Wednesday, 15 October 2014

ஆர்.எஸ்.எஸ் - மூன்றாவது பரிமாணம் நான்கு

        ஆர்.எஸ்.எஸ் - மூன்றாவது பரிமாணம்
             திமிறிய பி.ஜே.பி.க்குக் கடிவாளமிட்ட மோகன்பகவத்
    தினேஷ் நாராயணன்                               தமிழில்: செ.நடேசன்


                                   நான்கு
  கவத் சர்சங்சாலக் ஆனதும் அவரது முதல்வேலையே பி.ஜே.பி.யுடன் பாதிக்கப்பட்டிருந்த உறவுகளைச் சீரமைக்கும் பணியாகத் தொடர்ந்தது. அவர் சிலமரபுகளை மாற்றத்துவங்கினார். “சுதர்சன் அத்வானியைச் சந்திக்க அவரது வீட்டுக்குச்செல்ல விரும்பமாட்டார். ஏனெனில், மரியாதை நிமித்தமாக அத்வானிதான் ஜந்தன்வாலனுக்கு வரவேண்டும் என்று கருதினார் என்று சுதிர்பாதக் என்னிடம் கூறினார். ஆனால் மோகன்பகவத்,அதைப்பற்றி நான் கவலைப்பட வில்லை. நான் அவரது வீட்டுக்குப் போவேன். என்ன இருந்தாலும் அவர் எனக்கு மூத்தவர், நாங்கள் பிரச்சனைகளைப் பேசித்தீர்வு காண்போம் என்றார். மோகன்பகவத்தின் பால்யகால நண்பரான பொஜாவர் பகலுணவுக்கு ஒருமுறை மோகன்பகவத் தனதுவீட்டுக்கு வந்தபோது அவர் அத்வானியை எப்படிக் கையாண்டார் எனக்கேட்டதாக என்னிடம் கூறினார். அதற்கு பகவத், “நான் அவருடைய அந்த்ஸ்தை அறிந்தவன். அவரது வயதுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அதற்கேற்ப நடந்துகொள்கிறேன். ஆனால், அவரிடம் விவாதிப்பதற்காக எடுத்துக்கொண்ட பிரச்சனைகளில் பின்வாங்க மாட்டேன். என்று கூறினாராம்.
   பி.ஜே.பி.யின் அந்த மூத்த தலைவரிடம் பகவத் கொண்டிருந்த அணுகுமுறை சுதர்சன் தலைவராவதற்கு முன்பிருந்த நிலைபோல ஆர்.எஸ்.எஸ்.ன் குணாம்சத்தோடுகூடியதாக- உள்ளூரக் கட்சிக்கு மதிப்பு அளிக்கக்கூடியதாகவும், பலவகைகளில் மரியாதை அளிப்பதாகவும் இருந்தது. கட்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்.உயர்மட்டத்தலைவர்களுக்கும் இடையே தீவிரமான கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் அவை தனிப்பட்ட கலந்தாலோசனைகள் மூலம் தீர்வு காணப்பட்டன.(ஆர்.எஸ்.எஸ்.ல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கொள்கை வகுக்கும் கூட்டம் நடைபெறும்) சர்சங்சாலக் என்றமுறையில் பகவத் மிகப்பெரிய செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும் பி.ஜே.பி.யின்மீதோ அல்லது தனதுசொந்தஅமைப்பின்மீதோ ஒருதலைப்பட்சமாகத் தனதுவிருப்பத்தைத் திணித்ததில்லை. ஒருமுறை முடிவுகள் எடுக்கப்பட்டு அவை சர்சங்சாலக் –ஆல் அறிவிக்கப்பட்டுவிட்டால் அவைதான் இறிதியானவை என்று ஆர்.எஸ்.எஸ்.உறுப்பினர் களால் கருதப்பட்டது. அதன்பின் எந்தஒரு கருத்துவேறுபாடும் பொறுத்துக்கொள்ளமுடியாதவை ஆகும். (சங் அமைப்பில் ஒருசொல்வழக்கு உண்டு.ஆட்டுக்கு மூன்றுகால்கள்தான் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டால், அது அப்படித்தான் என்று நாங்கள் நிரூபிப்போம் என்றார் அண்மையில் பி.ஜே.பி.யின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சுயம்சேவக்கும், பத்திரிக்கையாளருமான ஒருவர்.)
