பிரேஸிலின் இடதுசாரிகளின் இன்றைய நிலையை மதிப்பிடுதல்
அண்மையதசாப்தங்களில்–பலபத்தாண்டுகளில்– பிரேஸிலின் இடதுசாரி களைவருத்திய
தோல்விகளில் பலவும் இந்தப்பிரிவினரை ஆதிக்கம் செலுத்திய அரசியல் உத்திகளை தவறாக புரிந்துகொண்டதன்
விளைவே என அரசியல் அமைப்புக்களும்,துறைசார்ந்த வல்லுநர்களும் கருதுகிறார்கள். இந்தபார்வை
தொழிலாளர்கள் கட்சியால் முடுக்கிவிடப்பட்ட நிறுவனப் போராட்டங்ளுக்கு முன்னுரிமை தந்தது:
அந்தக்கட்சி 13 ஆண்டுகள் ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை
மேற்கொண்டது உழைக்கும் வர்க்கம் பிரேஸிலின் ஆட்சியை எடுத்துக்கொள்வதற்கான ஒரு துவக்கத்தை
அளித்தது.
தொழிலாளர்கள் கட்சியின் நிர்வாகங்கள் செயல்படுத்திய
கொள்கைகள் சந்தேகத்துக்கிடமில்லாமல் பிரேஸிலின் மக்கள்தொகையில் பெரும்பகுதி யினர் வாழ்வை
பெருமளவில் முன்னேற்றம் அடைய வைத்தது. அந்தப் பல்வேறு நடவடிக்கைகளில் Bolsa Familia
(Family Grant)3 என்னும் வருமானத்தை மறுபங்கீடுசெய்யும்கொள்கை -3கோடியே
60இலட்சம் மக்களை கடுமையான வறுமையின்பிடியிலிருந்து வெளிக்கொண்டுவருவதற்கு பொறுப்பேற்றிருந்தது- Minha Casa Minha Vida
(My
House My Life) என்னும் வீடுகள்வழங்கும்
திட்டம்- 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட உழைக்கும் வர்க்க மக்களுக்கு வீடுகளைக்4
கட்டித்தந்தது.- குறைந்தபட்சக் கூலியை விலைவாசி உயர்வுக்கும் மேலாக உயர்த்தியது: முறையான
வேலைவாய்ப்பை அதிகரித்தது: சமூக சமத்துவமின்மையைக் குறைத்தது மற்றும் பொது மற்றும்
தனியார் பல்கலைக்கழகங்களில் நகரங்களின் புற எல்லைசார்ந்த இளைஞர்களின் சேர்க்கையை அதிகரித்தது
ஆகியவை குறிப்பிடத்தக்க சிலவாகும். தொழிலாளர்கள் கட்சி ஆட்சிஅதிகாரத்துக்கு எழுச்சி
பெற்றது சந்தேகத்துக்கிடமில்லாமல் 1990களின் பிற்பகுதியிலும், 2,000களின் துவக்கத்திலும்
இலத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதிலும் ஒரு முற்போக்குஅலையாக வீசியது. புதியதாராளமயக்கொள்கைகளை
எதிர்த்ததன் விளைவாக அடையபெற்ற வெற்றிகள் அந்தக்கண்டம் முழுவதிலும் கொண்டு செலுத்தப்
பட்டன.
இருந்தபோதிலும், ’வெவ்வேறு வர்க்கங்களின் ஆதரவைத்
திரட்டுவதற் காகவும், பெரும்பான்மையான மகத்தான தொழிலாளர்களுக்கு அரசியல்ரீதி யான பயிற்சியை
அளிக்கும் வழிமுறையைப் பின்பற்றாமல், சமூக- பொருளா தார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும்
தொழிலாளர்கள் கட்சி அரசியல் முடிவுகளை எடுத்தது’ என்ற அம்சத்தை மையமாகக்கொண்டு பல விமர்சனங்கள்
எழுந்தன. இந்த செயல்முறைகளின் விளைவாக நடுத்தர மற்றும் உழைக்கும் வர்க்க பிரிவினரிடையே
வர்க்க உணர்வின் அளவை உயர்த்தத் தவறியது. இதன் எதிர்விளைவுகள், 2016ல் முன்னாள்அதிபர்
தில்மா ரௌஸ்ஸெஃப்-க்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பின்போது மிகவும்தெளிவாகத் தெரிந்தது:
இதனால்,மிகக்கடுமையான குற்றச்சாட்டுக்களின்மீது எடுத்த நடவடிக்கைகளின் முடிவுகளை மாற்றியமைக்கும்
வல்லமைகொண்ட, பெருமளவில்எதிர்க்கும் ஆற்றல்மிக்கவழிமுறையை மேற்கொள்ள இயலாமல் போனது.
இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 5கோடியே 78 இலட்சம் வாக்குகள் (55%) பெற்ற போல்ஸ்னோராவின்தேர்தல்
இந்தப்பாடத்தை மீண்டும் உறுதிப் படுத்தியது.
