பிரசாத்தின் கதையும் மோகன்
பகவத்தும்
செ. நடேசன்
”உங்க அம்மாவுக்கு திடீர்னு மாரடைப்பு
வந்துருச்சு. இப்போ ஆஸ்பத்திரியில சேத்திருக்கறாங்க” -அதிர்ச்சியான இந்தச் செய்தியைக் கேட்ட பிரசாத் துடித்துப்போனார்.
கர்நாடக மாநிலத்திலுள்ள தாவண்கெரே பல்கலைக்
கழகத்தில் ஆதிதிராவிடர்-பழங்குடியின்ர் மாணவர் விடுதியில் தங்கிப்படித்துவரும்
இதழியல் மாணவரான ஹுsச்சங்கி பிரசாத் அதிகாலையில் இந்தச்செய்தியைக் கொண்டுவந்த அந்த
நபரைப் பார்த்துச் செய்வதறியாது திகைத்தார். அந்த நபர் பிரசாத்தைத் தானே
ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதாக்க் கூறியபோது அவரோடு சென்றார்.
இடையில் நடந்த்து என்ன? இதோ பிரசாத்
கூறுகிறார்.” நடுவழியில் ஆள்நடமாட்டமில்லாத
ஒருமூலையில் எட்டு முதல் பத்துப்பேர் வரையான ஒருகும்பல் என்னைச் சூழ்ந்துகொண்ட்து.
எனது எழுத்துக்கள் சாதிய அமைப்புமுறைபற்றிப் பேசுவதாகவும், இந்துத்துவாவுக்கு
எதிராக இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். அவர்கள் எனது முகம் முழுவதிலும்
குங்குமத்தைப் பூசினார்கள். அவர்கள் கத்தியை எடுத்து எனதுவிரல்களை
வெட்டிவிடப்போவதாகக் கூறினார்கள். அதன்பிறகு என்னால் மீண்டும் எழுதவே முடியாது
என்று மிரட்டினார்கள்”
பிரசாத் அந்தக்
கும்பலிடமிருந்து தப்பி ஓடினார். அருகிலிருந்த காட்டில் மரங்களுக்கிடையே ஒளிந்து
கொண்டார். சிலமணி நேரம் கழித்து அவர்கள் போய்விட்டார்கள் என்பதை உறுதிப் படுத்திக்கொண்டபின்
மாணவர் விடுதிக்குச் சென்றார்: அதன்பின் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக்
கொடுத்தார்ர்.
இதழியல்மாணவரான பிரசாத் பொய்த்தகவல்கூறி ஏன்
கடத்தப்பட்டர்? ஏன் மிரட்டப்பட்டார்? மாணவர் பிரசாத் 2014 ஏப்ரலில் தனது முதல்
நூலை வெளியிட்டார். அவரது நூல் இந்த நாட்டில் தலித்துக்கள் நட்த்தப்படும்
விதம்பற்றிய கட்டுரைகளையும், கவிதைகளையும் கொண்டிருந்தது. கர்நாடகாவில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற
எழுத்தாளரும், கடந்த மூன்றுமாதங்களுக்குமுன் இந்துத்துவா கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டவருமான
எம்.எம்.கல்புர்கிக்குப்பின் ’அடுத்த இலக்கு’ என்று குறிவைக்கப்பட்ட எழுத்தாளர்
கே.எஸ்.பகவான் இந்தப் புத்தக
வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டு ஆற்றியஉரை வலதுசாரிப்பிரிவினரின் ஆத்திரத்தைத்
தூண்டியது. அவர்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் கே.எஸ்.பகவானின் பேச்சு ஆத்திரமூட்டும்வகையில்
இருந்ததாகப் புகார் அளித்தனர். அப்போது முதல் மாணவர் பிரசாத்தும்
அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகிறார்.
இந்த அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும்
பிரசாத்திடம் என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன? இதோ அவரே கூறுகிறார்:
·
நீங்கள்எவ்வாறு எழுத்துத்துறைக்கு வந்தீர்கள்? அதுவும்,குறிப்பாக தலித்
பிரச்சனைபற்றி அழுத்தமாக எழுத?
·
நான் தவண்கரே மாவட்டத்திலுள்ள சாந்த்பென்னூர் என்ற சிறிய கிராமத்தைச்
சார்ந்தவன். அங்கே எனதுபெற்றோர் இன்றும் தினக்கூலியாக வேலை செய்துவருகிறார்கள்.
