ஆர்.எஸ்.எஸ் - மூன்றாவது பரிமாணம்
திமிறிய பி.ஜே.பி.க்குக் கடிவாளமிட்ட மோகன்பகவத்
தினேஷ் நாராயணன் தமிழில்: செ.நடேசன்
ஒன்று
கடந்த ஆண்டு ஆகஸ்ட் துவக்கத்தில் உலகின் பிகப்பெரிய
அரசியல்சார்பற்ற தன்னார்வத் தொண்டுநிறுவனம்என்று சொல்லிக்கொண்டு இந்தியாவில்
இந்துதேசியவாதத்தின்அடித்தளமாக விளங்கும் ராஷ்ட்ரிய சுயம்சேவக்சங் கொல்கத்தாவில்
நடத்திய “இஸ்லாமிய அடிப்படை வாதம்’என்றஇரண்டுநாட்கள்
கருத்தரங்கில் பத்திரிக்கையாளர்படை திரண்டிருந்தது. பத்திரிக்கை யாளர்களைக்
குறிவைத்து அந்த அமைப்புக்குரிய ஜம்மு-காஷ்மீர் அரசியல் உள்ளிட்ட தாழ்த்தப்பட்டசாதியினர்,
வளர்ச்சி ஆகிய பிரச்சனைகள்மீது நடத்திய நான்கு தொடர் கருத்தரங்குகளில் முதலாவது
இது. சங்அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களை
மட்டுமே கருத்தரங்கில் அனுமதித்தார்கள். மற்ற மூன்றும் புதுடெல்லி, பெங்களூரு,
அஹமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெற்றன. இவற்றில் நாடுமுழுவதிலுமிருந்து 220பேர்
கலந்துகொண்டார்கள்.
கொல்கத்தாவில் பிரச்சார் பிரமுக் அல்லது உயர்நிலைப்படுத்தும்
தலைவரும் நிகழ்ச்சியின் தலைமைஒருங்கிணைபாளருமான மோகன்வைத்தியா
பத்திரிக்கையாளர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். நிலைபற்றிய உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும்,
அதன்மூலம் இந்துதேசியத்தின் பார்வையை நன்குஉயர்த்திப் பிடிக்கவும் ஆர்.எஸ்.எஸ்.ன்
அடிப்படை நோக்கங்களை முன்வைத்தார். கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் ‘இக்கருத்தரங்கம்பற்றி
ஆர்.எஸ்.எஸ்.வட்டத்துக்கு வெளியே எடுத்துரைக்கவோ, பேசவோ கூடாது’ என அறிவுறுத்தப்பட்டார்கள். உள்ளூர் நாளேட்டில் பணி யாற்றும்
பத்திரிக்கையாளரும், சுயம்சேவக் அல்லது ஆர்.எஸ்.எஸ். தொண்டருமான ஒருவர் என்னிடம்,
“நாங்கள் ஒருகாதில்வாங்கியதை மறுகாதில் விட்டுவிடவேண்டுமென்று அறிவிக்கப் பட்டோம்” என்றார்.
ஒருகட்டத்தில்மஹாராஷ்ட்ராவிலிருந்துவந்த
ஹோமியோபதிமருத்துவரும், சங்அமைப்பில் இஸ்லாமிய இந்து அறிஞராகச் செயல்படுபவருமான
ஸ்ரீரங் காட்போலே, முஸ்லீம் சமுதாயம் உறுதியான ஒரேகட்டமைப்பை உடையதல்ல. இந்துக்கள்
சாதி அடிப்படையில் பிளவுபட்டுக் கிடப்பதைப்போல அவர்களும் பல்வேறு பிரிவுகளாகப்
பிரிந்து இருக்கிறார்கள் என்று விளக்கினார். மேலும் அவர் ‘சாந்தசொரூபிகள்’ எனக்கருதப்படும் சுபியிசம் போன்ற பிரிவினர் கடந்தகாலங்களில் வன்முறையாளர்களாக
இருந்தார்கள். என வர்ணித்தார். நமது தலைவர் களில் சிலர் வரலாற்றை
நன்குபுரிந்துகொள்ளாமல் சுபி துறவிகளுக்குப் புகழாஞ்சலி செலுத்து கிறார்கள்
என்றார். அப்போது ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர்தர்ஹாவில் பி.ஜே.பி. தலைவர் எல்.கே.அத்வானி
இருந்தபடம் திரையில் காட்டப்பட்டது. அது கருத்தரங்கம் முழுவதும் உடனிருந்த
ஆர்.எஸ்.எஸ். சர்சங் சாலக் அல்லது உயர் அதிகாரம்கொண்ட தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட
அனைவரிடமும் ஒருபெருத்த சிரிப்பலையை ஏற்படுத்தியது. பிரச்சனை என்னவென்றால்,
இந்துக்கள் தங்களைச் சிறுபான்மையினர் என்று நினைக்கத் துவங்கியதுதான், என்றும்,
இந்துக்கள் மிகவும் உறுதியான தேசியநிலைபாட்டை
எடுக்கவேண்டும்’ என்றும் மோகன்பகவத் பின்னர் அக்குழுவினரிடம் கூறினார்.
