சோவியத் ஒன்றிய
கம்யூனிஸ்ட் (போ)கட்சியின்
பதினாறாவது மாநாட்டின் மத்தியக்குழுவின்
அரசியல் அறிக்கை
மீதான விவாதங்களுக்கு பதில்.
ஜூலை 2, 1939
தோழர்களே, மத்தியக்குழுவின்
அறிக்கைமீதான விவாதங்களுக்குப்பிறகு,இந்த மாநாட்டில் முன்னாள் எதிர்ப்பணி வலதுசாரி தலைவர்கள்விடுத்த அறிக்கைகள்
தொடர்பாக எல்லாமும் விவாதிக்கப்பட்டபிறகு, எனது முடித்துவைக்கும் குறிப்புக்களில் சிறிதளவே
எனக்கு மிஞ்சியுள்ளது.
எனது அறிக்கையில் நான், இந்த பதினாறாவது மாநாடு,
நமது கட்சியின் வரலாற்றில் இடம்பெற்ற சில மாநாடுகளில் ஒன்று: இதில் நிலையாகஉருப்பெற்ற
வகையில் எந்த எதிர்த்தரப்பும் தனது அரசியலவழிமுறையை கட்சிக்கு சரிநிகராக வைக்க இயல வில்லை அது நீங்கள்
பார்த்ததைப்போல, என்ன நடந்தது என்பதன் துல்லியமான அம்சமாக இருக்கிறது. நமது மாநாட்டில்,
பதினாறாவது கட்சிமாநாட்டில் இங்கே உறுதியாக நிலையாக உருப்பெற்ற எதிர்த்தரப்பு மட்டுமல்ல, ஒரு
சிறிய குழுவும்கூட அல்லது தனிப்பட்ட தோழர்களும்கூட இந்த மேடைக்கு முன்வருவது பொருத்தமானது
என்றும் ,கட்சியின் அரசியல் வழிமுறை தவறானது என்று அறிவிக்கவும் நினைக்கவில்லை.
நமது கட்சியால் பின்பற்றப்பட்ட வழிமுறை மட்டுமே
மிகவும் தெளிவாக சரியான ஒன்று, அதன் சரியானதன்மை மிகவும் தெளிவானதாகவும், மறுக்கமுடியாததாகவும், முன்னாள் வலதுசாரி எதிப்பணியினரால்கூட அவசியாமானது என்று கருதப்பட்டு கட்சிக்கொள்கையின்
மொத்தக்கொள்கையின் சரியானதன்மை தயக்கமின்றி அவர்கள் பேச்சுக்களில் அழுத்தம்தரப்பட்டதாக
மாறியது.
இவை எல்லாவற்றுக்கும்பிறகு, இந்த அறிக்கையில் விள்க்கப்பட்டுள்ள
சரியானதனமை யின் முன்வைப்புக்களை கருத்தூன்றி நீட்டித்துப் பேசுவதற்கான தேவை எதுவுமில்லை.
அங்கே அத்தகைய தேவை இல்லை, ஏனென்றால், அதன் தெளிவான சரியானதன்மை யின் பார்வையில், கட்சியின்
வழிமுறையை இந்த மாநாட்டில் மேலும்பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு இருந்தபோதிலும்,
விவாதங்களுக்கு பதிலளிக்க வேண்டிய எனது உரிமையை நான் தளர்த்திவிடவில்லை. ஏனென்றால்,
தோழர்களால் மாநாட்டின் தலைமைக்குத் தரப்பட்ட சிலகுறிப்புக்களுக்கு விரிவாக பதிலளிப்பதும்.
மேலும் அப்போது முன்னாள் வலது எதிர்ப்பணியின் தலைவர்களின் கூற்றுக்கள் தொடர்பாக சில
வார்த்தைகளைகூறுவதும் மிகையானது என்று நான் கருதவில்லை.
பெரும்பாலான குறிப்புக்கள் இரண்டாம்தர முக்கியத்துவம்
பற்றிய பிரச்சனை களாகும்: இந்த அறிக்கைகளில் குதிரை வளர்ப்பு பற்றி ஏன் தெரிவிக்கப்படவில்லை:
மேலும் இது விவாதங்களுக்கான பதிலில் தொடப்பட வேண்டாமா? (சிரிப்புக்கள்) இந்த அறிக்கையில்
வீடு கட்டுவது பற்றி ஏன் குறிப்பிடவில்லை: மேலும் விவாதங்களுக்கான பதிலில் ஏதேனும்
கொஞ்சம் சொல்லப்படவேண்டாமா? இந்த அறிக்கைகள் விவசாயத்தை மின்மயமாக்குவதைப்பற்றி எதையும்
சொல்லவில்லையே, ஏன்?ஏதேனும் கொஞ்சம் விவாதங்களுக்கான
பதிலில் சொல்லப்படவேண்டாமா? மேலும் பலவும்இதே வகையில் உள்ளன.
தோழர்கள் அனைவருக்கும் எனது பதில் கட்டாயம் தரப்படவேண்டும்:
ஏனென்றால், நமது தேசியப்பொருளாதாரத்தின் எல்லாப்பிரச்சனைகளையும் எனது அறிக்கையில் நான்
தொடவில்லை. நான் தொடக்கூடாது என்பதால் அல்ல: அதற்கான உரிமை இல்லை என்பதால். தோழர்கள்
குய்பிஷேவ் மற்றும் யாகோவ்லேவ் தொழில்துறை மற்றும் விவசாயத்துறைகளின் மெய்யான பிரச்சனைகளை
அறிக்கைகளாக உங்களுக்குத் தர உள்ளபோது அந்த செயற்களத்தை ஆக்கிரமிக்க எனக்கு உரிமை இல்லை.
உண்மையில் எல்லாப்பிரச்சனைகளும் மத்தியக்குழுவின் அறிக்கையில் கையாளப்பட்டுவிட்டால்,
தொழில்துறை, விவசாயத்துறை முதலானவற்றின் அறிவிப்பாளர்கள் தங்கள் அறிக்கை களில் எதைக்கூறுவார்கள்?
( குரல்கள்: மிகவும் சரி!)
குறிப்பாக, விவசாயத்துறையை மின்மயமாக்குதல் என்ற
குறிப்பு தொடர்பாக, அதைச்செய்பவர் பல்வேறு கருத்துக்களில் தவறு செய்கிறார் என்று நான்
கட்டாயம் கூறியாக வேண்டும். ’நாங்கள் ஏற்கனவே விவசாயத்துறையை மின்மயமாக்குவதை ’நேர்மையாக
எதிர்கொண்டோம்’ என்றும், விவசாயத்துறையின் மக்கள் கமிசாரகம் (அமைச்சகம்) இந்த விஷயத்தில்
முன்னேற்றத்தை தடைப்படுத்திவிட்டது என்றும், இந்த விஷயம்பற்றி லெனின் வேறுவிதமாக சிந்தித்தார்
என்றும்’ பலவற்றை அவர் வலியுறுத் துவார். இவையனைத்தும் உண்மை அல்ல தோழர்களே. ’நாங்கள் ஏற்கனவே விவசாயத்துறையை மின்மயமாக்குவதை
’நேர்மையாக எதிர்கொண்டோம்’ என்று சொல்லப்படக்கூடாது. ’நாங்கள் ஏற்கனவே விவசாயத்துறையை
மின்மயமாக்குவதை உண்மையில்’நேர்மையாக எதிர்கொண்டிருந்தால், பத்து முதல் பதினைந்து மாவட்டங்
களில் விவசாய உற்பத்தி மின்மயமாக்கப்பட்டதை ஏற்கனவே பெற்றிருப்போம். ஆனால், உங்களுக்கு
நன்றாகத் தெரியும், இதுவரை அத்தகைய எதையும் நாம் பெற்றிருக்கவில்லை. நமதுநாட்டில் விவசாயத்துறையை
மின்மயமாக்குவது இந்த நேரத்தில் பரிசோதனை நிலையில் உள்ளது என்று எல்லாரும் கூறக்கூடும்.
