Friday, 9 July 2021

’ பிரேஸிலின் இடதுசாரிகளை எதிர்கொள்ளும் சவால்கள் பகுதி 1

 

பிரேஸிலின் இடதுசாரிகளை

எதிர்கொள்ளும் சவால்கள்

தகவல் தொகுப்பு எண் 40

மூன்றுகண்டங்கள் சமூக ஆய்வுக்கான நிறுவனம்

மே. 2021

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அட்டை

 

பிரேஸில் ஆய்வு வலைதளத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு ஆய்வுகளின்படி தோராயமாக பிரேஸிலில் உள்ள 1கோடியே 90 இலட்சம் மக்கள் கோவிட் 19 பெரும்பரவலின்போது பசியில் கிடந்தார்கள்: மேலும்11 கோடியே 60 இலட்சம் மக்கள் (மொத்த மக்கள்தொகையில் 52%) அதே அளவுக்கான உணவுப் பாதுகாப்பின்மையிலும் இருந்தார்கள்

 

Gobriela Tornai(@gobrielatornai) – Design Ativista /2021

 

 

 

 

 

பிரேஸிலின் இடதுசாரிகளை

எதிர்கொள்ளும் சவால்கள்

 

தமிழில்

செ. நடேசன்

 

 

 

 

 

 

 

. .

 

தகவல் தொகுப்பு எண் 40 / சமூக ஆய்வுக்கான மூன்றுகண்ட நிறுவனம்

மே. 2021

அறிமுகம்

 

 

பிரேஸிலின் அரசியலை யார் பின்தொடர்கிறார்களோ அவர்களுக்கு, அந்தநாடு 1980களில் நகரிய-இராணுவ சர்வாதிகாரம் முடிவுக்கு வந்ததிலிருந்து மிகப் பெரிய சிக்கலில் வாழ்ந்துகொண்டிருக்கிறது அல்லது சிலர் கூறுவது போல- 1889ல் பேரரசர் இரண்டாம் பெட்ரோ அதிகாரத்திலிருந்து அகற்றப் பட்டதிலிருந்து பிரேஸிலின் ஒட்டுமொத்தவரலாறும் மிகவும் வலதுசாரியான அதன் அதிபர் ஜேய்ர் போல்ஸோனோரோவின் தலைமையில் மிகப்பெரும் அரசியல் மற்றும் சமுதாயப் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது என்பது மேலோட்டமாகப் பார்த்தால்கூட அது ஒரு புதிய செய்தியாக இருக்காது. அவர் 2019ல்இருந்து ஓர் அரசியல் கட்சியோடு முறையாக இணைந்துகொள்ள வில்லை என்றாலும் இன்றும் சமுதாய ஆதரவு மற்றும் நாட்டின் ஆளும்வர்க்கங்கள், ஆயுதப்படைகளை சார்ந்திருக்கிறார்.

 

 ஏற்கனவே பின்பற்றிவந்த தீவிர புதிய தாராளமய திட்டங்களை மேற் கொண்டதன் எதிர்விளைவுகள் போதுமானவைகளாக இல்லாதபோது, 2020ல் கொரோனா வைரஸின் தீவிரப்பரவல்களும், ஒட்டுமொத்த தவறான நிர்வாகமும், கொரோனா வைரஸை எதிர்கொள்வதில் இருந்த அலட்சியமும் சமூக, பொருளாதார மற்றும் சுகாதாரக் காட்சிகளை மிகமோசமான நிலைக்கு கொண்டுசென்றது. நோய் மற்றும் அறிவியல் ஆகிய இரண்டிலும் அரசின் அலட்சியம் கடும்சரிவான எண்ணிக்கைகளால் வெளிப்பட்டது: பிரேஸிலில் 2021 ஏப்ரலில் கோவிட் 19ஆல் 4,00,000 மக்களுக்குமேல் அல்லது நாளொன்றுக்கு 3,000 பேர் இறந்தார்கள். 2020ல் மார்ச்சில் முதல் கொரோனா வைரஸின் தாக்குதலுக்குப்பின் ஓராண்டுக்குப்பிறகு  வைரஸின் உருமாறிய தோற்றத்தின்எழுச்சியாலும், சுகாதாரத்துறையின் முழுமையான தோல்வி யாலும் அந்தநாடு உலகத்துக்கே ஓர் அச்சுறுத்தலாக ஆகிவிட்டது.1

 

  இந்தவேளையில் கடந்த பத்தாண்டுகளில் மாபெரும் அரசியல் போராட்டங் கள் எல்லாவற்றிலும் தோற்கடிக்கப்பட்ட பிரேஸிலின் இடதுசாரிகள் இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தை மீண்டும் அடைவதை நோக்கமாகக் கொண்டு மறுஅணிசேரவும், அதன் சமூகத்தளத்தை உருவாக்கவும் முயற்சிக்கிறார்கள். இந்தசூழ்நிலையை நாம் எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம்? இந்தச் சிக்கலிலிருந்து வெளியேவர சமுதாயத்தை ஈடுபட வைக்கும் சாத்தியக்கூறுகள் என்ன?

 தகவல்தொகுப்பு எண்:40, சமூக ஆய்வுக்கான மூன்றுகண்ட நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, ‘பிரேஸிலின் இடதுசாரிகளை எதிர்கொள்ளும் சவால்கள்’ பிரேஸிலின் அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சவால்களைப் பகுப்பாய்வு செய்கிறது. இது நடைமுறைப்படுத்துவதற்கு எளிதான கடமை அல்ல: ஏனென்றால், முற்போக்கு சக்திகளின் எண்ணிக்கைகளும், அவற்றுக் கிடையே உள்ள வேறுபாடுகளும்: மேலும் ஏனென்றால், பிரேஸிலிய அரசியல் சூழலின் சிக்கலான கூறுகளும். இந்தக்காரணத்துக்காக, நாம் இந்த வழிமுறையை உருவாக்க உழைக்கும் வர்க்கங்களின் வெவ்வேறு பிரதிநிதி களுடன் நமக்கு உதவுவதற்காக பேசுவதைத் தேர்ந்தெடுத்தோம். தேசிய மாணவர் யூனியனின்( National Union of Students)  துணைத்தலைவரும், மக்கள் இளைஞர் எழுச்சியின்  (Popular Youth Uprising) உறுப்பினருமான எலிடா எலனா-ஒன்றுபட்ட தொழிலாளர்களின் மையத்தின் தேசிய செயற்குழு(Unified Worker’s Central (CUT) வின் ஜாண்டிரா உயெஹரா, சோசலிசம் மற்றும் சுதந்திரம் கட்சி(Socialism and Freedom Party)யின் தேசியத்தலைவர் ஜூலியானோ மெடெய்ரோஸ்(PSOL) , நிலமற்ற தொழிலாளர்களின் இயக்கத்தின்(Landless Workers Movement) தேசிய செயற்குழுவின் கெல்லிமாஃபோர்ட்,(MST) தொழிலாளர் கட்சியின் (WorkersParty) கூட்டமைப்பின் துணைத்தலைவரும், மற்றும் தலைவர் க்ளெய்ஸி ஹோஃப்மன் (PT) மற்றும் சாவோ பாவ்லோ(IFSP) கூட்டமைப்பு நிறுவனத்தின் பேராசிரியரும், சோசலிசம் மற்றும் சுதந்திரம் கட்சியின் உறுப்பினருமான வலேரியோ ஆர்கெரி(PSOL) ஆகியோரை பேட்டிகண்டோம்.

 

 இந்தத்தகவல் தொகுப்பு ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டது: முதல் பிரிவு அண்மைக்காலங்களில் பிரேஸிலின் இடதுசாரிகளால் பின்பற்றப்பட்ட பாதை யைப் பகுப்பாய்வு செய்தது: இரண்டாவது, வலதுசாரிப் பிரிவுசக்திகளின் திடீர் பிளவுகளை, மறுஇணைவுகளை பகுப்பாய்வு செய்தது: மூன்றாவது, ஒற்றுமையை உருவாக்கும் கருவிகளைப் பகுப்பாய்வு செய்தது: நான்காவது, மக்களின் அடித்தளத்தைக்2 கட்டமைப்பதில் உள்ள சவால்களை பகுப்பாய்வு செய்தது: கடைசியாக ஐந்தாவது பிரிவு, நாட்டின் மிகவும்குறிப்பிடத்தக்க புகழ்பெற்ற தலைவர், முன்னாள் அதிபர் லூயிஸ் இனாஸியோ லூலா த சில்வா-வின் பாத்திரத்தைப் பிரதிபலித்தது.

 

 இந்த தகவல் தொகுப்பு முழுவதிலும் இடம்பெற்றுள்ள படங்கள், ஜன நாயகத்தை ஆதரிக்கவும், போலிச்செய்திகளை எதிர்த்துப்போராடவும் சுதந்திரமான கலையை, தகவல்களை உருவாக்குவதையும், விநியோகிப்பதை யும் நோக்கமாகக்கொண்டு பிரேஸிலில் 2018ல் நடந்த தேர்தலின்போது உருவான ஒரு கூட்டுமுயற்சியான ‘செயல்படுவோர் வரைபடம்’ (Activist Design) திட்டத்தின் பகுதிகளாகும்.

 

                                 ^ ^ ^ ^ ^

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2021ல் கோவிட் 19ஆல் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 2020ன் மரணங்களின் எண்ணிக்கையை ஏற்கனவே கடந்துவிட்டது 2020 மார்ச் 12ல் ஏற்பட்ட முதல் கோவிட் 19 மரணம் முதல்2020 டிசம்பர் 31 வரை 1,94,949 மரணங்கள் நிகழ்ந்தன. இந்தஆண்டு அங்கு ஏற்கனவே 2,00,000 க்கும்மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

 

Leticala Riberiro (@telurica.x)/ Design Ativista/ 2019

’பிரேஸிலின் இடதுசாரிகளை எதிர்கொள்ளும் சவால்கள் பகுதி 2

 

  பிரேஸிலின் இடதுசாரிகளின் இன்றைய நிலையை மதிப்பிடுதல்

 

அண்மையதசாப்தங்களில்–பலபத்தாண்டுகளில்– பிரேஸிலின் இடதுசாரி களைவருத்திய தோல்விகளில் பலவும் இந்தப்பிரிவினரை ஆதிக்கம் செலுத்திய அரசியல் உத்திகளை தவறாக புரிந்துகொண்டதன் விளைவே என அரசியல் அமைப்புக்களும்,துறைசார்ந்த வல்லுநர்களும் கருதுகிறார்கள். இந்தபார்வை தொழிலாளர்கள் கட்சியால் முடுக்கிவிடப்பட்ட நிறுவனப் போராட்டங்ளுக்கு முன்னுரிமை தந்தது: அந்தக்கட்சி 13 ஆண்டுகள் ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டது உழைக்கும் வர்க்கம் பிரேஸிலின் ஆட்சியை எடுத்துக்கொள்வதற்கான ஒரு துவக்கத்தை அளித்தது.