நான் பள்ளிக்கு அனுப்ப்ப்படவில்லை> எனது சிறுவயதில் கொத்தடிமையாக வேலைக்கு
அனுப்பப்பட்டேன். அங்கு சாதியப்பாகுபாடுகளையும், அதனால் ஏற்பட்ட வன்முறைகளையும்
பார்த்தேன். அங்கிருந்து நான் மீட்கப்பட்டேன். ’சின்னாரஅங்காலா’ என்ற மீட்கப்பட்ட
குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்க்கப்பட்டேன். முறையான கல்வியைப் பெற்றேன். எனது
எழுத்துக்கள் சாதிய அமைப்புமுறை தந்த வலிகளை எதிரொலித்தன.
·
புதன்கிழமை இரவில் குறிப்பாக நீங்கள் குறிவைக்கப்பட்டீர்கள் என்று ஏன்
கருதுகிறீர்கள்?
·
சாதிய அமைப்புமுறை, இந்துயிசத்திலிருந்தான அதன் தோற்றம்
மற்றும் அதன் தீய விளைவுகளைப்பற்றிப் பேசும் எனது ‘ஒடல கிச்சு’ புத்தகம் 2014
ஏப்ரலில் வெளியிடப் பட்டது. அதன்பின் ஒருமாதத்துக்கும் மேலாக எனக்கு
அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அவர்கள் என்மீது ‘ஆத்திரமூட்டுகின்ற,
தீப்பற்றவைக்கும் எழுத்துக்களை எழுதியதாக ஒருபுகாரையும் செய்தனர். அப்போதிலிருந்து
எனது எழுத்துக்களும், சமூகஊடகங்களில் எனது பதிவுகளும் அமைதி குலைந்தவைகளாகச்
சிறகடித்தன
·
உங்களைத் தாக்கியவர்கள் தங்களை வலதுசாரிப்பிரிவினர் என
அடையாளம் காட்டினார்களா?.
·
அவர்கள் அவ்வாறு காட்டிகொள்ளவில்லை. ஆனால், அவர்களுடைய
நடத்தையில் அது வெளிப்படையாகத்தெரிந்தது. அவர்கள் எனது முகம் முழுவதிலும்
குங்குமத்தைப் பூசினார்கள். ’இந்துயிசத்தின்மீது நம்பிக்கை இல்லாத நான்
எவ்வாறு அதைப்பற்றி எழுதத்துணிந்தேன்?’ என்று கேட்டார்கள். ’நான் எனது முற்பிறவியில் பாவம் செய்ததால்தான் இப்பிறப்பில் தலித்தாகப்
பிறந்துள்ளேன்’ என்று அவர்கள் கூறினார்கள் அவர்கள்
என்னையும், நான் ’வாட்ஸ்அப்’பில்
சமீபத்தில் நடந்த தலித் படுகொலை களைப்பற்றிப் பதிவிட்டிருந்ததையும் அறிந்தவர்கள்போலக்
காணப்பட்டார்கள். என்னை எழுதுவதிலிருந்து தடுக்க எனதுகைகளை வெட்டப்போவதாக
மிரட்டியபோது அவர்களிடமிருந்து தப்பவேண்டும் என்பதை நான் முடிவு செய்துகொண்டேன்.
·
அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வாழ்க்கைபற்றிய அச்சம்
உங்களுக்கு ஏற்பட்டதா?
·
ஆம். நான்
இன்னும் அதிலிருந்து மீளவில்லை. எனக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறையைக்
கேட்டுள்ளேன்.
·
அந்தத் தாக்குதல் உங்களை எழுதுவதிலிருந்து தடுத்துவிடுமா?
அல்லது வலதுசாரிப்பிரிவினரின் கோபத்தைத் தூண்டும் தலைப்புக்களை எடுத்துக்கொள்வதில்
தயக்கத்தை ஏற்படுத்துமா?
·
அதற்கு மாறாக, நான் உற்சாகம் பெற்றுள்ளேன்.உறுதி
பெற்றுள்ளேன். எப்படியோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தொடர்ந்து எழுதுவேன். அவர்களது
தாக்குதல்கள் எனது எழுதும் உறுதியின்மீது எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதை
அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்பவில்லை.
இந்தநேரத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின்
90ஆவதுஆண்டைக் குறிக்கும்வகையில் நாக்பூரில் தனது தொண்டர்களிடையே மோகன்பகவத் பேசியுள்ளதை
இணைத்துப்பார்ப்பது இந்துத்துவாவின் மனஓட்ட்த்தைப் புரிந்துகொள்ள உதவும்.