தேநீர் இடைவேளையின்போது பத்திரிக்கையாளர்கள்
பகவத்துடன் உரையாடினார்கள். தவிர்க்கமுடியாமல் பாரதிய ஜனதா கட்சிபற்றியும், இரண்டு
மாதங்களுக்குமுன் ஆர்.எஸ்.எஸ். பின்பலத்தோடு பி.ஜே.பி.யின் தேர்தல்
பிரச்சாரக்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திரமோடி பற்றியும் அந்த
விவாதம் திரும்பியது. அந்தக்குழுவிடம்,’ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளில்
உறுதியாக வேரூன்றி நிற்கும் ஒரேநபர் நரேந்திரமோடி தான்’ என்றார். பகவத்.
ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. தலைவர்களிடம், “நீங்கள் நல்ல வேட்பாளர்களைக் கண்டுபிடியுங்கள்.
மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று கூறியதாகவும் அவர்
தெரிவித்தார்.
கட்சி,’பொதுவாழ்வில் தூய்மை மற்றும்
இந்துசமுதாயத்துக்குச் சேவைபுரிதல்’ ஆகிய மையமான
மதிப்பீடுகளைத் தழுவி நிற்கவேண்டும். இல்லாவிட்டால் கட்சி விரைவில் பொருத்தமற்ற
ஒன்றாக ஆகிவிடும். நாம் 2014ல் வெற்றிபெற்றுவிட்டால் அடுத்த 25 ஆண்டு களும்
அதிகாரத்தில் இருப்போம். இல்லாவிட்டால் நாம் அனைவரும் முயற்சித்தாலும் அடுத்த நூறு
ஆண்டுகளில் கட்சியைக்கூடப் பாதுகாக்க முடியாது.” என்று பி.ஜே.பி. தலைவர்களிடம் கூறுமாறு மோகன்பகவத் பத்திரிக்கையாளர்களைக்
கேட்டுக்கொண்டார். “அவர் சொன்னவிதம், அநேகமாக பி.ஜே.பி.க்கு ஒருகடைசி வாய்ப்பை
அளித்த்தைப்போல நாங்கள் உணர்ந்தோம்” என்றார் என்னிடம்
அந்தப்பத்திரிக்கையாளர்.
இன்றைய இந்திய அரசியலில் மிகவும்
சக்திவாய்ந்த வெளிநபர் – ஒருவிவாதத்துக்கு எடுத்துக்கொண்டால், மோகன் பகவத் தான்.
