ஆர்.எஸ்.எஸ் - மூன்றாவது பரிமாணம்
திமிறிய பி.ஜே.பி.க்குக் கடிவாளமிட்ட மோகன்பகவத்
தினேஷ் நாராயணன் தமிழில்: செ.நடேசன்
இரண்டு
செப்டம்பர்13 வெள்ளியன்று கொல்கத்தா
கருத்தரங்கு முடிவடைந்த ஒருமாதத்திற்குப்பின் பி.ஜே.பி.யின் அதிகாரபூர்வபிரதமர்வேட்பாளராக
மோடியின்பெயர் அறிவிக்கப்பட்டது.அக்டோபர் துவக்கத்தில் ‘திஹிந்து’வில்
வித்யாசுப்பிரமணியம் ஒருகருத்துப்பதிவை ‘1949ன் மறக்கப்பட்ட உறுதிமொழி’ என்றதலைப்பில்
எழுதினார். இதில் அவர் “மோடியின் நியமனம் அரசியலைவிட்டு விலகி நிற்பதாகத் தனது அமைப்புவிதிகளில்
அளித்திருந்த உத்தரவாதத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துரோகம் இழைத்துவிட்டதைக் காட்டுகிறது” என்று
தெரிவித்தார். சிலவாரங்களுக்குப்பின் காங்கிரஸ் அமைச்சர் ப,சிதம்பரம் தமிழ்நாட்டில்
ஒருதேர்தல் பொதுக்கூட்டத்தில்,’2014 பொதுத்தேர்தல்
ஒருமஹாபாரத யுத்தம். காங்கிரசுக்கும், இதுவரை அரசியல் சார்பற்ற அமைப்பு என்று
கூறிவந்த – ஆனால் இப்போது தனது அரசியல் முகமான பி.ஜே.பி.யைத் தனது
முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள ஆர்.எஸ்.எஸ்.க்கும் நடைபெறப்போகும் ஒரு
இதிகாசப்போர்’ என்று கூறினார்.
தே ஜ கூ. அரசின் முன்னாள் மத்திய் அமைச்சர்
ஒருவருடன் நான் பேசியபோது அவர் என்னிடம் ‘ஆர்.எஸ்.எஸ்.ஸிடமிருந்து வழிகாட்டுதல் வந்துவிட்டது. இனி யோசிப்பதை
நிறுத்திவிடு”(சூச்சனா ஆய்:
சொச்னா பந்த்) என்று பி.ஜே.பி,க்குள் ஒருபொதுவான பேச்சு உள்ளது” என்றார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். எப்போதும் அரசியலும்,
அரசியல் வேலைகளும் தனது முறையானவேலை அல்ல என்ற நிலைபாட்டையே கூறிவந்தது. ஆனால் அது
பி.ஜே.பி.யின் கொள்கைகளை வகுத்துத்தருவது, தேவைப்படும் நேரங்களில் அறிவுரை
வழங்குவது , தனது ஊழியர்களை பி.ஜே.பி.க்குப் பணிசெய்யவைப்பது என்ற எதார்த்தங்களை
மனமின்றி எரிச்சலுடன் ஒப்புக்கொண்டது. தேசிய செயற்குழு உறுப்பினரும், சங்அமைப்பின்
பி.ஜே.பி.யுடனான செய்தித்தொடர்பாளருமான மதன்தாஸ் தேவி உட்படப் பலமூத்த
ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் என்னிடம் ‘பி.ஜே.பி.யின் உள்விவகாரங்களில்
ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்தப்பங்கும் இல்லை. பி.ஜே.பி.யின் முடிவுகள் பி.ஜே.பி.யால்
மட்டுமே தீர்மானிக்கப் படுகின்றன’ என்றார்கள்.
முன்பு ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியராக இருந்த எல்.கே.அத்வானி ஆர்.எஸ்.எஸ் –
பி.ஜே.பி. உறவை மகாத்மா காந்திக்கும், காங்கிரசுக்கும் இடையேயான உறவைப்போன்றது
என்று குறிப்பிட்டார்.
இவை எல்லாம் பி.ஜே.பி.யின் தற்போதைய தேர்தல்
பிரச்சாரங்களில் ஆர்.எஸ்.எஸ்.ன் நேரடிப்பங்கேற்பை உறுதிசெய்த மிக முக்கியமான
ஆதாரங்களாகவும், ஆர்.எஸ்.எஸ்.ன் வழி மாறிய செயல்களாகவும் அமைந்தன.
சிதம்பரத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றபோது,
மஹாராஷ்ட்ராவின் அமராவதியில் 300 ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்கள் திரண்டனர்.
அந்தக்கூட்டத்தில் விவாதத்திற்கான முக்கியப் பொருள் 2014 பொதுத்தேர்தல்தான்.
சங்குடும்பம் ஆட்சிஅதிகாரத்துக்கு வரவேண்டும் என்பது
தெளிவாகக்குறிப்பிடப்பட்டதுடன் ஒருமனதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சிலநாட்களுக்குப்பின் டெல்லி ஜந்தன்வாலனில்
கேசவ்கஞ்ச்சில்உள்ள மாநிலத்தலைமை அலுவலகத்தில் (இதுபோல 12க்கும் மேற்பட்ட மாநில
அமைப்புக்களில் உடற்பயிற்சி, ஸ்தாபனம், பதவி நிலைஉயர்த்துதல் ஆகியவை உள்ளிட்ட
பலபிரிவுகள் ஆர்.எஸ்.எஸ். வேலைகளைச்செய்துவருகின்றன.) ஆர்.எஸ்.எஸ்.ன்
தேசியத்தலைவர்களில் துணைத்தலைவர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் வித்யா சுப்பிரமணியம்
எழுதிய கட்டுரையைக் கிண்டல் செய்தார். “ஆர்.எஸ்.எஸ்.ன் அமைப்புவிதிகள் என்ன?
ஆர்.எஸ்.எஸ்.ல் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் அதைப் பார்த்ததே இல்லை.
பெரும்பாலான சுயம்சேவக்குகளுக்கு அப்படி ஒரு அமைப்புவிதி உள்ளது என்பதே தெரியாது
என நான் உறுதியாகக்க்கூறுகிறேன்” என்றார்.
