இன்னும் எத்தனை
காலம்தான் ?
------------------செ. நடேசன்
----------------
டெல்லி சட்டப்பேரவையில் ஜூன்23 செவ்வாய்அன்று
நிதிநிலைஅறிக்கைக் கூட்டத்தொடரில் பாஜக உறுப்பினர்கள் விஜேந்தர்குப்தா, ஓம்பிரகாஷ்
சர்மா, ஜெகதீஷ் பிரதான் ஆகியமூவரும் சட்டப்பேரவைத் தலைவர் ராம்நியாஸ்கோயல்
உத்தரவின்படி அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். குண்டுக்கட்டாக பாஜக்வின்
சட்டமன்றக்குழுத் தலைவர் விஜேந்திரகுப்தா வெளியேற்றப் பட்டகாட்சி
தொலைக்காட்சிகளிலும், அடுத்த நாள் நாளேடுகளிலும் இடம்பெற்றது.
ஜித்தேந்திர தோமரபாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்சனை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஜித்தேந்திர தோமரின் போலிக்கல்விச்சான்றிதழ் பற்றியது. ’தோமர் தேர்தல் வேட்புமனுவில் போலிக்கல்விச் சன்றிதழைக் குறிப்பிட்டு, தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சராக- அதுவும் சட்ட்த்துறை அமைச்சராக டெல்லி மாநில அமைச்சரவையில் நீடித்தது ஏன்? அவர்மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க டெல்லிமுதல்வர் அரவிந்த்கேஜ்ரிவாலும், ஆம்ஆத்மி கட்சியும் தயங்கியது ஏன்?‘ என்றும், ‘டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் பகிரங்கமாக சட்டப்பேரவையில் மன்னிப்புக் கேட்கவேண்டும்’ என்றும் அவர்கள் முழங்கினர்.
தோமர்
மத்திய அரசின் பொறுப்பில் உள்ள காவல்துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுச் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார். முதல்வர் கேஜ்ரிவால் தோமர் செய்தது தவறு என்று அறிந்ததும்
அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றியதை எடுத்துக்கூறினார். ”அரசியலில், பொதுவாழ்வில் தவறு
இழத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத்தவறிய அரசும், கட்சியின்தலைவரும்
பகிரங்கமன்னிப்புக்கேட்க வேண்டும்” என்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் நியாய உணர்வு
மெய்சிலிர்க்க வைத்தது.

ஸ்மிருதி ஜுபின் இரானி

ஸ்மிருதி ஜுபின் இரானி
இந்தநிகழ்ச்சிக்கு மறுநாள் மத்திய
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜுபைன் இரானியின் பிரச்சனை வெடித்தது.
இவர் 2004 மக்களவைத் தேர்தலில் சாந்தினிசௌக் தொகுதியில் போட்டியிட்டபோது தனது
வேட்புமனுவில் கல்வித் தகுதியாக டெல்லிப் பல்கலைக்கழகத்தில் 1966ல் பி.ஏ., பட்டம்
பெற்றிருந்த தாகக் குறிப்பிட்டிருந்தார். 2011குஜராத் மாநிலத்தி லிருந்து மாநிலங்களவைக்குப்போட்டியிட்ட போது டெல்லிப்பல்கலைக்
கழகத்திலிருந்து 1994ல் பி.காம்., பட்டம் பெற்றிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
2014ல் அமேதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோதோ டெல்லி திறந்தவெளிப்
பல்கலைக்கழகத் திலிருந்து பி.காம்., பட்டம்பெறிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். மூன்றுதேர்தல் களிலும்
மூன்றுவகையான கல்வித் தகுதிகளைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய மனிதவள்மேம்பாட்டுத்துறை
அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மீது பத்திரிக்கையாளர்அஹ்மர்கான் டெல்லிமெட்ரோபாலிடன்
நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இதை விசாரணைக்குத் தகுதியான வழக்காக
ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆகாஷ்ஜெயின் இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 28 என்று
நாள்குறித்து உத்தரவிட்டுள்ளார்.
வினோத் தாவ்டே- ராம்சரண்
கத்தாரியா –பாபன்ராவ் லோனிகர்

