாள் அந்த ஆஷ்ரமத்தில் ஆர்.எஸ்.எஸ்.சுயம்சேவக்குகள் தங்கள்  சாகாக்களின் துவக்கத்தில் பாடும் பாரதமாதா பாடல் முதல் காந்தி, கோல்வாக்கர் முதலான புகழ்பெற்ற இந்தியர்களைப் போற்றிப்பாடும் –ஏக்தா மந்த்ரா-ஆகியவற்றை  அசீமானந்தா அந்த மாணவர்களுக்குத் தலைமையேற்றுப் பாடவைத்தார். அந்த ஆஷ்ரமத்தின் மாணவர்களில் ஒருவரான பூல்சந்த் பாப்லோவை அசீமானந்தா சந்தித்தார். டேங்க்ஸ்ல்   தனது வேலைகளை வெற்றிகரமாகச் செய்வதற்கு ஒருவகையில் வழிகாட்டுபவனாகவும், முகாம் உதவியாளனா கவும் பாப்லோ உதவியதாக அசீமானந்தா கூறினார்.
  ‘சென்ற ஆண்டு நான் வாகாய் ஆஷ்ரமத்திற்குச் சென்றபோது பாப்லோ தனது கிராமத்தி லிருந்து என்னைச் சந்திக்க வந்தான். குண்டான, உருண்டையான புன்னகை தவழும் முகம் கொண்ட அவனது கண்களில் உற்சாகம் மின்னியது. இத்தகையவனை அந்தப்புதிய இட்த்தில் எனக்கு வழிகாட்டக்கூடியவன் என நம்பிக்கை கொண்டேன். பாப்லோ என்னிடம் சொன்ன மிகவும் கவலைப்படக்கூடிய கதைகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்தன’-அசீமானந்தா
  அசீமானந்தாவின் வழிமுறைகள் அந்தமானில் அவர் பயன்படுத்தியவைகளை ஒத்திருந்தன. ‘எங்கெல்லாம் தனக்கு வரவேற்புக்கிடைக்குமோ அங்கெல்லாம் அந்தச் சமூகத்தினரை அடைய வழிகாட்டவும், அந்த வனப்பகுதி முழுவதும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தக்கூடிய உதவியாளர்களை நியமித்துக்கொள்ளவும் பாப்லோவை நம்பினார். அதன்பின் அவரும், அவரது தொண்டர்களும் தொலைதூரப் பழங்குடியினர் கிராமங்களுக்கு விரைந்தனர். அங்கே ஒருவாரம் வரை முகாமிட்டனர். ஆதிவாசிகளோடு அவர்களது குடிசைகளிலேயே உண்டு, உறங்கினர். அசீமானந்தா இந்துமதப் போதனைகளைச் செய்தார். இனிப்புக்களையும், அனுமன் லாக்கெட்டுக் களையும், அனுமன் கதைப்பிரசுரங்களையும் குழந்தைகளுக்குக் கொடுத்தார். பஜனைப் பாடல் களைப் பாடினார். கிறிஸ்தவ மதத்திற்கு மாறக்கூடாது எனக் கிராமமக்களிடம் கூறினார். ஒவ்வொரு கிராமத்திலும் இந்துமதத்திற்கு மதமாற்றம் செய்யவேண்டியவர்களின் பட்டியலை அவரும், அவரது உதவியாளர்களும் தயாரித்தார்கள். அவர் அடுத்த குடியிருப்புக்குச் சென்ற பிறகு அவரது உதவியாளர்கள் ஒவ்வொரு ஆதிவாசியின் குடிசையிலும் சங்அமைப்பின் காவிக் கொடி பறப்பதை உத்தரவாதப்படுத்தினர்.
  பயந்துகிடந்த மக்களிடையே இத்தகைய மென்மையான அணுகுமுறைகளை அசீமானந்தா கடைப்பிடித்தார். வங்காளத்தின் எல்லைகளிலிருந்த மாவட்டங்களின் உண்மையான வாழ்நிலை களை அவர் பேசினார். அங்கே அடுத்த பக்கங்களிலிருந்து முஸ்லிம்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் இந்து மதத்தினர் அனைவரும் ஓடிப்போய்விட்டார்கள். என்று பாப்லோ கூறினான். அசீமானந்தா அச்சிட்டு அந்தமாவட்டம் முழுவதிலும் விநியோகித்த ஆயிரக் கணக்கான துண்டுப்பிரசுரங்களில் கிறிஸ்தவர்களைக் கடுமையாகச் சாடினார். 1998 ஜூனில் ‘ஒருமாபெரும் பேரணி நடைபெறும் என்ற அறிவிப்பைச் செய்த வாகனத்தின் முகப்பில் ‘இந்துக்களே வாருங்கள். திருடர்கள் ஜாக்கிரதை என்ற எச்சரிக்கை இடம்பெற்றிருந்தது. கடுமையான வார்த்தைகளின் தாக்குதல்கள் கீழ்க்கண்டவாறு இருந்தன.