 

  தொழிலாளர்கள் கட்சியின் நிர்வாகங்கள் செயல்படுத்திய கொள்கைகள் சந்தேகத்துக்கிடமில்லாமல் பிரேஸிலின் மக்கள்தொகையில் பெரும்பகுதி யினர் வாழ்வை பெருமளவில் முன்னேற்றம் அடைய வைத்தது. அந்தப் பல்வேறு நடவடிக்கைகளில் Bolsa Familia (Family Grant)3 என்னும் வருமானத்தை மறுபங்கீடுசெய்யும்கொள்கை -3கோடியே 60இலட்சம் மக்களை கடுமையான வறுமையின்பிடியிலிருந்து வெளிக்கொண்டுவருவதற்கு பொறுப்பேற்றிருந்தது-  Minha Casa Minha Vida (My House My Life) என்னும் வீடுகள்வழங்கும் திட்டம்- 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட உழைக்கும் வர்க்க மக்களுக்கு வீடுகளைக்4 கட்டித்தந்தது.- குறைந்தபட்சக் கூலியை விலைவாசி உயர்வுக்கும் மேலாக உயர்த்தியது: முறையான வேலைவாய்ப்பை அதிகரித்தது: சமூக சமத்துவமின்மையைக் குறைத்தது மற்றும் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் நகரங்களின் புற எல்லைசார்ந்த இளைஞர்களின் சேர்க்கையை அதிகரித்தது ஆகியவை குறிப்பிடத்தக்க சிலவாகும். தொழிலாளர்கள் கட்சி ஆட்சிஅதிகாரத்துக்கு எழுச்சி பெற்றது சந்தேகத்துக்கிடமில்லாமல் 1990களின் பிற்பகுதியிலும், 2,000களின் துவக்கத்திலும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதிலும் ஒரு முற்போக்குஅலையாக வீசியது. புதியதாராளமயக்கொள்கைகளை எதிர்த்ததன் விளைவாக அடையபெற்ற வெற்றிகள் அந்தக்கண்டம் முழுவதிலும் கொண்டு செலுத்தப் பட்டன.

 

 இருந்தபோதிலும், ’வெவ்வேறு வர்க்கங்களின் ஆதரவைத் திரட்டுவதற் காகவும், பெரும்பான்மையான மகத்தான தொழிலாளர்களுக்கு அரசியல்ரீதி யான பயிற்சியை அளிக்கும் வழிமுறையைப் பின்பற்றாமல், சமூக- பொருளா தார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும் தொழிலாளர்கள் கட்சி அரசியல் முடிவுகளை எடுத்தது’ என்ற அம்சத்தை மையமாகக்கொண்டு பல விமர்சனங்கள் எழுந்தன. இந்த செயல்முறைகளின் விளைவாக நடுத்தர மற்றும் உழைக்கும் வர்க்க பிரிவினரிடையே வர்க்க உணர்வின் அளவை உயர்த்தத் தவறியது. இதன் எதிர்விளைவுகள், 2016ல் முன்னாள்அதிபர் தில்மா ரௌஸ்ஸெஃப்-க்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பின்போது மிகவும்தெளிவாகத் தெரிந்தது: இதனால்,மிகக்கடுமையான குற்றச்சாட்டுக்களின்மீது எடுத்த நடவடிக்கைகளின் முடிவுகளை மாற்றியமைக்கும் வல்லமைகொண்ட, பெருமளவில்எதிர்க்கும் ஆற்றல்மிக்கவழிமுறையை மேற்கொள்ள இயலாமல் போனது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 5கோடியே 78 இலட்சம் வாக்குகள் (55%) பெற்ற போல்ஸ்னோராவின்தேர்தல் இந்தப்பாடத்தை மீண்டும் உறுதிப் படுத்தியது.

 

 முற்போக்குஅரசுகளின்கீழ் பிரேஸிலின் சமூகசமத்துவமின்மையைக் குறைப் பதில் முதலீடுகள்செய்வது மையமானஇடத்தை எடுத்துக்கொண்டிருந்தாலும் கூட , இந்தக்காலகட்டத்தில் உழைக்கும் வர்க்கத்தை ஒருங்கிணைப்பதற்கு முன்னுரிமை தரப்படவில்லை. மேலும், சமுதாயத்தில் தத்துவார்த்தப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடைபெற்ற போது, அவர்களது கொள்கைகள்மூலம் பயனடைந்த உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவைச் சார்ந்துநின்று அந்தமுயற்சியைத் தடுத்து நிறுத்த தொழிலாளர்கள் கட்சியால் முடியவில்லை. உழைக்கும் வர்க்கத்தின் எலிடா எலெனா (UNE) எங்களிடம், ‘தில்மா ரௌஸ்ஸெஃப் பதவியிலிருந்து நீங்கியபிறகு, உழைக்கும் வர்க்கம் தாக்குதல்களால் துன்புறுத்தப்பட்டது: அந்தத்தாக்குதல்கள் தொழிலாளர்கள் உரிமைகளையும், தொழிற்சங்க அமைப்புக்களையும் பலவீனப்படுத்துவது போன்றவற்றால் தொழிலாளர்களின் திருப்பித்தாக்கும் ஆற்றல்களை வலுவற்றதாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தன’,என்று  கூறினார். :எனவே பிரேஸிலின்இடதுசாரிகள் போர்த்திறம் வாய்ந்த உத்தியில் தோற்கடிக்கப்பட்டுள்ளோம்: மேலும் சமுதாயத்தில் உள்ள சக்திகளின் தொடர்புகள் எங்களுக்கு சாதகமாகஇல்லை’என்று நாங்கள் வாதம் செய்தோம்’ என்றார் அவர்.

 

 கெல்லி மாஃபோர்ட் (MST), பிரேஸிலின் இடதுசாரிகள் சந்தித்த பல தொடர்தோல்விகள் போர்த்திறம் வாய்ந்த உத்தியின் ஒரு தோல்வியைக் குறிக்காது:  ஒருவர்க்கத்தின் உணர்வு இன்னொரு வர்க்கஅரசியல்செயல்பாட் டாளரால் நடுநிலைப்படுத்தப்ப்டும்போது அது நிகழ்கிறது’ என்று நம்புகிறார். நாங்கள் மிகஉறுதியாக பல்வேறு அரசியல் தோல்விகளைக் குவித்திருக் கிறோம்: ஆனால், உழைக்கும் வர்க்கம் இன்னும் உயிருடன் இருக்கிறது: மேலும், முதலாளித்துவ சிக்கல்களின் விளைவுகளை நேருக்கு நேர் எதிர்த்தும் வருகிறது” என்கிறார் அவர்.

 

பிரேஸிலின் உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை மேலும் முன்கொண்டு செலுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட வெற்றிகரமான கடைசி போர்த்திறம் வாய்ந்த உத்தி ‘மக்களின் ஜனநாயக போர்த்திறம் வாய்ந்த உத்தி’ (Popular DemocraticStrategy- (estrategia Democratico-Popular)ஆகும். இந்த உத்தி நகரிய-இராணுவ சர்வாதிகாரத்தின் முடிவில், ஒரு ஜனநாயக மாறுதலுக்கான போராட்டத்தில் பிறந்தது: மேலும் அது, 1970கள் மற்றும் 1980களின் பிற்பகுதிகளில்எழுந்த பெரும்திரள் போராட்டங்களின் இதயமாகவும் இருந்தது.

 

  ‘ மக்களின் ஜனநாயக போர்த்திறம் வாய்ந்த உத்தி’ மூன்று உறுதியான நம்பிக்கைகளைத் தளமாகக்கொண்டுள்ளது:

1.   பிரேஸிலிய முதலாளித்துவம், (விவசாய சீர்திருத்தம், வட்டார மற்றும் சமூக சமத்துவமின்மை, ஒரு ஜனநாயகஒழுங்கை ஒருங்கிணைத்தல்) ஆகிய முதலாளித்துவப் புரட்சியின் கடமைகளை நிறைவேற்றுவதில் தவறியிருக்கிறது.

2.   இந்தக்கடமைகளை உள்ளூர் முதலாளித்துவத்தின் கூட்டணியோடு அல்ல: அதற்குமாறாக, (முதலாளித்துவத்தால் சுரண்டப்படும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிற பிரிவினரான) உழைக்கும்வர்க்கத்தின் முன்னணித்தலைவர்களால்தான் கையாளமுடியும்.

3.   இந்த உத்தியை நிறைவேற்றுவதை நோக்கிய பாதை, நிறுவன வெற்றிகளோடு இணைந்த வலுவான மக்கள் இயக்கத்துடன் இணைவதில் இருக்கிறது: அது, அதிபரின் அலுவலகம்வரை அடையக்கூடியதாகவும்,  மக்கள் ஜனநாயக போர்த்திறம்வாய்ந்த உத்திக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சீர்திருத்தங்களை (ஏகபோகங்கள்,பெரிய நிலம்படைத்த பண்ணைகள் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு எதிராக) நிறைவேற்றுவதிலும் இருக்கிறது.

 

 

  ‘ மக்கள் ஜனநாயக போர்த்திறம் வாய்ந்த உத்தி’ இரண்டு அடிப்படை உத்திகளோடு இணைந்தது, முதலாவதாக, அது நிறுவனங்களின்மீதான கட்டுப்பாட்டை, மாநிலத்துக்குள் உள்ள நகராட்சி, மாநிலம் மற்றும் கூட்டமைப்பு தேர்தல்கள் வழியில் அதிகாரத்தை ஒருங்கிணைப்பதன்மூலம் அடைய விரும்புகிறது. இரண்டாவதாக, வேலைநிறுத்தங்கள், நிலம்கையகப் படுத்தல்கள்,அணிதிரட்டல்கள்மற்றும்மக்கள்போராட்டங்கள் மூலம் உழைக்கும் வர்க்கத்தை அணிதிரட்ட விரும்புகிறது.

 

மாஃபோர்ட் அதை விளக்குகிறார்,: எவ்வாறாயினும்,’  ‘மக்கள் ஜனநாயக போர்த்திறம் வாய்ந்த உத்தி’  நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டபோது, இந்த உத்திகள் அதற்கு அப்பாலும் வளர்ந்தன: மற்றும்  நிறுவனங்களின் (வேலை செய்வதன்மூலம்) இந்தத் தந்திரோபாயம் படிப்படியாக உழைக்கும்வர்க்க அணிதிரட்டல் தந்திரோபாயத்தை கவனிக்கத் தவறிவிடுகிறது. இது நடந்து முடியும்போது, ஒருகாலத்தில் தந்திரோபாயமாக இருந்தது, போர்த்திறம் வாய்ந்த உத்தியாக ஆகிவிடுகிறது. (இந்த மாற்றம்) அமைப்புக்களிடம் அமைப்புக்களின் வலுவைக் கட்டுவதற்கு பதிலாக, அரசுக்குள் இருந்து வேலை செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வைத்துவிடுகிறது. மேலும் கூடுதலாக, லூலா மற்றும் தில்மா ஆகியோரின் புதிய வளர்ச்சிக்கான நிர்வாகங்களின்போது, அரசுக்கும், உழைக்கும்வர்க்கத்தின் அமைப்புரீதியான கருவிக்கும் இடையில் உள்ள தனித்தன்மைகளை உருவாக்குவதில் தவறான அரசியல் நடவடிக்கைகள் ஒரு தொடராக அமைந்தன.’

 

 இதேபோன்றவழியில்,ஜூலியானோமெடெய்ரோஸ்(PSOL)சுட்டிக் காட்டுகிறார்: ’மாநிலத்தைநிர்வகிப்பதற்கு,தாராளமய ஜனநாயகவிளையாட்டின் விதிகளுக்கு, வாழ்நிலையின் மேம்பாட்டுக்கு, ஆனால், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இல்லா மல் என தனது தோற்றத்தை வரையறுத்துக்கொண்ட போர்த்திறம்வாய்ந்த ஒரு உத்தியின் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது சாத்தியமற்றது’. என்கிறார். இடதுசாரிகளின் ஒருபகுதி அரசிலிருந்துகொண்டு மாற்றங்களை வளர்ச்சிபெற வைப்பதைத் தேர்வு செய்தது: அது உழைக்கும்வர்க்கத்துடனான தொடர்புகளை பலவீனப்படுத்தியது. 1980களில் பிரேஸிலிய சமூகத்தை ஜன நாயகப்படுத்தும் வழிமுறைகளில் உருவான கலகலப்பான வடிவங்கள் மற்றவைகளுடன் மாற்றியமைக்கப்பட்டது: அது புதிய தாராளமய சித்தாந்தத் துடனும், தனியுரிமைக் கோட்பாட்டுடனும் வேரூன்றியிருந்தது. மேலும் இது ஏன் நிகழ்ந்தது என்றால், எங்கே மக்கள் வாழ்கிறார்களோ, கலகலப்பாக இருக்கிறார்களோ அந்தத் தளத்தில், நேர்மையான மற்றும் அவசியமான போராட்டங்களை அரசு நிறுவனங்கள் மூலம் நடத்துவதற்கான தளத்தில் மக்களை அணிதிரட்டுவதிலிருந்து இடதுசாரிகள் விலகிச்சென்றுவிட்டார்கள். அதனால், இது இந்த வெளிகளை எதிரிகள் கைப்பற்ற அனுமதித்துவிட்டது.’. மெடெய்ரோஸ் எடுத்துக்காட்டியதுபோல, அதிகார வெற்றிடம் மிகமிக வலதுசாரிகளின் எழுச்சிக்கு வழிவகுத்துவிட்டது.

