இறுதி பரிசீலனைகள்
பிரேஸின் இடதுசாரிகளின்முன் வைக்கப்பட்டுள்ள சவால்கள்
தொடர்பாக இந்த ஆவணத்தொகுப்பு முழுவதும் அளிக்கப்பட்டுள்ள பகுப்பாய்வுகளிலிருந்து எங்களால்
வந்தடையமுடிந்த முதல் முடிவு, ஒரு பாராளுமன்ற முன்னெடுப்பு மூலம் எளிதாக போல்ஸனோரோவின்
நிர்வாகத்தை வெளியேற்றிவிட முடியாது. ஒரு சாத்தியக்கூறுஉள்ளது, அது நடைபெறாது என்றாலும்,
யார் போல்ஸனோரோவைத் தேர்ந்தெடுக்க உதவினார்களோ அந்த முதலாளி வர்க்கம், பொருளாதார நெருக்கடி
மோசமாகுமானால், அதிகாரத்திலிருந்து அகற்றக்கூடும். எவ்வாறாயினும் அதிகமாக நடைபெறக்
கூடிய சாத்தியக் கூறு, முதலாளிகள் உடனடியாக
போல்ஸனோரோவை அகற்றமாட்டார்கள். அவர்கள் கட்டாயம் அவரை அகற்றவேண்டியிருக்கும்போது, அரசியல்
வழிமுறைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, அவர்கள் ஒரு மாற்று நுட்பத்தை,
அரசின்மீது அவர்களது கட்டுப்பாட்டைப் பராமரிக்க வைத்திருப்பார்கள்.
’பெருமளவிலான தடுப்பு ஊசிகள் போடப்பட்டபிறகு, சுகாதார
நிலைகள் மேம்பட்டவுடன், கூட்டரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்மீது மக்களிடையே அதிருப்தி
வளர்ந்து, பெருமளவிலான உழைக்கும் வர்க்கத்தின் அணிதிரட்டல்
நாடுமுழுதும்
நடைபெறப்போவதை நாங்கள் பார்க்கப்போகிறோம்’ என்று முற்போக்கு சக்திகள் உறுதியாக நம்புகிறார்கள்.
சமூகத்தின் குறிப்பிட்ட சில துறைகளுக்கு, போல்ஸனோரோ பொருத்தமான நபராக இருந்தாலும்கூட,
அவரது மக்கள் ஆதரவு அரிக்கப்படுவது துவங்கிவிடும் என்று அவர்கள் கணிக்கிறார்கள்.
இருந்தபோதிலும்,ஒற்றுமையைக்கட்டமைப்பதற்கான
மிகச்சிறந்தஉத்தி தொடர் பான கருத்துவேறுபாடுகள் அங்கே இருந்தன. போல்ஸனோரோவிசத்தை எதிர்த்துப்போராட
ஒருபரந்த முன்னணியைக் கட்டுவதை சிலர் முன்வைத் தார்கள். அது, சமுதாயத்தின் எல்லாத்துறைகளையும்
ஒன்றாகக் கொண்டுவரும்: அது பிரேஸிலின் கட்டுபடுத்தப்பட்ட ஜனநாயகத்தில் எழுந்து நிற்கும்.
மற்றவர்கள் இரண்டு முன்னணிகளையும் ஒருங்கிணப்பதில்
நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஒரு பரந்த முன்னணி, அதேபோல் ஒரு இடது முன்னணி,.இந்த ஒருங்கிணைப்பு
கட்டமைப்புசார்ந்த மற்றும் நெருக்கடிசார்ந்த அணுகுமுறைகளை எடுக்கும் ஆற்றல்வாய்ந்ததாக
இருக்கும் இதை சிலர் நம்பவில்லை: ஏனென்றால், ஒரு பரந்த முன்னணியில் சேர்வது முதலாளித்துவத்தின்
சில துறைகளுக்கு சாத்தியம் என்றாலும், தாராளவலது சாரிகள் இந்த முன்னெடுப்பில் சேர்ந்துகொள்ள
ஒப்புக்கொள்ளமாட்டார்கள். வேறுசிலரோ, இரண்டு முன்னணிகளின் வெளிப்பாடு இரண்டுபகுதிகளாக
பிரிக்கும்தவறைச் செய்கிறது என்றுநம்பினார்கள்: ஜனநாயக சுதந்திரங் களுக்கான போராட்டங்களுக்கும்,
உரிமைகளையும் தேசிய இறையாண்மை யையும்பாதுகாக்கும் போராட்டங்களுக்கும் இடையே பிரித்துப்
பார்த்தல் கட்டாயம் இருக்கக்கூடாது.