பொதுவில் ஆர்.எஸ்.எஸ். அரசியலிலிருந்து விலகிநிற்பதாகக் கூறிக்கொண்டாலும்,
பகவத்தின்அமைப்பு தத்துவார்த்த மற்றும் நடைமுறைத் தந்திர வழிகாட்டுதல்களைப்
பெருமளவுக்கு அளிப்பதோடு தோராயமாக இந்தியா நெடுகிலும் 36 இணை அமைப்புக்களிலிருந்து
பல தலைவர்களையும் அளித்துவருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்சங்கம் என்று
கூறிக்கொள்ளும் ஒருகோடி உறுப்பினர்களைக்கொண்ட ‘பாரதிய மஜ்தூர் சங்”, நாட்டின் மிகப்பெரிய மாணவர் அமைப்பான ‘அகில பாரதிய
வித்யார்த்தி பரிஷத்’. நாட்டின்
மிகமுக்கிய எதிர்க்கட்சியான பி.ஜே.பி. ஆகியவை இதனுள் அடங்கும். ஒட்டு மொத்தமாக சங்
பரிவார், சங் குடும்பம் என அழைக்கப்படும் இதன்பல்வேறு கிளைகளும் நாடு முழுவதும்
கல்வி, பழங்குடியினர் நலம், இந்து சம்ய நிகழ்வுகள் என 1,50,000 க்கும் மேற்பட்ட
செயல்திட்டங்களை நட்த்திவருகின்றன. இந்த ஒட்டுமொத்த இயக்கத்தின் வழிகாட்டியாகவும்,
த்த்துவ போதகராகவும் சர்சங்சாலக் கருதப்படுகிறார். 2009ல் இந்தப்பொறுப்புக்கு
உயர்த்தப்பட்ட காலத்திலிருந்து, இந்திராகாந்தி, காங்கிரஸை மகத்தான வெற்றிபெற
வைத்துத் தனது அதிகாரத்தை நிலைநாட்டிய 1971 தேர்தலைப்போல பி.ஜே.பி.யை வெற்றிபெற வைக்கவும்,
அதற்கான தயாரிப்புக்களை மேற்கொள்ளவும், போராடவும் ஆர்.எஸ்.எஸ்.ஐயும், அதன் துணை
அமைப்புக்களையும் பி.ஜ்.பி.க்கு ஆதரவாக பகவத் அணிதிரளச்செய்தார்.
கொல்கத்தாவில் பகவத் தெரிவித்த ‘இந்தியாவை
இந்துதேசமாக்கும் தொலைநோக்குப் பார்வை சங் பரிவாரங்களைக் கௌவிப்பிடித்து
பி.ஜே.பி.யையும், அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் மிகப்பெரிய
ஆற்றல்மிக்க சக்திகளாக வெற்றிபெற வைத்துள்ளது இப்போது தெரிகிறது. அதேசமயம்
ஆர்.எஸ்.எஸ்.க்கும், பி.ஜே.பி.க்குமிடையே நீண்டகாலமாக நிலவிவந்த முரண்பாடுகளையும்
அது எதிரொலித்த்து. உச்சகட்டமான அயோத்தியில் பாபர்மசூதி இடிப்பு- அதைத்தொடர்ந்து
அமைந்த பி.ஜே.பி.யின் முதல் அரசு என இருபது ஆண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸ்.க்கும்,
கட்சிக்குமிடையிலான பிளவு விரிவடைந்தே வந்தது. ஆர்.எஸ்.எஸ்.ன் முழுநேர
உறுப்பினர்கள் தங்களது அமைப்பின் இலட்சியங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற ஒற்றை
நோக்கத்தில் நிலைகொண்டிருந்தார்கள். ஆனால், தொடர்ந்து முரண்பட்ட பி.ஜே.பி.
தலைவர்கள் நவீனவசதிகளிலும், அதிகாரங்களிலும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
கட்சியில் இருந்த பலரும் ஆர்.எஸ்.எஸ். அரசியலைப் புரிந்து கொள்ளவில்லை என்றே
நம்பினார்கள். மூத்த பி.ஜே.பி. தலைவரும், தே.ஜ.கூ அரசின் முன்னாள் அமைச்சருமான
ஒருவர் என்னிடம்.”கடந்த சில ஆண்டுகளாக் கட்சியில் இந்துத்வா வாதிகள்
அதிகரித்துவிட்டார்கள். போதுமான அரசியல் புரிதல் இல்லாதவர்கள் கட்சிக்குள்
நுழைக்கப்பட்டுவிட்டார்கள்” என்றார். ஆனால்,
ஆர்.எஸ்.எஸ். தலைவர்களோ தங்கள் பங்குக்கு ‘கட்சி தனது கொள்கைகளில் சமரசம்
செய்துகொண்டுவிட்டது. ஆர்.எஸ்.எஸ்.ன் செல்வாக்கிலிருந்து நெடுந்தூரம் விலகிச்சென்றுவிட்ட்து” என்றார்கள்.
ஆர்.எஸ்.எஸ்.ம், கட்சியும்
வளர்ச்சிபெறவேண்டும் அல்லது ஜீவித்திருக்கவேண்டும் என்றால்கூட ஒன்றையொன்று
சார்ந்திருக்க வேண்டும் என்பதே எதார்த்த நிலையாக இருந்தது.