   பி.ஜேபி.யின் செயல்பாடுகள்தொடர்பான ஆர்.எஸ்.எஸ்.ன் அண்மைக்காலமுடிவுகள்எல்லாம் குறிப்பாகப் பகவத்தின் முத்திரை பதிந்தவைகளாகவே அமைந்திருந்தன. 2009ஜனவரி 2 அன்று பொதுத்தேர்தல் நெருங்கியபோது, பகவத் (இவர் 2 மாதங்களுக்குப்பின் சர்சங்சாலக் ஆக நியமிக்கப்பட்டார்.) மதன்தாஸ்தேவி மற்றும் சுரேஷ்சோனி ஆகியோர் பி.ஜே.பி.தலைமையுடன்  பேச்சுவார்த்தை நடத்த அத்வானியின் இல்லத்திற்குச் சென்றனர். “அது தே.ஜ.கூ.அரசாகத்தான் இருக்கும்: பி.ஜே.பி.அரசு அல்லஎன்பதை நாங்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளோம். எனவே நமது இந்துத்த்வா நிகழ்ச்சிநிரலின் மையமானஅம்சங்களில் உங்களால்எதைச்செய்யமுடியும் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். ஒட்டுமொத்த சங்பரிவாரங்களும் உங்களுக்குப்பின் உறுதியாக நிற்கிறோம். ஆனால் நம்மிடையே அதிக அளவில் தொடர்புகள் இருக்கவேண்டும் என்று அந்தச்சந்திப்பில் பகவத் கூறினார் பி.ஜே.பி. தேர்தலில் தோல்வி அடைந்தபின் பகவத் தனது பிடியை இறுக்கினார். .இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி ஆகஸ்ட் மாதத்தில் பகவத் அத்வானியிடம், உங்கள் கட்சியைப் பல்வேறு நிலைகளிலும் பலப்படுத்த நாங்கள் 500முதல் 700தன்னார்வத் தொண்டர்களை அனுப்ப விரும்புகிறோம். ஆனால் இதற்கான வேண்டுகோளை முதலில் நீங்கள்தான் தரவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ்.உடன் எந்த வகையான உறவை வைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும் என்றுகூறினார்.
   ஆகஸ்ட் 18 அன்று சர்சங்சாலக் என்றமுறையில் முதன்முறையாக பகவத் ‘டைம்ஸ் நவ் தொலைகாட்சியில் தோன்றி பி.ஜே.பி.யில் உள்ள தனது சுயம்சேவக் தொண்டர்களுக்கு ஐந்து கடமைகளைமுன்வைத்தார்.சங்அமைப்பின்கொள்கைகளை உயர்த்திப்பிடிக்கவேண்டும்.ஆர்.எஸ். எஸ். -ன் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றவேண்டும். சுயம்சேவக்குகள் வேலைசெய்கின்ற பிற அமைப்புக்களோடும், பி.ஜே.பி.யை ஏற்றுக்கொள்கிற மற்றவர்களோடும் தொடர்ந்த பேச்சு வார்த்தைகளை நடத்தி பி.ஜே.பி. குணாம்சத்தில் ஒருவித்தியாசமான கட்சி என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இளையதலைமுறையை இணைத்துக்கொண்டுவர வேண்டும்
   “பி.ஜே.பி. ஒருகட்சி என்ற முறையில் இதைச்செய்யவேண்டும் என்று தொடர்ந்து சொன்ன பகவத், “பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ்.-ஆல் நடத்தப்படும் கட்சியல்ல. அவர்கள்தான் ஒருவழியைக் கண்டுபிடிக்க வேண்டும். இதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? இல்லையா? அவர்கள் சுயமாக முடிவு எடுக்கட்டும். ஆனால் எங்கள் சுயம்சேவக்குகள் எப்போதும் எங்களுடை யவர்களே. நாங்கள் இதை அவர்களுக்குச் சொல்லியிருக்கிறோம்.மேலும் பி.ஜே.பி.யின் அடுத்த தலைமை டெல்லியில் இல்லாத ஒருதலைவராக இருக்கவேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.