எந்த உத்தியை பின்பற்றுவது என்பதில் வெவ்வேறு மனப்பான்மைகள்
இருந்தும்கூட, வலுவான, சமூக, அரசியல், மற்றும் பொதுமக்களின் விவாதங்கள் மட்டுமே தேசீய
பாராளுமன்றத்தை போல்ஸனோரோவை பதவி நீக்கம் செய்ய அழுத்தம் தரும் என்பதில் பொதுவான புரிதல்
இருந்தது. அவர் பதவி நீக்கம் செய்யப்படாவிட்டாலும்கூட. 2022 தேர்தலுக்கான வேறுபட்ட
அரசியல்சூழலை இது அசைவின்றி உருவாக்கும், மேலும் அரசியல் போராட்டங்களில் முன்னோக்கிச்செல்வதற்கான
புதிய சாத்தியங்களையும் அது திறக்கும்.
எந்தவகையிலும், இந்த ஆபத்தான கட்டத்திலிருந்து வெளியேவரும்வழி
குறுகியகாலத்தில் உறுதியாக தோன்றாது: மேலும் இதற்கு நீண்டகால எதிர்ப்புக்கள் தேவை என
எலிடா எலெனா (UNE) சுட்டிக்காடுகிறார். ‘புதிய தாராளமய சீர்திருத்தங்கள் மிக ஆழமாக
பிரேஸிலிய சமுதாயத்தில் குறியிடப்பட்டுவிட்டது. இந்த சூழலில்தான் நாம் எதிர்கொள்ளும்
சவால்கள் பற்றி சிந்திப்பதில் நம்மை நாமே ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்’.
‘இந்தக் காரணத்துக்காக, பின்வரும் பிரிவில், நாங்கள்
பிரேஸிலின் இடதுசாரிகளுக்காக, இந்த ஆவணத்தொகுப்பு முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள குறுகிய
மற்றும் இடைக்கால முதன்மைசவால்களை ஒழுங்கமைத்திருக் கிறோம்.
குறுகியகால
சவால்கள்
· போல்ஸனோரோ பதவி நீக்கம் .
· நமது நடவடிக்கைகளில் ஒற்றுமையை சாதித்தல்
· போராட்டங்களின்மூலம் ஒருங்கமைக்கப்பட்ட மற்றும்
பத்திரப்படுத் தப்பட்ட பகுதிகளை பாதுகாத்தல்: உள்ளூர் சமுதாயங்கள், விவசாய சீர்திருத்தங்களுக்காகபிரித்துவைக்கப்பட்ட
பகுதிகள், குயிலொம்போலா11 சமுதாயங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலுள்ள எதிர்ப்பைத்தாங்கி
நிற்கும் வெளியிடங்கள்.
· உடனடியாக அனைவருக்கும் தடுப்பு ஊசி கோரல்
· அவசரகால மாதாந்திர உதிவி R$ 600 ஐ திரும்பவழங்க
கோரல்
இடைக்கால
சவால்கள்
· அரசியல் ஆதரவு நடவடிக்கைகளால் வழிகாட்டப்பட்டு,
மக்களின் உடனடித்தேவைகளை நிறைவேற்றுவதன்மூலம் அடித்தளத்தைக் கட்டமைக்கும் பணியை ஆழப்படுத்துதலும்,
விரிவுபடுத்தல்களும்
· மக்களின் தேவைகளை நமது போராட்டங்களின் கோரிக்கைகளாக
மாற்றுதல்
· மக்களின் அதிகாரத்தை சட்டபூர்வமாக்கும் வழிமுறைகளைக்
கட்டமைத்தல்
· அரசியல் கல்விப்பயிற்சியை நிறைவேற்றிமுடித்தல்
· மக்கள் போராட்டங்களை மீண்டும் தொடங்குதல்
(தெருக்களில் நடத்துவதுஇப்போதைக்கு சாத்தியமில்லை என்றாலும் போராட்டத் துக்கான சூழ்நிலைகள்
மீண்டும் திரும்பும்போது, உடனடித் தேவைகளை விரிவான அரசியல் போராட்டங்களோடு இணைத்து
அந்த நேரத்தில் போராட்டங்கள் கட்டாயம் உருவாக்கப்படவேண்டும்.
