Wednesday, 24 June 2015

மோடிகளின் ராஜ்ஜியத்தில் ...!













 மோடிகளின் ராஜ்ஜியத்தில் ...!
  செ. நடேசன்

 மே.26 அன்று தனது ஓராண்டு ஆட்சியின் நிறைவையொட்டி பிரதமர் நரேந்திரமோடி அனைத்துமொழி நாளேடுகளிலும் தனதுஆட்சியின் சாதனைபற்றிய விளம்பரங்களை வெளியிட்டிருந்தார்.அதில், ஊழலற்ற, வெளிப்படையானதன்மைகொண்ட, கொள்கை அடிப்படையிலான நிர்வாகம், வேகமாக முடிவெடுத்தல் ஆகியவைதான் எங்கள் அடிப்படைக்கொள்கைஎன்று பிரகடனப்படுத்தினார். உத்திரப்பிரதேசம், மதுரா மாவட்டம் நாக்லாசந்த்ரபான் கிராமத்தில் ஒருபொதுக்கூட்டத்தில், “கடந்த ஓராண்டில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை அளித்துள்ளோம். கடந்த 60ஆண்டுகளாக நாட்டைக்கொள்ளையடித்தவர்களுக்கு (அடல் பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்த பா.ஜ.க.வின் 6 ஆண்டுகள் உட்பட?) முடிவு கட்டியுள்ளோம்என்று முழங்கினார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் தன்பங்குக்கு அதைவழிமொழிந்தார். நிதிஅமைச்சர் அருண்ஜேட்லியோ,கடந்த ஓராண்டில் ஊழலற்ற அரசை அளித்ததே மாபெரும் சாதனை”  என்று பூரித்தார்.
   
  யெச்சூரிபேட்டி : ஊழல்கள் வெளிவரும்
சென்னையில் மே 26 அன்று பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி, கடந்த ஓராண்டில் ஊழல்கள் ஏதும் நடக்கவில்லை என்றுபிரதமர் பெருமைப்பட்டுக்கொள்கிறார். ஒன்றை நாட்டுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும்: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் மிகப்பெரும் ஊழல்கள்கூட முதல் ஆண்டில் வெளியாகவில்லை. இரண்டு ஆண்டு களுக்குப் பின்னரே வெளிச்சத்துக்கு வந்தன. அதுபோல இந்த அரசும் ஆட்சியைத் தொடரத்தான் போகிறது. அப்போது முந்தைய ஆட்சியைவிட மிகப்பெரிய ஊழல்கள் நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும்என்றார்.

 சுஸ்மா சுவராஜ்

 யெச்சூரியின் பேட்டி வெளியான இரண்டு வாரங்களுக்குள் ரூ.750கோடி மோசடி ஊழலில் சிக்கி, சட்ட்த்தின் பிடியிலிருந்து தப்பி, லண்டனில் இருக்கும் ல்லித்மோடி யின் கதையும், அதில் அவருக்கு உதவிய பா.ஜ.க.அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மாசுவராஜ்-ன் பங்கும் இந்தியாவையே அதிர வைத்தது. ஒருமோசடிப் பேர்வழிக்கு, இந்தியச்சட்டங்களுக்கும், விசாரணைகளுக்கும் அடிபணிய மறுத்து வெளிநாட்டுக்கு ஓடிப்போனகுற்றவாளி ல்லித்மோடிக்கு பயணஅனுமதி வழங்க இங்கிலாந்துஅரசிடம் இந்தியவெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா தொடர்புகொண்டு உதவிய மன்னிகமுடியாத குற்றம் வெளிவந்தது. ஒருபொருளாதாரக்குற்றவாளிக்கு சுஸ்மாசுவராஜ் ஓடோடிச்சென்று உதவ்வேண்டிய அவசியம் என்ன? சுஸ்மாவின் மகள் பன்சரி சுவராஜ் ல்லித்மோடியின் வழக்கறிஞர் என்பதாலா? சுஸ்மாவின் கணவர் சுவராஜுக்கு ல்லித்மோடி பலஇலட்சக்கணக்கான  ரூபாய்செலவில் ஆடம்பர ஓட்டல்களில் தங்கவைத்து உபசாரம் செய்ததாலா? பதிலளிக்க முடியாத இந்தக்கேள்விகளுக்கு பா.ஜ.க.வும், அதைஇயக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ம் தரும் ஒரே விளக்கம், “மனிதாபிமான அடிப்படையில் உதவிசெய்ததைக் கொச்சைப் படுத்தலாமா?என்பதே! இந்த மனிதாபிமான உதவிகள் குற்றவாளிகளுக்கு மட்டுமே செய்யப்படுவது ஏன்? ஏழை,எளிய சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏன் இல்லை?இந்தக்கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை!