   சிலமாதங்களுக்குப்பின் பி.ஜே.பி.யின் புதியதலைவர் நியமனம் அக்கட்சியின்மீது ஆர்.எஸ்.எஸ்.தனது பிடியைப் பலப்படுத்துகிறது என்ற தெளிவான அறிகுறிகளைக் கொண்டி ருந்தது. சங் குடும்பத்திலுள்ள திலீப் தியோதர் உள்ளிட்ட பலரும், டெல்லியில் தேர்தல் பணியாற்றிய சுயம்சேவக்குகளும் தெரிவித்தபடி, அவர்களின் முதல்தேர்வு நரேந்திரமோடிதான். ஆனால், மோடி 2012 குஜராத் தேர்தல் முடியும்வரை தேசிய அளவில் தனக்குப் பொறுப்பு வேண்டாம் என்றார். ஆர்.எஸ்.எஸ்-ன் இளைய கோவா பகுதித்தலைவரான மோகன்பரிக்கர் கோவா முதல்வர் ஆக்வேண்டியவர் என்றும், தேசிய அளவில் ஒருகட்சிக்குத் தலைமையேற்க அவர் மிகவும் இளையவர் என்றும் விரிவான விவாதங்கள் நடைபெற்றன. இறுதியாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கட்சித்தலைவராக இருந்தவரும், தனது இளம்வயதுமுதல் சுயம் சேவக் ஆகஉள்ளவருமானnaak நாக்பூரைச்சார்ந்தபிராமணரான நிதின்கட்காரியின்பெயரை அத்வானி  குறிப்பிட்டார்.
   கட்காரியின்தொடர்புகள்பற்றிய பிரச்சனைகள்இருந்தாலும்  இந்தஆலோசனை ஆர்.எஸ்.எஸ். ஆல் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘பாஞ்சஜன்யாவின் முன்னாள் ஆசிரியர் தேவேந்திர சொரூப் .கட்காரிக்கு இரண்டு பிரச்சனைகள் இருந்தன. பத்திரிக்கைகளுக்கு அவரைப்பற்றியும், அவரது பேசும்பாணிபற்றியும் எதுவும் தெரியாது. அவருக்கு இந்தி மிகவும் குறைவாகவே தெரியும். அது அவரது தேசிய அந்தஸ்துக்குப் பொருந்திவராது என்றார். ஆனால் பகவத் அகில இந்தியத் தலைமைப் பாத்திரத்தை கட்காரியால் வகிக்கமுடியும் என்று நினைத்தார்.



  கட்காரியின்தலைமையில்பி.ஜே.பி.யின்முக்கியமுடிவுகள் எல்லாவற்றின்மீதும் ஆர்.எஸ்.எஸ் முத்திரை பதிந்திருந்தது. அவர் நியமிக்கப்பட்ட ஒருவாரத்தில் 2009டிசம்பரில் ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. அது தெளிவற்ற முடிவாக இருந்தது. பி.ஜே.பி.யும், ஜர்கண்ட் முக்தி மோர்ச்சாவும் தலா 18 இடங்களையும், காங்கிரசும் அதன் கூட்டணியும் 25 இடங்களையும் பெற்றிருந்தன. ஒருநாள்கழித்து ஆர்.எஸ்.எஸ்.ன் ஆதிவாசிகள் பிரிவான வன்வாசி கல்யாண் ஆசிரமத்தின் தலைவர்கள் அந்த மாநிலத்தில் நடைபெற்ற மதமாற்றங் கள்பற்றி எடுத்துரைக்க டெல்லிக்கு அழைக்கப்பட்டார்கள். காங்கிரஸ் ஆட்சியமைந்தால் அது கிறிஸ்தவ மதமாற்றங்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும் என்று ஆர்.எஸ்.எஸ். கருதியது. காங்கிரசை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுக்க ஜே,எம்.எம்,தலைவர் சிபுசோரனுக்கு எதிரான ஏராளமான ஊழல்குற்றச்சாட்டுக்கள் காரணமாகப் பல பி.ஜே.பி .தலைவர்கள் எதிர்த்தபோதும், பி.ஜே.பி. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் தொடர்பு வைத்துக்கொள்ள முடிவெடுத்தது. பி.ஜே.பி. அப்போதுதான் பாராளுமன்றத் தேர்தலில் கறுப்புப்பணப் பிரச்சனையை முக்கியமாக முன்வைத்துப் போட்டியிட்டிருந்தது. நீண்டகால ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரும், ஜார்கண்ட் வன்வாசி கல்யாண் ஆசிரமத்தின் த்லைமையோடு நேரடித்தொடர்பு கொண்டிருந்தவருமான சுதிர்பாதக், ‘இந்தக்கூட்டணிக்கு முயற்சிசெய்த முக்கியமானவர் பகவத்தான் என்று என்னிடம் தெரிவித்தார்.
