மோடி சீனர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்
’தன்னை முதன்மைப்படுத்திக்கொள்வதை நிராகரிப்பதை’
நேர்காணல்
பேட்டியளித்தவர்: பங்கஜ்மிஸ்ரா பேட்டிகண்டவர்: பஷ்ரத்பீர்
தமிழில்: செ.நடேசன்
சீனா
மற்றும் கிழக்கு ஆசியநாடுகளில் விரிவான
பயணங்களை மேற்கொண்ட ஒருசில எழுத்தாளர்களில் பங்கஜ்மிஸ்ராவும் ஒருவர். இதன்விளைவாகக்
காலனியாதிக்கத்துக்குச் சவாலாகவிளங்கிய, தேசியக்கொள்கைகளை வகுக்கப்பெரிதும் உதவிய,
ரவீந்திரநாத்தாகூர், சீனச்சிந்தனையாளர்கள் லியாங் கி சாவோ, சன்யாட் சென் போன்ற
ஆசியஅறிவுஜீவிகளின் வாழ்வையும், கொள்கைகளையும் பதிவுசெய்த அறிவுஜீவிகளின் வரலாறான
‘பேரரசின் அழிவிலிருந்து” (From the ruins of the Empire) என்ற பங்கஜ் மிஸ்ராவின் நூல் ஒருபுதிய பாதை வகுத்தது.
அதைத்தொடர்ந்த அவரது ‘The Great
Glamer’ ‘மாபெரும் இரைச்சல்’ கொள்கைகளையும் அறிவிக்கைகளையும் கொண்டது. மிஸ்ரா சீனாவில்
அதிவிரைவுரயில் மூலம் திபெத்துக்குப்பயணம் சென்றார். சீனஅறிவுஜீவிகள், கவிஞர்களைப்பேட்டி
கண்டார். ஆர்த்து முழங்கும் ஷாங்காய், ஹாங்ஹாங் நகரங்களைப்பற்றி விவரித்தார்.
அங்கிருந்த சீனா, தைவான், இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஜப்பான் நாடுகளின் அரசியல்
மற்றும் கொள்கைகளையும் ஆய்வுசெய்தார். அவர் பஷ்ரத் பீரிடம் சீனா பற்றிய ஆய்வுகள்,
சீனா மற்றும் கிழக்குஆசிய நாடுகளுடனான இந்தியாவின் எதிர்முட்டுக்கள், ஜனநாயகம்,
முதலாளித்துவம், எதேச்சாதிகாரம், சர்வாதிகாரம் ஆகிய கொள்கைகள்பற்றியும்,
இந்தப்பகுதி களில் பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்ட பயணங்கள் பற்றியும்
பகிர்ந்துகொண்டார்.
பஷ்ரத் பீர்: இந்தியாவில் நீங்கள்
கண்ட சீனா பற்றிய சிந்தனைகளுக்கும், சீனாவின் உண்மை நிலைக்குமான வேறுபாடு எந்த அளவில்
உள்ளது?
பங்கஜ் மிஸ்ரா: 1962ன் சீன–இந்தியப்போர்
சீனாவின்மீதான இந்தியாவின் மனப்பாங்கை அடிப்படையில் சிதைத்து உருவாக்கப்பட்டது.
1962ல் இருந்து சீனாவில் என்ன நடந்தது என்ற மாபெரும் அறிதலைத் தெளிவற்றதாக ஆக்கி
இருண்மையில் வைத்தது. சீனாவின்மீதான நமது பார்வை ‘சீனா நமது எதிரி: இந்த எதிரி
நமது முதுகில் குத்திவிட்டான்: இது நேருவின் இறப்புக்குக் காரணமாயிற்று’ என்ற வகையில் உருவாகியிருந்தது.
அந்தக்குறிப்பிட்ட கால நிகழ்விலிருந்து மாறிச்செல்லவேண்டிய நேரம்இது. சீனா இப்போது
மிகமுக்கியமான, மாபெரும் வர்த்தகப்பங்குதாரர். அங்கு நிலுவையில் உள்ள
எல்லைப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.
அந்தக்காலகட்டத்தில் நம்காயம் காரணமாக 1962 போருக்குப்பின் நம்மிடம்
நம்மைப்பற்றியும், சீனாவைப்பற்றியுமான புரிதல்களும், தகவல்களும், பகுப்பாய்வுகளும்
சிறிதளவே இருந்தன. நாம் மிகப்பெருமளவுக்கு அயல்நாடுகளை – குறிப்பாக அமெரிக்காவைச்
சார்ந்தே இருந்தோம். சீனாவைப்பற்றி எழுதும் மிகவும் பலவீனமான இந்தியமரபே இங்கு
இருந்தது.