· பிரேஸிலின்இடதுசாரிகளுக்குள் உண்மையில் மாற்றத்தை
உருவாக்கும் திட்டங்களை மேம்படுத்தவேண்டும்.
ஜாண்ட்ரியா உயெஹரா(CUT) கூறுவதுபோல, ஒரு ஜனநாயக,
மக்களால் விரும்பப்பட்ட தீர்வு வெற்றிபெற வேண்டுமானால், இடதுசாரிகளின் வெவ்வேறு பகுதிகளிடையே
இணைந்திருத்தல் மற்றும் ஒற்றுமைக்கான உறுதியான அடித்தளத்தை உருவாக்குவது அவசியம்.’2021ல்
மீண்டும் போராட்டங்களை நடத்துவதற்கான வழிகளை நாம் கண்டுபிடித்தாகவேண்டும்: மேலும்,
கட்சிகள், சங்கங்கள், உழைக்கும் வர்க்க இயக்கங்கள் மூலம் அணிதிரட்டவேண்டும், Frente Brasil Popular, இந்த வழிமுறையில் நமது
போர்த் தந்திரங்களில், உத்திகளில், மற்றும் திட்டங்களில்2022 மற்றும் அதைத் தொடர்ந்துவரும்
ஆண்டுகளையும் எதிர்கொள்ள அர்ப்பணிப்பு உணர்வை நிலைநாட்டவேண்டும்.’
‘பிரம்மாண்டமான பரிமாணத்தில் வரலாற்று மாற்றங்களை
நாம் எதிர்கொள் கிறோம். இதனால்தான் மேல்தட்டினருக்கு எதிராக, எல்லாவற்றையும் தோற்கடிக்கும்
போராட்டத்தை தொடங்க, ஆழமான மாற்றங்களுக்கான சட்டங்களை இயற்ற, எங்கே மக்கள் வாழ்கிறார்களோ
அந்தப்பகுதிகளில் மீண்டும் இடதுசாரிகள் இருப்பதை உறுதிப்படுத்த, மற்றும் அடிப்படைக்கூறு
சார்ந்து அதிகாரத்தை ஜனநாயகப்படுத்த ஒரு புதிய போர்த்தந்திரத்தை ஒருங்கிணைக்கும் வாய்ப்பை
நாம் பெற்றிருக்கிறோம். ஒன்று, நமது காலத்தின் மாற்றங்களை நாம் மாற்றுவோம், இல்லாவிட்டால்,நாம்
வரைபடத்திலிருந்து துடைத்தெறியப்படுவோம்’ என்று நம்புகிறார்,(PSOL)ன் ஜூலியானோ
மெடெய்ரோஸ் .
நாம் பாதுகாப்பாக இருந்தாகவேண்டிய தருணத்தில் நாம்
வாழ்ந்துகொண்டி ருந்தாலும், நமது நடப்பு அரசியல் சூழலில் ஒரு புதிய தருணத்தை கொளுந்துவிட்டுஎரியச்செய்ய வரலாற்றின் சாளரங்கள் எல்லா இடங்களிலும் அகலத்திறந்து
வைக்கப்பட்டிருப்பதைப்போல காணப்படுகின்றன. ஆகையால், இடதுசாரிகள் போல்ஸனோரோவைத் தோற்கடிப்பதும்,
அதனுடைய உத்திகளில் ஒற்றுமையைக் கட்டுவதும், அதன் திட்டங்களில் பிரேஸிலின் மக்களுக்கு
பதில்களையும், நம்பிக்கையையும் அளிப்பதற்கு வல்லமை பெற்றிருப்பதும் அடிப்படையாகும்.
