நேரு மாமா
வி.பாரதி வர்ஷினி,
எட்டாம்வகுப்பு ‘அ’
கொங்குமெட்ரிகுலேஷன்மேல்
நிலைப்பள்ளி,
ஊத்துக்குளி
அடிமைப்பட்டிருந்த நாடுகளின்விடுதலைக்காகவும்,
அந்தநாட்டுமக்களின் நல்வாழ்வுக்காகவும்
தங்களை அர்ப்பணித்துக்கொண்ட மகாத்மாகாந்தி, ஆப்ரகாம்லிங்கன், மார்டின்லூதர்கிங், லெனின்,
மாவோ, ஹோசிமின், நாசர் போன்ற தலைவர்கள் வரலாற்றில்
நிலைத்து நிற்கிறார்கள். இவர்களின் வார்ப்பாக, மகாத்மாவின் வாரிசாக
விளங்குபவர்தான் நேருமாமா.
குடும்பம்
அலகாபாத்தில் மோதிலால்நேரு – சொரூபராணி தம்பதியினர் 1889
நவம்பர்14அன்று பிறந்த தங்கள்மூத்தகுழந்தைக்கு “ஜவகர்லால்” எனப்பெயரிட்டனர். ஆம். இந்தியத்தாயை அலங்கரித்த ‘சிவப்பு நகை’தான் நேருமாமா. விஜயலட்சுமிபண்டிட், கிருஷ்ணா நேருவின் சகோதரிகள். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்
டிரினிடி கல்லூரியில் ‘இயற்கை அறிவியலில்’ ஹானர்ஸ் பட்டம் பெற்றார். லண்டன்
இன்னர் டெம்பிளில் சட்டக்கல்வியும் பயின்றார். 1916 பிப்ரவரி7ல் கமலாகௌல்-ஐத் திருமணம் செய்துகொண்டார்.
1917 நவம்பர்19ல் இவர்களது ஒரேமகள் இந்திராபிரியதர்ஷினி பிறந்தார்.
அரசியல்
1916ல்லக்னோவில்தந்தையுடன்மகாத்மாகாந்தியைச்
சந்தித்தார். 1919ல் ஜாலியன்வாலாபாக்கில் 379பேரைக்கொன்று, 1200பேரைப்படுகாயப்படுத்திய
ஜெனரல்டயரின் கொடூரச்செயல் நேருவின் வாழ்க்கைப்பாதையை மாற்றியது. வெள்ளையர்களை
எதிர்த்துப்போராட உறுதியேற்றார். மகாத்மாகாந்தியின் ஒத்துழையாமைஇயக்கத்தில் பங்கேற்று
1921ல் முதன்முதலாகச் சிறைசென்றார். தனதுவாழ்நாளில் 9ஆண்டுகளுக்கும் மேலாகச்
சிறையில் கழித்தார். இடதுசாரிக்கொள்கைகளின்மீது இயல்பாகவே ஈர்ப்புக்கொண்டிருந்த நேரு,
சிறையில் மார்க்ஸிசம் படித்தார். இது அவரது பொருளாதாரச் சிந்தனைகளை இந்தியநிலைகளுக்கு
ஏற்றவாறு மாற்றியமைக்க உதவியது. சிறையில் நேருமாமா உலகவரலாற்றின் காட்சிகள்,
சுயசரிதை, இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார்.
1928ல் நேரு காங்கிரஸ்தலைவரானபோது இளைஞர்கள்
ஈர்க்கப்பட்டார்கள். 1929ல் லாகூர்மாநாட்டில்‘பூரணசுதந்திரம்’ எனத்தீர்மானமிட்டார்.1931ல்தந்தையின் மறைவுக்குப்பின் காங்கிரஸில் தீவிரமாக
ஈடுபட்டு மகாத்மாகாந்திக்கு நெருக்கமானார். 1931ல் காந்தி-இர்வின்
உடன்படிக்கை ஏற்பட்டது. அதுநிறைவேறாதபோது 1932ல் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கிய
காந்தியுடன் சிறையிலடைக்கப்பட்டார். மூன்றாவது வட்டமேஜை மாநாட்டுமுடிவுப்படி
1935ல் சுயாட்சிஅதிகாரம்கொண்ட மாநிலஅரசுகள் அமைந்தபோது இந்தியமக்கள் நேருவை காந்தியின்வாரிசு என்றனர். 1941 ஜனவரியில் மகாத்மாகாந்தி
‘எங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் உண்டு. இருந்தாலும் ஜவகர்லால்தான் எனதுவாரிசு” எனஅறிவித்தார். 1939செப்டம்பரில் இரண்டாம்உலகபோரிலும்,
1942ல் ஜப்பான் எதிர்ப்பிலும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஈடுபடுத்தியபோது,
‘சுதந்திரத்தைத்தவிர வேறுஎதையும் ஏற்கமாட்டோம்’ என்றகாந்தியுடன், நேருவும், சிறையிலடைக்கப்பட்டார்.
பிரதமர்
1947ஆகஸ்ட்15. இந்தியாவின் முதல்பிரதமராகப் பொறுப்பேற்ற
ஜவஹர்லால்நேரு’ “நடுநிசிநேரத்தில் உலகம்
உறங்கும்போது, இந்தியா சுதந்திரத்துடன் உயிர்ப்போடு விழித்துக்கொண்டிருக்கிறது. .இந்தப்புனிதமானநேரத்தில் இந்தியாவுக்கும், அதன்மக்களுக்கும் சேவைசெய்வதற்கு
நம்மைநாம் அர்ப்பணிக்க உறுதியேற்போம்” என்றார்.
உலகஅரங்கில் இந்தியாவைச்
சமாதானப்புறாவாக்கினார். பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கினார்.அணிசேராக்கொள்கையை
வகுத்து ஏகாதிபத்தியங்களுக்குக் கடிவாளமிட்டார். விடுதலைக்காகப்போராடும்
நாடுகளுக்குக் குரல்கொடுத்தார். கல்விதான் ஒருநாட்டின் வளர்ச்சிக்குஅடித்தளம்என்று உலகநாடுகளின் எல்லாக்குழந்தைகளிடமும் அன்புசெலுத்தி ‘நேருமாமா’ எனக்கொண்டாடப்பட்டார்.
பிரதமராக
17ஆண்டுகளில் “நவீனஇந்தியாவை உருவாக்கியசிற்பி”யானார். அணைக்கட்டுகளே நாட்டின்கோவில்கள்என விவசாயத்திற்கு முதன்மையளித்தார்.
நிலங்களை மறுபங்கீடு செய்யவைத்தார். கனரகத்தொழில்களை அரசேநடத்தித் தனியார்கொள்ளையைத்தடுத்தார்.மதசார்பின்மை,மதநல்லிணக்கம்மக்களின் பண்புகளாயின. தொழிற்கல்வியை,.அறிவியல் பார்வையை வலியுறுத்தினார்.
இன்றோ கல்வியும்,அரசியலும் வணிகமாகிறது. மதமயமாகிறது.
மறைவு
1964மே27ல் அவர் மறைந்தார். ஆனால் இன்று அவரது
தேவையை உணர்கிறோம்.
“எங்கள் மாமா நேருவே எங்கே நீங்கள் சென்றீர்கள்?
உங்கள் அன்பைத் தேடுகிறோம். உலகம்
எங்கும் ஓடுகிறோம்.
ஒற்றை ரோஜா எங்கேயோ? ஓங்கிடும் அன்பும்
எங்கேயோ?
மற்றும் ஒருமுறை வாருங்கள்! மாமா
எங்களைப் பாருங்கள்!!

No comments:
Post a Comment