பா.ஜ.க. எதை நோக்கி...?
மதவெறி அத்துமீறல்களில்
வெங்கிடேஷ்
இராமகிருஷ்ணன்
தமிழில்: செ.நடேசன்
நரேந்திரமோடியை ‘வளர்ச்சிக்கான மனிதன்’ என்று உயர்த்திப்பிடித்துப் பெற்றுள்ள அரசியல்ஆதாயங்களால் ஊக்கமடைந்துள்ள ‘சங்பரிவாரம்’ தனதுபிரித்தாளும் தந்திரங் களைக்கொண்டு, சமூகத்தளத்தில் மதவெறி ஊட்டிடவும்,
தனது ஆதாயங்களை ஒருங் கிணைக்கவுமான அடுத்த கட்டத்திற்கு அடி எடுத்து வைத்துள்ளது.
நாடாளுமன்றத்தேர்தலின் மிகப்பெரிய வெற்றிக்குப்பின், அடுத்த பெரியதிட்டமாக
நாட்டின் அரசியல் மற்றும் சமூகத்தளங்களில் ஒட்டுமொத்த இந்துத்துவா ஆதிக்கத்தை
நிலைநாட்ட சங்பரிவாரம் தயாராகிவருகிறது. நாடுமுழுவதும் அதிகரித்துவரும் மதப்பதற்றங்கள்
இதைத் தெரிவிக்கின்றன.
2014
செப்டம்பர் 11 ல் பிரதமரின் அலுவலகம் 1893 செப்டம்பர் 11 ல் சிக்காகோவில், உலக
சமயங்களின் மாநாட்டில் சுவாமிவிவேகானந்தர் ஆன்மாவைஉலுக்கும்வகையில் உரையாற்றிய
செய்தியானஉலகசகோதரத்துவத்தைநரேந்திரமோடிநினைவுகூர்ந்தார்எனஒருசெய்திஅறிக்கையை
வெளியிட்டது. அந்தஅறிக்கை, பிரதமர், ” நாம்
சுவாமிஜியின்செய்தியைப் பின்பற்றியிருந்திருப் போமானால் அமெரிக்காவில் 2001
செப்டம்பர் 11 ல் நடைபெற்ற முரட்டுத்தனமான, இழிந்த நடவடிக்கைகளை வரலாறுஒருபோதும்
சந்தித்திருக்காது.”. “சுவாமிவிவேகானந்தரின் வார்த்தை களை நாம் நினைவுகூர்ந்து
‘ஒற்றுமை, சகோதரத்துவம், உலகஅமைதி’யை முன்னெடுத்துச்
செல்ல நம்மை நாம் அர்ப்பணித்துக்கொள்வோம்” என்று கூறியதாகக்
குறிப்பிட்டிருந்தது.

அந்த அறிக்கை தயாராகிக்கொண்டிருந்தபோதே
பல்வேறு சங்பரிவார அமைப்புக்களிலிருந்த மோடியின் சீடர்கள், விவேகானந்தரின்
செய்தியான ‘ஒற்றுமை, சகோதரத்துவம், உலக அமைதி’ ஆகியவற்றைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தனர். பீகாரில் எளிதில்
மத உணர்ச்சிவயப்படும் பாஹல்பூர் மாவட்டத்தில் சங்பரிவாரங்களின் தத்துவார்த்தப்
போர்வாள் எனறு ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தீவிரத்தொண்டர்கள்
கடை வீதிகளை அழித்தல், வாகனங்கள்மீது கற்களைவீசிச் சேதப்படுத்துதல்,இரயில்பாதை
மற்றும் சாலைகளை மறித்தல் ஆகிய நடவடிக்கைகளில் சிறுபான்மை முஸ்லீம்களைக் குறிவைத்துத்
தாக்கினர். ‘இந்து மைனர்பெண் முஸ்லீம் மைனர்பையனோடு ஓடிவிட்டாள்’ என்ற வதந்தியைக்கிளப்பி அவர்கள் இந்தச்செயல்களில்
ஈடுபட்டனர். இதை வி.ஹெச்.பி.யும் அதன் இந்துத்துவா குழுவினரான பஜ்ரங்தள், பாரதிய
ஜனதா கட்சியினரும் ‘லவ் ஜிகாத்’தை முன்
கொண்டுசெல்லும் ஒரு சதித்திட்டம் என்றனர். ஆனால், காவல்துறையின் புலனாய்வு
விசாரணைகள் இதை ‘பள்ளியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒருகற்பனையின் உச்சகட்டம்’ என்று தெரிவித்தது.