முற்போக்குஅரசுகளின்கீழ் பிரேஸிலின் சமூகசமத்துவமின்மையைக்
குறைப் பதில் முதலீடுகள்செய்வது மையமானஇடத்தை எடுத்துக்கொண்டிருந்தாலும் கூட , இந்தக்காலகட்டத்தில்
உழைக்கும் வர்க்கத்தை ஒருங்கிணைப்பதற்கு முன்னுரிமை தரப்படவில்லை. மேலும், சமுதாயத்தில்
தத்துவார்த்தப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடைபெற்ற போது,
அவர்களது கொள்கைகள்மூலம் பயனடைந்த உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவைச் சார்ந்துநின்று அந்தமுயற்சியைத்
தடுத்து நிறுத்த தொழிலாளர்கள் கட்சியால் முடியவில்லை. உழைக்கும் வர்க்கத்தின் எலிடா
எலெனா (UNE) எங்களிடம், ‘தில்மா ரௌஸ்ஸெஃப் பதவியிலிருந்து நீங்கியபிறகு, உழைக்கும்
வர்க்கம் தாக்குதல்களால் துன்புறுத்தப்பட்டது: அந்தத்தாக்குதல்கள் தொழிலாளர்கள் உரிமைகளையும்,
தொழிற்சங்க அமைப்புக்களையும் பலவீனப்படுத்துவது போன்றவற்றால் தொழிலாளர்களின் திருப்பித்தாக்கும்
ஆற்றல்களை வலுவற்றதாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தன’,என்று கூறினார். :எனவே பிரேஸிலின்இடதுசாரிகள் போர்த்திறம்
வாய்ந்த உத்தியில் தோற்கடிக்கப்பட்டுள்ளோம்: மேலும் சமுதாயத்தில் உள்ள சக்திகளின் தொடர்புகள்
எங்களுக்கு சாதகமாகஇல்லை’என்று நாங்கள் வாதம் செய்தோம்’ என்றார் அவர்.
கெல்லி மாஃபோர்ட் (MST), பிரேஸிலின் இடதுசாரிகள்
சந்தித்த பல தொடர்தோல்விகள் போர்த்திறம் வாய்ந்த உத்தியின் ஒரு தோல்வியைக் குறிக்காது: ஒருவர்க்கத்தின் உணர்வு இன்னொரு வர்க்கஅரசியல்செயல்பாட்
டாளரால் நடுநிலைப்படுத்தப்ப்டும்போது அது நிகழ்கிறது’ என்று நம்புகிறார். நாங்கள் மிகஉறுதியாக
பல்வேறு அரசியல் தோல்விகளைக் குவித்திருக் கிறோம்: ஆனால், உழைக்கும் வர்க்கம் இன்னும்
உயிருடன் இருக்கிறது: மேலும், முதலாளித்துவ சிக்கல்களின் விளைவுகளை நேருக்கு நேர் எதிர்த்தும்
வருகிறது” என்கிறார் அவர்.
பிரேஸிலின்
உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை மேலும் முன்கொண்டு செலுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட
வெற்றிகரமான கடைசி போர்த்திறம் வாய்ந்த உத்தி ‘மக்களின் ஜனநாயக போர்த்திறம் வாய்ந்த
உத்தி’ (Popular DemocraticStrategy- (estrategia
Democratico-Popular)ஆகும். இந்த உத்தி நகரிய-இராணுவ சர்வாதிகாரத்தின் முடிவில்,
ஒரு ஜனநாயக மாறுதலுக்கான போராட்டத்தில் பிறந்தது: மேலும் அது, 1970கள் மற்றும்
1980களின் பிற்பகுதிகளில்எழுந்த பெரும்திரள் போராட்டங்களின் இதயமாகவும் இருந்தது.
‘ மக்களின் ஜனநாயக போர்த்திறம் வாய்ந்த உத்தி’ மூன்று
உறுதியான நம்பிக்கைகளைத் தளமாகக்கொண்டுள்ளது:
1.
பிரேஸிலிய
முதலாளித்துவம், (விவசாய சீர்திருத்தம், வட்டார மற்றும் சமூக சமத்துவமின்மை, ஒரு ஜனநாயகஒழுங்கை
ஒருங்கிணைத்தல்) ஆகிய முதலாளித்துவப் புரட்சியின் கடமைகளை நிறைவேற்றுவதில் தவறியிருக்கிறது.
2.
இந்தக்கடமைகளை
உள்ளூர் முதலாளித்துவத்தின் கூட்டணியோடு அல்ல: அதற்குமாறாக, (முதலாளித்துவத்தால் சுரண்டப்படும்
கிராமப்புற மற்றும் நகர்ப்புற தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிற பிரிவினரான) உழைக்கும்வர்க்கத்தின்
முன்னணித்தலைவர்களால்தான் கையாளமுடியும்.
3.