பி.ஜே.பி.யின்வெற்றிக்கான வாய்ப்பாக-குவிமையமாக மோடி ஊடகங்களால் உயர்த்திப்பிடிக்கப்
பட்டாலும், வேறுஎவரையும்விட பகவத்தான் அக்கட்சியின் எதிர்காலத்தை நிர்வகிப்பார்.
நாட்டிலுள்ள ஒவ்வொருகட்சியும் பொறாமைப்படும் அளவுக்கு மிகவும் கட்டுப்பாடுகொண்ட
தொண்டர்படையை ஆர்.எஸ்.எஸ்.கொண்டுள்ளது. பி.ஜே.பி.யும் இந்தப்படையின் ஆதரவு
இல்லாவிட்டால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படுவோம் என்பதை உணர்ந்திருந்தது. அதேநேரத்
தில் ஆர்.எஸ்.எஸ்.ன் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள – இந்தியசமுதாயத்தை ஒரு
குறிப்பிட்ட இந்துத்வா வழிகளுக்குள் ஈர்த்துக்கொள்ள, பரம் வைபவ் அல்லது
இறுதிப்புகழைப் பாரதம் (இவ்வாறுதான் இந்தியாவை அழைக்க அந்த அமைப்பு விரும்புகிறது)
எய்திட- விஸ்வ குரு அல்லது உலகின் வழிகாட்டியாக ஆக்க மிகவும் வலிமையான, தன்பால்
அனுதாபம் கொண்ட ஓர்அரசு இருந்தாகவேண்டும் என்பதை பகவத்தும் உணர்ந்திருந்தார்.
இந்தியாவில் எந்தஒரு கட்சியாலும் 40% வாக்குகளைப்பெறவோ, மூன்றில் இரண்டுபங்கு
பெரும்பான்மை பெறவோ முடியாதநிலையில் நீங்கள் எதையும் செய்துவிடமுடியாது என
ஆர்.எஸ்.எஸ்.ன் துணைப்பொதுச்செயலாளர் ஒருவர் கூறினார்.
கொல்கத்தாவில் பகவத் பி.ஜே.பி.க்கு ஒருஇறுதி
வாய்ப்பளிப்பதில் உறுதியாகஇருப்பதுபோல் தோன்றினாலும், ஆர்.எஸ்.எஸ்.ம் தான்
தொடர்ந்து நிலைத்திருப்பத்ற்கான மையப் பிரச்சனைகளில் போராடிக்கொண்டிருந்தது.
1925முதல் ஆர்.எஸ்.எஸ்.ன் தொடக்ககாலத்தி லிருந்து அதன்மையத்தூணாக விளங்கிவருவது
அதன் உள்ளூர்க்கிளைகளின் ‘சாகா’க்கள்தான்.
தன்னார்வத்தொண்டர்கள் பயிற்றுவிக்கப்பட்டார்கள். ஆற்றல்மிக்க முழுநேரப்பணியாளர்கள்
அல்லது பிரச்சாரக்குகள் நியமிகப்பட்டார்கள். சிலஇளம்சேவக்குகள் தாங்கள்
நடக்கப்பழகியபின் சாகாக்களில் பங்குபெறத்துவங்கினார்கள். நாடுதழுவிய அளவில்
இத்தகைய ஆற்றல்மிக்க 45,000 கிளைகளை ஆர்.எஸ்.எஸ்.கொண்டிருந்தது. அவற்றில் 2,000
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் உருவாகியுள்ளன. ஆனால், சங்குடும்பத்தில் உள்ள
மத்தியப்பிரதேச முன்னாள் அமைச்சர், சுயம்சேவக் உட்படப் பலர், “சமீபகாலங்களில்
இந்தக்கிளைகளில் பெரும்பாலான வற்றில் வருகை மிகவும் குறைவாக உள்ளது. குழந்தைத்
தன்னார்வத்தொண்டர்களையும், முழுநேர ஊழியர்களையும் கவர்வதில் அமைப்பு திணறுகிறது.
