Wednesday, 15 October 2014

ஆர்.எஸ்.எஸ் - மூன்றாவது பரிமாணம் மூன்று

        ஆர்.எஸ்.எஸ் - மூன்றாவது பரிமாணம்
              திமிறிய பி.ஜே.பி.க்குக் கடிவாளமிட்ட மோகன்பகவத்
    தினேஷ் நாராயணன்                               தமிழில்: செ.நடேசன் 
                             மூன்று                                               

  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடமிருந்து அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிவிடலாம் என்று பி.ஜே.பி. நம்பிக்கைகொண்டிருந்த பொதுத்தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்குமுன் 2009 மார்ச்-ல் சுதர்சன் தனது பின்தோன்றலாக அப்போதைய பொதுச்செயலாளராக இருந்த மோகன்பகவத்-ஐத் தேர்வுசெய்தபோது ஆர்.எஸ்.எஸ். ஒரு தலைமுறை maaமாற்றத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தது.
   நாட்டின் புவியியல்ரீதியான மையமாகக் கருதப்பட்ட நாக்பூரின் ரெஸிம்பாக் வளாகத்தில் மையஅறையில் பாதக் உலவிக்கொண்டிருந்த ஒருநாளில் தலைமை மாற்றம் நிகழ்ந்தது. அப்போது அந்த அறையில் பின்னல்தட்டிகளால் ஆன கதவுகள் இருந்ததால் பாதக் அதன் வழியாக ஆர்.எஸ்.எஸ்.-ன் உயர்மட்ட முடிவுகள் எடுக்கும் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி சபாவின் நடவடிக்கைகளைப் பார்க்க முடிந்தது. பொதுவாக குர்தா, பைஜாமா அணிந்துகொள்ளும் மோகன்பகவத் அன்று வேட்டி அணிந்திருந்தார் என்று நினைவுகூர்ந்தார் பாதக்.ஆர்.எஸ்.எஸ்-ன்பண்பாட்டுவழிமுறைப்படி பட்டம்சூட்டும்நிகழ்ச்சி ஆரவாரமின்றிஇருந்தது. அதன்பிறகு பகவத் அறையிலிருந்து வெளியேவந்தார். ‘சிலநிமிடங்கள் அவர் தன்னை இழந்த வராகக் காணப்பட்டார் என்று பாதக் சொன்னார். அவர் தனது காலணிகளைக்கூடக் கண்டு பிடிக்கமுடியவில்லை. பின்னர் அவர் மன அமைதியைத் திரும்பப்பெற்றார்.
   அதைப்பற்றிப் பின்னர் பாதக் கேட்டபோது பகவத் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பின் பாரத்தைச் சிலகணங்கள் சிந்தித்தபோது தான் பிரமித்துநின்றுவிட்டதாக ஒத்துக்கொண்டார். “அந்தச் சில நிமிடங்கள்  நான் வெறும் மோகன்பகவத் ஆக இருந்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை என்னால் நிறைவேற்றமுடியுமா? என்று நான் சிந்தித்தேன்.
   அந்த அறிவிப்பு திடீரென இருந்தாலும் மொத்தத்தில் எதிர்பாராத ஒன்றுஅல்ல. 1990களி லிருந்தே வயதுமுதிர்ந்த தலைவர்களின் இடத்திற்கு மிகவும் இளையவர்களைக் கொண்டுவரு வதை ஆர்.எஸ்.எஸ். துவக்கிவிட்டது. இது ஒருகுறுகிய காலத்துக்குச் சிரமமானதாக இருக்கு மென்றாலும், பி.ஜே.பி.யுடனான உறவுக்கு நீண்டகால ஆற்றல்மிக்க தலைமையை உருவாக்குவதற்கான முக்கியத்துவத்தை ஆர்.எஸ்.எஸ். உணர்ந்திருந்தது .66வயதான சுதர்சன் சர்சங்சாலக் ஆக்கப்பட்டபோது அப்போதைய பொதுச்செயலாளர் ஹெச்.வி.சேஷாத்திரி அவரிடம்பொதுச்செயலாளர் பதவிக்குத்தகுதியானவர்கள் இரண்டுபேர்:ஒருவர் மதன்தாஸ்தேவி இன்னொருவர் மோகன்பகவத் என்றார்.