மோடியின் செய்தியைப் பிரதமர் அலுவலகம்
வெளியிடுவதற்கு ஒருநாள்முன்பு, உத்திரப் பிரதேசத்தின் தலைநகரான ல்க்னோவில்
‘ஒற்றுமை, சகோதரத்துவம், அமைதி’ ஆகியவற்றை
முன்னெடுத்துச்செல்ல சங்அமைப்புக்கள் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும் ஒருநாடகத்தைக்
கண்டது.

இந்த நிகழ்ச்சி பா.ஜ.க. தலைவரான அமித்ஷா வால் செப்டம்பர் 13 ல் நடைபெற்ற
11 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பி.ஜே.பி.யின் பிரச்சாரத்தைத்
தலைமையேற்று நடத்துபவர் என்று அறிவிக்கப்பட்ட கோரக்பூர் தொகுதி நாடாளுமன்ற
உறுப்பினரான யோகிஆதித்யநாத் தலைமையில், சங்பரிவாரங்களில் உள்ள அமைப்புக் களாலும்,
தீவிரத் தொண்டர்களாலும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி தேர்தல் பிரச்சாரத்தின்
ஓர்அங்கமாக லக்னோ கிழக்குத்தொகுதி வேட்பாளரான அசுத்தோஷ்கோபால் டாண்டனை
அறிமுகப்படுத்துவதற்காக நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சில் பெரும்பகுதி
முஸ்லீம்களையும், அவர்கள் சார்ந்த அமைப்புக்களையும் திட்டி வசைபாடுவதாகவே
இருந்தது. ‘லவ்ஜிகாத்’ போன்ற அடைமொழிகள்
தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன. நாட்டின் மக்கள்தொகை உயர்வதற்கும், மக்கள் ஏழ்மை
நிலையில் வாழ்வதற்கும் முஸ்லீம்களே காரணம் என்றுவசைபாடப்பட்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முஸ்லீம்கள்
அதிகம் வசிக்கும் பகுதிகள் வழியாகக் கோபத்தைத்தூண்டும் கோஷங்களை உரத்து
முழங்கிஊர்வலம் சென்றனர். ஒருகோஷம், “யோகி ஆதித்யநாத் ஓர் அணுகுண்டு. அவருக்குச்
சவாலாய் எவனுண்டு? தைரியம் மிக்கவன்
இங்குண்டா?”என முழங்கியது. இடைத்தேர்தல் நடைபெற்ற இதரதொகுதிகளிலிருந்து
வந்த செய்திகளும்கூட ஆதித்யாநாத்தின் பிரச்சாரப் பேச்சுக்கள் இந்து – முஸ்லீம் பகை
உணர்வை ஏற்படுத்துவதாகவும், மத அடிப்படையில் பிளவுபடுத்துவதாகவும் இருந்ததாகத்
தெரிவித்தன. எனவே, தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக
‘மதக்கலவரங்களைத் தூண்டிவிட முயற்சிப்பதாக’ முதல்தகவல்
அறிக்கையைப் பதிவு செய்யுமாறு மாநிலஅரசுக்கு அறிவுறுத்தியது. தீவிரஇந்துத்துவா
வன்முறைவெறியாட்டங்களையும், ,
அச்சுறுத்தல்களையும் நடைமுறைபடுத்தியவர்
என்ற இவரது பழைய வரலாற்றுப் பின்னணிதான் இந்த இடைத் தேர்தலிலும்
அவற்றைப்பயன்படுத்தி மக்களைப்பிளவுபடுத்தும்நோக்கில் ஆதித்யநாத்தை தலைமைத் தேர்தல்
பிரச்சாரகராகத் தேர்வுசெய்யவைத்தது.