வசுந்தரா ராஜே சிந்தியா

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜேசிந்தியா விவகாரமோ இன்னும் ஒருபடிமேல். மோசடிமன்னன் ல்லித்மோடிக்குத் தான் ஆதரவளிப்பதாகவும், இந்த உண்மை இந்தியஅரசுக்கோ,அதிகாரிகளுக்கோ தெரியக்கூடாது என்ற எழுத்துப்பூர்வ நிபந்தனை யின்பேரில் ஓடுகாலிக்குற்றவாளியான ல்லித்மோடிக்கு உதவியுள்ளார். இதன் பின்னணியில் வசுந்தராவின் மகனும், பா.ஜ.க. எம்.பி.யுமான துஷ்யந்த்க்கு ல்லித்மோடி கோடிக்கணக்கான பணத்தைப் துஷ்யந்த்தின் போலி நிறுவனத்துக்கு அளித்த ஊழல் வர்ணஜாலமாய் எழுந்து நிற்கிறது. சத்தியவந்தரான நமது நிதியமைச்சர் அருண்ஜேட்லியோ, அது அவர்களுக்கிடையேயான வர்த்தகப் பரிமாற்றம்”  என்று கூறிவிட்டு இப்போது மழுப்புகிறார்!
  ல்லித்மோடியின் மெகாஊழலில் சிக்கியுள்ள சுஸ்மாவையும், வசுந்தரா ராஜே சிந்தியாவையும் காப்பாற்றியே தீருவோம்என்று பா.ஜ.க.தலைவர் அமித்ஷா முதல் அத்தனை பரிவாரங்களும் களத்தில் இறங்கியுள்ளன. “ஊழலற்ற, வெளிப்படைத் தன்மைகொண்ட ,கொள்கைஅடிப்படையிலான நிர்வாகம்என்று விளம்பரப் படுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி இதுபற்றி என்ன கூறுகிறார்? அவர் எங்கே? அவரது குரல் எங்கே? மேடைக்கு மேடை,பெஹன் அவுர் பாயியோஎன்று அழைத்த அந்த அழைப்பு எங்கே?
 பங்கஜா முண்டே ஊழல்

 இதோ, அவரைக்கண்டுபிடிக்கும்முன் மகாராஷ்ட்ரத்தில் இன்னும் ஒரு ஊழல். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பா.ஜ.க.- சிவசேனா கூட்டணிஆட்சியின் முதல்வர் பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளவர் பங்கஜாமுண்டே. இவர் மறைந்த பா.ஜ.க.தலைவர் கோபிநாத்முண்டேவின் மகள்.' நான் இப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தாலும், மக்கள் என்னை முதல்வராகவே பார்க்கிறார்கள்’ என்று கூறி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியவர் இவர். ஆம். தன்னை “மக்களின் முதல்வராக” நினைத்துக்கொண்டிருப்பவர்.

இவர் செய்துள்ள ஊழல் ஒரே நாளில்  24 அரசு உத்தரவுகளின் மூலம் வெறும் ரூ.206கோடி மட்டுமே!