  “டேங்க்ஸ் மாவட்ட்த்தின் மிகமுக்கியமான பிரச்சனையே கிறிஸ்தவப் பாதிரியார்களால் நடத்தப்படும் நிறுவனங்கள்தான். சேவை என்ற முகமூடியை அணிந்துகொண்டு இந்தச்சாத்தான் கள் ஆதிவாசிகளைச் சுரண்டுகிறார்கள். பொய்களும், ஏமாற்றுதல்களுமே அவர்களது மதம்.
அசீமானந்தா மிகவிரைவில் இந்தத்திட்டுதல்களை வன்முறைத் தாக்குதல்களாக மாற்றினார்.
  1998 கிறிஸ்துமஸ்நாள் மாலையில் ஆவா வில் இருந்த ‘தீப் தர்ஷன் உயர்நிலைப்பள்ளி வ.க.ஆஷ்ரமத்தின் கிளைகளான விஷ்வஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி), பஜ்ரங் தள், இந்து ஜாக்ரண் மஞ்ச் உறுப்பினர்களால் தாக்கப்பட்ட்து.






   அந்தப்பள்ளியை நடத்திவந்த கார்மல் கன்யாஸ்திரிகளில் ஒருவரான சகோதரி லில்லி, ‘நூற்றுக்குமேற்பட்ட, கைகளில் கற்களை ஏந்தியவர்கள் இந்தக்கொடூரமான வன்முறையில் பங்குபெற்றார்கள். ஜன்னல்களை உடைத்து, பழங்குடியின மாணவர்களின் விடுதிக்கூரைகளை அழித்துக் கொடூரமான வன்முறைத் தாக்குதல்களை நிகழ்த்தினார்கள். இத்தனை ஆண்டுகள் கழிந்தபின்னும் இன்னும் அந்தக்காட்சிகள் கண்களில் நிழலாடுகின்றன. அந்தநாளன்று நான் மிகவும் பயந்துபோயி ருந்தேன்,என்று நான் அந்தப்பள்ளிக்குச் சென்று அவரைப் பார்த்தபோது கூறினார்.
  30 கி.மீ. தள்ளி சுமீர் கிராமத்தில் இன்னொருபள்ளியும் தாக்கப்பட்டது. அங்கிருந்த தானியக் கிடங்கு கொள்ளையடிக்கப்பட்டுத் தீயால் எரிக்கப்பட்டது. காத்வி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட கும்பல் உள்ளூர் தேவாலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கித் தீயிட்டுக்கொளுத்தியது. அடுத்தநாள் வாகி கிராமத்திலிருந்த சர்ச் நொறுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு வனத்துறையைச் சார்ந்த ஒருஜீப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாள் டேங்க்ஸ்ல் இருந்த ஆறு கிராம சர்ச்சுகள் அழிக்கப்பட்டன. கிறிஸ்தவப் பழங்குடியினரின் வீடுகளில் கற்கள் வீசப்பட்டன. கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் வர்த்தகம் அழிக்கப்பட்டது. கிறிஸ்தவப் பழங்குடியினர் தாக்கப்பட்டார்கள்
  இத்தகைய அழித்தொழிப்பு வேலைகள் 10 நாட்கள் நடைபெற்றன. 1998 டிசம்பர் மத்தியிலிருந்து 1999 ஜனவரி மத்திவரை 40,000 கிறிஸ்தவர்கள் இந்துமதத்திற்கு மாற்றப்பட்டார்கள். ‘நாங்கள் 30 சர்ச்சுகளை இடித்துக் கோவில்களைக் கட்டினோம். அங்கு ஒருவகையான அமைதியின்மை நிலவியது என அசீமானந்தா பெருமையுடன் அந்த நிகழ்ச்சிகளுக்கு உரிமை கொண்டாடினார்!
