ஏ.ஜி.நூரானி
உள்களும் வெளிகளும் : மோடி மாறவேஇல்லை
இந்தியா ‘இந்து தலிபானால்’ ஆளப்படுகிறது?
தமிழில்: செ.நடேசன்
ஓ தெய்வங்களே,
இது வியப்பில்
ஆழ்த்துகிறது என்னை.
நம்பமுடியாத
எரிச்சலூட்டுபவனாக
இத்தகைய
ஒருமனிதனா?
ஆக்குங்கள் இந்தப்பெருமித உலகை
புல்மரங்களை
மட்டுமே
தாங்குவதாக.
-ஷேகஸ்பியர், ஜூலியஸ் சீஸர்
பிரதமர் நரேந்திரமோடி அறநெறிபிறழ்ந்த சில்லறைப்பேர்வழிகளுக்குக்
கடிவாளமிடுவார் என எதிர்பார்ப்பது வீண்முயற்சி. ஏனெனில் அவர்கள்தான் அவரது கொள்கைத்தொகுப்பின்
மையமாக அமைந்துள்ளார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த அவரால் முடியாது: அதை அவர்
விரும்பவும் மாட்டார்.
2014 மே
26ல் இந்தியாவின் பிரதமராகிய ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் இந்தியமக்கள் நரேந்திரதாஸ்
தாமோதரதாஸ் மோடியின் குணாம்சக்குறைபாடுகளைக் கண்டறியத் துவங்கி உள்ளார்கள்.அவரும்
ஜவஹர்லால் நேரு ஒருகாலத்தில் வீற்றிருந்த இருக்கையில் அமர தான் தகுதியற்றவர்
என்பதை நிரூபித்துவிட்டார்.
நேரு நாட்டை ஒன்றுபடுத்தினார்: மோடி
பிளவுவாத்த்தின் முழுமையானசின்னம். அவர் பிரதமராவதற்கு முன்பே தனது வண்ணங்களை
அனைவரும் பார்க்கும்வகையில் தனது பாய்மரத்தில் பூசிக்கொண்டார். அதை நிகழ்த்தியமுறை
திகைப்படையவைக்கும்.”இந்த தேசமும் இந்துக்களும்
ஒன்று. இந்துக்கள் வளர்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளர்ச்சி அடையும். இந்துக்களின்
ஒற்றுமை இந்தநாட்டை வலிமைப்படுத்தும்.” -இதை அவர் ராஷ்ட்ரிய சுயம்சேவக்
சங்-ன்தலைவர் மோகன்பகவத் முன்னிலையில் மங்களூரில் ஆர்.எஸ்.எஸ். ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட
ஜம்சோட்சவாவில்கூறினார்.”குஜராத்தில் ஒருசாதாரண
ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவக் (மோடி தன்னைக்குறிப்பிடுகிறார்) குஜராத்தை இந்தநாட்டின்
முதல்மாநிலமாக்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்.” அவர் மேலும் கூறினார்:”அவர்
தனதுமுழுவாழ்வையும் இந்து சமாஜத்துக்காகவே செலவிட்டதாக” (ஆர்கனைசர் 2007 பிப்ரவரி 11)
குஜராத்தில்அவரதுபதவிக்கான
முன்னுரிமை மூடப்பட்டபோது, ராய்ட்டரின் ஒரு நேர்காணலில் “நீங்கள் 2002ல்
சரியானதைத்தான் செய்தீர்கள் என்று நினைக்கிறீர்களா?” என்று கேடகப்பட்டார்.(இனப்படுகொலைகளில்) அவர் பதிலளித்தார்:” நிச்சயமாக”. அவர் மேலும்கேடகப்பட்டார்: “மக்கள் உண்மையான மோடி யார்
என்று அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். இந்துதேசியத் தலைவரா? அல்லது வணிகத்துக்கு
ஆதரவான முதல்வரா?”. மோடி மிகவும் விளக்கமாகப்
பதிலளித்தார்: “ நான் ஒருதேசியவாதி: நான் தேசப்பற்று உள்ளவன். தவறு ஏதும் இல்லை.