   கட்காரி தலைவராக இருந்த மூன்றுஆண்டுகளில் கட்சி மற்றும் சங் அமைப்பின் பலரிட மிருந்தும்  தனிமைப்பட்டிருந்தார். குறிப்பாக 2012ன் துவக்கத்தில் நடைபெற்ற உத்திரப்பிரதேசத் தேர்தலைத் தவறாகக் கையாண்டதற்காக மிகவும் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார். பூர்த்தி என்ற அவரது வர்த்தகக்குழும மோசடிக்குற்றச்சாட்டின்பேரில் சந்தேகத்திற்குள்ளானார். அதே ஆண்டில் கட்காரி தனது மகன் திருமணத்திற்காகப் பெரும்செல்வம் வெளிப்படையாகச் செலவிட்டதை ஆர்.எஸ்.எஸ்,உறுப்பினர்கள் ஆட்சேபித்தார்கள்.அந்தத் திருமணத்திற்காக 90 விமானங்கள் நாக்பூருக்கு வந்து இறங்கியதை நீங்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? நீங்கள் ஒழுக்க நெறிமுறைகளை இரண்டாம்பட்சமாக ஆக்கிவிட்டீர்களா? என்று சங்தலைவர்களிடம் பி.ஜே.பி.யின் முன்னாள் மத்தியப்பிரதேச அமைச்சரும், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருமான ஒருவர் கேட்டதாக நான் அவரைச் சந்தித்தபோது சொன்னார்.
   கட்காரியின் பதவிக்காலம் முழுவதும் பகவத் அவருக்கு ஆதரவாக இருந்தார். 2012ன் பிற்பகுதியில், அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில் பதவியில் மீண்டும் தொடர கட்காரி விரும்பினார். திலீப்தியோதர், சுதிர் பாதக் உள்ளிட்ட பலரும், ‘கட்காரி இரண்டாம் முறையாகத் தொடரவேண்டும் என்றும், கட்காரியை அவரது தொழில் நிறுவனங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு நேரடிப்பொறுப்பாக்கக்கூடாது என்றும் பகவத் உணர்ந்தார் எனத் தெரிவித்தார்கள்.
   ஆர்.எஸ்.எஸ்.ஸிலும், கட்சியிலும் மிகக்குறைந்த ஆதரவாளர்களே இருந்ததால் கட்காரியின் தலைமை முடிவுக்கு வந்தது. எஞ்சியிருந்த அவரது ஆதரவாளர்கள் எம்,ஜி.வைத்யாவும், அவரது மகன் மோகன் வைத்யாவும் மட்டுமே. வைத்யாவும் அவரது மகனும் பகவத்திடம் ஆதரவுகேட்டார்கள். அவர்களிடம் பகவத் ‘கட்காரியைத் தக்கவைக்க அவர் முயற்சி செய்ததாக வும் ஆனால் மீதியுள்ள ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. தலைமை அவரை உறுதியாகஎதிர்த்ததாகவும் கூறினார். இருந்தாலும் வைத்யாவை மீண்டும் முயற்சிக்குமாறு பகவத் ஊக்குவித்தார். வைத்யாவும் அவரதுமகனும் பகவத் மற்றும் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி இல்லாமல் நாக்பூரிலிருந்த மூத்த சுயம்சேவக் பாபுபகவத் வீட்டில் மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைச் சந்தித்தனர். தலைவர்கள் அவர்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்டனர். ஆனால், ஒன்றும் சொல்லவில்லை. (மகன் மோகன் வைத்யா இந்தச் சந்திப்பு நடைபெறவில்லை என மறுத்தார்)