மகாராஷ்ட்ராமாநிலத்தில் பாஜக–சிவசேனா கூட்டணிஅரசில் மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளவர் வினோத் தாவ்டே. இவர் அனைத்திந்தியத் தொழில்நுட்பப்பலகலைக் கழகத்தில் அங்கீகாரம்பெறாத –உயர்நீதிமன்றம் தடைவிதித்து அதனால் மூடப்பட்ட பூனாவில் உள்ள தியானேஸ்வர் வித்யாபீடத்தில் மின்னணுவியலில் பொறியாளர் பட்டம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்ல: ‘அது அங்கீகாரம் பெறாத கல்லூரி என்பது தெரியும்’ என்றும் ‘என்றாலும் அக்கல்லூரியில் படித்ததைப் பெருமையாகக் கருதுவதாகவும்’ கூறியுள்ளார். அங்கீகாரமில்லாத, நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட போலிநிறுவனத்தின் போலிபட்டத்தைத் தனது கல்வித்தகுதியாக எப்படி ஒருவர் குறிப்பிட்டுக்கொள்ளமுடியும்?

ஆக்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மத்தியமனிதவளமேம்பாட்டுத் துறை துணைஅமைச்சராகப் பதவிவகிப்பவர் ராம்சரண்கத்தாரியா. கான்பூர் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி பட்டம்பெற்ற இவர் தனது பி.ஏ., எம்.ஏ., மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகாராஷ்ட்ராமாநிலத்தில் பாஜக–சிவசேனா கூட்டணிஅரசில் மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளவர் வினோத் தாவ்டே. இவர் அனைத்திந்தியத் தொழில்நுட்பப்பலகலைக் கழகத்தில் அங்கீகாரம்பெறாத –உயர்நீதிமன்றம் தடைவிதித்து அதனால் மூடப்பட்ட பூனாவில் உள்ள தியானேஸ்வர் வித்யாபீடத்தில் மின்னணுவியலில் பொறியாளர் பட்டம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்ல: ‘அது அங்கீகாரம் பெறாத கல்லூரி என்பது தெரியும்’ என்றும் ‘என்றாலும் அக்கல்லூரியில் படித்ததைப் பெருமையாகக் கருதுவதாகவும்’ கூறியுள்ளார். அங்கீகாரமில்லாத, நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட போலிநிறுவனத்தின் போலிபட்டத்தைத் தனது கல்வித்தகுதியாக எப்படி ஒருவர் குறிப்பிட்டுக்கொள்ளமுடியும்?

ஆக்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மத்தியமனிதவளமேம்பாட்டுத் துறை துணைஅமைச்சராகப் பதவிவகிப்பவர் ராம்சரண்கத்தாரியா. கான்பூர் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி பட்டம்பெற்ற இவர் தனது பி.ஏ., எம்.ஏ., மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகாராஷ்ட்ராவில் குடிநீர் மற்றும்
சுகாதாரத்துறை அமைச்சர் பாபன்ராவ் லோனிகர் தனது கல்வித்தகுதியை 2004, 2009
தேர்தல்களில் பி.ஏ., முதலாம் ஆண்டு எனக்குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த 2014ல்
நடைபெற்ற தேர்தலில் 5ஆம் வகுப்புமட்டுமே முடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவின் தனியுரிமை?
‘ஒருதவறு செய்தால், அதைத்தெரிந்து செய்தால்
அவன் தேவனென்றாலும் விடமாட்டேன்’ என்ற பாடலுக்கேற்ப டெல்லி
சட்டப்பேரவையில் ஜித்தேந்திரசிங் தோமர் கைதுசெய்யப்பட்டுச் சிறையில்
அடைக்கப்பட்டபின்னும், அவர் அமைச்சர்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டபின்னும் ’முன்கூட்டியே நடவடிக்கைஎடுக்காதது ஏன்? முதல்வர் கேஜ்ரிவால்
பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும்’என்று ஆவேசமாக முழங்கிய,
ஆர்ப்பாட்டம்செய்து மெய்சிலிர்க்கவைத்த பாஜகவினர் எங்கே? தங்கள் அமைச்சர்களின்
மோசடிச்செயல்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திரமோடியும்,
மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸும் பகிரங்க மன்னிப்புக்கேட்பார்களா? மோசடி
அமைச்சர்களைப் பதவிகளிலிருந்து நீக்கிவிட்டுக் கைதுசெய்து சிறையில் அடைப்பார்களா?
நரேந்திரமோடியிடமோ, அமித்ஷாவிடமோ இதை
எதிர்பார்க்கமுடியாது ஏனெனில் அவர்கள் தங்கள் குழந்தைப்பருவம் முதலே
ஆர்.எஸ்.எஸ்.ன் சாகாக்களில் பய்ற்சியளிக்கப்பட்டவர்கள். சங்பரிவாரங்களைத்தவிர மற்றஎல்லாரும்
தவறானவர்கள். மற்றவர்கள் யாரும் மோசடிகளையோ, ஊழல்களையோ செய்ய அனுமதிக்ககூடாது. அது
முற்றிலும் சங்பரிவாரங் களின் தனியுடைமை. மத்திய வெளியுறவுத்துறைஅமைச்சர்
சுஷ்மாசுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே, மகாராஷ்ட்ர அமைச்சர்கள்
பங்கஜாமுண்டே, ரஞ்சித்பட்டீல், சந்திரசேகர்பவான் குலே ஆகியோர்போன்றவர்கள் எத்தகைய
ஊழல்களையும் செய்யலாம் .மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி
இரானி,மகாராஷ்டிர அமைச்சர்கள் வினோத் தவ்டே, ராம்சரண் கத்தாரியா, ப்பன்ராவ் லோனிகா
ஆகியோர் போன்றவர்கள் தங்கள் கல்வித்தகுதிகளில் எத்தகைய மோசடிகளிலும் ஈடுபடலாம்.
ஏனெனில் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். பாத்திகளில் பதியமிட்டு வளர்க்கப்பட்ட புனித
நாற்றுக்கள்! ஊழலும், மோசடியும் பாஜகவின் தனியுரிமை!! இதில் மற்றவர்களும்
ஈடுபடும்போது ஆவேசங்கள் எழுவது இயற்கைதானே?