நான் ஒரு பிறவி இந்து. தவறு இல்லை. ஆகவே நான் இந்துதேசியவாதி. இதனால் நீங்கள் கூறலாம், நான்
ஒருஇந்துதேசியவாதி என்று. ஏனெனில் நான் ஒருபிறவி இந்து.” (இந்தியன் எக்ஸ்பிரஸ் 2013 ஜூலை 3)
யார்தனதுநம்பிக்கைகளை மோடியின்மீதுவைத்து அவரை
“வழங்குபவர்” என்று கூறினார்களோ அவர்களால் மோடி
வாரிஇறைத்த உறுதிமொழிகளை அவ்வாறு வழங்குவதற்கான சிறிய அடையாளத்தைக்கூடக்
காணமுடியவில்லை. அவரால் உறுதியளிக்கப்பட்ட ‘அச்சே தின்’ (நல்ல நாள்’) ஏமாற்றும் கானல்நீராக
மாறிவிட்டது. ‘பூரே தின்’ (கெட்ட நாள்) இப்போது நம்மீது
மிகுந்த ஆற்றலோடு மதவாத அறிவிப்புக்களாகவும், குற்றச்சாட்டுக்களாகவும், திட்டமிட்ட
வெளியேற்றுதல்களாகவும், கலாச்சார மற்றும் கல்வி நிறுவனங்கள்மீது பாய்கிறது. கொலை
செய்தல், கூட்டுக்கொலை போன்றவை இந்தநாட்டின் தலைமை நிர்வாகியால் கண்டனம் ஏதும்
இன்றி நடக்கின்றன. அர்த்தமுள்ள அவரது தொடர்ந்த மௌனத்தை சாதகமான ஓர் அடையாள
சமிக்ஞை என்று சிலர்
புரிந்துகொண்டுள்ளார்கள். இந்த சில்லறைப்பேர்வழிகளை, வெறுப்பை விதைப்பவர்களை மோடி
கட்டுப்படுத்துவார்: உரத்துக்கண்டிப்பார்: எந்தத்தகுதியுமின்றிக் கொலைகளைச்
செய்பவர்களை, சகிப்புத்தனமை இல்லாதவர்களை தடுப்பார் என்று அவரது புகழ்பாடிகள்
விரக்தியுடன் வேண்டி நிற்கிறார்கள். ஆனால் மோடி அசையவேயில்லை. ஏனெனில்
இந்தப்பேர்வழிகள்தான் அவரது கொள்கைத்தொகுப்பின் மையமாக, முத்கெலும்பாக
இருப்பவர்கள். முழுவதுமாக ஆய்வுசெய்யப்பட்ட ஆவணப்பதிவுகள் இன்று அவரது தலைக்கு மேல்
என்ன உள்ளது என்ற ஏராளமானஎச்சரிக்கைகளைத் தருகின்றன.
அமெரிக்கத்தூதரின் கணிப்பு
இந்தநாட்டுக்கு தனது பிரதமரைத்
துல்லியமாக மதிப்பிடுவது மிகவும் முக்கியமானது. குஜராத்தில் அவரது நாட்களில்
பலரைவெளியேற்றிய முதல்வர் மோடியிலிருந்து இன்றைய பிரதமர் மோடி ஒருதுளியும் மாறவே
இல்லை. அவரது கண்காணிப்பில் நடந்த கொடூரப் படுகொலைகள் மிகவும் மோசமானவை.
இப்போதும்கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதில் அவரது இரக்கமற்றநடத்தை
இன்றும் நீடிக்கிறது. இந்தமனிதரைப்பற்றிய அதிர்ச்சி தரத்தக்க ஒருமதிப்பீட்டைப்
பத்தாண்டுகளுக்கு முன்பே ஒருதூதர் செய்திருந்தார். பத்திரிக்கைப் பத்தி எழுத்தாளர்கள்.
தொலைக்காட்சி நங்கூரங்கள், வணிக நிறுவன்ங்கள் போன்றோரின் கட்டுப்பாடற்ற,
உணர்ச்சியூட்டும் கைதட்டல்களிலிருந்து விலகி நின்று, அறிவார்ந்தமுறையில், ஆழமான
பார்வைகொண்ட அவரது வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்: “ மோடி தன்னை ஊழலற்றவராக,
திறமைமிக்க நிர்வாகியாக, ஆழ்ந்த வணிகக்கலாச்சாரம் கொண்டவராக, வியாபாரிகளுக்கு
உகந்தவராக, முட்டாள்தனமான சட்டம்-ஒழுங்கு அரசியல்வாதி அல்லாதவராக, இந்தியப்பெரும்பான்மையினரின்
நலன்காப்பவராகத் தன்னை வெற்றிகரமாக அடையாளப்படுத்திக்கொண்டார். பா.ஜ.க.விலுள்ள
மோடியின் ஆதரவாளர்கள் இந்தசாதகமான அம்சங்கள்மூலம் மோடி நாடுமுழுவதுமுள்ள
வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பார் என்று தங்கள் கட்சித்தலைவர்களை ஒப்புக்கொள்ளவைக்கமுடியும்
என்று நம்புகிறார்கள். சிலவாக்காளர்கள் மோடியின்பிறதகுதிகளைப்
பாராட்டக்கற்றுக்கொள்ளும்போது,இரத்தம்சிந்திய 2002ல் மோடியின் பங்குபற்றி மன்னித்து
மறந்துவிடுவார்கள் என்று நம்புகிறார்கள்.”
“பொதுஇடங்களில் தோன்றுவதில் மோடி கவர்ச்சிகரமானவராகவும், விரும்பத்தக்கவராகவும்
உள்ளார். எப்படிஇருந்தபோதிலும், எல்லாக்கணக்குகளின்படியும் மோடி பிறருடைய கருத்துக்
களுக்கு மதிப்பளிக்காதவர், ஆர்வம்காட்டாத குறுகிய மனப்பான்மை கொண்டவர். ஒருசிறிய
ஆலோசனைக்குழுவை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தும் யாரையும் நம்பாத ஒருமனிதர்.
