Thursday, 22 November 2018

தோழர்.ஜே.வி.ஸ்டாலின் படைப்புக்கள்


தோழர்.ஜே.வி.ஸ்டாலின் படைப்புக்கள்
தொகுப்பு 13ன் சிறப்பு அம்சங்கள்
செ. நடேசன்


ஜே.வி.ஸ்டாலின்படைப்புக்களின் பதின்மூன்றாம் தொகுப்பு 1930 ஜூலை முதல் 1934 ஜனவரி வரையான எழுத்துக்களையும் உரைகளையும் கொண்டிருக்கிறது.
  இந்தக்காலகட்டத்தில் ஒட்டுமொத்த முனைகளிலும் போல்ஷ்விக் கட்சி வலிந்து பீடு நடைபோடும் சோசலிசக்கொள்கைகையை கொண்டுசென்று  நாட்டை சோசலிச மாற்றத்துக்குள்ளாக்குவதில் புதியசகாப்தம் படைக்கும் வெற்றிகளை படைத்தது. சோவியத் யூனியன் மகத்தான  தொழில்துறை சக்தியாக, கூட்டாண்மைமிக்க, பெருமளவிலான, இயந்திரமயமாக்கப்பட்ட விவசாயா நாடாக உருவாகியது
. ’சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் (போ)கட்சியின் பதினாறாவது மாநாட்டின் மத்தியக்குழுவின் அரசியல் அறிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலி’ல் ஸ்டாலின் வலது சந்தர்ப்பவாத தலைவர்களின் வஞ்சகம், இரண்டகங்களை அம்பலப்படுத்தினார். சோசலிசகாட்டுமானவேலைகளின் வெற்றிகளை விவரிக்கும் அவர்,சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியம் சோசலிச காலகட்டத்துக்குள் நுழைந்துவிட்டதை சுட்டிக்காட்டுகி றார். ஒரு நாட்டில் சோசலிசம் வெற்றிகரமானதாகும் காலத்தில், ஓர் அரசின்கீழ் தேசியமொழிகள் இறந்து மறைந்துபோகும்: அவை ஒரேமொழியாக ஒன்றிணையும் என்ற மார்க்ஸியத்துக்கு எதிரான, லெனினிசத்துக்கு எதிரான கொள்கையை விமர்சிக்கும் ஜே.வி.ஸ்டாலின், உலக அளவில் சோசலிசம் வெற்றிபெற்றதற்குப் பிறகு மட்டுமே தேசியமொழிகள் ஒரு பொதுமொழியாக ஒன்றிணையும் என்ற திட்டமிட்ட கோட்பாட்டை எடுத்துக்காட்டுக்களுடன் வலியுறுத்துகிறார்.
’வணிகத்துறை நிர்வாகிகளின் கடமைப்பொறுப்புக்கள் ’,’ பொருளாதார கட்டுமானத் தில்   புதிய நிலைமைகள், புதிய கடமைப்பொறுப்புக்கள்’ஆகிய தனது பேச்சுக்களில் ஜே.வி.ஸ்டாலின் சோசலிச தொழில்மயமாக்கலின் அதிவேக அளவான வரலாற்றுத் தேவை , எல்லாத்துறைகளிலும் தேசிய பொருளாதாரத்தை மறுகட்டமைக்கும் காலத்தில் தொழில் நுட்பத்தின் தீர்மானகரமான முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, ’போல்ஷ்விக்குகள் தொழில் நுட்பத்தில் கட்டாயம் தேர்ச்சிபெற்றவர்களாக வேண்டும்’ என்ற முழக்கத்தை முன்னெடுக்கிறார். சோசலிச தொழில்துறையின் வளர்ச்சியில் புதிய சூழ்நிலைகளை திறந்துகாட்டும் ஜே.வி.ஸ்டாலின், பொருளாதார கட்டுமானப் பணிகளில் நிர்வகிப்பதன் புதிய வழிமுறைகளையும் புதிய கோட்பாடுகளாக்குகிறார்.

    மத்தியக்குழு, மத்திய கட்டுப்பாட்டுக்குழு மற்றும் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் (போ) கட்சியின் கூட்டு பிளீனத்தில்.’முதல் ஐந்தாண்டுத்திட்டத்தின் முடிவுகள்’ அறிக்கை யில் முதல் ஐந்தாண்டுத்திட்டம் நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டது மிக உயர்ந்த பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஜே.வி.ஸ்டாலின் காட்டுகிறார். ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பும், உலகப்பொருளாதார நெருக்கடியில் ஆட்டம் கண்டுகொண்டிருக்கும்  நேரத்தில், சாதிக்கப்பட்ட ஐந்தாண்டுத்திட்டத்தின் விளைவுகள் காலாவதியாகிப்போன முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் மீது  மறுக்கமுடியாத சோவியத் சோசலிச அமைப்பின்மேம்பட்டு நிற்கும் உயர்வை நிரூபித்துள்ளன.

