பிரேஸிலின் இடதுசாரிகளை
எதிர்கொள்ளும் சவால்கள்
தகவல் தொகுப்பு
எண் 40
மூன்றுகண்டங்கள் சமூக ஆய்வுக்கான நிறுவனம்
மே. 2021
அட்டை
பிரேஸில் ஆய்வு
வலைதளத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு ஆய்வுகளின்படி தோராயமாக பிரேஸிலில்
உள்ள 1கோடியே 90 இலட்சம் மக்கள் கோவிட் 19 பெரும்பரவலின்போது பசியில் கிடந்தார்கள்:
மேலும்11 கோடியே 60 இலட்சம் மக்கள் (மொத்த மக்கள்தொகையில் 52%) அதே அளவுக்கான உணவுப்
பாதுகாப்பின்மையிலும் இருந்தார்கள்
Gobriela
Tornai(@gobrielatornai) – Design Ativista /2021
பிரேஸிலின் இடதுசாரிகளை
எதிர்கொள்ளும் சவால்கள்
தமிழில்
செ. நடேசன்
. .
தகவல் தொகுப்பு எண் 40 / சமூக ஆய்வுக்கான மூன்றுகண்ட நிறுவனம்
மே. 2021
அறிமுகம்
பிரேஸிலின்
அரசியலை யார் பின்தொடர்கிறார்களோ அவர்களுக்கு, அந்தநாடு 1980களில் நகரிய-இராணுவ சர்வாதிகாரம்
முடிவுக்கு வந்ததிலிருந்து மிகப் பெரிய சிக்கலில் வாழ்ந்துகொண்டிருக்கிறது அல்லது சிலர்
கூறுவது போல- 1889ல் பேரரசர் இரண்டாம் பெட்ரோ அதிகாரத்திலிருந்து அகற்றப் பட்டதிலிருந்து
பிரேஸிலின் ஒட்டுமொத்தவரலாறும் மிகவும் வலதுசாரியான அதன் அதிபர் ஜேய்ர் போல்ஸோனோரோவின்
தலைமையில் மிகப்பெரும் அரசியல் மற்றும் சமுதாயப் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது என்பது
மேலோட்டமாகப் பார்த்தால்கூட அது ஒரு புதிய செய்தியாக இருக்காது. அவர் 2019ல்இருந்து
ஓர் அரசியல் கட்சியோடு முறையாக இணைந்துகொள்ள வில்லை என்றாலும் இன்றும் சமுதாய ஆதரவு
மற்றும் நாட்டின் ஆளும்வர்க்கங்கள், ஆயுதப்படைகளை சார்ந்திருக்கிறார்.
ஏற்கனவே பின்பற்றிவந்த தீவிர புதிய தாராளமய திட்டங்களை
மேற் கொண்டதன் எதிர்விளைவுகள் போதுமானவைகளாக இல்லாதபோது, 2020ல் கொரோனா வைரஸின் தீவிரப்பரவல்களும்,
ஒட்டுமொத்த தவறான நிர்வாகமும், கொரோனா வைரஸை எதிர்கொள்வதில் இருந்த அலட்சியமும் சமூக,
பொருளாதார மற்றும் சுகாதாரக் காட்சிகளை மிகமோசமான நிலைக்கு கொண்டுசென்றது. நோய் மற்றும்
அறிவியல் ஆகிய இரண்டிலும் அரசின் அலட்சியம் கடும்சரிவான எண்ணிக்கைகளால் வெளிப்பட்டது:
பிரேஸிலில் 2021 ஏப்ரலில் கோவிட் 19ஆல் 4,00,000 மக்களுக்குமேல் அல்லது நாளொன்றுக்கு
3,000 பேர் இறந்தார்கள். 2020ல் மார்ச்சில் முதல் கொரோனா வைரஸின் தாக்குதலுக்குப்பின்
ஓராண்டுக்குப்பிறகு வைரஸின் உருமாறிய தோற்றத்தின்எழுச்சியாலும்,
சுகாதாரத்துறையின் முழுமையான தோல்வி யாலும் அந்தநாடு உலகத்துக்கே ஓர் அச்சுறுத்தலாக
ஆகிவிட்டது.1
இந்தவேளையில் கடந்த பத்தாண்டுகளில் மாபெரும் அரசியல்
போராட்டங் கள் எல்லாவற்றிலும் தோற்கடிக்கப்பட்ட பிரேஸிலின் இடதுசாரிகள் இந்த நாட்டின்
அரசியல் அதிகாரத்தை மீண்டும் அடைவதை நோக்கமாகக் கொண்டு மறுஅணிசேரவும், அதன் சமூகத்தளத்தை
உருவாக்கவும் முயற்சிக்கிறார்கள். இந்தசூழ்நிலையை நாம் எவ்வாறு முடிவுக்குக் கொண்டு
வரப்போகிறோம்? இந்தச் சிக்கலிலிருந்து வெளியேவர சமுதாயத்தை ஈடுபட வைக்கும் சாத்தியக்கூறுகள்
என்ன?