   இறுதியாக 2013 ஜனவரி 22 அன்று வருமானவரித்துறை அதிகாரிகள் மும்பையில் பூர்த்திகுழும நிறுவனங்களின் 8 இடங்களைத் திடீரென்று சோதனையிட்டனர். அந்த முகவரிகள் போலியானவை என்று நிரூபணமாயின. அன்று பையாஜி ஜோஷியும், அத்வானியும் மும்பையில் கட்காரியைச் சந்தித்துப் பதவி விலகுமாறு ஆலோசனை கூறினர். அன்று இரவே அவர் பதவி விலகினார். அத்வானி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ன் ஆசிகளோடு ராஜ்நாத் சிங்கை கட்காரி நியமனம் செய்தார். அடுத்தநாள் ராஜ்நாத்சிங் பதவியேற்றார். ராஜ்நாத்சிங் 2005ல் அத்வானியின் இரண்டாம் பதவிக்காலப் பதவி விலகலின்பின் ஆர்.எஸ்.எஸ்.உடன் கட்சியைச் சமரசப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டவர்.
   ஆர்.எஸ்.எஸ்.க்கு ஒப்புக்கொள்ளக்கூடிய மூன்றாவதுதேர்வாக ராஜ்நாத்சிங் இருந்தாலும் பகவத் தான்மிகவும் விரும்பும் ஒருவரையே பி.ஜே.பி.யின் தலைவராகக் கொண்டுவர விரும்பினார்.2009ல் வாஜ்பேயி–அத்வானி தலைமையின்கீழ் இரண்டாவது தொடர்தோல்வியை பொதுத்தேர்தலில் அடைவதற்குமுன்பேகூட பகவத் எதிர்காலப்பிரதமர் வேட்பாளராக யாரைக் கொண்டுவர வேண்டுமென்று குறிவைத்திருந்தார். அவர்தான் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் மகாஜன். மராத்திபிராமணரும், 1974ல் முழுநேரஆர்.எஸ்.எஸ் ஊழியராகவந்து,பின்னர் அத்வானியின் ரதயாத்திரையை ஏற்பாடுசெய்ய உதவியாக இருந்தவருமான இவரையே பகவத் விரும்பினார். 2000-2006 ஆண்டுகளுக்கிடையில் நாக்பூரில் புகழ்பெற்ற ஹோமியோபதி மருத்துவரான டாக்டர்.விலாஸ்டாங்க்ரேவீட்டில் பிரமோத்மகாஜனை இரகசியமாகச் சந்திப்பதை பகவத் வழக்கமாகக் கொண்டிருந்தார். அங்கு அவர்கள் பின்னிரவு வரையிலும் நீண்ட ஆலோசனைகளை நடத்திவந்தனர். “பிரமோத்மகாஜன் நாக்பூர் விமானநிலையத்தில் வந்து இறங்கியதும் பின்வாசல் வழியாக டாங்க்ரேயின் வீட்டுக்குவந்து பகவத்தைச் சந்திப்பார். என்ற தியோதர், “பிரமோத்மகாஜனை அடுத்த பிரதமராக பகவத் பார்த்தார் என்றார். (மகாஜனின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் அவர்கள் இருவரும் மிகநெருக்கமாக இருந்ததை உறுதிப்படுத்தினார்.)
   “ஆர்.எஸ்.எஸ்.- மறுமதிப்பீடு என்ற தனது புத்தகத்திற்கான வேலையைத் துவங்கியிருந்த துப்காரி, “2007 குஜராத்தேர்தலில் நரேந்திரமோடி மிகப்பெரியவெற்றியைப் பெற்றபின் தலைவர் களின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் மோடியைத் தேசியஅளவில் கொண்டுவர மிகத் தீவிரம் காட்டினர். தேர்தலில் வெற்றியைப் புதுப்பித்த மோடி, தனக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களைக் கொண்டிருந்த மூத்த பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களின் சிறகுகளை வெட்டத் துவங்கினார். ஆனால், பகவத் அடையாளபூர்வமாகக்கூட அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அடுத்த ஆண்டில், பெரும்பாலான சங் தலைவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மீது கொண்டிருந்த கோபங்களுக்கிடையே மோடியின் புத்தகமான “ஜோதிபஞ்ச் என்ற நூலைவெளியிட அகமதாபாத் புறப்பட்டார்.–(இந்த நூலில் தன்னை உருவாக்கியவர்களின் விவரங்களை மோடி எழுதியிருந்தார்) எனப் பதிவு செய்தார்.
