Saturday, 31 October 2015

கேள்விகேட்கத் திரள்கிறார்கள்

           கேள்விகேட்கத் திரள்கிறார்கள்
     ‘The Hindu’ தலையங்கம் 30.10.2015 வெள்ளி
            தமிழில்: செ. நடேசன்

லைசிறந்த வரலாற்றியலாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் மாணவர்களோடு சேர்ந்து வளர்ந்துவரும் ‘சகிப்புத்தனமைஇன்மைக்கு எதிராக நரேந்திரமோடியின் அரசுக்குக் குடிமக்கள் சமுதாயத்தின் சார்பில் எழுப்பும் கேள்விகள் அவர் தப்பமுடியாத அளவுக்குக் கூர்மை பெற்றுவருகின்றன. தங்கள் தேசிய விருதுக்ளைத் திருப்பி யளிப்பவர்களில் விஞ்ஞானி பி.எம்.பார்கவா, திரைப்படத் தயாரிப்பாளர்கள் திபாகர் பானர்ஜி, ஆன்ந்த் பட்டவர்த்தன் ஆகியோர் உள்ளனர். அரசின் கண்டும்காணாத நடவடிக்கைகளை விளக்கும் ஒருகடிதத்தில் கையொப்பமிட்ட அறிஞர்பெருமக்களின் நீண்ட பட்டியலில் பகழ்பெற்ற வரலாற்றியலாளர்களான் இர்ஃபான் ஹபீப், ரொமிலா தாபர் ஆகியோரும் உள்ளனர். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் கேள்வி கேட்கிறார்கள்: ஆனால் அவர்கள் ஒன்றுபட்டுக் கூட்டுக்கொலை, சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாள்ர்களின் கொலை, சிறுபான்மைச்சமுதாயத்தினர்மீது சகிப்புத்தன்மை இல்லாத சூழ்நிலை ஆகியவற்றைத் தொகுத்துக் கூட்டுப்பொறுப்பை உணர்த்து கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை வளரும்போது, பா.ஜ.க.வுடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்படும் சிறுசிறு கும்பல்கள் உற்சாகம் பெற்றுவந்ததை அவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார்கள். அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் மத்தியஅரசின்  பொறுப்புள்ள நடவடிக்கைகளை வேண்டுகிறது. மத்திய அமைச்சர் களும், பா.ஜ.க. பேச்சாளர்களும் போராடுபவர்களின் தனிப்பட்ட தகுதிகளைக் கேள்விகேட்டு இப்பிரச்சனையை ஒதுக்கித்தள்ள முடியாது என ஒரு உரையாடலைத் துவக்கியுள்ளனர். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதில் மாநில அரசுகள் தவறிவிட்டன எனப்பழிசுமத்தி அதிலிருந்து அவர்கள் மீளமுடியாது. குடிமக்கள் சமுதாய உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் தெளிவாகவும், வலுவுடையதாகவும் பா.ஜ.க.வின் அரசியல் திட்டத்துடன் உள்ளார்ந்த இணைப்புடன் உள்ள நபர்கள் மற்றும் அமைப்புக்களின் போக்குகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் சவால் விடுக்கின்றன. அவர்கள் ஒன்றுசேர்ந்து மொத்தமாக முன்வைக்கும் கேள்வி இதுதான்: ‘ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர்அரசு சுதந்திரத்தையும், நீதியையும் நேர்மையுடன் உத்தரவாதப்படுத்தும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்று வெளிப்படை யாகக் கூறும் மக்களுக்கு என்ன பதில் கூறப்போகிறது?இது மிகப்பெரிய கேள்வி.

   பூனா திரைப்படத் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர்கள் 139 நாட்கள் நீடித்த தங்கள் வேலைநிறுத்தத்தை புதன் அன்று முடித்துக்கொண்டபோது,அவர்கள் போராட்டம் அவர்களுக்கு எதையும் அளிக்கவில்லை. அந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவரை நீக்கவேண்டும்: ஆளும் தே.ஜ.கூ. அரசால் நியமிக்கப்பட்ட மூவரை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஆனா, அதேநேரத்தில் திபாகர் பானர்ஜி போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் தேசியவிருதுகளைத் திருப்பியளிக்கும் நடவடிக்கை மாணவர்களின் போராட்டத்தை இணைப்பதில் வெற்றிகண்டது: குறிப்பிட்ட அதிகார நியமனங்களுக்கு எதிராக மிகப்பெரும் அளவுக்கு பெரும்பான்மை அரசியலுக்கும், போக்கிலிகளை அணிதிரட்டு வதற்கும் எதிராக அசௌகரியங்களை உருவாக்கியது. அரசு மற்றும் அதன் அமைச்சர்களின் பதில்கள் உணர்ச்சி குன்றியவைகளாகவும், மிகப்பரவலாக எழுந்துள்ள விமர்சனங்களை மறுப்பதையும் அம்பலப்படுத்திய்ள்ளது. நரேந்திரமோடி யும் தன்பங்குக்கு ஆழ்ந்த மௌனத்தைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார். போராடுபவர்கள்மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் போராட்டத்தின் உள்ளடக்கத்தின்மீது கவனம் செலுத்தாமல் அரசு தன்னை வேறுபடுத்திக்கொள்கிறது. ஆனால், அதை நேரடியாகக் கையாளாமல் இருப்பது அதற்கான பதிலல்ல என்பதை அரசு உணரவேண்டும். அதற்குப்பதிலாகப் போராடுபவர்களின் மதிப்பைச் சீர்குலைப்பதோ, அல்லது அறிஞர் பெருமக்களைக் குறைத்து மதிப்பிடுவதோ போராட்டத்தின் ஒவ்வொரு அலையும் அரசுக்கு அவர்கள் விடுத்த கேள்வியைப் புதுப்பிக்கிறது. பெயர்குறித்து அழைப்பது அல்லது மையமான பிரச்சனைகள் மீது மௌனமாக இருப்பது என்பது அந்தக்கேள்விகளை மீண்டும் மீண்டும் உரத்து எழவைக்கும்,

 .       --------------------------------------------------------------------------------------------------------------------------------------------


பிரசாத்தின் கதையும் மோகன் பகவத்தும்

      பிரசாத்தின் கதையும் மோகன் பகவத்தும்
                                                             செ. நடேசன்  



உங்க அம்மாவுக்கு திடீர்னு மாரடைப்பு வந்துருச்சு. இப்போ ஆஸ்பத்திரியில சேத்திருக்கறாங்க” -அதிர்ச்சியான இந்தச் செய்தியைக் கேட்ட பிரசாத் துடித்துப்போனார்.

   கர்நாடக மாநிலத்திலுள்ள தாவண்கெரே பல்கலைக் கழகத்தில் ஆதிதிராவிடர்-பழங்குடியின்ர் மாணவர் விடுதியில் தங்கிப்படித்துவரும் இதழியல் மாணவரான ஹுsச்சங்கி பிரசாத் அதிகாலையில் இந்தச்செய்தியைக் கொண்டுவந்த அந்த நபரைப் பார்த்துச் செய்வதறியாது திகைத்தார். அந்த நபர் பிரசாத்தைத் தானே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதாக்க் கூறியபோது அவரோடு சென்றார்.

  இடையில் நடந்த்து என்ன? இதோ பிரசாத் கூறுகிறார்.நடுவழியில் ஆள்நடமாட்டமில்லாத ஒருமூலையில் எட்டு முதல் பத்துப்பேர் வரையான ஒருகும்பல் என்னைச் சூழ்ந்துகொண்ட்து. எனது எழுத்துக்கள் சாதிய அமைப்புமுறைபற்றிப் பேசுவதாகவும், இந்துத்துவாவுக்கு எதிராக இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். அவர்கள் எனது முகம் முழுவதிலும் குங்குமத்தைப் பூசினார்கள். அவர்கள் கத்தியை எடுத்து எனதுவிரல்களை வெட்டிவிடப்போவதாகக் கூறினார்கள். அதன்பிறகு என்னால் மீண்டும் எழுதவே முடியாது என்று மிரட்டினார்கள்

  பிரசாத் அந்தக் கும்பலிடமிருந்து தப்பி ஓடினார். அருகிலிருந்த காட்டில் மரங்களுக்கிடையே ஒளிந்து கொண்டார். சிலமணி நேரம் கழித்து அவர்கள் போய்விட்டார்கள் என்பதை உறுதிப் படுத்திக்கொண்டபின் மாணவர் விடுதிக்குச் சென்றார்: அதன்பின் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்ர்.