மக்கள்திரள் போராட்டங்களை அனல்பறக்க கிளறிவிட,உழைக்கும்வர்க்கத்துறைகளில் மேலாதிக்கத்தைக்
கட்டமைக்க, உழைக்கும்வர்க்கத்துடன் மீண்டும்இணைவது மிகவும்முக்கியம். எப்போதை யும்விட
மிக அதிகமாக, கடந்தகால போராட்டங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதும், அவற்றை புதுப்பிப்பதும்
அவசியம், அதனால் வர்க்க எதிரிகளைத் தோற்கடிக்கும் ஆற்றல்மிக்க ஒரே சக்தியான மக்களின்
கைகளில் மிகச்சரியாக ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படும்.
2021-ன் துவக்கத்திலிருந்து போல்ஸனோரோ அரசு மெல்லமெல்ல சீர்கெடத் துவங்கியது.
இடதுசாரிகளில் உள்ள செயல்பாட்டாளர்கள் முந்தைய ஆண்டுகளைவிட போராட்டங்களில் ஈடுபட மிகஅதிகமாக
விரும்பினார்கள்.அது,இனிவரும்ஆண்டுகளில் மிகத்தீவிரமான அணிதிரட்டும் காலகட்டமாக தீப்பொறியைக்கிளப்பும்.
Latica Ribeiro (@telurica.x). photography by
Giavanni Marrozzin / Design. Ativista / 2019
குறிப்புகள்
1. சுகாதார அமைச்சகத்திலிருந்து அதிகாரபூர்வ
எண்ணிக்கைகள், இந்த ஆவணத்தை எழுதிய 2021 ஏப்ரலில், https://covid.saude.gov,br –ல் கிடைக்கும்.
2. மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு: இந்த ஆவணத்தொகுப்பில்
popular என்ற வார்த்தை பாப்புலர் அலது மக்களுக்களுடைய
என்ற பொருள்தரும் பாப்புலர் என்று மொழொபெயர்க்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சொற்களுக்கு
நேரான மொழிபெயர்ப்பு அதே உணர்வோட்டத்தை எப்பொழுதும் தருவதில்லை.. நாங்கள் working
class என்ற சொற்கூறை சில நேரங்களில்‘உழைக்கும்வர்க்க வீடுகள்’ என்றோ, classes populares என்பதைக்குறிக்கும்போது
‘உழைக்கும் வர்க்கம்’ அல்லது உழைக்கும் வர்க்க துரைகள்’ என்றோ குறிப்பிடுகிறோம்: இந்த
சூழலில் இதுதான் மிக்கனெருக்கமான பொதுவாக பயன்படுத்தப்படும் மாற்று அல்லது பதிலி ஆகும்.
3. சமூக வளர்ச்சித்துறை அமைச்சகம், ’Plano
Brasil Sem Miseria’
4. ‘ஆண்டியூன்ஸ், ‘Minha casa petro do fim?
5. ட்ரை காண்டினெண்டல்: சமூக ஆய்வுக்கான நிறுவனம்,
‘லூலாவும் ஜன நாயகத்துக்கான போராட்டமும்’
Lula and The Battle for Democracy.
6. ட்ரை காண்டினெண்டல்: சமூக ஆய்வுக்கான நிறுவனம்,
‘லூலாவும் ஜன நாயகத்துக்கான போராட்டமும்’
Lula and The Battle for Democracy
7. ஆண்டியூன்ஸ் , Dois anos de desgoverno’
8. காஸ்ட்ரோ ரெஜினா. Observatorio Covid-19
aponta major colapso sanitario e hospitalar da historia do Brasil’.
9. பிபிசி செய்திகள் பிரேஸில் ‘Na integra
:o que diz a dura de banqueiros e economistas com criticas a Bolsonaro e
propostas para pandemia
10. Folha
de S.Paulo .’Intacta,
base de Bolsonaro pensa como o president
na pandemia, mostra Datafolha’.
