ஆர்.எஸ்.எஸ் - மூன்றாவது பரிமாணம்
திமிறிய பி.ஜே.பி.க்குக் கடிவாளமிட்ட மோகன்பகவத்
தினேஷ் நாராயணன் தமிழில்: செ.நடேசன்
ஐந்து
நாக்பூரில்
சர்சங்சாலக்கின் வருடாந்திர விஜயதசமிப்பேச்சு ஒவ்வொரு
ஆண்டிலும் மிக முக்கியமான பொதுக்கூட்டச் சொற்பொழிவாகக்
கருதப்படுகிறது. 2013 அக்டோபர் 13ஆம் நாள் பகவத் ஆற்றிய உரை முன்னவைகளிலிருந்து
பலவகைகளில் வித்தியாசமானதாக இருந்தது. அந்த அமைப்பின் வரலாற்றில் முதன்முறையாக
அதன்உச்சமட்டத்தலைவர் தேசியப்பொருளா தாரம், அரசின் கொள்கைகள், விலைவாசி உயர்வு,
கடன்கள், பணக்கட்டுப்பாடு பற்றிக் குறிப்பி டத்தக்க ஆதாரங்களுடன் பேச மொத்தநேரத்தில்
மூன்றில் ஒருபங்கை எடுத்துக்கொண்டார்.
“நமதுசொந்த அறிVவாற்றலைச் சார்ந்துநின்று,
நவீனத்தொழில்நுட்பங்களின் சாதக, பாதக அம்சங்களையும், இன்றைய உலகப்பொருளாதார
அமைப்பு மற்றும் அதன்போக்குகளையும் கண்டறிந்து, நிலைமைகளை ஒருங்கிணைத்து நாம்
கட்டாயம் வளர்ச்சியை அடையமுடியும். அதன் பயன்களைக் கடைக்கோட்டில் உள்ள
மனிதனுக்கும் சுயசார்பை உறுதிப்படுத்தி, வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, தரத்தை
உயர்த்தி, சுரண்டலிலிருந்து நீதியையும், சுதந்திரத்தையும் கொண்டுசேர்ககமுடியும்” என்று அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான
ஆர்.எஸ்.எஸ்.ஊழியர் களிடம் சொன்னார்.
உயரும் விலைவாசியைப்பற்றி, வீழ்ச்சியடையும் ரூபாய் மதிப்பைப்பற்றி, ஆழ்ந்துவரும் கடன்கள்பற்றி – முந்தைய தலைவர்கள் தொடாத தலைப்புகளை பகவத் பேசினார். அவரதுபேச்சு நேரடியாக வலைத்தளத்தில் ஒளிபரப்பப்பட்டது. நாடுதழுவிய சுயம் சேவக் குழுவினர் டிவிட்டரிலும் இடம்பெறச்செய்தனர். அதற்கு முந்தைய நாளில் ‘பாய்லின் புயல்’ காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் சிறிதுசிரமம் ஏற்பட்டது. ஆனாலும், ‘இந்தியாவிலிருந்து ஒளிபரப்பப்பட்ட தலைப்புக்களில் அதை முதன்மையானதாக நாங்கள் ஆக்கினோம்’ என கேசவ்கஞ்ச்-ல் என்னிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ்,துணைத்தலைவர் கூறினார்.
உயரும் விலைவாசியைப்பற்றி, வீழ்ச்சியடையும் ரூபாய் மதிப்பைப்பற்றி, ஆழ்ந்துவரும் கடன்கள்பற்றி – முந்தைய தலைவர்கள் தொடாத தலைப்புகளை பகவத் பேசினார். அவரதுபேச்சு நேரடியாக வலைத்தளத்தில் ஒளிபரப்பப்பட்டது. நாடுதழுவிய சுயம் சேவக் குழுவினர் டிவிட்டரிலும் இடம்பெறச்செய்தனர். அதற்கு முந்தைய நாளில் ‘பாய்லின் புயல்’ காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் சிறிதுசிரமம் ஏற்பட்டது. ஆனாலும், ‘இந்தியாவிலிருந்து ஒளிபரப்பப்பட்ட தலைப்புக்களில் அதை முதன்மையானதாக நாங்கள் ஆக்கினோம்’ என கேசவ்கஞ்ச்-ல் என்னிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ்,துணைத்தலைவர் கூறினார்.
