வரலாற்றைச் சிதைத்தல்
கலாச்சாரத்தைத் ‘தயாரித்தல்’
-
சுஹித் சென்
தமிழில்- செ.நடேசன்
தமிழில்- செ.நடேசன்
--------------------------------------------------------------
அதீதப்பற்றுமிக்கவர்களால்
எல்லா தேசிய வரலாறுகளிலும் கடந்த காலங்கள் கட்டமைக்கப்பட்டதிலும்,
மறுகட்டமைக்கப்பட்டதிலும் அவர்களது அரசியல் பரிமாணங்கள் உள்ளன. ’இந்துத்வா’ செயல்
திட்டமோ கூடுதலாகப் பாசிசப் பரிமாணத்தைக்கொண்டுள்ளது. மற்றவர்களை முற்றிலும்
தவிர்த்த ‘இந்துதேசத்தை’ உருவாக்குவதற்கும், அவர்களால் ஒதுக்கப்பட்டவர்களை
அதிகார மிழக்கச் செய்வதற்கும் இது அவர்களுக்குத் தேவையாகிறது.
------------------------------------------------------------
இந்து
அமைப்புக்களின் முன்நிலையில் உள்ளவர்களிடமிருந்து நாம் அண்மைக் காலமாகச்
சந்தித்துவரும் கலாச்சாரத் தாக்குதல்களான கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் கல்வி
ஆண்டின் இடையிலேயே சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முட்டாள்தனமான முடிவு பெருத்த
ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு அல்ல. உண்மையைச் சொல்வதென்றால் இந்த
‘இந்துத்துவா’ சில்லறைத் தெருவியாபாரிகள்
தங்களது ‘கலாச்சார தேசியம்’ என்பதன்மீதான அவர்களது விசுவாசத்தை எப்போதும் மறைத்ததில்லை!
இந்தியா பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட ஒருதேசம் என்று அதன் ஒருமைப்பாட்டை
ஏற்கமறுத்து அதன்மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுக்கும் அளவுக்குத் தங்களது ‘கலாச்சார தேசியத்தோடு’ வாய்ஜாலத்துடன்
பின்னிப்பிணைந்திருக்கிறார்கள்.
ஹரித்துவாரில் மார்ச் 2010ல் நடைபெற்ற கும்பமேளாவில்
ஒரு நாகா சாமியார்
நாட்டின் விடுதலைக்கு முன்னும், பின்னரும்
பல்வேறு காலகட்டங்களில் காங்கிரசின் ஒருபிரிவு, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்,(ஆர்.எஸ்.எஸ்.)
இந்து மகாசபா, ஜனசங்கம், பாரதிய ஜனதா கட்சி,(பி.ஜே.பி.) விஸ்வ ஹிந்து பரிஷத்
(வி.ஹெச்.பி.) மற்றும் பல சிறுசிறு அமைப்புக்கள் முன்வைத்த ‘இந்து உரிமை’ என்ற கொள்கைவெளிப்பாட்டின்
அடிநாதமாக இருந்த நோக்கமெல்லாம் ’இந்தியத் துணைக்கண்டம்’ மற்றும் ’தேசம்’ என்பதெல்லாம் ஒருவகையான உள்ளார்ந்த ‘இந்துசாரத்தை’க்
கொண்டிருந்தது என்பதே!
தர்க்கரீதியான நடைமுறையோ, அறிவார்ந்த
சிந்தனையோ, ஆய்வை அடிப்படையாகக் கொண்ட அறிவோ இந்த இந்துத்துவா சில்லறை
வியாபாரிகளிடம் இருந்ததில்லை.அவர்கள் இவற்றை எப்போதும் முதன்மையாக
ஏற்றுக்கொண்டதுமில்லை.’இந்துசாரம்’ என்ற ஒன்று சமுதாயத்திலோ, சமூகவியல்
அறிவிலோ எப்போதும் இருந்ததில்லை.