வருண்காந்தி - ம்ம்தா பானர்ஜி

வருண்காந்தி - ம்ம்தா பானர்ஜி
‘இந்தியா டைம்ஸ்-ல் 5.4.2009ல் மீனாட்சிகுமார்
தெரிவித்துள்ள செய்தி இந்திய அரசியல்வாதிகளில் சிலரின் வெளிவேஷங்களை
அம்பலமாக்கியுள்ளது. ”இந்தவாரத்தின் முற்பகுதியில்
வருண்காந்தி ம்ம்தாபானர்ஜியைப்போலச் செய்த ஒன்று வெளிவந்துள்ளது. இந்த பாஜகவின்
அரசியல்வாதி லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்(London School of Economics) லிருந்தும், லண்டன் ஸ்கூல் ஆஃப்
ஓரியண்டல
அண்ட் ஆஃப்ரிகன் ஸ்டடீஸ்(London School of Oriental
and African Studies) லிருந்தும்
இரண்டு பட்டங்கள் பெற்றுள்ளதாகக் கூறினார். அவை உண்மையல்ல!

இது வெளிப்பட்டவிதம் திருணாமுல் காங்கிரஸ் தலைவர் ம்ம்தா பானர்ஜி கிழக்கு ஜார்ஜியா பல்கலைக்கழகத்திலிருந்து (East Georgia University ) ’டாக்டர்’ பட்டம் பெற்றதாக மிகவும் தம்பட்டம் அடித்துக்கொண்டதன் எதிரொலிபோல இருந்தது. கிழக்குஜார்ஜியா பல்கலைக்கழகம் என்ற ஒன்றே இருந்ததில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது” என்கிறது அந்தச்செய்தி.