   ஐந்தாண்டுத்திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்திய முதன்மை சக்திகளைப்பற்றிப் பேசும்போது,  பரந்த பெரும்திரளான தொழிலாளர்கள் மற்றும் கூட்டுப்பண்ணை விவசாயிகளின்  தன்னலமற்ற தன்மை, உற்சாகம்  மற்றும் முன்னெடுப்பு  ஆகியவற்றை முதலாவதாகவும், முதன்மையானதாகவும் கவனிக்கிறார்: அவர்கள் பொறியியல் மற்றும் தொழில் நுடப அலுவலர்களின்  இணைப்பில் சோசலிசத்தை முன்மாதிரி யாக்குவதிலும்,  அதிர்வூட்டும் படையணிகளின் வேலைகளிலும் ஏராளமான சக்தியைக் காட்டினார்கள்.

  ஐந்தாண்டுத்திட்டத்தின் விளைவுகளோடு தொடர்புடைய கட்சியின் கடமைகளை விளக்குவதில் ஜே.வி.ஸ்டாலின் பொது சோசலிச சொத்துக்களை கொள்ளைக்காரகள் மற்றும் திருடர்களுக்கு எதிராக பாதுகாப்பதன் சிறப்பான முக்கியத்துவத்தையும், ஒவ்வொரு வழியிலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வலுப்படுத்துவதின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

  கூட்டுப்பண்ணை அமைப்பை வலுப்படுத்தும் பிரச்சனைகளும், கிராமப்புறங்களில் கட்சிவேலையின் கடமைப்பொறுப்புக்களும் ’கிராமப்புறங்களில் வேலைகள்’‘,’ ’கூட்டுப்பண்ணை அதிர்வூட்டும் படையணிகளின் அனைத்துசங்க முதலாம் மாநாட்டில் ஆற்றிய உரை’ ஆகிய பேச்சுக்களின் மையபொருளாக இருந்தன. மாறுவேடமிட்டு வரும் வர்க்க எதிரிகளின் புதிய தந்திரங்களை வெளிப்படுத்திய ஜே.வி.ஸ்டாலின், கட்சி அமைப்புக்களை மாபெரும் விழிப்புணர்வுகொண்டிருக்க கேட்டுக்கொண்டார். கூட்டுப் பண்ணை வளர்ச்சியின் விளைவுகளைத் தொகுத்த ஜே.வி.ஸ்டாலின் இந்த முழக்கத்தை முன்னெடுத்தார்:’ கூட்டுப்பண்ணைகளை போல்ஷ்விக் ஆக்குங்கள், கூட்டு விவசாயி களை வளமானவர்களாக ஆக்குங்கள்’.

  பின்வரும் ஜே.வி.ஸ்டாலினின் படைப்புக்கள், ’ போல்ஷ்விசத்தின் வரலாறு தொடர்பான சிலகேள்விகள்’ புரோலெடர்ச்கியா ரெவொல்யூட்ஸியா ஏட்டின் ஆசிரியர்குழுவுக்கு கடிதம், மற்றும்  ஓலெக்னோவிச் மற்றும் அரிஸ்டோவுக்கு பதில் ’போல்ஷ்விசத்தின் வரலாறு பற்றிய மிகமுக்கியமான பிரச்சனைகளைக் கையாள்கின்றன. கட்சியின் வரலாற்றில் டிராட்ஸ்கியர்கள் மற்றும் பிற பொய்யர்களை கண்டனம் செய்யும் ஜே.வி.ஸ்டாலின் ,.ஒவ்வொரு அடையாளம்கொண்ட சந்தர்ப்பவாதங்களுக்கு எதிரான போராட்டங்களில் தான் லெனினிசம் பிறந்தது, வளர்ந்தது,வலுவானதாக உருவானது என்பதை அழுத்த மாக எடுத்துக்கூறி கட்சி வரலாறு அறிவியல் சார்ந்த, போல்ஷ்விக் வழிகளில் ஆய்வுகள் செய்யப்பட அழைப்புவிடுத்தார். ஜே.வி.ஸ்டாலின், டிராட்ஸ்கியிசத்தை ’எதிர்ப்புரட்சி முதலாளித்துவர்களின் முன்கூட்டிய கட்டவிழ்ப்பு’ என குணாம்சப்படுத்துகிறார்.