‘இந்துயிசம்’ என்பது ஒரு
வாழ்க்கைமுறை என்பதும்கூட மாறுபட்ட பல்வேறு வடிவங்களைக் கொண்ட, நினைத்த நேரத்தில்
தான் விரும்பும் தோற்றத்தைப்பெறும் கிரேக்கக்கடல் தேவதையைப் போன்றது. ‘இந்து உரிமை’ என்றுகூறப்படும்
இந்தக்கருத்தாக்கம் உண்மையில் அறிவுபூர்வமானதோ, மதம்சார்ந்த வழிமுறையோ, நீதிநெறியோ
அல்ல என்ற ஒன்றே இதைத் தவிர்ப்பதற்குப் போதுமானது. இது முற்றிலும் அரசியல். உண்மைஎன்னும்
உரைகல்லில் உரசும்போது இந்தப்பழமைவாதத் தத்துவத்தின் அரசியல் உள்ளடக்கம்
வெளிறிப்போய்விடும்!
சுதந்திரத்திற்குப்பிறகு இந்துமகாசபையும்,
ஜனசங்கமும், பின்னர் பா.ஜ.க.வும், எஞ்சியுள்ள சங்பரிவாரங்களும் தங்களது
பிளவுபடுத்தும் பிற்போக்குத் தனமான, கற்பனாவாதப் போராட்டங்களைப் பல்வேறுமுனைகளில்
நடத்தினாலும்கூட ‘கலாச்சாரம்’ சம்பந்தப்பட்ட சில அடிப்படைப் பிரச்சனைகளில்-
எடுத்துக்காட்டாக மொழிப்பிரச்சனை- கவனம் செலுத்தி இந்துக்க அல்லாதவர்களின்
வாழ்முறைமீது தாக்குதல்களைத் தொடுத்தார்கள்.
பசுவதையைத் தடைசெய்வது – வேறுவார்த்தைகளில்
சொல்வதானால் – மக்கள் மாட்டிறைச்சியை உண்ணுவதைத் தடுப்பதில் மிகுந்த கவனம்
செலுத்தினார்கள். ‘இந்து உரிமை’யின் பக்தர்கள் என்று பொதுவாகக்
கருதப்படாதவர்களும்கூட இதை ஆதரித்து இதன்பக்கம் நின்றார்கள் என்பதுஉண்மையே.
மோகன்தாஸ்காந்தியும் அவரது ஆதரவாளர்களும்கூட. எல்லாவற்றையும்விட, அரசியல்
சாசனத்தில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் பசுவதையைத் தடைசெய்வதை இணைக்கவேண்டும்
என்பதற்கு இசைவு தெரிவித்தார்கள். ஆனால் பிந்தைய நாட்களில் காந்தியவாதிகள்
இந்தக்குறிப்பிட்ட விஷயத்தில் ‘இந்து உரிமையாளர்களைப்’போல அதே
உறுதியோடும், தெளிவான பற்றுதலோடும் செயல்படவில்லை. எடுத்துக்காட்டாக 1966ல்
பசுவதையைத் தடைசெய்யக்கோரி நாகா சன்னியாசிகள் பாராளுமன்றக் கட்டடத்தை நோக்கி நடத்திய
ஆயுதம்தாங்கிய பேரணி மாபெரும் வன்முறைக்கும், மிக்க்கடுமையான காவல்துறை
நடவடிக்கைக்கும் இட்டுச்சென்றது. இத்ற்கு உடன்படாத அன்றைய உள்துறை அமைச்சரும்,
அமைச்சரவையின் மூத்தவருமான குல்சாரிலால் நந்தா பதவியை இழக்க நேர்ந்தது என்பது
வேறுவிஷயம்.