  அசீமானந்தாவின் திட்டமிட்ட இந்த வன்முறை வெறியாட்டம் கிறிஸ்துமஸ் நாளன்று காலையில் ஆவா வில் ஒன்றும், அருகிலிருந்த இரண்டு தாலூக்காக்களிலும் இந்து ஜாக்ரண் மஞ்ச் நட்த்திய ஊர்வலங்களோடு துவங்கியது. டேங்க்ஸ் பகுதி பா.ஜ.க. வின் அப்போதைய பொதுச்செயலாளராக இருந்த தசரத்பவார் கூற்றுப்படி, திரிசூலங்களையும், குண்டாந்தடிகளை யும் ஏந்திய சங்அமைப்பின் 3500 உறுப்பினர்கள் ஆவா ஊர்வலத்தில் பங்கேற்றனர். அசீமானந்தாவின் கிறிஸ்தவத்திற்குஎதிரான  ஆவேசமுழக்கங்கள் எழுப்பப்பட்டு எதிரொலித்தன. நகரின் முக்கிய வீதிமுழுவதும் காவிப்பதாகைகள் தொங்கின. உள்ளூர்ப் பாதிரியார்கள் மாவட்ட ஆட்சியர் பரத்ஜோஷியைத் தலையிடுமாறு வேண்டிக்கொண்டனர். ஆனால் மாவட்ட ஆட்சியரோ நிலைமையைக் கட்டுக்குக்கொண்டுவந்து அமைதி ஏற்படுத்துவதற்குப்பதிலாக ஆவா ஊர்வலத்தை மேடையில் தோன்றி வாழ்த்திப்பேசினார்.
  அந்த ஊர்வலங்களைத் தொடர்ந்து நடைபெற்ற ஏராளமான கொள்ளைச் சம்பவங்கள் அசீமானந்தாவின் அமைப்புத்திறமைக்குப் பெரும்பங்களிக்கும் சான்றுகளாக விளங்கின. அவர் அங்கு வருவதற்குமுன் அந்த மாவட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய வெகுசிலரே சங் அமைப்பின் ஊழியர்களாக இருந்தனர். அசீமானந்தா இந்துத்வா இயக்கத்திற்குச் சக்தி ஊட்டி யதோடு ஆயிரக்கணக்கானவர்களை உறுப்பினர்களாகக்கொண்ட ஒருபெரும் சக்தியாகவும் மாற்றினார்.‘உங்களுக்குள்உறங்கிக்கொண்டிருக்கிற இந்துத்வாஉணர்வைத் தட்டியெழுப்பக்கூடிய சக்திமிக்கவை அவரது சொற்கள் என்று பவார் கூறுகிறார்.
  அசீமானந்தா என்னிடம் கூறினார், மதமாற்றத்தைத் தடுப்பது ஒரு எளிதான வேலை. மதவெறியைப் பயன்படுத்துங்கள். இந்துக்களை வெறியர்களாக்குங்கள். மீதிவேலை களை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்!
  இந்தநோக்கத்திற்காக முற்றிலும் பழங்குடி மக்களின் அமைப்புபோலத் தோற்றம் அளிக்கக் கூடிய ‘ஹிந்து ஜாக்ரண் மஞ்ச் (ஹெச்.ஜே.எம்) என்றஅமைப்பைத் துவக்கியதை, நிறைவேற்றி முடித்தவைகளில் முக்கியமான் ஒன்றாக அசீமானந்தா உரிமைகொண்டாடினார். ‘இந்த நடவடிக்கைகளில் வன்முறைச் செயல்கள் உள்ளடங்கியிருப்பதால் சங் அமைப்பின் எல்லா  வேலைகளையும் வ.க.ஆஷ்ரம் மூலம் செய்யமுடியாது என்பதற்காகவே நாங்கள் பழங்குடியினரைக்கொண்டு ஹெச் ஜே.எம். ஐ உருவாக்கவேண்டியிருந்தது. ஹெச்.ஜே,எம்.மின் தலைவராக வெளிப்படையாகத் தெரியக்கூடியவரான இந்த ஜானுபாய்க்கு ஒன்றும் தெரியாது. என்ன செயல்திட்டம் எடுத்துக்கொள்ளப்படுகிறது? துண்டுப்பிரசுரங்களில் எதை அச்சிடுவது? என்ற எல்லா முடிவுகளும் எங்களால்தான் எடுக்கப்படுகின்றன. நாங்கள் அவரை வெறும் ஒருமுக அடையாளமாகத்தான் வைத்திருக்கிறோம். ஏனெனில் அவரொரு ஆதிவாசி. சங் அமைப்பின் எல்லாவேலைகளையும் செய்திடப் பழங்குடியினர் பயன்படுத்தப்படுகிறார்கள்.