பரிசோதனை களை ஊக்கப்படுத்துவது எவ்வாறு என்றுதான் இந்த விஷயத்தை லெனின் கருதினார்.
டிராக்டர் காலாவதியாகிவிட்டது, டிராக்டரிலிருந்து விவசாயத்தை மின்மயமாக்கு வதற்கான
நேரம் வந்துவிட்டது என்று சில தோழர்கள் நம்பினார்கள்.
அது உண்மையில் ஒருவேளை விச்சித்திரமான கருத்தாக இருக்கும்” அத்தகைய தோழர்கள்.ஒன்று
அல்லது இரண்டு குப்பி மதுவை எடுத்துக்கொண்டிருக்கக்கூடும்.மேலும் அதைத்தான் விவசாயத் துறையின் மக்கள் கமிசாரகம் அவர்களுடன் துல்லியமாக
செய்திருக்ககூடும். எனினும், விவசாயத் துறையின்
மக்கள் கமிசாரகத்துடனான குறிப்பு எழுதியவரின் அதிருப்தி நியாயபடுத்தப்பட்டுவிட்டதாக
கருதிவிட முடியாது.
குறிப்புக்களின் இரண்டாம் தொகுதி, தேசிய பிரச்சனைகல்
தொடர்பானவை. அவற்றில் ஒன்று– பதினாறாவது மாநாட்டில் எனது அறிக்கையில் உள்ள தேசியமொழிகளைக்
கையாள்வது பற்றியதை, கிழக்கு மக்கள் பலகலைக்கழகத்தில் 1925ன் எந்து பேச்சோடு ஒப்பிடுவதும்,
அதைப்புரிந்து கொள்வதற்குத் தேவையான குறிப்பிட்ட தெளிவு இல்லாமல் இருப்பதாகவும் காண்பது
– எனது கருத்தில் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்து கிறது அந்தக் குறிப்பு கூறுகிறது: அந்த நேரத்தில் சோசலிச
காலகட்டத்தில் (காவுட்ஸ்கியின்) தேசிய மொழிகள் இறந்துபோவதையும்ம் மற்றும் ஒரு பொதுமொழி
யாக அமைவதையும் நீங்கள் ஆட்சேபித்தீர்கள்,இப்போது
நீங்கள் பதினாறாம் மாநாட்டு அறிக்கையில் தேசிய கலாச்சாரங்கலளும், தேசிய மொழிகளும் ஒரு
பொதுகலாசாரம் மற்றும் ஒரு பொதுமொழியாக இணையும்
(சோசலிசத்தின் வெற்றி உலக அளவிலானதாகும்போது) என்பதில் கம்யூனிஸ்ட்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்
என்று குறிப்பிட்டீர்கள். இங்கே இதில் தெளிவுக்குறைபாடு இருக்கிறதல்லவா?
இங்கே எந்தவொரு தெளிவுக்குறைபாடோ அல்லது மிகச்சிறிய
முரண்பாடோ இல்லை என்று நான் கருதுகிறேன்; கடந்த நூற்றாண்டின் மத்தியில்பாட்டாளி வர்க்கத்தின்
புரட்சி யின் வெற்றி, ஐக்கிய ஆஸ்ட்ரோ-ஜெர்மன் அரசில் ஒரு ஜெர்மன் தேசியமொழியுடன் ,தேசங்களை
ஒரே ஜெர்மன் தேசமாக ஒன்றிணைக்கவும், செக்கோஸ்லேவியர்களை
ஜெர்மனியமயமாக்கவும் கடமைப்பட்டிருந்தது ,என்ற அடிப்படையில் காவுட்ஸ்கியின் குறுகிய
தேசியப்பற்றுள்ள கோட்பாட்டை நான் ஆட்சேபித்தேன்:
இந்தக் கோட்பாடு மார்க்சிசத்துக்கு எதிரானது, லெனினிசத்துக்கு எதிரானது
மற்றும் அது மறுத்துரைக் கும்வகையில் சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தில் சோசலிசத்தின்
வெற்றிக்குப் பிறகான நமது வாழ்வின் அம்சங்களிலிருந்து மேற்கோள் காட்டியதால் நான் ஆட்சேபித்தேன்.
இந்த பதினாறாவது கட்சிமாநாட்டின் எனது அறிக்கையில்
காணப்படுவது போல் நான் இன்னும் அந்தக்கோட்பாட்டை ஆட்சேபிக்கிறேன், எல்லா தேசங்களையும்
ஒருங்கிணைக்கும் இந்தக்கோட்பாடு, சொல்லப்போனால், சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தை மகாரஷ்ய தேசம் என்று மகாரஷ்யமொழி என்ற ஒருபொது மொழியோடு
இணைப்பது ஒரு குறுகிய தேசபற்றுகொண்ட, லெனினிசத்
துக்கு எதிரான கோட்பாடு: தேசிய வேறுபாடுகள் அண்மைய எதிர்காலத்தில் மறைந்துவிடாது,:
அவை உலக அளவிலான பாட்டாளி வர்க்க வெற்றிக்குப் பிறகும்கூட நீண்டகாலம் நீடித்திருக்கக்கூடியது
என்ற லெனினிசத்தின் அடிப்படைக் கோட்பாட்டுடன் முரண்படுகிறது என்பதால்
நான் ஆட்சேபிக்கிறேன்.
தேசிய கலாச்சாரங்கள் மற்றும் தேசியமொழிகளின் அதிகமான
உள்ளர்ந்த வளங்களுக்காக லெனினியப்பார்வைகளை பின்பற்றிவந்தேன், தொடர்ந்தும் பின்பற்று
வேன்: அந்தப்பார்வை, ’உலகளாவியஅளவில் சோசலிசம் வெற்றிபெறும் காலத்தில், சோசலிசம் உறுதிப்படுத்தபடும்போது, சோசலிசம் ஒரு வாழ்க்கைமுறையாக உருவா கும்போது தேசியமொழிகள்
தவிர்க்கமுடியாதவிதத்தில் ஒர் பொதுமொழியாக இணையும்: ஒருவேளை அந்தப்பொதுமொழி மகாரஷ்யன்மொழியாகவோ,
ஜெர்மன் மொழியாகவோ இல்லாமலிருக்கலாம்: ஆனால் அது ஏதோ புதிய ஒன்றாக இருக்கும்’ என்கிறது. இதன்மீதும்கூட ஓர் உறுதியான அறிவிப்பை
பதினாறாவது கட்சி மாநாட்டில் எனது அறிக்கையில் செய்திருந்தேன்.
அதன்பிறகு இங்கே தெளிவுகுறைபாடு எங்கே இருக்கிறது?
இதை மேலும் விளக்கமாக் எடுத்துரைப்பதற்கான தேவை உண்மையில் எங்கிருக்கிறது?,
இந்தக்குறிப்பை எழுதியவர்கள் குறைந்தபட்சம் இரண்டு விஷயங்களில்
சந்தேகத்துக்கு இடமில்லாமல், முற்றிலும் தெலிவாக இல்லை.