   இதழியல்மாணவரான பிரசாத் பொய்த்தகவல்கூறி ஏன் கடத்தப்பட்டர்? ஏன் மிரட்டப்பட்டார்? மாணவர் பிரசாத் 2014 ஏப்ரலில் தனது முதல் நூலை வெளியிட்டார். அவரது நூல் இந்த நாட்டில் தலித்துக்கள் நட்த்தப்படும் விதம்பற்றிய கட்டுரைகளையும், கவிதைகளையும் கொண்டிருந்தது.  கர்நாடகாவில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும், கடந்த மூன்றுமாதங்களுக்குமுன் இந்துத்துவா கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டவருமான எம்.எம்.கல்புர்கிக்குப்பின் அடுத்த இலக்கு என்று குறிவைக்கப்பட்ட எழுத்தாளர் கே.எஸ்.பகவான்  இந்தப் புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டு ஆற்றியஉரை வலதுசாரிப்பிரிவினரின் ஆத்திரத்தைத் தூண்டியது. அவர்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் கே.எஸ்.பகவானின் பேச்சு ஆத்திரமூட்டும்வகையில் இருந்ததாகப் புகார் அளித்தனர். அப்போது முதல் மாணவர் பிரசாத்தும் அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகிறார்.

   இந்த அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் பிரசாத்திடம் என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன? இதோ அவரே கூறுகிறார்:

·         நீங்கள்எவ்வாறு எழுத்துத்துறைக்கு வந்தீர்கள்? அதுவும்,குறிப்பாக தலித் பிரச்சனைபற்றி அழுத்தமாக எழுத?
·         நான் தவண்கரே மாவட்டத்திலுள்ள சாந்த்பென்னூர் என்ற சிறிய கிராமத்தைச் சார்ந்தவன். அங்கே எனதுபெற்றோர் இன்றும் தினக்கூலியாக வேலை செய்துவருகிறார்கள். நான் பள்ளிக்கு அனுப்ப்ப்படவில்லை> எனது சிறுவயதில் கொத்தடிமையாக வேலைக்கு அனுப்பப்பட்டேன். அங்கு சாதியப்பாகுபாடுகளையும், அதனால் ஏற்பட்ட வன்முறைகளையும் பார்த்தேன். அங்கிருந்து நான் மீட்கப்பட்டேன். சின்னாரஅங்காலா என்ற மீட்கப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்க்கப்பட்டேன். முறையான கல்வியைப் பெற்றேன். எனது எழுத்துக்கள் சாதிய அமைப்புமுறை தந்த வலிகளை எதிரொலித்தன.

·         புதன்கிழமை இரவில் குறிப்பாக நீங்கள் குறிவைக்கப்பட்டீர்கள் என்று ஏன் கருதுகிறீர்கள்?

·         சாதிய அமைப்புமுறை, இந்துயிசத்திலிருந்தான அதன் தோற்றம் மற்றும் அதன் தீய விளைவுகளைப்பற்றிப் பேசும் எனது ‘ஒடல கிச்சுபுத்தகம் 2014 ஏப்ரலில் வெளியிடப் பட்டது. அதன்பின் ஒருமாதத்துக்கும் மேலாக எனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அவர்கள் என்மீது ‘ஆத்திரமூட்டுகின்ற, தீப்பற்றவைக்கும் எழுத்துக்களை எழுதியதாக ஒருபுகாரையும் செய்தனர். அப்போதிலிருந்து எனது எழுத்துக்களும், சமூகஊடகங்களில் எனது பதிவுகளும் அமைதி குலைந்தவைகளாகச் சிறகடித்தன

·         உங்களைத் தாக்கியவர்கள் தங்களை வலதுசாரிப்பிரிவினர் என அடையாளம் காட்டினார்களா?.