நீண்டகாலமாக சங்அமைப்பின் பொருளாதாரத்தளத்தில்
ஆர்.எஸ்.எஸ்.-ன் துணைஅமைப் பான சுதேசி ஜாக்ரண் மஞ்ச் தான் முழங்கிவந்தது. அந்த
அமைப்பு முற்றிலும் உள்நாட்டைச் சார்ந்த தற்சார்புப் பொருளாதாரத்தையே
முன்னெடுத்துச் சென்றது. குறிப்பாக நாட்டில் அன்னிய முதலீட்டை சுதேசி ஜாக்ரண்
மஞ்ச் உறுதியாக எதிரத்துவந்தது.ஆர்.எஸ்.எஸ்.ம் பெரும்பாலும் சுதேசி ஜாக்ரண் மஞ்ச்
போலவே இதில் எச்சரிக்கையாக இருந்து வந்தது. இது, அன்னியமுதலீடுபற்றி
இருவிதக்கருத்துக்கள் கொண்டிருந்த பி.ஜே.பி.யுடன் ஆர்.எஸ்.எஸ்.ஐ அடிக்கடி
கருத்துமாறுபாடு கொள்ளவைத்தது. பகவத்தின்பேச்சு ஆர்.எஸ்.எஸ், தனது முந்தைய
பிடிவாதநிலையிலிருந்துவிலகித்தாராளநிலைக்கு மாறிவருவதைக் குறிப்பிடுவதாக – பல்வேறு
துறைகளில் அன்னியமுதலீட்டை வரவேற்பதாக இருந்தது. இது முரளிமனோகர் ஜோஷி தலைமையில்
தயாரிக்கப்பட்ட பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் பிரதிபலித்தது.
சுதேசி ஜாக்ரண் மஞ்ச், சங் மற்றும் பி.ஜே.பி.
ஆகியவை தங்கள் பொருளாதார மேடைகளில் எப்போதும் ஒன்றையொன்று ஒத்திருந்த ஒரே அம்சம்
ஊழல்தான். அன்னாஹசாரேயின் ஊழல் எதிர்ப்புப்போராட்டத்தைப் பலஆண்டுகளாக
ஆர்.எஸ்.எஸ்.ஆதரித்துவந்தது. 2011ல் கொல்கத்தா வில் பத்திரிக்கையாளர்களுடன் நடைபெற்ற
கலந்துரையாடலில் பகவத், ‘கிராமப்புறங் களுக்கான அன்னாஹசாரேவின்
வளர்ச்சித்திட்டங்களை உயர்த்திப்பிடித்தது ஆர்.எஸ்.எஸ்.தான். எங்கள் கிராமப்புற
வளர்ச்சித்திட்டங்களுக்கு அன்னாஹசாரேவின் உதவிகளைக்கூட நாங்கள் பெற்றோம். இந்த
நேரங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் ஆர்.எஸ்.எஸ். ஊழலுக்கு எதிரான இயக்கங்களை
மேற்கொள்ளுமாறு ஆலோசனை தந்தது”
என்றார். மிக அண்மைக் காலத்தில் ஹசாரேயின் முன்னாள் தளபதியான அரவிந்த்
கேஜ்ரிவாலின் தேர்தல் பிரச்சார உத்திகளை பி.ஜே.பி.க்கு ஒருமுன்மாதிரியாகக்
கருதினார்.
ஆர்.ஹெச்.துப்காரி தனதுஇல்லத்தில் பகலுணவின்போது
பகவத்திடம்,“நமதுபடகை, கேஜ்ரி வாலிடம் பறிகொடுத்துவிட்டோம் ” என்று கூறினார். “பி.ஜே.பி. அரசியல்வாதிகள் காங்கிரஸ் காரர் போலவே
நடந்துகொண்டு, பணம் சம்பாதிப்பதைப்பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள்” என துப்காரி பி.ஜே.பி.தலைவர்களிடம் சொன்னதை
நினைவுகூர்ந்தார்.”அவர்கள் கேஜ்ரிவாலைக் கவனத்தில் கொள்ளவேண்டும்” என்றும்,”கறைபடிந்த எந்த
ஒருவருக்கும் தேர்தலில் வாய்ப்ப ளிக்கக் கூடாது” என்றும் துப்காரி கூறினார்.
சங் அமைப்பில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில்
தொய்வு காணப்பட்டது. பகவத்கூடத் தவறு செய்தார் என்ற இரட்டைநிலை பற்றிய பதிவுகள்
இருந்தன. பெரும்பாலான சந்திப்புக்களின் முடிவில் அதிகாரபூர்வமற்ற கேள்வி-பதில்
நிகழ்ச்சிகளை நடத்தும் ஒருமரபு சங் தலைமைக்கு உண்டு. 2012ன் இறுதியில் கேரளாவின்
ஆழப்புலாவில் அத்தகைய ஒரு அமர்வின்முடிவில் பகவத்திடம் கூடங்குளம் அணுமின்நிலையம் பற்றியும்,
ஆர்.எஸ்.எஸ்.ஏன் அந்தப்போராட்டத்தின் ஒருபகுதியாக இல்லை? என்பதுபற்றியும்
கேள்விகள் எழுப்பப்பட்டன. அணுஉலைக்கு எதிரான போராட்டம் அந்த அணுஉலையின்
கட்டுமானப்பணி முழுவதும் நிறைவேறிய நிலையில் துவங்கியது என்றும்,
அந்தப்போராட்டத்தைக் கிறிஸ்தவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்கள் என்றும் பகவத்
பதிலளித்தார். இந்தப்பதில் அந்தத்திட்டம் அறிவிக்கப்பட்ட நாள்முதல் போராட்டத்தில்
ஈடுபாடுகொண்டிருந்த ‘சுதேசி ஜாக்ரண் மஞ்ச்’ன் தென்னிந்திய
அமைப்பாளரான கே.வி.பிஜூ வை எரிச்சலடைய வைத்தது. (பிஜூ இப்போது ‘சுதேசி ஜாக்ரண்
மஞ்ச்’ன் போட்டி அமைப்பான’ சுதேசி அந்தோலன்’-ன் அமைப்புச்செயலாளர்)
அவர் பகவத்துக்குத் தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது என பகவத்திடமே
கூறினார். அந்த நேரத்தில் கூட்டம் முடிக்கப்பட்டது. பகவத் பிஜூ வை மேடையின்
பின்புறம் தன்னைச் சந்திக்குமாறு கூறினார். பிஜூ அணுஉலைக்கு எதிரான போராட்டத்தின்
முழுவரலாற்றையும் பகவத்துக்கு விளக்கமாக எடுத்துக்கூறியபோது பகவத் பிஜூவிடம்,
‘இதைப்பற்றித் தனக்குத் தெரியாது’ என்று கூறினார்.