அதுமட்டுமல்ல: சிதம்பரத்தின் பேச்சை அப்படியே ஏற்றுக்கொண்டு ‘இந்தத்தேர்தல் காங்கிரசுக்கும்
ஆர்.எஸ்.எஸ்.க்கும் இடையேயான ஒருகொள்கைப் போராட்டம்தான்’ என்றார். அத்துடன் இன்றைய அரசியல் சூழலை நெருக்கடிநிலைக் காலத்திற்கு முன்
இருந்த நிலையோடு ஒப்பிட்டார். நாட்டில் நிலவும் சூழ்நிலை அந்த நாட்களை மிகவும்
ஒத்திருக்கிறது. நாங்கள் அதை எதிர்த்துப்போராட ஆயத்தமாகி வருகிறோம்’ என்றார்.
அப்போதுமுதல் ஆர்.எஸ்.எஸ். தனது தொண்டர்களைப்
பெருமளவில் அணிதிரட்டியது. அது நெருக்கடிநிலைக்குப் பிறகான அணிதிரட்டலில் மிகவும்
பெரியது என்றார் அந்தத்துணைத் தலைவர். பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் களத்தில் இறங்கி
வாக்காளர்களைப் பதிவு செய்வது, வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பது, நூறுசதவீத
ஓட்டுப்பதிவை உறுதிசெய்வது போன்ற வேலைகளைச்செய்தார்கள். ‘சங் தொண்டர்கள் எந்த
ஒருகுறிப்பிட்ட கட்சிக்கும் வாக்கு சேகரிக்கக்கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தக்கட்டளை பெரும்பாலும் மீறப்பட்டே
செயல்கள் நடந்தன. டெல்லி சரோஜினி நகர் பகுதியில் நான் சந்தித்த ஒரு சுயம் சேவக்
தாம் அந்தப்பகுதியில் கிட்டத்தட்ட நானூறு வீடுகளுக்குச் சென்று முக்கியமான
பிரச்சனைகள் பற்றிய துண்டுப்பிரசுரங்களை அளித்ததாகவும், அதன் ஒருபக்கத்தில்
நகர்ப்புறப் பொருளாதாரப்பிரச்சனைகள், சாலைவசதிகள், கட்டமைப்பு வசதிகள் போன்றவை இடம்பெற்றிருந்தன.
மறுபக்கத்தில், ஆர்.எஸ்.எஸ்.க்குப்பிடித்த அரசியலான தீவிரவாதம், பாக்கிஸ்தான்,
ஸ்ரீநகரில் மூவர்ணக்கொடி ஏற்றுதல் உள்ளிட்டவை இருந்தன. அத்துடன் இதை எல்லாம்
சாதிக்கப்போவது யார் என்று உங்களுக்குத் தெரியுமா? குஜராத்தில் உள்ள ஒருசாதாரண
மனிதன்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது என்றார்.
அந்தப்பிரசுரத்தைக் கொடுத்தபின் நாங்கள்
மோடிக்கு வாய்ப்பளியுங்கள் என்று கேட்டுக்கொண்டோம் என்றார் அந்த சுயம்சேவக்.
1977ல் நெருக்கடிநிலை முடிந்தபின்
நான்குபொதுத்தேர்தல்களிலும், 1990களில் பி.ஜே.பி ஆட்சிக்குவந்தபின் மூன்று
பொதுத்தேர்தல்களிலும் ஆர்.எஸ்.எஸ்.நேரடியாகப் பங்கேற்றது என்றார் பகவத். அத்துடன்
ஆர்.எஸ்.எஸ்.ன் திட்டங்களுக்கு அரசியலின் முக்கியத்துவத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
1990 களில் ஒருவெளியிடப்படாத பேட்டியில்
(ஒருவேளை இதுதான் அவரது முதல் பேட்டியாகவும் இருந்திருக்கலாம்) ஆவணப்படத்தயாரிப்பாளர்
லலித் வச்சானியிடம், “தேசத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும்வகையில் அரசியல்
போக்குகள் பாதகமாக அமையும்போதெல்லாம் சங் அமைப்பு அரசியலில் குதிக்கிறது என்றார்.
அதுவும் அரசியல் நிகழ்வுகளுக்கு ஒருசரியான திசைவழியைக் காட்டவே. அதன்பின்
அரசியலிலிருந்து விலகிக்கொள்கிறது” என்றார் பகவத்.
1980ல் பி.ஜே.பி. துவக்கப்பட்டதற்கு
முன்பிருந்தே நீண்டபல ஆண்டுகளாக அது தனது விதையைஆர்.எஸ்.எஸ்.ல் கொண்டிருந்தது.
ஆர்.எஸ்.எஸ்.ன் நீட்சியாக, அதன் ஒருபிரிவாகவே பி.ஜே.பி. என்றகட்சி உருவானது. இது
ஆர்.எஸ்.எஸ்.ன் அரசியலோடுகூடிய இரட்டைநிலை ஆகும்.
டாக்டர். கேசவ் பாலிராம் ஹெட்கேவர் “இந்து சமுதாயத்துக்கு
வழிகாட்டுவதற்காகக் கட்டுப்பாடுமிக்க, உடல்ரீதியாகத் திடகாத்திரமான, பலமான
தலைவர்களை உருவாக்க 1925ல் ஆர்.எஸ்.எஸ்.ஐத் துவக்கினார். ஹெட்கேவர் தமது அமைப்பைப் பிரிட்டிஷ் இராணுவத்தை
மாதிரியாகக்கொண்டு அதேபோன்ற சீருடை, ஆயுதமேந்திய, ஆயுதமேந்தாத போராட்டங்களில்
பயிற்சி தந்தார்.
ஆர்.எஸ்.எஸ்.ன்இந்திப்பத்திரிக்கையான ‘பாஞ்சஜன்யா’வின் முன்னாள் ஆசிரியர் தேவேந்திர சொரூப் என்னிடம்,
‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இரட்டைகுணம் கொண்டிருப்பது ஹெட்கேவரிலி ருந்து துவங்குகிறது.
