Saturday, 12 July 2014
SUZHAL VILAKKU: மாஸ்டரின் நினைவில்
SUZHAL VILAKKU: மாஸ்டரின் நினைவில்: 2014 ஜூலை 13 மாஸ்டரின் நினைவில் ...
மாஸ்டரின் நினைவில்
2014 ஜூலை13
மாஸ்டரின் நினைவில்
“இவன் பாட்டாளி மக்களில் ஒருவன்;
பாட்டாளிவர்க்கத்துக்காக வாதாடியவன்; போராடியவன்” என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட
மாஸ்டர் நம்மை விட்டு மறைந்து 41 ஆண்டுகள் முடிந்துவிட்டன.13.7.2014ல் மாஸ்டரின்
106வது பிறந்த நாள்.
இயக்கநிறுவனர் மாஸ்டர் இராமுண்ணியின்
இலட்சியங்களை உயர்த்திப்பிடித்து 2.8.1984ல் ‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி’ என்ற புதியபதாகையின் கீழ் சமரசமற்ற
போராளிகளாக நாம்மீண்டும் இயக்கப்பயணத்தைத் தொடர்ந்தோம்.
நாம் மேற்கொண்ட
அந்தப்பாதைமாறாப் பயணம் 30 ஆண்டுகளைக் கடந்து 2.8.2014ல் 31ஆம் ஆண்டில்
தடம்பதிக்கிறது.
இந்த30 ஆண்டுகளில் மாஸ்டரின்வழியில் இயக்கம்
பெற்றுள்ள வெற்றிகளையும், இன்று நம்முன் எழுந்துள்ள சவால்களையும்
ஒருவிமர்சனக்கண்ணோட்டத்துடன் பரிசீலிக்கவேண்டிய ஒருவரலாற்றுத்தேவை நம்முன்
எழுந்துள்ளது. இந்தப்பொருத்த மான நேரத்தில் 2002ல் இயக்கம் வெளியிட்ட “இயக்கம்கண்ட
நாயகன் மாஸ்டர் இராமுண்ணி” என்ற வரலாற்றுநூலைத் தமிழ்நாட்டு ஆசிரியர்
சமுதாயம் நினைவு படுத்திக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
இதுவரை நாம்கடந்துவந்தபாதையை மீள்பார்வை
செய்திடவும், இனிமேல் கடக்க வேண்டிய பாதையைப்பற்றிய தெளிவான ஞானம்பெறவும் மாஸ்டர்
இராமுண்ணி யின் வாழ்க்கை வரலாறு தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு ஒருபுதிய
வெளிச்சத்தைத் தரும்: தரவேண்டும்.
இயக்கம்கண்ட நாயகன் மாஸ்டர் வா.இராமுண்ணி
இயக்கம்கண்ட நாயகன்
மாஸ்டர் வா.இராமுண்ணி
அவர்களின்
106வது பிறந்தநாள் சிந்தனைகள்
ஒரு தொழிலாளி வர்க்கப்பார்வை என்பதே இல்லாமல்
தொழிற்சங்கத்தைத் தனக்குத் தேவையான சம்பளம்,போனஸ் போன்றவற்றை வாங்கித்தரும் ஏஜன்சியாகப்
பார்க்கும்பார்வை நம் ஆசிரியர்களுக்கு எப்படிவந்தது? அதிகாரிகளுக்குப்
பயப்படுவதும், போராட்டங்களுக்குப் பயப்படுவதும் போன்ற
குணங்கள் நமது இத்தனை ஆண்டுகாலத் தொழிற்சங்க இயக்கத்துக்குப் பின்னும் இன்னும் நம்
ஆசிரியர்களில் கணிசமான பகுதியினரிடம் இருக்கிறதே எவ்வாறு?ஆளும்கட்சிக்குப்பின்னால், ஜால்ரா போடும்
ஆசிரியர்சங்கங்களின் பின்னால், உடனடியாகக் கையில் கிடைக்கும் சில்லறை
இலாபங்களுக்காக தேசத்தின்எதிர்கால நலன்களைப்பற்றி சற்றேனும்சிந்திக்காமல்
கையெழுத்துப் போடும் தலைமைகளின் பின்னால் ஏராளமான நம்ஆசிரியர்கள் நிற்கிறார்களே,அது எதனால்?
கலாச்சாரரீதியான தலையீட்டை ஆசிரியர்
இயக்கங்கள் செய்யத்தவறியதன் விளைவாகவும், ஆளும்வர்க்கம் நம் ஆசிரியர்களின் மனதை வெல்வதில் வெற்றி கண்டதாலும் ஆசிரியர்களின்
இயக்க உணர்வில் பெருத்த அரிமானம் ஏற்பட்டுள்ளது. சிங்கிஅடிக்கும் சங்கத்திலிருந்து
ஓர்ஆசிரியரை நாம் போராடும் சங்கத்திற்கு இழுப்பதற்கு முதலில்நாம் அவர்மனத்தை வெல்ல
வேண்டுமல்லவா? நம்பக்கம் வந்துவிட்ட ஆசிரியரை உறுதிமிக்க
ஒரு இயக்கச்செயல்வீரராக உயர்த்துவதற்கும் அவருடைய மனதை நாம் வெல்ல
வேண்டியதிருக்கிறது.