பெங்களூரில் 2010 பிப்ரவரி 23ல் ‘உத்தேசப் பசுவதைத் தடைச்சட்டத்தை’எதிர்த்த தலித்துக்களின் போராட்டம்
பொருளாதாரம் என்பதையும் –அதை நாம் பல்பண்ணைப்பொருளாதாரம் எனலாம் –மாட்டிறைச்சியை
உணவாகக் கொள்பவர்களுக்காக மாடுகளைக் கொல்ல விரும்பாமை என்பதையும் சுற்றி அறிவார்ந்தமுறையில் திருப்தியளிக்காத பல்வேறு விவாதங்கள் எழுந்தன. ஆனால் உண்மையான கருத்து இதுதான்:
இந்தியத்துணைக்கண்டத்தில் – பின்னர் இந்திய தேசத்தில் - வாழ்ந்த பெரும்பான்மையான
மக்கள் சிலகாலகட்டங்களில் பசுவைப் புனிதமானது என்று கருதினார்கள். அதை
உண்ணக்கூடாது என்று முடிவுசெய்தார்கள். இதற்கு ஆதரவாகத் திரள மறுத்தவர்களுக்கு
இந்த முடிவு நியாயமற்றதாகத் தெரிந்தது. காந்தியும் அவரது உபதேசங்களும் எவராலும்
கருத்தில் கொள்ளப்படவில்லை.
இதன்பிறகு மொழிப்பிரச்சனை எழுந்தது. இந்தியைத்
தேசத்தின் இணைப்புமொழியாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள்மீது முழுமையான மாற்றத்தைக்
குறுகிய எண்ணத்தோடு திணிக்க முயன்றார்கள்: இவர்களோடு 1970வரை சோசலிஸ்டுகளும்
உள்ளிட்ட வட இந்திய அரசியல்வாதிகளும், அவர்களுக்குப்பின் வந்தவர்களும் தேசத்தின்
மையப்பகுதியில் அணிதிரண்டு இந்துத்துவாவினரைப்போன்றே குரல் எழுப்பினர்.
இந்திக்கு
வக்காலத்து வாங்கியதோடு ‘இந்துஉரிமை’ப் போராட்டக்காரர்கள்
உருதுமொழிக்கு எதிராகத் தங்களை
அடையாளப்படுத்திக் கொண்டார்கள். 1970களின் துவக்கத்தில் உத்தரப்பிரதேசத்தில்
உருதுமொழிக்கு அலுவல்மொழியாக அங்கீகாரம் அளிக்கப்பட்ட்து.
பெங்களூர் எஸ்.கே.கார்டனில் 2011 நவம்பர் 12ல்
ஒருகொட்டகைக்கு மாற்றப்பட்ட அரசு உருது மாதிரி ஆரம்ப்ப்பள்ளி.
அதற்கு எதிரான இயக்கத்தில்
ஜனசங்கம் முன்னிலை வகித்தது. உருதுவை அலுவல்மொழியாக ஆக்கியதன்மூலம் இந்திமொழியின்
அந்தஸ்தோ, தேவநாகரி எழுத்தின் முக்கியத்துவமோ குறைக்கப்படவில்லை என்ற விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்த நேரத்தில் காங்கிரஸ்கட்சியில் ஏற்பட்ட பிளவால் அக்கட்சியின் ஏகபோகம்
உடைந்துசிதறியது. இந்திபேசும் மையப்பகுதி மாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசம்,
மத்தியப்பிரதேசம் போன்றவற்றில் ஜனசங்கம் சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை அமைத்து ஆட்சி
அதிகாரத்தை இடைக்காலத்தில் சுவைக்கும் ஆவல் கொண்டிருந்தது. இந்த நோக்கத்தில் தனது
போராட்டங்களை முன்னெடுத்துச்செல்லத் தைரியம் கொண்டது.
அவர்களது இந்தக்கணக்கு மிகவும் தெளிவாக
வேலைசெய்ததைக் காணமுடிந்தது. சிறுபான்மை முஸ்லீம்களின் மொழி உருது என்பது
மறுக்கமுடியாத வரலாற்றுப்பூர்வமானது என்றாலும், அதீதமாகவும், அதேநேரத்தில் தவறானதுமான
வரலாற்றுக்கண்ணோட்டம் கொண்ட இந்துத்துவாசாரதிகள் அதற்கு எந்த மதிப்பும் அளிக்கத்
தயாரில்லை. ’சிறுபான்மையினர்
தேசத்தின் வாழ்வில் இரண்டாம் இடம்தான் அளிக்கப்படுவார்கள். அவர்கள் மொழியும்
நுகத்தடியில் பிணைக்கப்பட்டு அவர்களின் அந்தஸ்தின் அடையாளமாகவே இருக்கும்.’
