தாக்குதலைப் புதுப்பிக்கிறதுஆர்எஸ்எஸ்
ஏ.ஜி.நூரானி
தமிழில்: செ. நடேசன்
ஆர்எஸ்எஸ் தனது அரசியல் அணிதிரட்டலை முன்னெடுத்துச்
செல்ல அதன் திட்டமான மதத்தைப் பயன்படுத்துவதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது
.இந்தமுறை அதன் இலக்கை மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி என்று அழைக்கிறது,
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) குடும்பக்கட்டுப்பாட்டில்
நம்பிக்கை கொண்டிருக்கவில்லை அது தனது ஷாகாக்களை மறந்துவிடாமல் இருக்க பெரும்திரள்
சைன்ய அமைப்புக்களை உருவாக்கியிருக்கிறது. அது, ஆர்எஸ்எஸ்-ஸின் மீதான தடையில் சிக்கிக்கொள்ளாமல்
தவிர்க்க 1949ஜூலை 9 ல் அகில பாரதிய வித்தியர்த்தி பரிஷத்தை (ABVP) அமைத்தது.. அது
ஒரு மாணவர் அமைப்பு என்று கூறிக்கொண்டாலும், உண்மையில் அது சூறாவளிப்படையினரின் அமைப்பு
ஆகும். நரேந்திரமோடி அதன் முன்னணிப் பிரமுகர்களில் ஒருவர். ஆர்எஸ்எஸ் விஸ்வ ஹிந்து
பரிஷத்தை (உலக இந்துக்களின் அமைப்பு) உருவாக்கி இதை ஜகத்குரு (உலக ஆசிரியர்கள்) என்று
கூறிப் பாதுகாத்துவருகிறது. இது 1964 ஆகஸ்ட் 29-30ல் மும்பையில் ஆர்எஸ்எஸ் தலைவர் எஸ்.கோல்வாக்கரால்
தோற்றுவிக்கப்பட்டது. கே.எம்.முன்ஷியும்கூட அதன் நிறுவனர்களில் ஒருவர். அதன் அயோத்திய
பிரச்சாரப்பயணம் வேகம்கொள்ளத் துவங்கியபோது 1984ல் விஹெச்பி பஜ்ரங் தள்-ஐ அமைத்தது.
ஆர்எஸ்எஸ் ஒரு தாத்தாவாக உருவாகி அதன் எல்லாக்குழந்தைகளையும் தனது இறுக்கமான பிடியில்
வைத்துக் கட்டுப்படுத்தியது. இவற்றில் அதன் அரசியல் பிரிவுகளாக 1951ல் ஜனசங்கமும்,
1980ல் பாரதிய ஜனதா கட்சியும் இருந்தன.
1984 தேர்தல்களில் பாஜக ஒரு அவமானகரமான தோல்வியால்
கவலைக்குள்ளானபோது,, ஆர்எஸ்எஸ் மக்களை அணிதிரட்டுவதற்காக ஒரு நல்ல கருவியைக் கண்டுபிடித்தது—அதுதான்
மதம். இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் இருந்த அதன் உறுப்பினர்கள்=குறிப்பாக சாதுக்கள்
இந்தப்பணியில் ஈடுபடுமாறு வற்புறுத்தப்பட்டார்கள்: உலகியல் வாழ்வின் ருசியை அவர்கள்
அனுபவித்தார்கள். இந்த எல்லா அமைப்புக்களும் ஆர்எஸ்எஸ்-ஸின் உத்தரவுப்படி உற்சாகத்துடன்
தேர்தல் களத்தில் பாஜகவுக்கு ஆதரவாக குதித்தன. 1984ல் அது அவ்வாறு
செய்ய மறுத்தது.
பாஜகவின் மனச்சோர்வை அகற்றவும், அதற்கு ஒரு உறுதியான
பாதையைக் காட்டவும், விஹெச்பியின் (ஆர்எஸ்எஸ் என்று படிக்கவும்) முதலாவது தர்ம சம்ஷத்
1984ல் அயோத்தியில் ராமஜென்ம பூமியை ‘விடுதலை’ செய்வதற்காக ஒருதீர்மானத்தை நிறைவேற்றியது.