ஆனால், இந்துத்துவா சக்திகளால்
கட்டவிழ்த்துவிடப்பட்ட மதக்கலவரங்களும், வெறுப்புப் பிரச்சாரங்களும் இடைத்தேர்தல்
நடந்த தொகுதிகளிலும் அல்லது பாஹல்பூரிலும் மட்டும் நடைபெற்றவை அல்ல. ஊடகங்களால்
அவ்வப்போது வெளியிடப்பட்ட செய்திகள் ‘கடந்த மூன்றுமாதங்களில் ஏறத்தாழ எல்லா
மாவட்டங்களிலும் திட்டமிட்ட வகையில் மதவெறிக் கலவரங்களையும், மதச்சிறுபான்மையினரை
ஓரம்கட்டும்செயல்களையும் அரங்கேற்றத் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன’, என்பதைத் தெரிவித்தன. பல்வேறு மாநிலங்களில் இவர்களால்
மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றிய தகவல்கள் ஒவ்வொரு
மாநிலத்திலும் அதன் தன்மைக்கேற்ற ஒருதெளிவான வழிமுறையைக் கொண்டி ருந்ததைப்
புலப்படுத்தின. ‘லவ்ஜிகாத்’ வதந்திகளும்,
ஒருகுறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் முஸ்லீம்கள் தீவிரவாதிகளுக்குப் பாதுகாப்பு
அளிக்கிறார்கள்: கோவில்களையும், மதப்புண்ணிய ஸ்தலங்களையும் தாக்குகிறார்கள்:
இந்துக்களின் சொத்துக்களைப் பறிக்கிறார்கள் என்பன போன்ற கட்டுக்கதைகளும், கிறிஸ்தவ
மிஷனரிகளும், முஸ்லீம்தீவிரவாதிகளும் மதமாற்றங்களைச் செய்கிறார்கள் என்ற
கற்பனைகளும் மதச்சிறுபான்மையினரை அச்சுறுத்தி ஆக்கிரமிக்கும் தந்திரங்களின்
ஒருபகுதியாகவே அமைந்தன. இதன் ஒட்டுமொத்த விளைவு மதச்சிறுபான்மையினருக்குக்
குறிப்பிடத்தக்கவகையில் சமூகத்தில் ஓரம்கட்டப்படும் நிலையை யும், பொருள்
இழப்பையுமே ஏற்படுத்தின.
சங்பரிவாரங்களுக்குள் இருப்பவர்கள் இதை
வார்த்தைகளில் ஒப்புகொள்ள மறுக்கிறார்கள். ஆனால், டெல்லி, உத்திரப்பிரதேசம்,
பீகாரில் உள்ள சிலரோடு பேசியபோதும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள
இந்துத்துவாவோடு இணைந்த அமைப்புக்களைக் கூர்ந்து கவனிக்கும் உற்றுநோக்கர்கள்
பலரும் தெரிவிக்கும் தகவல்களும் கீழ்மட்டங்களில் வளர்ந்துவரும் வன்முறைகளும்,
அச்சுறுத்தல்களும், மோடியால் மேற்கொள்ளப்பட்டுவரும் குறிக்கோளும் நாட்டின் அரசியல்
மற்றும் சமூகத்தளங்களில் இந்துத்துவா மேலாதிக்கத்தை நிலைநாட்ட சங்பரிவாரம்
கையாண்டுவரும் நடைமுறைத் தந்திரங்களே என்பதை உறுதிப் படுத்துகின்றன.
பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்குப் பெரும்பான்மையைப் பெற்றுவிட்டபிறகு சங்
பரிவாரத்தின் வெளிப்படையான செயல்திட்டம் இதுதான். வேறுவார்த்தைகளில் சொல்வது
என்றால் “மோடி அரசின் ஆரம்ப நாட்களின் தந்திரம் இதுதான்”.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள ராஷ்ட்ரிய சுயம்
சேவக் – ஆர்.எஸ்.எஸ். ன் மூத்ததொண்டர் ஒருவர், “முதன்மையாக மோடியை ‘வளர்ச்சிக்கான
மனிதனாக’ உயர்த்திப்பிடித்து இந்துத்துவா அரசியலைத் தீர்மானகரமாகப்
பின்தொடரவைத்த தேர்தல்உத்தியின்மூலம் வெற்றியை எதிரொலிக்கச்செய்த சங்பரிவாரம்,
மேலும் புதிய தந்திரோபாயங்கள் மூலம் இந்துத்துவா அரசியலைப் பல்வேறு வழிமுறைகளில்