  சேஷாத்திரியும், சுதர்சனும் மதன்தாஸ்தேவியின் பக்கம் சாய்ந்தனர். அவர் அரசியலை நன்குபுரிந்து கொண்டுள்ளவர் என்பதோடு பி.ஜே.பி.யை மேற்பார்வைசெய்யும் அதிகார பூர்வ ஆர்.எஸ்.எஸ்.காரராகவும் இருந்தவர். ஆனால் எம்.ஜி.வைத்யா, சுதர்சன் தனது பொறுப்பைப் பகவத்துடன் இணைந்து நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துமாறு ஆலோசனை கூறினார். ஆர்.எஸ்.எஸ்.-ன் அனைத்து முடிவெடுப்புக்களையும்போல் இந்தத்தேர்வு நடைமுறையும் மிகவும் உயர்மட்டக் கலந்தாலோசனையோடு தனிப்பட்டமுறையில் செய்துமுடிக்கப்பட்டது.
   ‘அவர் தலைவராக ஆகும்வரை எங்களில் ஒருவர்கூட அவர்பெயரை அறிந்திருக்கவில்லை. என்றுஆங்கிலப்பத்திரிக்கை ஒன்றின் மூத்த ஆசிரியர் ஒருவர் என்னிடம் கூறினார். அப்போது பகவத்துக்கு வயது 55.
   மோகன் மதுக்கர்ராவ் பகவத் ஆர்.எஸ்.எஸ்-உடன் நெருக்கமான தொடர்புகொண்டிருந்த அவரது தாய்வழிப்பாட்டனார் அண்ணாஜியின் பிராமணக்குடும்பத்தில், மகாராஷ்ட்ராவில் உள்ள சாங்க்லியில் 1950 செப்டம்பர் 11ல் பிறந்தவர். பகவத்தின் தந்தைவழிப் பாட்டனார் சதாராவில் வழக்கறிஞராக இருந்த நாராயண்பகவத். தனது பெற்றோர் மறைவுக்குப்பின் சந்திராபூருக்குக் குடியேறினார். நாராயண்பகவத் (அல்லது நாணாசாஹேப்) மாநிலக் காங்கிரசில் ஒரு உறுப்பினர். நாக்பூரில் உள்ள நீல்சிடி பள்ளியில் ஹெட்கேவரின் பள்ளித்தோழராக இருந்தவர். இந்தப்பள்ளி பிற்காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைத் தோற்றுவித்தவரான ஹெட்கேவரை பிரிட்டிஷ் சட்ட திட்டங்களுக்கு உட்பட மறுத்ததாலும், வந்தேமாதரம் பாடலைப் பாடியதாலும் பள்ளியைவிட்டு வெளியேற்றியது.
   பகவத்தின்தந்தை மதுக்கர்ராவ் 1940ல் ஆர்.எஸ்.எஸ்.பிரச்சாரகராகி குஜராத்தில் அமைப்பின் பணியில் தீவிரமாக ஈடுபட்டவர். அவர் திருமணம்செய்துகொள்ள ஒத்துக்கொண்டாலும், பகவத் பிறக்கும்வரை ஆர்.எஸ்.எஸ். வேலைகளிலேயே நீடித்துவந்தார். அதன்பின், நாக்பூர் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். மதுக்கர்ராவுக்கும் அவரது மனைவி மாலதிபாய்க்கும் பிறந்த மூன்று மகன்கள்,ஒருமகள் ஆகியோரில் பகவத்தான் மூத்தவர்.
   இந்தக்குடும்பம் சங்அமைப்பின் நெறிமுறைகளில் ஆழ்ந்தபற்று கொண்டது. பகவத் குடும்பத்தின் மூன்றுதலைமுறைகள் ஆர்.எஸ்.எஸ்.ல் அதிகாரம்மிகுந்த பொறுபுக்களில் இருந்தன. குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்ப்க்குத் தலைமையேற்றுச்செயல்பட்டபின் மதுக்கர் ராவ் தனது தந்தை தனக்குமுன் ஏற்றிருந்த சந்திராபூர் மாவட்டத்தலைமைப் பொறுப்புக்கு வந்தார். அவரது மனைவி மாலதிபாய் ஆர்.எஸ்.எஸ்.ன் மகளிர்பிரிவான ‘ராஷ்ட்ர சேவிகா சமிதியின்உறுப்பினராக இருந்து ஜனசங்கட்சியின் மாவட்டப்பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் ஆனார்.