அதை நடைமுறைப்படுத்த, அது தனி நபர்களுக்கான, குடும்பங்களுக்கான, மற்றும் அரசியல் தலைவர்களுக்கான
ஆச்சார் சம்ஹிதா, என்ற 18 அம்ச நோக்கங்கள்
மற்றும் விதிகளையும்கூட வரைந்து கொண்டது. அதன்
மையநோக்கம் நவீனகாலத்துக்கேற்ப இந்து சமுதாயத்தை வளர்த்தெடுப்பதற்குப் பொருத்தமான
‘தர்ம’ ஒழுங்குகளை நிர்ணயிப்பதுதான். ஆர்எஸ்எஸ்-ஸின் நவீனமயமாக்குதல் என்ற கருத்தாக்கம்
மிகத்தெளிவாக – மதத்தைப் பயன்படுத்துவதும், சமுதாயத்தை ஒருங்கிணைத்தலும் என-அமைக்கப்பட்டிருக்கிறது.
சுருக்கமாகக் கூறுவதா னால் ‘மதத்தின் மூலம் அரசியல் அணிதிரட்டல். நோக்கம் 7 கூறுகிறது:’மடங்களையும்,
கோவிலகளையும் வளர்ப்பதற்காக…’ நோக்கம் 12 ‘இந்துக்களின் நலன்களைப் பாதுகாக்க அரசை நிர்ப்பந்திப்பது’
என்பதை இணைத்துக்கொள்கிறது. எண் 18 கூறுகிறது: ‘இந்து தர்மத்தை, இந்து கலாச்சாரத்தை,
இந்து கடவுள்களையும் பெண் கடவுள்களையும் மற்றும் இந்து வாழ்வியல் மதிப்பியல்களையும்
திரைப்படங்கள் பரிகசிப்பதை அனுமதிக்கக்கூடாது’ இது நோக்கம்11ஐத்தொடர்ந்து வருகிறது:
அது இவ்வாறு கூறுகிறது:”ஸ்ரீராமா மற்றும் ஸ்ரீகிருஷ்ணா ஜென்மபூமி, காசி விசுவநாதர்
கோவில் மற்றும் பிற எல்லா வரலாற்றுக் கோவில்களும் இந்துக்களுக்கு கட்டாயம் திருப்பித்தரப்படவேண்டும்.”
இந்த முழுஆவணத்தின் நேரம், சந்தர்ப்பசூழல்,மற்றும்
குணாம்சம் அது அரசியல் அணிதிரட்டல்களை நோக்கமாகக்கொண்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.
இதை விஹெச்பியின் மாதமிருமுறை பத்திரிக்கையான ’ஹிந்துசேத்னா’
நிலைநாட்டுகிறது.மஞ்சரி கட்ஜு தனது ‘விஸ்வ
ஹிந்து பரிஷத்தும், இந்திய அரசியலும்’ என்ற நூலில் எழுதுகிறார்: “விஹெச்பி அமைக்கப்பட்டபிறகு
இரண்டு பத்தாண்டுகளாக அதன் உண்மையான நோக்கமான உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் உள்ள
இந்துக்களை ஒருங்கிணைப்பது மற்றும் இந்தியாவில் கிருத்துவ மிஷினரிகளின் செயல்பாடுகளை
எதிர்ப்பது என்பவற்றைப் பின்பற்றிவந்தது. அதன்பிறகு அது மாநிலஅரசின் கொள்கைகளில்அரசியல்
அணிதிரட்டல்கள்மூலம் செல்வாக்கு செலுத்த நேரடி அரசியல் அணிதிரட்டலை எடுத்துக்கொண்டது.