ஆழப்புலாவில் பிஜூவின் பகவத்துடனானசந்திப்பு
பிற்பகல்3.00மணியளவில் நடைபெற்றது. அன்று இரவு 9.00மணியளவில்‘சுதேசி ஜாக்ரண் மஞ்ச்’ன் தேசிய இணை அமைப்பாளரான பகவதி பிரகாஷ் சர்மா தொலைபேசியில்
பிஜூவிடம் ‘சுதேசி ஜாக்ரண் மஞ்ச்’ல் இருந்து பதவி
விலகுமாறு’ கூறினார் என்றார் பிஜூ.
மூன்று நட்களுக்குப்பிறகு மூத்த
ஆர்.எஸ்.எஸ்.தலைவரான ரங்காஹரி பிஜூவிடம் அவர் மீண்டும் சர்சங்சாலக்கைச் சந்திக்கவேண்டும்
என்றும், ‘சுதேசி ஜாக்ரண் மஞ்ச்’ல் நடைபெற்று
வரும் ஊழல்கள்பற்றிக் கூறவேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஓராண்டுகாலத்திற்கும்
மேலாக பிஜூவும், அப்பாலா பிரசாத் என்ற இன்னொரு அமைப்புச்செயலாளரும் ‘சுதேசி
ஜாக்ரண் மஞ்ச்’ன் மையக்குழு உறுப்பினரும், முன்னாள் தேசிய அமைப்பாளருமான
பி.முரளி தரராவ்க்கு எதிரான பிரச்சாரம் செய்துவந்தனர். முரளிதரராவ் ‘சுதேசிஜாக்ரண்
மஞ்ச்’ன் நிதியை அவரது மனைவி பிரதிபாவின் பெயரில் சொத்துவாங்கப்
பயன்படுத்தியதற்கான குற்றச்சாட்டை நிரூபிக்க அதற்குரிய ஆவணங்களையும்
கொடுத்திருந்தனர். ஆர்.எஸ்.எஸ்.ன் தேசிய செயற்குழு உறுப்பினர் மதன்தாஸ்தேவியிடம்,
“சொத்தை விலைக்கு வாங்குவதற்கு ஒப்புதல் அளித்தீகளா?’ என்று கேட்டதற்கு, ‘முரளிதரராவ் யாரிடமும்சம்மதம் பெறவில்லை’ என்பதை ஒப்புக்கொண்டார்.( இதுபற்றிய முரளிதரராவின் கருத்தை
அறிய நான் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியபோது, ‘தான் 2008 டிசம்பரில் ‘சுதேசி
ஜாக்ரண் மஞ்ச்’ஐ விட்டு விலகிவிட்டதாக எழுதினார். ஆனால்,
இந்தப்பரிவர்த்தனை 2010 நடைபெற்றுள்ளது என நான் சுட்டிக்காட்டிய போது அவர்
பதிலளிக்கவில்லை)
பிஜூ இந்தப்பிரச்சனையை ‘சுதேசி ஜாக்ரண் மஞ்ச்’ன் தேசிய இணை அமைப்பாளரான எஸ்.குருமூர்த்தியிடம் கொண்டுசென்றபோது
அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் பிறகு அதைப்புறக்கணித்துவிட்டார்.
பின்னர் சென்னையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். தேசியசெயற்குழுவில் பிஜூ பகவத்துடன்
பேசினார். அவர் இந்தக்குற்றச்சாட்டுக்கள்பற்றி விவாதிக்க மீண்டும் ஒருமுறை
சந்திப்போம் என்று பிஜூவிடம் கூறினார்.