முதலாவதாகவும், முக்கியமானதாகவும், சோவியத் சோசலிச
குடியரசு ஒன்றியத்தில் நாம் ஏற்கனவே சோசலிச காலகட்டத்துக்குள் நுழைந்துவிட்டோம், என்ற
அம்சத்தில் அவர்கள் தெளிவாக இல்லை. அதற்குமேலும், இந்தக் காலகட்டத்துக்குள் நுழைந்து
விட்டோம் என்ற அம்சத்தைப் பொருட்படுத்தாமல், தேசங்கள் மறைந்துபோகாதது மட்டுமல்ல, அதற்கு
மாறாக வளர்கின்றன: செழிப்படைகின்றன. உண்மையான அர்த்தத்தில் ஏற்கனவே நாம் சோசலிச காலகட்டத்துக்குள்
நுழைந்துவிட்டோமா? நமது காலகட்டம் வழக்கமாக முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்கு
மாறிவரும் காலகட்டம் என்று அழைக்கப்படுகிறது. லெனின் தமது புகழ்பெற்ற ‘இடதுசாரி கம்யூனிசம்
ஓர் இளம்பருவக்கோளாறும், குட்டிமுதலாளித்துவ மனோபாவமும்’ என்ற கட்டுரையில் இந்தக் காலகட்டத்தைமுதன்முதலாக அதன் ஐந்து பொருளாதாரவகை களுடன் 1918லிருந்து ‘மாறிவரும்
காலகட்டம்’ என்று அழைத்தார். அது ஒரு மாறிவரும் காலகட்டம் என்று அழைக்கப்பட்டது. இன்று,
1930ல், இந்த வடிவங்களில் சில வழக்கிழந்தவைகளாகி ஏற்கனவே மரைந்துபோகும் பாதையில் உள்ளன:
அதே நேரத்தில் அவற்றில் ஒன்று, புதிய வடைவிலான பொருளாதாரம் என்ற பெயரில் தொழில்துறை,
வேளாண்மைத்துறை முனைகளில் வளர்கிறது: முன்னெப்போதுமில் லாத வேகத்தில் முன்னேறுகிறது.
இந்த இறண்டு மாறிவரும் காலகட்டங்களும் ஒத்தவை, ஒன்றிலிருந்து ஒன்று தீவிர மாற்றங்கள்
கொண்டவை அல்ல என்று கூறமுடியுமா? வெளிப்படையாகவே
இல்லை.
1918ல் தேசிய பொருளாதார முனையில் நாம் எதைப்பெற்றிருந்தோம்?
ஒரு அழிக்கப்பட்ட தொழில்துறையையும், வெண்சுருட்டு பற்றவைப்பான்களையும் தான். பெருமளவிலான
கூட்டுப்பண்ணைகளையோ அல்லது அரசுப்பண்ணைகளையோ அல்ல. நகரங்களில் ‘புதிய’ முதலாளிகள்,மற்றும் கிராமப்புறங்களில்
(‘குலாக்குகள்’) நிலப்பிரபுக்கள் வளர்ச்சியையும்
தான்.
இன்று நாம் எதைப் பெற்றிருக்கிறோம்? சோசலிச தொழில்துறை,மீண்டும்
பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட்டதையும், மறுகட்டமைப்புக்குள்ளாவதையும், சோவியத் சோசலிச
குடியரசு ஒன்றியத்தில் ஒட்டுமொத்த விதைப்புப்பகுதிகளில் இளவேனில் விதைப்புப் பிரிவில்
40% க்கும் அதிகமான அளவில் ஒரு விரிவடைந்த அமைப்பான அரசுப்பண்ணைகளையும், கூட்டுப்பண்ணைகளையும்:
நகரங்களில் மட்டுமே இறந்துகொண்டிருக்கும் ‘புதிய’முதலாளிகளையும், கிராமப்புறங்களில்
மட்டுமே இறந்துகொண்டிருக்கும் நிலப்பிரபுக்கள் வர்க்கத்தையும்.
முன்னது ஒரு மாறிவரும் காலகட்டமாக இருந்தது.அதுபோலவே
பின்னதும் இருந்தது. இருந்தபோதிலும், அவை இரண்டும் சொர்க்கத்தையும், பூமியையும்போல
எவ்வளவு தூரத்தில் இருக்கின்றனவோ அவ்வாறு இருந்தன. அவ்வாறு இருந்தபோதிலும் நாம் முக்கியமான
முதலாளித்துவ வர்க்கமான நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை ஒழித்துவிடும் விளிம்பில் இருந்தோம்
என்பதை எவர் ஒருவராலும் மறுக்கமுடியாது. நாம் ஏற்கனவே பழைய உணர்வில் மாறிவரும் காலகட்டத்திலிருந்து,
வெளிப்பட்டு, நேரடியாக ,எல்லாவற்றையும் துடைத்தெறிந்து மாற்றியமைக்கும் சோசலிசக் கட்டுமான
காலகட்டத்துக்கு அனைத்து முனைகளிலும் தெளிவாக நுழைந்துவிட்டோம். நாம் தெளிவாக சோசலிச
காலகட்டத்துக்குள் நுழைந்துவிட்டோம், ஏனென்றால், ஒட்டு மொத்த தேசிய பொருளாதாரத்தின்
கடிவாளங்களையும்சோசலிச அரங்கம் கட்டுப் படுத்துகிறது. சோசலிச சமுதாயத்தை இன்னும் கட்டிமுடிப்பதில்
வெகுதூரத்தில் இருந்தாலும் வர்க்க வேறுபாடுகளை ஒழித்துக்கொண்டிருக்கிறோம். இருந்தபோதிலும்,
தேசிய மொழிகள் இறந்துபோகாததோ அல்லது ஒருபொதுமொழியில் இணையாததோ மட்டுமல்ல:ஆனால்,அதற்கு
மாறாக தேசிய கலாச்சாரங்களும், தேசிய மொழிகளும் வளர்கின்றன: செழிப்படைகின்றன்.தேசிய
மொழிகள் இறந்துபோவதும், ஒருபொது மொழிக்குள் அவை இணைந்துவிடுவதும், ,அனைத்தையும் மாற்றியமைக்கும்
சோசலிச கட்டுமான காலகட்டத்தில்ஒற்றை அரசின்சட்டகத்துக்குள் ஒரு நாட்டின் சோசலிச காலகட்டத்தில்
நடக்கும் என்ற கோட்பாடு சரியற்றது, மார்க்சிசத்துக்கு
எதிரான, லெனினிசத்துக்கு எதிரான கோட்பாடு என்பது தெளிவாகிறது அல்லவா?
இரண்டாவதாக, இந்தக்குறிப்பை எழுதியவர்கள், தேசியமொழிகள்
இறந்துபோவதும், அவை ஒருபொதுமொழிக்குள் இணைவதும் ஒரு நாட்டுக்குள்மட்டுமான பிரச்சனை
அல்ல என்பதிலும், ஒரு நாட்டில் சோசலிசத்தின் வெற்றியின் பிரச்சனையோ, அல்ல, ஆனால், அது
உலக அளவில் சோசலிசத்தின் வெற்றி பற்றிய பிரச்சனை என்ற அம்சத்திலும்அவர்கள் தெளிவாக
இல்லை.ஒரு நாட்டில் சோசலிசத்தின் வெற்றி, உலக அலவிலான சோசலிசத்தின் வெற்றியோடு கட்டாயம்
குழப்பிக்கொள்ளக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ள வரகல் தவறிவிட்டார்கள். பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம் உலக அளவில் வெற்றிபெற்றபிறகும்கூட,
தேசிய வேறுபாடுகள் மிக நீண்டகாலத்துக்கு இருக்கும்
என்று சொல்வதற்கு லெனினிடம் நல்லபல காரணங்கள் இருந்தன.