அயோத்தியில் ராமஜென்மபூமி, மதுராவில் கிருஷ்ணஜென்மபூமி, வாரணாசியில் காசி விசுவ நாதர்
கோவில் என்று அது அழைத்துக்கொள்பவற்றின்மீது அதன் பிரச்சாரப்பயணங்களும், அதேபோல, தேர்தல்காலங்களில்
அது ’இந்துக் களுக்கு ஓர் அழைப்பு’ என தர்ம சன்சத் மூலம் ஒரு இந்து கட்சிக்கு வாக்களியுங்கள்
என்று விடுத்த அழைப்புக்களும் இந்தியாவில் வடக்கிலும், மேற்கிலும் பாஜக தனது ஆதரவு
தளத்தை விரிவுபடுத்திக்கொள்ள உதவியது.
மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் 14 ஏப்ரல் 2000ல் போபாலில்,
கோவில் இயக்கம் இயல்பாகவே அதன் தன்மையில் அரசியல்தான்: மதத்துக்காக அது எதையும் செய்யவில்லை”
என்று ஒப்புக்கொண்டார். அருண்ஜெட்லி அமெரிக்காவின் உயர்மட்டதூதரிடம் கொடுத்த ஒப்புதல்வாக்குமூலம்
இன்னும்கூடுதலாக கள்ளம் கபடின்றி நேர்மையானதாகவும்,
விரிவானதாகவும் இருந்தது. மஞ்சரி கட்ஜு எழுதுகிறார்: “ ராமஜென்மபூமி அல்லது அயோத்தி
பிரச்சனை பல்வேறு சாதுக்களை விஹெச்பியின் பின்னால் ஒருங்கிணைத்தது. இதன்மூலம் விஹெச்பி
மறுபுறத்தில் பாஜகவின் சமூக அடித்தளத்தை வலுப்படுத்தவும்,விரிவடையவும் செய்தது. இந்துத்வா
அலையின் எழுச்சிக்கும் (ராமர் கோவில் பிரச்சாரப்பயணங்களில் வெளிப்படுத்தப்பட்டது போல்)
அயோத்தி சட்டமன்றத்தொகுதியிலும், ஃபாஜியாபாத் பாராளுமன்றத் தொகுதியிலும் (இதில்தான்
அயோத்தி தொகுதி உள்ளது) அதேபோல ஒட்டுமொத்தமாக உத்தரப்பிரதேச சட்டமன்றத்தொகுதிகளிலும்
பாஜகவின் தேர்தல் எழுச்சிக்கும் உள்ள தொடர்பை எவரொருவரும் பார்க்கலாம். நாட்டில் பாஜகவின்
எழுச்சியை ’ஹிந்துத்துவா எழுச்சி’ என்று எல்,கே,அத்வானி போற்றிப் பாராட்டினார்.
1992 டிசம்பர் 6 ல் அவர்கள் பாபர் மசூதியை இடித்துத்தள்ளுவதற்கு
முன்பு, 1990களின் துவக்கத்தில் மூன்று கோவிலகளையும் பற்றி பாஜகவும், விஹெச்பியும்
கொண்டிருந்த நிலைபாட்டை ஆய்வுசெய்வது மிகவும் முக்கியமானதாகும். அத்வானி, முஸ்லீம்கள்
பாபர் மசூதியைக் கைவிட்டு விடுவார்களானால், மதுரா மற்றும் காசி கோவில்களை விட்டுவிடுகிறோம்
என்று அவ்வப்போது சத்தியம் செய்துவந்தார். மற்ற சந்தர்ப்பங்களில் அத்வானியும், பிற
பாஜக தலைவர்களும் ‘இப்போது’ காசி மற்றும்
மதுரா கோவில்கள் தங்கள் செயல்திட்டத்தில் இல்லை என்று- அதை ஓர் அர்த்தமுள்ள தகுதியாக – கூறினார்கள்.