 டெம்யன்பெட்னி-க்கான தம்து கடிதத்தில் ஜே.வி.ஸ்டாலின் டெம்யன்பெட்னியின் கவிதைகளில் உள்ளசில கேலிகள் தேசப்பற்று இல்லாத போக்குகள் வியாபித்துள்ளன; அவை லெனினிசத்திலிருந்து வெளிப்படையான பின்வாங்கல்கள் என்று சுட்டிக்காட்டு கிறார். ரஷ்ய பாட்டாளிவர்க்கம் மனிதகுலத்துக்கு சுதந்திரத்துக்கும் ,சோசலிசத்துக் குமான போராட்டங்களுக்கு புகழ்வாய்ந்த எடுத்துக்காட்டுக்களை அளித்துள்ளது என்ற அம்சத்துக்கு அழுத்தம் தருகிறார். இது ரஷ்ய தொழிலாளர்களின் இதயங்களில் புரட்சிகரமான தேசியப்பெருமையை நிறைக்கிறது: அது மலைகளையும் அகற்றும்: அற்புதங்களையும் நிகழ்த்தும் ஜே,வி.ஸ்டாலின் சோவியத் எழுத்தாளர்களை முற்போக்கான பாட்டாளியின் கம்பீரமானகடமைப்பொறுப்புள்ள கலைஞனுக்கு ஈடாக விளங்குமாறு அழைப்புவிடுத்தார்.

 ’ ஜெர்மன் எழுத்தாளர் எமில் லுத்விக் உடன் ஒரு உரையாடலி’ல்  ஜே.வி.ஸ்டாலின் தமது தத்துவார்த்த அணுகுமுறையில்’ வரலாற்றில் தனிநபர்கள் மற்றும் திரளான மக்களின் பாத்திரங்கள்’பிரச்சனையின்மீது வெளிச்சத்தை வீசுகிறார். லுத்விக்கின் கேள்விகளுக் கான  தமது பதில்களில் ஜே.வி.ஸ்டாலின் தமது வாழ்வு எந்தக்கடமைக்காக அர்ப்பணித் துக் கொள்ளப்பட்டதோ அது, பாட்டாளி வர்க்கத்தை உயர்த்துவதும், சோசலிச அரசை வலுப்படுத்துவதும் என பிரகடனம் செய்கிறார். சோசலிச அரசை வலுப்படுத்தும் ஒவ்வொன்றும் ஒட்டுமொத்த உலகப்பாட்டாளி வர்க்கத்தை வலுப்படுத்துவதற்கு உதவுகிறது.

  வெளிநாட்டிலிருந்து வருகைதந்த பொதுபிரமுகர்களுடனான பலஎண்ணிக்கையிலான பேச்சுக்களில்  ஜே.வி.ஸ்டாலின் சோவியத அரசின் வெளியுறவுக்கொள்கையை  முரண் பாடற்ற, ஒத்த அமைதிக்கான கொள்கை என்று குணாம்சப்படுத்துகிறார்: மேலும் ,சமாதான சகவாழ்வின் சாத்தியத்தையும் மேலும், சோவியத் ஒன்றிய சோசலிச குடியரசுக்கும், முதலாளித்துவ நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தொடர்புகளை நிலைநாட்டுவதையும் உறுதிப்படுத்துகிறார்.

  ’சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் (போ) கட்சியின் மத்தியக்குழு வேலைகள் பற்றி பதினேழாவது கட்சி மாநாட்டுக்கு அறிக்கை’ யில், ஜே.வி.ஸ்டாலின், சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தில் சோசலிசத்தின் மகத்தான வெற்றிகளைத் தொகுக்கிறார்:  பதினாறாவது கட்சி மாநாட்டிலிருந்து நாட்டில் நடைபெற்ற அடிப்படை மாற்றங்களை, சோசலிச தேசிய பொருளாதாரமும் கலாச்சாரமும் எல்லாப்பிரிவுகளிலும் அடைந்துள்ள வெற்றிகளை குறிப்பிடுகிறார். இந்த வெற்றிகள் கட்சியின் பொதுஅரசியல்வழிமுறை முழுமையானவெற்றியடைந்துள்ளதைஉறுதிப்படுத்துகின்றன. கட்சி இந்தவெற்றிகளை தனது வேலைகள் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனினின் வெல்லமுடியாத போதனைகளால் வழிகாட்டப்பட்டதால்தான் சொந்தமாக்கிகொண்டது என ஜே.வி.ஸ்டாலின் அழுத்தமாக கூறுகிறார்.தொழில்துறையில், விவசாயத்துறையில், தேசிய பொருளாதாரத்தின் மற்ற பிரிவுகளில், கலாச்சாரத்தில், அறிவியலில் கட்சியின் அடுத்தகட்ட  வேலைத்திட்டங் களை ஜே.வி.ஸ்டாலின் வரையறுக்கிறார். கட்சி அமைப்புக்களின் தலைமையை அரசியல் தலைமையின் அளவுக்கு உயர்த்த்வேண்டிய கடமைப்பொறுப்பையும், கட்சியின் தத்துவார்த்தப்பணிகளையும்,  முதலாளித்துவம் மீள்வதற்கெதிரான போராட் டங்களை மக்களின்மனங்களில் ஆழப்படுத்தவேண்டிதையும் ஜே.வி.ஸ்டாலின் முன்வைக் கிறார்.