முன்னெடுத்துச்செல்ல முயல்வது இயற்கைதான். ’மோடியை
வளர்ச்சிக்கான மனிதனாக’
உயர்த்திப்பிடித்த துணிச்சலான முயற்சி குஜராத் மாநிலஅரசு, ஒருங்கிணந்த பல்வேறு
பகாசுரத் தொழில்குழுமங்கள் மற்றும் உலக அளவிலான விளம்பர மற்றும் தரகுக்குழுமங்கள்
ஆகியவை கூட்டாக இணைந்து எடுத்ததாகும்.”பல்வேறு
வழிமுறைகள்மூலம் இந்துத்துவாஅரசியலைப் பின்தொடர வைப்பது, 2013ல் உத்திரப்பிரதேசம்,
முஜாபர்நகர் கலவரங்களின்மூலம் துவக்கிய மதசார்பானஅணிதிரட்டல்மூலமும், வடஇந்தியா வில் நடத்திய கந்தக நெடிவீசும்
பிரச்சாரத்தின் மூலமும் வெறியேற்றி நடத்தப்பட்டது”.என்றார். அந்த மூத்ததொண்டர் மேலும் கூறினார்: ”தேர்தலில்பெற்ற அரசியல் ஆதாயங்களை ஒருங்கிணைத்து, அதை இந்தச்சமுதாயத்தின்
அரசியல், சமூகத்தளங்களில் மிகப்பெரும் அளவுக்கு விரிவுபடுத்துவதை
நோக்கமாகவும்கொண்டு புதிய தந்திரங்கள் வகுக்கபடும்”
இந்தப்புதிய தந்திரோபாயத்தின் விரிவான வரையறை
2014 தேர்தலுக்கான உத்திகளி லிருந்து முன்னேறிச்செல்லும்வகையில் புதிய
அழுத்தங்களையும், புதிய வண்ணங்களையும் கொண்டதாக அமையும் என்பது சங்பரிவாரத்தின்
அமைப்புக்களில் பல்வேறு நிலைகளிலுள்ள தீவிரத்தொண்டர்களுடன் கலந்துரையாடியபோது
தெளிவானது. அது மோடியின் தனிமனித ஆளுமையை ஒருபக்கத்திலும், தீவிர இந்துத்துவா
அரசியல் தேடலை மறுபக்கத்திலுமாகக் கொண்டு சுழலும். ‘வளர்ச்சிக்கான மனிதர் மோடி’ என்று உயர்த்திப்பிடித்த தோற்றமும், அதைப் பிரச்சாரப்படுத்திய
விதமும் நடுத்தர – குறிப்பாக நடுத்தரப் படித்த-வர்க்கத்தினரிடையே நல்ல தாக்கத்தை
ஏற்படுத்தியது. “தொலைநோக்குப்பார்வையோடு தேசத்தை மறுகட்டுமாணம் செய்பவர்” என்பதே மோடியின் தனிமனித ஆளுமையைக் காட்சிப்படுத்தும்
புதிய உத்தியாகும்.
‘மானுட மதிப்புக்களுக்கு அழுத்தம்கொடுத்து விவேகானந்தரின்
பேச்சை நினைவுகூர்ந்ததும், ஆசிரியர்தினத்தன்று தேசம்தழுவிய தொலைக்காட்சி நேரடிஒளிபரப்பில் குழந்தைகளோடு கலந்துரையாடியதும், முன்தயாரிப்பில்லாமல் ஆற்றிய
சுதந்திரதின உரையும் –
என எல்லாமுமே மோடியைப்பற்றிய ஒருபிம்பத்தை உருவாக்கும்
ஒருங்கிணைந்த முயற்சிகளின் பகுதிகளே காந்திஜி, நேரு, சர்தார்
பட்டேல் ஆகியோரின் ஒருங்கிணந்த கலவைதான் மோடி என்று உயர்த்திப்பிடிக்கப்படுவார்.
உன்னதமான மதிப்பீடுகளை அளிக்கும்தலைவராக, வளர்ச்சிக் கான பார்வைகொண்டவராக,
உறுதிமிக்கவராக, தீர்மானிக்கக்கூடியவராக மோடி தூக்கி நிறுத்தப்படுவார்’ என லக்னோவில் நடுத்தரநிலையில் உள்ள
ஆர்.எஸ்.எஸ் தொண்டர் தனது உடலை நெளித்துக்கொண்டு கூறினார்.
இந்தத்தந்திரத்தின் இரண்டாவது அம்சம்தான் இன்று நாடுமுழுதும் நாம்
கண்டுகொண்டி ருக்கும் மதவெறிக் கலவரங்களும், அச்சுறுத்தல்களும். இந்தவழிமுறைகள்
வெறும் அரசியலுக்காக மட்டுமல்ல: ஒட்டுமொத்த சமூகத்தின்மீதும் மேலாதிக்கம்
செலுத்துவதை நோக்கமாககொண்டது எனச் சங்பரிவாரத்திற்குள் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.