முஸ்லீம்களுக்கு ‘ஒரு பாடம்’
புகட்டுதல்
1997 டிசம்பர் 29 அன்று விஹெச்பியின் அசோக் சிங்கால் “முஸ்லீம்களின் கழுத்துக்களைப்பிடிப்பதற்கும்,
அவர்களது இடம் எங்கே இருக்கிறது என்று சொல்வதற்குமான நேரம் இது” என்று கூறினார். அவர் மேலும் கூறினார்: ”காசியும் மதுராவும்
எங்களுடையது. முஸ்லீம்கள் மேலும் அவமானங்களைத் தவிர்க்கவிரும்பினால், அவர்கள் அந்தப்
புண்ணியத்தலங்களை சத்தமில்லா மல் எங்களிடம் ஒப்படைக்கவேண்டும்.” இந்தப் பிதற்றல்களை
ஏ.பி.வாஜ்பேயி கண்டனம் செய்யவில்லை. இந்தக் காட்டுமிராண்டித்தனமான பிதற்றல்களின் தன்மை
காரணமாக மட்டுமே முறையான விலகிநிற்றலாக ஆனது. அசோக் சிங்கால் லக்நோவில் விஷத்தைக் கக்கிக்கொண்டிருந்த
அதே நாளில் அத்வானி கோவில் நகரமான திருப்பதியில் பேசினார்.
’தி ஹிந்து’ நாளிதழ், “ அவர் இந்த சந்தர்ப்பத்தை
சந்தேகத்துக்கு இடமில்லாதவகையிலும், தெளிவாகவும் பாஜகவின் திட்டத்தில் காசியும், மதுராவுல்
இல்லை என்று உறுதிப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்டார். அவர் எவ்வாறோ, காசியும், மதுராவும்
பாஜகவின் அறிக்கையின் ஒருபகுதியாக இருந்தபோதிலும், தேர்தலில் மிகவும் முக்கியமான பிரச்சனை
ஸ்திரத்தன்மையும், நல்ல நிர்வாகமும்தான் என்று கூறினார். முன்னதாக அதே ஆண்டு மார்ச்
16 அன்று இதன் பொருள் என்னவென்று அத்வானி தாமாகவே விளக்கினார்: “(காசியும், மதுராவும்)
திட்டத்தில் இல்லை. அயோத்தியில் துவங்குவதும்கூட திட்டத்தில் இல்லை” . எதிர்பார்த்தவாறே
1998 ஜனவரி 1 அன்றுசிங்கால் வாஜ்பேயியின் மறுப்பின்மீது வசைகளைப் பொழிந்தார். அத்தகைய
அறிவிப்புக்களின் பொருளை அவர் மிக நன்றாக அறிந்திருந்தார்….. சங் பரிவாரங்களின் முடிவுதான் இறுதியானதும் கட்டுப்படுத்துவதும்
ஆகும். ஒருநாள் முன்பு அவர் அயோத்தியில் கூறினார்: “கோவில் பிரச்சனையின்மீது பாஜகவுக்கும்,
விஹெச்பிக்கும் இடையில் எந்தஒரு வேறுபாடும் இல்லை. அவர்களுடைய மொழி வேண்டுமானால் மாறுபட்டிருக்கலாம்:
ஆனால், கொள்கையளவில் நாங்கள் ஒன்றாகவே உள்ளோம்.” ஜனவரி 9 அன்று அவர் ‘ அங்கே இந்த விஷயத்தில்
சங் பரிவாரங்களின் இரண்டு அணிகளுக்கிடையே எந்த ஒரு மோதலும் இருக்காது’ என்று சபதம்
செய்தார்.
“ஆர்எஸ்எஸ்-ஸின் உயர்மட்டத்தலைவர் ராஜேந்திர சிங்கின்
ஜனவரி 10 பேச்சு அந்த சூழ்நிலையை மிகவும் தெளிவாக்கியது.
அயோத்தி, அரசியல் சட்டம் 370, மற்றும் பிற சர்ச்சைக்குரிய பிரச்சனைகளில் அழுத்தம் தருவதிலிருந்து
பாஜக வெளிப்படையாக மாறுவதை அவர் நியாயப் படுத்தினார்.” நீங்கள் நோயுற்றிருப்பீர்களானால்,
குளிக்கவேண்டாம்: ஆனால் இது எல்லா சந்தர்ப்பங்களிலும் எப்போதைக்குமான ஏற்பாடு அல்ல.”