ஜி.பி.தேஷ்பாண்டே போன்ற சிலர் எழுதினார்கள்.
அவர்களில் சிலர் இடதுசாரிகள். அவர்கள் சீனாவைப்பற்றி அபரிமிதமான பிடிப்புடன்
எழுதினார்கள். இன்றும் நம்மிடையே சீனவரலாற் றாளர்களாக சில மாபெரும்அறிவுஜீவிகள்-பிரசென்ஜித்
தௌரா, விரேன்மூர்த்தி ஆகியோர் உள்ளனர். ஆனால் கடந்த 10-15 ஆண்டுகளில் டெங் ஷியோ
பிங் –ஆல் கட்டவிழ்த்து விடப்பட்ட மாறங்கள்மூலம் சீனாமிகவேகமாக, மிகப்பெருமளவில்
மாறிவிட்டது. அங்கு என்ன நடக்கிறது என்பதைப்பற்றி அறிந்துகொள்வதற்கான
தொடர்பை-வழிமுறைகளை நாம் பெற்றிருக்கவில்லை. பல்லவிஐயர் சிலவேளைகளில்
அவற்றைப்பற்றி அறிந்துகொண்டிருந்தார். ஆனால் இப்போது அவரும் சீனாவைவிட்டு வெளியே
வந்துவிட்டார். நம்மிடம் சில பன்னாட்டு உறவு நிபுணர்களும், பாதுகாப்பு தொடர்பான
சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் அந்தவகையான எழுத்துகள் நம்மை
வெகுதொலைவுக்கு எடுத்துச்செல்ல முடியாதன. நம்மிடம் அருண்ஷோரி போன்ற,
எல்லாத்தரவுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குப் பொதுமைப்படுத்துவதில் சிறந்து
விளங்குகின்ற சிந்தனையாளர்களும் உள்ளனர். சீனசமுதாயம் மற்றும் அரசியல் பற்றி
மிகஆழமாக, அத்தோடு ஏற்றுக்கொள்ளத்தக்கவகையில் அறிவார்ந்த வேலைகளைச்செய்துள்ள
ஆஸ்திரேலிய,ஜப்பானிய எழுத்தாளர்களையும், கல்வியாளர்களையும் ஒப்பிடும்போது – ஏன்
சின்னஞ்சிறு தைவான் அறிவுஜீவிகளுடன் ஒப்பிடும்போதும் நான் சொல்வதன் அர்த்தத்தை
நீங்கள் காணலாம்.
இந்தியாவைவிட சீனா எந்த அளவுக்கு
உயர்ந்திருக்கிறது? ‘வளர்ச்சி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இந்த
இரு நாடுகளையும் ஒப்பிட்டால்.
வெறுமனே இந்தவகையில்
வளர்ச்சியை அளவீடுசெய்ய நான் விரும்பவில்லை. அந்த அளவுகளை ஒருவர்
அறியவிரும்பினால், அதை நீங்கள் மனிதவளமேம்பாட்டு வளர்ச்சிவீதம் மற்றும்
உள்கட்டுமான அளவுகளைக்கொண்டு முடிவுக்கு வரலாம்.சீனா இந்தியாவைவிட மிக உறுதியாக 30
ஆண்டுகள் முன்னே உள்ளது. சீனா ஒரு மாபெரும் நவீன தேசமாகியிருக்கிறது என்ற
கருத்துக்கு இதைக்கொண்டுமட்டுமே முடிவுக்கு வந்துவிடக்கூடாது.இந்த வளர்ச்சிப் போக்கில்
சீனமக்கள் சந்தித்த எண்ணற்ற துன்பதுயரங்களையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.இந்த
இரண்டையும் எவரொருவராலும் பிரித்துப்பார்க்க முடியாது.
சீன நகரங்களைப்பற்றி ஏராளமானவற்றை நாம் கேட்கமுடிந்திருகிறது. சீனாவின் கிராமம்
எதைப்போல உள்ளது? கிராமப்புற சீனாவையும், கிராமப்புற இந்தியாவையும் நாம் எவ்வாறு
ஒப்பீடு செய்வது?