மனங்களை
வெல்லும் போராட்டக்களத்தில் போர்க்குணம் மிக்கஆசிரியர் இயக்கத்தைக் காணவில்லை
ஆளும்கட்சிக்குத் தாளம் போடும் ஒருசிலர் தட்டிக்கேட்க ஆளில்லாத பேட்டை ரவுடியாக
நம் ஆசிரியர்களின் மனங்களைப் பிக்பாக்கெட் அடித்துக்கொண்டு போகிறார்கள் .மனங்களை
வெல்லும் போராட்டத்துக்கான தொழில்நுட்பத்தையும், ஆயுதங்களையும்
நாம் கலைகளிலும் ,இலக்கியத்திலும் அல்லாமல் வேறு எங்கிருந்து
பெறமுடியும்? வேறு முக்கியமான ஜோலி எதுவும் இல்லாதபோது
கவனிக்கவேண்டிய ஒன்றல்ல கலையும்,இலக்கியமும். ஆசிரியர் இயக்கம்
கையிலெடுத்துத் தன்அன்றாட நிகழ்ச்சிநிரலில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகக்
கலையும்,இலக்கியமும் மாறவேண்டும்.ஆசிரியர்கள்
புத்தகம் வாசிப்பதையும் அவர்கள் உட்கொள்ளும் கலைவடிவங்கள்மீது விமர்சனங்கள்
வைப்பதையும் நாம் ஊக்குவிக்க வேண்டும் .கலைப்படைப்புக்கள் மீதான விமர்சனம் என்பது
ஆகக்கடைசியில் நம் வாழ்வின் மீதான விமர்சனம்தானே?
நன்றி:
ச.தமிழ்ச்செலவனின் ’வலையில் விழுந்த வார்த்தைகள்’ நூலில்இடம்பெற்ற ‘தொழிற்சங்கமும்
கலைஇலக்கியமும் கட்டுரையில்....... ’(ஆசிரியர்களுக்கான சிலமாறுதல்களுடன்)
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 1985ல் ராஜீவ்காந்தியின் புதியகல்விக்கொள்கையை
விமர்சித்து ‘புதுசோ புதுசு’என்ற வீதிநாடகம்
‘தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பார்வையில் புதிய கல்விக்கொள்கை’ ஆய்வுக்கட்டுரை (‘விடுதலை’
நாளேட்டில்
ஐந்து நாட்கள் தொடராக வெளியிடப்பட்டது),கல்விப்பாதுகாப்புப்பிரச்சாரப்பயணப்பாடல்கள்’ஒலிநாடா,தனியார் பள்ளி ஆசிரியர்களின் அவலங்களைப்பற்றியகம்பம்.வீ.பழனிசாமி,நத்தம்பெ.வெள்ளைச்
சாமிபோன்றோரின்உணர்ச்சிமிகு பாடல்கள்,வட்டார/நகரமாவட்ட,மாநிலமாநாடுகளில்
கலைநிகழ்ச்சிகள் ,ஆண்டுதோறும் இயக்கப்பயிற்சிமுகாம்கள், தமிழில்
சட்டோபாத்யாயா கமிஷன் பரிந்துரைகள் தொடர்கட்டுரை ,ஊதியக்குழுவின்அநீதிகள், மாற்று
அமைப்பினரின் விமர்சனங்களுக்கு ஆதாரபூர்வமான பதில்கள்,’இயக்கம் கண்ட
நாயகன் மாஸ்டர் இராமுண்ணி’ வரலாற்றுநூல் எனக் கலை,கட்டுரை
வடிவங்கள் மூலம் ஆசிரியர்களைக் கொள்கைப் பிடிப்புமிக்கவர்களாக உருவாக்கிய பணிகளை
உற்சாகத்துடன் உயர்த்திப்பிடிப்போம் !
மாஸ்டர்
இராமுண்ணியின் உன்னத இலட்சியங்களை ஆசிரியர்களின் நெஞ்சங்களில் பதியவைத்து சமரசமற்ற போராளிகளாக இயக்கப்பயணத்தைத்
தொடர்வோம்!
நமது இலட்சியம்
உயர்வானது-அதை அடைந்தே தீருவோம்
நமதுபாதை
நீளமானது-அதைக்கடந்தே தீருவோம்
நமது பயணம்
உறுதியானது-அதுபோலவே
நமது வெற்றியும்
நிச்சயமானது.
Subscribe to:
Posts (Atom)