உச்ச நீதிமன்றத்தின் ஒருதரப்பான தீர்ப்புக்குப்பிறகு,
2020 செப்டம்பர் 9 அன்று திடைம்ஸ்ஆஃப்இந்தியா’ தெரிவித்தது: ‘ அயோத்தி ராமர் கோவிலுக்குப்பிறகு,
காசி மற்றும் மதுரா புண்ணியத்தலங்களை மீட்டுருவாக்கும் கோரிக்கைகளை ஆர்எஸ்எஸ் எடுத்துக்கொள்ளாது;
மேலும் ஒரேமாதிரியான குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன் அதை நடைமுறைப்படுத்த
ஒரு பொதுக்கருத்தை உருவாக்கவேண்டும் என்று உணர்கிறது.”
ஆர்எஸ்எஸ்-ஸில் உள்ள இந்தக்கண்ணோட்டம், ராமர்கோவில்
பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஏற்படும் விழிப்புணர்வில் சிலகுழுக்களில் காசி
விசுவநாதர் மற்றும் கிருஷ்ணஜென்மபூமிக்கு ஆதரவாக ஏதாவது பொதுக்கருத்து உருவாகுமா என்று
பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்பதுபோலக் காணப்பட்டது.
ஒருசில நாட்களுக்குள்ளாகவே, மதுராவில் உள்ள மசூதியைச்
சொந்தம் கொண்டாடும் ஒரு உரிமைவழக்கின் முறையீட்டிலிருந்த விவரங்களைப் பத்திரிக்கைகள்
மிகவிரிவாக வெளியிட்டன. நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஆனால் ஆர்எஸ்எஸ்-ஸின்
பதிவு அதை ஒரு ஏமாற்றுவித்தை என்றும், அது ஒட்டுமொத்த இயக்கத்தையும் குறிப்பிடுகிறது
என்றும் காட்டியது. அதன் இலக்கு கோவில்கள் அல்ல: அவை குறியீடுகள்தான். அதன் இலக்கு
ஒரு இந்துஅரசு. அரசியல் மற்றும் சட்டபூர்வ தடைகளால் (வழிபாட்டுத்தலங்கள் சட்டம்) அதை
எதிர்த்து நிற்கமுடியாது. அரசின் உதவியோடு இந்துத்துவாவாதிகள் ’பழங்கால நினைவுச்சின்னங்கள்,
மற்றும் தொல்பொருள் ஆய்வு இடங்கள் மற்றும் எஞ்சியவை சட்டம் 1958’ ஐ அவமதிப்பார்களானால்,
அந்த வழக்கு அவர்களுக்கு எந்த பாதிப்பையும் அளித்துவிட முடியாது.
ஆனால்,1968ல் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும்
இடையே மசூதிபற்றிய புனிதமான ஒப்பந்தம் கூறுவது என்ன? அதன் வாசகம் இங்கே தரப்படுகிறது.
அந்த ஒப்பந்தத்தின் நோக்கம் இரண்டுபிரிவினரிடையே
நீண்டகாலமாக இருந்துவந்த சர்ச்சைகளை முடித்துக்கொள்வதுதான். அப்போது ஆர்எஸ்எஸ்-ஸும்,
ஜனசங்கமும் மிகவும் உயிர்ப்போடு இருந்தன. அந்த ஒப்பந்தம் ஒவ்வொரு தரப்பும் பெற்றிருந்த
அதிகாரச்சான்றைப் பதிவு செய்கிறது. அது உண்மையில் 50 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட
ஒப்பந்தமாகும். முஸ்லீம்கள்தரப்பு கொஞ்சம்நிலத்தை விட்டுக்கொடுத்தது அதை இந்து தரப்பு
ஏற்றுக்கொண்டு கையகப்படுத்திக்கொண்டது: அதைப்போலவே இந்துக்கள் தரப்பிலும் கொஞ்சம் நிலம்
விட்டுகொடுக்கப்பட்டு முஸ்லீம் தரப்பு அதை ஏற்றுக்கொண்டு கையகப்படுத்திக்கொண்டது. அங்கே
ஒரு கொடுத்தலும், எடுத்துக்கொள்ளலும் இருந்தது. இரண்டு தரப்பிலும் தொடுக்கப்பட்ட வழக்குகள்
திரும்பப்பெறப்பட்டன. ’அந்தஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டது’ என்பதற்காக மட்டுமே
நீதிமன்றங்களின் உதவி நாடப்பட்டது.
