இந்தியாவில்…
அமெரிக்க
அதிபர் டிரம்ப்பின் நெருக்கமான நண்பரான இந்தியப்.பிரதமர் மோடி தான் டிரப்புக்கு சளைத்தவர் அல்ல என்று நிரூபித்துவருகிறார்.
2019 டிசம்பர்
12ல் சீனாவில் கொரோனா நோய்த்தொற்று துவங்கிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டிசம்பர்
21 அன்று சீனாவே இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது. 2020 ஜனவரி 15ல் உலக அளவில் கொரோனா
பரவ ஆரம்பிக்கிறது. ஜனவரி 18 ல் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு கொரோனா பற்றி
எச்சரிக்கிறது .ஜனவரி 30 ல் இந்தியாவில் கேரளாவில் முதல் பாதிப்பு ஏற்படுகிறது. பிப்ரவரி
12 ல் இந்தியாவில் கொரோனா பரவிவிட்டதாக ராகுல்காந்தி மத்திய அரசை எச்சரிக்கிறார். ஆனால்
மோடியின் மத்திய அரசு செய்தது என்ன?
இந்தியாவில்
கொரோனா பரவிவிட்டதாக ராகுல்காந்தி கூறுவது கோமாளித்தனம் என்று பிப்ரவரி 13 அன்று மோடியின்
அரசு மறுக்கிறது. அதுமட்டுமா? பிப்ரவரி 16 ல் இந்துமகாசபையின் 5,000 பேர் கலந்துகொண்ட
கோமுத்ரா மாநாடு, பிப்ரவரி 22 ல் கோவையில் ஜாக்கிவாசுதேவின் ஒரு இலட்சம்பேர் கலந்துகொண்ட
சிவராத்திரி கொண்டாட்டம், பிப்ரவரி 23 முதல் ஒருவாரகாலம் டெல்லியில் மதவெறி ஆர்ப்பாட்டங்கள்.
பிப்ரவரி 25ல் குஜராத்தில் ஒரு இலட்சம்பேர்
பங்கேற்ற டிரம்ப் திருவிழா, மார்ச் 8 ல், ஜனாதிபதி மாளிகையில் 500 கலந்துகொண்ட மகளிர்தினவிழா,
மார்ச் 10 ல், குஜராத், அகமதாபாத், கல்பூரில் 40,00 பேர் கலந்துகொண்ட ஹோலிப்பண்டிகை,
ஆகியவற்றை அனுமதித்து பிரதமர்மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றார்கள்!
மார்ச்
11 ல் உலக சுகாதார அமைப்பு, ‘கொரோனா வேகமாகப்பரவும் தொற்று நோய்’ என உலக நாடுகளுக்கு
அறிவிக்கிறது. ஆனால், மத்திய அரசோ, ‘கொரோனா ஒரு சுகாதாரநெருக்கடி நிலை அல்ல’ என்று
அறிவிக்கிறது! தொடர்ந்து மார்ச் 12 ல் 50,000 பேர் கலந்துகொண்ட சீக்கிய மதத்திருவிழா,மார்ச்
13,14,15ல் டெல்லியில் தப்லிக் மாநாடு, மார்ச் 15 ல் கர் நாடக பாஜக எம்எல்ஏ மகள் திருமணத்தில்
எடியூரப்பா 5,000 பேருடன் பங்கேற்பு, என கொரோனா பரவலைப்பற்றிக் கவலைப்ப்டாமல் பல்வேறு
நிக்ழ்ச்சிகளை அனுமதித்துக்கொண்டே இருந்தது. மோடி அரசின் ஆரம்பகால நிலைபாடுகள் அனைத்தும்
டிரம்ப்பின் நடவடிக்கைகளைப்போலவே இருந்தன.
கேரள அனுபவம்
சீனாவின்
வூஹான் பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர் ஒருவர் கேரளா திரும்பி வந்த ஜனவரி30அன்று கேரளாவில்
முதல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. உலகசுகாதாரநிறுவனத்தின் கொரோனா நோய்த்தொற்று
பற்றிய எச்சரிக்கை வரும்முன்பே கேரளஅரசு தலைமைச்செயலாளர் தலைமையில் அரசு உயர்அதிகாரி
களைக்கொண்ட ‘ஆபத்தை நிர்வகிக்கும் குழு’’வை அமைத்து நடவடிக்கைகளை துவங்கியது. 24 மணிநேரமும்
செயல்படும் ‘கோவிட்-19 போர் முகாமை’ அமைத்து பன்னாட்டு விமானதளங்களை கண்காணித்தது.
