பாஜகவின் தேர்தல் அறிக்கையில்
உணவும் உரிமையும் -கவியரங்கம்
அந்தத்
தொலைக்காட்சி விளம்பரத்தை நீங்களும்பார்த் திருப்பீர்கள்!
திடீரெனக் குதிக்கிறார் பல்விளக்கும் ஒருவர்முன்
,.கையில் மைக்கோடு காஜல் அகர்வால்.
”உங்க ’பேஸ்ட்’ல உப்பு இருக்கா?
அப்படி
வீட்டில், உணவகத்தில் சாப்பாட்டு மேஜைமுன்
காவியுடைக் கமண்டலங்கள் திடீரெனத் தோன்றி
“உங்க சாப்பாட்ல ’பீஃப்’ இருக்கா?”
“உங்க சாப்பாட்ல மாட்டிறைச்சி இருக்கா? - கேட்டால்
எப்படி இருக்கும்? ஒருகணம் யோசியுங்கள்
’மாட்டிறைச்சி சாப்பிட்டால் சித்த ராமையா
தலையை வெட்டுவேன்’ கர்நாடக பா.ஜ.க
தலைவர்சென்ன பசவப்பா மிரட்டியது நினைவுக்கு
வருகிறதா? வருவது கோபமா? அல்லது .........?
மாநிலத்தின் முதல்வருக்கே இந்தகதி என்றானால்
எங்கே சகிப்புணர்வு? எங்கே அஹிம்சைநெறி?
தபோல்கர், பன்சாரே, கல்புர்கி கொலை எதற்கு?
காட்டு மிராண்டிகளின் கொடுமைகளை எதிர்த்திங்கே
எழுத்தாளர், கலைஞர்கள் அறிவியல் விஞ்ஞானிகள்
எதிர்வினையாய் விருதுகளைத் திருப்பித் தந்தார்கள்!
என்ன நடக்கிறது இந்தத்திரு நாட்டில்?
எகத்தாளம், ஏகடியும், கொச்சைப்படுத்தல்கள்!
இத்தனையும் செய்கின்ற ஒருகும்பல் யாரிங்கே?
காவியுடை! கைகளிலோ கூரியசூ லாயுதங்கள்!
கோமாதா எங்களது முப்பத்து முக்கோடி
தேவர்களும் நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளுடன்
கின்னரர் கிம்புருடர் குடியிருக்கும் குலமாதா!
நாவினிலே பசிக்காக மாட்டிறைச்சி உண்போரை
நாடெங்கும் கொன்றிடுவேன்! நடுநடுங்கச் செய்திடுவேன்.
பாவி! இப்படியோர் முகவரியைக் கொண்டிருந்தான்!
வெறுப்புணர்வை விதைப்பவனை யாரய்யா நீ? என்றேன்
நானுமோர் கவிஞன்தான்! எனதுபெயர் ‘இந்துத்வன்’
நாட்டிலுள்ள கவிஞர்போல் எனக்கும்புனை பெயருண்டு
நானெழுதும் கொலைக்கவியில் ’ராஷ்ட்ரிய சுயம்சேவக்’
நச்சென்று பிறவற்றில் விஹெச்பி, பஜ்ரங்தள்
இன்னும்பல முன்னணிகள்!, எத்தனையோ சேனாக்கள்!
இந்துராஷ்ட் ரத்தை ஸ்தப்பிப்ப தென்நோக்கம்!
என்பெயர் வரவுகேட்டே ஏகமாய் ஏகமாய் நடுங்குவோரே
நானெங்கும் சம்பவிப்பேன்! ஞாலத்தின் தலைவன் நானே!
இப்படியோர் முன்னுரையில் என்னிடத்தில் அவன்வந்தான்.
இதுவரைக்கும் நீபடைத்த காவியம்ஏ தேனுமுண்டா?
அப்படியோர் கேள்வியிலே அதிர்ச்சிகள் அவனிடத்தில்.
அடடா! இதுவென்ன? புதுமையாய் இருக்கிறதே!