இதற்கு அப்பாலும், சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தின்
பல தேசங்களில் அவற்றை பாதிக்கும் பல சந்தர்ப்பங்களும் உள்ளன என்பதை நாம் கவனத்தில்
எடுத்துக்கொள்ளவேண்டும். சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தின் ஒருபகுதியாக அமைந்துள்ள
உக்ரெய்ன் இங்கே உள்ளது. ஆனால், அங்கே மற்ற அர்சுகளின் பகுதியாக அமைந்துள்ள இன்னொரு
உக்ரெய்னும் உள்ளது. சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள
பைலோரஷ்யாஇங்கே உள்ளது. அங்கே மற்ற அரசுகளின் பகுதியாக அமைந்துள்ள இன்னொரு பைலோரஷ்யாவும் உள்ளது. உக்ரெய்ன் மற்றும் பைலோரஷ்ய மொழிகளின் பிரச்சனைக்கு
இந்த தனித்தன்மை வாய்ந்த சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தீர்வு க்ண்டு
விட முடியும் என்று நீங்கள் கருதிகிறீர்களா?
அதன்பிறகு
சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தின் தெற்கு எல்லையில் அஜர்பைஜானிலிருந்து
காகஸ்தான், மற்றும் பர்யாதி – மங்கோலியா வரை அமைந் துள்ள நாடுகளை எடுத்துக்கொள்ளுங்கள்,
அவை அனைத்தும் உக்ரெய்ன் மற்றும் பைலோரஷ்யா போல அதே சூழ்நிலைகளில் உள்ளன. இயல்பாகவே, இங்கும்கூட நாம் இந்தநாடுகளின் வளர்ச்சிக்கு இந்த தனித்தன்மைவாய்ந்த சூழ்நிலைகளைக் கணக்கில்
எடுத்துக்கொள்ளவேண்டும்
இந்த மற்றும் இவைபோன்ற தேசிய கலாச்சாரம் மற்றும்
தேசிய மொழிகளுடன் இணைந்துள்ள எல்லாப்பிரச்சனைகளும். ஒற்றை அரசு என்ற சட்டகத்துக்குள்,
சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தின் சட்டகத்துக்குள் தீர்க்கப்பட முடியாதவை என்பது
வெளிப்படையானது அல்லவா?
அது, தோழர்களே. பொதுவாக தேசியபிரச்சனைகள் தொடர்பான
விஷயங்களும், , குறிப்பாக தேசியபிரச்சனைகள் பற்றிய மேலே குறிப்பிடப்பட்ட குறிப்புக்களும்,
எவ்வாறு உள்ளன என்பதை காட்டுகின்றன.
வலது எதிர்ப்பணி தலைவர்களின் கூற்றுக்களுக்குக்
கடந்துசெல்ல என்னை அனுமதி யுங்கள்
இந்த மாநாடு வலது எதிர்ப்பணி தலைவர்களிடமிருந்து
எதைக்கோருகிறது? ஒருவேளை கழிவிறக்கமா? அல்லது சுயவிமர்சனமா? கண்டனத்தையா? உண்மையில்
இல்லை! நமது கட்சி, நமது கட்சி மாநாடு நமது
கட்சி உறுப்பினர்களை, அவர்கள் அவமானப்படும் எந்தஒன்றையும் செய்யவேண்டிய அளவுக்கு ஒருபோதும்
செல்லாது. இந்த மாநாடு வலது எதிர்ப்பணியின்
முன்னாள் தலைவர்களிடம் மூன்று விஷயங்களைக் கோருகிறது:
முதலாவதாக, கட்சியின் அரசியல்வழிமுறைக்கும், அவர்கள்
முன்னெடுத்துச்செல்லும் வழிமுறைக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி உள்ளதையும், அவர்கள் உயர்த்திப் பிடித்த வழிமுறை சோசலிசத்தின் வெற்றிக் குறிஇலக்குக்கு வழிகாட்டாது,
ஆனால் முதலாளித்துவத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் என்பதையும் உணரவேண்டும். (குரல்கள்:
”முற்றிலும் சரி!”
இரண்டாவதாக, அந்த வழிமுறையை அவர்கள் லெனினிசத்துக்கு
எதிரான வழிமுறை என்று அடையாளப்படுத்த வேண்டும்: அதிலிருந்து தாங்களாகவே வெளிப்படையாகவும்,
பெருந்தன்மையாகவும் துண்டித்துகொள்ளவேண்டும். (குரல்கள்: ”முற்றிலும் சரி!”)
மூன்றவதாக, அவர்கள் நம்மோடு நடைபோட அணிவகுக்கவேண்டும்;
மேலும் நம்மோடு ஒன்றுசேர்ந்து அனைத்து வலது திரிபுகளுக்கும் எதிராக தீர்மானகரமான போராட்டங்களை
தொடுக்கவேண்டும். (குரல்கள்: ”முற்றிலும் சரி!” இடிமுழக்க கரவொலிகள்)
இந்தமாநாடு
வலதுஎதிர்ப்பணியின் முன்னாள் தலைவர்களிடம் எதைக் கோருகிறதோ அது, இதுதான்
இந்தக்கோரிக்கைகளில், போல்ஷ்விக்குகளாகவே தொடர்ந்து
இருக்கவேண்டும் என்று விரும்புகிற மக்களான அவர்களை அவமானப்படுத்தும் ஏதாவது இருக்கிறதா?
வெளிப்படையாகவே அங்கே அவமானப்படுத்துகிற அல்லது
அவமானப்படுத்தப் போகும் எந்த ஒன்றும் இல்லை. ஒவ்வொரு போல்ஷ்விக்கும், ஒவ்வொரு புரட்சியாளனும்,
ஒவ்வொரு சுயமரியதையுள்ள கட்சி உறுப்பினரும் தெளிவான மற்றும் பிரச்சனையற்ற உண்மைகளை
வெளிப்படையாகவும், பெருந்தன்மையோடும் அவர் ஒப்புக்கொள்ளும் போது மட்டுமே, கட்சியின்
கண்களில் அவர் உயர்ந்து நிற்பார்: பயனடைவார் என்பதை கட்டாயம் உணர்வார்.
மக்கள் தன்னை கோபி பாலைவனத்துக்கு அனுப்பி, வெட்டுக்கிளிகளையும்,
காட்டுத் தேனீக்களையும் சாப்பிடவைக்க விரும்புகிறார்கள் என்றடாம்ஸ்கியின் பேச்சைப்பற்றி அது நாட்டுப்புறவாசிகளின் பன்முக அரங்கின் தட்டை
நகைச்சுவைகளுக்கு இணையானது என்று நான் ஏன் நினைக்கிஏற்ன் என்றால், அது புரட்சிகரசுய
மரியாதை என்ற பிரச்சனையுடன் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. (சிரிப்புக்கள், கைதட்டல்கள்)
இந்த மாநாடு மீண்டும் ஒருமுறை இவ்வாறு முன்னாள்
வலது எதிர்ப்பணி தலைவர்களிடம் ஏன் கோருகிறது? என்று கேட்கப்படலாம்.