சீனகிராமத்தின் வாழ்க்கை மிகமிக
அதிகமாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், சீனாவின் மிகத்தொலைவில் உள்ள ஒவ்வொரு
குக்கிராமத்திலும்கூட கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. இந்திய கிராமங்களில் இத்தகைய
இருப்பு அரசு அல்லது அரசுசாரா நிறுவன்ங்களில்கூட
இல்லை. சீனகிராமங்களில் (கம்யூனிஸ்ட் கட்சியின்) இத்தகையஇருப்பு ஒற்றுமை
மற்றும் ஒரேசீரானதன்மை என்ற உணர்வையும் உருவாக்கியுள்ளது. அது இந்தியாவில் இல்லை.
இந்திய கிராமங்கள் ஒவ்வாத கலப்புகள்கொண்ட வேற்றியல்புகள் கொண்டவை.
இந்தியாவில் சாதிகள் இருப்பதை நான்
நினைத்துப்பார்க்கிறேன். கிராமங்கள் எவ்வாறு புவியியல்ரீதியாக சாதீய அடிப்படையில்
கட்டமைக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் காணலாம். இது சீனாவில் முற்றிலும்
மாறுபட்ட்து. சீனக்கிராமங்களில் சமத்துவம்- அனைவரும் சமம் என்ற கலாச்சாரம் நிலவிவருகிறது.
உத்தரப்பிரதேசம் அல்லது பீகாரின் கிராமங்களில் காணப்படும் குருகுலமுறையிலான சாதி,
இரக்கமற்ற கொடுமை, காட்டுகிராண்டித்தனம் ஆகிய தன்மைகளைச் சீனகிராமங்களில்
காணமுடியாது. சீனாவில் குலமுறை என்பது வர்க்க அடிப்படையிலானது. பணக்கார இளைஞன்
ஏழைகள் மற்றும் பலவீனர்கள்மீது பிரபுத்தனத்தைக் காட்டுவது பற்றியது.
சீனாவுக்குப்பிறகு அதன்வளையத்தில்
உள்ள பலகிழக்கு ஆசிய நாடுகளில் உங்கள் நேரத்தைக் கழித்துள்ளீர்கள். நீங்கள்
இந்தோனேசியா, மலேசியா, மங்கோலியா மற்றும் பிற இடங்களைப் பற்றி எழுதியுள்ளீர்கள்.
இந்த இடங்களைப்பற்றி நாங்கள் மிக அதிகமாக மேற்கத்திய எழுத்தாளர்களின்
எழுத்துக்களில்தான் படித்துள்ளோம். இந்தியக்கருத்தாக்கங்களிலிருந்து அவை எந்த
அளவுக்கு வேறுபட்டிருக்கின்றன?
ஒரு இந்தியன் என்றமுறையில் நீங்கள்
சிலவரலாறுகளோடும், இந்தோனேசியா போன்ற இடங்களோடும் – அங்கு இந்து பௌத்த கடந்தகாலம்
இருப்பதால் – எளிதில் தொடர்பு கொண்டிருக்கமுடியும். இந்துக்கள் இன்றும் அங்கு
வாழ்கிறார்கள். அல்லது முஸ்லீம்கள் அங்கு சமயவழிபாடுகளை நட்த்துகிறார்கள். அது
அங்கு எப்போதும் பிரபலமானது. மலேசியா போன்ற இடங்களில் என்னை மிகவும் ஈர்த்த
விஷயங்களில் ஒன்று இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் குடிபெயர்ந்து
வந்தவர்களை- தென்னிந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் வந்தவர்களை அவர்கள்
எவ்வாறு உள்வாங்கி ஈர்த்துக்கொண்டார்கள் என்பதே. அந்த விஷயங்கள் உங்களுக்கு
மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தும். மலேசியாவில் சீக்கியர்களும், தமிழர்களும்
இருக்கிறார்கள். பெனாங்கில் சீனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றிணைந்து –அமெரிக்க
அல்லது பிரிட்டிஷ் எழுத்தாளரால் உணர முடியாத – எல்லாவகையான நம்பிக்கைகளும்
ஒருங்கிணைந்த புதியகலாச்சாரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த இடங்களில் நடைபெற்றுவரும் சுவையான மற்றொரு
விஷயம் சீனாவின் எழுச்சி இந்தப்பகுதிகளை மாறுதல்களுக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொருளாதார அம்சங்களில் மட்டுமல்ல. நாம் இங்கு கடல்கடந்துவந்த சீனர்கள் என்ன
செய்கிறார்கள் என்பதையும் கவனமாகப் பார்க்கவேண்டும். அவர்கள்தான்
சீனப்பொருளாதாரத்தின் முதல்முதலீட்டாளர்களாக இருந்தார்கள். இந்தோனேசிய சீனர்கள்,
தைவான் சீனர்கள், சிங்கப்பூர் சீனர்கள்தான் சீனாவின் சிறிய மற்றும் இரண்டாம்
அடுக்கு நகரங்களுக்கான முதல்முதலீட்டாளர்களாக இருந்தார்கள். அமெரிக்க கார்பரேட்கம்பெனிகளும்,
வியாபாரிகளும் கடற்கரைக்குப் பின்பகுதியில் உள்ள இடங்களுக்குச்
செல்லவிரும்பவில்லை. மலேசியாவில் உள்ள கடல்தாண்டிவந்த சீனர்களின் அரசியல்
உள்ளடக்கவடிவம் அங்கிருந்த குலதர்ம சமூகத்தை மாற்றியமைத்த்து. இந்தோனேசியாவும்
மாறுதல்களுக்குள்ளானது.