ஸ்ரீகிருஷ்ணஜென்மஸ்தான்,
சாஹி இடாஹ் அறக்கட்டளை இரண்டுக்கும் இடையே 1968 அக்டோபர் 12 அன்று இரண்டு தரப்பும்
நிலத்தை எடுத்துக்கொள்ளவும், கொடுக்கவும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் புகைப்பட
நகலின் மொழிபெயர்ப்பு
பிரச்சனைக்கான சட்டபூர்வ அம்சங்கள்/ பக்கம் 95
சாஹி இடாஹ் அறக்கட்டளைக்கும், ஸ்ரீகிருஷ்ண ஜன்மஸ்தான்,
மதுராவுக்கும் இடையே ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் மொழியாக்கம்.
ஸ்ரீகிருஷ்ணஜன்மஸ்தான்,
மதுராவால் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ தியோதர் சாஸ்திரி.யு,பி. மன்ஸ்ட்ரி ஆகிய நாங்கள் முதல்தரப்பினராகவும்,மற்றும்ஷாஹி
மஜ்ஜித்தின் சாஹி இட்கா அறக்கட்டளையின் பிரதிநிதிகள் ஸ்ரீ ஷாஹ் மிர் மாலிஹ், வழக்கறிஞர்
அப்துல் கஃப்பார் இரண்டாம் தரப்பினராகவும்
8.1.1968 நாளிட்ட அறகட்டளையின் தீர்மானம் எண்;2 ன்
கீழ்,
ஸ்ரீகிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங் மற்றும் ஷாஹி மஜ்ஜித்
இட்கா அறக்கட்டளை மற்றும் கோஷி என அழைக்கப்படும் குடியிருப்போர் மற்றும் உரிமம் பெற்ற
இரண்டாம் தரப்பினர் ஆகியவற்றுக்கிடையே நீண்டகாலமாக இருந்துவரும் சர்ச்சைக்குத் தீர்வுகாண்பதற்காக
இந்து மற்றும் முஸ்லீம் என இரு சமுதாயத் தினரின் ஆலோசனைகளின்கீழ் இப்போதுமுதற்கொண்டு
நமது இருதரப்பு சர்ச்சைகளுக்குத் தீர்வுகாணவும், ஒருவருக்கெதிராக ஒருவர் தொடுத்துள்ள
வழக்குகளை தவிர்க்கவும் ஓர் ஒப்பத்தத்துக்கு வந்துள்ளோம்.
பின்வரும்
ஒப்பந்தம் இரண்டாம் தரப்பால், அதாவது உத்தரப்பிரதேச மத்திய வக்ஃப் போர்டின் விரைவுக்கடிதம்
எண்.2876, 43 CIR நாள்:9.9.1968 மற்றும் ஸ்ரீசாஹி மிர் மாலிஹ் மற்றும் வழக்கறிஞர் அப்துல்கஃபார்
அதிகாரமளிக்கப்பட்ட ஷாஹி மஜ்ஜித் இட்கா அறக்கட்டளையால்
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அவர்களது
8.10.1968 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண்:2ன் கீழ் அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது.
அதேபோல, முதல்தரப்பு, அதாவது, ஸ்ரீகிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங்-கும் இந்த ஒப்பந்தத்தை அதன் 25.8.1968 கூட்டத்தில் ஏற்றுக்கொண்டுள்ளது, மேலும் ஸ்ரீதியோதர் சாஸ்திரியை இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற அதிகாரப்படுத்தியுள்ளது.