அவர் முழுக்கமுழுக்க ஓர் அரசியல் மனிதர். ஆர்.எஸ்.எஸ்.ஐ ஒரு குறிப்பிட்டகாலவரையறை
கொண்ட இயக்கமாக உருவாக்கினார். அது தனது இலட்சியங்களை அடைந்தபின்
நீடித்திருக்கவேண்டிய அவசியமில்லை’ எனக்கருதினார்.
சொரூப் மேலும், ‘நாட்டின் சுதந்திரம் என்ற இலக்கு ஆர்.எஸ்.எஸ். இல்லாமலேயே
அடையப்பட்டுவிட்டதால், சுதந்திரத்துக்குப்பின் ஆர்.எஸ்.எஸ்.ன் இலக்குபற்றிய
சர்ச்சை தொடர்ந்தது. இந்தக்கால கட்டத்தில் செல்வாக்குமிக்க தலைமையும், வரலாற்றின்
வெள்ளம் போன்ற பிரளயமும் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடுவதிலிருந்து
விலக்கிவைத்தது. மிகவும் மதிக்கப்பட்ட எம்.எஸ்.கோல்வாக்கர் 1940ல் இரண்டாம் சரங்
சாலக் ஆகப்பதவி ஏற்றார்.அதைத்தொடர்ந்து “குருஜீ” எனப்பக்தியுடன் போற்றப்பட்டார். (ஹெட்கேவர் 1930ல் ஆர்.எஸ்.எஸ்,ஐஎல்.வி.பரஞ்பே
யிடம் ஒப்படைத்தர். ஆனால், பரஞ்பே அதன் தலைவர்களில் ஒருவராகக் கணக்கில் கொள்ளப்
படுவதில்லை) கோல்வாக்கர் ஆர்.எஸ்.எஸ்.ஐ
முதன்மையாக ஒரு சமுதாய, கலாச்சார இன்னும் சொல்லப்போனால் ஆன்மீக அமைப்பாகவே
பார்த்தார். அதனால் அது அரசியலைத் தவிர்க்க வேண்டியதாயிற்று. அவர் காலனியாதிக்கத்துக்கு
எதிரான ‘வெள்ளையனே, வெளியேறு’ இயக்கத்தில்
பங்கேற்காமல் விலகிநிற்க வைத்தார். இந்த அரசியலற்றநிலை 1948ல் அரசு இதன்மீது
விதித்திருந்த தடையை நீக்கியபோது உறுதிப்பட்டது. (1948ல் சங் அமைப்பில்
இணைந்திருந்த உறுப்பினர்களால் மகாத்மா காந்தி கொலைசெய்யப்பட்டபோது இந்தத் தடை
விதிக்கப்பட்டிருந்தது.) தடை நீக்கப்பட்டதற்குப் பிரதிபலனாக ஆர்.எஸ்.எஸ்.
அரசியலிலிருந்து விலகி நிற்பதைத் தனது அமைப்புவிதிகளில் சேர்த்து அவ்வாறே நடந்து
கொள்வதாக உறுதியளித்தது.
அப்போதுமுதல்ஆர்.எஸ்.எஸ்.ன் அரசியல் ஈடுபாடு
கைக்கெட்டாத தூரத்தில் இருப்பதுபோல –ஆனால், உள்ளூரத் திரைமறைவில் இணக்கமானதாகவும்,
இதன்பல அமைப்புக்கள்மூலம் ஈடுபாடுகொண்டதாகவும் இருந்துவந்தது. ஏனெனில்,
1951ல்துவக்கப்பட்டு இப்போதுசெயலற்றுப் போன ‘பாரதிய ஜனசங்’ கட்சியின் பின்னர் துவக்கப்பட்டுள்ள பி.ஜே.பி..கட்சியின் முக்கியமான உயர்மட்டத்தலைவர்கள் பலரும்
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு முதன்மை விசுவாசம் கொண்டவர்களாக இருந்ததுதான்.
கோல்வாக்கரைப்போல் இல்லாமல் அதன்பின் வந்த
சர்சங்சாலக்குகள்- குறிப்பாக 1973ல் இருந்து தொடர்ந்து 30 ஆண்டுகள் கோல்வாக்கரின்
வாரிசாகத் தலைவராக இருந்த தேவ்ரஸ், ஆர்.எஸ்.எஸ்.ன் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள
அவசியமான கருவி என அரசியலை ஏற்றுக்கொண்டார். தேவ்ரஸ் உண்மையில் ஓர் அரசியல்வாதியாக
, ஆர்.எஸ்.எஸ்.ன் உயர் கட்டுப்பாடுமிக்க தொண்டர்படையின் செயலாற்றலைப்
புரிந்துகொண்டவராக, அதனை நாட்டின் அரசியலில் செல்வாக்கு செலுத்திடப் பயன்படுத்த
விரும்பினார். “அமைப்பு குறிப்பிடத்தக்க வலிமையை அல்லது மக்கள் ஆதரவைப் பெறும்போது
அந்தமனித சக்தியைத் தேசிய வாழ்வின் பல்வேறு தளங்களில் செயல்பட வைத்தால், நாம்
விரும்பும் மாறுதலை உருவாக்கும்” என்று ஒருமுறை
அவர் தத்துவ விளக்கம் அளித்தார்.
கோல்வாக்கர் தலைவராக இருந்தபோது, அமைப்பின்
வழிமுறைகள்மீது, சர்சங் சாலக்குடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகக் குறைந்தபட்சம் ஆறுஆண்டுகள்
தேவ்ரஸ் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைவிட்டு விலகியிருந்தார். அவர் அதன்பொறுப்பை ஏற்றதும்,
சங் குடும்பத்தைப் பல்வேறு அரசியல் போராட்டங்களில் ஈடுபடவைத்தார். அதில் ஒன்று நெருக்கடி நிலைக்கு
வழிவகுத்தது.அதன்பின் அரசியல்விஞ்ஞானியான பிரளய்கணுங்கோ தனது “RRSS’S Tryst with Politics“ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்,”தேசிய அரசியலின் மைய நீரோட்டத்தில் நிலைத்திருக்க ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாக
அரசியலில் இடம்பெறுவதைத் தேர்வு செய்யவேண்டும் என தேவ்ரஸ் அறிந்திருந்தார். சங்
அமைப்பின் இந்த உண்மையான அரசியல் நிலைபாடுதான் தனது அரசியல் பிரிவான ஜனசங்
கட்சியைக் கொள்கைகளால் வேறுபட்டிருந்த ‘ஜனதா’ கட்சியுடன் 1977ல் இணையவைத்தது.