கடந்தஆண்டில்
மகாராஷ்டிராவின் சமூகசீர்திருத்தவாதியும் முற்போக்குச்சிந்தனையாளருமான நரேந்திர
தபோல்கர், இவ்வாண்டில் மார்க்சீய அறிஞர் கோவிந்த் பன்சாரே, கர்நாடகாவில் சாகித்ய
அகாதெமி விருதுபெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி ஆகியோர்
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மற்றொரு கர்நாடகஎழுத்தாளர் கே.எஸ்.பகவான் ‘அடுத்த
இலக்கு’ என்க்
குறிவைக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச தாத்ரி பகுதியில் பிஸாரா கிராமத்தில்
‘மாட்டிறைச்சி வைத்திருந்தார். என வதந்தியைத் திட்டமிட்டுப் பரப்பி செப்டம்பர் 25
அன்று முகம்மது இக்லாக் சங்பரிவாரங்களால் கூட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கருத்துரிமையும்,
உண்ணும் உரிமையும் மோகன்பகவத் ஆட்களால் வன்முறைமூலம் மறுக்கப்படுகின்றன. இதுபற்றி
மோகன்பகவத் கூறுவது என்ன?
‘சிறுசிறு
நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால்,அவை பூதாகரப்படுத்தப் படுகின்றன.’
எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும்
இந்துத்துவாக்களின் சகிப்புத்தன்மையற்ற போக்குகளை விமர்சித்துத் தங்களது சாகித்திய
அகாதெமி விருதுகளைத் திருப்பி அனுப்புவதை நேரடியாகக் குறிப்பிடாமல், மோகன்பகவத்,’ அறிவுஜீவிகள் தங்கள்
விமர்சனங்களின் மூலம் ஒழுங்கீனத்தைப் பரப்பக் கூடாது என்பதை மனதில் கொள்ளவேண்டும்’ என எச்சரிக்கிறார்.
இந்துத்துவாக்களின் இன்றைய
வன்முறைவெறியாட்டங்களைக் கண்டிப்பதற்கு முன்வராத மோகன்பகவத், அவற்றை
ஆதரிக்கும்வகையில்,’இரண்டு
ஆண்டுகளுக்குமுன் இந்தியாவில் நம்பிக்கையின்மை நிலவிவந்தது. இப்போது அந்தக்கவலை
அகன்றுவிட்டது. அந்த இடத்தில் தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தத்தன்னம்பிக்கை
நமது நோக்கங்களுக்கு வலுவூட்டுகிறது’ என்கிறார். இதில் ஆச்சரியப்பட
ஏதுமில்லை ஏனெனில் வன்முறையைத் தூண்டுவதும், அதற்கு ஆதரவளிப்பதும் அவரது வாடிக்கை.
இதற்கு
ஆதாரமாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். விசுவாசியான சுவாமி அசீமான்ந்தா அம்பாலா சிறையிலிருந்தபோது
அளித்த வாக்குமூலங்களே!. 2007 பிப்ரவரி 18 இரவில் சம்ஜுதா எக்ஸ்பிரஸ்
குண்டுவெடிப்பில் 68பேர் இறந்தனர். மே 2007ல் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் 11
பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 2007ல் ராஜஸ்தானில் 3 பேரைக்கொன்ற அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு,
மேலும் செப்டம்பர் 2006 மற்றும் செப்டம்பர் 2007ல் 37 பேரைக்கொன்ற மகாராஷ்ட்ரா
மாலேகான் குண்டுவெடிப்பு ஆகிய ஐந்து குண்டுவெடிப்புக்களில் ஈடுபட்டவர்தான் சுவாமி
அசீமானந்தா.
’இப்போது ஆர்.எஸ்.எஸ்.தலைவராகவும், அப்போது பொதுச்செயலாளராகவும் இருந்த மோகன்
பகவத் வரை ஒப்புதல் அளிக்கப்பட்டவையே இந்தக்குண்டுவெடிப்புக்கள்’ என்று கூறும் சுவாமி
அசீமான்ந்தா ‘தி கேரவன்’ பத்திரிக்கையாளர் லீனாகீதாரெகுநாத்-
திடம்கூறுகிறார்:
”வன்முறைத்தாக்குதக்கள்
பற்றி பகவத் என்னிடம் சொன்னார்: ‘நீங்கள் இதில் வேலை செய்யலாம். ஆனால், இதில் எங்களைத்
தொடர்புபடுத்தப்படக்கூடாது. நீங்கள் இதைச் செய்தால் நாங்களும் உங்களுடன்
இருப்பதாகக் கருதலாம்”
இவ்வாறு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில்
நம்பிக்கைகொண்டிருந்த விசுவாசிகளைக் கூர்தீட்டி, மதவெறியூட்டிக் கொடூரமான வன்முறை
வெறியாட்டங்களுக்கு ஆதார சுருதியாக இருந்த மோகன்பகவத் போன்றவர்களிடம் மனித
நேயத்தையோ, மானுட நாகரிகத்தையோ எதிர்பார்க்க முடியுமா?
(ஆதாரங்கள்: ‘The Hindu 2015 October 23
& ‘The Caravan February 2014)
No comments:
Post a Comment