Sunday, 22 November 2015

ஜி.சம்பத்  
மோடி அரசின்சகிப்பின்மையும்
அருண்ஜேட்லியின் சுழல்விளையாட்டும்
தமிழில்: செ. நடேசன்


 இந்தியாவில் சகிப்புத்தன்மையற்ற ஒருசூழல் மூச்சுத்திணற வைக்கிறது என்பதை விளக்கும் வகையில் ஏராளமானவை எழுதப்பட்டுள்ளன. இயான்பெக் ஈவன், சல்மான் ருஷ்டி போன்ற 200 எழுத்தாளர்கள் நரேந்திரமோடியிடம் இந்தப்பிரச்சனையை எழுப்புமாறு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரூனுக்கு எழுதிய ஒருதிறந்த மடல் மூலம் பிரதமர் நரேந்திரமோடியை இந்த ‘சகிப்புத்தன்மை இன்மைஎன்ற நச்சரிப்பு தொடர்ந்து வந்தது.

  முடிவுபெறாத ஒருதொடர்நிகழ்வான இந்தச்‘சகிப்புத்தன்மைஇன்மை’-சுருக்கமாக மோடியின் வார்த்தைகளில் சொன்னால்- ‘துரதிர்ஷ்டவச்மான சம்பவங்கள்-எம்.எம்.கல்புர்கியின், மொஹமது இக்லக்கின், டயோட்டாஷோ ரூம்பணியாளர்களின், யாகூப் ஷேய்க்கின், தொடர்ந்து நிகழ்ந்த காஷ்மீர் லாரி டிரைவர்களின், சன்பேத்தில் எரிக்கப்பட்ட இரண்டு தலித் குழந்தைகளின் கொலைகள் எல்லாமே ‘சகிப்புத்தன்மையற்ற நிகழ்வுபற்றிய ஒருவகையான சிறிய கணக்கெடுப்புத்தான் இது.

  உங்களோடு ஒத்துப்போகாதவர்களை இங்கே கொல்வதற்காக இன்று பல்வேறு உத்திகள் வகுக்கப்பட்டு ‘சகிப்புத்தன்மை இன்மைஒருபுதியமுறையில் அவற்றைச் சாத்தியமாக்குகிறது. இங்கு நம்முன்- எடுத்துக்காட்டாக- ஒட்டுமொத்த சங்பரிவாரங்களின் படையும், வன்முறையில் ஈடுபடும் ஆரவாரக்கூட்டமும் – இவர்களில் பலர் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் – வெறுப்புப்பேச்சை நிகழ்த்தி வறுத்தெடுக்கும் நடைமுறையைக் கையாளுகின்றனர் எனத் தோன்றுகிறது. இன்னொரு உத்தியாக, அரசு நிதியளிக்கும் கலாச்சார நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சிமுறையாக இந்துத்வாவின் ஒற்றைக்கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டவர்களைப் பதவிகளில் நியமிப்பது. அதன்பிறகு பெரும்பான்மையினரின் ‘சகிப்புத்தன்மை இன்மையைஅரசு சகித்துக்கொள்ளும்: தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற செய்தி அனுப்புவது என்பதை மேற்கொண்டுள்ளது.. அதன் விளைவாக அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்வுகள் – புத்தக வெளியீடுகளைத் தடுத்தல், ‘கர் வாபஸி’, ‘லவ் ஜிகாத்போல மேலும் மேலும் பல நிகழ்வுகள் நடந்துவருகின்றன.

அதிகப்படியானசகிப்புத்தன்மையின் வகைகள்

 இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக ‘சகிப்புத்தன்மை இன்மையின் வகைகளாக அல்ல, மிக அதிகபட்சமான சகிப்புத்த்னமையின் வகைகளாக- வெறுப்பூட்டும் பேச்சுக்கள், குறுங்குழு வன்முறைகள், அரசியல்சாசனத்தில் உறுதியளிக்கப்பட்ட சுதந்திரத்தைச் சீர்குலைப்பது ஆகியவை வெளிப்பட்டன. இவ்வாறு சகித்துக்கொள்ள முடியாதவற்றை அரசு சகித்துக் கொள்வது எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், விஞ்ஞானிகளை எந்தெந்த வகையில் முடியுமோ – விருதுகளைத் திருப்பிஅனுப்புவது, திறந்த மடல் எழுதுவது போன்ற-  அந்தந்தவகைகளில் எதிர்க்கத்தூண்டியது.