2014 தேர்தல் மூலம்அடைந்த இந்துத்துவா அரசியல்வெற்றியின் பின்தொடர்ச்சி, தேர்தல்கள்
நடைபெறவுள்ள மஹாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், ஹரியானா மாநிலங்களில் மீண்டும்
எதிரொலிப்பதில் சிரமம் இல்லை. என்வே, மேலும்பல வெற்றிகள் இதன்மூலம்
எதிர்பார்க்கப்படுகின்றன என்பதை அவர்களே நடத்திய கலந்துரையாடல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், சமூக மேலாதிக்கத்தைக் கொண்டுவருவதில் வெற்றிபெற, அரசியல் ஆதாயங்கள் பெற்ற
பகுதிகளிலும், இன்னும் அரசியல்ரீதியாக வெற்றிபெறவேண்டிய பகுதிகளிலும் நீண்ட
காலத்தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.
புதியதந்திரோபாயங்களை முன்னெடுத்துச்செல்வதில் அடைந்துள்ள அரசியல்
சமூகவிளைவு களில் சங்பரிவாரத்தலைமை தெளிவான திருப்தி கொண்டுள்ளது. மோடியின் தனிமனித
ஆளுமையைத் தூக்கிப்ப்பிடிப்பது, சமூகமேலாதிக்கத்தை அடைவதற்கான இந்துத்துவா
பிரச்சாரம் ஆகிய இரண்டும் சங்பரிவாரத்தில் ஏற்கனவே உள்ள புள்ளிவிபரங்களையும்,
பகுதி வாரியான அடித்தளங்களையும் ஒருங்கிணைக்க உதவியதோடுமட்டுமின்றி, பூகோளரீதியாக
தமிழ்நாடு, ஒடிஷா, மேற்குவங்கம், கேரளா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில்
புதிய சமூகவர்க்கங்களைத் தனது அடித்தளமாக மாற்றுவதற்கான புதிய ஆதரவுத்தளங்களை
உருவாக்கியுள்ளது எனவும் இதன் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த மதிப்பீடுகள்,
‘தொலை நோக்குப்பார்வையுடன் தேசத்தை மறுகட்டுமாணம் செய்பவர் மோடி’ என்ற தோற்றத்தால் கவரப்பட்டவர்கள் மெல்ல மெல்ல இந்துத்துவாவோடு இணைந்துள்ள
‘சமூக மேலாதிக்கம்’ என்ற கருத்தாக்கத்தையும் ஏற்றுக்கொள்பவர்களாக மாறுவார்கள்’ என்ற வியாக்கியானத்தையும் முன்வைக்கின்றன. குறிப்பாக ஜம்மு-காஷ்மீரைப்பற்றிய
எடுத்துக்காட்டில் “2002ல் சட்டமன்றத்தில் 1 இடம் என்பதிலிருந்து 2008ல் 11 இடம்
என்று தனது எண்ணிக்கையை பா.ஜ.க. அடைந்தது” எனக்கூறிய மூத்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்
“இந்தமுறை மத்தியில் மோடியின்அரசு அமைந்துள்ள சூழலில் இதன்தாக்கமும், புதிய
தந்திரோபாயங்களும் இந்த எண்ணிக்கையைச் செல்வாக்குமிக்க சக்தியாக உயர்த்தும்”, என்கிறார். ‘இது காஷ்மீரில் இந்து ஆதிக்கம் துவங்குவதன் அறிகுறி’, என்கிறார் அவர்.
ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் துணை அமைப்புக்களும் தங்களது வாழ்நாளில் மிகச்சிறந்த
காலகட்டம் இது என இன்றைய காலகட்டத்தை ஆதாரங்களோடு மதிப்பிடுகிறார்கள். விநாயக்
தாமோதர் சாவர்க்கர் இந்துத்துவா அரசியலை ‘இந்து அரசியல் அடையாளத்தளத்தை உருவாக்கி
வளர்ப்பதற்கான கருத்தாக’ உருவாக்கினார். பல்வேறு முயற்சிகளுக்கும்,
பின்னடைவுகளுக்கும் பிறகு இப்போது இந்து அரசியல் அடையாளத்தை உருவாக்குவதில்
கிட்டத்தட்ட வெற்றியைப் பெற்றுவிட்டதாக சங்பரிவாரத்தில் இணைந்துள்ளவர்கள் உணருகி றார்கள்.