   ஜாண்டிரா உயெஹரா (CUT) சுட்டிக்காட்டுவதுபோல, முறையாக எதிர்வினையாற்ற இயலாத இடதுபிரிவு துறை, ‘தெளிவான வானத்திலிருந்து ஓர் இடிமுழக்கம்போல’ அதிரவைக்கவில்லை. அதற்குமாறாக, கிட்டத்தட்ட மூன்று சதாப்தங்களாக வர்க்க சமரச அரசியலில், உழைக்கும்வர்க்கத்தைப் பலவீனப்படுத்தியது: அரசியல் திட்டத்தின், அடித்தளத்தைக் கட்டுவதிலிருந்து, அரசியல்பயிற்சி அளிப்பதிலிருந்து, தத்துவார்த்தப் போராட்டங்களிலிருந்து உழைக்கும்வர்க்கத்தைப் பிரித்துவைத்த- ’நிர்வாகம் மற்றும் தேர்தல் போராட்டம்மட்டுமே’ என்ற நோய்த்தாக்கத்தின் விளைவாக அது இருந்தது.’.

 

  தானே ஒரு தொழிற்சங்கத்தலைவராக இருப்பதால், அவர், அத்தகைய ஒரு தோல்வி, இடதுசாரிகளின் தவறுகளால் மட்டுமல்ல, வலதுசாரிகளால், குறிப்பாக, மிகப்பெரிய ஊடகமையங்களின் தாக்குதல்களாலும்கூட ஏற்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார். தொழிலாளர்கள்கட்சி ஆட்சியின் துவக்கத்திலி ருந்தே, ஊடகங்களின் மையநீரோட்டங்கள் அரசியலை குற்றமயப்படுத்தும் கதைகளை - அரசியல் விவாதங்களிலிருந்து சமுதாயத்தை பிரித்துவைப்பதற் காக - கட்டமைத்துக்கொண்டிருந்தன. இது இடதுசாரிகளின் பிம்பத்தை ஊழல் மற்றும்அமைப்புமுறையால் கட்டுப்படுத்தப்பட்டதுஎன குறிப்பாக தொழிலாளர் கள் கட்சியையும், ஒட்டுமொத்தத்தில் இடதுசாரிகளையும் குற்றப்படுத்தியது.’

 

  வலேரியோ ஆர்கெரி (PSOL)  இடதுசாரிகளின் குறுகியபார்வைகொண்ட தந்திரோபாயங்கள்பற்றிப் பேசுகிறார்:,‘அது எங்களை அச்சுறுத்திய ஆபத்துக் களைக் குறைத்துமதிப்பிட வைத்துவிட்டது’. அவர் இந்தப்பிரிவில் வரும் நிகழ்வுகளின் வரிசைகளைப் பட்டியலிட்டார்: ‘கார் கழுவும் செயல்திட்டமும்’ அதைத்தொடர்ந்து, உயர்பதவியில் இருப்பவரை குற்றப்படுத்துவதின் முக்கியத்துவமும், இடதுசாரிகளையும், லூலாவையும் குற்றப்படுத்து வதற்கான வாய்ப்புக்களும், உடனடியாக நிகழக்கூடிய லூலாவின் கைதும், பின்னர் இறுதியாக, பால்ஸனோராவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அச்சுறுத்தலும் குறைத்து மதிப்பிடப்பட்டுவிட்டது: வர்க்க எதிரிகளின் அதிகாரத்தைக் குறைத்துமதிப்பிட்டது பேரழிவாகிவிட்டது.’

 

 வலதுசாரிகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தத் துவங்கியபோது, அண்மைக்காலங்களில் பிரேஸிலிய இடதுசாரிகளால் செய்யப்பட்ட தொடர்ச்சி யான பகுப்பாய்வுசார்ந்த தவறுகளை ஆர்கெரி குறிப்பிடுகிறார். எடுத்துக் காட்டாக,  : ‘கார் கழுவும் செயல்திட்டத்தில்’5 சிக்கவைக்கப்பட்டதைப் புரிந்து கொள்ள முற்போக்கு சக்திகளின் ஒரு முக்கியமானதுறை நீண்டகாலத்தை எடுத்துக்கொண்டது. , ‘தில்மாரௌஸ்ஸெஃப்-ஐ பதவியிலிருந்து நீக்கும் செயல் முறை துவங்கியபோது, சிலதுறைகள், பாராளுமன்றத்தின் அத்தகைய ஒரு முன்னெடுப்பு வெற்றிபெறும் என்பதை நம்பவில்லை. தொழிலாளர்கள் கட்சி தலைவரின் பொருளாதாரக்கொள்கைகள் ஏற்கனவே ஆளும்வர்க்கத்துக்கு பயன்களை அளித்துள்ளது: முதலாளிகள் அரசியல் நிலையற்ற தன்மையில்6 அக்கறை காட்டமாட்டார்கள் என்று விவாதித்துக்கொண்டிருந்தார்கள்

 

 மீண்டும் - சில ஆண்டுகளுக்குப்பிறகு, முன்னாள் அதிபர் லூலா கைது செய்யப்படுவார் - என்பதை பலரும் நம்பவில்லை: ஏனென்றால், அவரை சிறையில்வைப்பது உழைக்கும்வர்கத்தின் எழுச்சிகளைத் தூண்டிவிடும் என்று வலதுசாரிகள் பயப்படுவார்கள் என்று விவாதித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் எவ்வாறோ,2017ல் நீதிபதி செர்ஜியோமோரோ. கைதுசெய்யும் உத்தரவைப் பிறப்பித்தபோதும், அதிபர் பதவிக்கு லூலா போட்டியிடுவதை தடை செய்தபோதும், 2018ல் லூலா முடிவில் கைதுசெய்யப்பட்டபோதும் அவர்கள் எதிர்பார்த்த அந்த எழுச்சிகள் நிகழவே இல்லை. அதன்பிறகு போல்ஸனோரோ 2018 தேர்தலில் தான் அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்தபோதும் பிரேஸில் இராணுவத்தின் முன்னாள் தளபதி போல்ஸனோரோவுக்கான ஆதரவு 8%க்குமேல் இருக்காது என பலரும் மதிப்பிட்டார்கள். ஆனால் போல்ஸனோரோ தேர்தலின் முதல்சுற்றிலேயே முன்னிலை வகித்ததுடன், இரண்டாவது சுற்றில் தொழிலாளர்கள் கட்சியின் ஃபெர்ணாண்டோ ஹத்தாத்-க்கு எதிராக 55% வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

 

 2014ல் ஏவப்பட்ட ’கார் கழுவும் செயல்திட்டம்’ விசாரணை நீதிமன்ற நீதிபதி செர்ஜியோ மோரோ-வால் வழிநடத்தப்பட்ட ஒரு முயற்சியாகும்: அது, மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்க ளோடு பிரேஸில் அரசின் எரிசக்தி நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டதில் ஊழல்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக வந்த அறிக்கைகளை புலனாய்வு செய்யும் நோக்கம் கொண்டிருந்த்காக குற்றம் சாட்டப்பட்டது. ‘கார் கழுவும் செயல்திட்டம்’ அதிபர்கள் தில்மா ரௌஸ்ஸெஃப் மற்றும் லூலா-ஆகியோரை சட்டபூர்வமற்றவர்களாகஆக்கவும், அவர்களுக்கு அரசியல் இடர்ப்பாடுகளை  தருவதற்குமான முதன்மையான கருவியாக இருந்தது. அந்த செயல்திட்டத்தின் முக்கியமான நோக்கமாக, லூலாவை எந்தவிதமானஆதாரங்களுமின்றி மிகவும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டுக்கள் மூலம்  குற்றப்படுத்துவதாகவும், இருந்தது. ஊழலை எதிர்த்துப் போராடவேண்டிய ஒரு செயல்திட்டம் ஒரு தொடர்அரசியல்விசாரணைகளாக மாறியது என்று குற்றம் சாட்டப்பட்டது

 

 

.

    

 மிகப்பல தடைகளை எதிர்கொள்ளும்போது, புதிய தாராளமய சித்தாந்தம், தனியுரிமைக்கோட்பாடு, மற்றும் தொழில்முனைவோர் –ஆகியவற்றின் வலுவான செல்வாக்கின்முன், பலவீனப்பட்டுக்கொண்டிருந்த சோசலிச சித்தாந்தத்தின் மூலம் எந்தவொரு தீவிரமான எதிராளியையும் காணமுடிய வில்லை – ஏனென்றால் சோசலிச சித்தாந்தத்தின் அமைப்புக்கள் தங்களது முதலாளித்துவத்துக்கு எதிரான, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒட்டுமொத்த குணாம்சங்களையும் கைவிட்டுவிட்டன.: மேலும், தங்கள் முயற்சிகளை நிறுவனம் மற்றும் தேர்தல் போராட்டங்களுக்கு அர்ப்பணிப்பதற்குப்பதிலாக, பின்னுலையில் ஒரு தளத்தைக் கட்டுவதில் காட்டினார்கள்.

 

ஜாண்ட்ரியா உயெஹரா (CUT) ’வலதுசாரிகளுக்கு உழைக்கும் வர்க்கத்தை வெற்றிகொள்ள ஒருசெழிப்பான தளம் உருவாகியது: உழைக்கும் வர்க்கத்தின் பெரும்பான்மையானவர்கள் பெருமளவுக்கு அணிதிரட்டப்படாதவர்களாகவும், தொழிற்சங்கங்களிலோ, மக்கள் இயக்கங்களிலோ அல்லது இடதுசாரி கட்சி களிலோ அவற்றின் நிரந்தரச்செல்வாக்குக்கு ஆட்படாதவர்களாகவோ இருந் தார்கள்.: அவை,ஒருகாலத்தில் எங்கே அவர்களது அரசியல் போராட்டங்களை ஒருங்கிணைத்தனவோ, அந்தப்பகுதிகளை சிறுகச்சிறுக கைவிட்டுவிட்டன. அதற்குப்பதிலாக கூட்டுமுகவாண்மை மற்றும் பொருளாதாரப் போராட்டங் களுக்கும், அதேபோல தேர்தல் பந்தயங்களுக்கும் முன்னுரிமை அளித்தன. இந்த நேரத்தில் எங்கே உழைக்கும் வர்க்கம் வாழ்கிறதோ, அந்தப்பகுதிகளில்  வலதுசாரி பிரிவுகளின் கருவிகள் ஓர் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டங்களை நடத்தி வேரூன்றிவிட்டன’’ என்று விளக்கினார்.

 

 

                          #  #  #  #  #

  

 

 

  

 .       