·         அவர்கள் அவ்வாறு காட்டிகொள்ளவில்லை. ஆனால், அவர்களுடைய நடத்தையில் அது வெளிப்படையாகத்தெரிந்தது. அவர்கள் எனது முகம் முழுவதிலும் குங்குமத்தைப் பூசினார்கள். இந்துயிசத்தின்மீது நம்பிக்கை இல்லாத நான் எவ்வாறு அதைப்பற்றி எழுதத்துணிந்தேன்? என்று கேட்டார்கள். நான் எனது முற்பிறவியில் பாவம் செய்ததால்தான் இப்பிறப்பில் தலித்தாகப் பிறந்துள்ளேன் என்று அவர்கள் கூறினார்கள் அவர்கள் என்னையும், நான் வாட்ஸ்அப்’பில் சமீபத்தில் நடந்த தலித் படுகொலை களைப்பற்றிப் பதிவிட்டிருந்ததையும் அறிந்தவர்கள்போலக் காணப்பட்டார்கள். என்னை எழுதுவதிலிருந்து தடுக்க எனதுகைகளை வெட்டப்போவதாக மிரட்டியபோது அவர்களிடமிருந்து தப்பவேண்டும் என்பதை நான் முடிவு செய்துகொண்டேன்.
·         அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வாழ்க்கைபற்றிய அச்சம் உங்களுக்கு ஏற்பட்டதா?
·          ஆம். நான் இன்னும் அதிலிருந்து மீளவில்லை. எனக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறையைக் கேட்டுள்ளேன்.
·         அந்தத் தாக்குதல் உங்களை எழுதுவதிலிருந்து தடுத்துவிடுமா? அல்லது வலதுசாரிப்பிரிவினரின் கோபத்தைத் தூண்டும் தலைப்புக்களை எடுத்துக்கொள்வதில் தயக்கத்தை ஏற்படுத்துமா?
·         அதற்கு மாறாக, நான் உற்சாகம் பெற்றுள்ளேன்.உறுதி பெற்றுள்ளேன். எப்படியோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தொடர்ந்து எழுதுவேன். அவர்களது தாக்குதல்கள் எனது எழுதும் உறுதியின்மீது எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதை அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்பவில்லை.
இந்தநேரத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் 90ஆவதுஆண்டைக் குறிக்கும்வகையில் நாக்பூரில் தனது தொண்டர்களிடையே மோகன்பகவத் பேசியுள்ளதை இணைத்துப்பார்ப்பது இந்துத்துவாவின் மனஓட்ட்த்தைப் புரிந்துகொள்ள உதவும்.
கடந்தஆண்டில் மகாராஷ்டிராவின் சமூகசீர்திருத்தவாதியும் முற்போக்குச்சிந்தனையாளருமான நரேந்திர தபோல்கர், இவ்வாண்டில் மார்க்சீய அறிஞர் கோவிந்த் பன்சாரே, கர்நாடகாவில் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மற்றொரு கர்நாடகஎழுத்தாளர் கே.எஸ்.பகவான் ‘அடுத்த இலக்குஎன்க் குறிவைக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச தாத்ரி பகுதியில் பிஸாரா கிராமத்தில் ‘மாட்டிறைச்சி வைத்திருந்தார். என வதந்தியைத் திட்டமிட்டுப் பரப்பி செப்டம்பர் 25 அன்று முகம்மது இக்லாக் சங்பரிவாரங்களால் கூட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கருத்துரிமையும், உண்ணும் உரிமையும் மோகன்பகவத் ஆட்களால் வன்முறைமூலம் மறுக்கப்படுகின்றன. இதுபற்றி மோகன்பகவத் கூறுவது என்ன?    
‘சிறுசிறு நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால்,அவை பூதாகரப்படுத்தப் படுகின்றன.
எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் இந்துத்துவாக்களின் சகிப்புத்தன்மையற்ற போக்குகளை விமர்சித்துத் தங்களது சாகித்திய அகாதெமி விருதுகளைத் திருப்பி அனுப்புவதை நேரடியாகக் குறிப்பிடாமல், மோகன்பகவத்,அறிவுஜீவிகள் தங்கள் விமர்சனங்களின் மூலம் ஒழுங்கீனத்தைப் பரப்பக் கூடாது என்பதை மனதில் கொள்ளவேண்டும் என எச்சரிக்கிறார்.
  இந்துத்துவாக்களின் இன்றைய வன்முறைவெறியாட்டங்களைக் கண்டிப்பதற்கு முன்வராத மோகன்பகவத், அவற்றை ஆதரிக்கும்வகையில்,இரண்டு ஆண்டுகளுக்குமுன் இந்தியாவில் நம்பிக்கையின்மை நிலவிவந்தது. இப்போது அந்தக்கவலை அகன்றுவிட்டது. அந்த இடத்தில் தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தத்தன்னம்பிக்கை நமது நோக்கங்களுக்கு வலுவூட்டுகிறதுஎன்கிறார். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை ஏனெனில் வன்முறையைத் தூண்டுவதும், அதற்கு ஆதரவளிப்பதும் அவரது வாடிக்கை.
இதற்கு ஆதாரமாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். விசுவாசியான சுவாமி அசீமான்ந்தா அம்பாலா சிறையிலிருந்தபோது அளித்த வாக்குமூலங்களே!. 2007 பிப்ரவரி 18 இரவில் சம்ஜுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் 68பேர் இறந்தனர். மே 2007ல்   ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 2007ல் ராஜஸ்தானில் 3 பேரைக்கொன்ற அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மேலும் செப்டம்பர் 2006 மற்றும் செப்டம்பர் 2007ல் 37 பேரைக்கொன்ற மகாராஷ்ட்ரா மாலேகான் குண்டுவெடிப்பு ஆகிய ஐந்து குண்டுவெடிப்புக்களில் ஈடுபட்டவர்தான் சுவாமி அசீமானந்தா.
இப்போது ஆர்.எஸ்.எஸ்.தலைவராகவும், அப்போது பொதுச்செயலாளராகவும் இருந்த மோகன் பகவத் வரை ஒப்புதல் அளிக்கப்பட்டவையே இந்தக்குண்டுவெடிப்புக்கள் என்று கூறும்  சுவாமி அசீமான்ந்தா தி கேரவன்பத்திரிக்கையாளர் லீனாகீதாரெகுநாத்- திடம்கூறுகிறார்:
 வன்முறைத்தாக்குதக்கள் பற்றி பகவத் என்னிடம் சொன்னார்: ‘நீங்கள் இதில் வேலை செய்யலாம். ஆனால், இதில் எங்களைத் தொடர்புபடுத்தப்படக்கூடாது. நீங்கள் இதைச் செய்தால் நாங்களும் உங்களுடன் இருப்பதாகக் கருதலாம்
  இவ்வாறு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் நம்பிக்கைகொண்டிருந்த விசுவாசிகளைக் கூர்தீட்டி, மதவெறியூட்டிக் கொடூரமான வன்முறை வெறியாட்டங்களுக்கு ஆதார சுருதியாக இருந்த மோகன்பகவத் போன்றவர்களிடம் மனித நேயத்தையோ, மானுட நாகரிகத்தையோ எதிர்பார்க்க முடியுமா?                       
                                 (ஆதாரங்கள்: ‘The Hindu 2015 October 23 & ‘The Caravan February 2014)

  



இர்ஃபான் ஹபீப் நேர்காணல்

       பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் நேர்காணல்

                     தமிழில்: செ.நடேசன்

* தற்போதைய அரசியல் சூழலில் மேற்கொள்ளப்படும் பலமுன்முயற்சிகள் பா.ஜ.க. தலைமையிலான அரசு இந்திய வரலாற்றை மறுவியாக்கியானம் செய்யும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கின்றன. ஆராய்ச்சிக்குரிய பலமுக்கியமான தளங்களை அது அடையாளம் கண்டுள்ளது. வேதகாலம், ஆரியர் பிரச்சனை, டெல்லி சுல்தான்கள் ஆட்சி, மொகலாயப்பேரரசு மற்றும் இந்துக்காவியங்கள் குறிப்பான தலைப்புகளாக  உள்ளன. இந்தத் தலைப்புக்கள் துறைசார்ந்த வரலாற்றியலாளர்களால் விவாதிக்கப்பட்டு ஏற்கனவே பரிசீலிக் கப்பட்டன. இப்போதைய போக்கை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

  தற்போதைய ஆட்சியில் பொதுவாக வரலாற்று அறிவிப்புக்கள் சிலவற்றைத் தலைவர்கள்  வெளியிட்டுவருகிறார்கள் அதன் உச்சகட்டமாக பிரதமர் நரேந்திர மோடி விநாயகரின் யானைத்தலை வடிவம் இந்தியாவில் மிகப்பழங்காலத்திலேயே பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது  என்பதைக் காட்டுகிறதுஎன்று உரிமை கொண்டாடியதையும் படித்தேன். இதை ஒத்த மனப்பாங்குடன் அவரது கூடாரத்திலிருந்து வெளியிடப்படும் அறிவிப்புக்கள் பல்கிப்பெருகி வருகின்றன. இந்திய வரலற்று ஆய்வுக்கழகத்தின் தற்போதைய தலைவர் புராணங்களை அடிப்படையாகக்கொண்ட வரலாற்றைக் கட்டமைக்க வேண்டிய தேவையைப் பற்றிக் கவனம் செலுத்த வேண்டும் என எல்லாருக்கும் அறிவித்துக்கொண்டே இருக்கிறார். அதன்படி இராமாயண, மஹாபாரத நிகழ்ச்சிகளை இணைத்து உயர்த்திப்பிடிப்பது தான் வரலாற்றியலாளர்களின் இன்றைய தலையாய இலக்கு என்று நான் கருதுகிறேன்.

   ஔரங்கசீப் சாலையின் பெயரை மாற்றுவது   – ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புக்கள் ‘1’000 ஆண்டுகள் அன்னியர் ஆட்சிக்கு எதிராக எழுப்பும் உறுதியான பிரகடனங்கள், டெல்லி சுல்தான்கள் அரசு, மொகலாயப்பேரரசு பற்றிய அவர்களது கருத்துக்கள் முதல் தே.ஜ.கூ. ஆட்சியில் வெளியிடப்பட்ட பாடநூல்களில் எவ்வாறு திருத்தி எழுதப்பட்டனவோ- அதேபோன்ற கதிக்கு இப்போதும் உள்ளாகும் என்பத்ற்கான முன்னோட்டமாகத் தோன்றுகிறது இந்தமுறை வெளிவரவுள்ள பாடநூல்கள் முந்தைய நூல்களைவிட அறிவுக்குப் பொருத்தமிலாத புராணப் புனைவுகளில் விஞ்சி நிற்கும் என்று தோன்றுகிறது. கல்வித்துறை சார்ந்த வரலாறுகளும், ஆர்.எஸ்.எஸ். முன்நிறுத்தும் புராணங்களின் அடிப்படையில் நேர்மையற்ற வகையில் புனையப்பட்டவைகளும்  ஒத்துப்போவது என்பது இயலாத ஒன்றாகும். இங்கு கல்விப்புலம் சார்ந்த விவாதங்களுக்கு இடமே இருக்காது. எவ்வளவு தவறாகத் திரிக்கப்பட்டு அளிக்கப்பட்டாலும் வரலாறு தன்னை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாது. ஆனால் தேசத்தின் சிந்தனை உருவாக்கம் இதன்மூலம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்ப்டும்.