சர்ச்சையின்
அடிப்படைக்கூறுகள்/ பக்கம் 96
பின்வரும் ஒப்பந்தம் அதை முழுமையாக
நடைமுறைப்படுத்துவதற்கு சிறிதுகாலம் எடுத்துக்கொள்ளும்: எனவே நாங்கள் எழுத்துமூலமான
ஒரு ‘இக்ரார்நாமா’வை பதிவு செய்துள்ளோம். எனவே இருதரப்பினரின், அதாவது ஸ்ரீகிருஷ்ண
ஜன்மஸ்தான் சேவா சங் மற்றும் ஷாஹி மஜ்ஜித் இட்காஅறக்கட்டளை சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளாகிய
நாங்கள் இந்த முடிவுகள் நிறைவேற்றப்பட்ட பிறகு சுதந்திரமாகவும், அதேபோல இரண்டு தரப்பினரின்
பொதுவான சம்மதத்தின்படியும் இந்த ‘இக்ரார் நாமா’வைப் பதிவு செய்துள்ளோம்.எனவே இப்போதுமுதல்
நாங்கள் பின்வரும் ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டவர்களாவோம், மேலும் இந்த ஒப்பந்தத்தை
நிறைவேற்றுவது எங்கள் கடமை ஆகும்.
1.
இட்காஹின்
குச்சிகுர்ஷியின் வடக்கு மற்றும் தெற்குச்சுவர்கள் கிழக்குப்பக்கத்தை நோக்கி சரக்குரயில்பாதைவரை
நீட்டிக்கப்படும். இதற்கான செலவுகள் மஜ்ஜித் அறக்கட்டளையால் ஏற்றுக்கொள்ளப்படும்.
2.
வடக்கு
மற்றும் தெற்குச்சுவர்களுக்கு வெளிப்பக்கம் முஸ்லீம் கோஷிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளபகுதிகள்
அறக்கட்டளையின் சார்பில் அப்புறப்படுத்தப்பட்டு, ஸ்ரீகிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங் வசம் ஒப்படைக்கப்படும்.
அதுபோலவே, வடக்கு மற்றும் தெற்கு சுவர்களுக்கு உள்பகுதியில்
இருக்கும் நிலம் அறக்கட்டளையின் சொத்து ஆகும்.எனவே,இந்த நிலத்தின்மீது சேவா சங் தரப்பில்
எந்த உரிமைகோரலும் இருக்காது.
3. இட்காஹின் குச்சிகுர்ஷியின் வடக்கு-தெற்கு மூலை நிலப்பகுதியில் (ABCDவரைபடத்தில்காட்டப்பட்டுள்ளது) சேவா சங் ஆல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை குச்சிகுர்ஷியைப் பெற்றுக்கொள்ளும். மேலும் அது அறக்கட்டளையின் சொத்து ஆகும்.
4.
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள தெற்குப்பக்கத்தில்
சர்ச்சைக்குரிய படிக்கட்டில் உள்ள குப்பைகூளங்கள் அறக்கட்டளையால் 1968 அக்டோபர் 15
வாக்கில் அகற்றப்படும். அதன்பின் இந்தப்பகுதி சேவா சங்-கின் சொத்து ஆகிவிடும்.
5.
வடக்கு
மற்றும் தெற்கு சுவர்களுக்கு வெளியே முஸ்லீம் கோஷிகளால் கட்டப்பட்டுள்ள வீடுகள் அறக்கட்டளையுடன்
ஏற்படுத்திக்கொண்ட இந்தத்தீர்வின் கீழ், அறக்கட்டளையின் சார்பில் அகற்றப்பட்டு, சேவா
சங்-கிடம் ஒப்படைக்கப் படும அகற்றபடுதல் நிறைவடைந்த பிறகு மட்டுமே சுவர்களைக் கட்டுவதற்கு
அறக்கட்டளை உரிமைபடைத்ததாகும்.
மேலும், இந்த அறக்கட்டளை
கதவுகளையோ, சன்னல்களையோ, பிஞ்சார் முதலான வைகளையோ அல்லது எந்த ஒரு நீர்வழிப்பாதைகளையோ
(வடிகால்) குறிப்பிட்ட சுவரிலிருந்து சேவா சங்-ஐ நோக்கி திறக்கக்கூடாது. சேவா சங்-கும்கூட
இடாஹ்-க்கு எதிராக இத்தகைய எந்த ஒன்றையும் செய்யக்கூடாது.
6.