இந்த
உத்தியை நிறைவேற்றுவதை நோக்கிய பாதை, நிறுவன வெற்றிகளோடு இணைந்த வலுவான மக்கள் இயக்கத்துடன்
இணைவதில் இருக்கிறது: அது, அதிபரின் அலுவலகம்வரை அடையக்கூடியதாகவும், மக்கள் ஜனநாயக போர்த்திறம்வாய்ந்த உத்திக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சீர்திருத்தங்களை (ஏகபோகங்கள்,பெரிய நிலம்படைத்த பண்ணைகள்
மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு எதிராக) நிறைவேற்றுவதிலும் இருக்கிறது.
‘ மக்கள் ஜனநாயக போர்த்திறம் வாய்ந்த உத்தி’ இரண்டு
அடிப்படை உத்திகளோடு இணைந்தது, முதலாவதாக, அது நிறுவனங்களின்மீதான கட்டுப்பாட்டை, மாநிலத்துக்குள்
உள்ள நகராட்சி, மாநிலம் மற்றும் கூட்டமைப்பு தேர்தல்கள் வழியில் அதிகாரத்தை ஒருங்கிணைப்பதன்மூலம்
அடைய விரும்புகிறது. இரண்டாவதாக, வேலைநிறுத்தங்கள், நிலம்கையகப் படுத்தல்கள்,அணிதிரட்டல்கள்மற்றும்மக்கள்போராட்டங்கள்
மூலம் உழைக்கும் வர்க்கத்தை அணிதிரட்ட விரும்புகிறது.
மாஃபோர்ட்
அதை விளக்குகிறார்,: எவ்வாறாயினும்,’ ‘மக்கள் ஜனநாயக போர்த்திறம் வாய்ந்த உத்தி’
நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டபோது, இந்த உத்திகள்
அதற்கு அப்பாலும் வளர்ந்தன: மற்றும் நிறுவனங்களின்
(வேலை செய்வதன்மூலம்) இந்தத் தந்திரோபாயம் படிப்படியாக உழைக்கும்வர்க்க அணிதிரட்டல்
தந்திரோபாயத்தை கவனிக்கத் தவறிவிடுகிறது. இது நடந்து முடியும்போது, ஒருகாலத்தில் தந்திரோபாயமாக
இருந்தது, போர்த்திறம் வாய்ந்த உத்தியாக ஆகிவிடுகிறது. (இந்த மாற்றம்) அமைப்புக்களிடம்
அமைப்புக்களின் வலுவைக் கட்டுவதற்கு பதிலாக, அரசுக்குள் இருந்து வேலை செய்வதற்கு முன்னுரிமை
அளிக்க வைத்துவிடுகிறது. மேலும் கூடுதலாக, லூலா மற்றும் தில்மா ஆகியோரின் புதிய வளர்ச்சிக்கான
நிர்வாகங்களின்போது, அரசுக்கும், உழைக்கும்வர்க்கத்தின் அமைப்புரீதியான கருவிக்கும்
இடையில் உள்ள தனித்தன்மைகளை உருவாக்குவதில் தவறான அரசியல் நடவடிக்கைகள் ஒரு தொடராக
அமைந்தன.’
இதேபோன்றவழியில்,ஜூலியானோமெடெய்ரோஸ்(PSOL)சுட்டிக் காட்டுகிறார்: ’மாநிலத்தைநிர்வகிப்பதற்கு,தாராளமய
ஜனநாயகவிளையாட்டின் விதிகளுக்கு, வாழ்நிலையின் மேம்பாட்டுக்கு, ஆனால், கட்டமைப்பு சீர்திருத்தங்கள்
இல்லா மல் என தனது தோற்றத்தை வரையறுத்துக்கொண்ட போர்த்திறம்வாய்ந்த ஒரு உத்தியின் தோல்வியை
ஒப்புக்கொள்ளாமல் இருப்பது சாத்தியமற்றது’. என்கிறார். இடதுசாரிகளின் ஒருபகுதி அரசிலிருந்துகொண்டு
மாற்றங்களை வளர்ச்சிபெற வைப்பதைத் தேர்வு செய்தது: அது உழைக்கும்வர்க்கத்துடனான தொடர்புகளை
பலவீனப்படுத்தியது. 1980களில் பிரேஸிலிய சமூகத்தை ஜன நாயகப்படுத்தும் வழிமுறைகளில்
உருவான கலகலப்பான வடிவங்கள் மற்றவைகளுடன் மாற்றியமைக்கப்பட்டது: அது புதிய தாராளமய
சித்தாந்தத் துடனும், தனியுரிமைக் கோட்பாட்டுடனும் வேரூன்றியிருந்தது. மேலும் இது ஏன்
நிகழ்ந்தது என்றால், எங்கே மக்கள் வாழ்கிறார்களோ, கலகலப்பாக இருக்கிறார்களோ அந்தத்
தளத்தில், நேர்மையான மற்றும் அவசியமான போராட்டங்களை அரசு நிறுவனங்கள் மூலம் நடத்துவதற்கான
தளத்தில் மக்களை அணிதிரட்டுவதிலிருந்து இடதுசாரிகள் விலகிச்சென்றுவிட்டார்கள். அதனால்,
இது இந்த வெளிகளை எதிரிகள் கைப்பற்ற அனுமதித்துவிட்டது.’. மெடெய்ரோஸ் எடுத்துக்காட்டியதுபோல,
அதிகார வெற்றிடம் மிகமிக வலதுசாரிகளின் எழுச்சிக்கு வழிவகுத்துவிட்டது.