·         கருத்து மாறுபாடுகள்கொண்ட. ஆரியர்களின் தோற்றம்என்ற  பிரச்சனைக்கு எவ்வாறு வரலாற்றியலாளர்களால் தீர்வு காணப்பட்டது? இந்து வலதுசாரிகளின் நிலை ‘ஆரியர்கள் எப்போதும் இந்தியாவில் இருந்தவர்களேஎன்பதாக இருக்கிறது. வரலாற்று ஆதாரங்கள் இதை நிரூபிக்கின்றனவா? ஆரியர்கள் பற்றி வரலாற்றுத் தளத்துக்குள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை என்ன?

 நீண்டகால விரிவான ஆய்வுகளின்படி இப்போது ஆரியர்கள் பற்றி ஏராளமான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ‘ஆர்யாஎன்ற சொல்லும், அதனுடன் தொடர்புடைய வடிவங்களும் இந்தோ – ஈரானிய மொழிகளில் ‘புனிதம்என்ற பொருளைத் தருகின்றன.ஈரான்என்ற சொல்கூட வட்டார வழக்கில் ‘ஆர்யாஎன்பதன் பன்மைச்சொல். ஆனால் இந்தச் சொல்லை ‘இந்தோ – ஐரோப்பிய மொழிகள்பேசும் அனைவருக்கும் பயன்படுத்தியது நாஜிகளின் வேலையாகும்.  அவர்கள் ஜெர்மனியர்களுக்குத்தான் ‘சுத்தமான ஆரியர்என்ற தகுதி உரியது என்றார்கள்.  ‘இந்தோ – ஐரோப்பிய மொழிகளின் உறவுகள் இனம். மதம் ஆகியவற்றோடு தொடர்பற்றவை என்பது தெளிவாகிறது. இந்தச்சொல் இணையான மொழிகளைப் பேசுபவர்களைக் குறிக்கிறது. இரண்டாவதாக மொழிகள் பற்றிய ஆய்வுகள் மொழிகளுக்குள் உள்ள ஒத்த தன்மையைப் பற்றிய ஒரு தோராயமான சித்திரத்தை நிறுவுகிறது. அவைகள் முன்னோர்கள் என்று கருதப்படுகிறவர்களுக்கு நெருக்கமானதாக இருந்தது.   புரோட்டோ –இந்தோ – ஐரோப்பியர்களும், மற்றவர்களும் இவற்றுக்கு மிகவும் அப்பால் இருந்தார்கள். ரிக்வேத சமஸ்கிருதம் மற்றும் அவெஸ்தான் ஆகியவற்றிலிருந்து ஒருவர் ‘இந்தோ – ஆரியன்அல்லது ‘புரோட்டோ - இந்தோ –இரானியன்என்பதைக் கட்டமைக்கலாம். ஆனால் அவற்றை ஹிட்டிட்டோ அல்லது அல்பேனியனோடு ஒப்பிடும்போது அவை வரலாற்று ஏணியின்  கீழ்தளத்தில் உள்ளன.. எனவே இந்தியா ஒருபோதும் ‘மூல புரோட்டோ – இந்தோ – ஐரோப்பிய மொழிகளின் தாயகமாக இருந்ததில்லை. இதிலிருந்து பிரச்சனைகளை உருவாக்குவதும், நாஜிகள் செய்த்துபோலவே ஆரியர்களாகிய நாங்கள் (இந்தியாவிலிருந்து) வெளியே சென்று உலகத்தை நாகரிகமடையச் செய்தோம் என்றும், ‘ஆரியர்அல்லது ‘இந்துத்துவாஎன்பது நாகரிகத்துக்கு ஒத்த பொருளுடையது என்றும் ஆதாரங்களின்றிக் கூறுவது சிறுபிள்ளைத்தனமானதாகும். புரோட்டோ – இந்தோ  ஐரோப்பிய மொழிகளின் பயன்பாட்டில் இருந்த சொற்களின் மறுகட்டமைப்பு அந்த நாட்களிலிருந்த நாகரிகம் முதிர்ச்சியடையாத நிலையில் இருந்த்தைக் காட்டுகிறது.

·          அரசு அண்மையில் டெல்லியில் உள்ள ஔரங்கசீப் ரோட்டை ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் ரோடு எனப்பெயர் மாற்றம் செய்துள்ளது. இது பொதுக்கருத்தில் இந்துக்களுக்கு எதிராகக் கொடுங்கோலன் என்று பார்க்கப்பட்ட மொகலாய அரசரின் நினைவுகளை அழிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். ஔரங்கசீப்பையும், அவரது காலத்தையும் நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்? சங்பரிவாரங்களால் அவரை ‘இந்துக்களுக்கு எதிரான அரசர் என்ற கருத்தை எப்படி வெற்றிகரமாக உருவாக்க முடிந்தது?
 
   ஔரங்கசீப்ரோட்டின் பெயர்மாற்றத்தை எதிர்க்கும்போது ஔரங்கசீப்பின் தரப்பில் நிற்பதற்கு எந்தவிதக் காரணமுமில்லை அவர் தனது இரண்டு சகோதர்ர்களைக் கொன்றவர். தனது தந்தையையே சிறைப்படுத்தியவர். தனது முன்னோர்களின் மதக்கொள்கைகளில் ஒருபகுதியை மாற்றியவர். முஸ்லீம் அல்லாதவர்கள்மீது பாரபட்சமான வ்ரியை – குறிப்பாக ஜஸியா வரியை – விதித்தவர். சிலகோவில்களை – குறிப்பாக மதுராவிலிருந்த கேசவ்ராய் கோவிலை அழித்தவர் ஆனால், இவற்றுக்கெல்லாம் மாறாகப் பிருந்தாவன் போன்ற பலகோவில்களுக்கு மானியங்களைத் தொடர்ந்து வழங்கினார். இந்துக்கோவில்களுக்கு வேறுபல மானியங்களை அல்லது சலுகைகளை அளிக்க உத்தரவுகளைப் பிறப்பித்தார். இவையெல்லாம் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன.

     இந்தியாவுக்கு வந்த அயல்நாட்டுப்பயணிகள் அவரது ஆட்சிக்காலத்தில் மதஉணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட இரக்கமற்ற அரசாகப் பார்க்காமல் மதசகிப்புத்தன்மை மிக்க அரசு என்ற பொதுவான சித்திரத்தையே வரைந்தார்கள். அதேநேரத்தில் ஒருபுறம் முஸ்லீம்மத அடிப்படைவாதிகள்  அவரை ஆழ்ந்த சமய நம்பிக்கை கொண்டவரோ அல்லது மதம்சார்ந்த முனைப்புக் கொண்டவரோ அல்ல என்றும், மறுபுறம் இந்துத்துவா உணர்வு கொண்டவர்கள் அவரை மதவெறி கொண்டவர் என்றும் கருதினார்கள். அவருக்குப் பெருமை அளிக்கும் சாதனை ஒன்றும் உண்டு. அவர் சிலகாலம் இந்தியா முழுவதையும் நடைமுறையில் ஓர் அரசியல் மையத்தின்கீழ் இணைத்தார். அதன்மூலம் மொகலாயப் பேரரசோடு ‘இந்துஸ்தான்என்ற அடையாளத்தையும் நிறைவு செய்தார். அது மிகவும் வியப்பூட்டும் வகையில் மக்களின் உணர்வோடு ஒன்றிப்போயிருந்தது. எடுத்துக்காட்டாக, 1857ல் சிப்பாய்க் கலகத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையினர் பிராமணர்கள்.