   “முதன்முறையாக மோடியின்பெயர் செயலாற்றல்மிக்க பிரதமர்பதவிக்கான வேட்பாளராக 2011ல் பரோடாவில் விவாதிக்கப்பட்டது என ஆர்.எஸ்.எஸ்.முன்னாள் மத்திய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் என்னிடம் கூறினார். “திட்டமிடப்பட்ட அந்தக்கூட்டம் முடிந்தபின் எங்களில் சிலர் சிலமணி நேரங்களுக்கு அங்கேயே தங்கியிருக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டோம். அந்தக்கூட்டம் நாட்டின்அரசியல்சூழல்பற்றி விவாதிக்க நடைபெற்றது. அந்த நேரத்தில் நரேந்திர மோடியை ஆதரிப்பவர்களைவிட எதிர்ப்பவர்களே அதிகம் இருந்தனர் என்றார் அவர், இருந்தாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சென்னை, அமராவதி, ஜெய்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இந்தக்காலம் முழுவதும் சங் தலைமை தனது பிரச்சாரக் அமைப்புக்களிலிருந்து கருத்துக்களைத் தொகுத்துக்கொண்டிருந்தது. அந்தப் பிரச்சாரக் அமைப்புக்கள் வெளிப்படையாக மோடிக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தன. என மேலும் அவர் தெரிவித்தார்.
   சுதிர்பாதக்,அங்கு, மதசார்பற்ற நிலையை எடுக்கவேண்டும்: அல்லது கொஞ்சம் இந்துத்வா வையும் கொண்டிருக்கவேண்டும் என இரண்டு கருத்தோட்டங்கள் நிலவின. இந்துத்வா குழு மோடிக்கு ஆதரவாக இருந்தது. பகவத் எந்தப்பக்கமும் சாராமல் இருந்தார். “இந்துத்வா நிலை உங்களை 180 நாடாளுமன்றத்தொகுதிகள்வரை கொண்டுசெல்லும்.ஆனால்,ஒவ்வொருவரையும் இணைத்துக்கொண்டு செல்லவேண்டுமென்றால், வாஜ்பேயி போன்ற தீவிரமற்றமுகம் தேவை என்றார் அத்வானி. ஆனால், 2004ல் தீவிரமற்ற முகம் எவ்வளவுதூரம் நம்மைக்கொண்டு சென்றது?என்ற விவாதம் நடைபெற்றது. என்வே,2014ல் இந்துத்வாதான் நோக்கமாக இருக்க வேண்டும் என்று தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் எனத்தெரிவித்தார். 2013 ஜூனில் பி.ஜே.பி.யின் தேசியத்தேர்தல் பிரச்சாரக்குழுவின் தலைவராக மோடி தேர்வுசெய்யப்பட்டபோது அத்வானியைத்தவிர, எல்லா ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி. தலைவர்களும் மோடியின் பின் அணிவகுத்தனர்.
   அவரது செயல்படும்தன்மை சர்வாதிகாரத்தனமாக இருந்தாலும், நரேந்திரமோடி ஒருபோதும் சங் அமைப்பின் அடிப்படைக்கொள்கைகளுக்குச் சவாலாக இருந்ததில்லை என்பதே பகவத் தையும், தொண்டர்களையும் கவர்ந்திருந்தது. மாறாக சங்குடும்பத்தின் மையமான மதிப்பீடுகள் கொண்டுசெல்லபட வடிவமைக்கப்பட்ட உடை, பொருளாதார வளர்ச்சிபற்றிய பேச்சு ஆகியவை தீவிர இந்துத்வாவுக்கு மிகவும்கச்சிதமாகப் பொருந்தும் என மோடி ஆர்.எஸ்.எஸ் .தலைவர் களுக்கு ஒருகட்டமைப்பைக் காட்டினார். இந்தியாவின் நுகர்பொருள் கலாச்சார நடவடிக்கைகளை அரவணைத்துக்கொண்ட சுயம்சேவக்குகளுக்கு மோடி ஒரு உதாரணபுருஷர் ஆக விளங்கினார்.