   2014 ஜனவரியில் பகவத்தின் இளைய சகோதரரான ரவீந்திர பகவத்தை நான் சந்திராபூரில் சந்தித்தேன். சந்திராபூர் மிகவேகமாக விரிவடைந்துவரும் மகாராஷ்ட்ராவின்நகரங்களில்ஒன்று. அதன்வானம் எப்போதும் அந்தமாநிலத்தின் 2340 மெகாவாட் சூபர்தெர்மல் பவர்ஸ்டேஷனில் இருந்து வெளியாகும் அடர்த்தியான புகைமூட்டங்களால் சூழப்பட்டதாகவே இருந்தது. இன்று ரவீந்திரபகவத்-ன் அலுவலகத்தில்-கடைகளை முன்பக்கத்தில் கொண்டுள்ள, ஓடுவேயப்பட்ட நவீன இரண்டுமாடி வீட்டின் வசிக்கும்அறையில் - ஓவியம் ஒன்று இருந்தது.சுவரில் இருந்த அலமாரியில் பாட்டு மற்றும் நடிப்புப்போட்டிகளில் பகவத் வென்றிருந்த நினைவுப்பரிசுகளும், கோப்பைகளும், வெற்றிச்சின்னங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பல்கலைகழகத்தில் பட்டம்பெற்றுத் திரும்பியபோது பகவத் ஒருசாக்குப்பை நிறையப் பதக்கங்களையும், வெற்றிச் சின்னங்களையும் கொண்டுவந்தார் என ரவீந்திர பகவத் கூறினார்.
   சந்திராபூரில் இன்றும் வாழ்ந்துவரும் முன்னாள் ஆயுள்காப்பீட்டுக் கழக அலுவலரும், பகவத்தின் குழந்தைப்பருவ நண்பருமான ராஜாபாஹுபொஜாவர் ‘மராத்தியின் வீரசாகசக் கதைகளில்- குறிப்பாக, ‘அக்ரவ அவதார்(பதினொன்றாவது அவதாரம்) ‘சிங்ககர்ஜனா, ‘விஸ்வாமித்ரி பேச்ஜ் முதலான நாவல்களை எழுதிய பாபுராவ் அர்ணால்டின் எழுத்துக்களில் பகவத் தீராத மோகம் கொண்டிருந்தார் என நினைவுகூர்ந்தார்.
   அகோலாவில் இருந்த ‘டாக்டர்.பஞ்சாப்ராவ் தேஷ்முக் க்ருஷிவித்யாபீடத்தில் விலங்கியல் பாடப்பிரிவில்சேர்ந்த பகவத், தனதுபல்வேறுபாடங்கள் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற் றதால், பட்டமுன்வகுப்பு படித்த ஆண்டுகளை நாக்பூரிலேயே கழித்தார். நோய்க்கூறு இயலில் தங்கப்பதக்கத்துடன் பட்டம் பெற்றார். விலங்கியல்பாட மாணவர்கள் தாங்கள் பட்டம்பெற்றபின் இரண்டு ஆண்டுகள் அரசுசேவையில் ஈடுபடவேண்டும். பகவத் சந்திராபூர் விலங்குகள் மருத்துவமனையில் சிலமாதங்கள் பணியாற்றியபின் 90 கி.மீ.கிழக்கில்உள்ள சமோஷிக்கு விலங்கியல் அலுவலராக மாறுதல் செய்யப்பட்டார்.
   சுதிர் பகவத் 1970ல் மஹாராஷ்ட்ர அரசால் கொண்டாடப்பட்ட ‘அனைத்துலகக் கல்வி ஆண்டுவிழாவுக்காக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ‘பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான இளைஞர்முகாமை நினைவு கூர்ந்தார். 14 பல்கலைக்கழகங்களிலிருந்து 30 மாணவர்கள்வீதம் 420பேர் அந்த மூன்றுநாட்கள் நிகழ்வில் பங்கேற்றனர். பகவத் இரண்டாம் நாளிலேயே ஒருசாகாவைத் துவக்கினார். அன்றுமுதல் அவர் ‘பாரதக்கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கான தலைவராகவிளங்கினார். அங்கே ஆர்.எஸ்.எஸ்.கொடிமட்டுமேஇல்லை. ஆனால் ஒவ்வொன் றும் ‘சாகாவில் நடப்பதுபோலவே நடைபெற்றன. 100 மாணவர்கள் இரண்டு நாட்கள் கலந்துகொண்டனர். இந்தக்கூட்டம் பிரச்சனைக்குரியதாக மாறியது. “அரசு ஏற்பாடுசெய்த நிகழ்ச்சியில் எப்படி ஒருசாகா இடம்பெற்றது? என மஹாராஷ்ட்ரா சட்டமன்றத்தில் கேள்விக்ள் எழுப்பப்பட்டன. ஆனால் அரசோ, ‘சாகா நடைபெற்றதை மறுத்தது.