எப்போதும் கவிதைகளை காவியத்தைப் படைத்தால்தான்
என்னைக் கவிஞனென ஏற்பீரோ? எனக்கேட்டான். ( எதையுமே படைக்காத சுதர்சன்ராவ்
இப்புவியில்அதுதானேஇலக்கணமாய்உள்ளதென்றேன்.(தேசியவரலாற்றாய்வுமையத்தலைவர்)
இலக்கணத்தை, வரலாற்றை, அறிவியலை அழிப்பதுதான்
என்னுடைய வழிமுறைகள்! புராணங்களே வரலாறு (இராமாயண மகாபாரத)
எங்களது விநாயகரில் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை
என்கின்ற மருத்துவத்தை, புஷ்பகவிமானத்தில்
ஏவுகணை ஞானத்தை நீங்கள் அறியீரோ? (மோடி அறிந்துள்ளார்)
ஒன்றே இந்துஸ்தான்! ஒரு நாடு! ஒருமொழி!
அதுதான் சமஸ்கிருதம்! ஒரே மதம் இந்துமதம்!
நன்றாக இனியிங்கே ஒற்றைக்கலாச் சாரம்தான்!
நாட்டை இதைநோக்கிச்செலுத்துகிற கவிஞன்நான்!
ரிக்,யஜுர் சாம அதர்வண வேதங்கள்
இந்நாட்டில் இனிமேல் அரசியல் சாசனங்கள்!
கோமாதா எங்களது குலமாதா! ஆதலினால்
நாவினிலே பசிக்காக மாட்டிறைச்சி உண்போரை
நாடெங்கும் கொன்றிடுவேன்! நடுநடுங்கச் செய்திடுவேன்
போதுமா நானெழுதும் கவிதையும் காவியமும்?
அட்டா! என்ன கம்பீரம்? எத்தனை வாய்ஜாலம்?
ஆச்சரியம் இதிலென்ன? மோடியின் மறுபதிப்பில்?
அவனிடத்தில் முன்வைத்தேன் எனது சிலகேள்விகளை!
வித்தகம் மொத்தமும் சத்தியஞானமும் நால்வகை வேதங்களே
இத்திரு நாட்டின் அரசியல்சாசனம் இனியெனச் சொன்னவனே,
புத்திளம் பசுவின் கன்றின்கறியே பிராமணன் நல்லுணவு
முத்தென நத்திய ’ரிக்’கெனும் வேதம் சொல்லுவதறியாயோ?
‘தத்தாத்ரேய பிராமண நூலின் சுலோகம் சொல்வதென்ன?
‘அதே மன்னம் வியா கவ்” ‘அதே மன்னம் வியா கவ்”
பசுதான் உண்மையில் பிராமணனுக்கு மெய்யான உணவு’!
வேதமும் சுலோகமும் சொல்வதைமறுத்து வெறியேன் உன்னிடத்தில்?
அவன் சொன்னான்:
-அதெல்லாம் தெரியாது, ஆரெஸ்ஸெஸ் வையும்! (திட்டும்)
மாட்டிறைச்சி சாப்பிட்டா எல்லாரையும் கொல்லோனும்’
சத்திய புத்திரன் தருமனும்கூடமாபா ரதத்திலே
பத்தினி திரௌபதி, தம்பியர் நால்வர், பார்ப்பனரோடுண்ண
வனபர்வத்தில் வேட்டைகளாடி இறைச்சிகள் குவித்தானே?
பிராமணன் உணவில் பசுவின் கறியும் இருந்ததை அறியாயோ?
தத்துவ வித்தகர் மெத்தவுரைத்திடும் தசரத புத்திரனும்
பத்தினி சீதை,இலக்குவனோடு கானகம் மீள்கையிலே,
யமுனைக்கரையில் ஆயிரம்பசுக்களின் விருந்தினை வைத்தானே!
வால்மீகமுனிவன் இராமாயணத்தில் எழுதிய பொருளென்ன?
இத்தரைமீதில் வரலாறென்றால் இனிஇவை என்றாயே
அவ்வரலாற்றை நீயேமறுத்தல் இங்கே முறைதானா?
(அதெல்லம் தெரியாது.........)
அமெரிக்க நாட்டில் கலிஃபோர்னியாவில் ஷேக்ஸ்பியர் இல்லத்தில்
சுவாமிவிவே கானந்தர் (1)900 ஜனவரி ஒன்றில் பேசியதறிவாயோ?
You will astonish if I tell you that according to Old Ceremonials,
He is not a good Hindu who does not eat Beef. On certain occasions.
He must sacrifice a Bull and eat it!
விவேகானந்தர் கூறுகிறார் -
நான் சொன்னால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், பழைய சம்பிரதாயங்களின்படி
மாட்டிறைச்சியைச் சாப்பிடாதவன் ஒரு நல்ல இந்து அல்ல என்று.