 

 

 

 

 

 

 

 

பிரேஸில் 2021 ஐ வேலையின்மையின் சாதனை அளவுகளோடு துவக்கியது: இந்தசூழ்நிலையில் 14,272பேர் (14.2%) தேசிய குடும்பவாரி மாதிரி ஆய்வின்படி வேலையில்லாதவர்களாக இருந்தார்கள்.

 

Rafeal Olinto (@rafa olin)/ Design Ativista/ 2020

செய்ததையே மீண்டும் செய்யும் வரலாற்றின்  துன்பியல்

  2008 பொருளாதார நெருக்கடிக்குப்பிறகு, விரைவாக, உலக மேலாதிக்கத்தை யும், கட்டுப்பாட்டையும் மீண்டும் பெறுவதற்காக அமெரிக்கா ஒருபுதியதாராள வாத தாக்குதலுக்கு தலைமையேற்றது. அதேவேளையில், பிரேஸிலில், ஏகாதிபத்திய போர்த்தந்திரங்களின்செல்வாக்கின்கீழ், தொழிலளர்கள் கட்சியின் சிக்கலான அரசியல் மற்றும் வர்க்கச்சேர்க்கை நிர்வாகங்கள் தாமாகவே நீர்த்துப்போகத் துவங்கின. தொழிலாளர்களின் உரிமைகளை திரும்பப் பறிக்காமல்.முதலாளிகளின் ஆதாயங்களை பராமரிப்பது நீண்டகாலத்துக்கு சாத்தியமில்லாமல் போனது. ஆளும்வர்க்கத்துக்கும், தொழிலாளர்கள் கட்சி அரசுக்கும் இடையே ஒரு முறிவை ஏற்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்ணுக்குத்தெரியாத கைகளால் வழிகாட்டப்பட்ட ஒரு திட்டம் படிப்படியாக வடிவமைக்கப்பட்டது.

 

 2014ல் வலது தாராளவாத பிரேஸிலியன் சோசியல் டெமாக்கிடடிக் கட்சியின் ஏஸியோ நேவிஸ் அதிபர் தேர்தலில் தில்மா ரௌஸ்ஸெஃப்பிடம் தோற்றார். தேர்தல் வழிமுறைமூலம் புதியதாராளமயத்திட்டங்களை முழுநிறைவாக நடைமுறைப்படுத்துவதில் தோல்வியடைந்தபிறகு, பிரேஸில் முதலாளித்து வத்தின் மேலாதிக்கத்துறைகள் இரண்டு வெவ்வேறு தந்திரங்களை மேற்கொண்டன. முதலில் தில்மாரௌஸ்ஸேஃப்புக்கு எதிராக குற்றவிசாரண நடவடிக்கைகளை துவக்கினார்கள்: பின்னர், சிறிதுகாலத்துக்குப்பிறகு லூலாவை அதிபர்தேர்தலில் பங்கெடுப்பதிலிருந்து அவர்கள் தடைசெய்தார்கள் மேலும்,ஜெய்ர் போலஸனோரோவின் அதிபர்பதவிக்கான ஏலத்துக்கு ஒப்புதல் அளித்தார்கள். புதியபாஸிச குணங்களைக்கொண்ட சர்வாதிகாரமுகமான போல்ஸனோரோதான் 2018 தேர்தல்களில் தொழிலாளர்கள் கட்சியை வெல்லக்கூடிய ஆற்றல்மிக்க ஒரே வேட்பாளராக இருந்தார்.

 

  ஆட்சிக்கவிழ்ப்பு தில்மாவை வெளியேற்றியபிறகு உடனடியாக, வலுவான மற்றும் வெற்றிகரமான புதியதாராளமய மற்றும் சிக்கண நடவடிக்கைகள், தொழிலாளர்கள்கட்சி அரசுகள் 13ஆண்டுகள்காலத்தில் அடைந்த வெற்றிகளை அகற்றுவதற்காக செயல்படுத்தப்பட்டன. பிரேஸிலிய மற்றும் பன்னாட்டு முதலாளிகளை பொது ஆதாரவளங்களை குறிப்பிடத்தக்க அளவில் கொள்ளை யிடஅனுமதித்ததால் அரசு பலவீனப்பட்டது.  நாடு எந்தவித நிபந்தனையு மின்றி அமெரிக்க ஐக்கிய நாடுகளோடு எல்லா பன்னாட்டு விவகாரங்களிலும், மன்றங்களிலும், அமைப்புக்களிலும் மீண்டும் இணைந்தது. மேலும், வெனின்ஸுலா மற்றும் பொலீவிய புரட்சிகர செயல்பாடுகளுக்கு எதிராக பலநாடுகளிலும் பிரச்சார இயக்கங்களிலும் அப்பட்டமாக ஈடுபட்டது.

 

 ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஐந்தாண்டுகளுக்குப் பிறகும், போல்ஸனோரோவின் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகும் பிரேஸில் ஒரு சுதந்திரமான குடியரசாக7 அதன் வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார, சமூக, அரசியல், சூழ்நிலையியல் மற்றும் சுகாதார இடர்பாட்டுக்குள் மூழ்கியது. சுகாதார நெருக்கடியில் கூட்டாட்சி அரசின் தவறான நிர்வாகம்- உலக அளவில் நோய்த்தொற்று குறையத்துவங்கியபோது, நாட்டை - இந்தியாவைப்போலவே – 2021 மார்ச்=ஏப்ரலில் நோய்த்தொற்று பரவலின் மையப்புள்ளியாக ஆக்கிவிட்டது.இந்தநெருக்கடிகளின் ஒருங்கிணைப்பு மக்களின் வாழ்நிலையை மிகமோசமாக்கிய ஆழ்ந்ததாக்கத்துக்குள்ளாக்கியது. மேலும் பசியும், பஞ்சமும் அதேபோல உருமாறிய கொரோனா நோய்க்கிருமிகளும் பெருகுவதற்கும், சுகாதார அமைப்புமுறை சீரழிவதற்கும் வழிவகுத்தது.8

 

போல்ஸனோரோ நிர்வாகம் வேண்டுமென்றே நடைமுறைப்படுத்திய இனப்படுகொலைக் கொள்கைகளால் நோய்த்தொற்றுப்பரவல் மேலும் மோச மாவது மட்டுமே நிகழ்ந்தது. அரசு இன்னும் கொரோனா  நுண்கிருமிகளை எதிர்த்துப்போராடவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்காததால், அவை எந்தவிதகவனிப்பும் இல்லாதமக்களின் மரணங்களின் எண்ணிக்கை களை மிகஅதிவேகமாக அதிகப்படுத்தியது. இது,தாராளவாத வலதுசாரிகள், அரசுக்கு அளித்துவந்த ஆதரவை9 மெதுவாகவும், படிப்படியாகவும் விலக்கிக்கொள்ள வழிவகுத்தது.  மிகுந்த அதிகாரத்தனமான பேச்சுக்களாலும், நோய்த்தொற்று பரவலுடன் போராட எடுத்துக்கொண்ட வழிமுறைகளாலும் அங்கே சிலஅசௌகரியங்கள் இருந்தபோதும், வலதுசாரிகள்   தொழிலாளர் களையும், சமூக உரிமைகளையும் தாக்கும் தீவிரமான புதியதாராளமய திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்துவந்தார்கள்.

 

 ’தீவிரவலதுசாரிகளுக்கும், மரபார்ந்த(தாராள) வலதுசாரிகளுக்கும் இடையில் அரசியல்முரண்பாட்டின்நோய்த்தாக்கம்,பிரேஸிலில்நாம்பெற்ற வரையறுக்கப் பட்ட ஜனநாயகத்தைக் கட்டமைக்கும் அரசு நிறுவனத்தின் கட்டுப்பாடு பற்றிய உடன்பாடின்மையாகவும், முரண்பாடாகவும் உருப்பெற்றது.’ என ஜாண்ட்ரியா (CUT)விளக்குகிறார். இது மிகவும் குறிப்பாக STF - உச்சநீதிமன்றம் மற்றும் நீதி அமைப்புமுறை மற்றும் தேசீயப்பேராயம் ஆகியவற்றுடனான பிரச்சனையாக இருக்கிறது புதியதாராளமய திட்டத்தைச்சுற்றி அமைந்துள்ள இந்த ஒற்றுமை போல்ஸனோரோவின் இனப்படுகொலை நிர்வாகத்தை எதிர்த்தெறிவதற்கான தூண்களில் ஒன்று.. இராணுவமும், எவாஞ்சலிக்கல் தேவாலயங்க்ளுக்குள் பெருமளவுக்கு கட்டமைக்கப்பட்ட மக்கள்ஆதரவு என்ற போல்ஸனோரோவின் அடித்தளமும் போல்ஸனோரோவின் மற்ற இரு ஆதரவுத்தூண்களாகும்.’ என ஜாண்ட்ரியா(CUT) விளக்குகிறார் ;பெரும்பாலான வலதுசாரிகளுக்கு அவர்களுக் கான ஒருமுடிவை போல்ஸனோரோ பிரதிநிதித்துவப்படுதாவிட்டாலும்,  தீவிர புதியதாராளமயக்கொள்கைகளை நிறைவேற்ற ஒரு வழிமுறையாக இருந்துவந்தார்.’

 

 உள்நாட்டு முதலாளித்துவத்தின் பெரியபகுதியின் ஆதரவோடு கூடவே மற்ற நான்கு போல்ஸனோரோவின் ஆதரவுத்தூண்களும் இருப்பதில் வாலெரியோ ஆர்கெரி கவனத்தை ஈர்க்கிறார்:

1.   சுகாதார ஒழுங்கின்மைக்கிடையிலும்கூட10, நம்பமுடியாத அளவுக்கு பிரேஸிலின் மக்கள்தொகையில் தோராயமாக மூன்றில் ஒருபங்கின் ஆதரவு

2.   உழைக்கும் வர்க்கத்தால் உணரப்பட்ட தொடர்தோல்விகளால் ஏற்பட்ட நம்பிக்கை இழப்பின் விளைவுகள்

3.   போல்ஸனோரோவுக்கு மாற்றாக உள்ளவர்களின் பலவீனம், மற்றும்

4.   உழைக்கும் வர்க்கத்தின் அணிதிரட்டும் ஆற்றலின்மீது வரையறைகளை திணிக்கும் நோய்த்தொற்றின் பரவல்.

 

தோராயமாகப் பேசினால், தற்போதைய  பிரேஸிலின் அரசியல் அரங்கம் நான்கு அகன்றதுறைகளால் தொகுக்கப்பட்டது: தீவிரவலது, தாராளவலது, மத்திய-இடது மற்றும் இடது. ’இந்தத்துறைகளில் எது இன்னும் ஒரு(அரசியல்) திட்டத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது?. அது மிகச்சரியாக மத்திய-இடது மற்றும் தாராளவலது. ஜனநாயகத்தின் ஆபத்தானகட்டம் புறக்கோடிகளை வலுப்படுத்தியுள்ளது’ என ஜூலியனோ மெடெய்ரோஸ் (PSOL) எங்களிடம் கூறினார்.

 

 இதற்கிடையில் கெல்லி மாஃபோர்ட் ‘தாராள வலது அதன் செல்வாக்கை இழந்துவிட்டநிலையில், இடதுக்கும் தீவிர வலதுக்கும் இடையே முதன்மையான முரண்பாடு வலுப்பெற்றுக்கொண்டிருக்கிறது. இப்போது தாராளவலதுக்கு மிகப்பெரிய பிரச்சனையே, மக்களிடம் ஈடுபாடுள்ள ஒரு அரசியல் தலைவரை கண்டுபிடிப்பதுதான்.’ என்று நம்புகிறார். இருந்தபோதிலும் அவர் குறிப்பிடுகிறார்: ‘ தீவிரவலதும், தாராளவலதும் முதலாளித்துவ வர்க்கம் என்ற  அதே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான் என்பதை எப்போதும் நினைவில்கொண்டிருப்பது மிகவும் முக்கியம்’ இந்த வர்க்கத்துக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தாலும், உறுதியாக எதிர்க்கும் மூலதனத்தாலும் நமக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டபூர்வத்தன்மையுடன் நாம் கட்டாயம் இயங்கவேண்டும்.’