  உல்லன் ஆடைபோர்த்த ஆர்.எஸ்.எஸ்.தொண்டரான சுதிர்பகவத், மற்ற எல்லா மாணவர் களையும் போலவே பகவத் நவீனஉடைகளிலும்,பாலிவுட்டின் புதிய பாடல்களிலும் பேரார்வம் கொண்டிருந்தார். ஒருமுறை பேருந்தில் ஒருபெண், அரே மோகன், நாங்கள் பாட்டுக்கேட்க விரும்புகிறோம், என்றவுடன், அப்போது மிகவும் பிரபலமான ‘படோசான் திரைப்படத்தில் வரும், “மேரே சாம்னே வாலி கிட்கி மே என்றபாடலைப் பாடினார். பகவத் நாடகங்களிலும், கவிதைகளிலும் ஆர்வம்கொண்டிருந்தார். ஒருமுறை கள்ளிக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் நாக்பூர்பல்கலைக்கழகத்தின் சார்பில் கலந்துகொண்டு மராத்தி நாடோடிக்கலையான ‘பாரூத் என்ற பாட்டும், கதையும் இணைந்த கதாகாலட்சேபத்தை நடத்தினார். அவர் நாடகங்களை இயக்கி நடித்தார். இத்தகைய நிகழ்வுகளில் பகவத் முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதனாகத் தோன்றினார்.
   நெருக்கடிநிலை அறிவிக்கப்படுவதற்குச் சற்றுமுன் அகோலாவில் ஆர்.எஸ்.எஸ்.-ன் முழு நேரஊழியர் ஆவதற்காக பகவத் தனது முதுகலைப் பட்டப்படிப்ப்டிப்பிலிருந்து இடைவிலகினார். இந்திராகாந்தியின் சர்வாதிகாரத்தின்போது தலைமறைவானார். அவரது பெற்றோர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மீண்டும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதும் சங்அமைப்பில் விரைவாகப் பலபடிகள்முன்னேறினார். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்.நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கினார். பின்னர் விதர்ப்பா முழுவதும் பொறுப்பேற்றார். 1980ல் பீகாரில் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளின் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1991ல் அகில இந்திய உடற்பயிற் சிக்கான தலைவராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டார். அதன்பின் ஆர்.எஸ்.எஸ்.ஊழியர்கள் அனைவரையும் மேற்பார்வையிடும் ‘பிரச்சார் பிரமுக்ஆக உயர்ந்தார்.

  1992ஆம்ஆண்டுஇந்தியாவுக்கு ஒருகலவரம்மிக்க ஆண்டாக விளங்கியது. தந்திரம் நிறைந்த பி.வி.நரசிம்மராவ் (இவர்தான் நேருகுடும்பத்திற்கு வெளியே பிரதமரான மூன்றாமவர்.) தலைமையிலான காங்கிரஸ் அரசால் 1991ல்தான் ‘புதியபொருளாதாரக் கொள்கை என்ற (பெரஸ்த்ரோய்கா) பொருளாதார சீர்திருத்தத்தை நாடு அனுபவிக்கத் துவங்கியிருந்தது. அந்த ஆண்டு ஏப்ரலில் அம்பலமான ரூ.4,000/ கோடி பங்குமார்க்கெட் ஊழல், நாடு முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பியதன் அறிகுறியாக இருந்தது. இதை எதிர்த்துக் கடுமையான சுனாமியைப் போலக் கண்டனங்கள் எழுந்தன. குளிர்காலம் துவங்கியபோது, சங் குடும்பம் அயோத்தியில் கரசேவைக்குத் தயாராகி இராமர் பிறந்த இடம் என்றுகருதப்பட்ட சரயூ நதிக்கரையில் இராமர் கோவிலைக்கட்டுவதற்கு மிகப்பெருமளவில் தொண்டர்களைத் திரட்டியது.