ஜாண்டிரா
உயெஹரா (CUT) சுட்டிக்காட்டுவதுபோல, முறையாக எதிர்வினையாற்ற இயலாத இடதுபிரிவு துறை,
‘தெளிவான வானத்திலிருந்து ஓர் இடிமுழக்கம்போல’ அதிரவைக்கவில்லை. அதற்குமாறாக, கிட்டத்தட்ட
மூன்று சதாப்தங்களாக வர்க்க சமரச அரசியலில், உழைக்கும்வர்க்கத்தைப் பலவீனப்படுத்தியது:
அரசியல் திட்டத்தின், அடித்தளத்தைக் கட்டுவதிலிருந்து, அரசியல்பயிற்சி அளிப்பதிலிருந்து,
தத்துவார்த்தப் போராட்டங்களிலிருந்து உழைக்கும்வர்க்கத்தைப் பிரித்துவைத்த- ’நிர்வாகம்
மற்றும் தேர்தல் போராட்டம்மட்டுமே’ என்ற நோய்த்தாக்கத்தின் விளைவாக அது இருந்தது.’.
தானே ஒரு தொழிற்சங்கத்தலைவராக இருப்பதால், அவர்,
அத்தகைய ஒரு தோல்வி, இடதுசாரிகளின் தவறுகளால் மட்டுமல்ல, வலதுசாரிகளால், குறிப்பாக,
மிகப்பெரிய ஊடகமையங்களின் தாக்குதல்களாலும்கூட ஏற்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார்.
தொழிலாளர்கள்கட்சி ஆட்சியின் துவக்கத்திலி ருந்தே, ஊடகங்களின் மையநீரோட்டங்கள் அரசியலை
குற்றமயப்படுத்தும் கதைகளை - அரசியல் விவாதங்களிலிருந்து சமுதாயத்தை பிரித்துவைப்பதற்
காக - கட்டமைத்துக்கொண்டிருந்தன. இது இடதுசாரிகளின் பிம்பத்தை ஊழல் மற்றும்அமைப்புமுறையால்
கட்டுப்படுத்தப்பட்டதுஎன குறிப்பாக தொழிலாளர் கள் கட்சியையும், ஒட்டுமொத்தத்தில் இடதுசாரிகளையும்
குற்றப்படுத்தியது.’
வலேரியோ ஆர்கெரி (PSOL) இடதுசாரிகளின் குறுகியபார்வைகொண்ட தந்திரோபாயங்கள்பற்றிப்
பேசுகிறார்:,‘அது எங்களை அச்சுறுத்திய ஆபத்துக் களைக் குறைத்துமதிப்பிட வைத்துவிட்டது’.
அவர் இந்தப்பிரிவில் வரும் நிகழ்வுகளின் வரிசைகளைப் பட்டியலிட்டார்: ‘கார் கழுவும்
செயல்திட்டமும்’ அதைத்தொடர்ந்து, உயர்பதவியில் இருப்பவரை குற்றப்படுத்துவதின் முக்கியத்துவமும்,
இடதுசாரிகளையும், லூலாவையும் குற்றப்படுத்து வதற்கான வாய்ப்புக்களும், உடனடியாக நிகழக்கூடிய
லூலாவின் கைதும், பின்னர் இறுதியாக, பால்ஸனோராவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அச்சுறுத்தலும்
குறைத்து மதிப்பிடப்பட்டுவிட்டது: வர்க்க எதிரிகளின் அதிகாரத்தைக் குறைத்துமதிப்பிட்டது
பேரழிவாகிவிட்டது.’
வலதுசாரிகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தத்
துவங்கியபோது, அண்மைக்காலங்களில் பிரேஸிலிய இடதுசாரிகளால் செய்யப்பட்ட தொடர்ச்சி யான
பகுப்பாய்வுசார்ந்த தவறுகளை ஆர்கெரி குறிப்பிடுகிறார். எடுத்துக் காட்டாக, : ‘கார் கழுவும் செயல்திட்டத்தில்’5
சிக்கவைக்கப்பட்டதைப் புரிந்து கொள்ள முற்போக்கு சக்திகளின் ஒரு முக்கியமானதுறை நீண்டகாலத்தை
எடுத்துக்கொண்டது. , ‘தில்மாரௌஸ்ஸெஃப்-ஐ பதவியிலிருந்து நீக்கும் செயல் முறை துவங்கியபோது,
சிலதுறைகள், பாராளுமன்றத்தின் அத்தகைய ஒரு முன்னெடுப்பு வெற்றிபெறும் என்பதை நம்பவில்லை.