 

 

                          #  #  #  #  #

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 , நோய்த்தொற்று பரவலின் துவக்கத்தில், கோவிட் 19 ஐ எதிர்த்துப்போராடுவதற்கான மிகச்சிறந்த நிலைமைகளைக் கொண்டிருந்த இலத்தீன் அமெரிக்க நாடாக பிரேஸில் இருந்தமைக்கு தேசிய சுகாதார கட்டமைப்புக்கு –National Healthcare ystem (SUS) நன்றி.. இருந்தபோதிலும், மிக்க்ஸிகன் பல்கலைக்கழகமும், கெட்யூலியோ வர்காஸ் ஃபவுண்டேஷனும்(FGV) நடத்திய ஆய்வுகள் அரசு வேண்டுமென்றே சுகாதார அமைப்புமுறையை புறக்கணித்ததைக் காட்டுகின்றன.

 

Matheus Migul (@poesianesestrelas)/ Design Ativista /2020

 

 

  பரந்தமுன்னணியா? அல்லது இடதுமுன்னணியா?

 

 

’பிரேஸிலின் இடதுசாரிகளை எதிர்கொள்ளும் சவால்கள் பகுதி 3

 

  பரந்தமுன்னணியா? அல்லது இடதுமுன்னணியா?

 

 

வலேரியோஆர்கெரி, போல்ஸனோரோவைத் தூக்கி எறியும் நோக்கத்துக்கான சூழல்கள் சுகாதார அமைப்புமுறையில் வீழ்ச்சிக்கு நடுவே மிகவும் கனிந் திருந்தது எனவும், ஏற்கனவே அழுகத்தொடங்கியிருந்தன இந்த நிலைமைகள்   அகநிலை நிலைமைகளைவிட மிகவேகமாக  வளர்ச்சியடைகின்றன என்றும் விவாதிக்கிறார். இருந்தபோதிலும், தீவிர வலதுசாரி அரசை எதிர்க்கும் துறை களான இடது மற்றும் தாராளவலதுக்கும் இடையே கூட்டாட்சி அரசில் மேலாதிக்கம் யாருக்கு என்பதில் ஒரு சர்ச்சை இருக்கிறது.’தீவிர வலதுகளுக்கு எதிரான 100 ஆண்டுகால போராட்டங்களின் அனுபவங்கள், குறிப்பாக, எப்பொழுதெல்லாம் தீவிரவலது பாஸிச குணாம்சங்களோடு அரசியல் நீரோட்டத்தில் வழி நடத்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் விரிவ டைந்த இடது முன்னணி தான் மிக்ச்சிறந்த தந்திரோபாயம் என்பதை நிரூபித் துள்ளது’ என்று ஆர்கெரி நம்புகிறார். இது, தீவிர வலதுகளுக்கு எதிராகப் போராடுவதற்கு, தாராளவலதுகளுடன் தங்கள் படைகளை இணைக்க இடதுகள் விரும்பமாட்டார்கள் என்பதால் அல்ல: ஏனென்றால் சமூக நெருக்கடிகள் ஓர் இடதுசாரி அரசுக்கான துவக்கத்தை அளித்துவிடுமோ, என்று தாராள வலதுகள் மிகச்சரியாகவே அச்சம்கொள்வதால்’.

 

  ஜாண்ட்ரியா உயெஹரா(CUT)வைப் பொருத்தவரை ’போல்ஸனோரோவை வெளியேற்று’ என்ற முழக்கம், நெருக்கடி மிகவும் மோசமாகிக்கொண்டிருப் பதால், இடது மற்றும் மத்திய வலது(தாராளவலது)களில் உள்ள துறைகளை ஒன்று சேர்த்துவிடும். ஆனால் தற்போதைய பாஸிசத்தன்மைகொண்ட கொடும்தாக்குதலுக்கு எதிராக உள்ள எல்லாரையும் – இடது மற்றும் மத்திய இடதுகளின் சில துறைகள் முன்வைப்பதுபோல - ஒரு பரந்த கூட்டணியில் கொண்டுவருவது  ஜாண்ட்ரியாவின் கருத்துப்படி, இந்த சக்திகளை சமூக-வரலாற்று வழிமுறைகளில் இரண்டுகட்ட அணுகுமுறைகளை மேற்கொள்ள வழிவகுத்துவிடும். இந்த அணுகுமுறை, ஜனநாயக சுதந்திரங்களுக்கான போராட்டங்களை உரிமைகளுக்கான மற்றும் தேசிய இறையாண்மைக்கான போராட்டத்திலிருந்து பிரித்துவிடும் இந்த அணுகுமுறை மேலோங்குமானால், இடதுசாரிகள், தாராளவலதுகளின் பிணைக்கதிகளாக ஆகிவிடுவார்கள்:, அண்மைக்காலங்களில் நிறைவேற்றப்பட்ட புதியதாராளமய திட்டங்களை மாற்றியமைப்பது அவர்களுக்கு இன்னும் கடினமானதாகஆக்கிவிடும்’ என்று உயெஹராகணிக்கிறார்.‘எங்களதுபார்வையில் அவர்களிடமிருந்துமுழுமையாக முறித்துக்கொள்ளாமல் இந்தத்திட்டங்களுக்கு முடிவு கட்டுவதற்கு சாத்தியம் எதுவும்இல்லை: மேலும்,கொடுக்கவேண்டிய விலைகள் மக்களை இழப்புக்குள் ளாக்கியிருக்கும்நிலையில் கொடூரமானசுரண்டல்ஆட்சி மற்றும் முதலாளித்து வத்தின் புறஎல்லையின்கீழ் சமத்துவமின்மைகள் ஆழமாக நிறுவபடும்போது அங்கே தேசிய ஐக்கியமும் இருக்காது’

 

 இந்தப்பார்வை க்லெய்ஸி ஹோஃப்மன் கனவுகாணும் உத்தியோடு முரண்படுகிறது: அவர், பிரேஸிலில் அனுபவித்துவரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள.ஒரு பரந்த அரசியல் கூட்டணி தேவைப்படுகிறது – அது தேர்தலுக்கான கூட்டணியாக அவசியம் இருக்கவேண்டியதில்லை: ஆனால்,, தடுப்பு ஊசிகளு,க்காக, அவசரகால உதவிகளுக்காக,, வேலைகளுக்காக யாரெல்லாம் போராடுகிறார்களோ அந்த எல்லா அரசியல், சமூக மற்றும் கலாச்சாரத்துறைகளில் உள்ள அனைவரையும், அதேபோல, ‘போல்ஸனோரோ வைவெளியேற்று’ என்ற முழக்கத்தோடு, போல்ஸனோரோவைத் தோற்கடிக் கப்போராடுபவர்களையும் ஒன்றாக சேர்க்கவேண்டும்’’ என்கிறார்.

 

இந்த விளக்கம் எலிடா எலனா(UNE)வால் தரப்பட்ட பகுப்பாய்வுகளோடு ஒத்துப்போகிறது: அவர், இரண்டு முன்னணிகளின் இணைப்பை ஆதரிக்கிறார்: மக்களால் விரும்பப்படும் ஒரு இடதுமுன்னணி மற்றும் ஒரு ஜனநாயக முன்னணி. ‘அடிப்படையான பாடமாக இங்கே இருப்பது, ஜனநாயகப் பிரச்சனை சமூகப்பிரச்சனையோடு பின்னிப்பிணைந்திருக்கிறது என்பதுதான்: அது, முதலாளித்துவத்தின் கடுமையான நெருக்கடியின் விளைவாக இன்னும் மோசமாகியிருக்கிறது. அது ஜனநாயகத்தை பாதுகாப்பது பற்றியது, அது சீர் கெட்ட ஜனநாயகமாக இருந்தாலும்கூட. ஏனென்றால், இதுதான் ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவதற்கான மிகவும் பொருத்தமான தளம். எங்கே உழைக்கும் வர்க்கப்போராட்டங்களுக்கும், அமைப்புக்களுக்கும் நிலைமைகள் சாதகமாக இல்லையோ, அங்கே, போலீஸ் ராஜ்யமோ அல்லது பாஸிச அரசியல் ஆட்சியோகூட வரவிடாமல் தவிர்ப்பதற்கு இது அவசியமாகும்.’ இதன் பொருள், ஒரு ஜனநாயக முன்னணியைக் கட்டமைப்பது, மேலும், ஜனநாயகத்தைப் பாதுக்காப்பதற்கும், புதிய பாஸிசத்தை அரிப்பதற்கும், தனிமைப்படுத்துவதற்கும் மற்றும் தோற்கடிப்பதற்கும் சமூகத்தின் பல்வேறு துறைகளை ஒன்றாகக்கொண்டு வருவது என்பதாகும்.

 

 ’பிரேஸிலை நெருக்கடியிலிருந்து வெளியேகொண்டுவர, ஜனநாயக மற்றும் மக்கள் சக்திகளையும் ஒன்றுதிரட்டும் போர்த்தந்திர குணாம்சங்களோடு உழைக்கும் வர்க்க இடது முன்னணியை கட்டுவதையும், வலுப்படுத்துவதை யும் தொடரவேண்டும்’ என்று எலெனா நம்புகிறார். இது, மக்களின் சமூக உரிமைகளை, நிறவெறிக்கு எதிரான கறுப்பின மக்களின் போஈராட்டங்களைப் பாதுகாப்பதையும், பிரேஸிலின் தொழிலாளர்களை கீழே இறக்கிவிட்ட வரலாற்றுபூர்வமான எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான, பொருளாதார அமைச்சர் பாவ்லோக்யூடெஸ்-ன் புதிய தாராளமய கொள்கைகளுக்கு எதிரான தொய்வில்லாத போராட்டங்களை நடத்துவதையும் உள்ளடக்கியிருக்கிறது.’

 

  ‘பிரேஸில் மக்கள் முன்னணி (Frente Brasil Popular 9Popular Brazil Front)மற்றும் ‘அச்சமற்ற மக்கள் முன்னணி Frente Povo Sem Medo (People Without Fear) ஆகிய இரண்டு முன்னணிகளும் 2015ல் அமைக்கப்பட்டன: ஒவ்வொன்றும் பற்பல இடதுசாரி ப்ரிவு அரசியல் அமைப்புக்களை இணைத்துக்கொண்டிருந்தது.  ‘பிரேஸில் மக்கள் முன்னணி (Frente Brasil Popular 9Popular Brazil Front அதன் இயல்பில் பரவலானது: அரசியல் கட்சிகளை வளுப்படுத்துவதில் கவனம் செலுத்திவந்தது. அதேவேளையில் அச்சமற்ற மக்கள் முன்னணி Frente Povo Sem Medo (People Without Fear சமூக மற்றும் தொழிலாளர் இயக்கங்களால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு முன்னணிகளும் அரசியல் திட்டத்தை யும், தேசத்துக்கான திட்டத்தையும் கட்டமைப்பதற்கு அவசியமானவை இரண்டும் உழைக்கும்வர்க்கத்தில் புதியதாராளமயசீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய இடதுசாரிகளோடு ஒற்றுமையை ஏற்படுத்துவதிலும், கட்டமைப்பதிலும் முக்கியப் பாத்திரத்தை வகிக்கின்றன.