இந்தச்சிறிய உள்வட்டம் அமைச்சர்களுக்கும், கட்சிக்கும், முதலமைச்சருக்கும்
இடையிலான மோதல்களைக் குறைக்கும் அமைப்பாகச் செயல்பட்டது. அவரது ஆட்சி எல்லாரையும்
உள்ளடக்கியதாக, கருத்தொற்றுமை கொண்ட்தாக இருக்கவில்லை: அச்சஉணர்வை ஊட்டுதல்,
மிரட்டித் தனது விருப்பத்தை ஏற்கவைத்தல் மூலமாக நடைபெற்றது. முரட்டுத்தனமாக, தான்
தான் உயர்ந்தவர்என்று நடந்துகொள்ளும்போக்கு உயர்நிலையில் உள்ள கட்சி மற்றும்அரசு
அலுவலர்களிடமும் செல்லுபடியாக்கப்பட்டது. அவர் எல்லா அதிகாரங்களையும் தனது கைகளில்
குவித்துக்கொண்டார். முடிவெடுக்கும்போது அடிக்கடி தனது அமைச்சர்களை உறை நிலையில்
வைத்திருந்தார். அது அந்த அமைச்சர்களின் துறைகளைப் பாதித்தன.”
-இதை எழுதியவர் மும்பையில் உள்ள அமெரிக்க
கவுன்சில்ஜெனரல் மைக்கேல் எஸ்.ஓவன். இவரது வரம்புக்குள் குஜராத் இருந்தது அவரது கருத்துக்கள் கவனிக்கத்தக்க, புதுமையான
2850 வார்த்தைகள்கொண்ட 2006 நவம்பர் 2 நாளிட்ட கம்பிவடச் செய்தியாக (கேபிள்)வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதுஅரசுத்துறைக்கு அனுப்ப்படுவதற்குமுன் புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத்தூதரகத்தில்
தூதரால் ஏற்றுக்கொள்ளப்படட்து. அந்த
அறிக்கை அவ்வளவு கவனமாக தூதராலும் அவரது சகஅலுவலர்களாலும் ஆழ்ந்துபரிசீலிக்கப்பட்டது சுரேஷ் நம்பத் பொருத்தமாகக் குறிப்பிடுகிறார், ”இந்தப்பகுதி அரசியலில் எம்.ஏ.,
படிப்புக்கான கோட்பாடுகளின் மையப்பகுதியாக அமைகிறது” ”மோடியின் பி1/பி2 விசாவுக்கான
2005ன் தடை விரைவில் நீக்கப்படவேண்டும்: அப்படியின்றி மோடி தேசியஅளவில்
முக்கியத்துவம்பெறும்போது நீக்கப்பட்டால் அது அமெரிக்காவின் சந்தர்ப்பவாதம் என்று
பழிக்கப்படும்” என்று ஓவன் கவலைப்பட்டார். ”மோடியுடன் நேரடித்தொடர்புகளை மேற்கொண்டால்,
அமெரிக்கா, ‘குஜராத்தில் மனித உரிமைமீறல்கள் பற்றியும், மதசுதந்திரம் பற்றியும்
தெளிவான செய்திகளை அவருக்குத் தரமுடியும்” இந்தக்கம்பிவடச்செய்தி
விக்கிலீக்ஸ்-ல் இடம்பெற்று, ‘தி இந்து’வில்
20011 மார்ச் 22ல் வெளியிடப்பட்டது.
மோடி பிரதமராக வந்தபின் ”குஜராத் மாடல்” என்ற தனது கனவைத் தேசியஅளவில் துல்லியமாக நடைமுறைப்படுத்த
முயன்றபோது இந்தக்கம்பிவடச்செய்தி மீண்டும்மிகநன்றாக விரைவில் எழுதப்பட்டது. மோடி
மத்திய அமைச்சரவைமுறையை குஜராத்தில் போலவே வலுவிழக்கச்செய்தார். அமைச்சர்களின்
தரம் குறைக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் மேலுக்கு வந்தார்கள். அமித்ஷா பா.ஜ.க.வின்
தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியின்பிடி முழுவதும் கைக்குள் வந்தது. குஜராத்தில்
நடந்ததுபோலவே கட்சிக்குள் இருந்த எதிராளிகள் ஓரம்கட்டப் பட்டார்கள். (மேலும்
விளக்கமாக அறிய “ஜனநாயகத்தை மோடிமயமாக்குதல்” என்ற ஏ.ஜி. நூரணியின்கட்டுரை ‘ஃப்ரண்ட்லைன்’ 2015 ஜூலை 11 இதழ்)
முன்னாள் கப்பல்படைத்தளபதி அருண்பிரகாஷ் 2015
நவம்பர் 12ல் குறிப்பிட்டார்: “ கடந்த
ஆறுமாதங்களாக மக்கள்பணி-இராணுவப்பணி உறவுகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சீனாவோ, பாகிஸ்தானோ எதையாவதுசெய்தால் நாங்கள் எதையும் தொடங்கும் நிலையிலோ, அல்லது
எதிர்க்கும் நிலையிலோ இல்லை.”(ஜோஸி ஜோசப்: ‘தி இந்து’ 2015 நவம்பர் 13) “அயலுறவுச் செயலாளர்களுக்கிடையேயான
பேச்சுவார்த்தைகளையும், அதுபோலவே தேசியப்பாதுகாப்பு ஆலோசகர்களின்
பேச்சுவார்த்தைகளையும் மோடி கிடப்பில்வைத்ததால் பாகிஸ்தானுடனான உறவு மிகவும்
தாழ்வுநிலையை அடைந்துவிட்டது. நேபாளம்
சீனாவின் உதவியைநாடத் தள்ளப்பட்டுவிட்டது.. ஏனெனில் மோடி அந்தநாட்டுடனான உறவுகளை
எதிர்பாராதவகையில் ஆபத்தானதாக்கிவிட்டார்.” பிரதமரின் 2014 மே பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தெற்குஆசிய அணடைநாடுகளுக்கு
விடுத்த அழைப்பு, பின்நோக்குப்பார்வையில் ‘ஐந்தாம் ஜார்ஜ் தர்பார்’போலஉள்நாட்டுப்பிரமுகர்களும் ஒன்றாகக்கொண்டுவரப்பட்டு
“பேர்ரசரைப்” பாராட்டுவது போல இருந்தது. இந்தியாவின்
நீண்டகால நண்பரான கனக்மணி தீக்ஷித் விமர்சனங்கள் இவையெல்லாவற்றையும் கூறுகின்றன.