பிஜூ தங்கள் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக்கோரி
இரண்டு நினைவூட்டல்களை அனுப்பினார். பிஜூவுக்கு ஆர்.எஸ்.எஸ். இணைஅமைப்பாளர்
கே.சி.கண்ணனிடமிருந்து ஒருதொலைபேசி அழைப்பு வந்தது. “நீங்கள்‘சுதேசி ஜாக்ரண் மஞ்ச்’ல் உள்ள பிரச்சனைகள்பற்றி எடுத்துக்கூற சர்சங்சாலக்-ஐச்
சந்திக்க விரும்புகிறீர்கள். சரியா? அவர் எல்லாப் பிரச்சனைகளைப்பற்றியும்
தெரிந்திருக்கிறார். ‘தாம் இத்தகையபிரச்சனைகளில் தலையிடுவதில்லை’ என்றுகூறி விட்டார்.’ எனக் கண்ணன் தம்மிடம் தெரிவித்ததாக பிஜூ கூறினார். சிலமாதப்
போராட்டங்களுக்குப்பிறகு கடைசியாக முரளிதரராவ் பணத்தைத்திரும்பச் செலுத்த
வற்புறுத்தப்பட்டர்.
பகவத்தின் தலைமையின்கீழ் ஆர்.எஸ்.எஸ். தனது
பொருளாதார அணுகுமுறையைத் தனது தத்துவார்த்தஉயிர்ப்பைத் தக்கவைத்துக்கொண்டே,புதுப்பித்துக்கொண்டது.அதன்மூலம்
பொருளா தார தாராளமயத்தின் விளைவாக அண்மைக்காலத்தில் எழுந்துள்ள கலாச்சார
மாற்றங்களை எவ்வாறு அணுகுவது என்று கவலையையும் ஓரளவு எதிர்கொண்டது. ‘ஊழல்வயப்பட்ட
சங் ஊழியர்களின் நடவடிக்கைகளைச் சகித்துக்கொள்வது’ என்றநிலையை சர்சங்சாலக் எடுத்தார்.
ஆனால் அந்த அமைப்பு நீண்டகாலமகவே தனது
உறுப்பினர்களிடையே நிலவிவந்த மத சகிப்புத்தன்மை இன்மையிலிருந்து – குறிப்பாக
முஸ்லீம்களுக்கு எதிரானதிலிருந்து விடுபட முடியவில்லை. இந்தப்போக்கு
அதுகடைப்பிடிக்கும் சந்தைப்பொருளாதார நிலையோடும், தீவிர இந்துதேசியம் என்ற
மையக்கோட்பாட்டோடும் ஒருங்கிணைந்திருந்தது.
தனது உறுப்பினர்களிடையே மதவெறுப்புணர்வையும்,
வன்முறையையும் ஊட்டிவளர்த்து வருகிற ஆர்.எஸ்.எஸ். தனது பொதுக்குழுவில்
இதைத்தொடர்ந்து மறுத்து வந்தாலும், சங் குடும்பத்தில் தீவிரம் பெற்றிருந்த
சகிப்புத்தன்மையின்மையின் பெரிய மற்றும் சிறிய எடுத்துக்காட்டுகள் மோடியின்
தேர்தல்பிரச்சார மேலாளர் உத்திரப்பிரதேசத்தில் கலவரம் பாதித்த முஜாபர்நகரில்
பயன்படுத்திய ‘பழிவாங்குதல்’ மற்றும் ‘கௌரவம்’ பற்றிய பேச்சுக்களும், வி.ஹெச்.பி.யின் தலைவர்
‘முஸ்லீம்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்’என்று தீவிரநடவடிக்கைக்கு அழைப்புவிடுத்ததும் தொடர்ந்து பத்திரிக்கை களில்
செய்திகளாகக் கசிந்து வருகின்றன. பகவத்கூட அடிக்கடி, ‘முஸ்லீம்கள் இந்துப் பெண்களைக்
குறிவைத்து ‘லவ்ஜிகாத்’ நடத்திவருவதாகக்
குற்றம்சாட்டி வருகிறார். இந்தப்போக்கில்தான் ஆர்.எஸ்.எஸ்.உறுப்பினர்கள் வளர்க்கப்பட்டுள்ளார்கள்,
என முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
நாக்பூரில் ஆறாவது அடுக்குமாடிக்
குடியிருப்பில் வசிப்பவரும், ஆர்.எஸ்.எஸ்.குடும்பத்தில் வளர்ந்தவருமான முன்னாள்
பத்திரிக்கையாளர் ஷ்யாம்பந்தாரி பாண்டேயை ஜனவரி 1ல் நான் சந்திக்கச்சென்றேன்.