 

 கெல்லி மாஃபோர்ட் சுட்டிக்காட்டுவதுபோல, எந்த உத்தி பயன்படுத்தப்படு கிறது என்பதைக் கருதாமல், மேலும்மேலும் முன்னேறிச்செல்லவும், யதார்த்தத்தின் கைகளின் தாக்குதல்களை மென்மைப்படுத்தவும் பாதைகளை கட்டமைக்கவேண்டிய தேவைபற்றிய கருத்தொற்றுமை அங்கே இருந்தது. ’அவர்களுடைய அரசியல் திட்டம் மற்றும் கண்ணோட்டத்தைச் சூழ்ந்து ஒற்றுமையைக் கட்டும் முயற்சிகள்மீது இப்போதைக்கு கவனத்தைக் குவிப்ப தில்லை’என்பதை MST தேர்வு செய்தது என்று கெல்லி மாஃபோர்ட் கூறுகிறார். ’ஏனென்றால் மக்கள்திரள் போராட்டங்கள் குறைந்துவரும் நேரங்களில் அவ்வாறு செய்வது, மிகவும் படித்த அறிவாளிகளின் கண்ணோட்டத்தில் தவறுகளுக்கு வழிவகுத்துவிடும் அல்லது யார் மேலாதிக்கம் செலுத்துவது என்பதன்மீதான போராட்டங்கள் வர்க்கப்போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல எந்தஒரு பங்களிப்பையும் அளிக்காது. ஆகையால்,எங்களது கணக்கீடுகளுக்கு எப்போதும் எதார்த்தத்தையே முதன்மைத்தளமாகக்கொண்டு, அரசியல் கோரிக்கைகளைச் சூழ்ந்தே ஒற்றுமையை கட்டமைப்பதில் ஈடுபட நாங்கள் விரும்பினோம்..

 

 மிகஅதிகமாக உடனடி அரசியல் கோரிக்கைகளைச்சுற்றி எழுந்த ஒற்றுமை, பிரேஸிலின்இடதுசாரிகளிடையே செயல்பாட்டில் ஒற்றுமையை உருவாக்கி யது. எடுத்துக்காட்டாக மூன்று முக்கியமான கோரிக்கைகளாக இருந்தவை: மக்களுக்குதடுப்புஊசிகள் கிடைப்பது: அவரசகால உதவியாக மாதம்ஒன்றுக்கு 600R$, மற்றும் போல்ஸனோரோவை பதவி நீக்கம் செய்வது.

 

‘கெல்லி மாஃபோர்ட் கூறினார்:’ நாங்கள் அரசியல் பிரதிபலிப்புக்களின் தருணங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்: அதனால், எங்களால் போர்த் தந்திர ஏற்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள முடியும், மேலும் இது, சமூக இயக்கங்கள், அமைப்புக்கள்(campopopular) மற்றும் இடதுசாரிகள் சிதறுண்டு போவதை எதிர்கொள்வதையும்,அதேபோல, மேலாதிக்கத்துக்கான போராட்டம் மற்றும் நீண்டகால போர்த்தந்திரம் பற்றிய உத்திகள் மீது அதிகப்படியான கவனத்தைக் குவித்தலை எதிர்கொள்வதையும் உள்ளடக்கியுள்ளது.

 

சந்தேகமில்லாமல், ஒற்றுமையைஅடைவது நீண்டகாலமாகவே ஒட்டுமொத்த இடதுசாரிகளுக்கும் ஒரு சவாலாகவும், வரலாற்றுத்தேவையாகவும் இருந்து வருகிறது. இந்த உணர்வில் எலிடா எலனா(UNE) இடதுசாரிகளின் சிதறல் அதற்கு தீங்கு விளைவிப்பதாகும் என நம்புகிறார். இது இரண்டு காட்சிகளுக்கு வழிவகுக்கும்: ஒருபுறத்தில் போல்ஸனோரோவிசத்துக்கு ஒரு தேர்தல் வெற்றியையும், சமுதாயத்தில் விரைவான பாஸிசத்தின் எழுச்சியையும் அல்லது மறுபுறத்தில் அதற்கு மாற்றாக தாராள வலதுகளின் உருவாக்கமும் – இந்த உருவாக்கம் புதிய தாராளமய பொருளாதாரத் திட்டங்களை தொடரும்.

 

 நமக்குள்ளேயே நாம் சிதறிப்போவோமானால், எந்தவொரு இடதுசாரி சக்தியும் வெற்றிபெறாது. மேலாதிக்கத்துக்காக போராடிக்கொண்டிருக்காமல், கருத்து வேறுபாடுகளுக்கு மரியாதை அளித்து, திட்டவட்டமான அமைப்பு ரீதியிலான கோரிக்கைகளைவிட, எது மிக அதிகமாக பொருத்தமானதோ அதைச்சூழ்ந்து  நம்மை ஒற்றுமைப்படுத்தும் ஒரு உத்தியின்மூலம் நாம் ஒரு சாதகமான சுற்றுச்சூழலை பெற்றாகவேண்டும்:-மேலும் அது பிரேஸிலில் புதிய பாஸிசத்தின் எழுச்சியைத் தோற்கடிக்கும் என்கிறார் எலிடா எலனா.

R$600  

 

2020ல் 6கோடியே 80 இலட்சம் மக்கள் அவசரகால உதவியாக மாதம் ஒன்றுக்கு R$600 பெற்றார்கள்.2021ல் இந்த உதவி மேலும் கட்டுப்படுத்தப்பட்டது, மேலும், R$150 முதல்

R$375 வரை என குடும்பத்தைச் சார்ந்திருப்பவர்களுக்கு நான்குமுறை வழங்கப்படும்.

 

 

Adriana Vespa(#adriana.vespa) / Design Ativista / 2021

 

 

 

அடித்தளத்தை கட்டுதல்

 

 

பிரேஸிலில் – 2021ல் 100 வயதை அடையும் பாவ்லோ ஃப்ரெய்ரின் நாட்டில் – நீண்ட பல ஆண்டுகளாக பெரும்பாலான இடதுசாரி அமைப்புக்கள், வார்த்தை களில் மட்டும் முற்போக்கு துறைகள் என்று இருந்தாலும், மக்களிடையே நம்பிக்கையை மீண்டும் திரும்ப நிலைநாட்டுவதிலும், சமூகத்திலுள்ள சக்திகளின் தொடர்புகளை மாற்றியமைக்கும் ஆற்றலுடைய அடித்தளத்தை ஒன்றுதிரட்டுவதற்கும், வலுப்படுத்துவதற்கும், கட்டமைப்பதற்கும் போராடி வந்தன. இருந்தபோதும் கிட்டத்தட்ட இடதுசாரிகளின் எல்லாக்கூறுகளும் ஒரு அடித்தளத்தைக் கட்டுவதற்கான புரிதலை மீண்டும் பெறுவது அவசியமான ஒரு தந்திரோபாயம் என்பதையும், அத்துடன்கூடவே ஒரு தத்துவார்த்தப் போராட்டத்தை நடத்துவதும்,ஒரு நிரந்தரமான வழியில் சமுதாயச் செயல் பாடுகளில் தொடர்புகொண்டிருப்பதும் தேவை என்பதையும் ஒப்புக்கொண் டுள்ளன. மக்களிடையே வலிமையை மீண்டும் கட்டமைப்பதற்கும், போல்ஸனோரோவிஸத்தைத் தோற்கடிப்பதற்கும், அதிகாரத்தைக் கைப்பற்றும் பாதையில் கட்டமைப்பு  சீர்திருத்தங்க:ளைச் செய்வதற்கும். இதுதான் மையக்கூறாகப் பார்க்கப்பட்டது.

 

 வெலேரியோஆர்கெரியின் கூற்றுப்படி, இடதுசாரிகளின் சமூக அடித்தளமான பெரும்பாலான செயல்படும் துறைகள் வலுவடைந்துகொண்டிருக்கின்றன. மக்களின் போராடும் விருப்பங்களுக்கு, அவர்களது மனநிலைகளுக்கு, நன்னடத்தையின் வலிமைக்கு மேலும் தன்னம்பிக்கைக்கு மக்களின் உணர்வு நிலையில் மாற்றம்தான் மையமானது. வர்க்க நிலைபாடுகள் மாறுவதற்கு முன் மக்களின் உணர்வுநிலைகள் மாற்றப்படுவது தேவைப்படுகிறது. சாத்தியமற்றவை என்று தோன்றும் சில விஷயங்கள் சாத்தியமாகும்போதும், அவை ஆச்சரியமாக வரும்போதும் எதிர்பார்ப்புக்கள் அதிகமாகின்றன.’

 

  எலிடா எலெனா(UNE) ’இந்தத் தருணத்துக்கு தயாராவதற்காக, நாங்கள் செயல்படும் தற்காப்பு உத்திகளைக் கட்டுவதை எண்ணிக்கொண்டிருக்கிறோம்: அது, தாக்குதல் நிலைக்கு முன்னேறிச்செல்லும் சூழல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும்போது, ஏற்படும் பின்னடைவுகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இன்று எங்களது வேலை போல்ஸனோரோவிஸத்தை தனிமைப்படுத்துவது, அரிப்பது மற்றும் தோற்கடிப்பதாகும். உழைக்கும் வர்க்கத்துடன் எங்களதுபந்தங்களை விரிவுபடுத்துவது அவசியமானது. இதைச் செய்வதற்கு எங்களது எதிர்ப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழியாக நாங்கள் அரசியல் ஒருமைப்பாட்டைச் சார்ந்திருக்கிறோம்.’ என்று குறிப்பிடுகிறார்.

 

 “ஏனென்றால் வாழ்க்கை எப்பொதும் ரோஜாக்களின் படுக்கையாக இருப்பதில்லை’, எலிடாஎலெனா(UNE)  சமுதாயஎல்லைகளில் ஒர் அடித்தளம் நிறுவவதை மிகவும்கடினமாக ஆக்கும் எண்ணற்ற எதார்த்தங்களை சுட்டிக் காட்டுகிறார் .உழைக்கும்வர்க்கப்பகுதிகளில் வலிமையைக் கட்டமைப்பதை சாத்தியமாக்கும் ஓர்அடித்தளத்தைக்கட்டுவதில்முன்னேறிச்செல்ல அவர்களை ஏற்றுக்கொள்வது அடிப்படையாகும். இந்த எதார்த்தங்களில், திட்டமிட்டு ஏற்பாடுசெய்யப்பட்ட குற்றங்கள் அடித்தளத்தைக் கட்டமைக்கும் வேலைகளை எடுத்துச்செல்வதில் ஆய்வுமுறைகளை கட்டமைப்பதை சிரமத்துக்குள்ளாக்கு கின்றன : மிகவும் பழமைவாத கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு.   

செயல்படும் எவாஞ்சலிக்கல் தேவாலயங்கள் மக்களின் பொருளியல் வாழ் நிலைகளுக்கு உதவிகளை அளிக்கின்றன: மேலும் இந்தப் புறஎல்லைகளில் மிகவும் பாதிக்கப்பட்ட வாழ்நிலைகள் உழைக்கும்வர்க்கத்தை ஒருங்கிணைப் பதற்கு முன்னால் அன்றாட உயிர்வாழ்தலுக்கான போராட்டங்களை முன் வைக்கின்றன. இந்த சவால்களோடு தொழிலாளர்களின் வேலைசெய்யும் உரிமை இழப்பு, ஒருங்கிணைப்பதற்கான உழைக்கும்வர்க்கத்தின் கருவிகள் அகற்றப்படுவது, உரிமைகள் நீக்கப்படுவது, சமூகம், இனம்.மற்றும் பாலினம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட பிரித்துவைத்தல்களும் சேர்கின்றன.