“இந்து சமூகத்தில் உள்ள சாதிப்பிரிவினைகள் ‘இந்து அரசியல் அடையாளத்தை’ உருவாக்குவதற்குத் தடைக்கற்களாக உள்ளன என்ற புரிதல் இந்தக்கருத்தக்கத்தை
முன்னெ டுத்துச் செல்பவர்கள் மத்தியில் தெளிவாகக் காணப்படுகிறது. சாவர்க்கர்
ஸ்தாபித்த ‘ஹிந்து மஹா சபா’வும், அதுபோலவே ஆர்.எஸ்.எஸ்.ஸும்
இந்தச்சாதிப்பிரிவுகளைத் தாண்டிச்செல்ல நாட்டின்பல்வேறுபகுதிகளில்
எல்லாச்சமூகத்தினரும் பங்கேற்கும் உணவுத்திருவிழாக்களை நடத்தின. ஆனால், அப்போது
காங்கிரஸ் பெற்றிருந்த மக்கள்செல்வாக்கைத் தாண்டிச்செல்ல இவை போதுமானதாக இல்லை.
சுதந்திரத்துக்குப்பின்,
இந்துத்துவாவாதிகள், ‘பசு பாதுகாப்பு’ என்பதை இந்துக்களின் உணர்வுகளோடுஇணைத்துத்
தீவிரப்பிரச்சாரங்களையும் ,முழக்கங்களையும் பின்பற்றத் துவங்கி னார்கள்.
இதுவும்கூட நாடுதழுவிய அளவில்
நடைபெறவில்லை: அவர்களுக்கு உதவவு மில்லை. 1975 ல் நெருக்கடிநிலை
திணிக்கப்பட்டதும், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த போராட்டம் 1977 ல்
இந்திராகாந்தியைத் தோற்கடித்ததும் நிகழ்ந்தபோது, இந்துத்துவா திட்டம் சிறிதளவு
தலைதூக்கியது. வலதுசாரி முதல் இடதுசாரி வரையான கொள்கைகளின் செல்வாக்குமிக்க ‘ஜனதா’ கட்சியில் ஜனசங்கத்தை இணைக்க ஆர்.எஸ்.எஸ். அனுமதித்தது.
இருந்தாலும் ஜனதாகட்சிக்குள்ளும் தனது இந்துத்துவா அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ள
ஆர்,எஸ்.எஸ். விரும்பியது. இந்த முக்கியமான காரணத்தால் ஜனதா பரிசோதனை விரைவில்
முடிவுக்கு வந்தது.
இந்தப்பிரிவு, பாரதிய ஜனதா கட்சியை உருவாக்க
வழிவகுத்தது. 1980களின் நடுவிலும், பின்னரும் பா.ஜ.க.வுக்கு ஆதிக்கம் மிகுந்த
அரசியல் தளத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். அயோத்தியில் இராமர்கோவில் போராட்டத்தைப்
பயன்படுத்திக்கொண்டது. இது, 1992 ல் பாபர் மசூதியை இடிப்பதற்கு வழிவகுத்தாலும்கூட
இந்த இயக்கத்தின்மூலம் அரசியல் ஆதாயம் அடைந்திட சங்பரிவாரங்களால் முடியவில்லை.
1977ல் மீண்டும் ஒருசமரசத்திட்டத்தை- இம்முறை அரசியல் கூட்டணியின்மூலம்-
முயற்சித்தது. இது 1990களின் பிற்பகுதியில் செயல்பட்டு கட்சித்தலைவர் அடல்பிகாரி
வாஜ்பேயி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 1988மூதல் 2004 வரை அமைய உதவியது.
இதிலிருந்து 10 ஆண்டுகள் எதிர்க் கட்சி அரசியலும், 2014 ல் மோடியை
முன்நிறுத்திப்பெற்ற தனிக்கட்சிப் பெரும்பான்மையும் உண்மையில் ஒருமாபெரும்
முன்னோக்கிய பாய்ச்சலாக அமைந்தது. வரலாற்றுப்பூர்வமான இந்தவெற்றி,வெளிப்படையாக சங்பரிவாரத்தின்
ஒட்டுமொத்த சமூக,அரசியல் மேலாதிக்கத்தை நோக்கிச்செல்ல உந்தியது.