தொழிலாளர்கள் கட்சி தலைவரின் பொருளாதாரக்கொள்கைகள் ஏற்கனவே ஆளும்வர்க்கத்துக்கு பயன்களை
அளித்துள்ளது: முதலாளிகள் அரசியல் நிலையற்ற தன்மையில்6 அக்கறை காட்டமாட்டார்கள்
என்று விவாதித்துக்கொண்டிருந்தார்கள்
மீண்டும் - சில ஆண்டுகளுக்குப்பிறகு, முன்னாள் அதிபர்
லூலா கைது செய்யப்படுவார் - என்பதை பலரும் நம்பவில்லை: ஏனென்றால், அவரை சிறையில்வைப்பது
உழைக்கும்வர்கத்தின் எழுச்சிகளைத் தூண்டிவிடும் என்று வலதுசாரிகள் பயப்படுவார்கள் என்று
விவாதித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் எவ்வாறோ,2017ல் நீதிபதி செர்ஜியோமோரோ. கைதுசெய்யும்
உத்தரவைப் பிறப்பித்தபோதும், அதிபர் பதவிக்கு லூலா போட்டியிடுவதை தடை செய்தபோதும்,
2018ல் லூலா முடிவில் கைதுசெய்யப்பட்டபோதும் அவர்கள் எதிர்பார்த்த அந்த எழுச்சிகள்
நிகழவே இல்லை. அதன்பிறகு போல்ஸனோரோ 2018 தேர்தலில் தான் அதிபர் பதவிக்கு போட்டியிடப்
போவதாக அறிவித்தபோதும் பிரேஸில் இராணுவத்தின் முன்னாள் தளபதி போல்ஸனோரோவுக்கான ஆதரவு
8%க்குமேல் இருக்காது என பலரும் மதிப்பிட்டார்கள். ஆனால் போல்ஸனோரோ தேர்தலின் முதல்சுற்றிலேயே
முன்னிலை வகித்ததுடன், இரண்டாவது சுற்றில் தொழிலாளர்கள் கட்சியின் ஃபெர்ணாண்டோ ஹத்தாத்-க்கு
எதிராக 55% வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
2014ல் ஏவப்பட்ட ’கார் கழுவும் செயல்திட்டம்’ விசாரணை
நீதிமன்ற நீதிபதி செர்ஜியோ மோரோ-வால் வழிநடத்தப்பட்ட ஒரு முயற்சியாகும்: அது, மிகப்பெரிய
கட்டுமான நிறுவனங்க ளோடு பிரேஸில் அரசின் எரிசக்தி நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டதில்
ஊழல்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக வந்த அறிக்கைகளை புலனாய்வு செய்யும் நோக்கம் கொண்டிருந்த்காக
குற்றம் சாட்டப்பட்டது. ‘கார் கழுவும் செயல்திட்டம்’ அதிபர்கள் தில்மா ரௌஸ்ஸெஃப் மற்றும்
லூலா-ஆகியோரை சட்டபூர்வமற்றவர்களாகஆக்கவும், அவர்களுக்கு அரசியல் இடர்ப்பாடுகளை தருவதற்குமான முதன்மையான கருவியாக இருந்தது. அந்த
செயல்திட்டத்தின் முக்கியமான நோக்கமாக, லூலாவை எந்தவிதமானஆதாரங்களுமின்றி மிகவும் கேள்விக்குள்ளாக்கப்பட
வேண்டிய குற்றச்சாட்டுக்கள் மூலம் குற்றப்படுத்துவதாகவும்,
இருந்தது. ஊழலை எதிர்த்துப் போராடவேண்டிய ஒரு செயல்திட்டம் ஒரு தொடர்அரசியல்விசாரணைகளாக
மாறியது என்று குற்றம் சாட்டப்பட்டது
.
மிகப்பல தடைகளை எதிர்கொள்ளும்போது, புதிய தாராளமய
சித்தாந்தம், தனியுரிமைக்கோட்பாடு, மற்றும் தொழில்முனைவோர் –ஆகியவற்றின் வலுவான செல்வாக்கின்முன்,
பலவீனப்பட்டுக்கொண்டிருந்த சோசலிச சித்தாந்தத்தின் மூலம் எந்தவொரு தீவிரமான எதிராளியையும்
காணமுடிய வில்லை – ஏனென்றால் சோசலிச சித்தாந்தத்தின் அமைப்புக்கள் தங்களது முதலாளித்துவத்துக்கு
எதிரான, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒட்டுமொத்த குணாம்சங்களையும் கைவிட்டுவிட்டன.:
மேலும், தங்கள் முயற்சிகளை நிறுவனம் மற்றும் தேர்தல் போராட்டங்களுக்கு அர்ப்பணிப்பதற்குப்பதிலாக,
பின்னுலையில் ஒரு தளத்தைக் கட்டுவதில் காட்டினார்கள்.