குறிப்பிட்ட நேரங்களில் அவன் ஒரு மாட்டைப்பலியிட்டுச் சாப்பிடவேண்டும்’
வியப்பாக இருக்கிறதா? விரித்துப் பாருங்கள்.
விவேகானந்தர் நூல்தொகுதி 3-பக்கம் 596
நரேந்திரனாகப் பிறந்து சுவாமிவிவேகானந்தரானவர் கூறுகிறார்
(நரேந்திரதாஸ் தாமோதர்தாஸ் மோடி -பிரதமரானவர்? )
அவனிடத்தில் நான் கேட்டேன்: இப்போதுசொல் உனதுநிலை சரிதானா?
(அதெல்லம் தெரியாது.........)
பாரதி ராஜாவின் பதினாறு வயதினிலே
படத்தைப்பார்த் திருப்பீர்கள் பரட்டை,சப்பாணி
நினைவில் நிற்பார்கள்: சப்பாணி கூறுகிறான்:
“ஆத்தா வையும்: காசைக் குடு. ஊட்டுக்குப் போவோணும்”
“ஆத்தா வையும்: காசைக் குடு. ஊட்டுக்குப் போவோணும்”
கவிஞனா ‘இந்துத்வா? கதறுகிறான், கூறுகிறான்:
-அதெல்லாம் தெரியாது, ஆரெஸ்ஸெஸ் வையும்
மாட்டிறைச்சி சாப்பிட்டா எல்லாரையும் கொல்லோனும்’
சப்பாணி ஓர் அப்பாவி! இவனோ ஒருகொடும்பாவி!
இவனுக்கு ’சாகா’வில் ஆரெஸ்ஸெஸ் சொன்னதெல்லாம்
இனிமேல் நீயென்றும் சிந்திக்கக் கூடாது
இங்கே சொல்வதைச் செய்வதுதான் உன்வேலை
இந்து ராஷ்ட்ரத்தை இங்கே அமைப்பதற்கு
எல்லார்க்குமாய்த் தலைமை சிந்திக்கும் வழிகாட்டும்!
அந்தவழி காட்டுதல்தான் இக்லக்கின் கூட்டுக்கொலை!
அங்குவந்த சங்கீத்சோம் (பி.ஜே.பி. எம்.எல்.ஏ.)யாரென்று தெரிகிறதா?
மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தின் முதலாளி!
அண்மையிலே சீனாவில் மோடி செய்த ஒப்பந்தம்
இரண்டு இலட்சம்டண் மாட்டிறைச்சி அனுப்புவதாய்!
இவரது ஆட்சியில்தான் இருநூற்று நாற்பது
இலட்சம்டண் மாட்டிறைச்சி இந்தியாவின் ஏற்றுமதி!
இங்கேயும் சாதனைதான் உலகத்து நாடுகளில்!
அல்கபீர் எக்ஸ்போர்ட்ஸ், அராபியன் எக்ஸ்போர்ட்ஸ்,
ஃப்ரோஸர்ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ், பிஎம் இண்டஸ்ட்ரீஸ்
இவற்றில் மாட்டிறைச்சி உயர்சாதி பிராமணரே
ஏற்றுமதி செய்கின்றார்! இந்தியா முதலிடத்தில்!!
உண்ணுவதும், உடுத்துவதும் ஒவ்வொருவர் தன்னுரிமை
இங்கே குறுக்கிட எவருக்கும் உரிமையில்லை!
உரத்துக்குரல் கொடுப்போம் உரிமைகளைக் காத்திடுவோம்.
வேற்றுமையில் ஒற்றுமை, பன்முகக் கலாச்சாரம்
மதசார்பற்ற இந்தியா! சமத்துவ இந்தியா!!
இதையெதிர்க்கும் சக்திகளை வேரறுக்க வழியமைப்போம்
எப்படி? எங்கிருந்து? இதோ
“ ஆஹார் மே பீஃப் நஹீ?
பீஹார் மே வோட் நஹீ!
புரிகிறதா?
அறுபத்தேழு துடைப்பங்கள் டெல்லியில் குப்பைகளாய்
அகற்றியதைப்போல காஷ்மீர்முதல் குமரிவரை
’சுவாச் பாரத்” (மோடியின் விருப்பம்போல்)
இந்தியா சுத்தமாகட்டும்

No comments:
Post a Comment