  அசீமானந்தாவின் ‘வீடு திரும்புதல் நிகழ்ச்சி மனங்களைத்  தூண்டுவதாலோ அல்லது அச்சுறுத்துதல்கள் மூலமாகவோ தொடர்ந்து பிரபலமாகிவந்தது. அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் எப்போதெல்லாம் 50 முதல் 100 செயல்திறன் மிக்கவர்களூக்கு மதமாற்றம் செய்யப்பட்டதோ அப்போதெல்லாம் அவர்களை அவரது உதவியாளர்கள் ஒருங்கிணைத்துத் திறந்த வாகனங்களிலும், திறந்த ஜீப்களிலும் ஏற்றி சூரத்-ல் உள்ள உனாய் கோவிலுக்கு அழைத்துச்சென்று கோவிலை அடுத்துள்ள வெந்நீர் ஊற்றுக்களில் குளிக்கவைத்து, திலகபூஜை நட்த்திப் பழங்குடியினரை ‘இந்துக்கள் என்று பிரகடனம் செய்தார்கள். அவர்கள் மீண்டும் வண்டிகளில் ஏற்றப்பட்டு அனுமன்படமும், அனுமன்கதைப்பிரசுரங்களும் கைகளில் தரப்பட்டுத் திருப்பி அனுப்ப்ப்பட்டார்கள். திரும்பும் வழியில் வண்டிகளிலிருந்து பஜனைகள் அலறின. இவ்வாறு அந்த முழுநிகழ்ச்சியும் அதிசயத்தோற்றம் அளித்தது. இந்தக்களியாட்டங்கள் வாஹாய் ஆஷ்ரமத்தில் நிறைவுபெற்றன. அங்கு அசீமானந்தா விருந்து உபச்சாரம் செய்து மதம்மாறியவர்களுக்கு அனுமன் லாக்கெட்டுகளைக் கொடுத்தார்.
  பழங்குடியினர்மீதான அசீமானந்தாவின் அணுசரனை அவர்கள் ஏசுகிறிஸ்துவை வழிபடுகிறார் களா,அல்லது ராமனை வழிபடுகிறார்களா என்பதையும்தாண்டி அரிதாகவிரிவடைந்தது. ‘தி வீக்இதழுக்கு அசீமானந்தா அளித்த பேட்டியில் ‘வறுமையை அகற்றுவதிலோ, வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதிலோ நாங்கள் அக்கறை செலுத்துவதில்லை. நாங்கள் பழங்குடியினரின் மத உணர்வுகளை மேம்படுத்தவே முயற்சிக்கிறோம்என்று தெரிவித்தார். இந்த அணுகுமுறை உள்ளூர் மக்கள்சமுதாயத்தில் பங்கேற்க அசீமானந்தாவுக்குப் பலம்வாய்ந்தத அழைப்புக்கு வித்திட்டது. “சுவாமிஜியைபோல மிகவும் கடுமையான வாழ்க்கையை வாழ்ந்த எந்தஒரு மனிதனையும் நான் பார்த்த்தில்லை என்று பாப்லோ கூறினான். “மிக உயர்ந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், மிகவும் பிற்பட்ட சமுதாய மக்களிடம் சென்று, அவர்களுடன் தங்கி, உண்டு அவர்களோடு கலந்துவிடுகிறார். இவ்வாறு அவர்களைத் தன்சொந்த மக்களாக ஆக்கிக் கொள்கிறார். அந்த மக்களும் நமக்காகப் பாடுபடும் ஒருவரை நாம்பெற்றுவிட்டோம் என்று நம்பிக்கை கொள்கிறார்கள்
  டேங்க்ஸ் இந்தியாவின் மிகவும் அழகான இடங்களில் ஒன்று என அசீமானந்தா என்னிடம் விவரித்தார். 1990ன் பிற்பகுதியில் அங்கு பணியாற்றிய எனது பத்திரிக்கை நண்பர்கள் பலரும் அதை ஒத்துக்கொண்டார்கள்.2013 ஜூனில் நான் சென்றபோது அந்த வனப்பகுதி வெறுமையாக வும், காய்ந்தும் கிடந்தது. (நீங்கள் பருவகாலத்தில் அந்தப்பகுதிக்குச் சென்று பார்க்கவேண்டும் என்று அம்பாலா சிறையில் அசீமானந்தா என்னிடம் கூறினார்.) மலைகளைக் குடைந்து உயர்ந்த தரத்தில் பல மைல்கள் நீளம் அமைக்கப்பட்டிருந்த சாலைகள் அந்தப்பகுதியில் என்முன் நீண்டன. அவை அசீமானந்தாவின் மிகமுக்கிய அரசியல் பாதுகாவலரான நரேந்திர மோடியின் அரசால் போடப்பட்டவை!