ஜாண்ட்ரியா
உயெஹரா (CUT) ’வலதுசாரிகளுக்கு உழைக்கும் வர்க்கத்தை வெற்றிகொள்ள ஒருசெழிப்பான தளம்
உருவாகியது: உழைக்கும் வர்க்கத்தின் பெரும்பான்மையானவர்கள் பெருமளவுக்கு அணிதிரட்டப்படாதவர்களாகவும்,
தொழிற்சங்கங்களிலோ, மக்கள் இயக்கங்களிலோ அல்லது இடதுசாரி கட்சி களிலோ அவற்றின் நிரந்தரச்செல்வாக்குக்கு
ஆட்படாதவர்களாகவோ இருந் தார்கள்.: அவை,ஒருகாலத்தில் எங்கே அவர்களது அரசியல் போராட்டங்களை
ஒருங்கிணைத்தனவோ, அந்தப்பகுதிகளை சிறுகச்சிறுக கைவிட்டுவிட்டன. அதற்குப்பதிலாக கூட்டுமுகவாண்மை
மற்றும் பொருளாதாரப் போராட்டங் களுக்கும், அதேபோல தேர்தல் பந்தயங்களுக்கும் முன்னுரிமை
அளித்தன. இந்த நேரத்தில் எங்கே உழைக்கும் வர்க்கம் வாழ்கிறதோ, அந்தப்பகுதிகளில் வலதுசாரி பிரிவுகளின் கருவிகள் ஓர் அரசியல் மற்றும்
தத்துவார்த்தப் போராட்டங்களை நடத்தி வேரூன்றிவிட்டன’’ என்று விளக்கினார்.
# #
# # #
.
பிரேஸில்
2021 ஐ வேலையின்மையின் சாதனை அளவுகளோடு துவக்கியது: இந்தசூழ்நிலையில் 14,272பேர் (14.2%)
தேசிய குடும்பவாரி மாதிரி ஆய்வின்படி வேலையில்லாதவர்களாக இருந்தார்கள்.
Rafeal
Olinto (@rafa olin)/ Design Ativista/ 2020
செய்ததையே மீண்டும் செய்யும் வரலாற்றின் துன்பியல்
2008 பொருளாதார நெருக்கடிக்குப்பிறகு, விரைவாக,
உலக மேலாதிக்கத்தை யும், கட்டுப்பாட்டையும் மீண்டும் பெறுவதற்காக அமெரிக்கா ஒருபுதியதாராள
வாத தாக்குதலுக்கு தலைமையேற்றது. அதேவேளையில், பிரேஸிலில், ஏகாதிபத்திய போர்த்தந்திரங்களின்செல்வாக்கின்கீழ்,
தொழிலளர்கள் கட்சியின் சிக்கலான அரசியல் மற்றும் வர்க்கச்சேர்க்கை நிர்வாகங்கள் தாமாகவே
நீர்த்துப்போகத் துவங்கின. தொழிலாளர்களின் உரிமைகளை திரும்பப் பறிக்காமல்.முதலாளிகளின்
ஆதாயங்களை பராமரிப்பது நீண்டகாலத்துக்கு சாத்தியமில்லாமல் போனது. ஆளும்வர்க்கத்துக்கும்,
தொழிலாளர்கள் கட்சி அரசுக்கும் இடையே ஒரு முறிவை ஏற்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
கண்ணுக்குத்தெரியாத கைகளால் வழிகாட்டப்பட்ட ஒரு திட்டம் படிப்படியாக வடிவமைக்கப்பட்டது.
2014ல் வலது தாராளவாத பிரேஸிலியன் சோசியல் டெமாக்கிடடிக்
கட்சியின் ஏஸியோ நேவிஸ் அதிபர் தேர்தலில் தில்மா ரௌஸ்ஸெஃப்பிடம் தோற்றார். தேர்தல்
வழிமுறைமூலம் புதியதாராளமயத்திட்டங்களை முழுநிறைவாக நடைமுறைப்படுத்துவதில் தோல்வியடைந்தபிறகு,
பிரேஸில் முதலாளித்து வத்தின் மேலாதிக்கத்துறைகள் இரண்டு வெவ்வேறு தந்திரங்களை மேற்கொண்டன.
முதலில் தில்மாரௌஸ்ஸேஃப்புக்கு எதிராக குற்றவிசாரண நடவடிக்கைகளை துவக்கினார்கள்: பின்னர்,
சிறிதுகாலத்துக்குப்பிறகு லூலாவை அதிபர்தேர்தலில் பங்கெடுப்பதிலிருந்து அவர்கள் தடைசெய்தார்கள்
மேலும்,ஜெய்ர் போலஸனோரோவின் அதிபர்பதவிக்கான ஏலத்துக்கு ஒப்புதல் அளித்தார்கள். புதியபாஸிச
குணங்களைக்கொண்ட சர்வாதிகாரமுகமான போல்ஸனோரோதான் 2018 தேர்தல்களில் தொழிலாளர்கள் கட்சியை
வெல்லக்கூடிய ஆற்றல்மிக்க ஒரே வேட்பாளராக இருந்தார்.