முதலில் அதிகாரம் நிறைந்த ஆர்.எஸ்.எஸ்.
பொதுச்செயலாளர் பதவியிலும், அதன்பின் தலைவராகவும் கடந்த 15 ஆண்டுகளில் மோகன்பகவத்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அரசியல் அரங்கில் உறுதிப்படுத்தவும், அதற்கும் பி.ஜே.பி.க்கும் இடையிலான பிளவுகளைச்
சரிப்படுத்த வும் மிகவும் கடுமையாக உழைத்தார். இப்போது பி.ஜே.பி.கட்சி
வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ்.ஐச் சார்ந்து நிற்பது பகவத்தின் செல்வாக்கின் அடையாளமாக
விளங்குகிறது. சங் அமைப்பின் பல்வேறு அனுபவசாலிகள் என்னிடம்,
“ஆர்.எஸ்.எஸ்.உறுப்பினராக இருந்த பகவத் தந்தை மற்றும் பாட்டனாரைப்போல பகவத்தின்
அடர்ந்த மீசை ஆச்சரியப்படும்வகையில் ஹெட்கேவரை நினைவுபடுத்துகிறது. அவர் தேவ்ரஸ்
விட்டுச்சென்ற இடத்தைக் கைப்பற்றிக் கொண்டார்” என்றனர்.
ஆர்.எஸ்.எஸ்.சுயம்சேவக்கான அடல்பிகாரிவாஜ்பேயி
தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபோது, ‘தேர்தல்அரசியல் ஆர்.எஸ்.எஸ்.க்குத்
தேசத்தை மாற்றியமைக்கும் ஒருவாய்ப்பாக அமையும்” என்ற தேவ்ரஸ்-ன் நம்பிக்கை 1990களின் பிற்பகுதியில் முதற்கட்டமாகப் பெருத்த
சோதனையைச் சந்தித்தது. துரதிர்ஷ்டவசமாக ஆட்சியதிகாரத்தில் பி.ஜே.பி.இருந்த
ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்,க்குச் சிரமமான காலங்கள் என நிரூபணமாயின. ஏனெனில் பி.ஜே.பி.
தனது பொருளாதார மற்றும் வெளியுறவுக்கொள்கைகள் மூலம் பாகிஸ்தானைவிட மேன்மை பெற்றதும்,
அமெரிக்காவுடன் உறவுகளை மறுசீரமைப்பு செய்துகொண்டதும் கட்சியைத் தாய் அமைப்பான
ஆர்.எஸ்.எஸ்.ஐவிட மேலாக உயரச்செய்தது.
அதன் தோற்றம் முதலே ஆர்.எஸ்.எஸ்.கொண்டிருந்த
வழக்கத்துக்குமாறான இந்துத்வா அழுத்தம் அப்போது தனிச்செல்வாக்கோடு விளங்கிய
காங்கிரஸ் உயர்த்திப்பிடித்த மதசார்பின் மையோடு முரண்பாடுகொள்ளவைத்தது. ஜனசங்கம்
1980ல்பி.ஜே.பி.யாக உயிர்த்தெழுந்தபோது மதவாதக்கட்சி என்ற
குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ‘இந்திய சோசலி சமே தனது
வழிகாட்டும் கொள்கை’ என வெளிப்படையாக அறிவித்தது. 1984 பாராளுமன்றத் தேர்தலில்
இரண்டே இடம் என்ற அளவுக்கு பி.ஜே.பி. பலம் குறைந்திருந்தது. ஆர்.எஸ்.எஸ்
பி.ஜே.பி.க்காகத் தேர்தல்வேலை செய்யமறுத்துவிட்டது. அத்துடன் காங்கிரஸ்கட்சிக்கு
வாக்கு களைப்போட்டது என்றும் சிலர் நம்பினார்கள்.
அயோத்தியில் இராமர்கோவிலைக் கட்டுவதற்கான
இயக்கம் நடைபெற்றபோது, ஆர்.எஸ்.எஸ்.ம். விஸ்வஹிந்து பரிஷத்தும் மக்களிடம்
பெற்றிருந்த ஆதரவைக் கண்ட பி.ஜே.பி அடுத்துவந்த ஆண்டுகளில் இந்துத்வா வைத்
தழுவிக்கொண்டது. 1989 ஜூன்மாதத்தில் பி.ஜே.பி.யின் தேசியச்செயற்குழு இமாச்சலப்பிரதேசத்தில்
பாலம்பூரில் கூடியது. அத்வானியால் எழுதப்பட்ட தீர்மானமான,”இராமர்கோவில் கட்டும் இயக்கத்தின் முன்னணிப்படையாகக் கட்சி யை முன்னிறுத்துவது” என்பதைநிறைவேற்றியது. இதன்மூலம் தேசப்பிரிவினைக்குப்
பிந்தைய இந்திய வரலாற்றில் உச்சகட்டமாக மதஉணர்வுகளால் பிளவுபட்ட ஒருகாலத்தை
உருவாக்க வழிவகுத்தது. அன்றுமுதல் பி.ஜே.பி. சங்அமைப்பின் பல்வேறு
போர்க்கப்பல்களில் ஒன்றாக, அதன் கொடியாக மக்கள் சிந்தனையில் உருவானது.