“நான் பள்ளியில் சேர்வதற்குமுன்பே ஆர்.எஸ்.எஸ்.ல் சேர்ந்துவிட்டேன். நான்
கல்லூரியில் எனது பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பே எனது ஆர்.எஸ்.எஸ். பயிற்சியை
முடித்துவிட்டேன்” என்றார் பந்தாரி பாண்டே. 1970ல் ஆர்.எஸ்.எஸ்.ல்
அலுவலர் ஆவதற்கான தனது மூன்றாவதுஆண்டுப் பயிற்சியைப் பெற்றார். ஆர்.எஸ்.எஸ்.ல்
முழுநேர ஊழியராவத்ற்கான ஒருபயிற்சியின்போது நிகழ்ந்த ஒருசம்பவத்தைப் பந்தாரிபாண்டே
நினைவு கூர்ந்தார். கேள்வி-பதில் நிகழ்ச்சியின்போது ஒருதொண்டர் தென்னிந்தியா
முழுமைக்குமான சங்ஊழியர்களின் தலைவரான யாதவராவ் ஜோஷியிடம்,”ஆர்.எஸ்.எஸ்.ஓர் இந்து அமைப்பு என்று நாம் கூறுகிறோம். நம்முடையது
இந்துதேசியம் என்றும் நாம் கூறுகிறோம். இந்தியா இந்துக்களுக்கு உரியது என்றும்
நாம் கூறுகிறோம். அதே மூச்சில் இந்த நாட்டில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் இந்த
நாட்டை நேசிக்கும்வரை இங்கேயே வாழலாம் என்றும் வரவேற்கிறோம். நாம் ஏன்
இந்தச்சலுகையை அவர்களுக்கு அளிக்கவேண்டும்? இது ஓர் இந்துநாடு என்றால் அவர்களுக்கு
இங்கே இடமில்லை என்று தெளிவாகக்கூறுவதில்லையே ஏன்?”என்று கேள்விகளை அடுக்கினார்.
“இந்தியாவில் நீங்கள் வாழவேண்டுமென்று
விரும்பினால் இந்துயிசத்திற்கு மாறுங்கள் ;அல்லது ஒழிந்துபோய்விடுங்கள்”என்று முஸ்லீம்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் தெளிவாகக்
கூறுமளவுக்கு இப்போது ஆர்.எஸ்.எஸ்.மற்றும் இந்துசமூகம் போதுமான வலிமையுடன் இல்லை.
ஆனால், ஆர்.எஸ்.எஸ்.ம், இந்து சமூகமும் அத்தகைய வலிமை பெறும்போது நாம் அவர்களிடம்,
“நீங்கள் இந்தியாவில் வாழவிரும்பினால், நீங்கள் இந்தநாட்டை நேசித்தால் சிலதலைமுறைகளுக்குமுன் நீங்கள் இந்துக்களாக
இருந்தீர்கள் என்பதையும், நீங்கள் இந்து கட்டமைப்புக்குள் வந்தாகவேண்டும்
என்பதையும் அவர்களிடம் கூறுவோம்” என்று
யாதவராவ் ஜோஷி பதிலளித்தார்” என்று
பந்தாரி பாண்டே கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்.ன் மதஉண்ர்வுக்கொள்கைகள்
எப்போதும் இந்தஅளவு எல்லைகடந்ததாக இருந்ததில்லை. தேவ்ரஸ் பொறுப்பேற்ற பின்னுள்ள
பத்து ஆண்டுகளில் சங்அமைப்பு தன்மீது படிந்துள்ள மதவாத அவதூறுகளை முற்றிலும் துடைத்தெறிய
நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், அதன்பின் இராமர் கோவில் இயக்கமும், பாபர்மசூதி
இடிப்பும் நிகழ்ந்து சங்ஒரு மதவாத அடிப்படை அமைப்பு என்ற அழிக்கமுடியாத முத்திரையை
அதன்மீது பதித்துவிட்டது. அந்த இயக்கத்தின்போது, தனது வேர்களைத் தேடும்முயற்சி
ஆர்.எஸ்.எஸ்.ல் நடைபெற்று அதுபற்றிய விளக்கத்தை அளித்தது. அந்த விளக்கம்
ஒருதலைமுறைப்பிளவை ஏற்படுத்தி யதாகவும் என்னிடம் கூறப்பட்டது.
1950லிருந்து பிரச்சாரக் ஆக இருந்த கேரள மாநில
ஆர்.எஸ்.எஸ்.செயற்குழு உறுப்பினர், ‘முந்தைய நாட்களில் சங்அமைப்புக்களின்
கூட்டங்களில் அயோத்தி பிரச்சனை என்றுமே விவாதிக்கப்பட்டதில்லை’ என்றார். “குருஜீயின் தொகுப்பு நூல்களில் அயோத்தி
பற்றியோ, இராமர்கோவில் பற்றியோ ஒருமுறைகூடக் குறிப்பிடவில்லை” என்றார்அவர். ஒருமூத்த தலைவர் என்னிடம்,”அயோத்தியா இயக்கத்தில் ஆ.எஸ்.எஸ்.பங்கேற்றது, நாயை அதன்வால் வழி நடத்தியது
போன்றது” என்றார்.