தங்கள் வாழ்வின் இளமைக் காலத்தைஅர்ப்பணித்துக்கொள்ளும் இவர்களுக்கு,சங்அமைப்பில்,
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் படுத்துறங்க ஒருகட்டிலைத்தவிர வேறு எதையும் –
குறிப்பாகப் பணிவாய்ப்பில் முன்னேறிச் செல்லவும், வாழ்க்கையை,வசதிவாய்ப்புக்களை
அளிப்பதிலும் எந்த உத்தரவாதமும் இல்லை. பரவலாகச்சொல்லப்படும் எடுத்துக்காட்டுகளாக
எல்லா ஆர்.எஸ்.எஸ்ஆண்களும், பெண்களுக்கு எதிரான பாகுபாடு உள்ளவர்களாகவும்,
தன்னினச்சேர்க்கை கொண்டவர்களாகவும் உள்ளனர்.மத உணர்வில் பொறுமையற்றவர்களாகவும்,
மக்கள்பகுதியிலிருந்து தனிமைப்பட்டவர்களாகவும், தீவிரவாதம் கொண்டவர்க்ளாகவும்
உள்ளார்கள் என்று கவலையுடன் கூறுகின்றனர்.
இந்த அமைப்புக்கு அதிக அச்சுறுத்தலாக உள்ளவை
அதன் உறுப்பினர்களிடையே சகிப்புத் தன்மை இல்லாமையும், வன்முறையை
வளர்த்தெடுப்பதும்தான். அவர்களின் நடவடிக்கைகள் பலமுறை ஆர்.எஸ்.எஸ்..ஐத் தடைசெய்ய
வைத்தன. அண்மையில் சங்தலைவர் சுவாமி அசீமானந்தா ‘தி கேரவன்’ இதழுக்கு அளித்த பேட்டியில், ‘2006 முதல் 2008வரை தாம்வகுத்த
சதித்திட்டங்களுக்கும், 119 பேரைக்கொன்ற தொடர்குண்டுவெடிப்புக்களுக்கும் பகவத்
உள்ளீட்ட மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அனுமதி அளித்தனர் என்று தெரிவித்தது
ஒருபரந்துபட்ட விவாதத்தை உருவாக்கியது. இந்த அமைப்பு இனித்தொடர்ந்து செயல்பட வழி
இல்லையா? என்ற கேள்வியை எழுப்பியது. (இதுபற்றி மோகன்பகவத் பேட்டிக்குப் பலமுறை
முயன்றும் மோகன்வைத்யா அது சாத்தியமில்லை. ‘தி கேரவன்’ இதழில்வந்த பேட்டியால் அல்ல. தேர்தல் முடியும்வரை அவர்
பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசுவதில்லை என்பதால்”. என்று என்னிடம் கூறினார்.
அரசியல் ஆய்வாளரும், ‘யதாவத்’ என்றஇந்தி வாரஇதழின் ஆசிரியருமான ராம்பஹதூர்
நாயக்(இவர் கே.என்.கோவிந்தாச்சார்யாவுடன்
ஆர்.எஸ்.எஸ்.ஆதரவில் நடைபெற்ற ‘பீகார் சத்ர அந்தோலன்’ போராட்டத்தில் ஒருபிரதிநிதியாக இருந்தவர். (இந்திராகாந்திக்கு எதிராக
ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் இலஞ்சஊழலுக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டம்
அவசர நிலையைப் பிரகடனம் செய்யவைத்தது.) “பகவத்தின்முன் இரண்டு இலக்குகள் இருந்தன.
ஒன்று பி.ஜே.பி.யைச் சீர்திருத்துவது, மற்றது சங்அமைப்பைச் சீர்திருத்துவது.’ என்றார்.
சங் குடும்பத்திலுள்ள வேறுபாடுகளைக் களைவதை
பகவத் மிகப்பெரிய அளவில் துவங்கியிருந்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத்
தலைமையேற்ற ஐந்து ஆண்டுகளில் அதிகார மையத்தையும், மதநம்பிக்கையையும்
இணைத்துநிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்கவழிமுறையைக் கையாண்டார். பல்வேறு துணை
அமைப்புக்களை மீண்டும் ஒருங்கிணைத்து அவற்றைக் கட்டுப்படுத்தினார். விஸ்வ ஹிந்து
பரிஷத், பஜ்ரங்தள் போன்ற தீவிரஅமைப்புக்களுக்குக் கடிவாளமிட்டார். ‘சாகா’க்கள் நவீனமயமாக்கப்பட்டுப் பயிற்சி வகுப்புக்கள் அதிக
வசதிகளோடு அதிக எண்ணிக்கையில் நடைபெறத்துவங்கின. வெளிநாடுகளில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.