இராமர்கோவில் இயக்கத்தின்மீது ஆளுமைசெலுத்தி சங்ஊழியர்களை அணிதிரட்டியது. 1996ல் ஆட்சிக்கு வந்து 13 நாட்கள் நீடித்தது. 1998ல் அது ஒரு கூட்டணிஅரசை உருவாக்கி 13 மாதங்கள் ஆட்சிபுரிந்தது. அணுஆயுதப் பரிசோதனையை நடத்தியது. 1999ல் ஜூன்மாதத்தில் பி.ஜே.பி.யின் தே.ஜ.கூட்டணி ஐந்து ஆண்டுகால அரசை அமைத்தது. அந்தக்காலகட்டத்தில் பாகிஸ்தானோடு ஒருபோரை நடத்தியது. இந்தியாவின் பொருளாதார மற்றும் அயலுறவுக்கொள்கைகளை மாற்றியமைத்தது. இந்த எல்லா அரசுகளிலும் பிரதமராக இருந்த வாஜ்பேயி சங்அமைப்பின் நிகழ்ச்சிநிரலில் உள்ள இராமர்கோவில் கட்டுவது, ஒரேவிதமான குடியுரிமைச்சட்டம் 370ஆவது சட்டப்பிரிவின்படி காஷ்மீர் தன்னாட்சி அந்தஸ்தை மாற்றுவது ஆகியவற்றைப் புறக்கணித்தார். பிரதமர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு உரிய மரியாதையை அளித்தார். ஆனால், ஆட்சியின் செயல்பாடுகளைத் தன்னுடையதாக அமைத்துக்கொண்டார் என்று தே.ஜ.கூ.அரசின் முன்னாள் மத்திய அமைச்சர் என்னிடம் சொன்னார்.
இராமர்கோவில் இயக்கத்தின்மீது ஆளுமைசெலுத்தி சங்ஊழியர்களை அணிதிரட்டியது. 1996ல் ஆட்சிக்கு வந்து 13 நாட்கள் நீடித்தது. 1998ல் அது ஒரு கூட்டணிஅரசை உருவாக்கி 13 மாதங்கள் ஆட்சிபுரிந்தது. அணுஆயுதப் பரிசோதனையை நடத்தியது. 1999ல் ஜூன்மாதத்தில் பி.ஜே.பி.யின் தே.ஜ.கூட்டணி ஐந்து ஆண்டுகால அரசை அமைத்தது. அந்தக்காலகட்டத்தில் பாகிஸ்தானோடு ஒருபோரை நடத்தியது. இந்தியாவின் பொருளாதார மற்றும் அயலுறவுக்கொள்கைகளை மாற்றியமைத்தது. இந்த எல்லா அரசுகளிலும் பிரதமராக இருந்த வாஜ்பேயி சங்அமைப்பின் நிகழ்ச்சிநிரலில் உள்ள இராமர்கோவில் கட்டுவது, ஒரேவிதமான குடியுரிமைச்சட்டம் 370ஆவது சட்டப்பிரிவின்படி காஷ்மீர் தன்னாட்சி அந்தஸ்தை மாற்றுவது ஆகியவற்றைப் புறக்கணித்தார். பிரதமர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு உரிய மரியாதையை அளித்தார். ஆனால், ஆட்சியின் செயல்பாடுகளைத் தன்னுடையதாக அமைத்துக்கொண்டார் என்று தே.ஜ.கூ.அரசின் முன்னாள் மத்திய அமைச்சர் என்னிடம் சொன்னார்.
வாஜ்பேயி தனது பிரதமர்பதவிக்காலத்தின் துவக்கத்திலிருந்தே
ஆர்.எஸ்.ஸ்.ன் பிடியில் சிக்காமல் தனது சுதந்திரத்தன்மையை நடைமுறைப்படுத்தினார்.
1996 ஆகஸ்ட்6ல் திரிபுராவில் சங்அமைப்பால் நடத்தப்பட்ட மாணவர் விடுதியிலிருந்து
நான்கு பிரச்சாரக்குகள் கடத்தப்பட்டு வங்கதேசத்திலுள்ள சிட்டகாங் முகாமுக்குக்
கொண்டுசெல்லப்பட்டார்கள். திரிபுரா தேசிய முன்னணி(NNNNLFT)யின்
பிரிவினைவாதப்போராளிகளும், கிறிஸ்தவ சர்ச்சுகளும் இதற்குக் காரணம் என்றது.
ஆர்.எஸ்.எஸ். வாஜ்பேயிஅரசை எல்லைதாண்டி இராணுவத்தை அனுப்ப வலியுறுத்தியது. ஆனால்,
வாஜ்பேயியோ, உள்துறை அமைச்சர் அத்வானியோ இதன்மூலம் ஓர் உலகச்சூழலை உருவாக்க
விரும்பவில்லை.
தொடர்ந்து நான்கு பிரச்சாரக்குகளும்
கொலைசெய்யப்பட்டார்கள். அந்தச்சமயத்தில் ஆர்.எஸ்.எஸ்.பொதுச்செயலாளராக
நியமிக்கப்பட்டபகவத், ‘அவர்கள்கடத்தப்பட்ட நாளிலிருந்து அவர்களை விடுவிக்க
ஆர்.எஸ்.எஸ்.மிகவும் கடுமையாக முயற்சித்தது. ஆனால், மத்திய, மாநில அரசுகளின்
செயலற்றதன்மை இத்தகைய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கடுமையாகச் சாடினார்.
இராமர்கோவில் இயக்கம் தொடர்ந்து மெல்ல மெல்ல
எரிந்து மிகவும் உச்சகட்டத்தில் தீப் பற்றுவதுபோன்ற முரண்பாடு எழுந்தது. தே.ஜ.கூ.
ஆட்சிக்காலத்தில் வாஜ்பேயி இல்லத்தில் நடைபெற்ற ஒருகூட்டத்தில் மதன்தாஸ் தேவி,
வாஜ்பேயி, அத்வானி, ஆர்.எஸ்.எஸ். சர்சங்சாலக் ராஜேந்திர சிங் (1944ல் தேவ்ரஸ்
இடமிருந்து இப்பொறுப்புக்கு வந்தவர்) ஆர்.எஸ். எஸ். துணைப்பொதுச்செயலாளர்
கே.எஸ்.சுதர்சன் (இவர் 2000ல் ராஜேந்திர சிங்கிடமிருந்து இப்பொறுப்புக்கு வந்தவர்)
விஸ்வஹிந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் ஆகியோர்கலந்து கொண்டனர். சிங்கால்
உண்மையிலேயே அத்வானிமீது ஆத்திரம்கொண்டு சாடினார் என்று என்னிடம் மதன்தாஸ் தேவி
சொன்னார். “அயோத்தியில் உள்ளநிலம் வி.ஹெச்.பி.க்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்
என்ற உணர்வாக அது இருந்தது” என்றார்.
