Saturday, 30 March 2019


பாசிசத்தின்  நிழல்
           ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் ஆர்.விஜய சங்கர்
                                    தமிழில்: செ.நடேசன்
 பிரதமர்மோடி கடந்த ஐந்துஆண்டுகளில் என்ன செய்தார் என்றால்,பெரும் வணிகத்துக்கும், இந்துத்வா கும்பலுக்கும் இடையே கூட்டை ஏற்படுத்தவும், கார்ப்பரேட்டுக்களின் நிதிச்செயல்பாடு ஒருசிலரது ஆளுகைக்குள் கொண்டுவர முட்டுக்கொடுத்ததும்தான். இந்த புதிய தாராளமய ஒழுங்குக்கு பொதுமக்களின் எதிர்ப்பு எழுந்துகொண்டிருக்கும்போது, இன்னும் ஒருமுறை பதவியை எதிர்நோக்கும் மோடியின் ஆண்டுகளின் மதிப்பீடு இது.

 பாராளுமன்ற ஜனநாயகத்தின்மீது ஏழுபத்தாண்டுகளுக்கும் மேலான அவர்களது பரிசோதனைகள் இந்தியர்களுக்கு ஒரு ‘ஜும்லா’வை (’ஒன்றுமில்லைஎன்பதை குறிக்கும் வார்த்தைகளின் தொகுப்பு)’ ஒரு ஜும்லாவாக பார்க்கக் கற்பித்திருக்கிறது. தேர்தல்வாக்குறுதிகளைப்பற்றிய எந்தஒருமயக்கமும் இல்லாமல், பெரும் எண்ணிக் கைகளில் வாக்களிப்பதைத் தொடரவேண்டுமென்பதாக,. வெளிநாட்டு வங்கிகளில்  சட்டபூர்வமற்ற கணக்குகளில் உள்ள பணத்தைத் திரும்பக்கொண்டுவந்து ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கில் ரூ.15இலட்சம் செலுத்துவோம் என்ற நரேந்திர மோடியின் தேர்தல் வாக்குறுதிபற்றிய கேள்விக்கு பதிலளிக்கும்வகையில் பா.ஜ.க. தலைவர் அமீத்ஷாவால் பயன்படுத்தப்பட்ட வார்த்தைதான் ‘ஜும்லா’  சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் ஓர்உயர்ந்த நிலையில் உள்ள அரசியல்வாதி ஒருவர்,வெட்கமில்லாமல் ‘ஜும்லா, ஒரு ஜும்லா’ என அழைத்தது இதுவே முதல்முறையாக இருக்கக்கூடும் அறிவார்ந்த இந்திய வாக்காளர்கள் தங்கள் வங்கிக்கணக்குகளில் சில இலட்சங்கள் வந்துவிழும் என்று உண்மையில் எதிர்பார்க்கவில்லை. இந்தக் கறுப்புப்பண வேட்டைக்காரன், கவலைதரும்வகையில், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை பணமதிப்பு நீக்கம் என்று அழைக்கப்படும் பேயின் உதவியுடன் தங்கள் வாழ்வாதாரங்களைப் பறித்துக் கொள்வார் என்றோ,எதிர்பார்க்கவில்லை.