இது வெளிப்பட்டவிதம் திருணாமுல் காங்கிரஸ் தலைவர் ம்ம்தா பானர்ஜி கிழக்கு ஜார்ஜியா பல்கலைக்கழகத்திலிருந்து (East Georgia University ) ’டாக்டர்’ பட்டம் பெற்றதாக மிகவும் தம்பட்டம் அடித்துக்கொண்டதன் எதிரொலிபோல இருந்தது. கிழக்குஜார்ஜியா பல்கலைக்கழகம் என்ற ஒன்றே இருந்ததில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது” என்கிறது அந்தச்செய்தி.
.டாக்டர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள்
மற்றும் தொழில்துறையினர் பலரும் வெளிநாட்டுப்பட்டங்களில் மோகம்கொண்டு
அவற்றைப்பெற்றபின் வீணான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள் அவற்றில் பலவும்
போலிப்பட்டங்கள்! வருண்காந்தியும்,
ம்ம்தாபானர்ஜியும் இந்திய அரசியலில் மிகவும் தெரிந்த துள்ளிக்குதிக்கும்
முகங்கள் இவ்ர்களுக்கு ஏன் இந்த
வெளிநாட்டுப்பட்டங்களின்மீது மோகம்?
சமூக
விஞ்ஞானிகளின் ஆய்வுகள்
சமூகவிஞ்ஞானியான
சிவ்விஸ்வநாதன் இவர்களை நோக்கிச் சிலகேள்விகளை எழுப்புகிறார்.
“இந்தியர்கள்சாதாரணமாக இத்தகையபோலிப்பட்டங்களுக்காகத் தொங்கிக்கொண்டிருப்பது ஏன்?
இது நாம் இத்தகைய போலிகளைத்தான் விரும்புகிறோம் என்பதற்கான சான்றுகளா? அல்லது நாம்
போலிகளைக்கொண்டு மோசடியும், வஞ்சகமும் செய்வதில் திறமை கொண்டுள்ளோமா? அன்னியப்பொருள்கள்
சுதேசிகளைவிட மேலான அந்தஸ்தும், மதிப்பும் கொண்டுள்ளனவா?” சிவ்விஸ்வநாதன் மேலும் கேட்கிறார்:”வேறுவகையில் சொல்வதானால், காலனிய அடிமை மனோபாவத்திலிருந்து
இன்னும்நாம் சிக்குண்டு அதன்மீதான நமது வாஞ்சையைக் கொண்டுள்ளதன் பிரதிபலிப்பா?”
மிகவும் முக்கியமாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின்
சமூகவியலாளர்கள் ‘வளரும் நாடுகளிலுள்ளவர்களிடம் இங்கிலாந்து அல்லது
அமெரிக்காவிலிருந்து பெறும் பட்டங்கள் பெரிதும் மதிகப்படுகின்றன. எந்தவொரு
விருப்பு வெறுப்பற்ற ஆய்வும் ‘சில உலகப் பலகலைக்கழகங்கள் நமது பல்கலைக்கழகங்களைவிடவும்
மேலானதாகவும், அங்குசென்று படிப்பது உதவிகரமானதாகவும் உள்ளன’ என்பதைக்காட்டுகின்றன. ஆனால், பலருக்கோ இப்பட்டங்கள்
அறிவைப்பெறுவதற்காக அல்லாமல், மற்றவர்களிடம்காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்வதற்காக
உள்ளன’ என்கிறார்கள்.
மரியாதை தரும்
போதை
”மிகஉயர்ந்தகல்வித்தகுதி
பெற்றஒருவர், அதைப்பெறாத மற்றவரைவிட சமூகத்தில் மிகஅதிகமான மரியாதைக்கு உரியவராகிறார்
இந்தமரியாதை கொடுக்கும் செல்வாக்கும், போதையும் ஆக்ஸ்போர்ட் அல்லது கேம்பிரிட்ஜ்
பட்டங்களை நாமும் பெறவேண்டும் என்ற ஆவலை அதிகரிக்கின்றன. ஆனால்புகழ்பெற்ற
சிலஇந்தியர்கள் உண்மையான அல்லது போலிப்பட்டங்களை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்கள்
செய்வது ஆச்சரியமளிக்கிறது” என்கிறார் குப்தா. அவர் மேலும்
சொல்கிறார்: ’இது அவர்களது வெளிவேஷத்தை
அம்பலப்படுத்துகிறது. தங்களுக்கு முட்டுக்கொடுக்க , உயர்த்திக்கொள்ள அவர்களுக்குத்
தேவையானதெல்லாம் வெளிநாட்டவர் அல்லது வெளி நாட்டுப்பொருள்கள்தான்!’
ஆனால்
ம்ம்தா பானர்ஜியோ ’மா,.மதி.,மனுஷ்’(தாய், தாய்நாடு,
தாய்நாட்டுமக்கள்) என்று சுதேசியகீதத்தைத் தனது தேர்தல் முழக்கமாக முழங்கியவர்.
(இந்த முழக்கம்கூட அவரது சொந்தக்கண்டுபிடிப்பு அல்ல. வங்கதேசத்தில் தேர்தலில் பேகம்கலிதா
ஜியா 1991ல் எழுப்பிய இந்தமுழக்கத்தைக் களவாடியவர்தான் ம்ம்தா). சுதேசிக்கோஷத்தை
முழங்கிய ம்ம்தா விதேஷி ‘டாக்டர்’ பட்டம் பெற்றதாக
ஆர்ப்பாட்டங்கள் செய்தது ஏன்? இவர்களது வெளிவேஷங்கள் இன்னும் எத்தனை காலம்தான்....?