   முதலில் குஜராத்திலும், இப்போது தேசியக்கட்சிக்குள்ளும் தனது அரசியல் எதிரிகளை வெற்றிகரமாக ஓரம்கட்டிவரும் நரேந்திரமோடியிடம் சங் குடும்பத்திலுள்ள பலதலைவர்கள் எச்சரிக்கையுடனேயே இருந்துவந்தார்கள். பெரும்பாலான சங் மற்றும் கட்சி உறுப்பினர்கள் தங்கள் செல்வாக்கை மோடியின் உயர்வுக்கு வழிவகுக்கும் வகையிலேயே அமைத்துக் கொண்டார்கள்.அரசியல் வீழ்ச்சியைச் சந்திக்காமல் மோடியை வெளிப்படையாகச் சோதித்த ஒரே ஒருவர் பகவத்தான். அத்வானி, கட்காரி உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் எவர் ஒருவரையும் விட்டுவிட விரும்பாத இந்த ஆர்.எஸ்.எஸ்.தலைவர் பகவத், மோடியின் எதிராளி களான கோர்தன் சடாஃபியா, சஞ்சய் ஜோஷி போன்றவர்க்களுக்கு மறுவாழ்வு அளித்தார். 2014 மார்ச்-ல் பெங்களூருவில் அகில பாரதிய பிரதிநிதிசபாவின் நிறைவு நிகழ்ச்சியில் பகவத் தனது சொந்த நிகழ்ச்சித்திட்டத்தைத் தனது ஊழியர்களிடம் மிகவும் தெளிவாக, “நமது வேலை நமோ நமோ என்று புகழ்பாடுவதல்ல: நாம் நமது இலக்குகளை நோக்கி வேலைசெய்யவேண்டும் என விளக்கினார்.
   எனினும், அரசியல் அதிகாரத்தை அடைய ஆர்.எஸ்.எஸ்.க்குக் கிடைத்திருக்கும் மிகச்சிறந்த கருவியாக மோடி உள்ளார் எனப் பகவத் பாராட்டினார். (அதன்பொருள் ‘மோடி பிரதமராக வந்துவிட்டால், அடுத்த தேர்தல்வரை அவருக்குச் சங் அமைப்பின் தேவை இருக்காது!) 2014 பிப்ரவரியில் பூனாவில் உள்ள தொழிற்குழுமப் பயிற்சியாளரும், மராத்தி நாவலாசிரியருமான வசந்த் லிமாயேவுடன் தொலைபேசியில் பேசினேன். நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் கடந்த ஆண்டு தசராவின்போது லிமாயே பகவத்தைச் சந்தித்தார். பகவத் அவரிடம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி.யின் தேர்தல் ஆயத்தப்பணிகள்பற்றிக் கூறினார். பி.ஜே.பி.யும், மோடியும்தான் தேசத்திற்குத் தலைமையேற்கச் சரியானவர்கள் என்றார் பகவத். அப்போது லிமாயே பகவத்திடம், ‘மோடியை வின்சன்ட் சர்ச்சிலைப் போலக் கருதுகிறாரா? என்று கேட்டார்.
   “நான் என்ன அர்த்தத்தில் சொன்னேன் என்றால், சர்ச்சில் போர்க்கால பிரிட்டிஷ் பிரதமராக இருந்தார். போர்முடிந்தபிறகு எந்தவித ஆரவாரமும் இல்லாமல் முடக்கப்பட்டார் என்பதையே! “பகவத் என்னுடைய கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை. ஆனால், அவர் ஒரு புன்னகையைத் தவழவிட்டார் என்று லிமாயே என்னிடம் கூறினார்.

( தொடரும்...)
நன்றி ; ‘த கேரவன் மே 2014 இதழ்


  

No comments:

Post a Comment