11. கறுப்பின மக்களால் ஆதியில் முதன்முதலாக நிலைநாட்டப்பட்ட நாட்டுப்புறம் சார்ந்த சமுதாயங்கள் ‘குயிலோம்போஸ்’
எதிர்ப்புக்களை தாங்கி புகலிடமாக வந்த இடத்தில் காலனிய பிரேஸிலால் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள்.
இந்த நாள் வரை பல குயிலோம்போஸ் சமுதாயங்கள் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்ளப்படுவதற்கு
போராடு கிறார்கள்:அவர்களது நிலத்தின் உரிமைக்காகவும் சண்டையிடுகிறார்கள்.
Bibliography
நூலின் விவரங்கள்
Antunes, L. Minha
casa perto do fim? [‘My House Near the End?’]
எனது வீடு முடிவின் அருகிலா?
Uol, Rio de Janeiro, Nov. 2019. https://economia.uol.com.br/
reportagens-especiais/minha-casa-minha-vida-dez-anos/.
Antunes, R. Dois
anos de desgoverno – a política da caverna
[‘Two Years of Misgovernment: The Politics of the Cave’].
(‘மோசமான
அரசின் இரண்டு ஆண்டுகள்: குகையின் அரசியல்)
A terra é redonda, Feb. 2021. http://www.ihu.unisinos.br/78-
noticias/607160-dois-anos-de-desgoverno-a-politica-da-cavernaartigo-
de-ricardo-antunes.
Castro, Regina. ‘Observatório Covid-19 aponta maior colapso
sanitário e hospitalar da história do Brasil’ [‘COVID-19
(கோவிட்ஆய்வு மையம் பிரேஸிலின் வரலாற்றைல் மாபெரும்
சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகளின் வீழ்ச்சியை சுட்டிக்காட்டுகிறது).
Observatory Points to the Biggest Healthcare and Hospital
Collapse in Brazil’s History’], Agência Fiocruz de Notícias, 16
March 2021, https://agencia.fiocruz.br/observatorio-covid-19-
aponta-maior-colapso-sanitario-e-hospitalar-da-historia-do-brasil
‘Intacta, base de Bolsonaro pensa como o presidente na pandemia,
mostra Datafolha’ [‘Bolsonaro’s Base Remains Unblemished and
Thinks Like The President during the Pandemic, Datafolhashows’],
(போல்ஸனோரோவின் அடித்தளம் அப்பழுக்கற்றதாக இருக்கிறது. மேலும் நோய்ப் பரவலின்போது அதிபரைப்போலவே நினைக்கிறது.
டேடா ஃபோல்ஹாஸ் காட்டுகிறது
Folha de S.Paulo, March 2021, https://www1.folha.uol.
com.br/poder/2021/03/intacta-base-de-bolsonaro-pensa-como-opresidente-na-pandemia-mostra-datafolha.shtml
சமூக வளர்ச்சிக்கான அமைச்சகம்
Ministry of Social Development. Plano Brasil Sem Miséria,
Cadernos de Resultados
தீவிரமான
வறுமைத்திட்டம் இல்லாத பிரேஸில்
[‘Brazil Without Extreme Poverty Plan,
Books of Results’]. 2015. https://www.mds.gov.br/webarquivos/
publicacao/brasil_sem_miseria/cadernodegraficosbsm-35anos.pdf
‘Na íntegra: o que diz a dura carta de banqueiros e economistas
com críticas a Bolsonaro e propostas para pandemia’
[‘Read theFull Harsh Letter
from Bankers and Economists Criticising
Bolsonaro and Proposed Actions for the Pandemic’], BBC
News Brasil, 21 March 2021,
போல்ஸனோரோவையும், நோய்த்தொற்று பரவலுக்கு முன்மொழியப்
பட்ட நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் வங்கியாளர் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கடுமையான
கடிதம்
https://www.bbc.com/portuguese/brasil-56485687
Tricontinental: Institute for Social Research. Lula and The Battle
for Democracy. Dossier 5, June 2018.
மூன்று கண்டங்கள்:சமூக ஆய்வுக்கான நிறுவனம்.
லூகாவும், ஜனநாயகத்துக்கான போராட்டமும். ஆவணதொகுப்பு
,ஜூன் 2018

No comments:
Post a Comment