சமூக மேலாதிக்கத்தை நோக்கிய முரட்டுத்தனமான
உந்துதலையும், சங்பரிவாரத்தின் மதிப்பீடுகளையும்பற்றி லக்னோவில் உள்ள அரசியல்
ஆய்வாளரான சுதிர் பன்வார், “ஓரம் கட்டுவதும், பகைமைப்படுத்துவதும் இந்த
முரட்டுத்தனமான உந்துதலின் முதன்ம்மையான வெளிப்பாடுகள் ஆகும்”, என்கிறார். “ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு ஒரு சமுதாயத்தை ஓர்
இடத்திலிருந்து அல்லது பகுதியிலிருந்து விரட்டியடிக்க உங்களுக்கு வன்முறை
தேவைப்படாது. ஏற்கன்வே உணரப்பட்ட வன்முறைச்செயல்களே துன்புறுத்தி ஒருசமுதா யத்தை
ஒருபகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேற்றி ஓரம்கட்டுவதையும்,
பகைமைப்படுத்துவதையும் சாதித்துவிடும். இவ்வாறு கூட்டம் கூட்டமாக வெளியேறும்
சமுதாயம் எந்த இடத்தில் அல்லது எந்தப்பகுதியில் பலம்வாய்ந்த எண்ணிக்கையைக்
கொண்டிருக்கிறதோ அங்குபாதுகாப்பான உணர்வைப்பெறும். இது,மறுபுறத்தில்
சேரிப்பகுதிகளை உருவாக்கி ஓரம்கட்டப்பட்டவர்களை மேலும் ஓரம்கட்டும்”என்கிறார். பன்வார் “2002ல் குஜராத்
கலவரங்களிலும்,இப்போதும்கூட மேற்குஉத்திரப்பிரதேசத்திலும் இந்த நிகழ்ச்சிப்
போக்குகளைக் காணமுடியும்” என்கிறார்.
நாட்டின் பலபகுதிகளிலும் இந்தப்போக்குகள்,
அளவுகளில் மாறுபட்டிருந்தாலும், திரும்பத் திரும்ப நிகழ்ந்துகொண்டிருப்பதைக்
காணமுடிகிறது. சத்தீஸ்கரில்50கிராமசபைகள் ‘ இந்துக்கள் அல்லாத தனிநபர்களோ, அமைப்புக்களோ
அவர்களது கிராமங்களுக்குள் நுழைவதையோ, மலைவாழ்மக்கள் தங்கள் பகுதிகளில் பல்வேறு
வடிவங்களில் செய்வதைப்போல் தொழில் செய்வதையோ, இந்துமதத்தைத்தவிர பிறமதங்களைப்
பிரச்சாரம் செய்வதையோ, உபதேசிப் பதையோ தடை செய்யும் தீர்மானங்களை
நிறைவேற்றியுள்ளன.” இந்தக்கிராமங்களில் வசிக்கும் கிறிஸ்தவக்
குடும்பங்களுக்குப் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் பொருட்கள் வழங்குவதையும் இந்தத்
தீர்மானம் தடை செய்கிறது. தனியார் கடைக்காரர்கள் கிறிஸ்தவர் களுக்குப் பொருட்களை
விற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹரியானாவிலும்,
உத்திரப்பிரதேசத்தின் பலபகுதிகளிலும் சங்பரிவாரங்கள் பல நூற்றாண்டுகளுக்குமுன்
இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களை மீண்டும் இந்துக்களாக மதமாற்றம் நடவடிக்கைகளைத்
துவக்கியுள்ளன.
இந்துத்துவா சமூக மேலாதிக்கக்
கருத்தாக்கத்தின் ஒருபகுதியாக டெல்லியில், உலக வர்த்தகப் பொருட்காட்சிகளும்,
புத்தகக் கண்காட்சிகளும் நடைபெறும் தலைநகரின் பொருட் காட்சித்திடலான பிரகதி
மைதானத்தில் அண்மையில் ஒருமுற்றுகைப் போராட்டத்தை வி,ஹெச்.பி.யும், பஜ்ரங்தள்
அமைப்பும் நடத்தின.