உறுப்பினர்களுக்கு இணையதளம் வழியாகப் பயிற்சிவகுப்புக்கள் நடைபெற்றன. அந்த
அமைப்பின் ‘பிரசார விபாக்’ எனும்
விளம்பரத்துறை சமூகஊடகங்களில் சக்திமிக்க வகையில் செய்திகளை இடம்பெறச்செய்ய
அரும்பாடு பட்டது. பி.ஜே.பி.யின் தலைமையைத் தேர்ந்தெடுப் பதிலும், தேர்தல்களில்
சங்ஊழியர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் பங்கேற்க வைப்பதிலும், மோடியை
முன்னுக்குக் கொண்டுவருவதிலும் பகவத் பலஉதவிகளைச்செய்து பி.ஜே.பி.க்குள்
ஆர்.எஸ்.எஸ். செல்வாக்கை ஆழப்படுத்தினார்.
தனது எட்டாம் வயதில் ஆர்.எஸ்.எஸ்.ல் சேர்ந்த
மோடி, அந்த அமைப்பின் தகவல் தொடர்பாளராக பி.ஜே.பி.யில் பணியாற்றினார்.
இருஅமைப்புக்களிலும் குஜராத் முதல்வர் என்ற தகுதியில்செல்லப்பிள்ளையாகவும்,
துருவநட்சத்திரமாகவும் ஆனார். மக்களுக்குத் தேவையான வற்றை நிறைவேற்றித்தரும்
பொருளாதாரத்திட்டங்களோடு மோவட்டோ கடிகாரம், பல்காரி கண்ணாடி, மாண்ட்டோ பேனா
ஆகியவற்றை அணிந்து இந்து ஆண்மையின் பெருமையாக விளங்கினார். அவருள் சமகால
இந்தியவாழ்வின் அடிநாதமாகஉள்ள தேவைகளுக்கும், இந்திய மனப்பான்மைக்கும் இடையே உள்ள
பதட்டத்தைத் தணிக்கும் அல்லது மறையவைக்கும் வழியை ஆர்.எஸ்.எஸ். கண்டது. அவரும்
சங்தொண்டர்களை உற்சாகப்படுத்தி உதவினார்.
சங்அமைப்பின் அதிகாரபூர்வமற்ற ஓய்வுபெறும்
வயதான 75ஐ அடைய பகவத்துக்கு இன்னும் ஒரு பத்து ஆண்டுகள்மட்டும் உள்ளன. 2025ல் அது
சமகால நிகழ்வாக ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டாகவும் அமைகிறது. அதற்காக சங்அமைப்பு
இப்போதுமுதல் தனது பணிகளைவிரிவு படுத்த மூன்றுகட்டச்செயல்திட்டங்களை வகுத்து
வருகிறது. அதன் விவரங்கள் என்னவென்று தெரியாவிட்டாலும், அந்தக்கட்டங்கள்
ஆர்.எஸ்.எஸ்.ன் முதலாம் சர்சங் சாலக் எம்.டி.பாலாசாஹேப் தேவ்ரஸ் வகுத்த “அமைப்பு,
அணிதிரட்டல், செயல்” என்பதை நினைவூட்டுகிறது ஆர்.எஸ்.எஸ். தனது
முதலாம்கட்டத்தின் முடிவை நெருங்கிவிட்டது. இப்போது அடுத்த கட்டத்தை நோக்குகிறது. அதற்கான தளமாக அரசியல் அதிகாரத்தை
வெல்வதற்கு பகவத் வழியமைத்துள்ளார். அடுத்த ஆண்டில் அமையும் அரசில் ஆதிக்கம்
செலுத்தும் சக்தியாக பி.ஜே.பி. வருமானால் சங்என்ற பிரம்மாண்டமான வாகனம்
சுற்றிச்சுழன்று தனது பரந்துபட்ட சமுதாய இலக்குகளைப் பூர்த்திசெய்யும்.
முன்னெப்போதும் இல்லாத செயல்வேகத்துடன் புறப்பட்டுவிடும். தேவ்ரஸ் ஒருமுறை
குறிப்பிட்டதுபோல “சங்” வெறும் ஒரு
அமைப்பாக மட்டும் முடிவில்லாத காலத்துக்கு நீடிக்கமுடியாது.
( தொடரும்...)
நன்றி : த கேரவன்
மே 2014 இதழ்