  துரதிர்ஷ்டவசமாக, இன்றைய இந்தப்பிரச்சனைகள் வாழ்வா? சாவா? என்ற பிரச்சனையாக உண்மையில் இருப்பதிலிருந்து, ‘சகிப்புத்தன்மை இன்மைகளில்ஒன்றாக வர்ணிப்பதும், ஒரு கலாச்சாரப்போர்போலத் தோன்றவைப்பதும் அரசுக்கு எளிதானதாகிறது.

  ஆகவே, முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்த எதிர்ப்பு அலைகளைத் ‘தயாரிக் கப்பட்ட கிளர்ச்சிஎன ஒதுக்கித்தள்ளியது. பின்னர் அந்தக் கிளர்ச்சியாளர்களை ‘காங்கிரஸ் சார்பாளர்கள்என அவப்பெயர் சூட்ட முயன்றது. ஆனால் ‘மூடியின் ஆய்வறிக்கையையோ, அல்லது அமெரிக்காவின் பத்திரிக்கைகளையோ, இந்தியரிசர்வ்பேங்க் ஆளுநரையோ காங்கிரஸ் என்று நிராகரிக்க முடியாது. அருண்ஷோரி தே.ஜ.கூ. அரசை ‘காங்கிரஸ் + பசு என்று அடையா ளப்படுத்துகிறார்.

  அரசின் பிளவுபடுத்தும் சகிப்புத்த்னமைக்கான ஆதாரங்கள் குவிந்தபோது, இவை எல்லா வற்றிலும் பாதிக்கப்பட்டவராகக்காட்ட  மோடியை பா.ஜ.க தனது உறுதியான கடைசிப் புகலிட மாக்கிக்கொண்டது

  அண்மையில் ஊடகங்களில் பெரிதும் எடுத்தாளப்பட்ட ஒருமுகநூல் பதிவில் நிதிஅமைச்சர் அருண்ஜேட்லி  ஒருகூர்மையான எதிர்த்தாக்குதலை, ‘2002 முதல் பிரதமர்தான் தத்துவார்த்த சகிப்புத்தன்மை இன்மையால் மிகவும் பாதிக்கப்பட்டவர்என்ற கருத்தைத் தெரிவித்தார். அது உண்மையின்மீதான ‘சகிப்புத்தன்மை இன்மைஎன்ற சிந்தனையாகவும், வழக்கத்துக்கு மாறான  ‘சகிப்புத்தன்மை இன்மைஎன்ற கருத்தாக்கத்தின் மீதான ‘சுழல்ஆகவும் இருந்தது. இந்தத் தந்திரம் அவரது எதிராளிகளை வாயடைக்க வைத்தது.

  உண்மைத்தன்மையற்ற, தந்திரமான இந்தக்கருத்து, சிலவற்றை ஆய்ந்துபார்க்கவேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது.

  முதலாவதாக, ‘சகிப்புத்தன்மை இனமைஎன்ற வார்த்தையின் அர்த்தத்தை ‘விமர்சனம்என்பதாகத் திரிக்கிறார். ஆனால் அதன் அர்த்தம் அதைவிடப் பெரியது. அது இன்னொருவரின் அரசியல், சமூகசமத்துவம், தனதுகருத்தைவெளியிடும் சுதந்திரம் ஆகியவற்றைத் தடுப்பதாகும்.

  வேறுவகையில் சொல்வதானால், அரசு அல்லது அரசுஇயந்திரத்தின் ஆதரவை யார் அனுபவிக்கிறார்களோ, அவர்கள் கைகளில் உள்ள அதிகாரம், அரசால் ஆளப்படும் சமூகத்தின் மீது சகிப்புத்தன்மை இல்லாமல் செயல்படுத்தப்படும். ‘த்த்துவார்த்த சகிப்பின்மை என்ற அருண்ஜேட்லியின் மனதில் உள்ள கருத்து இந்த விஷயத்தில் அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லை. அல்லது ஒரு ஆண்டானின் தத்துவத்துக்கு ஓர்அடிமையின் ‘சகிப்புத்தன்மை இன்மைஎன்று பொருள்படுகிறது.