ஏற்கனவே
ஜன்மஸ்தானின் மேற்குப்பகுதி நோக்கி பாய்ந்துவரும் இட்காஹின் வடிகால்கள் கட்டாயம் அகற்றப்பட்டு,
இட்காஹை நோக்கி குழாய்மூலம் திருப்பப்படவேண்டும். இதற்கான செலவுகள் சேவா சங்-கால் செய்யப்படும்.
குழாய் பதிக்கும்போது ஜன்மஸ்தானின் பிரதிநிதி அங்கு இருப்பார்.
7.
ஜன்மஸ்தான்
சேவா சங்-கால் பெற்றுக்கொள்ளப்படும் இட்காஹின் வடக்கு மற்றும் தெற்குச் சுவர்களின்
முன்னால் உள்ள ரயிவே நிலத்தின் ஒருபகுதி, அந்த நிலத்தைப் பெற்றபிறகு, ஜென்மஸ்தன் சேவா
சங் இட்காஹின் வடக்கு மற்றும் தெற்குப்பதி சுவருக்குள் வரும் அந்த நிலத்தின் பகுதியை
ஜன்மஸ்தான் சேவா சங் அறக்கட்டளைக்கு மாற்றித்தரும்.
8.
குச்சி
குர்ஷிக்கு முன்னால் கிழக்குப்பகுதி நோக்கி உள்ள நிலத்தின் பகுதி
சர்ச்சையின் அடிப்படைக்கூறுகள்/ பக்கம். 97
(EFGHUKL)
வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது) மற்றும் வடமேற்குமூலையில் உள்ளதும் (ABCD)வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது)
அறக்கட்டளைக்கு சார்பாக சேவாசங்-கால் விடப்பட்டது வரைபடத்தில் சாய்வான கோடுகளில் காட்டப் பட்டுள்ளது
9.
மேலே
கண்டுள்ள ஒப்பந்தத்தின்படி ஒருவருக்கு எதிராக ஒருவர் தொடுத்த வழக்குகள் கட்டாயம் திரும்பப்பெறப்படவேண்டும்.
10. எந்த ஒரு தரப்பும் இந்த
ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதிலிருந்து வழுவினாலும் இரண்டுதரப்பும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்யும் உரிமையைப் பெற்றுள்ளன.
ஆகையால் இரண்டு தரப்பினரின்
சட்ட ஆலோசகர்கள் மூலம் எழுத்துபூர்வமாக இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
எழுதப்பட்ட
நாள்: 12 அக்டோபர் 1968
மஜ்ஜித் இட்காஹ் சாஹியின்
எல்லைகள்:
கிழக்கு - ரயில்வே லைன்
மேற்கு _ சபுத்ரா ஜன்மஸ்தான்
வடக்கு - ஜன்மஸ்தான் நிலம்
தெற்கு: - ஜன்மஸ்தான் நிலம்
பாங்கே கட்ரா, கேஷவ் - தேவெ மதுரா டான்
எழுதியவர்: நவ்நீத் லால்
ஷர்மா சாஸ்திரி
தியோதர் சாஸ்திரி
கையெழுத்து: அப்துல் கஃபார்:
ஆங்கிலத்தில்
கையெழுத்து: மொஹம்மது ஷாஹ்
மிர் மாலிஹ்
ஆர்எஸ்எஸ்-
எப்போதும் ஏமாற்றுதலையும், வஞ்சகத்தையும் கொண்டுள்ளது என்பதை அதன் பதிவுகள் காட்டுகின்றன….
அதன் நோக்கம் கோவில்கள் அல்ல…… ஹிந்து ராஜ்யம் தான் அதன் நோக்கம்…. அரசியல் மற்றும்
சட்டபூர்வத் தடைகள் அதற்கு ஒரு பொருட்டல்ல.
நன்றி: ஃப்ரண்ட்
லைன் 2020 அக்டோபர் 23 இதழ்
ஏமாற்றுவதும்,வஞ்சகமும் சங்பரிவார தந்திரம் வாடிக்கை என்பதை ஆதாரத்துடன் நிறுவும் கட்டுரை.வாழ்த்துகள்!
ReplyDelete