இந்தியாவில் முதலிடத்தில் உள்ள பயங்கரவாத அமைப்பு
ஆர்.எஸ்.எஸ்.
மகாராஷ்ட்ர முன்னாள் காவல்துறைத் தலைவர்
எஸ்.எம்.முஷ்ரிஃப்
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில இதழில்
– தமிழில் செ. நடேசன்
– தமிழில் செ. நடேசன்
முன்னாள் மகாராஷ்ட்ர காவல்துறைத் தலைவர் (ஐ,ஜி)
எஸ்.எம்.முஷ்ரிஃப் 26.11.2015 வியாழன் அன்று கொல்கத்தாவில் மும்பை தீவிரவாத
எதிர்ப்புப் படையின் முன்னாள் தலைவர் கர்கரே
நினைவு நிகழ்வில் பேசியபோது, “ இந்தியாவில் ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகள்
பயன்படுத்தப்பட்ட 13 பயங்கரவாத வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாதிகள் மீது
குற்றச்சாட்டுக் கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன” என்றார்.
ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளைப் பயன்படுத்திய குறைந்தபட்சம் 13 வழக்குகளில்
ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள்மீது குற்றப்பத்திரிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன.
பஜ்ரங்தள் போன்ற அமைப்புக்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இத்தகைய வழக்குகள்
17ஆக உயரும் என முஷ்ரிஃப் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ்.தான் இந்தியாவில் முதலிடத்தில் உள்ள பயங்கரவாத அமைப்பு
என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை என்ற முஷ்ரிஃப், 2007ல் ஹைதராபாத்தில்
மெக்காமஜ்ஜித் குண்டு வெடிப்பு, 2006 மற்றும் 2008ல் மகாராஷ்ட்ராவில் மாலேகான் குண்டுவெடிப்பு, 2007
சம்ஜுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு ஆகியவை இவற்றுள் அடங்கும் என்றார்.
எந்தக்கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ‘காவி
பயங்கரம்’ நடைபெறுகிறது என்பதை முஷ்ரிஃப்
உறுதிப்படுத்தினார். ”ஒரு பயங்கரவாத
அமைப்பு என்றவகையில் ஆர்.எஸ்.எஸ். அரசியல் அதிகாரத்தில் எதுவும் செய்வதற்கில்லை.
அதற்கு எந்தக்கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பது ஒருபொருட்டல்ல. அதில் செயல்படும்
அமைப்புமுறை ‘பிராமணீய அமைப்புமுறை ஆகும். இங்குநான் ‘பிராமணீயம்’ என்று சொல்லும்போது பிராமணர் என்பது அதன்பொருள்
அல்ல. அது ஒருமனப்போக்கு. ஆளுகை செய்யவும், அடக்கி ஒடுக்குவதற்குமான ஒரு
நடத்தைமுறை” என்றார் அவர்.
”அண்மைக்காலங்களில் சகிப்புத்தன்மை இன்மை
வளர்ந்துவருகிறது என்ற பார்வையை முஷ்ரிஃப் ஏற்றுக்கொள்ளவில்லை, சகிப்பினமை
மிகநீண்டகாலமாகவே இருந்து வருகிறது.மிகசும் தீவிரமான பெரிய பல நிகழ்வுகள் முன்பு
நடைபெற்றுள்ளன. இப்போது ஏன் அவைகள் உயர்த்திப்பிடிக்கப்படுகின்றன? இதை என்னால்
புரிந்துகொள்ள முடியவில்லை” என அவர்
கேட்டார்.
“2008
மும்பை தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடைபெற்றபோது, இதில் இந்து அடிப்படைவாதி களின்
பங்குபற்றி விசாரனை செய்த ஹேமந்த் கர்கரேவின் கொலையில் புலனாய்வுத் துறையே
திட்டமிட்டுத் தந்ததற்கான திடுக்கிடும் ஆதாரங்கள் இருந்தன.ஆனால், அவற்றை
உறுதிப்படுத்தும் முயற்சிகள் தோல்வி அடைந்தன. மும்பை தீவிரவாத எதிர்புப் படையின்
தலைவரைக் கொன்றதற்குப் பின்புலத்தில் இருந்த உண்மைகளை நிலைநாட்ட மாபெரும்
மக்களியக்கம் தேவை” என்றார்.
“புலனாய்வுத்துறை இதில் சம்பந்தப்பட்டிருந்தது என்பதற்கான தெளிவான
ஆதாரங்கள் இருந்தன. ஆனால், அவற்றை நிலைநாட்டுவதற்கான எல்லா முயற்சிகளும்
தோல்வியில் முடிந்தன. ‘ஒரு சுதந்திரமான விசாரணை தேவை’ எனக்கோரிய எங்கள் எல்லா முயற்சிகளும்
தோற்கடிக்கப்பட்டன. ஒருமாபெரும் மக்கள் இயக்கம் இல்லாவிட்டால் அதை எப்போதும்
நிலைநாட்டவே முடியாது’ என்னும்
முஷ்ரிஃப் “கர்கரேயைக் கொன்றது யார்?” என்ற தனது
நூலில் தனது உணர்வுபூர்வமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புக்குழுவின் தலைவர் ஹேமந்த் கர்கரேயின் தியாகத்தை
நினைவுகூரும் வகையில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்வில் தேசியவிருதுபெற்ற இசைஅமைப்பாளரும்,
முன்னாள் திருணாமுல் நாடாளுமன்ற
உறுப்பினருமான கபீர் சுமனுடன் கலந்துகொண்ட
மகாராஷ்ட்ராவின்முன்னாள் ஐ.ஜி. முஷ்ரிஃப் ஆர்.எஸ்.எஸ்.-ன் உண்மை சொரூபத்தை
அம்பலப்படுத்தினார்.