  தற்போதைய நிகழ்வில், உண்மையான பிரச்சனை ‘சமூகத்தின் சகிப்புத்தன்மை இன்மைஅல்ல: இந்தச் சமூகம் 18 மாதங்களில் ஒட்டுமொத்தமாக ஒன்றும் மாறிவிடவில்லை.-ஆனால், அரசின் சகிப்புத்தன்மை தான் மாறியிருக்கிறது. அது தத்துவத்தைப் பற்றியதல்ல. ஆனால், சாதாரண விஷயமாக அறியப்படும் ‘சட்டம்-ஒழுங்கு பற்றியது. அதைப் பராமரிக்கவேண்டியது அரசே. ஒரு செயல்படும்அரசில், அரசுசாராத செயல்பாட்டாளர்கள் சட்டத்துக்குப்புறம்பான வன்முறைகளில் ஈடுபடுவதிலிருந்து தப்பிக்க முடியாது இவற்றைச் செய்வதை தந்திரமாகவும் அதிகாரப்பூர்வமாகவும் எப்போது அரசு சகித்துக்கொள்கிறதோ அல்லது உற்சாகப்படுத்துகிறதோ அப்போது இவர்களால் உயிர்க்கொலை முதலான சகிக்கமுடியாத செயல்பாடுகளைச் செய்ய முடியும்.

 இரண்டாவதாக, அருண் ஜேட்லியின் கருத்தில் உள்ளடங்கியிருப்பது –பிரதமர் பாதிக்கப் பட்டிருக்கிறார்எறு சொல்வது, ‘பாதிக்கப்பட்டவராகத் தோன்றுவதற்குரிய செயல்களைச் செய்திருக்கிறார்.என்று தோன்றவைக்கிறது. இந்த நாட்டிலேயே மிகவும் அதிகாரம் வாய்ந்த ஒருபதவியை அவ்வாறுபாதிக்கப்பட்டவர்தான் அடையமுடியும் என்றானால், ஏராளமானவர்கள் அதேபோல் பாதிப்புக்குள்ளாகவே விரும்புவார்கள்.

 மூன்றாவதாக,  அருண் ஜேட்லியின் கூற்றை நாம் மெய்யாகவே ஒத்துக்கொண்டால், ‘மோடி எதிர்கொணட தத்துவார்த்தசகிப்புத்தன்மை இன்மையின் உண்மையான தன்மைஎன்ன? இந்தக் கேள்விக்குப் பதில்கூற நாம் அவரது தத்துவம் என்ன என்பதைக்கூறியாக வேண்டும். மோடியின் உண்மையான தத்துவம் என்பது எப்போதுமே வளர்ச்சி என்பதாகத்தான் இருந்திருக் கிறது வளர்ச்சியைத்தவிர வேறொன்றும் இல்லை. இது உலகறிந்த உண்மை. எழுத்தாளர்கள், திரைப்படத்தயாரிப்பாளர்கள் மற்றும் மோடிக்குவிசாதர மறுத்தஅமெரிக்கா ஆகிய எல்லாருமே மோடியின் வளர்ச்சி சார்ந்த தத்துவத்தை மறுத்தவர்கள் என்று அருண் ஜேட்லி கருதுகிறாரா? நல்லது. ஆம். இல்லை. ஒருவேளை இருக்கலாம்!

  இதுதான் அவர் 2002ஐக்குறிப்பிடுவதற்கான மிகப்பெரியவீச்சாக இருக்கிறதா? ஒருநிலையில் அது ஒருவெறும் எண். மோடி பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஆண்டின் துவக்கம். ஆனால், அடுத்த நிலையில், 2002ல் அவர் என்ன செய்தார்? அல்லது என்ன செய்யவில்லை? எனபதைப்பற்றி மோடியின் புகழ்பாடுபவர்களுக்கு எச்சரிக்கைவிடுக்கும் நாயின் குறைப்பு! இந்த தேசம் 2002ல் இருந்து – அது டீஸ்டா செதல்வாட்டோ அல்லது ரொமிலா தாபரோ – அதிலிருந்து மேலே செல்லவேண்டும் என்று விரும்புகிறது. ஆனால், மோடியின் அமைச்சரவையில் உள்ள, தாராள சிந்தனை கொண்டவர் எனக் கருதப்படும் ஓர் அமைச்சர், 2015ல் நமக்கு 2002ஐ நினைவுபடுத்துகிறார்!