மலேசியாவில் இருந்த
குடிபெயர்ந்துவந்த சீனர்கள் ஏராளமான சிரமங்களுக்குள்ளானார்கள். அவர்களுக்குப்
பொருளாதார உரிமை இருந்தது. ஆனால், அவர்கள் விவசாயிகளை அடுத்துத் தலைகுனிந்து செல்ல
நேர்ந்தது.
அது எவ்வாறு மாறியது?
சீனதேசியம் என்பதன் பெரும்பகுதி அயல்
நாடுகளிலிருந்த சீனர்களால் கட்டமைக்கப்பட்டது. ஏனெனில், கடல்கடந்து அயல்நாடுகளில்
வாழ்ந்த சீனர்கள் கலிஃபோர்னியா, சிங்கப்பூர், மணிலா மற்றும் பெனாங் போன்ற
இடங்களில் பெரும்பான்மையினர் மத்தியில் வாழ்ந்து அவமதிக்கப்பட்டதை உணர்ந்தார்கள்.
இப்போது அங்கு தாயகசீனாவின் எழுச்சி வலிமையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அது
மகிழ்ச்சிக்கொண்டாட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கடல்கடந்த
சீனர்களின்நிலை வலுவானதாகவும், அச்சமூட்டுவதாகவும் ஆகியுள்ளது. இந்தோனேசிய
சீனர்கள் கடந்த 15 ஆண்டுகளாகப் பலியாடுகளாக இருந்தார்கள். ஆனால் இப்போது
பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் அவர்களுக்கு – இந்தமக்கள் மிகப்பெரிய சீன
உலகத்தைச்சார்ந்தவர்கள். எனவே நீங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று – ஒரு
அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது இந்தோனேசியா, மலேசியா போன்ற இடங்களிலும் அரசியல்
மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
இந்தக்கிழக்கு ஆசிய நாடுகளின்
புதிய தலைமை சக்தியாக சீனா இருக்குமா?
ஜப்பான் உள்ளிட்ட இந்தப்பகுதியில் நீங்கள்
கேள்விப்படும் பலவிஷயங்களில் ஒன்று ‘இந்தியா இங்கு இல்லை’. இந்தியாவின் மென்மையான அதிகாரசக்தி இந்த இடங்களில் காணப்படவில்லை.
நாம் மரபுரீதியாக இத்தகைய அதிகாரத்தை உயர்த்திப்பிடிக்க நன்கு ஆயத்தமாகவில்லை.
மேலும் நமது பொருளாதார பலமும் சீனாவை ஒப்பிடும்போது பலவீனமானது.
சீனா மிகப்பெரிய சக்தியாகக் கட்டாயம் ஆகும்.
மேலும், இந்தப்பகுதிகளில் கடல்கடந்த சீனர்கள் மிகப்பெரிய, ஆற்றல்வாய்ந்த
மக்கள்குழுவினாராகவும் உள்ளார்கள். இந்தியா இங்கு மிகஅறிவுபூர்வமான முதன்மைஇடத்தை
வகிக்க முடியும். அது வரவேற்கவும்படும். ஏனெனில், அது சீனாவைவிட, நல்ல நம்பகமான
வடிவத்தைப் பெற்றிருக்கிறது.