இதேகாலகட்ட்த்தில் ஜனசங்கத் தலைவர்கள் ‘உட்படுத்திக்கொள்ளுதல்’ என்ற பெயரில் ஒருவிவாதத் திரியைக்
கொளுத்தினார்கள். சிறுபான்மையினர் – குறிப்பாக முஸ்லீம்கள் – தேசியவாழ்வோடு தங்களை ஈடுபடுத்திக்கொள்ள
வேண்டுமானால் இந்தியக்கலாச்சாரத்தின் மைய நீரோட்ட்த்தில் தங்களைக் கட்டாயம்
உட்படுத்திக்கொள்ளவேண்டும் என்று மிகவிரிவான வாதங்களை முன்வைத்தார்கள். ’தேசியநீரோட்டம்’ என்பது
பெரும்பான்மை
. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், சிறுபான்மையினர் இந்தியர்களாக முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் அவர்கள் இந்துசமுதாயம் மற்றும் கலாச்சரத்திற்கேற்பவே உடை அணிந்து கொள்ளவேண்டும்.
. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், சிறுபான்மையினர் இந்தியர்களாக முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் அவர்கள் இந்துசமுதாயம் மற்றும் கலாச்சரத்திற்கேற்பவே உடை அணிந்து கொள்ளவேண்டும்.
இந்த விவாதத்தில் பிற அரசியல்குழுக்களும்,
கட்சிகளும் பங்கேற்றன என்றாலும் அது முக்கியமானதல்ல. இங்கு கவனிக்கத்தக்கவை இரண்டு
கருதுகோள்கள்தான்: இரண்டுமே தவறானவை. ’இந்து உரிமை’ என்ற அதன்
அமைப்பையும், வடிவத்தையும் பா.ஜ.க மிகமுக்கியமாக அது ஆளும்கட்சியாக உள்ள இன்றுவரை
விட்டுவிடவில்லை.
ஒன்று: இந்து சமூகம் என்பது ஒற்றைத்தனிதன்மையோடு
விளங்குவது. அதன்படி ஓர் இந்து
இந்தியாவின் தென்கோடிமுனையிலிருந்து மையப்பகுதியில் உள்ள இந்துவிடமிருந்து தன்னைப்
பிரித்துக்கொள்ள முடியாது.
இரண்டு: இந்த மறுக்கமுடியாத பெரும்பான்மை
‘கலாச்சாரப் புனிதத்தையும்’, உரிமைகளையும் கொண்டிருப்பதால் மற்றவர்களை
இதற்கு அடிபணியச் செய்வதற்கான, அவ்வாறு அடிபணிவதை ஏற்றுக்கொள்வதற்கான அதிகாரம்
கொண்டிருக்கிறது.
இத்தகைய ’கலாச்சார’
வாதங்கள் இடைக்காலங்களில் தவறாக வரலாற்றுப்பூர்வமானவை என்று ஒரே நேரத்தில் பதிவு
செய்யப்பட்டுள்ளன. இவற்றை அறிவார்ந்தமுறையில் ஏற்றுக்கொள்வது என்பது அறவே இயலாத
ஒன்றாகும். சட்டத்தின் ஆட்சி என்ற நோக்கமும், சுதந்திரமான எல்லா அடிப்படைக்
கொள்கைகளும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சாசனத்தின்படி சுட்டிக்காட்டுவதானல் இதற்கு
முற்றிலும் மாறுபட்ட மொழியிலான ’இந்து உரிமை’ என்பதை ஏற்கவே இயலாது.
ஒரு விவரணையோடு இதை முடிப்பது ஒருவேளை
பொருத்தமானதாக இருக்கக்கூடும். தேசத்தை நிர்மானிக்கும் செயல்திட்டம் அல்லது
தேசம்பற்றிய அர்த்தத்திலான கலாச்சரம் பற்றிய விவாதங்களை நடத்தும் கட்டம்
முடிவடைந்துவிட்டது..அது வரலாற்றிலும், வரலாற்றை எழுதுவதிலும், வரலாற்றைப் படிப்பதிலும்
ஆழ வேரூன்றிவிட்டது.