தே.ஜ.கூ.அரசு தங்களுடையது என்றும், ஆனால் அவர்கள் தங்கள் நோக்கத்தைக் கைவிட்டுவிட்டனர்.
அரசுப்பொறுப்பில் உள்ள சுயம்சேவக்குகளும், பிரச்சாரக்குகளும் தங்கள்
கொள்கைகளையும், நோக்கங்களையும்குழிதோண்டிப்புதைத்துவிட்டனர்என்று
வி.ஹெச்.பிதலைவர்கள்கருதினார்கள். அரசுப்பொறுப்பிலிருந்த ஒருவர், ’நாம்ஏன் நம்மை ஒருவித்தியாசமான கட்சி என்று
சொல்லிக்கொள்கிறோம்? நாம் காவிவண்ணம் பூசிய காங்கிரஸ்காரர்கள்” என்றுகூறியதாகக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த
கே,என்.கோவிந்தாச்சார்யா என்னிடம் கூறினார்.
“சர்சங்சாலக் ஆக சுதர்சன் வந்தபிறகு
ஆர்.எஸ்.எஸ்.ல் உள்ளவர்கள் பி.ஜே.பி.தலைவர்கள் தங்களைவிடப்பெரியவர்களாக
உருவாகிவிட்டார்கள்என்று தங்களுக்குள்ளேயே நம்பத்தொடங்கி விட்டார்கள்” என்று மராத்தி நாளேடான ‘தருண்பாரத்”ன் முன்னாள் ஆசிரியரும், மென்மை யாகப் பேசக்கூடியவருமான சுதிர்பகவத் என்னிடம்
கூறினார். பத்தாண்டுகளுக்குமுன் இராமர் கோவில் இயக்கம் அதன் உச்சகட்டத்தில்
இருந்தபோது ஆர்.எஸ்.எஸ்.தலைமை முன்னுரிமை கொண்டமூத்ததாகவும், பி.ஜே.பி.யின்மீது
அதிகாரம்செலுத்தக்கூடியதாகவும் இருந்தது. ஆனால் 2000ல் அந்தநிலை நீடிக்கவில்லை.
கட்சியில் மிகஉயர்ந்த அதிகாரம்கொண்ட இரண்டாவது தலைவராக அத்வானி விளங்கினார். அப்போதையஆர்.எஸ்.எஸ்.ன்புதியதலைவர்
ஆர்.எஸ்.எஸ் முழுநேரஊழியர் ஆவதற்கு நீண்டகாலம் முன்பே அத்வானி முழுநேரஊழியர்
ஆனவர். முதன் முறையாக அங்கு யாருக்கு யார் வழிகாட்டுவது என்பதுபற்றிய சண்டை
எழுந்தது.
பி.ஜே.பி.க்குள்ளேயே சுதர்சன்
ஒருசர்வாதிகாரியாகவும், சலனசித்தம் உள்ளவராகவும், சங் அமைபை வழிநடத்துவதில்
செல்வாக்கு இல்லாதவராகவும் கருதப்பட்டார். ஆர்.எஸ்.எஸ்.ன் தேசியத்தலைமையகமான
நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்.குடும்பத்தில் வளர்ந்த, நீண்டகாலமாக சுயம்சேவக்காக
விளங்கிய, ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களுடன் நெருங்கிப்பழகிய வர்த்தகர் திலீப்
தியோதர் சொன்னார்: “ராஜேந்திர சிங் 1998ல் நோய்வாய்ப்பட்டிருந்தபோது சுதர்சனைத்
தமக்கு அடுத்தபடியாகத் தலைவர் ஆக்குவதாக முதலில் குறிப்பாகத் தெரிவித்தார்.
வாஜ்பேயி உள்ளிட்ட பி.ஜே.பி.தலைவர்கள் அந்தமுடிவை ஒத்திவைக்குமாறு ராஜேந்திர
சிங்கைக் கேட்டுக் கொண்டனர். அப்போதைய பொதுச்செயலாளரான ஹெச்.வி.காமத்திடம்
அவர்கள், ‘சுதர்சன் ஆர்.எஸ்.எஸ்.தலைவராகவந்துவிட்டால் அரசைஒருநாள்நடத்துவதுகூடச்
சிரமமானதாகிவிடும்’ என்று கூறியதாக தியோதர் கூறினார்.
சுதர்சன்ஆர்.எஸ்.எஸ் பொறுப்பை ஏற்றவுடன்
பி.ஜே.பி.உள்ளிட்ட அனைத்து சங்அமைப்புகள் மீதும் தனது அதிகாரத்தைச்
செலுத்தமுயன்றார். உதாரணமாக டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிஒருமைதானத்தில்
நடந்தது. அது துவங்குமுன் முழங்கைவரை மடிக்கப்பட்டவெள்ளைச் சட்டை, காக்கி
அரைக்கால்சட்டை, கறுப்பு காந்திகுள்ளாய் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். சீருடை அணியாத
எவரும்- பத்திரிக்கையாளர்கள். தே.ஜ.கூ. அமைச்சர்கள் உட்பட- அனுமதிக்கப்பட
மாட்டார்கள் எனக்குறிப்புரை வழங்கினார். பலபத்தாண்டுகளாக சுயம்சேவக்குகளாக
விளங்கிய வாஜ்பேயி, அதவானி, கல்விஅமைச்சர் முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட எந்த ஒரு
அமைச்சரும் அந்நிகழ்ச்சிக்கு வரவில்லை. பி.ஜே.பி.யின் அப்போதைய தலைவரும், மத்தியப்
பிரதேசத்தில் சங்அமைப்பைக்கட்டி வளர்த்தவர் என்ற பெருமைக்குரியவருமான குஷாபாவ்
தாக்கரே சீருடையில் வந்திருந்தார். ஆனால், சீருடையின் ஓர்அங்கமான மூங்கில் கம்பை
எடுத்துவர மறந்துவிட்டார். தியோதர் தெரிவித்த தகவலின்படி தாக்கரே திரும்பிச்செல்லுமாறு
தெரிவிக்கப்பட்டார்.