அவர் மேலும் கூறுகிறார்: “....இந்தியாவின் அயலுறவுக்கொள்கை நரேந்திரமோடியின்
தனிப்பட்டபொதுஉறவு ‘சிலுவைப்போராக’மோடியால் வளர்க்கப்பட்டதாகத்தெரிகிறது.....இந்தியாவின்
அண்டைநாடான, மிகநீண்டகாலமாக நட்புநாடாக இருந்தநாட்டுக்குத் தடைவிதிப்பதில் தவறு
இல்லை என்று அவர் நினைக்கிறார். –உதவியற்ற நேபாளம். (தி இந்து 2015 நவம்பர் 18)
படிப்படியாகத் தேய்ந்து மறையும்கொள்கை
நடைமுறையில் உள்ளது. குஜராத் ‘வெற்றி’யின் பாடங்களை
அயலுறவுக்கொள்கைகளைக் கையாள்வதற்குப் பயன்படுத்தவே கூடாது. குறிப்பாக இந்த
அயலுறவுத்தளத்தில் எந்தவிதமான அனுபவமும் இல்லாத மோடியால், ஒருவலுவான கொள்கைஇல்லாததை
வெற்றுமுழக்கங்கள், ’எல்லார்க்கும்பொது’
என்று அறிவிப்புக்கள்மூலம் மூடிமறைக்கமுடியாது.
லண்டனிலிருந்து வந்த செய்தி
மிகவும்பொருத்தமான இன்னொருபாடம்
குஜராத்திலிருந்து வருகிறது. அதைக்கற்றுக்கொள்ள மோடி மறுத்துவருகிறார் கடந்த மாதம்
லண்டனில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர் கள் மோடிக்கு ஒருசெய்தியைத் தந்தார்கள். “2002ல்
குஜராத்படுகொலைகளில் அவரது பங்கை மறந்துவிடவோ, மன்னிக்கவோ இல்லை” (மேலும் விளக்கங்களுக்கு ஏ.ஜி. நூரணி
கட்டுரை: ’மோடியின் கடமைப்பாடு’ஃப்ரண்ட்லைன் 2014 ஜூன் 25) அவரது இரண்டு
நோக்கங்கள் செயலாற்றல் மிக்கவை. ஒன்று:அங்கு மறுவாழ்வுப்பணிகள் அதன்பெயருக்கு
ஏற்றவகையில் ஏதும் நடக்கவில்லை இரண்டு:. புதுடெல்லியில்உள்ள இங்கிலாந்தின்
உயர்நிலைக்குழுவின் முதன்மைச்செயலாளர் பீட்டர் ஹாலண்ட் கண்டறிந்தது: “அந்த
வன்முறைகள் திட்டமிடப்பட்ட ஒன்று..... மாநில அரசின் ஆதரவுடன்” இதன்நோக்கம் ’இந்து பகுதிகளிலிருந்து’ முஸ்லீம்களை வெளியேற்றுவதே.
அந்தஅறிக்கை மேலும்கூறுகிறது: “இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நல்லுறவை
ஏற்படுத்துவது இந்த முதலமைச்சர் (மோடி) அதிகாரத்திலிருக்கும்வரை சாத்தியமில்லை.” அதனால்தான் அங்கு மறுவாழ்வுப்பணிகள் நடக்கவில்லை. இதை டாக்டர்,
சஞ்சீவினி பாடிகர் லோக்ஹண்டே தனது “மதவெறி வன்முறைகள்- கட்டாயப்படுத்தப்பட்ட
குடிபெயர்வுகளும், அரசும்’ என்றநூலில் (கேம்பிரிட்ஜ்
யுனிவர்சிடி பிரஸ் 2015) நிலைநாட்டி னார். அவரது கவனம் 2002 நிகழ்வுகளுக்குப்
பிந்தையவை பற்றியதாக இருந்தது. ஐரோப்பிய யூனியனின் வரைவுஅறிக்கை தலையில்
ஆணிஅடிப்பதைப்போல “குஜராத்தில் நடந்த கொன்று குவித்தல் நடவடிக்கை பல்வேறு
இனமக்களைத் தனித்தனியாகப் பிரித்து வாழச்செய்த ஒருவகையான தென்ஆப்பிரிக்க அரசின்
கொள்கை ஆகும்” என்றது.