ஆட்சிக்கவிழ்ப்பு தில்மாவை வெளியேற்றியபிறகு உடனடியாக,
வலுவான மற்றும் வெற்றிகரமான புதியதாராளமய மற்றும் சிக்கண நடவடிக்கைகள், தொழிலாளர்கள்கட்சி
அரசுகள் 13ஆண்டுகள்காலத்தில் அடைந்த வெற்றிகளை அகற்றுவதற்காக செயல்படுத்தப்பட்டன. பிரேஸிலிய
மற்றும் பன்னாட்டு முதலாளிகளை பொது ஆதாரவளங்களை குறிப்பிடத்தக்க அளவில் கொள்ளை யிடஅனுமதித்ததால்
அரசு பலவீனப்பட்டது. நாடு எந்தவித நிபந்தனையு
மின்றி அமெரிக்க ஐக்கிய நாடுகளோடு எல்லா பன்னாட்டு விவகாரங்களிலும், மன்றங்களிலும்,
அமைப்புக்களிலும் மீண்டும் இணைந்தது. மேலும், வெனின்ஸுலா மற்றும் பொலீவிய புரட்சிகர
செயல்பாடுகளுக்கு எதிராக பலநாடுகளிலும் பிரச்சார இயக்கங்களிலும் அப்பட்டமாக ஈடுபட்டது.
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஐந்தாண்டுகளுக்குப் பிறகும்,
போல்ஸனோரோவின் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகும் பிரேஸில் ஒரு சுதந்திரமான
குடியரசாக7 அதன் வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார, சமூக, அரசியல், சூழ்நிலையியல்
மற்றும் சுகாதார இடர்பாட்டுக்குள் மூழ்கியது. சுகாதார நெருக்கடியில் கூட்டாட்சி அரசின்
தவறான நிர்வாகம்- உலக அளவில் நோய்த்தொற்று குறையத்துவங்கியபோது, நாட்டை - இந்தியாவைப்போலவே
– 2021 மார்ச்=ஏப்ரலில் நோய்த்தொற்று பரவலின் மையப்புள்ளியாக ஆக்கிவிட்டது.இந்தநெருக்கடிகளின்
ஒருங்கிணைப்பு மக்களின் வாழ்நிலையை மிகமோசமாக்கிய ஆழ்ந்ததாக்கத்துக்குள்ளாக்கியது.
மேலும் பசியும், பஞ்சமும் அதேபோல உருமாறிய கொரோனா நோய்க்கிருமிகளும் பெருகுவதற்கும்,
சுகாதார அமைப்புமுறை சீரழிவதற்கும் வழிவகுத்தது.8
போல்ஸனோரோ
நிர்வாகம் வேண்டுமென்றே நடைமுறைப்படுத்திய இனப்படுகொலைக் கொள்கைகளால் நோய்த்தொற்றுப்பரவல்
மேலும் மோச மாவது மட்டுமே நிகழ்ந்தது. அரசு இன்னும் கொரோனா நுண்கிருமிகளை எதிர்த்துப்போராடவும், கட்டுப்படுத்தவும்
நடவடிக்கைகளை எடுக்காததால், அவை எந்தவிதகவனிப்பும் இல்லாதமக்களின் மரணங்களின் எண்ணிக்கை
களை மிகஅதிவேகமாக அதிகப்படுத்தியது. இது,தாராளவாத வலதுசாரிகள், அரசுக்கு அளித்துவந்த
ஆதரவை9 மெதுவாகவும், படிப்படியாகவும் விலக்கிக்கொள்ள வழிவகுத்தது.
மிகுந்த அதிகாரத்தனமான பேச்சுக்களாலும்,
நோய்த்தொற்று பரவலுடன் போராட எடுத்துக்கொண்ட வழிமுறைகளாலும் அங்கே சிலஅசௌகரியங்கள்
இருந்தபோதும், வலதுசாரிகள் தொழிலாளர் களையும்,
சமூக உரிமைகளையும் தாக்கும் தீவிரமான புதியதாராளமய திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்துவந்தார்கள்.
’தீவிரவலதுசாரிகளுக்கும், மரபார்ந்த(தாராள) வலதுசாரிகளுக்கும்
இடையில் அரசியல்முரண்பாட்டின்நோய்த்தாக்கம்,பிரேஸிலில்நாம்பெற்ற வரையறுக்கப் பட்ட ஜனநாயகத்தைக்
கட்டமைக்கும் அரசு நிறுவனத்தின் கட்டுப்பாடு பற்றிய உடன்பாடின்மையாகவும், முரண்பாடாகவும்
உருப்பெற்றது.’ என ஜாண்ட்ரியா (CUT)விளக்குகிறார். இது மிகவும் குறிப்பாக STF - உச்சநீதிமன்றம்
மற்றும் நீதி அமைப்புமுறை மற்றும் தேசீயப்பேராயம் ஆகியவற்றுடனான பிரச்சனையாக இருக்கிறது
புதியதாராளமய திட்டத்தைச்சுற்றி அமைந்துள்ள இந்த ஒற்றுமை போல்ஸனோரோவின் இனப்படுகொலை
நிர்வாகத்தை எதிர்த்தெறிவதற்கான தூண்களில் ஒன்று.. இராணுவமும், எவாஞ்சலிக்கல் தேவாலயங்க்ளுக்குள்
பெருமளவுக்கு கட்டமைக்கப்பட்ட மக்கள்ஆதரவு என்ற போல்ஸனோரோவின் அடித்தளமும் போல்ஸனோரோவின்
மற்ற இரு ஆதரவுத்தூண்களாகும்.’ என ஜாண்ட்ரியா(CUT) விளக்குகிறார் ;பெரும்பாலான வலதுசாரிகளுக்கு
அவர்களுக் கான ஒருமுடிவை போல்ஸனோரோ பிரதிநிதித்துவப்படுதாவிட்டாலும், தீவிர புதியதாராளமயக்கொள்கைகளை நிறைவேற்ற ஒரு வழிமுறையாக
இருந்துவந்தார்.’