அவர் மேலும் கூறினார்: ”அந்த ஒரேஒரு நிகழ்ச்சி- பாபர் மசூதியை இடித்தது – சங் ஆதரவாளர்களாகஇருந்த ஆயிரக்கணக்கானோரை
அதனிடமிருந்து அன்னியப்படுத்திவிட்டது. கேரளஉயர்நீதிமன்ற நீதிபதிகள்
வெளிப்படையாகவே வி.ஹெச்.பி. மாநாடுகளில் கலந்துகொண் டதை நினைத்துப்பார்க்கிறேன்.
அதேபோல பல முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் ஜனசங்கில் சேரவிரும்பினார்கள். இப்போது
அவர்கள் அதனுடன் இணைந்திருக்க விரும்பவில்லை.”
இந்தியசமூகத்தில்ம்தசகிப்புத்தன்மையின்மைக்கும்,
மதக் கலவரங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்.ம் அதன்கிளை அமைப்புக்களும் மட்டுமே ஒட்டுமொத்தக்
குத்தகை கொண்டிருக்கவில்லை. இராமர்கோவில் போராட்டங்களிலும்கூட இது
உண்மையாகவே இருந்தது..’இந்தப் போராட்டம்
காங்கிரஸ் விதைத்த விதையிலிருந்தே வளர்ந்தது” என சங் அமைப்பிலிருந்த தேவேந்திரசொரூப் மற்றும்அதன் 12 தேசியத்தலைவர்களில்
ஒருவர் என இருவரும் என்னிடம் கூறினர்கள். இதை கிறிஸ்டொபர் ஜெஃப்ரால்ட் எழுதிய
‘இந்து தேசிய இயக்கமும், இந்திய அரசியலும் I(TThe
Hindu Nationalist Movement and Indian Politics) என்ற நூல்
உறுதிப்படுத்தியது.
உ.பி.யின் முன்னாள் அமைச்சரும்,வயதுமுதிர்ந்த
காங்கிரஸ் தலைவருமான தாவ் தயாள் கன்னாதான் வி.ஹெச்.பி.க்கு முன்னரே 1983ல் இராமர்
பிறந்த இடம் என்று கருதப்பட்ட இடத்தைச்சுற்றிலும் ஒருகோவில் கட்டும் திட்டத்தை
முன்வைத்தார். இது, இந்திராகாந்தி நாடு முழுவதுமுள்ள புண்ணியநதிகளுக்கும்,
புனிதஸ்தலங்களுக்கும், கோவில்களுக்கும் புனிதப் பயணம் சென்றபோதும்,
இந்திபேசும்மையப்பகுதிகளில் “இந்துவின் மேலாதிக்கத்தை”உயர்த்திப் பேசியபோதும் தொடர்ந்தது. 1984ல் இந்திராகாந்தி மறைவுக்குச் சில
ஆண்டுகளின்பின், இராமர் கோவில்இயக்கம் வலுப்பெற்றபோது ஆர்.எஸ்.எஸ்.ன் சர்சங்சாலக்
தேவ்ரஸ், காங்கிரசின் இரகசியத்தூதரும், முன்னாள் மத்திய
அமைச்சருமான பானுபிரகாஷ் சிங் ஆகிய இருவரும் சந்தித்துப்பேச ஒரு இரகசியக்கூட்டத்தை
ராஜிவ் காந்தி ஏற்பாடு செய்தார். அவர்களது அந்த உயர்மட்ட ஆலோசனைக்கூட்டத்தில், “1989
நாடாளுமன்றத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். காங்கிரசுக்கு ஆதரவளித்தால் அயோத்தியில்
இராமர் கோவில் கட்டுவதற்கு ராஜிவ்காந்தி அனுமதி அளிக்கத்தயாராக உள்ளார்” என்று பானுபிரகாஷ்சிங் தேவ்ரஸிடம் கூறினார். தேவ்ரஸும் அதை
ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் அரசு கால்கோள் நாட்டும் விழாவை
நடத்திக்கொள்ளஅனுமதித்தது. ஆனால்,முஸ்லீம்களிடமிருந்து கடும்ஆட்சேபக்குரல்
எழுந்தபின் தனது முடிவை
மாற்றிக்கொண்டது.
பகவத்தின்காலத்தில்
பி.ஜே.பி.யின்தேர்தல்அறிக்கையில் இடம்பெற்றிருந்த இராமர் கோவில் இயக்கம் பெருமளவுக்கு
வி.ஹெச்.பி.யின் சிறியதளத்துக்கு ஓரம்கட்டப்பட்டது. ஓரிருஆண்டுகள் முன் கேரளாவின்
திருப்புனித்துராவில் நடைபெற்ற ஒருகூட்டத்தில் அயோத்தி பற்றி பகவத்திடம், “
இராமர்கோவிலை அங்கு கட்ட இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பகவத், “இந்தப்பிரச்சனைக்கு இன்னும் அடுத்த 30
ஆண்டுகளிலும் ஒருதீர்வு காணமுடியாது. என்று பதில்லளித்தார். பின்னர் அவர்
புன்னகையுடன்,”இது வி.ஹெச்.பி.யினுடைய மிகப்பெரிய பிரச்சனையும்கூட.