தே,ஜ,கூ. ஆட்சியிலிருந்த பெரும்பாலான
காலங்களில் டெல்லிதான் சுதர்சனின் மையமாக இருந்தது. அவர் அடிக்கடி பொதுஇடங்களில்
அரசை விமர்சித்துவந்தார். அமைச்சகங்களில் குறுக்கீடு செய்துவந்தார். அவரது
குணாதிசயங்களில் ஒருசுவையான நிகழ்ச்சி வருமாறு: சங் அமைப்புக்களின் சக்தியையும்,
அரசு அதிகாரத்தையும் இணைத்து ஒரு கலாச்சாரத் தணிக்கை அதிகாரம்கொண்டவராகச்
செயல்பட்டார். “திரைப்பட இயக்குநர் தீபாமேத்தா வாரணாசியில் தனது ‘வாட்டர்’ திரைப்படத்துக்கான படப்பிடிப்பை நடத்தியபோது,
ஆர்.எஸ்.எஸ்-வி.ஹெச்.பி. ஆட்கள் குறுக்கிட்டுப் படப்பிடிப்பு அரங்கைத் தீயிட்டு
எரித்தனர். தீபாமேத்தாவுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.” என தீபாமேத்தாவின் மகள் தேவயாணி சால்ட்ஸ்மன் தனது ‘ஷூட்டிங் வாட்டர்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். தீபாமேத்தா தனது
படப்பிடிப்பைத் தொடர வேண்டுமானால், ஆர்.எஸ்.எஸ் .தலைவரிடம் அனுமதி பெறவேண்டும்
என்று தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.தலைமையிடத்துக்கு
ஒருகுளிர்கால காலைநேரத்தில் தீபாமேத்தா சென்றபோது கனமான சால்வையுடன் தனது
முகத்தில் காவி பாலக்வாலா அணிந்து சுதர்சன் அவரைச் சந்தித்தார். தீபாமேத்தாவை
நோக்கி நடந்துவந்த அவர் தாந்தேவின் ‘இன்ஃபெர்னோ விலிருந்து ஒருபகுதியை மிகச்சரியான
இத்தாலிமொழியில் குற்ப்பிட்டு அவர் அருகில்வந்து அமர்ந்தார். “ஆர்.எஸ்.எஸ்.ஐத்
தவறாக மதிப்பிட்டுவிட வேண்டாம்” என்று கூறினார்.
“கங்கை எங்களுடையது: புனிதமானது” என்றார்.
“நீங்கள் வாட்டர் திரைக்கதையைப் படித்தீர்களா?” என்று தீபாமேத்தா அவரிடம் கேட்டார். சுதர்சன் அதன்பிரதியை
மேஜைமீது வைத்தார். “இதை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்?” என்று தீபா அவரிடம் கேட்டார். ஏனெனில், தயாரிப்புக்குழுவுக்கு வெளியே செய்தி
மற்றும் ஒலிபரப்புத்துறைக்கு மட்டும் ஒரேஒரு பிரதிதான் கொடுக்கப்பட்டிருந்தது.
சுதர்சன் சொன்னார்: “அவ்வளவுதானே? எப்படி இருந்தாலும் யாருடைய அமைச்சகம் அது?” அவர் தீபாமேத்தாவை ஆர்.எஸ்.எஸ்.ன் வாரஇதழான ‘ஆர்கனைசர்’ ஆசிரியர் சேஷாத்திரிசாரியைச் சந்தித்துத் திரைக் கதையைத்
திருத்திக்கொள்ளுமாறு கூறினார்.
வீராப்புமிக்கசுதர்சன்
ஆர்.எஸ்.எஸ்-ன்தலைமையிலும், தன்னம்பிக்கைமிக்க பி.ஜே.பி. மத்திய ஆட்சியிலும்
இருந்ததால் அமைப்புக்கும், கட்சிக்கும் இடையிலான உறவு மேலும்மேலும் மிக
இறுக்கமடைந்தது. 2004 கோடையில் நடைபெற்ற தேர்தலில் அதிர்ச்சிமிக்க தோல்வியை
பி.ஜே.பி அடைந்திருந்தபோது ஆர்.எஸ்.எஸ்.தனது பிரச்சாரக்குகளை அதிக அளவில்
கட்சிக்குள் நுழைத்து வேலைசெய்யவைத்தது. இக்கசப்புணர்வு இந்தியன்எக்ஸ்பிரஸ்ஆசிரியர்
சேகர்குப்தா வின் தொலைக்காட்சி நேர்காணலில் வெளிப்பட்டது. சுதர்சன்
வாஜ்பேயியையும், அத்வானியை யும் “அவர்கள் நாட்டுக்காக என்ன செய்தார்கள்?” என்றுகேட்டார். அவர் இந்திராகாந்தியை ‘இந்தியாவின் சிறந்த
பிரதமர்’ என்று குறிப்பிட்டார்.
பி.ஜே.பி.யின் மீதான அதிருப்தி மிகவும் கூர்மை
அடைந்தபோது, ஆர்.எஸ்.எஸ். ஒட்டு மொத்தமாக அந்தக்கட்சியைக் கைகழுவி
விடுவதைப்பற்றிச் சிந்தித்தது. மற்ற எல்லாவற்றை யும்விட பி.ஜே.பி.
அரசியல்வாதிகளின் அதிகாரப்பசி, ஆடம்பரமான வாழ்க்கைமுறைகள், சுயம் சேவக்குகளையும்
ஊழல்களில் ஈடுபடவைத்தது, அவர்களில் பலரை சங்வேலைகளைச் செய்வதில் ஆர்வத்தை
இழக்கவைத்தது ஆகியவை ஆர்.எஸ்.எஸ்.ன் தலைமையைக் கவலைக் குள்ளாக்கியது. 2004
தேர்தலைத் தொடர்ந்து டெல்லியின் வெளிப்பகுதியான ஜின்ஜோலியில் உள்ள ஒருபண்ணை
வீட்டில் சுதர்சன், மதன்தாஸ் தேவி, எம்.ஜி.வைத்யா, அவரதுமகன் மன்மோகன் ஆகியோர்
அந்த அமைப்பு அரசியலில் பங்கேற்றதன் சாதக பாதகங்களை ஆய்வு செய்யக்கூடினர்.