·         இந்துக்கோவில்களை இடித்ததற்காக ஔரங்கசீப்  - எடுத்துக்காட்டாக வாரணாசியில் காசி விசுவநாதர் கோவில், மதுராவில் கிருஷ்ண ஜன்மபூமி - பொது உணர்வில் இகழப்பட்டார். சங்பரிவாரங்கள் தங்களது ‘முஸ்லீம் / அன்னியர் ஆட்சிஎன்றவாதத்தை உண்மை என்று காட்டுவதற்காக சோம்நாத்கோவில் இடிக்கப்பட்டதைக் கூறுகிறார்கள். வரலாற்றியலாளர் ரிச்சர்ட் ஈட்டன் கோவில் இடிப்புப் பிரச்சனைக்கு எதிராக நிற்க முயற்சித்திருக்கிறார். இந்தப் பிரச்சனைகளுக்கு இந்திய வரலாற்றியலாளர்கள் எவ்வாறு தீர்வு கண்டனர்?


ஔரங்கசீப் ரோட்டின் பெயரை மாற்றுவது முதல்கட்டம் என்று தோன்றுகிறது. தேசிய இயக்கம் தோற்றுவிக்கப்படும்வரை இந்தியர்களின் உணர்வில் ஜனநாயகம் என்பது இருக்கவில்லை. டெல்லி சுல்தான்களின் ஆட்சியிலும், மொகலாயப் பேரரசிலும் செல்வாக்குப் பெற்றவர்களாக மேட்டுக்குடியினரும், முஸ்லீம்மதப்பெரியவர்களும், இந்து மேல்சாதி நிலவுடமையாளர்களான ஜமீந்தார்களும் இருந்தார்கள். ஔரங்கசீப்பின் கடைசிக் காலத்தில் அவரது இராணுவத்தளபதிகளீல் 30% பேர் இந்துக்கள். முதன்மையாக ரஜபுத்திரர்களும், மராத்தியர்களும் இருந்தார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆட்சிசெய்தவர்கள் இந்தநாட்டைச் சுரண்டிச் செல்வங்களையெல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்பிய அன்னியர்கள் அல்ல. எனவே, ‘அன்னியர் ஆட்சிஎன்று அழைப்பது அபத்தமானது. அவர்கள் உருவாக்கிப் பின்னர் விட்டுச்சென்றதெல்லாம் நினைவுச் சின்ன்ங்களாகவும், கலைச்செல்வங்களாகவும் இந்தியாவுக்குப் புகழையும், பெருமையையும் ஈட்டித்தந்துள்ளன.

   கோவில் இடிப்பைப் பொருத்தவரை ரிச்சர்ட் ஈட்டனுடன் முழுவதும் ஒத்துப்போக என்னால் முடியவில்லை. அவர்கூட அவற்றில் எதையும் தனக்கு ஏற்புடையதாகக் கருத்வில்ல. அதற்குமாறாக சோம் நாத் கோவில் முகமது கஜினியல் அழிக்கப்பட்ட்து. ஆனால் அவர் இந்திய ஆட்சியாளர்களில் ஒருவராக்க் கருதப்படவில்லை. கஜினி முகமதுகூட ஒரு சிக்கலான குணவியல்பு கொண்டவராகவே இருந்திருக்கிறார். தனது முஸ்லீம் குடிமக்களை ஒழுங்கு-கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்க மிகஅதிக அளவில் இந்து படைவீரர்களையும், இந்து தளபதிகளையும்தான் நியமித்திருந்தார். அத்தகைய ஒருதளபதி பரந்தமனம் கொண்ட தந்திரியான திலக், கஜினிக்கு மிகவும் பிடித்தமானவராக இருந்தார். டெல்லி சுல்தான்களைப் பொருத்தவரை அவர்களது ஆட்சியின்கீழ் இந்துக்கோவில்கள்.பல கட்டப்பட்டன.அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக புத்தகயாவில் உள்ள் மகாபோதி கோவில் 1295-98ல் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட்து. மொகலாயர்கள் ஆட்சியின்கீழ் புதிதாக்க் கட்டப்பட்ட, புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கோவில்களின் பட்டியல் முடிவில்லாமல் நீள்கிறது. ஔரங்கசீப்பின் கடைசிக்காலத்தில் அவர் தனது மகனுக்கு எழுதிய கடிதங்களின் கையெழுத்துத் தொகுப்பை நான் படித்தபோது திகைத்துப் போய்விட்டேன். அவர் தனதுமகனுக்கு எழுதிய ஒருகடித்த்தில் ஔரங்காபாத் செல்லும்போது எல்லோராவில் உள்ள சிற்பங்களைக் காணத்தவறவேண்டாம் என்று குறிப்பிட்டு, அவை கடவுளின் படைப்புக்களில் ஆச்சரியம் விளைவிக்கும் ஒன்றுஎன விளக்கியுள்ளார்.

  கலாச்சாரத்துக்குப் பலமுனைகள் உண்டு என்பதை ஒருவர் கட்டாயம் நினைவில் கொள்ளவேண்டும். இந்தக் கர்ருத்தாக்கத்தின் காவியத்தன்மைமிக்க வெளிப்பாடாக முதன்முதலில் 1928லும், அதற்குப் பின்னரும் பதிப்பிக்கப்பட்ட தாராசந்த் எழுதிய ‘இந்தியக் கலாச்சாரத்தின் மீதான இஸ்லாத்தின் செல்வாக்கு’ (Influence of Islam on Indian Culture) என்ற நூல் விளங்குகிறது. இதில் காணப்படாத ஓர் அம்சம் தற்போது வெளிப்படையாக்க் கொண்டாடப்படும் ‘இந்திய தேசபக்திஆகும். இந்த தேசபக்தி உணர்வின் உண்மையான முதல்வெளிப்பாடு  - இந்தியாவையும், அதில் வாழும் மக்களையும் பிற நாடுகளோடும், அவற்றின் மக்களோடும் சாதகமானமுறையில் ஒப்பிட்டு இந்தியாவின் இயற்கை அழகு, அதன் தட்பவெப்ப நிலை, அதன் பிராமணீய அறிஞர்கள், அதன் மொழிகளின் சிறப்பு – சமஸ்கிருதத்தின் அவசியம், உலகுக்கு இந்தியர்கள் அளித்த பங்களிப்புக்கள்,மேல்விபரங்கள், பதின்ம- பின்ன எண்கள் வைப்புமுறை, சதுரங்கம் மற்றும் பஞ்சதந்திரக்கதைகள் - இவையெல்லாம் சம்ஸ்கிருத்த்தில் அல்ல –இறக்குமதி செய்யப்பட்ட பெர்ஷியமொழியில் அரசவைக் கவிஞரான அமீர்குஷ்ரூவின் ‘சிபிஹ்ர்-ல் கி.பி.1318ல் எழுதப்பட்ட்து. மிகவும் வித்தியாசமான படைப்பு – அதுவும் ‘அன்னியர் ஆட்சியில்!

   தாராசந்த் கூட டெல்லி சுல்தான்களின் ஆட்சியில் அடையப்பட்ட மிகப்பெரிய பயனாக ‘இந்திய மக்களிடையே இணைந்துவாழும் மாபெரும் கூட்டுறவு உணர்வு வளர்க்கப்பட்டதுஎனத் தனது குறிப்பில் எழுதியுள்ளார். இதற்கு அப்பால் உறுதியாக வாழ்க்கைபற்றிய, பிற நாடுகளின் அறிவாற்றல் பற்றிய, கலாச்சாரங்கள் பற்றிய குறுகிய பார்வையில்லாத, விரிந்த கண்ணோட்ட்த்துடன்கூடிய   நல்ல புரிந்துணர்வு இருந்தது. அதை இங்கு குவிந்திருந்த பெர்ஷிய, அராபிய செல்வாக்கு வளர்த்தெடுத்தது

·         சங்பரிவாரங்களின் கருத்துப்படி மொகலாயப் பேரரசும், டெல்லி சுல்தான்கள் ஆட்சியும் இந்துக்களுக்கு எதிரான ஆட்சிகள். பேரரசுகள் இருந்தன. இந்துக்களின் சொத்துக்களையும், உபரி உற்பத்திகளையும் முஸ்லீம்கள் சுரண்டினார்கள். – உங்கள் கருத்து என்ன?