 

’ வாழ்நிலைகள் மோசமடைவதால், இடதுசாரிகளின் ஒரு துறை, கொரோனா நோய்த்தொற்று பரவலையும், அதேபோல பசி பரவுவதையும் எதிர்த்துப் போராட ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த முடிவுசெய்தது, மேலும், மீண்டும் ஒருமுறை அடித்தளத்தைக் கட்டுவது எடுத்துக் கொள்ளப்பட்டது. செயல்பாட்டாளர்கள் எண்ணற்ற ஆதரவு முன்னெடுப்புக் களாக சமுதாய உணவுக்கூடங்களை அமைத்தல், உணவை நன்கொடையாக வழங்குதல், தனிநபர்உடல்நலப்பெட்டி, முகக்கவசங்கள் மற்றும் இரத்தம் தருவது போன்றவற்றில் ஈடுபட்டார்கள்: இந்த நடவடிக்கைகளில் ஒன்று ‘புற எல்லை உயிர்கள்’ Periferia Viva (The Periphrry Lives) ’வர்க்க ஆதரவை கட்டமைக்கும் பல்வேறு உழைக்கும்வர்க்க இயக்கங்கள் ஒன்றுசேர்க்கும் மேடை’ என அறியப்பட்டது. ‘புற எல்லை உயிர்கள்’ Periferia Viva (The Periphrry Lives) –ன் வேலைஒருமைப்பாட்டு எண்ணத்தின் அசைவுகளை அடித்தளத்தைக் கட்டமைக்கும் வேலையுடன் இணைக்கிறது.: அது, சமுதாய முகவர்கள் Agentes Populares –(Community Agents) மூலம் குடியிருப்புகளுக்கு இடையே உயிரோட்டமான உறவுகளை உருவாக்குவதையும் உள்ளடக்கியது.. சமுதாய முகவர்கள் திட்டத்தின் வழிமுறை அந்த சமுதாயத்திலுள்ள மக்களை ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட பயிற்சி அளிப்பது: அந்த முகவர் குடியிருப்புகளின் ஒரு தொகுப்புடன், அவர்கள் குடியிருக்கும் இடங்களில் அவர்களை செயலில் ஈடுபடுபவர்களாக உருவாகவேண்டும், ஒருகுறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கு பொறுப்பானவர்களாக ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் வேலை செய்கிறார். இந்த ‘முகவர்கள்’ உடல்நலம்பேணுதல், மற்றும் உணவு அளிக்கவும்,அதேபோல, சமுதாயத்தின் உரிமைகள் மதிக்கப்படவும் வேலை செய்கிறார்கள். அது,கூட்டுறவையும், பரஸ்பர உதவியையும் வளர்க்கிறது. “நாங்கள் ஆதரவு நடவடிக்கை அரசியலை ஒவ்வொருநாளும் புற எல்லைகளில் அடித்தளத்தைக் கட்டமைக்கும்  முதன்மையான போர்த் தந்திரங்களில் ஒன்றாக புரிந்துகொண்டிருக்கிறோம். நாம் வாழும் இந்த சரியான சந்தர்ப்பத்தில் இது ஒரு முக்கியமான அரசியல் எதிர்வினை மற்றும் பாதுகாப்பு செயல்பாட்டு அணுகுமுறையின் ஒருபகுதி: இது, புதிய தாராள வாதத்தின் முன்னேற்றத்துக்கு உறுதியான பதிலடியை முன்வைக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

பிரேஸிலின் இடதுசாரிகளை எதிர்கொள்ளும் சவால்கள்’ பகுதி-4

 

 இறுதி பரிசீலனைகள்

 

 

 

 

 பிரேஸின் இடதுசாரிகளின்முன் வைக்கப்பட்டுள்ள சவால்கள் தொடர்பாக இந்த ஆவணத்தொகுப்பு முழுவதும் அளிக்கப்பட்டுள்ள பகுப்பாய்வுகளிலிருந்து எங்களால் வந்தடையமுடிந்த முதல் முடிவு, ஒரு பாராளுமன்ற முன்னெடுப்பு மூலம் எளிதாக போல்ஸனோரோவின் நிர்வாகத்தை வெளியேற்றிவிட முடியாது. ஒரு சாத்தியக்கூறுஉள்ளது, அது நடைபெறாது என்றாலும், யார் போல்ஸனோரோவைத் தேர்ந்தெடுக்க உதவினார்களோ அந்த முதலாளி வர்க்கம், பொருளாதார நெருக்கடி மோசமாகுமானால், அதிகாரத்திலிருந்து அகற்றக்கூடும். எவ்வாறாயினும் அதிகமாக நடைபெறக் கூடிய  சாத்தியக் கூறு, முதலாளிகள் உடனடியாக போல்ஸனோரோவை அகற்றமாட்டார்கள். அவர்கள் கட்டாயம் அவரை அகற்றவேண்டியிருக்கும்போது, அரசியல் வழிமுறைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, அவர்கள் ஒரு மாற்று நுட்பத்தை, அரசின்மீது அவர்களது கட்டுப்பாட்டைப் பராமரிக்க வைத்திருப்பார்கள்.

 

 ’பெருமளவிலான தடுப்பு ஊசிகள் போடப்பட்டபிறகு, சுகாதார நிலைகள் மேம்பட்டவுடன், கூட்டரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்மீது மக்களிடையே அதிருப்தி வளர்ந்து, பெருமளவிலான உழைக்கும் வர்க்கத்தின் அணிதிரட்டல்

நாடுமுழுதும் நடைபெறப்போவதை நாங்கள் பார்க்கப்போகிறோம்’ என்று முற்போக்கு சக்திகள் உறுதியாக நம்புகிறார்கள். சமூகத்தின் குறிப்பிட்ட சில துறைகளுக்கு, போல்ஸனோரோ பொருத்தமான நபராக இருந்தாலும்கூட, அவரது மக்கள் ஆதரவு அரிக்கப்படுவது துவங்கிவிடும் என்று அவர்கள் கணிக்கிறார்கள்.

 

இருந்தபோதிலும்,ஒற்றுமையைக்கட்டமைப்பதற்கான மிகச்சிறந்தஉத்தி தொடர் பான கருத்துவேறுபாடுகள் அங்கே இருந்தன. போல்ஸனோரோவிசத்தை எதிர்த்துப்போராட ஒருபரந்த முன்னணியைக் கட்டுவதை சிலர் முன்வைத் தார்கள். அது, சமுதாயத்தின் எல்லாத்துறைகளையும் ஒன்றாகக் கொண்டுவரும்: அது பிரேஸிலின் கட்டுபடுத்தப்பட்ட ஜனநாயகத்தில் எழுந்து நிற்கும். மற்றவர்கள் இரண்டு முன்னணிகளையும்  ஒருங்கிணப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஒரு பரந்த முன்னணி, அதேபோல் ஒரு இடது முன்னணி,.இந்த ஒருங்கிணைப்பு கட்டமைப்புசார்ந்த மற்றும் நெருக்கடிசார்ந்த அணுகுமுறைகளை எடுக்கும் ஆற்றல்வாய்ந்ததாக இருக்கும் இதை சிலர் நம்பவில்லை: ஏனென்றால், ஒரு பரந்த முன்னணியில் சேர்வது முதலாளித்துவத்தின் சில துறைகளுக்கு சாத்தியம் என்றாலும், தாராளவலது சாரிகள் இந்த முன்னெடுப்பில் சேர்ந்துகொள்ள ஒப்புக்கொள்ளமாட்டார்கள். வேறுசிலரோ, இரண்டு முன்னணிகளின் வெளிப்பாடு இரண்டுபகுதிகளாக பிரிக்கும்தவறைச் செய்கிறது என்றுநம்பினார்கள்: ஜனநாயக சுதந்திரங் களுக்கான போராட்டங்களுக்கும், உரிமைகளையும் தேசிய இறையாண்மை யையும்பாதுகாக்கும் போராட்டங்களுக்கும் இடையே பிரித்துப் பார்த்தல் கட்டாயம் இருக்கக்கூடாது.

 

  எந்த உத்தியை பின்பற்றுவது என்பதில் வெவ்வேறு மனப்பான்மைகள் இருந்தும்கூட, வலுவான, சமூக, அரசியல், மற்றும் பொதுமக்களின் விவாதங்கள் மட்டுமே தேசீய பாராளுமன்றத்தை போல்ஸனோரோவை பதவி நீக்கம் செய்ய அழுத்தம் தரும் என்பதில் பொதுவான புரிதல் இருந்தது. அவர் பதவி நீக்கம் செய்யப்படாவிட்டாலும்கூட. 2022 தேர்தலுக்கான வேறுபட்ட அரசியல்சூழலை இது அசைவின்றி உருவாக்கும், மேலும் அரசியல் போராட்டங்களில் முன்னோக்கிச்செல்வதற்கான புதிய சாத்தியங்களையும் அது திறக்கும்.

 

 எந்தவகையிலும், இந்த ஆபத்தான கட்டத்திலிருந்து வெளியேவரும்வழி குறுகியகாலத்தில் உறுதியாக தோன்றாது: மேலும் இதற்கு நீண்டகால எதிர்ப்புக்கள் தேவை என எலிடா எலெனா (UNE) சுட்டிக்காடுகிறார். ‘புதிய தாராளமய சீர்திருத்தங்கள் மிக ஆழமாக பிரேஸிலிய சமுதாயத்தில் குறியிடப்பட்டுவிட்டது. இந்த சூழலில்தான் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி சிந்திப்பதில் நம்மை நாமே ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்’.

 ‘இந்தக் காரணத்துக்காக, பின்வரும் பிரிவில், நாங்கள் பிரேஸிலின் இடதுசாரிகளுக்காக, இந்த ஆவணத்தொகுப்பு முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள குறுகிய மற்றும் இடைக்கால முதன்மைசவால்களை ஒழுங்கமைத்திருக் கிறோம்.

 

 

குறுகியகால சவால்கள்

 

·       போல்ஸனோரோ பதவி நீக்கம் .

·       நமது நடவடிக்கைகளில் ஒற்றுமையை சாதித்தல்

·       போராட்டங்களின்மூலம் ஒருங்கமைக்கப்பட்ட மற்றும் பத்திரப்படுத் தப்பட்ட பகுதிகளை பாதுகாத்தல்: உள்ளூர் சமுதாயங்கள், விவசாய சீர்திருத்தங்களுக்காகபிரித்துவைக்கப்பட்ட பகுதிகள், குயிலொம்போலா11 சமுதாயங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலுள்ள எதிர்ப்பைத்தாங்கி நிற்கும் வெளியிடங்கள்.

·       உடனடியாக அனைவருக்கும் தடுப்பு ஊசி கோரல்

·       அவசரகால மாதாந்திர உதிவி R$ 600 ஐ திரும்பவழங்க கோரல்

 

 

இடைக்கால சவால்கள்

 

·       அரசியல் ஆதரவு நடவடிக்கைகளால் வழிகாட்டப்பட்டு, மக்களின் உடனடித்தேவைகளை நிறைவேற்றுவதன்மூலம் அடித்தளத்தைக் கட்டமைக்கும் பணியை ஆழப்படுத்துதலும், விரிவுபடுத்தல்களும்

·       மக்களின் தேவைகளை நமது போராட்டங்களின் கோரிக்கைகளாக மாற்றுதல்

·       மக்களின் அதிகாரத்தை சட்டபூர்வமாக்கும் வழிமுறைகளைக் கட்டமைத்தல்

·       அரசியல் கல்விப்பயிற்சியை  நிறைவேற்றிமுடித்தல்

·       மக்கள் போராட்டங்களை மீண்டும் தொடங்குதல் (தெருக்களில் நடத்துவதுஇப்போதைக்கு சாத்தியமில்லை என்றாலும் போராட்டத் துக்கான சூழ்நிலைகள் மீண்டும் திரும்பும்போது, உடனடித் தேவைகளை விரிவான அரசியல் போராட்டங்களோடு இணைத்து அந்த நேரத்தில் போராட்டங்கள் கட்டாயம் உருவாக்கப்படவேண்டும்.