தகவல்தொகுப்பு எண்:40, சமூக ஆய்வுக்கான மூன்றுகண்ட
நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, ‘பிரேஸிலின் இடதுசாரிகளை எதிர்கொள்ளும் சவால்கள்’ பிரேஸிலின்
அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சவால்களைப் பகுப்பாய்வு செய்கிறது. இது நடைமுறைப்படுத்துவதற்கு
எளிதான கடமை அல்ல: ஏனென்றால், முற்போக்கு சக்திகளின் எண்ணிக்கைகளும், அவற்றுக் கிடையே
உள்ள வேறுபாடுகளும்: மேலும் ஏனென்றால், பிரேஸிலிய அரசியல் சூழலின் சிக்கலான கூறுகளும்.
இந்தக்காரணத்துக்காக, நாம் இந்த வழிமுறையை உருவாக்க உழைக்கும் வர்க்கங்களின் வெவ்வேறு
பிரதிநிதி களுடன் நமக்கு உதவுவதற்காக பேசுவதைத் தேர்ந்தெடுத்தோம். தேசிய மாணவர் யூனியனின்(
National Union of Students) துணைத்தலைவரும்,
மக்கள் இளைஞர் எழுச்சியின் (Popular Youth
Uprising) உறுப்பினருமான எலிடா எலனா-ஒன்றுபட்ட தொழிலாளர்களின் மையத்தின் தேசிய செயற்குழு(Unified Worker’s Central
(CUT) வின் ஜாண்டிரா உயெஹரா,
சோசலிசம் மற்றும் சுதந்திரம் கட்சி(Socialism and Freedom Party)யின் தேசியத்தலைவர்
ஜூலியானோ மெடெய்ரோஸ்(PSOL) , நிலமற்ற தொழிலாளர்களின் இயக்கத்தின்(Landless Workers
Movement) தேசிய செயற்குழுவின் கெல்லிமாஃபோர்ட்,(MST) தொழிலாளர் கட்சியின்
(WorkersParty) கூட்டமைப்பின் துணைத்தலைவரும், மற்றும் தலைவர் க்ளெய்ஸி ஹோஃப்மன்
(PT) மற்றும் சாவோ பாவ்லோ(IFSP) கூட்டமைப்பு நிறுவனத்தின் பேராசிரியரும், சோசலிசம்
மற்றும் சுதந்திரம் கட்சியின் உறுப்பினருமான வலேரியோ ஆர்கெரி(PSOL) ஆகியோரை பேட்டிகண்டோம்.
இந்தத்தகவல் தொகுப்பு ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டது:
முதல் பிரிவு அண்மைக்காலங்களில் பிரேஸிலின் இடதுசாரிகளால் பின்பற்றப்பட்ட பாதை யைப்
பகுப்பாய்வு செய்தது: இரண்டாவது, வலதுசாரிப் பிரிவுசக்திகளின் திடீர் பிளவுகளை, மறுஇணைவுகளை
பகுப்பாய்வு செய்தது: மூன்றாவது, ஒற்றுமையை உருவாக்கும் கருவிகளைப் பகுப்பாய்வு செய்தது:
நான்காவது, மக்களின் அடித்தளத்தைக்2 கட்டமைப்பதில் உள்ள சவால்களை பகுப்பாய்வு
செய்தது: கடைசியாக ஐந்தாவது பிரிவு, நாட்டின் மிகவும்குறிப்பிடத்தக்க புகழ்பெற்ற தலைவர்,
முன்னாள் அதிபர் லூயிஸ் இனாஸியோ லூலா த சில்வா-வின் பாத்திரத்தைப் பிரதிபலித்தது.
இந்த தகவல் தொகுப்பு முழுவதிலும் இடம்பெற்றுள்ள படங்கள்,
ஜன நாயகத்தை ஆதரிக்கவும், போலிச்செய்திகளை எதிர்த்துப்போராடவும் சுதந்திரமான கலையை,
தகவல்களை உருவாக்குவதையும், விநியோகிப்பதை யும் நோக்கமாகக்கொண்டு பிரேஸிலில் 2018ல்
நடந்த தேர்தலின்போது உருவான ஒரு கூட்டுமுயற்சியான ‘செயல்படுவோர் வரைபடம்’ (Activist Design) திட்டத்தின் பகுதிகளாகும்.
^ ^ ^ ^ ^
2021ல்
கோவிட் 19ஆல் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 2020ன் மரணங்களின் எண்ணிக்கையை ஏற்கனவே
கடந்துவிட்டது 2020 மார்ச் 12ல் ஏற்பட்ட முதல் கோவிட் 19 மரணம் முதல்2020 டிசம்பர்
31 வரை 1,94,949 மரணங்கள் நிகழ்ந்தன. இந்தஆண்டு அங்கு ஏற்கனவே 2,00,000 க்கும்மேற்பட்ட
மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
Leticala
Riberiro (@telurica.x)/ Design Ativista/ 2019
No comments:
Post a Comment