இந்தப்படுகொலைகள் நடந்துமுடிந்த வெறும்
ஆறுமாதகாலத்துக்குள் 2002 செப்டம்பர் 9ல் பெச்சாரண்-ல் மோடிகூறினார்: “குஜராத்தின்
சுயமரியாதைக்கு அச்சுறுத்தலாக இருந்த எல்லாத் தீயசக்திகளையும் முத்திரைபதித்து
அவர்களை நாம் அழிக்கமுடிவுசெய்தோம்....
எங்கள்மீது இங்கே குற்றச்சாட்டுக்கள். நாங்கள் இந்துத்துவாவாதிகளாம்! ஓ, சகோதர்ர்களே,
பெச்சராஜி கோவிலின் வளர்ச்சிக்காக நமதுஅரசு ரூ.8 கோடியை ஒதுக்கியது.iஇது நாங்கள் செய்தகுற்றமா? அவர்கள்
கூறுகிறார்கள், ’இந்த நரேந்திரபாய் நர்மதா தண்ணீரை
சபர்மதி ஆற்றுக்குக் கொண்டுவந்தார்: இந்தமனிதர் மிகவும்புத்திசாலியாக
சரவணமாதத்தில் (இந்துக்களின் புனித மாதம்) தண்ணீரைக் கொண்டுவந்தார்’ என்று. இங்கே
நாங்கள்(பா.ஜ.க.என்றபெருமை) இருப்பதால தண்ணீரைச் சரவணமாதத்தில் கொண்டுவந்தோம்.
நீங்கள் அங்கே இருந்தால் அதை ரம்தான்மாதத்தில் (முஸ்லீம்களின்புனிதமாதம்) கொண்டுவரலாம்....என்ன
சகோதரர்களே நாம் நிவாரணமுகாம்களை நட்த்தலாமா? நான் இங்கு குழந்தைகளை உற்பத்தி
செய்யும் மையங்களை (இந்த நிவாரணமுகாம்களில்) ஆரம்பிக்கவேண்டுமா? நாம் குடும்பக்
கட்டுப்பாடு திட்டத்தை மிகத்திட்டவட்டமாக நடைமுறைப்படுத்தி வளர்ச்சியை அடைய
விரும்புகிறோம். நாம் ஐந்துபேர். நம்முடையவர்களோ 25பேர்.(அமே பாஞ்ச். அமாரா
பச்சிஸ் –முஸ்லீம்களின் பலதாரத் திருமணங்களைக் குறிப்பிடுகிறார்) இத்தகைய வளர்ச்சி
யாருடைய பெயரால் தொடர்கிறது? யாருடைய தயக்கம் நமது பாதையில் குறுக்கிடுகிறது? எந்த
மதப்பிரிவு நமது வழியில் வருகிறது?”
“ நாம்
கட்ச் (மாவட்ட) மதரஸாக்களிலிருந்து உன்னிப்பாகக் கவனித்துவருகிறோம்.... நாம்
குஜராத்தில் மரணவியாபாரிகளைச் சுதந்திரமாகச்செயல்பட அனுமதிக்கமுடியாது. .குஜராத்தை
அழிக்கவும், அப்பாவிகளுக்குத் தீங்கு விளைவிக்கவும் இந்தச்சதிகாரர்களை அவர்களது
திட்டங்களைச் செயல்படுத்தவும் நான் அனுமதிக்கமாட்டேன். இந்தஇத்தாலியின் மகள்’ (சோனியா) நாம் மகாத்மாகாந்தியின், சர்தார்படேலின் புனிதபூமியை
அவமதித்துவிட்டோம் என்று வெளிப்படையாகவே சான்றிதழை நம்க்குத் தருகிறார். இந்த
விஷயத்தில் நான் உங்களுடைய பதிலை வேண்டுகிறேன். ... நீங்கள் மரணவியாபாரிகளைத்
தடுத்துநிறுத்த வேண்டுமானால் நாம் சர்தார் படேலின் பாதையைப் பின்பற்றவேண்டும்.
நமது இலட்சியம் சர்தார்படேலின் பாதையைப் பின்பற்றுவதுதான்.”...”நாம் ஐந்துகோடி குஜராத்தியர்களின் சுயமரியாதையையும்,
ஒழுக்கநெறிகளையும் உயர்த்திப்பிடித்தால் இந்த அலிகள். மலிகள், ஜமாலிகள்
(முஸ்லீம்களைக் குறிப்பிடுகிறார்) நமக்கு எந்தவித தீமைகளையும் செய்வதில் வெற்றிபற
முடியாது.” முரட்டுத் தனமான, பிறரைப் பழிக்கிற,
மதவெறியைத் தூண்டும் பகட்டான, வெறியூட்டும் பேச்சுக்கள் நரேந்திரமோடியின்
தனித்துவமாக 2014லிலும், அண்மையில் பீகாரிலும் வெளிப்பட்டன.
குஜராத்தில் நிவாரணமுகாம்கள் முன்கூட்டியே
2002 மே மாத்த்தில் மூடப்பட்டன. தன்மீதான விமர்சனங்களுக்கு தாக்குதல் தொடுப்பதையே
அவர் தொடர்ந்துமேற்கொண்டார். ‘கௌரவ யாத்திரை’ என்று அழைக்கப்பட்ட ஒருபிரச்சாரத்தை அவர் துவக்கினார். அந்த
கௌரவயாத்திரையின் சாலையோரநிகழ்வுகளில் அவர் கிராமமக்களிடம் ‘ஒருரயில்வண்டியில் 60
இராமபக்தர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டீர்களா? என்று
கேட்டார். கூட்ட்த்தினருடன் சேர்ந்துபேசும் தனது மகத்தான ஆற்றலைப் பயன்படுத்தி
அவர்களை இது போன்ற கேள்விகளுக்குப் பதில்கூறத் தூண்டினார்.