   அந்தநேரத்தில் திரைப்படத்தயாரிப்பாளர் லலித்வச்சானி ஆர்.எஸ்.எஸ்.பற்றிய ஒருகுறும் படம் தயாரிக்க நாக்பூர் வந்தார். 1990ல் சுதர்சன் துணைப்பொதுச்செயலாளராக இருந்தபோது அவரை வச்சானி அணுகித் தனது குறும்படம்பற்றிக் கூறினார் இதனால் மகிழ்ச்சி அடைந்த சுதர்சன் 10 சாகாக்களைகொண்ட கூட்டத்தைக் கூட்டினார். ‘அங்கே டெலிவிஷன் கேமராக்கள் இல்லை. அது வானொலி ஆவணம்தான் என்றுதெரிந்தபோது சுதர்சன் ஏமாற்றம் அடைந்தார், என்று வச்சானி தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு படம்தயாரிக்க வச்சானி மீண்டும் வந்தபோது சுதர்சன் மிகவும் உற்சாகம் அடைந்தார். அவரது நடத்தை, ‘இத்தனை ஆண்டுகளாக எங்கே இருந்தீர்கள், இளைஞர்களே? என்பதுபோல் இருந்தது.
   இரண்டுமாதங்கள் படப்பிடிப்பின்போது வச்சானியும், அவரது படப்பிடிப்புக்குழுவினரும் ஆர்.எஸ்.எஸ் தன்னாரவத்தொண்டர்கள் தங்குவதற்கான விடுதியாகவும், ஆர்.எஸ்.எஸ். அலுவ லகமாகவும் இருந்த ஒருமாளிகையான ‘ஆஷா சதன்-ல் பெரும்பகுதி நேரத்தைக்கழித்தனர். வ்ச்சானி சந்தித்த தலைவர்களில் ஒருவர் பகவத். 1990களில் ஆர்.எஸ்.எஸ்.-ன் உடற்பயிற்சிக் கான அகில இந்தியத்தலைவராக சங் அமைப்பின் ஒழுக்க நடைமுறைகளை உருவாக்கிக் கவனித்துவந்தர்.



   ‘ஆஷா சதன்-ல் இருந்த பையன்கள் பக்தியுடன் அவரை வணங்கினார்கள் என்று வச்சானி ஜெர்மனியிலிருந்து ஸ்கைப் மூலம் என்னிடம் தெரிவித்தார்.அவர் அவர்களுக்குக் கடவுளைப் போன்றவராக இருந்தார். ஒருநாள் அந்தப்பையன்கள் பகவத்தைப் புல்லாங்குழல் வாசிக்குமாறு கேட்டனர். அவர்வாசித்தது இசையோடுகொஞ்சமும் பொருந்திவரவில்லை. என்றாலும் எல்லாப் பையன்களும் அவர் ஒருமாபெரும் நிகழ்ச்சியை நடத்தியதைப்போலப் புகழ்ந்தனர்! என வச்சானி நினைவுகூர்ந்தார்.
   வச்சானியின் 27 நிமிட “பாய்ஸ் இன் த பிராஞ்ச் திரைப்படத்தின் இடையே ஆர்.எஸ்.ஏஸ். சாகாக்களில் நடைபெறும் “காஷ்மீர் ஹமாரா ஹை என்ற விளையாட்டின் தர்க்க நியாயங்களை பகவத் விளக்குகிறார். இந்த விளையாட்டில் சிலகுழந்தைகள் ஒருவட்டத்தின் மையப்பகுதியில் நின்றுகொண்டு அதைக்கைப்பற்ற முயற்சிக்கும் மற்றவர்களை வட்டத்திற்கு வெளியே தள்ளுவார்கள்.சாகாதான் ராஷ்ட்ரிய சுயம்சேவக்குகளின் வாழ்க்கை என்று படத்தில் பகவத் கூறுகிறார்.இப்போது அவர்களுக்குக் காஷ்மீர் பிரச்சனை பற்றியோ, 370ஆவது சட்டப் பிரிவுபற்றியோ அதிகமான விவரங்கள் தெரியாது. ஆனால், ‘காஷ்மீர் நம்முடையது: அது பாரதத்திற்குச் சொந்தமானது என்ற விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது
   வச்சானி எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு, இந்தப்படத்தின் தொடர்ச்சியைத் தயாரிக்க அதே இடங்கள், அதே நபர்களை மீண்டும் சந்தித்தார். ‘த மென் இன் த ட்ரீ என்ற அந்தப்படத்தில் சுதர்சன் இளம்வயதிலேயே சுயம்சேவக்குகளைச் சேர்ப்பதன் முக்கியத்துவத்தை மிகவிரிவாகக்  கூறுகிறார். “குழந்தைகள் தங்கள் பழக்கவழக்கங்கள் உருவாகும் நிலையில் இருப்பவர்கள். அவர்கள் குழந்தைபருவத்தில் தங்கள் சூழல்களால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் சுற்றுச் சூழல்களால் வடிவமைக்கப்படுகிறார்கள். குழந்தைநிலையில் இருந்து சிறுவர்நிலைவரை நீட்டி வளைக்ககூடிய தகடுபோல அவர்களது மனம் நம்வசப்படக்கூடிய பருவம் அது. பழக்கங்கள் பதிவாகும்அந்தப்பருவத்தில் நீங்கள் என்ன கற்றுக்கொடுக்கிறீர்களோ அது அவர்கள்மனங்களில் நீடித்த தாக்கங்களை ஏற்படுத்தும். அதனால்தான் நாங்கள் சிறுவர்களை அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்தே ‘சாகாக்களில் சேர்த்துவிடுகிறோம்.