சீனா பொருளாதாரரீதியாக அணைத்துக்கொள்ளும். ஆனால்,
அத்துடன் அதன்மீது பயமும், சந்தேகமும் இருக்கிறது. இதனால்தான் அமெரிக்கா
ஒருவாய்ப்பை எதிர்பார்க்கிறது .விரக்தியோடு TTP என்கிற ’ட்ரான்ஸ் பஸிபிக் பார்ட்னர்ஷிப்’ எனும் வர்த்தக ஒப்பந்தத்தை முயற்சிக்கிறது.
இது இப்பகுதியில்உள்ள எல்லாப்பெரிய பொருளாதாரங்களையும் உள்ளடக்கியுள்ளது –
சீனாவைத்தவிர. இது இந்தப்பகுதியில் சீனாவின் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தவும்,
சீனாவின் ஒட்டுமொத்த தந்திரங்களையும், இராணுவவீச்சையும் கட்டுப்படுத்தவும்
அமெரிக்காவுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. பிரதமர் நரேந்திரமோடியின்
தேர்தல் இந்தியநடுத்தர வர்க்கத்தினரிடையே கிழக்கு ஆசியாவின் வலிமைமிக்கமனிதராக
வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பத்தைக் காட்டுகிறது. இப்போது அவர்
ஆட்சிஅதிகாரத்தில் ஓராண்டை நிறைவு செய்துள்ளார்.
சீனாவும், கிழக்குஆசிய
சமூகங்களும் வலிமைவாய்ந்த மனிதர்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்று நீங்கள்
ஆய்வுசெய்துள்ளீர்கள். வலிமைவாய்ந்த மனிதர்கள் என்பதை நீங்கள் எவ்வாறு விளக்குகிறீர்கள்?
நாம் இதுவரை பார்த்ததன்
சுருக்கம், கிழக்குஆசியா மற்றும் இந்தியாவுக்கும் இடையேயான நிகழ்வுகள், பனிப்போர்
வெடிப்பு, ஜனநாயகம் மற்றும் எதேச்சாதிகாரத்தின் இரண்டு இயல்புகள், இந்தியா
ஜனநாயகத்தில் ஒருவிதிவிலக்காக உள்ளதும், பிறமற்ற நாடுகள் எதேச்சாதிகாரம் அல்லது
சர்வாதிகாரத்தன்மை கொண்டதாக இருப்பதும் ஆகியவையே. மோடி, தன் நெருங்கிய கார்பரேட்
நண்பர்களுடன் முதலாளித்துவத்துக்கான மாபெரும்இந்தியாவின் மிகப்பெரிய ஆளாக கிழக்கு
ஆசிய குணவியல்புகளோடு இருக்கிறார்.
சுகார்த்தோவோடும், லீ குவான் யீ யோடும், பெய்ஜிங்கில்
அப்போது இதைப்பெரிதுபடுத்திய CCPயின் பிராந்தியஎஜமானர்களோடும்
மோடியை இணைத்து ஒருவர் சிந்திக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன். இவர்கள் எல்லாம்
மேலும் கீழுமான தீர்வுகளை விரும்புகிற, அதிவேக முடிவுகளை எடுக்கிற, நேரடியாகத்
தங்கள் முன்னேற்றத்துக்கு உதவாத எந்த ஒன்றையும் அலட்சியப்படுத்துகிற
கார்பரேட்டுக்களாலும், அதிகார வர்க்கங்களாலும்
ஆதரிக்கப்படுபவர்கள். எனவே ஆசியாவில் நடுத்தர வர்க்கத்தின் எழுச்சி,
ஜனநாயகத்தைவிட தனிப்பட்ட செல்வாக்கு மிக்க, சாதாரணமக்களின் ஆதரவுபெற்றவர்களின்
வளர்ச்சிக்கு உதவியது.
அதிர்ஷ்டவசமாக, மிகவும் வேறுபட்ட
தன்மைகளைக்கொண்ட இந்தியாவிலிருந்து எந்தஒரு மோடியும் உருவாகலாம்.
சுகார்த்தோவைப்போன்ற உண்மையிலேயே தனிப்பட்ட செல்வாக்கு மிக்க தலைவர்கள்
இந்தியாவில் மிகநீண்டகாலமாக உருவாக முடியவில்லை. 65 ஆண்டு காலமாக ஆழமான
குறைபாடுகள் கொண்டதாக ஜனநாயகத்தின் வளர்ச்சிப்போக்கு இருந்து வந்துள்ளது.