 மாகாராஷ்ட்ர அரசில் ஒரு இலட்சம்ரூபாய்க்குமேலான எந்தப்பொருள்களை வாங்குவதானாலும் ஈ-டெண்டர் மூலம் மட்டுமே வாங்கவேண்டும். எந்த நேரடி ஒப்பந்தம் மூலமும் வாங்க்கூடாது என்ற விதி நடைமுறையில் உள்ளது. இதை அம்மாநில நிதியமைச்சர் சுதிர்முங்கன்திவார் உறுதிப்படுத்தியுள்ளார். ரூ.ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட எந்தஒரு பொருள்வாங்கலும் முழுமையாக ஈ-டெண்டர் கோரிப்பெற்றே வாங்கவேண்டும்: நேரடி காண்ட்ராக்ட் மூலம் வாங்க்க்கூடாதுஎன்ற விதியை, எல்லா அமைச்சகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். இவை அனைத்தையும் மீறியவர் பங்கஜாமுண்டே! ஏனெனில் அவர்மக்களின் முதல்வர்அல்லவா?
  பங்கஜாமுண்டேவின் ஊழல் எதில் தெரியுமா? குழந்தைகளுக்கு வழங்கும் திண்பண்டங்களில்! தயாரிப்பாளர் யார் என்றே அரசுக்குத் தெரியாத ஒரு அரசுசாரா நிறுவனத்திடம் ரூ.80கோடிக்கு ஆர்டர் வழங்கியுள்ளார். இந்தத்திண்பண்டங்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்களுக்கு வாங்கப்பட்டன. இவை அந்த மையங்களுக்கு வந்தபோது அவற்றில் களிமண்ணும், கற்களும் கலக்கப்பட்டுக் குழந்தைகள் உண்ணமுடியாத நிலையில் இருந்தன. அஹமதாபாத் மாவட்ட ஊராட்சித்தலைவர் மஞ்சுஸ்ரீகுண்ட் ஆதிவாசிக்குழந்தைகளுக்கு வாங்கப்பட்ட திண்பண் டங்கள் களிமண்ணும்,கற்களும் கலந்து கெட்டு உண்ணமுடியாதவையாக இருந்ததை ஒருகடிதம் மூலம் தெரிவித்தார். இந்தக்கடிதம்தான் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி அரசின் ரூ.206 கோடி மாபெரும் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது
.
  குடிநீர், மருந்து, பாடக்குறிப்பேடுககளிலும்
 குழந்தைகளின், குடிநீர்சுத்திகரிப்புசாதனங்கள், முதலுதவிப்பெட்டிமருந்துகள் பாடக் குறிப்பேடுகள், தேசப்படங்கள்  என பங்கஜாமுண்டேவின் ஊழல் பரவி நிற்கிறது. ஐ.சி.டிஎஸ்.ஆணையர் விநிதாசிங்கால் நாசிக்கில் உள்ள ஒரு தரமான நிறுவனத்தில் குடிநீர்சுத்திகரிப்பு சாதனத்தை ஒன்றுரூ.4,500/வீதம் வாங்கிட ஒப்பந்தம் செய்தார். ஆனால், அமைச்சர் பங்கஜாமுண்டேவோ அதைரத்துசெய்துவிட்டு உற்பத்திக்கூடமே இல்லாத எவரெஸ்ட் நிறுவனத்திடம் ஒன்று ரூ.5200/ என விலையை உயர்த்தி நிர்ணயித்து வாங்கியுள்ளார். காசோலைகள் வழங்கியுள்ளார்.
  குழந்தைகளின் வளர்ச்சியை அளவிடும் மெஷின்களை வாங்க ரூ.6 கோடிக்கும். ரூ.8 கோடிக்கும் இரண்டு நிறுவனங்களில் ஒரேவிதமானமெஷின்களை வாங்கக் காசோலைகள் அளிக்கப்பட்டுள்ளன. ரூ.720/மதிப்புள்ள மருத்துவ முதலுதவிப் பெட்டிகளை ரூ.500/என விலைகுறைத்து அதற்கேற்பக் குறைவான மருந்துகளை வழங்குமாறு ஒப்பந்த்தார்ரிடம் பங்கஜாமுண்டே தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கான பாடக்குறிப்பேடுகள், தேசப்படங்கள் அச்சிட்டுவழங்க டெண்டர் ஏதுமின்றி ரூ.5.6கோடி ரூபாய் காசோலையை ஒருதனி நபருக்கு –அச்சகத்துக்கு அல்ல- பங்கஜாமுண்டே அளித்துள்ளார்.

 பாஜ,க, என்ன செய்யும்?

 எதில்தான் ஊழல்செய்வது என்ற விவஸ்தை பா.ஜ.க.விடம்இல்லைபோலும்! இல்லாவிட்டால் ஏழை எளிய குழந்தைகள் உண்ணும் உணவிலும், குடிநீர்சாதனங்க ளிலும், முதலுதவிப்பெட்டிகளிலும், பாடக்குறிப்பேடுகளிலும் ஊழல்செய்யத் துணிவார் களா? இனி பா.ஜ.க. என்ன செய்யும்? அமித்ஷாவின் தலைமையில் பா.ஜ.க. உயர்மட்டத்தலைவர்கள் கூடுவார்கள். அதற்குமுன் அமித்ஷா ஆர்.எஸ்.எஸ். தலமையிடம் கீதாபதேசம் பெற்றுவருவார். பின்னர் அவர்கள் சுஸ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே சிந்தியாவை மட்டுமல்ல: மறைந்த மாபெரும் தலைவர் கோபிநாத் முண்டேவின் வாரிசான பங்கஜாமுண்டேவையும் பாதுகாக்க அணிவகுப்பார்கள்.
  “பாவம்: பெண்கள்மீது ஊழல் குற்றம் சாட்டுவது நியாயம் தானா? பெண்மையை இழிவு படுத்தலாமா?
 பெண்களை முன்நிறுத்தி அவர்கள் பெயரில் ஊழல்திருவிளையாடல்களை நிகழ்த்தி அதன்பயன்களை அனுபவிக்கும் ஒரு தந்திரமாக இருக்குமோ? உலகின் சாதுரியமான பேச்சாளர் என்று பெயரெடுத்த பிரதமர் நரேந்திரமோடியோ மௌனம் சாதிப்பார். விளம்பரங்களில் “ஊழலற்ற அரசுஎன்று மின்னுவார்!


No comments:

Post a Comment