நவம்பர் 1928ல் மத்தியக்குழுவின் கூட்டுக்கூட்டத்தில்
முன்பு ஒருமுறை அவர்களிடம் முன்வைக்கப்பட்டன என்பது உண்மை அல்லவா? அந்த நேரத்தில் அவர்கள்,இந்த
முன்னாள் வலது எதிர்ப்பணி தலைவர்கள் இந்தக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண் டார்கள் என்பதும்
தங்களது சொந்த வழிமுறைகளைஒப்புக்கொள்ளவில்லை என்பதும், அதன் தவறான குணாம்சத்தை ஒப்புக்கொண்டார்கல் என்பதும்,கட்சியின்
அரசியல் வழிமுறையின் சரியான தன்மையை அங்கீகரித்தார்கள், என்பதும், வலது திரிபை எதிர்த்து
கட்சியுடன் ஒன்றாக இணைந்து போராட ஒப்புக்கொண்டார்கள்
என்பதும் உண்மை அல்லவா? ஆம்.எல்லாமும் அவ்வாறுதான் இருந்தன. அதன்பிறகு நடந்தது என்ன?
அவர்கள்ஏழு மாதங்களுக்கு முன் ஏற்றுக்கொண்ட தங்கள் உறுதிமொழியைக் காப்பாற்றவில்லை,
அவர்கள் அதை நிறைவேற்றவில்லை: என்பதுதான் பிரச்சனை
.(குரல்கள்:”முற்றிலும் சரி”) உக்லனோவ் தனது பேச்சில் மத்தியக்குழுவின் நவம்பர் கூட்டுக்கூட்டத்தில்
அவர்கள் கொடுத்த சபதத்தை அவர்கள் நிறைவேற்றவில்லை எனூ கூறியது முற்றிலும் சரியானது
அதுதான் அந்த மாவட்டம் அளித்துள்ள ஆதாரம், அவற்றை
தற்போதைய இந்த மாநாட்டில் அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
அதனால்தான் இந்தமாநாடு மீண்டும் ஒருமுறை அந்தக்கோரிக்கைகளை
அவர்களிடம் முன்வைக்கிறது.
ரைக்கோவ், டாம்ஸ்கி, உக்லனோவ்ஆகிய மூவரும் இந்தமாநாடு அவநம்பிக்கை யோடு அவர்களை நடத்துகிறது
என்று புகார்செய்தார்கள். ஆனால், அது யாருடைய தவறு? இது அவர்களுடைய சொந்தத்தவறுகள்.யார்
ஒருவர் தனது சபதத்தை நிறைவேற்றவில்லையோ அவர் நம்பப்படவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.
முன்னாள் வலது எதிர்ப்பணி தலைவர்கள் தங்கள் உறுதிமொழிகளை
நிறைவேற்றுவதற்கான, புதிய பக்கங்களைத் திருப்புவதற்கான வாய்ப்புக்கள், சந்தர்ப்பங்கள
எவற்றையேனும் பெற்றிருந்தார்களா? ஆம். பெற்றிருந்தார்கள். கடந்த ஏழு மாதங்களாக இந்த
வாய்ப்புக்கள், சந்த்ர்ப்பங்களிலிருந்து என்ன அனுகூலங்களைப் பெற்றார்கள்? எதுவுமில்லை.
அண்மையில் ரைக்கோவ் உரால்-ல்5 நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டார். வெளிப்படையாகவும்,
அதைத்தொடர்ந்து தனது தவறுகளை சரிப்படுத்திக்கொள்வதற்கான அற்புதமான வாய்ப்பை அவர் பெற்றிருந்தார்.
ஆனால், என்ன நடந்தது? தீர்மானகரமாகவும் தனது ஊசலாட்டங்களை ஒத்துக்கொள்வதற்கு மாறாக,
அவர் தந்திரங்களையும், சாமர்த்தியமாக திசைதிருப்புதல்களையும் செய்தார்.இயல்பாகவே உரால்
மாநாடு அதை ஏற்க மறுத்தது: அவரை கண்டனம் செய்தது.
இப்போது உரால் மாநாட்டிலும், பதினாறாவது மாநாட்டிலும்
ரைக்கோவ் பேசியதை ஒப்பிட்டுப்பாருங்கள்.அவற்றுக்கிடையே ஏராளமான பொய்கள் உள்ளன. அங்கே
அவர் மாநாட்டை எதிர்த்துப்போராடுவதில் தந்திரங்களையும்
சாமர்த்தியமான திசை திருப்பல்களையும் செய்தார். இங்கே அவர் தனது தவறுகளை வெளிப்படையாகவும்
திறந்த மனதோடும் ஒப்புக்கொள்வதாகவும், வலது
எதிர்ப்பணியிலிருந்து முறித்துக் கொள்வதாகவும், திரிபுகளுக்கு எதிரான கட்சியின் போராட்டங்களை
ஆதரிப்பதாகவும் உறுதியளிக்கிறார். இந்த மாற்றத்தை எப்போது, எவ்வாறு என்று விளக்கமுடியும்?
அது, முன்னாள் வலது எதிர்ப்பணி தலைவர் களுக்கு கட்சியில் எழுந்த உறுதிப்பாடற்ற சூழ்நிலைகளால்வெளிப்படையாக
விளக்கப்படவேண்டும். மாநாடு இந்த அழுத்தமான கருத்தைப் பெற்றிருந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை:’ நீங்கள் ஒரு திருப்பாணியை அவர்கள்மீது வைக்காவிட்டால்,
இந்த ஆட்களிடமிருந்து எதையும் பெற மாட்டீர்கள். (பொதுவான சிரிப்புக்களும், நீண்ட கைதட்டல்களும்)
மத்தியக்குழுவின் கடந்த நவம்பர் கூட்டுக்கூட்டத்தில்
அவர் உறுதியளித்தவற்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புக்களை உக்லனோவ் பெற்றிருந்தாரா? ஆம்,
அவர் பெற்றிருந்தார். அண்மையில் மாஸ்கோ கட்சிசாரா மின்வேலைகள் கூட்டத்தில் அவர் பேசியதை
நான் மனதில் கொண்டுள்ளேன்ஆனால், என்ன நடந்தது? ஒரு போல்ஷ்விக்கு பொருந்துவகையில் பேசுவதற்குப்
பதிலாக, அவர் கட்சியின் அரசியல்பாதையில் தவறு காண முயன்றார். இதற்காக அவர் பொருத்தமான
முறையில் அந்தவேலைகளின் கட்சி அலகால் கண்டிக்கப்பட்டார்.
இப்போது பிராவ்தாவில் அச்சிடப்பட்டுள்ள அவரது
அறிக்கையோடு அந்தப்பேச்சை ஒப்பிட்டுப்பாருங்கள். அவற்றுக்கிடையே ஏராளமான பொய்கள் உள்ளன.