அப்படியிருந்தும் ஒரு இந்தியா உருவாகியிருக்கிறது. இங்கே மோடிபோன்ற ஒருவர்
வரையறைக்குட்பட்ட வெற்றியையே அனுபவிக்க முடியும்.
மேலும் அவர் ஆட்சிஅதிகாரத்தில் ஓராண்டுகாலம்
இருந்தபின்பும், மிகஅதிகமான வெளி நாட்டுப்பயணங்களை மேற்கொண்டு தத்தளித்துக்கொண்டிருக்கிறார்.
சீனாவில் மோடி, சிறிய உல்லாசப்பயணங்களை மேற்கொண்ட பிறஅயல்நாட்டவரைப்போலவே –
இன்னும் தனது புதிய அதிகாரத்தின் மணத்தை நுகர்பவராக, அதன் அலங்கார ஆடையை அணிவதை
அனுபவிப்பவராக, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாலைகுலைத்து விசுவாசம் கட்டுவதில்
போதைகொண்டவராக – பார்க்கப்பட்டார். சீனர்கள் ஜப்பானின் ஜின்ஸோ அபேயுடன் –இவர்
ஜப்பானின் ஆற்றல்வாய்ந்த தேசியத்தலைவராக சிலஆண்டுகளாக அறியப்படுபவர் – மோடி
கொண்டுள்ள உறவுகள்பற்றி எச்சரிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்கள். மோடி
சீனாவுக்குச் சென்று மங்கோலிய பிடிலை இசைத்தார் என்பதாலேயே சீனாவின் அண்டைநாடாக
இந்தியா தானாகவே ஒருமிகப்பெரிய பாத்திரத்தை வகிக்கக்கூடியதாக ஆகிவிட் முடியாது.
சீனாவின் அண்மைநாட்டவர்கள் பொருளாதார ரீதியாக
அதைச்சார்ந்து இருப்பவர்கள். இந்தியாவால் இந்தஉண்மைநிலையை மாற்றிவிட முடியாது.
இதுவல்லாமல் இந்தியா கொஞ்சம் பணத்துக்காக சீனாவின் கதவுகளைத்
தட்டிக்கொண்டிருக்கும்போது அதற்கான
முயற்சியில் இறங்க முடியாது. மோடியும் அவரதுரசிகர்களும் சீனர்களிடமிருந்து
உண்மையில் கற்றுக்கொள்ளவேண்டிய ஒருவிஷயம்-’சீனர்கள்
மிகஆழ்ந்தகவனத்தோடு ’தன்னை முன்னிறுத்திக்
கொள்வதையும், நிலைநிறுத்திக்கொள்வதையும்
நிராகரிக்கிறார்கள்’ என்பதே. சீனர்கள் 30 ஆண்டுகளாகத்
தங்களைச் சுயவலிமைப்படுத்திக்கொள்வதில் ஈடுபட்டிருந்தபோது தங்களது அதிகாரம்
மற்றும் செல்வாக்குப்பற்றிப் பெரிதும் அலட்டிக்கொள்வதிலிருந்து விலகிநின்றாகள். இதற்கு மாறாக சீனத்தலைவர்கள் தங்களது ஆற்றலைக்
குறைத்துக் காட்டித் தங்கள்முன் உள்ள பிரச்சனைகளுக்கு அழுத்தம் தந்தார்கள்.
அவர்கள் கடல்கடந்த சீனர்களிடமிருந்து அதற்கான உறுதிப்பாட்டை நிச்சயம் கேட்கவில்லை.
சீனாவின் அண்மையில் உள்ளவர்களுக்கு இந்தியா
ஒருகவர்ச்சிகரமான நாடாகத்திகழ மோடி தனது ’பிடிலை’ அப்புறப்படுத்த வேண்டும் என்பதை நாம்
அறிகிறோம். வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து பாதுகாப்பற்ற ஆதரவை
நாடுவதிலிருந்து விலகி நிற்கவேண்டும். சிறிது காலம் நம் நாட்டிலேயே மோடி
தங்கியிருந்து இங்கு எழும் எண்ணற்ற சவால்களைச் சந்திக்கவேண்டும்
நன்றி:’The Hindu.’ நாள் 24.5.2015