நரேந்திரமோடி: உங்களில்
யாராவது ஒருவர் எவரையாவது கத்தியால் குத்தினீர்களா?
கூட்ட்த்தினர் பதில்: இல்லை.
நரேந்திரமோடி: உங்களில்
யாராவது ஒருவர் எவருடைய தலையையாவது துண்டித்தீர்களா?
கூட்ட்த்தினர் பதில்: இல்லை.
நரேந்திரமோடி: உங்களில்
யாராவது ஒருவர் எந்த ஒரு சகோதரி/ மகளின் பெருமையைக்
குலைத்தீர்களா? (கற்பழித்தீர்களா?)
கூட்ட்த்தினர் பதில்: இல்லை.
நரேந்திரமோடி: ” இருந்தபோதிலும் குஜராத்தின் எதிரிகள்
கிராமத்திலிருந்து கிராம்மாக அங்கே தீ பற்றியெரிகிறது: கிராமத்திலிருந்து
கிராம்மாக மக்கள் கொல்லப்படுகிறார்கள்: கிராமத்திலிருந்து கிராம்மாக மக்கள் தலைகள்
உருள்கின்றன என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் குஜராத்தை
அவமதித்துவிட்டார்கள். அவர்கள் எல்லாருக்கும் பதிலளிக்கவே நான் இந்த
கௌரவயாத்திரையை மேற்கொண்டுள்ளேன்.”
யாத்திரையில் இன்னொரு பேச்சில் அவர் சொன்னார்:
“ நான் இந்த கௌரவயாத்திரையில் ஈடுபட்டுள்ளபோது
எனது காங்கிரஸ் நண்பர்கள் ‘என்ன கௌரவம்?’ என்கிறார்கள்.
“அவர்கள் சொல்கிறார்கள், நமது குஜராத்தில்
கலக்க்காரர்கள் இருக்கிறார்கள் என்று. நமது குஜராத்தில் மக்களிடம் கத்தி இருக்கிறது:
நமது குஜராத்தில் மக்கள் கொலைகாரர்கள் என்று. இது குஜராத்தின் பெருமையை
முடித்துக்கட்டும் ஒரு உறுதியான முயற்சி. எனவே அதை எதிர்த்துப்போராட பா.ஜ.க. உறுதிகொண்டுள்ளது.
அவர்கள் இலட்சக்கணக்கானமுறை குஜராத்துக்குத் தீங்கு விளைவிக்கலாம். ஆனால் நான்
குஜராத்தின் உண்மைநிலையை வெளிக் கொண்டுவர தைரியமாக முடிவெடுத்துவிட்டேன்” (லோக்ஹாந்தே-பக்கம் 162)
தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம் பத்திரிக்கையாளர்களிடம்
2012ஜூலையில் ஒருநேர்காணலில் மோடி கேட்டார்: “இப்போது
மன்னிப்புக் கேட்பதில் என்ன இருக்கிறது? அந்த நேரத்தில் என்ன நடந்ததோ அதற்கு நான்
முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன். வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்தேன்.
2002ல் கலவரங்களுக்குப்பின்னர் நான் என்ன சொன்னேன் என்பதைத்தயவுசெய்து
பரிசோதித்துப்பாருங்கள். நீங்கள்(ஊடகங்கள்)எனக்குக் கடந்த பத்து ஆண்டுகளாக அநீதி
இழைத்துவிட்டீர்கள் என்று இப்போது எழுதவேண்டும். நீங்கள் மோடியிடம் மன்னிப்புக்
கேட்கவேண்டும்”
ஆனால்,
குஜராத் படுகொலைகளை மோடியாலோ அல்லது அவரது புகழ்பாடிகளாலோ மறைக்கமுடியாது. களத்தில்
உள்ள நிலவரங்கள் அவை இன்னும் தொடர்கின்றன என்பதை அங்குஎழும் கூக்குரல்கள்
வெளிப்படுத்துகின்றன. இரண்டு கேள்விகள் பெருந்தன்மையோடு எதிர்கொள்ளப்படவேண்டும்.
முதலாவதாக, ‘இத்தகைய பின்னணிகொண்ட ஒருமனிதனிடம் அவரது விசுவாசிகள் ஏன் கண்களை
மூடிக்கொள்கிறார்கள்?’ இரண்டாவதாக, ’இத்தகைய பெரும்சுமைகளைக்கொண்ட ஒருமனிதனால் மதசார்பற்ற நாட்டின்
பிரதமராகப் பணியாற்ற முடியுமா?’