உள்நாட்டு முதலாளித்துவத்தின் பெரியபகுதியின் ஆதரவோடு
கூடவே மற்ற நான்கு போல்ஸனோரோவின் ஆதரவுத்தூண்களும் இருப்பதில் வாலெரியோ ஆர்கெரி கவனத்தை
ஈர்க்கிறார்:
1. சுகாதார ஒழுங்கின்மைக்கிடையிலும்கூட10,
நம்பமுடியாத அளவுக்கு பிரேஸிலின் மக்கள்தொகையில் தோராயமாக மூன்றில் ஒருபங்கின் ஆதரவு
2. உழைக்கும் வர்க்கத்தால் உணரப்பட்ட தொடர்தோல்விகளால்
ஏற்பட்ட நம்பிக்கை இழப்பின் விளைவுகள்
3. போல்ஸனோரோவுக்கு மாற்றாக உள்ளவர்களின் பலவீனம்,
மற்றும்
4. உழைக்கும் வர்க்கத்தின் அணிதிரட்டும் ஆற்றலின்மீது
வரையறைகளை திணிக்கும் நோய்த்தொற்றின் பரவல்.
தோராயமாகப்
பேசினால், தற்போதைய பிரேஸிலின் அரசியல் அரங்கம்
நான்கு அகன்றதுறைகளால் தொகுக்கப்பட்டது: தீவிரவலது, தாராளவலது, மத்திய-இடது மற்றும்
இடது. ’இந்தத்துறைகளில் எது இன்னும் ஒரு(அரசியல்) திட்டத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது?.
அது மிகச்சரியாக மத்திய-இடது மற்றும் தாராளவலது. ஜனநாயகத்தின் ஆபத்தானகட்டம் புறக்கோடிகளை
வலுப்படுத்தியுள்ளது’ என ஜூலியனோ மெடெய்ரோஸ் (PSOL) எங்களிடம் கூறினார்.
இதற்கிடையில் கெல்லி மாஃபோர்ட் ‘தாராள வலது அதன்
செல்வாக்கை இழந்துவிட்டநிலையில், இடதுக்கும் தீவிர வலதுக்கும் இடையே முதன்மையான முரண்பாடு
வலுப்பெற்றுக்கொண்டிருக்கிறது. இப்போது தாராளவலதுக்கு மிகப்பெரிய பிரச்சனையே, மக்களிடம்
ஈடுபாடுள்ள ஒரு அரசியல் தலைவரை கண்டுபிடிப்பதுதான்.’ என்று நம்புகிறார். இருந்தபோதிலும்
அவர் குறிப்பிடுகிறார்: ‘ தீவிரவலதும், தாராளவலதும் முதலாளித்துவ வர்க்கம் என்ற அதே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான் என்பதை எப்போதும்
நினைவில்கொண்டிருப்பது மிகவும் முக்கியம்’ இந்த வர்க்கத்துக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தாலும்,
உறுதியாக எதிர்க்கும் மூலதனத்தாலும் நமக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டபூர்வத்தன்மையுடன்
நாம் கட்டாயம் இயங்கவேண்டும்.’
#
# # # #
, நோய்த்தொற்று பரவலின் துவக்கத்தில், கோவிட் 19
ஐ எதிர்த்துப்போராடுவதற்கான மிகச்சிறந்த நிலைமைகளைக் கொண்டிருந்த இலத்தீன் அமெரிக்க
நாடாக பிரேஸில் இருந்தமைக்கு தேசிய சுகாதார கட்டமைப்புக்கு –National Healthcare ystem
(SUS) நன்றி.. இருந்தபோதிலும், மிக்க்ஸிகன் பல்கலைக்கழகமும், கெட்யூலியோ வர்காஸ் ஃபவுண்டேஷனும்(FGV)
நடத்திய ஆய்வுகள் அரசு வேண்டுமென்றே சுகாதார அமைப்புமுறையை புறக்கணித்ததைக் காட்டுகின்றன.
Matheus Migul (@poesianesestrelas)/ Design
Ativista /2020
பரந்தமுன்னணியா?
அல்லது இடதுமுன்னணியா?