  சகிப்புத்தன்மை இன்மையால் பாதிக்கப்பட்டவர் மோடி என அப்பாவிபோல அருண் ஜேட்லி கூறுவது, எதிர்காலத்தில் இவ்வாறு நடக்கவேண்டும் என்ற சுயவிருப்பத்தை நிறைவேற்று வதில்தான் முடியும் –அந்தஅர்த்தத்தில் அவர்  சொல்லவில்லை என்றாலும்! இது மோடியின் த்த்துவத்துக்கு எதிராளிகளின் சகிப்புத்தனமை இன்மையால் அல்ல: அவரது சொந்தக்கட்சி உறுப்பினர்களும், சங்பரிவாரத்தில் இணைந்துள்ளவர்களும் அவரது அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கப்போகிறார்கள். பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற பலத்தஅடி இதற்கு ஒரு தவறில்லாத எச்சரிக்கை ஆகும். சங்பரிவாரங்களின் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்துத் தனித்தன்மை கொண்ட ஒவ்வொருவரும் பிரதமரின் அலுவலகத்தைக் குற்றம் சாட்டாவிட்டால் தனிமைப்படுத்தப்பட்டு மறைந்துபோக வேண்டியவர்களே.

எதிர்ப்பாளர்களை எதிர்ப்பது  

 மோடிபாதிக்கப்பட்டவர்என்ற அடையாளத்துக்கும்அப்பால், எதிர்ப்பாளர்கள்மீது எதிர்த்தாக்குதல்  தொடுக்க இன்னொரு உத்தியாக, அவர்களை சமுதாயத்தின் மேல்தட்டினராக வகைப்படுத்தி, அவர்கள் டெல்லியில் உயர்பீடங்களிலிருந்தும், செல்வாக்குகளிலிருந்தும் அப்புறப்படுத்தப் பட்டிருப்பதால் ஊளையிடும் நரிகள் என வண்ணம் பூசுகிறார்கள். இது உண்மையல்ல: உண்மையாகவே ஏற்றுக்கொண்டாலும், தே.ஜ.கூ. ஆட்சியில் தைரியமும், பதவியும் பெற்றவர் களின் சுதந்திரச் சிந்தனைப்படை, மெய்யாகவும், மிகவிரைவாகவும் இதே கதிக்கு உள்ளாகப்படுவார்கள்.

  இவற்றினாலெல்லாம் உண்மையில் பாதிப்புக்குள்ளாகியிருப்பவர்கள் பிரதமரின் ஊடக நிர்வாகிகளும், பத்திரிக்கைகளிலுள்ள அவர்களது ஒலிபெருக்கிகளும்தான். அவர்கள் நேரடியாகச் சிலகேள்விகளுக்குப் பதில்கூறச் சிரம்ப்படுகிறார்கள்.நமது பிரதமர் உறுதியான தலைவரா? அல்லது பலவீனமான தலைவரா? அவர் சுயகட்டுப்பாட்டில்தான் இருக்கிறாரா? அல்லது கட்டுப்பாட்டில் இல்லையா? அவர் வளர்ச்சிக்காக இருக்கிறாரா? அல்லது வளர்ச்சியில் நீடிக்கமாட்டாரா?

  அவர் உறுதியான தலைவராக, கட்டுப்பாடு மிக்கவராக, வளர்ச்சிக்காக இருப்பவர் என்றால் அவர் தனது வளர்ச்சித்திட்டங்களைத் தங்களது பிளவிவாதத் திட்டங்களால் சீர்குலைக்கும் சங் பரிவாரங்களுக்கு எதிராக ஒருவெளிப்படையான பொதுநிலையை எடுக்கமுடியும். ஆனால், இது நாள்வரைக்கும் இருந்ததுபோன்றவர் என்றால், அவர்களுக்கு எதிராக வாய்திறக்க மாட்டார். அப்படியானால் அவர் ஒருபலவீனமான தலைவர். அவர் தனது கட்டுப்பாட்டில் உள்ளவரோ அல்லது வளர்ச்சிக்கானவரோ அல்ல. அப்படியானால், அவர் எந்தவகையானவர்? அரிஸ்டாடில் நீண்டகாலத்துக்குமுன் சுட்டிக்காட்டியதுபோல ஒரேநேரத்தில் ஒருவர் “ஏஆகவும், அதே நேரத்தில் “ஏ அல்லாதவராகவும் இருக்கமுடியாது. பிரதமரின் சுழல்மருத்துவர்களுக்கு மிகக் கடுமையான காலம் முன்னே நிற்கிறது.

                                                                                                                                      நன்றி :The Hindu 19.11.2015
      





1 comment:

  1. 23.11.2015 திங்கள்-தீக்கதிரில்
    ஜி.சம்பத்
    மோடி அரசின்சகிப்பின்மையும்
    அருண்ஜேட்லியின் சுழல்விளையாட்டும்
    தமிழில்: செ. நடேசன்...

    ReplyDelete