இங்கேதான் ஒருமனிதனின் குணாம்சங்கள்மீதான மதிப்பீடு வருகிறது. “உணர்ச்சிகளை
வெளிப்படுத்திக்கொள்ளாத ஓர் உயர்ந்த மனிதர், பொதுப்பிரச்சினைகளில் உறுதியான
பிடிப்பு இல்லாதவர், எதிலும் உறுதியான நம்பிக்கை இல்லாதவர், வள்ளல்தன்மைகொண்டவர்,
நட்பிணக்கம் கொண்டவர், ஆனால், எந்தஒன்றுக்கும் ஆபத்தான எதிரியாக இல்லாதவர்,
இனியமனிதர் யாரோ, அவர் எத்தகைய அலுவலகத் தகுதிகளுமின்றி அமெரிக்கஜனாதிபதியாக
வரவிரும்பினார்.” கொண்டுவரப்பட்டார். 40ஆண்டுகளுக்குப்பிறகு, அவர் இறக்கும்வரை நண்பர் களோ, எதிரிகளோ, 1932ல் ஃப்ராங்க்ளின்
டி.ரூஸ்வெல்ட் ஜனாதிபதி பதவிக்கு வால்டர் லிப்மேனால் தவறாக உயர்த்தப்பட்டதை
மறக்கவில்லை. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன் ரூஸ்வெல்ட்-உடனான
விரிவானசந்திப்புக்குப்பிறகு ஞானிஆலிவர்வெண்டல் ஹோல்ம்ஸ், ரூஸ்வெல்ட் ஐப் பற்றி
ஒரு மதிப்பீட்டை வழங்கினார். அது காலத்தின் சோதனையைத்தாண்டி நிலைத்து நிற்கிறது. :”இரண்டாம்தர அறிவாளி: ஆனால்
உணர்ச்சிவசப்படுவதில் முதல்தரமானவர்.”
லிப்மேனிடம் இல்லாத, ஹோல்ம்ஸ்இடம் இருந்தது எது?
அது உருதுமொழியில் “மர்தும் ஷனாஸி” என்று அறியப்படும் ஒருவரது
குணவியல்பை மதிப்பீடு செய்யும் கலை. இது ஒருசிலரிடம் மட்டுமே ஒருபரிசாக
அமைந்துவிடுகிறது. மக்கள் குறிப்பாக அந்த ஆற்றலைப்பெற ஆர்வம் காட்டுவதில்லை ஏனெனில்
அது பிரச்சனைகளைச் சிக்கலாக்கிவிடும். இங்கு இன்னொரு ஆறுதலானநம்பிக்கை
பெற்றோர்களிடம் இருக்கிறது! ’ஊதாரியான மகனைத் திருமணம்
பக்குவப்படுத்திவிடும்’. ஆகவே இந்த நம்பிக்கையில்
ரிச்சர்ட் நிக்ஸன், மொரார்ஜிதேசாய் அதிகாரத்தின் உச்சிக்கு இதமாக வந்தார்கள்: இந்திராகாந்தியும்
கூட 1980க்குப்பின். ஆனால் அவர்களால் முடியவில்லை. பக்குவப்படவில்லை!
மோடி மாறவே இல்லை!
நரேந்திரமோடி பிரதமராக வந்ததிலிருந்து உள்ள
பதிவுகள் மோடி ஒருசிறிதளவுகூட மாறவில்லை என்பதைக் காட்டுகின்றன. இருந்தாலும் அவரது
ரசிகர்கள் அடிக்கடி உள்ளார்வத்தோடு அவர் சில்லறைப்பேர்வழிகளைக்
கட்டுப்படுத்தவேண்டுமென்று பிரார்த்திக் கிறார்கள். மோடியின் உண்மையான பார்வையை
வெளிப்படுத்த அவரது வெளிநாட்டுப்பயணப் பேச்சுக்கள் போதுமானவையாக உள்ளன.
1.
2014 செப்டம்பர் 2ல் ஜப்பான் பேர்ரசருக்கு மோடி ஸ்ரீமத் பகவத் கீதையின்
பிரதியைப் உள்நாட்டிலுள்ள விமர்சகர்களை நோக்கிக் கைகளை முறுக்குவதற்காகப்
பரிசளித்தார்.. “இதற்குப்பிறகு இந்தியாவில் என்ன நடக்கும் என்று எனக்குத்
தெரியாது. அங்கே இதைப்பற்றி ஒருதொலைக்காட்சி விவாதம் நடைபெறலாம். நமது மதசார்பற்ற
நண்பர்கள் ஒருபுயலைக் கிளப்பலாம். ‘மோடி தன்னைப்பற்றி என்ன
நினைத்துக்கொண்டிருக்கிறார்? அவர் தன்னுடன் ஒருகீதையைக் கொண்டுசென்றி ருக்கிறார். அதன்பொருள்
இதையும் அவர் மதமயமாகிவிட்டார்”
மோடி ஆதாரமின்றிப் பழிசுமத்திக்கொண்டேபோகிறார்.
“எப்படியோ அவர்கள்
(ஊடகங்கள்) தங்கள் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக்கொள்வார்கள். நான் அங்கு
இல்லாவிட்டால் அவர்கள் எப்படித்தான் தங்கள் வாழ்வுக்கானதைச் சம்பாதிக்கமுடியும்? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 2014
செப்டம்பர் 3) இத்தகைய உள் நோக்கம் கொண்ட தாக்குதல்களைத் தொடுப்பது அவரது இயல்பு!
2.