   பணமதிப்பு நீக்கம், கருவிலேயே சிதைக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம், தொழிளாளர் சட்ட சீர்திருத்தம், பொதுத்துறை செலவினங்களில் வெட்டு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் (MGNREGS) திட்டத்தைத் கலைத்தது, பொது விநியோகத்திட்டத்தை சீர்குலைத்தது ஆகியவை ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு சம்மட்டி அடியாக விழுந்தது. மறுபக்கத்திலோ, தன்னைத்தானே ‘காவல்காரன்’ (சௌகிதார்) என்று பறைசாற்றிக்கொண்டவரின் காவல் நிறைந்த கண்களுக்கு முன்னால், அவரது வர்த்தக நண்பர்களுக்கு ஊதாரித்தனமான மாபெரும் சலுகைகள் தரப்பட்டதும், ஏமாற்றும் மோ(ச)டி வர்த்தகர்கள் வெளிநாடுகளுக்கு விமானங்களில் தப்பியோடியதும். இந்த அரசு எந்தப்பக்கத்தில் என்பதை தெளிவாக்கி விட்டது. ’அச்சே தின்’ (நல்ல நாள்) கார்பரேட் நண்பர்களுக்கும், மதவாத குருட்டு நம்பிக்கைகொண்ட காவிகளுக்கும்தானே தவிர, தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு மற்றும் மத்தியதர தொழில்களுக்கு அல்ல.: ச்சாய்வாலாக்களுக்கும் (தேனீர் விற்பவர்கள்) சௌகிதார்களுக்கும்  (பாதுகாப்புகாவவர்கள்) கூட அல்ல அதிருப்திகொண்ட மக்களில் எந்த ஒரு பிரிவினரின் எந்த ஒரு போராட்டமும் தேசத்துரோக நடவடிக்கையாகவும், அந்தப் போராடங்களின் ஏற்பாட்டாளர்கள் ‘ நகர்ப்புற நக்சல்கள்’ ஆகவும், மோடியின் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் விமர்சிப்பவர்கள் அவரது நட்புவட்டாரங்களில் உள்ளவர்களின் மொழியில் ‘தேசவிரோதிகள்’, ‘இந்து விரோதிகள்’. அவர்கள்தான் (கணினி) எண்களைக் கையாள்வதில் நெறிபிறழ்ந்தவர்களாக கவனித்துக்கொள்கிறார்கள். உயர்பதவிகளில்  உள்ளஅலுவலர்களின் இரகசியநடவடிக்கைகள் ‘அரசின் இரகசிய சட்டத்தை’ மீறுவதாக உள்ளன. ஊழலின் மீதான ஒரு போர், இந்த ஊழல் எதிர்ப்புப்போராளிகளின் மீதான குற்றசாட்டுக்களில் முடிந்துபோயின. இந்த நேரத்துக்கான தேவை, 2014ல் இவர்களை ஆட்சிக்குக்கொண்டுவந்த ‘வளர்ச்சி’, மற்றும் ‘ஊழல்மீதான ஒழிப்புப்போர்’ என்ற வெற்றுமுழக்கங்களிலிருந்து மக்களின் கவனத்தை வெகுதொலைவுக்கு மாற்றுவதுதான். வளர்ச்சிப்போக்கில், குஜராத் மாதிரி என்பது ‘தேசியவாதம்’ என்பதால் மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. மாட்டிரைச்சி உண்பது அவமதிப்பின் உச்சகட்ட நடவடிக்கையாகவும், இந்து பீனல்கோடு’’படி மரண தண்டனைக்கு உரியதாகவும் ஆக்கப்பட்டுவிட்டது. ’சிவப்பு பயங்கரத்திலிருந்து’ அவற்றைப் பாதுகாப்பதற்காக பல்கலைக்கழகங்கள் மதவாதிகள் நியமிக்கப்படுவதை எதிர்நோக்கியுள்ளன.சங்[அரிவாரங்களின் ஜெனரல்களும்கூட மற்றும் பல நிறுவனங் களில் பொறுப்பேற்றுவருகிறார்கள். அது அரசியல் விவாதங்களாக ஆகும்போது, விளிம்பு மற்றும் மையத்துக்கு இடையிலான கோடு மறைக்கப்படுகிறது

  இதற்கிடையில், 2014மேயில் நடுவசந்தத்தின் இரவுக்கனவாக துவங்கிய, ஒருபகுதிஊடகத்தின் கண்களாக அனைத்தையும் நல்லதாக உணரவைக்கும் ஒரு தொழிற்சாலை தேசப்பற்று மருந்தாக  அதிக நேரம் கூடுதலாக வேலை செய்வது துவங்கியது மேலும் .இந்த டான் குவிக்ஸோட்  உண்மையில் இராட்சசர்களோடு போராடிக்கொண்டிருக்கிறார், காற்றாலைகளால் சாய்க்கப்படவில்லை என்று சந்தேகப் படாத பார்வையாளர்கள் நம்பவைக்கப்பட்டார்கள்.லும் ஒரு வளர்ச்சிக்கான மனிதனை மின்னும் போர்க்கவசத்தில் எல்லைகடந்த  எதிரிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்று பவராக உருமாற்றம் செய்வதை உச்சஉயர்வான குறிக்கோளாகக்கொண்டு வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் முடிவுறாத முன்னோட்டப்படங்களாக எல்லா நேரங்களிலும் திரையிடப்படுகின்றன.

  இந்த நம்பவைக்கும் உண்மையற்ற உலகில், தனது விமர்சனக் கண்களையும், காதுகளையும்திறந்துவைத்திருக்கும்ஊடகத்தளத்தில்உள்ளசிலவற்றில் ஃப்ரண்ட்லைன் உள்ளது: வழக்கமான ஊடகத்தின் செயல்பாடுகள்கூட ஓர் வீரம்செறிந்த நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு (”Right at the Centre” மத்தியில் வலது” ஜூன் 13, 2014) நமது எழுத்தாளர்கள் தங்களது பாணிக்கு உண்மையாக விளங்கும்வகையில் எண்ணற்ற கட்டுரைகள் மூலம் பாசிசப்போக்குகள் கொண்ட ஒரு வலதுசாரி அரசின் அரசியல், பொருளாதார,மற்றும் கலாச்சார விளைவுகளைமிகவிரிவாகப் படம் பிடித்துள்ளார்கள். அவற்றின் பொருத்தமான தன்மையின் காரணமாக மோடி அரசின் செயல்பாடுகளை, அது இன்னொருமுறை பதவியைக்கோரும் தருணத்தில், உணர்வுசாராத மதிப்பீடுகளை ஓர் சிறப்பிதழ் படைக்கிறது.
,
        .