இந்தப்பிரச்சனையை அவ்வளவு காலத்திற்கு உயிர்ப்புடன் வைத்திருப்போம்” என்றார்.
கடந்த பத்து ஆண்டுகளில் சங் அமைப்புக்கு வலிமிகுந்த
வேதனைகளை அளிக்கும் நிகழ்ச்சிகள் உருவாயின. பகவத் பொதுச்செயலாளராக இருந்தகாலத்தில்
2006க்கும் 2008க்கும் இடையில் அசீமானந்தாவும், இந்து தீவிரவாதிகளும் நடத்திய
குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையில் ஆர்.எஸ்.எஸ். தேசியசெயற்குழ்
உறுப்பினர் இந்திரேஷ்குமார் பெயர் இடம்பெற்றது, குற்றப்புலன்விசாரணைகள்
ஆமைவேகத்தில் நடைபெற்றபோதிலும் இந்திரேஷ் குமார்மீது குற்றச்சாட்டுக்கள்
தொடரவாய்ப்புக்கள் இருந்தன.(இதுபற்றித் தேசியப்புலனாய்வுக் கழகம் கருத்துத்
தெரிவிக்க மெறுத்துவிட்டது) அசீமானந்தா கடந்த ஜனவரியில், ‘ஆர்.எஸ்.எஸ். தலைவர்
இந்தத் தாக்குதல்களுக்கு அனுமதி அளித்தார்” என்று
‘த கேரவன்’ இதழில் பேட்டியளித்தபின் ‘பகவத்தும்கூட
விசாரணைவளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்’ என்ற
கருத்து எழுந்தது.
பி.ஜே.பி.யின் டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில்
வேலைசெய்த சுயம்சேவக் என்னிடம் ‘இந்தக் குறிப்பிட்ட தேர்தலில் மட்டும்
ஆர்.எஸ்.எஸ். இத்தகைய தீவிர ஆர்வம் கொண்டிருப்பதற்கான காரணம், “அவர்கள் தாங்கள்
இனி ஜீவித்திருக்கமுடியுமா? என்ற பயத்தில் உள்ளார்கள்” என்று கூறினார். “இன்னொரு ஐ.மு.கூ.அரசு சங்தலைவர்களை பயங்கரவாதவழக்குகளில்
இணைக்கக் கட்டாயம் முயற்சிக்கும். அது இந்த அமைப்பையே சீர்குலைத்துவிடும்” என்றார் அவர். அந்த வாய்ப்பு இப்போது
குறைந்துவிட்டாலும், சங்உறுப்பினர்கள்மீதான வழக்குகளும், வன்முறை யில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களும்
டொமாகிள்ஸ் கத்தியைப்போல ஆர்.எஸ்.எஸ்.ன் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கிறது.
நான் புதுடெல்லியில் கிழக்குபடேல்நகரிலுள்ள
அலுவலகத்தில் 2013அக்டோபரில் முன்னாள் பி.ஜே.பி.பொதுச்செயலாளர்
கே.என்.கோவிந்தாச்சார்யாவைச் சந்தித்தபோது, 1972ல் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல்
வாஜ்பேயி எழுதிய ஒருகட்டுரைபற்றிக் கூறினார். 47 வயதான சுயம்சேவக் ஆகவும்,
ஜன்சங்கின் தலைவராகவும் இருந்த வாஜ்பேயி அந்தக்கட்டுரையில்,”பன்முகத்தனமை கொண்ட இந்தியாவில் மிகவும் கடுமையான கொள்கைகளைக்கொண்ட கட்சி
எப்போதும் ஆட்சிஅதிகாரத்துக்கு வரமுடியாது. அதிகபட்சம் செல்வாக்குமிக்க,
அழுத்தம்தரக்கூடிய ஒருகுழு வாக இருக்கலாம். சுயம்சேவக்குகளின் செயல்பாட்டுக்கு
இரண்டுவழிமுறைகள் உள்ளன, ஒன்று, ஆட்சி அதிகாரத்துக்குவரும் எண்ணத்தைக்கைவிடுங்கள்.
அல்லது, கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு ஆட்சிஅதிகாரத்துக்கு வாருங்கள்.அதன்பின்,
ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகத் தங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்”
இந்தக்கட்டுரை வெளிவந்தபின், வாஜ்பேயியின்
கருத்துக்களைப் பரிசீலனைசெய்வதற்காகத் தனது தேசியத் தலைவர்களின் கூட்டத்தை
சங்அமைப்பு கூட்டியது. சர்சங்சாலக் கோல்வாக்கர் தத்துவார்த்தரீதியாக
ஒருகொள்கைபூர்வமான கட்சி ஆட்சிக்கு வரமுடியும் என எண்ணினார். ஆனால், வாஜ்பேயி
அத்தகைய வாய்ப்புக்கள்பற்றி விவாதிப்பதில் விருப்பமற்று இருந்தார். அவர்
எந்தப்பாதையில் செல்லவேண்டும் என்ற தெளிவான வழிகாட்டலை விரும்பினார். அதை
வாஜ்பேயியிடமும், அவருடன் கட்சியில் உள்ள தலைவர்களிடமும் விட்டுவிடுவதாக
கோல்வாக்கர் வாஜ்பேயியிடம் கூறினார்.