2015 ஆகஸ்ட்
31ல் புதுடெல்லியில் மோடி கூறினார்: “இன்று யாராவது ‘ஓம்’ என்று உச்சரித்தால் ஒருவாரத்துக்கு ‘எப்படி ‘ஓம்’ உச்சரிக்கப்படலாம்?’ என்ற சர்ச்சை கடும் கோபத்தொடு
வெளிப்படும். (ஆசியன் ஏஜ் 2015 செப்டம்பர் 1)
3.
செப்டம்பர்
23ல் டப்ளினில் இந்தோ-ஐரிஷ் மாணவர்களை சமஸ்கிருத மந்திரங்களை ஓதியதற்காகப்
பாராட்டினார். ஆனால், அவரால் ஒருபோதும் கழற்றிவிடப்படாத கபடத்தன்மையோடு, “ இந்த
மகிழ்ச்சிக்குரிய விஷயத்தை அவர்கள் அயர்லாந்தில் செய்யலாம். ஆனால் இது இந்தியாவில்
செய்யப்பட்டால், அது மதசார்பின்மை பற்றியகேள்விகளை எழுப்பும்” (ஹிந்துஸ்தான் டைம்ஸ் 2015 செப்டம்பர் 24)
4.
நவம்பர் 12ல்
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் மோடி ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தனது உரையில்
இந்தியாவின் ‘பன்முகத்தன்மை’யைப் போற்றிப் புகழ்ந்தார்.
ஆனால் அதற்கு மறுநாளே ’இந்தப்பழைய ஆதாம்’ தன்னை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டு
டெம்ப்ளே விளையாட்டு அரங்கில் முன்தயாரிப்பு இன்றி எதிர்பாத்தவகையில் பேசினார்: ”பயங்கர வாதம் என்ற பெயரால் இன்று
உலகில் நிகழ்ந்துவருவதுபற்றி சிலநேரங்களில் நான் உணர்கிறேன். சுபி மரபு
பலம்பெற்றுவிட்ட்தா? இஸ்லாத்தின்மீது அதன் செல்வாக்கு வளர்ந்துவிட்டதா? அது
எப்போதும் துப்பாக்கியை எடுத்துக்கொள்வதுபற்றி ஒருபோதும் சிந்திக்காதுஎன்று
யாராவது புரிந்துகொள்வார்களா?” (
தி டெலிகிராஃப்
2015செப்டம்பர் 14)
மெக்காமெக்கா மசூதி அல்லது மாலேகான் பயங்கரவாத்த் தாக்குதல்களைச் செய்தது
எது? அல்லது யார் பொறுப்பு? இதற்கு மோடியின் பதிலென்ன?
மோடியைத் தொடர்ந்து பிரதமர் டேவிட் கேமரூன் பேசினார்.பேச்சு
பயங்கரவாதத்தைக் கண்டித்தது. ஆனால் எந்த மதத்தையும் அவர் குறிப்பிடவில்லை.
அவருக்கு மோடியிடம இருந்த ‘இஸ்லாமோஃபோபியா’ நோய் பீடிக்கவில்லை!
”பிரிட்டிஷ்காரார்கள் மோடியால் ஈர்க்கப்படவில்லை. நவம்பர் 13 ‘தி
கார்டியன்’ ஆங்கிலஇதழின் தலைப்புச்செய்தி “இந்தியா
இந்து தாலிபானால் ஆளப்படுகிறது” என்றது. ‘தி கார்டியன் இதழின்
எழுத்தாளர் ஆதித்ய சக்ரவர்த்தி மோடியைப்பற்றி, “இந்தப்புவிக்கோளத்தின் மிகவும்
ஆபத்தான அரசியல்வாதிகளில் ஒருவர்: நல்லது. கற்பனை செய்துபாருங்கள். எந்த ஒரு
தேசியத்தலைவ ராவது – க்மரூன், மார்கெல், ஒபாமா – தனது வாழ்வின் பெரும்பகுதியை
மதவெறி பாசிஸ்டு களுக்காகச் செலவிட்டுள்ளார்களா? புகழ்பெற்றகல்வியாளர்களில்
ஒருவரையாவது ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ உடன் தொடர்பிடமுடியுமா? மதவாதாடிப்படையில்
எதிர்ப்புணர்வைத் தூண்டிவிட்ட, தனது நீண்டசொந்த வரலாற்றில் மதஉணர்வில்தோய்ந்த,
பெரும்வர்த்தகங்களுடன் சொகுசான உறவுகொண்ட, எதிராளிகள்மீது ஈவுஇரக்கமற்ற
வன்செயல்களில் ஈடுபட்டவ்ர் என்று மதிப்பீடு செய்யப்படும் ஒருவர் –இந்துத்தீவிரவாதி
இப்போது இந்த அணுஆயுத ஆற்றல்கொண்ட அரசின் பொறுப்பாளர்! இன்னும்
வருந்தவில்லையா?” என்று மோடியைக் கேலிசெய்கிறார்.
உங்கள்
மூக்கைப்பிடித்துக்கொண்டு மோடியுடன் கைகுலுக்குங்கள்” என இந்தத்தலைப்புச் செய்தியைத் தாங்கிவந்த இதழில்
குறிப்பிட்டார் கே.பி.நாயர்.
நன்றி: ஃப்ரண்ட்லைன் 2015 டிசம்பர் 25 இதழ்