   1990-ன்துவக்கத்தில் ‘த மென் இன் த ட்ரீ யில்வரும் மூன்றுமுக்கியக் கதாபாத்திரங்களின் பிரதிபலிப்பாக சந்திப் பாதே, புருஷோத்தம், ஸ்ரீபாத் பொரிக்கர் ஆகியமூவரும் 1992 டிசம்பர் 6ல்  அயோத்தியில் பாபர்மசூதியைஇடித்ததில் தங்கள்பங்கு பற்றிப் பெருமைபொங்கப் பேசுகிறார்கள். “நான் பாபர்மசூதியின் கூம்பின்மேல் இருந்தேன். அது ஒருவாழ்நாள் சாதனை. நாங்கள் வரலாற்றை உருவாக்கினோம் என்கிறார் பொரிக்கர்.
  அவர்கள் சொன்னதுபோல் ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்ட கரசேவை பாபர்மசூதியை அதன் முழு அமைப்பையும் இடித்துத்தகர்க்க வழிவகுத்தது. சந்தீப் பாதே கூறுகிறான்: கரசேவையின் தயாரிப்புப்பணிகள் முழுவதும் ஆழ்ந்து சிந்தித்து ஒவ்வொரு பையனின் வயது, அவன் எந்தப் புகைவண்டியில்பயணிக்கவேண்டும்? அவன் எந்தக்குழுவின் தலைவரிடம் வந்துசேரவேண்டும்? என அதன்கட்டங்கள் ஒவ்வொன்றும் பதிவுசெய்யப்பட்டன. தாங்களாகவே அயோத்தியில் புகுந்துகொள்பவர்கள்கூட் ஆர்.எஸ்.எஸ்ஊழியர்களிடம் பதிவுசெய்தாக வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அனுமதியின்றி எந்தஒருவரும் கோவிலின் தன்னார்வத்தொண்டராக உள்ளே நுழைந்துவிட முடியாது.
   இதோபொரிக்கர்கூறுகிறான்:நாக்பூர் எதையும்சந்திக்கக்கூடிய பத்துப்பேரைத்தேர்ந்தெடுத்தது. அவர்களில் நானும் ஒருவன். எங்கள் கைகளில் இருந்த இரும்புக்கம்பிகள், குச்சிகள், சில நேரங்களில் பாறாங்கற்கள் ஆகியவற்றைக்கொண்டு அந்தக்கூம்பில் இடிக்கும் வேலையைச் செய்தோம். எங்கள் சிந்தனையில் ஒன்றே ஒன்றுதான் இருந்தது. அது, அந்தக்கட்டுமானத்தை முற்றிலும் தகர்த்து வீழ்த்துவது அவன் மேலும் கூறினான்: முஸ்லீம்கள் நாங்கள் சிந்திக்கும் வகையிலேயே வந்துசேர்வார்கள். அயோத்தி, காசி, மதுரா ஆகியவற்றை இந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதை முஸ்லீம்கள் உணரும் சூழ்நிலை மெல்ல மெல்ல உருவாகும். முஸ்லீம்கள் இந்தநாட்டில் வாழவேண்டும் என்றுவிரும்பினால் அவர்கள் மூத்த அண்ணாக்கள் (இந்துக்கள்) சொல்வதைக் கேட்டேதீர வேண்டும்
   பாதே மேலும் சொன்னான்: அவர்கள் தாங்களாகவே முன்வந்து ஒப்படைக்காவிட்டால், இந்துக்கள் எந்தெந்த வழிகளில் நடந்துகொள்வார்களோ அவற்றை எல்லாம் அவர்கள் சந்தித்தே தீரவேண்டும்.

( தொடரும்...)
நன்றி : த கேரவன் மே 2014 இதழ்

  

  

No comments:

Post a Comment