·       பிரேஸிலின்இடதுசாரிகளுக்குள் உண்மையில் மாற்றத்தை உருவாக்கும் திட்டங்களை மேம்படுத்தவேண்டும்.

 

 ஜாண்ட்ரியா உயெஹரா(CUT) கூறுவதுபோல, ஒரு ஜனநாயக, மக்களால் விரும்பப்பட்ட தீர்வு வெற்றிபெற வேண்டுமானால், இடதுசாரிகளின் வெவ்வேறு பகுதிகளிடையே இணைந்திருத்தல் மற்றும் ஒற்றுமைக்கான உறுதியான அடித்தளத்தை உருவாக்குவது அவசியம்.’2021ல் மீண்டும் போராட்டங்களை நடத்துவதற்கான வழிகளை நாம் கண்டுபிடித்தாகவேண்டும்: மேலும், கட்சிகள், சங்கங்கள், உழைக்கும் வர்க்க இயக்கங்கள் மூலம் அணிதிரட்டவேண்டும், Frente Brasil Popular, இந்த வழிமுறையில் நமது போர்த் தந்திரங்களில், உத்திகளில், மற்றும் திட்டங்களில்2022 மற்றும் அதைத் தொடர்ந்துவரும் ஆண்டுகளையும் எதிர்கொள்ள அர்ப்பணிப்பு உணர்வை நிலைநாட்டவேண்டும்.’

 

 ‘பிரம்மாண்டமான பரிமாணத்தில் வரலாற்று மாற்றங்களை நாம் எதிர்கொள் கிறோம். இதனால்தான் மேல்தட்டினருக்கு எதிராக, எல்லாவற்றையும் தோற்கடிக்கும் போராட்டத்தை தொடங்க, ஆழமான மாற்றங்களுக்கான சட்டங்களை இயற்ற, எங்கே மக்கள் வாழ்கிறார்களோ அந்தப்பகுதிகளில் மீண்டும் இடதுசாரிகள் இருப்பதை உறுதிப்படுத்த, மற்றும் அடிப்படைக்கூறு சார்ந்து அதிகாரத்தை ஜனநாயகப்படுத்த ஒரு புதிய போர்த்தந்திரத்தை ஒருங்கிணைக்கும் வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். ஒன்று, நமது காலத்தின் மாற்றங்களை நாம் மாற்றுவோம், இல்லாவிட்டால்,நாம் வரைபடத்திலிருந்து துடைத்தெறியப்படுவோம்’ என்று நம்புகிறார்,(PSOL)ன்    ஜூலியானோ மெடெய்ரோஸ் .

 நாம் பாதுகாப்பாக இருந்தாகவேண்டிய தருணத்தில் நாம் வாழ்ந்துகொண்டி ருந்தாலும், நமது நடப்பு அரசியல் சூழலில் ஒரு புதிய தருணத்தை கொளுந்துவிட்டுஎரியச்செய்ய  வரலாற்றின் சாளரங்கள் எல்லா இடங்களிலும் அகலத்திறந்து வைக்கப்பட்டிருப்பதைப்போல காணப்படுகின்றன. ஆகையால், இடதுசாரிகள் போல்ஸனோரோவைத் தோற்கடிப்பதும், அதனுடைய உத்திகளில் ஒற்றுமையைக் கட்டுவதும், அதன் திட்டங்களில் பிரேஸிலின் மக்களுக்கு பதில்களையும், நம்பிக்கையையும் அளிப்பதற்கு வல்லமை பெற்றிருப்பதும் அடிப்படையாகும். மக்கள்திரள் போராட்டங்களை அனல்பறக்க கிளறிவிட,உழைக்கும்வர்க்கத்துறைகளில் மேலாதிக்கத்தைக் கட்டமைக்க, உழைக்கும்வர்க்கத்துடன் மீண்டும்இணைவது மிகவும்முக்கியம். எப்போதை யும்விட மிக அதிகமாக, கடந்தகால போராட்டங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதும், அவற்றை புதுப்பிப்பதும் அவசியம், அதனால் வர்க்க எதிரிகளைத் தோற்கடிக்கும் ஆற்றல்மிக்க ஒரே சக்தியான மக்களின் கைகளில் மிகச்சரியாக ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படும்.

   

 

    2021-ன் துவக்கத்திலிருந்து போல்ஸனோரோ அரசு மெல்லமெல்ல சீர்கெடத் துவங்கியது. இடதுசாரிகளில் உள்ள செயல்பாட்டாளர்கள் முந்தைய ஆண்டுகளைவிட போராட்டங்களில் ஈடுபட மிகஅதிகமாக விரும்பினார்கள்.அது,இனிவரும்ஆண்டுகளில் மிகத்தீவிரமான அணிதிரட்டும் காலகட்டமாக தீப்பொறியைக்கிளப்பும்.

 

Latica Ribeiro (@telurica.x). photography by Giavanni Marrozzin / Design. Ativista / 2019

 

குறிப்புகள்

 

1.   சுகாதார அமைச்சகத்திலிருந்து அதிகாரபூர்வ எண்ணிக்கைகள், இந்த ஆவணத்தை எழுதிய 2021 ஏப்ரலில், https://covid.saude.gov,br –ல் கிடைக்கும்.

2.   மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு: இந்த ஆவணத்தொகுப்பில் popular என்ற வார்த்தை பாப்புலர் அலது மக்களுக்களுடைய என்ற பொருள்தரும் பாப்புலர் என்று மொழொபெயர்க்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சொற்களுக்கு நேரான மொழிபெயர்ப்பு அதே உணர்வோட்டத்தை எப்பொழுதும் தருவதில்லை.. நாங்கள் working class என்ற சொற்கூறை சில நேரங்களில்‘உழைக்கும்வர்க்க வீடுகள்’ என்றோ, classes populares என்பதைக்குறிக்கும்போது ‘உழைக்கும் வர்க்கம்’ அல்லது உழைக்கும் வர்க்க துரைகள்’ என்றோ குறிப்பிடுகிறோம்: இந்த சூழலில் இதுதான் மிக்கனெருக்கமான பொதுவாக பயன்படுத்தப்படும் மாற்று அல்லது பதிலி ஆகும்.

3.   சமூக வளர்ச்சித்துறை அமைச்சகம், ’Plano Brasil Sem Miseria’

4.   ‘ஆண்டியூன்ஸ், ‘Minha casa petro do fim?

5.   ட்ரை காண்டினெண்டல்: சமூக ஆய்வுக்கான நிறுவனம், ‘லூலாவும் ஜன நாயகத்துக்கான போராட்டமும்’ Lula and The Battle for Democracy.

6.   ட்ரை காண்டினெண்டல்: சமூக ஆய்வுக்கான நிறுவனம், ‘லூலாவும் ஜன நாயகத்துக்கான போராட்டமும்’ Lula and The Battle for Democracy

7.   ஆண்டியூன்ஸ் , Dois anos de desgoverno’

8.   காஸ்ட்ரோ ரெஜினா. Observatorio Covid-19 aponta major colapso sanitario e hospitalar da historia do Brasil’.

9.   பிபிசி செய்திகள் பிரேஸில் ‘Na integra :o que diz a dura de banqueiros e economistas com criticas a Bolsonaro e propostas para pandemia

10. Folha de S.Paulo .’Intacta, base de Bolsonaro pensa como o president na pandemia, mostra Datafolha’.

11. கறுப்பின மக்களால் ஆதியில் முதன்முதலாக நிலைநாட்டப்பட்ட  நாட்டுப்புறம் சார்ந்த சமுதாயங்கள் ‘குயிலோம்போஸ்’ எதிர்ப்புக்களை தாங்கி புகலிடமாக வந்த இடத்தில் காலனிய பிரேஸிலால் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள். இந்த நாள் வரை பல குயிலோம்போஸ் சமுதாயங்கள் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்ளப்படுவதற்கு போராடு கிறார்கள்:அவர்களது நிலத்தின் உரிமைக்காகவும் சண்டையிடுகிறார்கள்.

 

 

Bibliography

நூலின் விவரங்கள்

 

Antunes, L. Minha casa perto do fim? [‘My House Near the End?’]

 எனது வீடு முடிவின் அருகிலா?

Uol, Rio de Janeiro, Nov. 2019. https://economia.uol.com.br/

reportagens-especiais/minha-casa-minha-vida-dez-anos/.

 

Antunes, R. Dois anos de desgoverno – a política da caverna

[‘Two Years of Misgovernment: The Politics of the Cave’].

(‘மோசமான அரசின் இரண்டு ஆண்டுகள்: குகையின் அரசியல்)

A terra é redonda, Feb. 2021. http://www.ihu.unisinos.br/78-

noticias/607160-dois-anos-de-desgoverno-a-politica-da-cavernaartigo-

de-ricardo-antunes.

 

Castro, Regina. ‘Observatório Covid-19 aponta maior colapso

sanitário e hospitalar da história do Brasil’ [‘COVID-19

(கோவிட்ஆய்வு மையம் பிரேஸிலின் வரலாற்றைல் மாபெரும் சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகளின் வீழ்ச்சியை சுட்டிக்காட்டுகிறது).

Observatory Points to the Biggest Healthcare and Hospital

Collapse in Brazil’s History’], Agência Fiocruz de Notícias, 16

March 2021, https://agencia.fiocruz.br/observatorio-covid-19-

aponta-maior-colapso-sanitario-e-hospitalar-da-historia-do-brasil

 

‘Intacta, base de Bolsonaro pensa como o presidente na pandemia,

mostra Datafolha’ [‘Bolsonaro’s Base Remains Unblemished and Thinks Like The President during the Pandemic, Datafolhashows’],

(போல்ஸனோரோவின் அடித்தளம் அப்பழுக்கற்றதாக இருக்கிறது. மேலும்  நோய்ப் பரவலின்போது அதிபரைப்போலவே நினைக்கிறது. டேடா ஃபோல்ஹாஸ் காட்டுகிறது 

 Folha de S.Paulo, March 2021, https://www1.folha.uol.

com.br/poder/2021/03/intacta-base-de-bolsonaro-pensa-como-opresidente-na-pandemia-mostra-datafolha.shtml

   

 

 

     

 

சமூக வளர்ச்சிக்கான அமைச்சகம்

Ministry of Social Development. Plano Brasil Sem Miséria,

Cadernos de Resultados  

தீவிரமான வறுமைத்திட்டம் இல்லாத பிரேஸில்

[‘Brazil Without Extreme Poverty Plan,

Books of Results’]. 2015. https://www.mds.gov.br/webarquivos/

publicacao/brasil_sem_miseria/cadernodegraficosbsm-35anos.pdf

 

‘Na íntegra: o que diz a dura carta de banqueiros e economistas

com críticas a Bolsonaro e propostas para pandemia’

 [‘Read theFull Harsh Letter from Bankers and Economists Criticising

Bolsonaro and Proposed Actions for the Pandemic’], BBC

News Brasil, 21 March 2021,

போல்ஸனோரோவையும், நோய்த்தொற்று பரவலுக்கு முன்மொழியப் பட்ட நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் வங்கியாளர் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கடுமையான கடிதம்

 https://www.bbc.com/portuguese/brasil-56485687

 

Tricontinental: Institute for Social Research. Lula and The Battle

for Democracy. Dossier 5, June 2018.

மூன்று கண்டங்கள்:சமூக ஆய்வுக்கான நிறுவனம்.

லூகாவும், ஜனநாயகத்துக்கான போராட்டமும். ஆவணதொகுப்பு ,ஜூன் 2018

 

 https://thetricontinental.org/lula-and-the-battle-for-democracy