இந்த மாற்றத்தை எப்போது, எவ்வாறு என்று விளக்கமுடியும்? அது, முன்னாள் வலது எதிர்ப்பணி தலைவர்களுக்கு கட்சியில்
எழுந்த உறுதிப்பாடற்ற சூழ்நிலைகளால் வெளிப்படையாக விளக்கப்படவேண்டும். மாநாடு இந்த
அழுத்தமான கருத்தைப் பெற்றிருந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை:’ நீங்கள் ஒரு திருப்பாணியை அவர்கள்மீது வைக்காவிட்டால்,
இந்த ஆட்களிடமிருந்து எதையும் பெற மாட்டீர்கள். (பொதுவான சிரிப்புக்களும், நீண்ட கைதட்டல்களும்)
அல்லது டாம்ஸ்கியை ஓர் எடுத்துக்காட்டாக பாருங்கள்.
அணமையில் அவர் டிஃப்லிஸில் அனைத்து காகஸியர்களின்
மாநாட்டில்^ கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து தனது தவறுகளை சரிப்படுத்திக்கொள்வதற்கான
அற்புதமான வாய்ப்பை அவர் பெற்றிருந்தார். ஆனால், என்ன நடந்தது? அவர் தனது பேச்சில்
அரசுப்பண்ணைகளை, கூட்டுப்பண்ணைகளை, கூட்டுறவுகளை, கலாச்சாரப்புரட்சியை இன்னும் இதுபோன்ற
எல்லாவகையான பிரச்சனைகளையும் கயாண்டார்: ஆனால், முதன்மையான பிரச்சனையான தொழிற்சங்கங்களின் அனைத்து சங்க மத்தியக் குழுவில்
அவரது சந்தர்ப்பவாத வேலைகளைப் பற்றி ஒருவார்த்தைகூட பேசவில்லை. மேலும், அதுதான் கட்சிக்கு
அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவதாகவும் சொல்லப் பட்டது! இலட்சக்கணக்கான கண்கள் நம்
ஒவ்வொருவரையும் கண்காணித்துக் கொண்டிருக்கித்து என்பதை உணராமல், அவர் கட்சியை ஏமாற்ற
விரும்பினார். இந்த விஷயத்தில் எவரொருவரையும் நீங்கள் ஏமாற்ற முடியாது.
இப்போது தொழிற்சங்க அனைத்து சங்கங்களின் மத்தியக்குழுவின்
தலைமையில் தனது சந்தர்ப்பவாத தவறுகளை நேரடியாகவும், வெளிப்படையாகவும் ஒப்புக்கொண்ட
பேச்சுடன் அவரதுஇந்த டிஃப்லிஸ் பேச்சை ஒப்பிட்டுப்பாருங்கள். அவற்றுக்கிடையே ஏராளமான
பொய்கள் உள்ளன. இந்த மாற்றத்தை எப்போது, எவ்வாறு என்று விளக்கமுடியும்? அதுமீண்டும், முன்னாள் வலது எதிர்ப்பணி தலைவர்களுக்கு
கட்சியை சூழ்ந்து உறுதிப்பாடற்ற சூழ்நிலைகளால் எழுந்தது. இந்த மாநாடு இந்ததோழர்கள் மீது அவர்கள் தங்கள் கடமைகளை
நிறைவேற்ற உரிய அழுத்தங்களை தந்ததில் ஆச்சரியம்
எதுவுமில்லை. (பொதுவான சிரிப்புக்களும், நீண்ட
கைதட்டல்களும்)
இந்தத்தோழர்கள் மீது கட்சி மாநாடு இன்னும் கொண்டுள்ள
அவநம்பிக்கைக்கான ஆதாரம் அதுதான்.
முன்னாள் வலது எதிர்ப்பணி தலைவர்களின் வினோதத்துக்கும்
மேலான நடவடிக்கை களைப்பற்றி எவ்வாறு விளக்குவது?
கடந்த
காலத்தில் எந்தவிதமான வெளிப்புற அழுத்தங்களும் இல்லாமல், தாங்கலாகவே முன்வந்து தங்கள்
உறுதிமொழிகளை நிரைவேற்ற ஒரேஒரு முயற்சியையும்கூடச் செய்யவில்லை என்பதை எவ்வாற் விளக்குவது?
அது குறைந்தபட்சமாக இரண்டு சந்தர்ப்பங்களில் விளக்கப்பட்டிருக்கவேண்டும்.
முதலாவதாக, கட்சியின் அரசியல் வழிமுறை முற்றிலும்
சரியானது என்று இன்று வரையிலும்கூட நம்பிக்கை
கொண்டிருக்கவில்லை என்ற அம்சத்தில் மிகவும் கீழிறங்கி சில கோஷ்டி நடவடிக்கைகளை கள்ளத்தனமாக
நடத்திக்கொண்டிருந்ததோடு கட்சிக்கு எதிராக மீண்டும் ஒருமுறை வெளிப்படையாக வருவதறகான
பொருத்தமான நேரத்துக்காக காத்திருந்தார்கள். அவர்கள் கோஷ்டிக் கூட்டங்களில் திரண்டபோதும்,
கட்சிப் பிரச்சனைகளைவிவாதித்தபோதும் அவர்கள் வழக்கம்போல இந்தவகையில் கணக்கிட்டார்கள்:
’நாம் இளவேனில் காலம்வரை காத்திருப்போம், கட்சி நல்ல விளைச்சலுக்காக விதைப்புக்கு வரும்,
அப்போது நாம் தாக்குவோம், மிகவலுவாக தாக்குவோம்.’
ஆனால் விதைப்பு வெற்றிகரமாக நடந்துவிட்டதால் இளவேனில்காலம் எவ்வாறோ அவர்களுக்கு
அந்த அனுகூலத்தைத் தரவில்லை. பின்னர் அவர்கள் புதிதாக கணக்கிட்டார்கள்:’ நாம் இலையுதிர்
காலம்வரை காத்திருப்போம், கட்சி விளைச்சலின் தானியக்கொள்முதலுக்காக வரக்கூடும். அப்போது நாம் மத்தியக்குழுவைத் தாக்கு வோம்.’ ஆனால்,
இலையுதிர்காலமும்கூட அவர்களது வலிகளுக்கு எந்தப்பயனையும் தராமல் அவர்களை ஏமாற்றிவிட்டது.
மேலும் இளவேனிற்காலமும், இலையுதிர்காலமும் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும்மீண்டும் நிகழ்வதால் முன்னாள் வலதுசாரி எதிர்ப்பணித் தலைவர்கள்
திரும்பத்திரும்ப தங்களின் நம்பிக்கைகளை தளரவிடாமல் பொறுமை யுடன் இப்போதுஇளவேனிலுக்காகவும்,
புதிய இலையுதிர்காலத்துக்காகவும் காத்திருந் தார்கள். (அரங்கம் முழுவதும் பொதுவான சிரிப்பொலிகள்)
இயல்பாகவே, கட்சீம் மீது தாக்குதல் நடத்த பருவத்துக்குப்
பருவம் பொறுமையோடு எதிர்பார்ப்புக்களுடன் ஒரு சாதகமான காலத்துக்காக காத்திருந்ததால்,அவர்களால்
த்ங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியவில்லை.