  ஜே.வி.ஸ்டாலின் உலகப்பொருளாதார நெருக்கடியை பகுப்பாய்வு செய்கிறார்: அது முதலாளித்துவத்தின் பொது நெருக்கடியின் அடைப்படையிலானது. முதலாளித்துவ அமைப்பின் பொது நெருக்கடி நிலைமைகளில் முதலாளித்துவம் ஒரு தனிப்பட்டவகை யான வீழ்ச்சியை அனுபவித்துவருகிறது அந்த ஒன்று ஒரு புதிய மேல்நோக்கிய போக்குக்கும், தொழில்துறைமீட்சிக்கும் வழிகாட்டாது என அவர் காட்டுகிறார். முதலாளித்துவ நாடுகளுக்குள் அரசியல் சூழ்நிலைகளில் வளர்ந்துவரும் பதட்டங்களை யும், இந்தநாடுகளுக்கிடையிலான உறவுகளையும், ஒருபுதிய உலகப்போருக்கான ஏகாதிபத்தியவாதிகளின் தயாரிப்புக்களையும் ஜே.வி.ஸ்டாலின் விளக்குகிறார்.

  போருக்கான திட்டங்களின் அறிகுறிகளை அம்பலப்படுத்தி, நிகழ்வுகளின் அடுத்தகட்ட வளர்ச்சிகளை அறிவியல்பூர்வமாக முன்னுரைக்கும் ஜே.வி.ஸ்டாலின், சோவியத் யூனியனுக்கு எதிரான போர் ஏகாதிபத்தியவாதிகளுக்கு மிகவும் ஆபத்தானது ஏனென்றால், சோவியத் சோசலிச குடியசு ஒன்றியத்தின் மக்கள் புரட்சியின் ஆதாயங்களைப் பாதுகாப்பதற்காக இறக்கும்வரை போராடுவார்கள்: ஏனென்றால், ஆக்கிரமிப்பாளர்களின் முழுத்தோல்வி ஐரோப்பிய, ஆசிய நாடுகள் பலவற்றில் புரட்சிக்கும், இந்த நாடுகளில் முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ அரசுகளை தூக்கியெறி வதற்கும்  வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டுகிறார். ஜே.வி.ஸ்டாலின், சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தின் அயலுறவுக்கொள்கை  சமாதானத்தை பாதுகாக்கும் ஒருகொள்கை என விளக்குகிறார். ஏகாதிபத்தியநாடுகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க சோவியத் நாட்டின் பாதுகாப்புத்திறன் வலுப்படுத்தப்படவேண்டும் என எச்சரிக்கிறார்.

  பதின்மூன்றாவது தொகுப்பில் இடம்பெற்றுள்ள பின்வரும் அம்சங்கள் முதன்முறை யாகவெளியிடப்பட்டுள்ளன: தோழர் ஷடுனோவ்ஸ்கி, தோழர் ச், தோழர் டெமியன் பெட்னி தோழர் எட்சின் மற்றும் தோழர்.ஐ.என்..பஸனோவ் ஆகியோருக்குக்கு ஜே.வி.ஸ்டாலின் எழுதிய கடிதங்கள்.: ஜே.வி ஸ்டாலினின் ரால்ப்.வி.பேரன்ஸ் கேள்விகளுக்கு பதில்கள், மிஸ்டர் பார்வெஸின் கடிதத்துக்கு பதில் கலோனல் ராபின்ஸுடன் பேச்சு , 


 ஆதாரம்: ஜே.வி.ஸ்டாலின் படைப்புக்கள்: தொகுப்ப் 13.

No comments:

Post a Comment