  1998ன் துவக்கத்தில் அசீமானந்தா டேங்க்ஸ்க்குச் சென்ற காலகட்டத்தில் பி.ஜே.பி.அரசியல் வாதியான கேசுபாய் பட்டேல் குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றிருந்தார். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து மிக நீண்டகாலமாக இந்தமாநிலம் காங்கிரஸின் பலம்வாய்ந்த கோட்டையாக – 1995ல் கேசுபாட் பட்டேலும் ஏழுமாதங்கள் அதற்குத் தலைமை ஏற்றிருந்த போதிலும் – விளங்கியது. 1998 மார்ச்-ல் வாஜ்பாய் பிரதமரானபோது – அவரது அரசு கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருந்தபோதிலும் – ஆர்.எஸ்.எஸ். பிரிவினரிடையே இந்தியாவுக்கான தங்கள் பார்வை நிதர்சனமாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அலைகள் எழுந்தன.
  அவர்கள் விரும்பியமாறுதல்களுக்கு ஒருசிறிய அளவில் கட்டியம் கூறுவனவாக டேங்க்ஸ்ல் கிறிஸ்தவக்கலவரங்கள் தோன்றின. அசீமானந்தாவின் வெற்றியின்முன்னோட்டமாக சோனியா காந்தியின் வருகை அமைந்தது. ஆவா பகுதியில் பயணம் செய்த அவர் “நெஞ்சைவெடிக்கச் செய்யும் கொடூர வன்முறை என்று அங்கு நிகழ்ந்தவற்றைக் கண்டனம் செய்தார். மற்ற அரசியல் தலைவர்களும், அறிஞர்களும் அதையே வழிமொழிந்தனர். பத்திரிக்கைகளில் வெளிவந்த அசீமானந்தா பற்றிய செய்திகள் சங்அமைப்புக்குள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அவரது மதிப்பை உயர்த்தின. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு ஆண்டுதோறும் வழங்கும் கோல்வாக்கர் பெயரில் அமைந்த ‘ஸ்ரீகுருஜீஎன்ற இன்னொருகௌரவத்தை அசீமானந்தாவுக்கு அளித்தது.
  அசீமானந்தாவின் வன்முறை வெறியாட்டங்களால் டெல்லியில் கலவரம் மூண்டபோது அதை மட்டுப்படுத்துவதற்காக அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிஜி தலையிட நிர்ப்பந்திக்கப்பட்டார். ‘எனது மதமாற்றக் கதைகள் தேசிய அளவில் செய்தி களானபோதும், சோனியாகாந்தி பறந்துவந்து எனக்கு எதிராகப் பேசிய போதும் பத்திரிக்கை களில் ஏராளமான விவாதங்கள் இடம்பெற்றன. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிஜி கேசுபாய் பட்டேலிடம் என்னை அடக்கி வைக்குமாறு கூறினார். எனவே, அதன்பிறகு நாங்கள் வேலைசெய்வதைத் தடுத்ததோடு, எங்கள் ஆட்களைக் கைதும் செய்தார்.என்ற அசீமானந்தா ஆனால், மோடி ஏற்கனவே தனது கத்திகளை கூர்தீட்டியவாறு பதவிக்காகக் காத்துக்கொண்டிருந்தார் என்றும் தெரிவித்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற முக்கியமான மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கூட்டத்தில் மோடி தன்னை அணுகி,உங்களை கேசுபாய் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். சுவாமிஜி, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை. நீங்கள் உண்மையான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். இப்போது அடுத்த முதலமைச்சர் நான்தான் என்று முடிவுசெய்யப்பட்டுவிட்ட்து. நான் வந்தபின் நானே உங்கள் வேலைகளைச் செய்வேன். அது வரை ஓய்வில் இருங்கள் என்று தன்னிடம் சொன்னதாக அசீமானந்தா தெரிவித்தார்.(இதுபற்றி மோடியிடம் தொடர்புகொள்ள அவரது அலுவலகம் மூலம் திரும்பத் திரும்ப மேற்கொண்ட பல முயற்சிகளுக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.)