கடைசியாக
இரண்டாவது காரணம். முன்னாள் வலதுசாரி எதிர்ப்பணித்
தலைவர்கள் நமது போல்ஷ்விக் வளர்ச்சிவீதங்களைப் புரிந்துகொள்ளவில்லை, பொதுவாக அந்த வீதங்களை
நம்பவில்லை, படிப்படியான வளர்ச்சிஎல்லைக்கு அப்பால எந்த ஒரு விஷயமும செல்லாது என்று
ஏற்றுக்கொண்டது ஆகியவை இதில் அடங்கியுள்ளன. இதற்குமேலும் நமது போல்ஷ்விக் வேகங்கள்,
மறுகட்டமைப்புக்கான கலவரம்பு கொண்ட வளர்ச்சிக்கான
புதிய வழிமுறைகள், வர்க்கப்போராட்டத்தை கூர்மைப் படுத்துவது மற்றும் இந்தக் கூர்மைப்படுத்த்லின்
பின்விளைவுகள் அவர்களிடம் எச்சரிக்கையையும், குழப்பங்களையும் அச்சங்களையும், திகிலையும்
உருவாக்கியது. எனவே, அவர்கள் நமது கட்சியின் மிகவும் அறிவுக்கூர்மையான முழக்கங்களோடு
தொடர்புடைய ஒவ்வொன்றிலிருந்தும் அஞ்சிவிலகியது இயல்பானதுதான்.
செக்காவின் புகழ்பெற்ற ‘திணிப்புக்களால் மூடப்பட்ட
மனிதன்’ பாத்திரமான கிரேக்க ஆசிரியர் பெலிக்கோவ் போல, அவர்கள் அதே நோயால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். நீங்கள் செக்காவின் திணிப்புக்களால் மூடப்பட்ட மனிதன்’
கதையை நினைவுகூர் கிறீர்களா?, எப்பொழுதும் காலுறைகளோடும், திணிக்கப்பட்ட மேற்சட்டையோடும்,
வெப்பம் மற்றும் குளிரிலும் ஒரு குடையை எடுத்துக்கொண்டும் . ‘மன்னிக்கவேண்டும், நீங்கள்
ஏன் ஜூலையில் இத்தகைய வெப்பமான பருவநிலையிலும் காலுறைகளையும், திணிக்கப்பட்ட மேற்சட்டையையும்
அணிகிறீர்கள்?’ என்று கேட்டப்படும் அந்த கதாபாத்திரத்தை நீங்கள் மீண்டும் நினைத்துப்பார்க்கலாம்
பெலிக்கோவ், ‘எதிர்பாராத ஏதாவது ஒன்று நிகழக்கூடும்: திடீர் உறைபனி ஏற்படக்கூடும்.
அப்புறம் என்ன?’ என்று பதிலளிப்பார். ( பொதுவான சிரிப்பொலிகள்) ஒவ்வொரு புதிய ஒன்றுக்கும்,
விலைமகளி ருடன் உறவாடும் அவனது பண்பற்ற அன்றாட வாழுவு ஒழுங்குக்கு வெளியே உள்ள ஒவ்வொன்றுக்கும்
அவன் கொள்ளை நோயான வாந்திபேதியைப்போல பயந்தான். ஒரு புதிய உணவகம் திறக்கப்பட்டால்கூட,
பெலிக்கோவ் உடனடியாக எச்சரிக்கை அடைவான்:’ ஒருவேளை ஒரு உணவகத்தைப் பெறுவது மாபெரும் யோசனையாக இருக்கலாம்:
ஆனால் கனமாக இரு. எதிர்பாராத ஏதாவது சிலவிஷயம் நிகழலாம்!’. ஒரு வியத்தகு வட்டமாக ஒரு
நூலகம் அமைந்தால்கூட, பெலிக்கோவ் மீண்டும் பீதி அடைவான்.’ ஒரு வியத்தகு வட்டமாக ஒருபுதிய
நூலகம்” அது எதற்காக இருக்கும்? கவனமாக இரு: எதிர்பாராத ஏதாவது சிலவிஷயம் கட்டாயம்
நிகழும்!’ ( பொதுவான சிரிப்பொலிகள்)
இதே விஷயத்தை முன்னாள் வலதுசாரி எதிர்ப்பணியின்
தலைவர்களைப்பற்றி கூறலாம். தொழில் நுடபக்கல்லூரிகள் பொருளாதார மக்கள் கமிசாரகத்துக்கு
(அமைச்சகத்துக்கு) மாற்றப்பட்ட பிரச்சனையை
நீங்கள் நினைத்துப்பார்க்கிரீர்களா? நாம் இரண்டு
தொழில் நுட்பக்கல்லூரிகளை மட்டும் தேசிய பொருளாதாரத்தின் உச்ச மட்ட குழுவுக்கு மாற்ற
விரும்பினோம். ஒரு சிறிய விஷயமாக இது தோன்றும். எனினும் நாம் வலது திரிபுவாதிகளிடமிருந்து
மூர்க்கமான எதிர்ப்பை எதிர்கொண்டோம். ‘இரண்டு தொழில் நுட்பக்கல்லூரிகளையும் தேசிய பொருளாதாரத்தின்
உச்ச மட்ட குழுவிடம் ஒப்படைக்கிறீர்களா? ஏன்? சிறிது பொறுப்பது நல்லதல்லவா? கவனமாக
இருங்கள்: . இந்தத் திட்டத்தின் விளைவாக எதிர்பாராத ஏதாவது சிலவிஷயம் கட்டாயம் நிகழும்!’
இருந்தபோதிலும் இன்று நமது எல்லா தொழில் நுட்பக்கல்லூரிகளும் தேசிய பொருளாதாரத்தின்
உச்ச மட்ட குழுக்கு மாற்றப்பட்டுவிட்டட்ன. அதிலிருந்து சரியானவற்றையே நாம் பெற்றிருக்கிறோம்.
அல்லது எடுத்துக்காட்டாக, நிலப்பிரபுக்களுக்கு
(குலாக்குகள்) எதிரான அவசரகால நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நிகழ்வில் வலதுசாரி
எதிர்ப்பணியின் தலைவர்களின் வெறித்தனத்தை நினைத்துப்பார்க்கிறீர்களா? ‘நிலப்பிரபுக்களுக்கு
எதிராக அவசரகால நடவடிக்கைகளா? ஏன்? நிலப்பிரபுக்களுக்கு எதிராக ஒரு தாராள கொள்கையை
பின்பற்றுவது நல்லதல்லவா? கவனமாக இருங்கள்:
இந்தத் திட்டத்தின் விளைவாக எதிர்பாராத ஏதாவது சிலவிஷயம் கட்டாயம் நிகழும்!’
எனினும், நிலப்பிரபுக்களை ஒரு வர்க்கமாக அகற்றும் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
அதனுடன் நிலப்பிரபுக்களுக்கு எதிரான அவசரகால நடவடிக்கைகளை ஒப்பிடும்போது ஒப்பிடும்போது அது, வெறும் அற்பமானதுதான். அதிலிருந்து
நாம் சரியானவற்றையே பெற்றிருக்கிறோம்.
அல்லது, கூட்டுப்பண்ணைகள், அரசுப்பண்ணைகள் பிரச்சனைஅயை
எடுத்துக்கொள்ளுங்கள். ‘அரசுப்பண்ணைகளும், கூட்டுப்பண்ணைகளுமா? அவை எதற்காக? ஏன் வேகப்படுத்துகிறீர்கள்?
நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள், இந்த அரசு மற்றும் கூட்டுப்பண்ணைகளால் எதிர்பாராத ஏதாவது
சில விஷயங்கள் நடந்துவிடக் கூடும்.’
மேலும் இதுபோல, இன்னும் பலவும்.
