Saturday 31 October 2015

கேள்விகேட்கத் திரள்கிறார்கள்

           கேள்விகேட்கத் திரள்கிறார்கள்
     ‘The Hindu’ தலையங்கம் 30.10.2015 வெள்ளி
            தமிழில்: செ. நடேசன்

லைசிறந்த வரலாற்றியலாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் மாணவர்களோடு சேர்ந்து வளர்ந்துவரும் ‘சகிப்புத்தனமைஇன்மைக்கு எதிராக நரேந்திரமோடியின் அரசுக்குக் குடிமக்கள் சமுதாயத்தின் சார்பில் எழுப்பும் கேள்விகள் அவர் தப்பமுடியாத அளவுக்குக் கூர்மை பெற்றுவருகின்றன. தங்கள் தேசிய விருதுக்ளைத் திருப்பி யளிப்பவர்களில் விஞ்ஞானி பி.எம்.பார்கவா, திரைப்படத் தயாரிப்பாளர்கள் திபாகர் பானர்ஜி, ஆன்ந்த் பட்டவர்த்தன் ஆகியோர் உள்ளனர். அரசின் கண்டும்காணாத நடவடிக்கைகளை விளக்கும் ஒருகடிதத்தில் கையொப்பமிட்ட அறிஞர்பெருமக்களின் நீண்ட பட்டியலில் பகழ்பெற்ற வரலாற்றியலாளர்களான் இர்ஃபான் ஹபீப், ரொமிலா தாபர் ஆகியோரும் உள்ளனர். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் கேள்வி கேட்கிறார்கள்: ஆனால் அவர்கள் ஒன்றுபட்டுக் கூட்டுக்கொலை, சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாள்ர்களின் கொலை, சிறுபான்மைச்சமுதாயத்தினர்மீது சகிப்புத்தன்மை இல்லாத சூழ்நிலை ஆகியவற்றைத் தொகுத்துக் கூட்டுப்பொறுப்பை உணர்த்து கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை வளரும்போது, பா.ஜ.க.வுடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்படும் சிறுசிறு கும்பல்கள் உற்சாகம் பெற்றுவந்ததை அவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார்கள். அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் மத்தியஅரசின்  பொறுப்புள்ள நடவடிக்கைகளை வேண்டுகிறது. மத்திய அமைச்சர் களும், பா.ஜ.க. பேச்சாளர்களும் போராடுபவர்களின் தனிப்பட்ட தகுதிகளைக் கேள்விகேட்டு இப்பிரச்சனையை ஒதுக்கித்தள்ள முடியாது என ஒரு உரையாடலைத் துவக்கியுள்ளனர். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதில் மாநில அரசுகள் தவறிவிட்டன எனப்பழிசுமத்தி அதிலிருந்து அவர்கள் மீளமுடியாது. குடிமக்கள் சமுதாய உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் தெளிவாகவும், வலுவுடையதாகவும் பா.ஜ.க.வின் அரசியல் திட்டத்துடன் உள்ளார்ந்த இணைப்புடன் உள்ள நபர்கள் மற்றும் அமைப்புக்களின் போக்குகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் சவால் விடுக்கின்றன. அவர்கள் ஒன்றுசேர்ந்து மொத்தமாக முன்வைக்கும் கேள்வி இதுதான்: ‘ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர்அரசு சுதந்திரத்தையும், நீதியையும் நேர்மையுடன் உத்தரவாதப்படுத்தும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்று வெளிப்படை யாகக் கூறும் மக்களுக்கு என்ன பதில் கூறப்போகிறது?இது மிகப்பெரிய கேள்வி.

   பூனா திரைப்படத் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர்கள் 139 நாட்கள் நீடித்த தங்கள் வேலைநிறுத்தத்தை புதன் அன்று முடித்துக்கொண்டபோது,அவர்கள் போராட்டம் அவர்களுக்கு எதையும் அளிக்கவில்லை. அந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவரை நீக்கவேண்டும்: ஆளும் தே.ஜ.கூ. அரசால் நியமிக்கப்பட்ட மூவரை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஆனா, அதேநேரத்தில் திபாகர் பானர்ஜி போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் தேசியவிருதுகளைத் திருப்பியளிக்கும் நடவடிக்கை மாணவர்களின் போராட்டத்தை இணைப்பதில் வெற்றிகண்டது: குறிப்பிட்ட அதிகார நியமனங்களுக்கு எதிராக மிகப்பெரும் அளவுக்கு பெரும்பான்மை அரசியலுக்கும், போக்கிலிகளை அணிதிரட்டு வதற்கும் எதிராக அசௌகரியங்களை உருவாக்கியது. அரசு மற்றும் அதன் அமைச்சர்களின் பதில்கள் உணர்ச்சி குன்றியவைகளாகவும், மிகப்பரவலாக எழுந்துள்ள விமர்சனங்களை மறுப்பதையும் அம்பலப்படுத்திய்ள்ளது. நரேந்திரமோடி யும் தன்பங்குக்கு ஆழ்ந்த மௌனத்தைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார். போராடுபவர்கள்மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் போராட்டத்தின் உள்ளடக்கத்தின்மீது கவனம் செலுத்தாமல் அரசு தன்னை வேறுபடுத்திக்கொள்கிறது. ஆனால், அதை நேரடியாகக் கையாளாமல் இருப்பது அதற்கான பதிலல்ல என்பதை அரசு உணரவேண்டும். அதற்குப்பதிலாகப் போராடுபவர்களின் மதிப்பைச் சீர்குலைப்பதோ, அல்லது அறிஞர் பெருமக்களைக் குறைத்து மதிப்பிடுவதோ போராட்டத்தின் ஒவ்வொரு அலையும் அரசுக்கு அவர்கள் விடுத்த கேள்வியைப் புதுப்பிக்கிறது. பெயர்குறித்து அழைப்பது அல்லது மையமான பிரச்சனைகள் மீது மௌனமாக இருப்பது என்பது அந்தக்கேள்விகளை மீண்டும் மீண்டும் உரத்து எழவைக்கும்,

 .       --------------------------------------------------------------------------------------------------------------------------------------------


No comments:

Post a Comment