கொரோனா பரவலைத்தடுக்க, ’சங்கிலியை உடைப்போம்’ (BREAK THE CHAIN) என அறிவித்து முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில்
நாள்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்று கொரோனாவைத்தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து
மக்களுக்கு தெரிவித்தது.
இந்தியாமுழுவதும்
ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பே கேரள அரசு ஊரடங்கை அறிவித்து மக்களை வீடுகளில்
தனித்திருக்கவும், சமூகவிலகலை பின்பற்றவும் கேட்டுக்கொண்டது. கேரளாவின் ஒவ்வொரு நுழைவாயிலிலும்
சோதனைக்கூடங்களை அமைத்து செயல்படுத்தியது.கேரளாவில் பணிபுரிந்துவரும் 3.8இலட்சம் வெளிமாநில
ஊழியர்களின் நலன்களில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தியது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்
9,72.000 படுக்கைகளையும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அவற்றின் விடுதிகளிலும் விளையாட்டு அரங்கங் களிலும், ஓட்டல்களிலும் 8,402
ICU படுக்கைகளையும்2,302 வெண்டிலேட்டர்களையும் அமைத்தது. மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன்
கொரோனாவை எதிர்த்த போரில் வெற்றிபெற்றது. கொரோனாவைக் கட்டுப்படுத்தியதில் இந்தியாவின்
அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு முன்னுதாதரணமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது.
கேரளாவின்
இந்த சாதனையை ”கம்யூனிசத்தின் வெற்றி” என்று தலைப்பிட்டு முதலாளித்துவ
ஏடான ‘ வாஷிங்டன் போஸ்ட்” கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும், கேரள அரசை
படங்களை வெளியிட்டு பாராட்டியுள்ளது. ’இந்தியா டு டே’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடுகள் கேரளஅரசை பாராட்டி தலையங்கம் எழுதியுள்ளன.
உலக நாடுகள் கேரள அரசின் செயல்பாடுகளை பாராட்டுகின்றன.. கொரோனாவைக்
கட்டுப்படுத்திய பணிகளுக்காக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர் இவ்வாண்டின் மிகச்சிறந்த மனித நேய செயல்பாட்டாளர்
என கௌரவிக்கப்பட்டுள்ளார்..
இந்தியாவின்
தென்கோடியில் உள்ள மாநிலங்களில் ஒன்றான கேரளம் , தனக்குரிய மிகக்குறைந்த அதிகாரங்களைக்
கொண்டே, மத்திய அரசின் புறக்கணிப்பையும், நிதியளிக்க மறுப்பதையும் தாங்கிக்கொண்டே இத்தகைய
அரிய சாதனையைப் புரிந்திருக்கிறது .இந்த மாநிலஅரசுக்கு மாநிலசுயாட்சி அதிகாரம் அளிக்கப்படு
மானால், இந்தியாவின் மற்றமாநிலங்களிலும், கேரளாவைப்போல, பினராயி விஜயனைப்போல கம்யூனிச
சிந்தனைகொண்ட முதல்வர்கள் அமைவார்களானால், இந்தியாவின்பிரதமர் இன்றையமோடியைப்போல மதவெறிசக்திகளின்
பிரதிநிதியாக அல்லாமல், ஓர் இடதுசாரி சிந்தனையாளராக, ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பாரானால்
கேரளாவில் நிகழ்த்தப்பட்ட அதிசயங்கள் இந்தியா முழுவதும் நிகழ்த்தப்படும்: மனிதகுலம்
எந்தவொரு அச்சத்தின் பிடியிலிருந்தும்விடுபட்டுவிடும் என மக்கள் சிந்திக்கத்தொடங்கிவிட்டார்கள்.
‘காலம்தோறும்
கம்யூனிச பூதம்’ என்ற கட்டுக்கதையை, கதாகாலட்சேபத்தை மக்கள் இனியும் ஏற்கமுடியாத காலம்
வந்துகொண்டிருக்கிறது. புதிய சிந்தனைகளோடு எழுச்சி பெற்றுவரும் மக்கள் திரளை ஒருங்கிணைப்பதும்,
ஆற்றல்மிகு போராட்ட சக்திகளாக மாற்றுவதும், முதலாளித்துவ, ஏகாதிபத்திய சக்திகளை தூக்கியெறியும்
செம்படைகளாக மாற்றுவதும் இடதுசாரி செயல்பாட்டாளர்களின்,, கம்யூனிஸ்ட்களின் கடமையாக
காலம் நிர்ணயித்திருக்கிறது! இந்தக்கடமையை நிறைவேற்றும் நீண்டபயணம் உலகை செம்மயமாக்கட்டும்! மானுடம் தழைக்கட்டும்!
No comments:
Post a Comment