  2001 அக்டோபரில் மோடி முதலமைச்சர் ஆனார். அடுத்துவந்த பிப்ரவரி கடைசியில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களில் 1200 குஜராத்திகள் கொல்லப்பட்ட கலவரங்கள் துவங்கியபோது,டேங்க்ஸ்-ன் வடக்கில் பஞ்ச்மால் மாவட்டத்தில் அசீமானந்தா தனது சொந்தத் தாக்குதல் திட்டங்களை அரங்கேற்றினார். அந்தப்பகுதியிலிருந்து முஸ்லீம்களைத் துடைத்தெறியும் வேலைகளை நான் மேற்பார்வையிட்டேன். என்று உரிமைகொண்டாடினார்.
  அந்த ஆண்டின் இறுதியில் மோடி அசீமான்ந்தாவின்செல்வாக்கை ஒருங்கிணைக்க டேங்க்ஸ்  வந்துஉதவினார். 2002 அக்டோபரில் அசீமான்ந்தா, புராணத்தில் கூறப்பட்ட ராமரின் 14 ஆண்டு வனவாசத்தின்போது அவருக்குஉதவியதாக நம்பப்படும் பழங்குடியினப்பெண்களுக்கு அர்ப்பணம் செய்ய புனித‘சபரிதாம்கட்டத்துவங்கினார்.அந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆஷ்ரமத்தையும், கோவிலையும், அதன் மையப்புள்ளியாக ராமர் சிலையையும் நிர்மாணிக்க நிதிதிரட்டுவதற்காக பிரபல கதாகாலட்சேபகரான மொராரிபாபுவின் ராம்கதா (இராமாயணத்தை விவரிக்கும்) என்ற 8 நாட்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சி குறைந்தபட்சம் 10,000 பேரை ஈர்த்தது. முஸ்லீம்கள் மீதான கலவரங்களைத் தொடர்ந்து ஜூலையில் மோடி அரசு கலைக்கப்பட்டது. தனது முதல்வர் பதவியை மீண்டும் பெறுவதற்கான தேர்தல் பிரச்சாரத்தின் நடுவில் மோடி இந்த நிகழ்ச்சிக்கும்வந்து மேடையில் தோன்றி அடை முன்னெடுத்துச்செல்ல உதவினார்.





     அந்த ஆண்டில் மோடியின் தேர்தல் அறிக்கையின் ஒருபகுதியாக ‘குஜராத் மதமாற்ற மசோதா‘ இருந்தது. அந்த மசோதா ‘எல்லா மதமாற்றங்களும் மாவட்ட நீதிபதியால் ஏற்பளிக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவைக் கொண்டிருந்தது. அசீமானந்தாவின் நிதிதிரட்டும் நிகழ்ச்சிக்கு 4 மாதங்களின்பின் மோடியின் நம்பிக்கைக்குரியவரான அமீத் ஷா அந்த மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்: மசோதா நிறைவேறியது. 2003 ஏப்ரலில் சட்டமாகியது. உடனடியாக அசீமானந்தா மொராரிபாபு, மோடி, மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் டேங்க்ஸ்ல் மிகப்பிரமாண்டமான ‘வீடு திரும்புதல்(கர் வாபஸி) நிகழ்வுக்குத் திட்டமிடத் துவங்கினார்.
  ராம்கதாவின் முடிவில் சபரிதாம்-ல் ஒருபுதியகும்பமேளா நடத்தவேண்டும் என மொராரிபாபு முன்மொழிந்தார். தயாரிப்புவேலைகளுக்கு 4 ஆண்டுகள் தேவைப்பட்ட அந்த மேளா மதமாற் றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களாகவும், இந்துத்வாவைப் போற்றும்கொண்டாட்டங்களாகவும் உருவாகிவந்தது. அசீமானந்தா ஆர்..எஸ்.எஸ். உடன் இணைந்து தாமே அந்த மேளாவைப் பொறுப்பேற்று நடத்த ஒப்புக்கொண்டார்.