 கேள்வியின் முதல்பகுதிக்குப் போதுமானஅளவு விளக்கம் கூறியிருப்பதாக நான் கருதுகிறேன் இரண்டாம் பகுதியைப் பொருத்த அளவில் – இந்துக்கள் உபரியாக உற்பத்தி செய்தார்கள்: அவற்றை முஸ்லீம்கள் வசப்படுத்திக் கொண்டார்கள் என்பது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு மாபெரும் மொகலாய நிலஅளவீடான அயின்-இ-அக்பாரி’(Ain-e–akbari)யை ஒருவர் ஆய்வு செய்யவேண்டும். ஜமீன்தார் சாதிகளின் கிராமவாரியான கணக்கெடுப்பு இதைக் காட்டுகிறது. இந்து மேல்சாதியினரையே ஜமீன்தார் வர்க்கம் கொண்டிருந்த்து. எங்கு பெரும்பகுதி முஸ்லீம்கள் விவசாயிகளாக இருந்தார்களோ அங்கும்கூட –வங்காளத்தில் இருந்த்துபோல- இந்து ஜமீன்தார்கள் மிகவும் சுரண்டுபவர் களாகவே இருந்தார்கள். இது பிரிட்டிஷார் வரும்வரை நீடித்தது.

   எந்த ஒரு வெளிநாட்டுக் கணக்கெடுப்பும் இந்தியர்களின் வறுமையிலிருந்து முஸ்லீம்களை விலக்கிவைக்கவில்லை. நிலவரியைப் பொருத்த்வரை முஸ்லீம் விவசாயிகளுக்கு அவர்களுடனிருந்த இந்து விவசாயிகளைவிட எந்த ஒரு கூடுதல் சலுகைகளும் அளிக்கப்பட்டுப் பிரித்துவைக்கப்படவில்லை. கூலி அளவுகளும் ஒருகூலிவிவசாயி இந்துவா அல்லது முஸ்லீமா என்பதைவைத்து வேறுபடவில்லை. முஸ்லீம்களில் சிலர் சொத்துவைத்திருந்தார்கள் என்றால் பனியா வியாபாரிகளும், பேங்கர்களும் நாட்டின் வர்த்தகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, வங்கி வைப்புத்திட்டம், ஆயுள்காபீட்டுத் திட்டம் போன்ற அமைப்புக்கள் மூலம் மொகலாயர் ஆட்சியின்கீழ் வளர்ச்சி பெற்றார்கள். சங் பரிவாரங்கள் கொண்டிருக்கும் பார்வை அடிப்படை இல்லாதது.

·         டெல்லிப் பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருதத்துறை ரிக்வேதகாலம் பற்றிய ஒருபயிற்சிப் பட்டறையைத் திட்டமிட்டுள்ளது. வரலாற்றுத்துறைக்கு உரிய ஒருதலைப்பில் சமஸ்கிருதத்துறை அளவுக்கு அதிகமான ஆர்வத்தை ஏன் எடுத்துக்கொள்கிறது? அது, வானியல் ஆய்வுகளின் அடிப்படையிலான சில ஆவணங்களை வெளியிடப்போவதாகவும் கூறுகிறது. அவை ரிக்வேதகாலம் எப்போது நிலவியது என்ற கருத்தை மாற்றக்கூடும். ரிக் வேதகாலத்தைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்கொண்டு சென்று, இந்துநாகரிகம்தான் மிகவும் பழமையானது: அதன்படி எல்லா நாகரிகங்களையும்விட மேலானது என்ற தங்கள் பார்வையை நியாயப்படுத்த சங்பரிவாரங்கள் தொடர்ந்து பிரச்சாரங்களைச் செய்து வருகிறன்றன. வரலாற்றியல்பூர்வமான ஆய்வுகள் எதைக்காட்டுகின்றன?

ரிக்வேத்த்தின் காலம் பலவழிகளில் தோராயமாக்க் கண்டறியப்பட்டுள்ளது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் தனது கல்வெட்டுக்களில் ரெக்னல் ஆண்டுகளைப் பயன்படுத்து வதற்குமுன் இந்தியாவில் ஆண்டு- நாள் குறிப்பிடும்முறை இருந்த்தில்லை என்பதை நாம் கட்டாயம் நினைவில் கொள்ளவேண்டும். எனவே, வேதப்பாடல்களில் (மந்திரங்களில்) காலக்குறிப்புக்கள் இயல்பாகவேஇல்லை. அவைஎப்போது இயற்றப்பட்டன என்பதைக்காண வேறுவழிகளைப் பார்க்கவேண்டும். உதாரணமாக, ரிக்வேதத்தில் ரதம் அல்லது குதிரையால் இழுக்கப்படும் சாரட்வண்டி பற்றி விளக்கப்படுகிறது. இத்தகைய ரதங்கள் பற்றிய மிகமுந்தைய அகழ்வாய்வு ஆதாரங்கள் ரஷ்யா மற்றும் கஜகஸ்தானின் மிகப்பரந்த புல்வெளிகளில் அவற்றின் முதல்பயன்பாடு கி.மு.2,000க்கு அப்பால் போகவில்லை என்பதைக் காட்டுகின்றன. எனவே ரிக்வேதப்பாடல்கள் கி.மு.2,000த்துக்கு முன் இருந்திருக்கமுடியாது.

  மற்றொன்று மொழி. ரிக்வேதம் மற்றும் அவெஸ்தான் மொழிகள் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமானவை. மெஸபடோமியக் கல்வெட்டுக்களில் உள்ள இரானியப் பெயர்கள் அவெஸ்தானின் முந்தைய பகுதிகளை கி.மு.1,000த்துக்கு பின்கொண்டு செல்கின்றன. எனவே ரிக்வேதகாலம் தோராயமாக கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் வைக்கப்படலாம். இது அதனுடைய செம்புக்காலத்தை அறிந்திருந்த தன்மையோடு  – இரும்புக்காலத்தை அல்ல – ஒத்துப்போகிறது. ரிக்வேத்த்தின் கடவுளர்கள் மனிதஇன வடிவியல் வகையைச் சார்ந்தவர்கள். சிந்துசமவெளிக் கடவுளர்களைப்போல விலங்கின வடிவியல் வகை அல்ல. சிந்து சமவெளி நாகரிகம் கி.மு.1,800களில் தகர்ந்துபோய் விட்ட்தால், ரிக்வேத காலத்தின் உச்சவரம்பு கி.மு.1,800தான்   என அறியலாம். ரிக்வேதத்தில் வானியல் விளக்கங்கள் மிகவும் குறைவு. எனவே, டெல்லிப் பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருதத்துறை ரிக்வேதத்தை முழுமையாகப் படித்தால்தான் அதில் என்ன இல்லை என்பதை அறியமுடியும். அவர்கள் ரிக்வேதத்திலிருந்து உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் எதையும் பெறமுடியாது. வழக்கத்துக்குமாறாக ஆர்.எஸ்.எஸ். சிந்தனா வாதிகள் ரிக்வேத்த்துக்கு மிகத்தொன்மையான பழங்கால்த்தை உரியதாக்கப் பேரார்வம் கொண்டிருக்கிறார்கள். (அவர்களது நட்சத்திர அந்தஸ்துகொண்ட அகழ்வாராய்ச்சியாளரான வி.எஸ்.வாகன்கர் ரிக்வேதகாலத்தை கி.மு.8,000த்தில் வைக்கிறார்.-அதாவது புதிய கற்காலத்தில்!) டெல்லிப் பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருதத்துறையின் முயற்சியால் இதுபோன்ற அபத்தமான எத்தகைய முடிவுக்கும் வரமுடியும் என்று தெரிகிறது. ஏனெனில் டெல்லிப் பல்கலைக் கழகத்தின் பல அடுக்குகளில் ஆர்.எஸ்.எஸ். தனக்கு விசுவாசமான பல சீடர்களைக் கொண்டிருக்கிறது!