சுதர்சன் உள்ளிட்ட பலதலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். அரசியலில் மேற்கொண்ட சோதனை முயற்சிகள் ஒருமுடிவுக்கு வரவேண்டும் என
உணர்ந்தனர்.
2005 ஜூனில் அத்வானி பாகிஸ்தானில் உள்ள
முகமதுஅலி ஜின்னா நினைவிடத்திற்குச்
சென்று பார்வையிட்டு, அவரது மதசார்பற்ற தன்மையைப் புகழ்ந்து பேசியபோது, நிலைமை
மேலும் மோசமடைந்தது. நடைமுறையில் ஒட்டுமொத்த ஆர்.எஸ்.எஸ்.ம் அத்வானியின் தலைக்குக்
குறிவைத்தன. கட்சியின் அன்றைய பொதுச்செயலாளரான சஞ்சய் ஜோஷி கட்சியின் தலைமைப்
பொறுப்பிலிருந்து அத்வானி விலக வேண்டும் எனக்கோரினார். அத்வானி டெல்லி
ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு வருமாறும், அதன்பின் செய்தியாளர் கூட்டத்தில் தனது
பதவி விலகலை அறிவிக்குமாறும் கோரப்பட்டார். ஆனால், அதற்குப் பதிலாக அத்வானி டெல்லி
விமான நிலையத்தில் இறங்கியதும், அங்கிருந்த செய்தியாளர் களிடம் தனது பதவி விலகலை
அறிவித்தார். பின்னர் அந்த ஆண்டில் சென்னையில் நடைபெற்ற தேசியசெயற்குழுவில்,
“அரசியல்தொடர்பாகவோ, கட்சி அமைப்பு தொடர்பாகவோ ஆர்.எஸ்.எஸ்..ஒப்புதலின்றி
எந்தத்தீர்மானமும் நிறைவேற்றப்படக்கூடாது என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. நாம்
கொண்டிருக்கும் இந்தக்கருத்து கட்சிக்கோ, ஆர்.எஸ்.எஸ்.க்கோ எந்தவித நன்மையையும்
செய்யாது” எனச் சீற்றத்துடன்கூறி அத்வானி வெளியேறினார்.
நடைமுறையில் எல்லாத்தலைவர்களும் அத்வானிக்கு
எதிராக அணிவகுத்தபோது, பகவத், “ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் அண்டைநாடுகளுடன் நல்ல
உறவுகளை மேற்கொள்ளவேண்டும். பி.ஜே.பி.யை உருவாக்கியவர் என்ற முறையில் அத்வானி
பி.ஜே.பி.யில் நீடிக்கவேண்டும்” என விவாதித்து
ஒருசமரசப்போக்கைக் கையாண்டார். அதேநேரத்தில் அமைதியாகக் கட்சிப்பொறுப்பு களை ஏற்க
இளைஞர்களை உள்ளே அனுப்பியவண்ணம் இருந்தார். இதை ஆர்.எஸ்.எஸ்.சார்பான பதிப்பகத்தின்
முன்னாள் ஆசிரியர் தெரிவித்தார்.
அந்தநேரத்தில் ஹரித்துவாரில் நடைபெற்ற
ஆர்.எஸ்.எஸ்.ன் தந்திரோபாயங்களை வகுக்கும் உயர்நிலைக்கூட்டத்தில்
எம்,ஜி.வைத்யாவும், மற்றவர்களும் பி.ஜே.பி.யை ஒரேயடியாக உப்புக்
கண்டம்போட்டுவ்விட்டு ஒருபுதிய அரசியல் கட்சியைத் துவக்கவேண்டும் என்றனர். வைத்யா,
“நாம் இந்துத்வாவாதிகள். நமது கட்சி இதைப்பின்பற்ற வேண்டும். இந்துத்வா வை
அடிப்படையாகக்கொண்ட ஒருகட்சியை நான் உருவாக்குகிறேன்” என்று பிரகடனம் செய்தார். ஆனால், அதை ஒருவரும் ஏற்கவில்லை என்றார்
சுதிர்பாதக். கடைசியில் உள்ளார்ந்த விவாதங்களை முடித்துக்கொள்வதெனவும்,
பி.ஜே.பி.யுடன் இணைந்திருப்பதெனவும் முடிவு செய்யப்பட்டதாக மதன்தாஸ்தேவி
தெரிவித்தார்.
இந்தமுடிவு புதிதாகக்கண்டுபிடிக்கப்பட்ட
பி.ஜே.பி.யின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் எளிதாகச் செயல்படுத்தப்பட்டது.
ராஜ்நாத்சிங் 1964ல் தனது 13ஆம் வயதில் ஆர்.எஸ்.எஸ்.ல் சேர்ந்து தனது 24ஆம் வயதில்
ஜனசங்கத்தின் மாவட்டத்தலைவரானவர். அவர் கட்சியின் தலைவரானதும் ஆர்.எஸ்.எஸ்,ன்பால் மிகவும்
நேசப்பூர்வமான சமிக்கைகளைக் காட்டத் துவங்கினார். 2006ல் பி.ஜே.பி. தனது
அமைப்புவிதிகளைத் திருத்தம் செய்து ஆர்.எஸ்.எஸ்.ஊழியர்களை மாவட்ட அளவில்
பொறுப்பாளர்களாகப் பதவி வகிக்க அனுமதித்தது. சங்அமைப்புக்குக் கட்சியில் தாராளமாக
இடமளித்த கட்சி, மீண்டும் சங்அமைப்புக்குத் திரும்பத்தொடங்கியது.
(
தொடரும்...)
நன்றி : தி கேரவன்’ மே 2014 இதழ்

No comments:
Post a Comment