  2006 பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் பத்தாயிரக்கணக்கான இந்தியர்கள் அசீமானந்தாவின் சபரிதாம்-ல் உள்ள ஆசிரமத்திற்கு 6 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதி கிராமமான சுபீர்-க்கு சபரி கும்பமேளாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் திரண்டனர். முந்தைய நான்கு கும்பமேளாக்களில் நடைபெற்றதுபோல- பழங்குடியினர் தாங்கள் இந்து கட்டமைப்புக்குத் திரும்பி வந்ததைக் குறிக்கும் வகையில் உள்ளூரில் பாயும் ஆற்றில் முழுகிப் புனிதம்பெறும் சடங்கின் ஒரு நிகழ்வு சபரி கும்பமேளாவில் மையப்படுத்தப்பட்டிருந்தது. மத்திய இந்தியா முழுவதிலும் பழங்குடி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் டிரக்குகளில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டார்கள். தகவல் அறீயும் உரிமைச்சட்ட்த்தின்படி நான் அனுப்பிய விண்ணப் பத்திற்கு வந்த பதிலில் ‘ குஜராத் அரசு  கூட்டத்தினர் ஆற்றில் முழுகிஎழப் போதுமான அளவு ஆற்றுக்குத் தண்ணீரைத் திருப்பிவிடக் குறைந்த பட்சம் ரூ.53 இலட்சம் செலவிட்டது.
 சபரி கும்பமேளா இந்துமதத் தலைவர்களிடையேயான ஒற்றுமையை எடுத்துக்காட்டுவதாக இருந்த்து. மூன்று நாட்களும் மேடையில் பிரபலமான மதத்தலைவர்கள் மொராரிபாபு, ஆஷ்ரம் பாபு, ஜெயேந்திர சரஸ்வதி, சாத்வி ரிதாம்பரா ஆகியோரும், ஆர்.எஸ்.எஸ். – சங்பரிவாரின் உயர்மட்டத்தலைவர்கள், இந்திரேஷ்குமார் , தீவிரத்தன்மைகொண்ட விஷ்வஹிந்து பரிஷத் தலைவர்கள் பிரவிண்தொகாடியா, அசோக்சிங்கால், மூத்த பி.ஜே.பி.அரசியல்வாதிகளான ம.பி. முதல்வர் சிவராஜ்சிங்சௌகான் உள்ளிட்டோர் வீற்றிருந்தார்கள். நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும்  நிகழ்ச்சிகளை நிர்வகித்தார்கள். இரண்டு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டதைப்போல ‘சபரி கும்பமேளா சாதுக்கள், சங், சர்க்கார் (அரசு) ஆகியவற்றின் சங்கமமாக விளங்கியது.
  விழாவின் துவக்க நாளில் மோடி பார்வையாளர்களிடம், ‘பழங்குடியினரை இராமரிடமிருந்து பிரிக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடியும்என்றார். மேடையின் பின்னணியில் பத்துத்தலை இராவணனை நோக்கி அம்புவிடும் இந்துக்கடவுளின் பிரம்மாண்ட வண்ண ஓவியம் அமைந்திருந்தது. அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ்.சுதர்சன் மிகவும் கடுமையான போர்க்குரலில் ‘முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் கபட யுத்தததிற்கு எதிராக நாங்கள் எழுகிறோம். நம் அதிகாரத்தின்கீழ் உள்ள எல்லாவற்றையும் கொண்டு எதிர்க்கவேண்டும் என்றார். சுதர்சனின் உதவித்தலைவரான மோகன்பகவத் (2009 மார்ச்-ல் சுதர்சன் ஓய்வுபெற்றபின் இவர் சர்சங் சாலக் ஆனார்.) அந்தக்குழுவினரிடம் ‘நம்மை எதிர்ப்பவர்களின் பற்கள் நொறுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
  பத்திரிக்கைச் செய்திகளின்படி 1,50,000 பேர் முதல் 5,00,000 பேர்வரை கும்பமேளாவில் கலந்துகொண்டார்கள். சில மதமாற்ற நிகழ்வுகளும் நடைபெற்றன. இன்று சபரிதாம் கோவிலுக்குப் பக்தர்கள் யாரும் வருவதில்லை. அந்தக் கோவிலாலும் தனது ஊழியர்களைப் பராமரிக்க முடியவில்லை. அசீமானந்தா வாழ்ந்த ஆசிரம்ம் இடிக்கப்பட்டுவிட்ட்து. இந்தக் கோவிலின் தலைமைப்பூசாரியின் உதவியாளரான பிரதீப் பட்டேல் ‘அசீமானந்தாவின் தொடர்பு களால் இந்தக் கோவில் கெட்டபெயர் எடுத்துவிட்டது. அதனால் நல்ல உள்ளம்கொண்ட எல்லா குஜராத் நன்கொடையளர்களிடமிருந்தும் தனிமைப்பட்டுவிட்டது. எப்போதாவது கோவிலுக்கு வரும் மகாராஷ்டிரா மக்கள் டேங்க்ஸ் வருவதற்கே தங்கள் பணம்முழுவதையும் செலவுசெய்துவிட்டுக் கோவில் உண்டியலில் வெறும் பத்து ரூபாயை மட்டும் போடுகிறார்கள் என்று வருத்தத்துடன் கூறினார். அசீமானந்தா,இது என்னுடைய தவறுதான். நான் அதை முறையாகக் கட்டவில்லை என்று என்னிடம் கூறினார்.