கொல்கத்தா பயிற்சிமுகாமில் 2013 ஆகஸ்டில்
பத்திரிக்கையாளர்களிடம் பகவத் தெரிவித்த தைப்போல ‘இந்தப்பிரச்சனைகளுக்குக்
கண்ணுக்குத்தெரியும் எதிர்காலத்தில் தீர்வுகாணக் கூடிய ஒரு நல்ல வாய்ப்பாக
இந்தத்தேர்தலை சங் குடும்பம் கருதியது. இதில் ஆர்.எஸ்.எஸ். எந்தப்பாதையில்
தலைமைதாங்கவேண்டும் என்பதில் பகவத் தன்னளவில் நீண்டகாலமாகவே உறுதியாக இருந்தார்.
1970ன் முற்பகுதியில் திரைப்படத்தயாரிப்பாளர் லலித்வச்சானியிடம் அளித்த பேட்டியில்
வெளியிடப்படாத ஒருபகுதியில் சங்அமைப்பு எதிர்கொண்டிருந்த புதிய சவால்கள்
பற்றிக்கூறியிருந்தார். “ஆர்.எஸ்.எஸ்.ன் மிகமோசமானகாலம் முடிந்துவிட்டது. முதலில்
இந்த அமைப்பு புறக்கணிக்கப்பட்டது. அப்போது எங்களிடம் பணமோ, அதற்கான வழிமுறைகளோ
இல்லை. அது ஒருசிறிய அமைப்பாக இருந்தது. பின்னர் இந்த அமைப்பு
எதிர்ப்புக்குள்ளானது. இதற்கு எதிராக ஏராளமான எதிர்மறைப்பிரச்சாரங்களும்,
விளம்பரங்களும் நடைபெற்றன. மக்களிடம் ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிரான உணர்வு
நிறைந்திருந்தது. இப்போது அந்தக் காலகட்டம் முடிந்துவிட்டது. இந்த நேரத்தில்
நம்முன் உள்ளபாதை தெளிவாக உள்ளது. நமது சிந்தனைக்கு இனிமேல் எதிர்ப்பு ஏதுமில்லை.
ஒருசில இருந்தன: அவை அரசியல் காரணங்களால். அவைபற்றி நாம் கவலைப்படத் தேவை இல்லை.
நாம் நமக்கே உர்ய தனியான செயல்முறைகளால் அவற்றைக்கையாளுவோம்”
ஜனவரி 2009ல் இந்த வழிமுறையை எதிரொலித்தார். சர்சங்சாலக்
ஆக வருவதற்கு மூன்று மாதங்கள்முன்பு தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும்
நிர்வாகத்துறைகளில் இருந்த இளம் தொழில்துறையினரிடம் பகவத், “நமது நாட்டில் தற்போது
நிலவிவரும் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வுகாண்பது என்பதுதான் அடுத்த கேள்வி.
இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பவை களுக்கு நமது பதில் மிகக்கச்சிதமாகப் பொருந்தும்.
சங்அமைப்பு அவற்றை ஒருங்கிணைப்பதில் உதவும். மற்றவற்றை சுயம்சேவக்குகள் தாங்களாகவே
செய்திடவேண்டும். 1925முதல் 2008வரையான சங்அமைப்பின் வளர்ச்சிப்போக்கு நாம் உறுதியாக
நமது திட்டங்களோடு நமது இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்பதைக்
காட்டுகிறது. இது ஒருதனிப் பட்டவரைப் பற்றியது.அவர் ஊக்கப்படுத்தப்படவேண்டும்.
இதில் சிரமங்கள் உண்டு. ஆனால், நாம் பிரச்சனைகளைப் பற்றிமட்டும்
பேசிக்கொண்டிருப்பவர்கள் அல்ல. இவற்றை நாம் தாண்டிவருவோம். பிரச்சனைகளை வென்று
அடிபணிய வைப்போம். நமது செயல்பாட்டின் வேகத்தை மிகத்திறமையாக முடுக்கிவிடுவோம்.
நம்முன் இந்தச் சித்திரம் தெளிவாக உள்ளது.
இலக்கு மட்டுமல்ல: தெளிவான நடைமுறைத் தந்திரங்கள், அடுத்தடுத்த கட்டங்கள்,
வழிமுறைகள் எல்லாம் வகுக்கப்பட்ட ஒரு தெளிவான திட்டம் நம்முன் உள்ளது.”
(முற்றும்)
நன்றி: ‘த கேரவன்’ மே 2014 இதழ்

No comments:
Post a Comment