இந்து உரிமை பற்றிய கட்டமைப்புக்களில்
பெரும்பாலானவை உண்மையல்ல என்பது மட்டுமல்ல: அவை கற்பனைகளையும், புராணங்களையும
கொண்டு நெய்யப்பட்டு அவர்களால் பூவேலைப்பாடுகள் செய்யப்பட்டவை: இவற்றை வரலாறு
என்று அவர்கள் உரிமைகோருவது
நகைப்புக்குரியது! அறிவுடைமை என்றோ, தத்துவார்த்த விளக்கம் என்றோ இவைகளை
வலியுறுத்தும் அவர்களின் தொடர்முயற்சிகளைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித்தள்ளவேண்டும்.
தேசியவரலாற்றாளர்கள் எனப்படுவோர் கடந்த காலங்களைக் கண்டறியவும், மறு உருவாக்கம்
செய்திடவும் துவங்கிய 19ஆம் நூற்றாண்டின் இரண்டாம்பகுதியில் இந்தப்போக்கு
தலைதூக்கியது. பெரும்பாலான இந்தக்கண்டறியும் செயல்முறைகளும், வரலாற்றை
உருவாக்குவதும், மறுஉருவாக்கம் செய்வதும் அரசியல் பரிமாணங்களைக் கொண்டவை ஆகும்.
‘இந்து உரிமையாளர்’களின்
செயல்திட்டங்கள், தம்மளவில் தனித்து நின்று பெரும்பான்மையினரைத்தவிர மற்றவர்களை வலுவிழக்கச்
செய்யும் ஒருவகைப்பட்ட பாசிசமனோபாவம் கொண்டவை ஆகும்.
ஆனால் இந்தச்செயல்முறையை மதசார்பின்மைக்கு
எதிரான மதவாதம் என்ற பிரிவுக்குள் வருவது எனக்குறைத்து
மதிபிட்டுவிடக்கூடாது.ஏனென்றால், இவை அனைத்தும் அரசின் கடமை என்ற பொருளில்
பெருமளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் இந்துத்துவா உருவாக்கும்
கலாச்சாரச் செயல்முறைகள் அந்த அளவையும் தாண்டிச்செல்லப்
பார்க்கின்றன.வேறுவார்த்தைகளில் சொல்வதானால், இந்துத்துவா செயல்முறைகளில் மிகவும்
கலக்கத்தை ஏற்படுத்தும் அம்சம் ‘இந்திய தேசம்’ என்று அது
கட்டமைப்பதற்கு வரலாற்றைத் தனது உரிமையாகத் திரிக்கிறது என்பது மட்டுமல்ல: அதை
உத்தரவாதப்படுத்துவதற்கு அரசு அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்புகிறது
என்பதும்தான்.
‘இந்து உரிமை’ என்பது
அவமானகரமானது என்ற தவிர்க்கமுடியாத முடிவுக்குவர இரண்டு அம்சங்கள் உள்ளன.
ஒன்று: இந்துசமூகத்தையும், கலாச்சாரத்தையும்
ஒற்றைத் தனித்தன்மை கொண்டது என்று வரலாற்றைத் திரித்து அதுசெய்யும் பிரச்சாரம்
சிறுபான்மையினரை அடங்கிப்போகுமாறு கடுமையான தாக்குதல்களைத் தொடுக்கிறது.
இரண்டு: ‘தேசம்’ என்பதும்,
‘தேசத்தின் அரசு’ என்பதும்
அரசியல் சாசனத்தில் வகுக்கப் பட்டுள்ளதுதான் என்பதை அது வெளிப்படையாக
ஏற்கமறுக்கிறது: குறைந்தபட்சம் அதற்குத் தானும் உண்மையாக விசுவாசத்தோடு
இருக்கவேண்டும் என்பதற்குப்பதிலாக.
நன்றி: ஃப்ரண்ட் லைன் 2014 டிசம்பர் 26