“அலிஷான் பாக்கிஸ்தான்” என்ற பெயரில்
அங்கு நடைபெறும் வாழ்க்கைத்தேவைக்கான பொருட்காட்சியை தடுக்கவேண்டும் என்பதுதான் அவர்களின்
ஒரேஒரு கோரிக்கை. “அந்தப்பொருட்காட்சி, பாகிஸ்தானையும், அதன் தயாரிப்புக் களையும்
புகழ்ந்து கூறுகிறது. இது நமது இந்தியக்குடிமக்களின் உணர்வுகளைக் காயப்
படுத்துகிறது” என்பதுதான் அவர்கள் முன்வைக்கும் வாதம். போராட்டக்காரர்கள்,
‘நாட்டில் எல்லாப் பாகிஸ்தான் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும்’, என அழைப்பு விடுத்துள்ளனர். அதுமட்டுமா? “வணிகசமூகத்தினர்
மாபெரும் தேசபக்த உணர்வோடு பாகிஸ்தான் தயாரிப்புக்களிலிருந்து விலகி நிற்க வேண்டும்” என எச்சரித்தனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்புக்கள்,
போராட்டங்கள், பெருந்திரள் நடவடிக்கைகள் போன்ற வடிவங்களில் மேற்கொள்ளப்படும் இந்த
முயற்சிகள் ஏராளமான சங்பரிவாரத் தீவிரத் தொண்டர்களால் அரசியல், தத்துவம்,
சமூகஅமைப்பு ஆகியதளங்களில் இந்த்த்துவா வரலாற்றுச் சாதனைகளின் துவக்கமாக
ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. “இந்துத்துவாவின் பயணத்தில் மத்தியில் ஒருதனிக்கட்சிப்
பெரும்பான்மை பெற்றது ஒருவரலாற்றில் ஒருமைல்கல் ஆகும். ஆனால், சாவர்க்கரின் தத்துவ
வழிகாட்டலில் துவங்கிய இந்தப்பயணம் இந்துத்துவா ஒட்டுமொத்த சமூக மேலாதிக்கத்தை அடையும்போதுதான்
நிறைவடையும். இந்தப்புதிய தோற்றம் இந்துத்துவா மேலாதிக்கத்தை அடைவதை முதன்மை
இலக்காகக் கொள்ளும்” எங்கிறார் லக்னோவில் உள்ள மூத்த ஆர்.எஸ்.எஸ். செயல்பாட்டாளர்.
இந்த நகர்வுகள் பள்ளிப்பாடநூலகளில் இந்துத்துவாசார்ந்த வரலாற்று நோக்கங்களை உணர்வு
பூர்வமாக நுழைப்பதையும் ஒருபகுதியாகக்கொண்டுள்ளன.
2014
தேர்தல்கள் நடைபெற்றபோது, பாகிஸ்தானின் பெண்ணியக்கவிஞர் ஃபாஹ்மிதா ரியாஸ்
இந்தியாவில் இந்துத்துவாவின் எழுச்சியைக்கண்டு பொறுமை இழந்து எழுதிய கவிதை
சமூகஊடகத்தளங்களில் சுற்றுக்குவிடப்பட்டது. அந்த உருதுகவிதையின் முதல் சிலவரிகளின்
தோராயமான மொழியாக்கம் இவ்வாறு உள்ளது:
“
நீங்களும் எங்களைப்போலவே ஆகிவிட்டீர்கள்
கடந்தகாலச் சேற்றில் புரளும் அதேபோன்ற முட்டாள்களாக
கடைசியில் நீங்களும் அதே வாசலை அடைந்துவிட்டீர்கள்
உங்களின் மதமான பேய் கோமாளிக்கூத்தாடுகிறது
என்னவெல்லாம் நீங்கள் செய்கிறீர்களோ அவை தலைகீழ் ஆகும்.
ஃபாஹ்மிதா ரியாஸின் ‘ அதே வாசலை
அடைந்துவிட்டீர்கள்’, ‘அதேபோன்ற முட்டாள்களாக” ஆகியகுறியீடுகள் பாகிஸ்தான் என்றநாடு
பிறந்ததிலிருந்து நடைபெற்றுவரும் மதஅடிப்படை வாத நிகழ்ச்சிகளோடு வெளிப்படையான
ஒப்புமை கொண்டவை ஆகும். அவரது கவிதை, தீவிரப் பிற்போக்குத்தனமான மதம்சார்ந்த
பாகிஸ்தானின் அரசியல் நடவடிக்கைகளைப் பின்பற்றுவதுபோலவே இந்திய ஜனநாயகமும்
ஆகிவருவதில் ஏமாற்றமடைந்த உனர்வுகளின் வெளியீடு எனக்கருதப்பட்டது.
இந்துத்துவா அணியில் இந்தியா முழுவதும்
அரங்கேறிவரும் மதவெறி நிகழ்வுப்போக்குகள் இந்தக்கவித்துவ வெளிப்பாடு நிதர்சனமாகி
வருவதைக் காட்டுகிறது.
நன்றி : ஃப்ரண்ட் லைன் அக்டோபர் 3 – 2014.