  இந்தப்பகுதியில் உணர்வுபூர்வமான செயல்பாடுகள் எதுவுமில்லை. கோவில்தான் அந்தப்பகுதி யின் மிகமுக்கியமான தேவை என்று குஜராத் அரசு நினைக்கிறது, எனவே டேங்க்ஸ் தன்னுடைய தேவைகளை மதசார்பான சுற்றுலாக்களின்மூலம் பூர்த்திசெய்துகொள்ள முடியும். இதற்காக குஜராத் அரசு 2012ல் ‘ராமர் முன்னோட்டத்திட்டம்  என்பதைத் துவக்கியது. புராணக் கதையான இராமாயணத்தில்வரும் பாத்திரங்களைக்கொண்டு ஊர்வலம் நடத்துவது அரசின் முன்முயற்சியாகும். இந்தத்திட்டத்தில் சபரி தாம் முக்கிய இடம்பெற்றது.
  ராமர் முன்னோட்டத் திட்டம் பற்றிய தகவல்களை அறிய நான் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கான பதிலில் ‘ஒரு சிவன் கோவிலையும்,  நான்கு நீரூற்றுக்களையும், சென்று வருவதற்கான பாதை, வாகனங்களை நிறுத்துவதற்கான ஒருபெரிய இடம், பக்தர்கள் அமரும் இடம், துப்புரவுப்பணிகள் மற்றும் சுற்றுச் சுவர்கட்ட சபரி தாம் அரசிடமிருந்து ரூ.13 கோடி பெற்றுள்ளது. அதேநேரத்தில் டேங்க்ஸ்பகுதியில் உள்ள பிற்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ‘பிற்பட்டபகுதி மான்யத்திட்டத்தின்கீழ் அளித்த ரூ.11.6 கோடிக்கான திட்டமுன் வடிவை மோடியின் அரசு இன்றுவரை சமர்ப்பிக்கவில்லை. ‘ஆறுஆண்டுகளாக இந்தத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உள்ளூர் கிறிஸ்தவ நிறுவனங்கள் அரசால் மூடப்பட்டுவிட்டன. ‘1998ல் இருந்து காந்தி நகரில் நாங்கள் கறுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளோம். என்று கவலையுடன் தெரிவித்த தீப் தர்ஷன் பள்ளியின் சகோதரி லில்லி ‘பள்ளிக்கான புதிய மான்யத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் புதிய விண்ணப்பங்களைப் பதிவு செய்கிறோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு எதையுமே அளிக்கவில்லை. என்றார்.
  அசீமானந்தா மிகப்பெரிய அளவில் மதமாற்றங்களைச்செய்த நவ்சாரியில் உள்ள உனாய் கோவில், ராமர் முன்னோட்டத் திட்டத்தின்கீழ் ரூ.3.63 கோடி பெற்றுள்ளது. 2013 ஜூனில் நான் சென்றபோது முதன்மைக் கட்டடத்தின் வேலைகள் முடிவடைந்திருந்தன. புதிய கட்டட அமைப்பு மகத்துவம் மிக்கதாகவும், கம்பீரமானதாகவும், மனதில் பதியத்தக்கதாகவும் உள்ளது. அதன் சுவர்களுக்குப்பின்னே அசீமானந்தா பழங்குடி அணியை மதமாற்றம் செய்வதற்காகக் கொண்டுவந்த பழைய கோவில் மறைந்துகிடக்கிறது. அந்தக்கோவிலிலிருந்த புரோகிதர் ‘அண்மைக்காலங்களில் கோவிலுக்கு வருவோர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. ஆனால், வெந்நீர் ஊற்றுக்கள் முதன்முறையாக வறண்டுவிட்டன என்று என்னிடம் முணுமுணுத்தார்.
                                                   (தொடர்கிறது பகுதி நான்கு)