இதுதான் புதியவற்றைப் பார்த்து அடையும் கிலி. புதிய
பிரச்சனைகளை புதிய வழி முறையில் அணுகும் ஆற்றல் இல்லாமை ‘எதிர்பாராத ஏதாவது சில விஷயங்கல்
நடந்துவிடக்கூடும்.’என்பதை மனதில் வாங்கிக்கொண்டுள்ளது, இத்தகையபண்புகளால் திணிக்கப்பட்டு
மூடப்பட்ட முன்னாள் வலதுசாரி எதிர்ப்பணித் தலைவர்களை கட்சி யோடு பொருத்தமாக இணைவது
தடுக்கப்பட்டது.
திணிக்கப்பட்டு மூடப்பட்ட இத்தகைய பண்புகள் இக்கட்டுக்கள்
எழும்போது, மிகமிகச் சிறிய மேகம் அடிவானத்தில் தோன்றும்போது குறிப்பாக கேலிக்குரிய
முட்டாள்தன மான வடிவங்களை எடுக்கின்றன. நமது நாட்டில் எங்காவது ஓரிடத்தில் ஏதாவது ஒரு இக்கட்டு அல்லது சிக்கல் தோன்றிய உடனேயே அவர்கள்பீதியடைகிறார்கள்,
எதிர்பாராத ஏதாவது சில விஷயங்கள் நடந்துவிடக்கூடும்.’என்று அஞ்சுகிறார்கள். எங்காவது
ஓரிடத்தில் கரப்பான்பூச்சி சரசர ஒலியை எழுப்பினால்கூட, அது தனது துவாரத்திலிருந்து
தவழ்ந்து வெளியே வருவதற்கு முன்பே அவர்கள் அதிர்ச்சியடைந்த வர்களாகி ஒரு பெரும்கேடு
பற்றி, சோவியத் ஆட்சியின் வீழ்ச்சிபற்றி ஊளையிடத் துவங்கிவிடுகிறார்கள்.(உரத்த சிரிப்பொலிகள்)
இதுவரை ஆபத்தான எந்த ஒன்றும் நடந்துவிடவில்லை,
அது வெறும் கரப்பான் பூச்சி தான், அதற்கு யாரும் பயப்படத்தேவையில்லை என்று நாம் அவர்களை
அமைதிப்படுத்த, மனம் ஏற்கும்படி செய்ய முயற்சிக்கிறோம். ஆனால்,அதற்கு பயனேதும் கிடைக்கவில்லை.
அவர்கள், ‘ எதை நீங்கல் கரப்பான் பூச்சி என்கிறீர்கள்? அது கரப்பான் பூச்சி அல்ல. ஆனால்
அது ஆழம்காண முடிஆத படுகுழி, சோவியத் ஆட்சியின் வீழ்ச்சி’….. என்று ஊளையிட்டுக்கொண்டே
இருக்கிறார்கள். மேலும் அங்கி வழக்கமான பெரும்கூச்சல் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தப்பொருள்
பற்றி புக்காரின் ஒரு நீண்ட ஆய்வை எழுதுகிறார்: . இந்தக்கொள்கை நாட்டை அழிவுக்குக்
கொண்டுவந்துவிட்டது, சோவியத் ஆட்சி உடனடியாக இல்லாவிட்டாலும்அதிகபட்சமாக ஒரு மாதகாலத்துக்குள்
அழிந்துபோய் விடும்என்று உறுதிப்படுத்தி அவற்றை மத்திய குழுவுக்கு அனுப்புகிறார்.புக்காரினின்
ஆய்வுக்கட்டுரையோடு ரைக்கோவ் தன்னை இணைத்துக்கொள்கிறார் ஓர் ஒதுக்கிவைத்தலோடு. அதாவது
அவர் புக்காரினோடு ஒரு முக்கியமான கருத்தில் வேறுபடுகிறாராம்: சோவியத் ஆட்சி ஒரு மாதத்தில்
அல்ல: ஆனால் ஒரு மாதத்துக்குப்பிறகு இரண்டு நாட்களில். (பொதுவான சிரிப்பொலிகள்) டாம்ஸ்கி
தன்னை புக்காரினோடும், ரைக்கோவோடும் இணைத்துக் கொள்கிறார், ஆனால் ஒரு ஆய்வுக்கட்டுரை
இல்லாமல், ஓர் ஆவணம் இல்லாமல் அதைச்செய்ய முடியாத அவர்களது இயலாமையை எதிர்க்கிறார்,
அதற்கு அவர்கள் பதிலளித்தாக வேண்டு என்பதால். ‘எத்தனைமுறை நான் உங்களிடம் கூறியிருக்கிறேன்,
‘நீங்கள் எதைச்செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள்: ஆனால், அதன்பின் எந்த ஒரு
ஆவணத்தையோ, தடயங்களையோ விட்டுவிடாதீர்கள்.; (அரங்கம் முழுவதும்சிரிப்புக் களின் கர்ஜனை நீண்ட கைதட்டல்கள்)
பின்னர், ஓராண்டு கழிந்ததும், அந்த கரப்பான்பூச்சி
பேராபத்து விளைவிக்கும் அளவுக்கு கொட்டக்கூடியதல்ல என்பதை ஒவ்வொரு முட்டாளும் பார்த்திருக்கக்கூடும்.
வலது திரிபுவாதிகள் தைரியம் பெற்று தாங்கள் எந்தவொரு கரப்பான்பூச்சிக்கும் பயந்தவர்கள்
அல்ல என்று அறிவிக்குமளவுக்கு முன்வந்தார்கள். ஆனால், எந்தவகை யிலும் அந்த குறிப்பிட்ட
கரப்பான்பூச்சி ஒரு நாணல்புல்கூடை,, ஒரு அற்பமான வகைமாதிரி என்றார்கள்.(சிரிப்புக்களும்,
கரவொலிகளும்) ஆனால், அது ஓராண்டு கழிந்தபிறகு.
இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த அம்சங்களை தயங்கித் தயங்கி போதுமான அளவுக்கு
நன்றாக முன்வைத்தார்கள்…..
தோழர்களே, இந்தச் சூழ்நிலைகள்தான் முன்னாள் வலதுசாரி
தலைவர்களை கட்சியின் தலைமைக்கு நெருக்கமாக வருவதையும், முழுவதுமாக இணைவதையும் தடுத்தன.
இந்தச் சூழ்நிலைகளை இங்கு எவ்வாறு சரிசெய்யமுடியும்?
அவ்வாறு செய்வதற்கு ஒரேஒரு வழிதான் உள்ளது: அவர்கள்
தங்கள் கடந்தகாலத்துடன் முழுவதுமாக முறித்துக்கொண்டு, தங்களைப் புதுப்பித்துக்கொண்டு,
நமது கட்சி மத்தியக்குழுவின் போல்ஷ்விக்வீத வளர்ச்சிக்கான போராட்டங்களிலும், வலதுதிரிபு
களுக்கு எதிரான போராட்டங்களிலும் முழுமையாக இணைந்து கொள்வது தான்.
இதைத்தவிர வேறுவழி இல்லை.
முன்னாள் வலது எதிர்ப்பணி தலைவர்களால் இதைச்செய்யமுடியும்
என்றால், அது நல்லது, சிறப்பானது. இல்லாவிட்டால், அவர்களைப் பழிப்பதற்கு அவர்களைத்தவிர
வேறு யாரும் இல்லை. ( அரங்கம் முழுவதிலுமிருந்து நீண்டு நீடித்த கைதட்டல்கள். அனைவரும்
எழுந்து ‘சர்வதேச கீதத்தை’ பாடுகிறார்கள்)
பிராவ்தா
எண்:181
ஜூலை
3, 1930