·         டெல்லியில் உள்ள ல்லிதகலா அகாதெமி இப்போது ஒருகண்காட்சியை நடத்திவருகிறது. அது, ‘ரிக்வேதத்திலிருந்து ரோபோக்கள் வரைஎன அழைக்கப்படுகிறது. இந்தக் கண்காட்சியின் நோக்கம் ‘இராமன் ஒரு வரலாற்றுப் பாத்திரம்என்ற கொள்கையையும், சரஸ்வதி நதி முற்காலத்தில் இருந்தது’, ’மகாபாரதப்போர் உண்மையிலேயே நடைபெற்றது’  என்பனபோன்ற பிறகொள்கைகளையும் நிரூபிப்பதற்காக என்று சொல்லப் படுகிறது. இதற்கு சங்பரிவார வரலாற்றியலாளர்கள் முன்வைக்கும் ஆதாரங்களின் தன்மை என்ன?

      இந்த இராமாயணப்பிரச்சனை அதிர்ஷ்டவசமாக மிகப்பழமைவாத அடையாளங்களில் தோய்ந்த வரலாற்றியலாளரான் மறைந்த பேராசிரியர். டி.சி.சர்க்கார்-ஆல் அவரது ‘இராமாயணத்தின் பிரச்சனைகள்( Problems of The Ramayana) என்ற தலைப்பில் விரிவாக வ்வாதிக்கப்பட்டுள்ளது. அவர் அதன் அற்புதமான அழகை வியந்து பாராட்டுகிறார். ஆனால் அதற்கு வரலாற்றுத்தன்மை அளிக்கப்படுவதை மிகஉறுதியாக மறுக்கிறார். பிராமணிய, யூத, இஸ்லாமிய மரபுகளின் மதஉணர்வுகளுக்கும், புராணங்களைத் தொடர்புபடுத்தும் நிகழ்வுகளுக்கும் வரலாற்றில் எப்போதும் இடமில்லை. இந்தப்புராணக்கதைகள் இப்போது ஏன் அடிக்கடி எழுகின்றன? இது ஆராய்ச்சியாளர்கள் விசாரித்தறிய வேண்டிய சுவையான கேள்வியாகும்.

·         இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் மாட்டிறைச்சியைத் தடை செய்யும் முயற்சியில் அரசு ஆர்வத்தோடு முனைப்புக்காட்டி வருகிறது. இந்த நடவடிக்கை, இந்துக்கள் மாட்டிறைச்சியை உண்ணவிருப்பமில்லாதவர்கள் என்று கருத வைக்கிறது. உணவுப்பழக்க  வழக்கங்கள் – குறிப்பாக மாட்டிறைச்சியை உண்பது இந்திய வரலாற்று ஆய்வுகளில் எவ்வாறு பார்க்கப்படுகிறது?

இயல்பாகவே மிருகங்களைப் (பசு உள்ளிட்ட கால்நடைகளை) பலியிடுவது வேத மத்த்தின் ஒருபகுதியாகவே இருந்தது என்பதை வரலாற்றியலாளர்கள் நீண்டகாலமாகவே அறிந்துள்ளார்கள். பேராசிரியர் டி.என்.ஜா இதுதொடர்பான மிகப்பொருத்தமான தகவல்களை ஒருங்கிணைத்துத் தனது ‘இந்திய உணவு மரபுகளில் மாட்டிறைச்சிஎன்ற நூலில் தந்துள்ளார். புத்த மதமும், ஜைன மதமும் தோன்றிய பிறகு பசுவதைக்கு எதிராகவும், மாட்டிறைச்சிக்கு எதிராகவுமான ஒரு அறுவருப்பு பொதுவாக வளர்ந்து வந்தது. இருந்தாலும் சத்திரியர்களிடையேயும், பல கீழ்ச்சாதியினரிடையேயும் மாட்டிறைச்சியை உண்ணுவதும் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த விஷயம்பற்றிய ஒருகுறிப்பிட்த்தக்க கட்டுரையை ‘வரலாற்றில் பசு(The Cow in the History) என்ற தலைப்பில் ஹெச்.டி.சந்தாலியா 1967 கருத்தரங்கில் படைத்துள்ளார். மிகவும் புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சியாளரான அவர் கடுமையான சைவ உணவுப்பிரியரும் கூட.

·         வரலாற்று அறிவுத்துறையில் ஆய்வுகள் எவ்வாறு செய்யப்படவேண்டும்? அது தீர்வுகாணப்படாத கொள்கைசார்ந்த பிரச்சனையா? அங்கு சாதகவாதிகள், தாராளவாதிகள், நிகழ்ச்சி நிரல்வாதிகள், மார்க்சியவாதிகள்,  அதிகார வர்க்கவாதிகள், பின்காலனியவாதிகள் எனப்பல்வேறு சிந்தனைப்போக்குகள் உள்ளன. இந்துவலதுசாரிகள் தங்கள் வாதங்களை முன்வைக்கும்போது ஏதாவது ஒருசிந்தனைமுறையைப் பின்பற்றுகிறார்களா? மேலும் வரலாற்று அறிவுத்துறையில் ஆரோக்கியமான விவாதங்களுக்கு இடமளிக்கும்வகையில் ஏராளமான விளக்கங்களுக்கு வாய்ப்புக்கள் உள்ளன. இருந்தாலும் துறைசார்ந்த வரலாற்றியலாளர்கள் இந்திய வரலாறு பற்றிய இந்துவலதுசாரிகளின் விளக்கங்களுக்கு ஏன் முகம் சுழிக்கிறார்கள்?

       வரலாற்றுத்துறையில் வெவ்வேறு சிந்தனைமரபுகள் இருந்தாலும் வரலாற்றியலாளர்கள் எந்த விஷயத்தின்மீதும் ஒருமித்த கருத்துக்கு வருவதில்லை என்பது தவறு என்பதில் நாம் தெளிவாக இருக்கவேண்டும். அக்பர் 1556ல் அரியணை ஏறினார்: 1605ல் மரணமடைந்தார் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளாதவர்கள் ஒருவருமில்லை. அல்லது அசோகர் தனது தம்ம மதத்தைப் போதிக்கத் தனது கட்டளைகளை பிராகிருதம், கிரேக்கம், ஆர்மீனிய மொழிகளில் பிறப்பித்தார் என்பதிலும் யாரும் ஒத்துக்கொள்ளாமலில்லை.

  மூல ஆதாரங்கள், அகழ்வாராய்ச்சிகள், நாணயங்கள், உலோகங்கள், காலத்தைக் கணக்கிடும் கார்பன் அளவைகள், புதைபடிமஇயல் முதலான முறைகளைப் பயன்படுத்தி நிலைநாட்டப் பட்ட ஏராளமான உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் ஒத்துப்போகாத தன்மைக்கு இடமேயில்லை. இந்த உண்மைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றில், எந்த அம்சம் மாற்றத்துக்கு மிகவும் காரணமாக, எந்தவகையில் இருந்தது என்பதைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் கருத்துவேறுபாடுகள் நியாயமும், நேர்மையும் கொண்டவை. நீங்கள் குறிப்பிட்ட பலவகை சிந்தனைப்போக்குகள் தங்கள் முடிவுகளுக்கான வெவ்வேறு கருதுகோள்களை இந்தப்பகுதியில் கொண்டுள்ளன.

  வலதுசாரி முகாம்களை- இந்துவோ, முஸ்லீமோ அல்லது வேறு எந்தப்பிரிவோ பற்றிப் பேசும்போது பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி வரலாற்று உண்மைகள் நிலை நாட்டப்பட்ட பிறகே அவர்களது கருத்துக்கள் துவங்குகின்றன என்பதை நீங்கள் பார்க்கவேண்டும்.. இத்தகைய வரலாற்றியலாளர்களாகத்  தங்களது அரசியல் மற்றும் சமூகப்பார்வைகளை வலதுசாரியாகக் கொண்டுள்ள ஆர்.சி.மஜும்தார், டி.சி.சர்க்கார் ஆகியோரை குறிப்பிடலாம்.

   உங்கள் வார்த்தைகளில் சொல்வதென்றால் இந்த இந்துவலதுசாரிகள் இப்போது செய்வ தெல்லாம் வரலாற்று ஆய்வுமுறைகளையே நிராகரிப்பதுதான். இவ்வாறு செய்வதன்மூலம் மஜும்தார், சர்க்கார் ஆகியோரைப் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவித அடிப்படையுமின்றி தொப்பிக்குள்ளிருந்து ‘உண்மைகளைக்குஞ்சுகளாகப் பொறிக்க்க்கூடிய வித்தைக்காரனைப் போன்ற சுவாமி டேவிட் ஃப்ராவ்லியைப் போற்றிப் பாராட்ட விரும்புகிறார்கள். அண்மையில் அவர் உண்மையாகவே ‘பத்மபூஷன்விருது அளிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்! அமெரிக்கவாழ் NRIயும், நாசா விஞ்ஞானியுமான நவரத்ன ராஜாராம் என்பவரிடமிருந்து இன்னொருவகையான ஆதாரம் கிடைக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தில் ஆரியர்களின் பங்கு இருந்தது என்பதை நிலைநாட்டுவதற்காக இவர், ‘குதிரை தாங்கிய சிந்து சமவெளி முத்திரைஒன்றை உற்பத்தி செய்தார். இவரது இந்த மோசடிச்செயலை ஃப்ரண்ட்லைன் –ல் (Horse Play in Harappa – Front Line October 13, 2,000) மைக்கேல் விட்செல் அம்பலப்படுத்தினார். இத்தகைய ஒருகும்பலோடு விவாதிப்பது நேரத்தை வீணாக்குவதாகும். அதற்காக விவாதங்களே நட்க்கவில்லை என்று நீங்கள் கூறுவது தவறு. பொருத்தமான நேரங்களில் எப்போதெல்லாம் கட்டுரைகளோ, கலைப்படைப்புக்களோ முன்வைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அவை விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

·         இதுதொடர்பாக வலதுசாரிப்பிரிவு வரலாற்றியலாளர்களின் முடிவுகள் எடுக்கப்படுவதற் கான அறிவியல் அடிப்படை எது? உதாரணத்துக்குச் சொல்வதென்றால் இந்து காவியங்களைப்பற்றி ஒய்.வி. ராவ்-உம், இந்து தேசியம் பற்றி ராகேஷ் சின்ஹா-வும்  எடுத்த முடிவுகளுக்கான அறிவியல் அடிப்படை எது?

பேராசிரியர் ராவ்-ன் ஆய்வுக்கான சொந்தப்பகுதி, ‘பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த வடபகுதி சர்க்காரில் நிலப்பிரச்சனைக்கான தீர்வுஎன நான் புரிந்துகொள்கிறேன். புராணங்கள் அல்லது காவியங்கள் பற்றிய அவரது எந்தஒரு ஆராய்ச்சியையும் நான் பார்த்த்தில்லை. ராகேஷ் சின்ஹா தேசிய இயக்கம் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது.

·         எப்போது ஆட்சிக்கு வந்தாலும் இந்துவலதுசாரிகள் வேறு எந்தத்துறையையும்விட வரலாற்று அறிவுத்துறையை மட்டுமே குறிவைப்பது ஏன்? இந்திய வரலாற்றை எழுதுவதென்பது ஒருதரப்பினருக்கு ஆதரவாக இடதுசாரிகளாலும், மதசார்பற்ற காங்கிரசாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டதாக இருந்தது. எனவே அறிவுத்துறையில் பெரிய இடம்தேவைஎன்று எப்போதும் கூறுகிறார்கள். இதுபற்றிய உங்கள் கருத்து?

ஆர்.எஸ்.எஸ்.ஆட்களிடம் ஒரு உளவியல் சிக்கல் இருக்கிறது! ‘தேசியம்என்று அவர்கள்   கூப்பாடுபோட்டாலும், அதைஅவர்கள் அதை 1947க்குப்ப்பின் இப்போதுதான் செய்கிறார்கள். இப்போது அவ்வாறு செய்வது பாதுகாப்பானது என்பதால். அவர்கள் தேசிய இயக்கத்துக்கு எந்தஒருகதாநாயகனையும் தங்களிடமிருந்து அளிக்கவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் அவ்வாறு செய்வது சிறைச்சாலைக்குச் செல்வது அல்லது வேறுவகையான தொல்லைகளுக்கு உள்ளாவது என்றாகிவிடும். அப்போது அவர்கள், இந்து, இந்தி, இந்துராஜ்யம்என்ற கோஷத்தை முழங்கி பிரிட்டிஷ்கார்ர்கள் தரப்பில் பாதுகாப்பாக இருந்துகொண்டு, தேசிய இயக்கத்தை வலிவிழக்கச்செய்ய முயற்சித்தார்கள். அவர்களது நடவடிக்கைகள் நாட்டின் பிரிவினைக்கு வழிவகுக்கவில்லையா? இப்போது அவர்கள் அந்தப்பழியைக் காந்தி மற்றும் நேருவின்மீது சுமத்தவில்லையா? இவ்வாறு அவர்கள் ஒருபொய்யான வரலாற்றைக் கண்டுபிடிக்கவும், அதில் உண்மையான சுதந்திரப்போராட்ட வீரர்கள்மீது பழிசுமத்தவும், தங்களைத் தேசியவாதிகளாக வண்ணம் பூசிக்கொள்ளவும் துடிக்கிறார்கள்.

   இந்தக்கருதுகோள் பற்றி நான் விளக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இந்த எல்லா உண்மைகளும் 130 பக்கங்கள்கொண்ட இந்திய வரலாற்றுக் காங்கிரஸின் அறிக்கையில்- புத்தகமாக வெளிக்கொண்டுவரப்பட்டுவிட்டது. என்.சி.இ.ஆர்.டி. பாட நூல்களில் இந்திய வரலாறு பற்றிய விமர்சனத்தை இடம்பெறச் செய்தது. அந்தப்பாட நூல்கள் இப்போது ‘இந்துவலதுசாரிகளின்விளக்கத்தைக்கொண்ட வடிவமாக்குவதற்காகத் திரும்ப்ப்பெறப்பட்டுவிட்டன.

   உண்மைகளை நேருக்குநேர் சந்திக்கும்போது அவர்களது விளக்கங்கள் அபத்தங்களாகி விடுகின்றன. அதனால் ஆர்.எஸ்.எஸ்.ஸும், அதைப்பின்பற்றுபவர்களும் ‘எல்லா வரலாறுகளும் இட்துசாரிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருந்தன. அதனால்தான் இந்தியா ‘ஆரியர்களின் தாயகம்என்று ஏற்றுக்கொள்ளப்படவில்லை’ ... இன்னபிற.  இன்னபிற...என்று கூப்பாடு போடுகிறார்கள். அவர்கள் ஆர்.சி.மஜும்தார், தாரா சந்த், ஈஸ்வரி பிரசாத், என்.கே.சின்ஹா, டி.சி.சர்க்கார் மற்றும் டி,என்.முகர்ஜி போன்ற புகழ்பெற்ற வரலாற்றியலாளர்களின் பெயர்களிலிருந்து ஏதாவது ஒரு இட்துசாரியை அவர்களால் சுட்டிக்காட்ட முடியுமா? இந்த வரலாற்றியலாளர்களின் சொந்த விளக்கங்கள் ஆர்.எஸ்.எஸ் தனது ‘பகவத்கொடியை நாட்டச் சிறிதும் இடமளிப்பதில்லை.


                                        (நன்றி- ஃப்ரண்ட் லைன் – 16 அக்டோபர் 2015.).